🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன...?

/// வீடெங்கும்திண்ணைகட்டிவெறும்பேச்சுவெள்ளைவேட்டிசோம்பலில்
மனிதன்வாழ்ந்தால்சுதந்திரம்என்னசெய்யும்சுதந்திரம்என்னசெய்யும்
உரிமையோஉரிமைஎன்றுஊரெங்கும்மேடைபோட்டான்கடமையோ
கடமைஎன்றுகாரியம்செய்தால்என்னகாரியம்செய்தால்என்ன ///
(படம் : சொர்க்கம்)


© சொர்க்கம் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫

அடேய் மனசாட்சி... காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி எதுவுமே இல்லை... சொற்களுக்கிடையே இடவெளி எதுவுமே இல்லை... இதை எப்படிப் படிப்பது...? பாடுவது...? பாடல் வரிகள் எழுதும் நினைப்பே போச்சி...

வெயில் அதிகம்... ஹிஹி... /// சொல்லாதே யாரும் கேட்டால்... எல்லோரும் தாங்க மாட்டார்...! ///

நமது வாழ்க்கையே சொற்றொடர் போலத்தான்... அதை அழகாகிக் கொள்வதும், ஒழுங்குபடுத்திக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது... வாழ்க்கை என்றால் பல தடைகள் உண்டு; பல பிரச்சனைகள் உண்டு; துன்பங்கள் உண்டு, உறவுகள் உண்டு, பிரிவுகள் உண்டு - எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை...

அடப் போப்பா... நாம் எழுதும் எழுத்துக்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி - இவற்றையெல்லாம் எதற்காக இட வேண்டும்...? இவை இல்லாமலே நமது தகவல்கள் விளங்கி விடாதா...? சொற்றொடர் அமையாதா..?

அருமையான கேள்வி... அடிப்படையான கேள்வியும் கூட... நம் வாழ்விலும் அங்கங்கே காற்புள்ளி வரும், அரைப்புள்ளி வரும்; முற்றுப்புள்ளியும் வரும். கேள்விக்குறிகள் இடையிடையே தோன்றும்... வியப்புக்குறிகள் ஆங்காங்கே தோன்றி நம்மை வியப்புக்களில் ஆழ்த்தும்...! சொற்களுக்கு இடையே உள்ள 'இட'வெளிகள் போலப் பிரிவுகளும் வரும்... க் ச் த் ப் என்பது போன்ற ஒற்றெழுத்துக்கள் வந்து - உறவு பலப்படுத்துவது போல உறவுகளும் வரும்...

சொற்றொடர் அமைப்பது பற்றிச் சொல்கிறாயா...? இல்லை வேறு எதாவது...?

மனசாட்சி... நாம் சிந்திப்பதை எல்லாம் 'இட'வெளி இல்லாமல் எழுத்துக்களைத் தொடர்ந்து ஒன்றின் மேல் ஒன்று எழுதினால் அது புரியுமா...? அர்த்தங்கள் மாறவும் வாய்ப்புண்டு அல்லவா...?

ஆமாயில்லே...! ஏதோ கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கிறது...!

வாழ்க்கை என்றால் பல தடைகள் உண்டு. (1) அவை காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி போல வேலைகளைச் செய்யலாம்... (2) வாழ்க்கையே கேள்விகளால், அதாவது தேடுதல்களால் நிகழ்த்துவது - அதுவே கேள்விக்குறி... (3) தேடுதல்களில் பல விடைகளை ஆச்சரியமாகப் பெறலாம் - அதுவே வியப்புக்குறி... (4) உறவு - ஒற்றெழுத்து... (5) பிரிவு - இடவெளி... எல்லாத் தடைகளையும் இன்பங்களையும் துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்வது வாழ்க்கை... எதையும் அதனதன் போக்கிலே ஏற்றுக் கொள்வது தான் முன்னேற வழி...! சொற்றொடர் போல இது நிகழ்வது என்றால் வாழ்க்கையும் புரியும்... வாக்கியமும் பொருள் படும்...

அதுசரி... வாழ்க்கையிலே நமக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், இன்னும் பலவற்றால் தான் இப்படி தத்துவம் சொல்ல வைக்குதா...? ஹிஹி...

இதே ஒரு தத்துவம் மாதிரி இருக்கே...! வாழ்க்கை நடைமுறை முழுவதும் வெற்றிகளே நிறைந்திருந்தால், அதில் சுவாரசியம் இருக்காது... ஆங்காங்கே தோல்விகள் இருந்தால் தான் வெற்றியின் மகிழ்ச்சி புரியும்; முழுமையாகவும் அனுபவிக்க முடியும்... ஆனால் ஆங்காங்கே ஏற்படும் தோல்விகளை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே வெற்றியின் முழுமை வெளிப்படும்... ஒரு சின்னக் கதை :

ஒரு பெரிய தொழிலதிபர்... பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்... நன்றாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலை அவரிடம் இருந்தது... ஒரு பெரிய சரக்கு கப்பலும் உண்டு... திடீரென்று ஒரு நாள் அவரது கப்பல் கடலில் கவிழ்ந்து போனது... ஏகப்பட்ட பொருட்கள் நஷ்டம்... நஷ்டத்தை ஈடுகட்டத் தொழிற்சாலையை விற்றார்... நஷ்டத்தைச் சரி செய்ய முடியாமல் தன் வீடு நிலம் என அனைத்தையும் விற்று, எல்லாக் கடன்களையும் அடைத்தார்... இப்போது அவர் வெற்று ஆள்...! இனி எதைத் தொடங்கினாலும் புதிதாகத் தொடங்க வேண்டும்... தொடங்கினார்... இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்... இருபது வருடங்களில் இரு தொழிற்சாலைகள், இரு கப்பல்களுக்கு அதிபதி ஆனார்... ஒரு நாள் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், "அவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகு, இப்படி இப்போது இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறீர்களே... தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன...?" என்று கேட்டனர்... அவர் அமைதியாகப் பணிவுடன் சொன்னார் : "இருபது ஆண்டுகளுக்கு முன் நான் அடைந்த தோல்வியின் ரகசியத்தை இதுவரை நான் எனக்குள் சொல்லவேயில்லை..."
வெற்றியின் இலக்கை மட்டுமே குறி வைத்தால், இடையில் வரும் தடங்கல்களும் தடைகளும் ஒரு பொருட்டேயல்ல... தோல்விக்காக ஒரு நாள் துவண்டு போய் அமர்ந்தால், ஓட வேண்டிய இலக்கின் தொலைவு கூடிப் போகும்... தோல்வியின் ரகசியத்தை அதிகப்படியாகச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யாமல், வெற்றியின் போக்கிலேயே பயணத்தைத் தொடர்வது தான் வெற்றியின் ரகசியம்... இந்த ரகசியங்களைக் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை... அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்... புரிந்து கொண்ட பெற்றோர்களுக்கு நன்றி...

திருக்குறள் சொல்லாமல் முடிச்சிட்டியே... வியப்பா இருக்கே...!!!

நண்பர்களே... இப்போது சிறப்பான பாடலை கேட்கலாம்... குறளும் உண்டு...! எதிர் நீச்சலும் உண்டு...!!

© எதிர் நீச்சல் வாலி குமார் சீர்காழி கோவிந்தராஜன் @ 1968 ⟫

(படம் : வசந்தி) ஊருக்குச்சிந்தும் வான் மழை தன்னில், உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு...! நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்... நாளைகள் இன்றே வருவதுண்டு...! பகல் வந்தபோது வெளிச்சமுண்டு; இருள் வந்த போது விளக்கு உண்டு; எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு...! சந்தோசம் காணாத வாழ்வுண்டா...? சங்கீதம் பாடாத ஆளுண்டா! ஒரு துன்பம் வந்தால், அதை இன்பம் என்று, எண்ணி வாழ்ந்து விட்டால்...?

© வசந்தி வைரமுத்து சந்திரபோஸ் K.J.யேசுதாஸ் @ 1988 ⟫
திவா கி திவா என்ன இது... ?!அறிய : இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் நினைவுக்கு வருகிறது. காற்புள்ளி, நிறுத்தற்குறிகளைக கொண்டு அருமையான வாழ்க்கைப் பாடத்தையே போதித்து விட்டீர்கள்! அசத்தல் D.D.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வருத்தங்கள் தவழும் ஆனால் உங்கள் போராட்டமே தனி .நீங்கள் சொந்தமாக நடந்ததையே சொல்லியுள்ளமை நன்று நண்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கைப் பற்றிய புதுமையான அருமையான பதிவு, வெற்றி தோல்வி பற்றி கூறியிருப்பதும் உண்மைதான்..இந்தக் காலத்தில் முக்கியமாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டியது. அருமையான பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கடமையோ
    கடமைஎன்றுகாரியம்செய்தால்என்ன..!

    கடமை கண்போன்றதாயிறே..!

    பதிலளிநீக்கு
  5. தோல்விகளை அறியாமல் வெற்றிகளை ருசிக்க முடியாது அழகாய் சொன்னீர்கள். நிறுத்தற் குறிகளோடு வாழ்க்கையை ஒப்பீடு செய்தது நன்று./

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் ...சூப்பர்..., அனுபத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. வார்த்தை விளையாட்டு போல் வாழ்க்கையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் ..எதுவும் கடந்து போகும் என உணர்கிறேன் !

    பதிலளிநீக்கு
  8. சொற்றொடர்களையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டது மிக அருமை. காற்புள்ளிகள் இடம் மாறினால் அர்த்தமே மாறிவிடும்

    பதிலளிநீக்கு
  9. இந்த நேரத்தில் எனக்கு தேவைப்பட்ட மிக முக்கியமான பதிவு மிக்க மிக்க மிக்க நன்றி டிடி

    பதிலளிநீக்கு
  10. தொழிலதிபர் கதை, ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  11. தடைக்கற்கள் படிக்கற்கள் . அருமையான கருத்து

    பதிலளிநீக்கு
  12. தோல்வி என்பது ஒரு வழிகாட்டி
    அது ஒரு விழிப்புணர்வு

    அதுதான் நாம் இலக்கை அடைவதில்
    இடையே வரும் எச்சரிக்கை மணி

    அது நம்முடைய முயற்சி
    எந்த அளவில் இருக்கிறது என்பதை
    காட்டும் அளவுகோல்.

    அந்த எச்சரிக்கையை புறந்தள்ளாது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேருபவன்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும்

    மாறாக அதை உணராது
    அந்த தடையை அகற்றாது
    அதை தவிர்த்துவிட்டு செல்பவன் மீண்டும் தோல்வியைத்தான் சந்திப்பான்.

    விழித்து கொண்டொரெல்லாம்
    பிழைத்துகொண்டார்
    குறட்டை விட்டோரெல்லாம் அவரவ்ர் மனக்கோட்டையில் படுத்துக்கொண்டு கோட்டைதான் விடுவார்

    வெற்றிக்கோட்டையை
    அடையமுடியாது.

    பதிலளிநீக்கு
  13. இடுக்கண் வருங்கால் நகுக..அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்..

    ’’ஒரு துன்பம் வந்தால், அதை இன்பம் என்று வாழ்ந்து விட்டால்....’’ நல்ல முத்தாய்ப்பான கருத்துக்கள். வள்ளுவப் பெருந்தகை வகுத்ததும் இதைத்தானே!.

    பதிலளிநீக்கு
  14. புள்ளிகளை வைத்து ஒரு வாழ்க்கை கோலமே வரைந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. தோல்வியின் ரகசியத்தை ஆராய்வதில் ஒரு பயனும் இல்லைதான். அதேவேளையில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்பதையும் சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எச்சரிக்கையுடன் செய்யலாம். ஆம்.. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. அதிகப்படியான சிந்தனையை தோல்விக்கான ஆராய்ச்சிக்காக செலவிட்டால் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியாதுதான். ஓடவேண்டிய இலக்கின் அளவும் கூடிப்போகுத்தான்.. உங்கள் புன்னகையைப் போலவே ஒவ்வொன்றும் முத்து முத்தான கருத்துகள்...! பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    பதிலளிநீக்கு
  16. அருமையான கட்டுரைக்கு சிறப்பாக கட்டுரை தந்துள்ளார்கள் . கட்டுரை தந்த உங்களுக்கும் கருத்துரை தந்தவர்களுக்கும் நன்றி .
    தோல்வியை பெறாதவர்கள் உலகில் இல்லை . தோல்வியைக் கண்டு துவள்வது வாழ்வல்ல .தோல்வியே வெற்றிக்கு வித்திடும் . கடமையைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடுதல் சிறப்பு . நல்லது அல்லது நல்லதல்லாதது நடப்பதும் நன்மையே. ஒருவரது தோல்வி மற்றவரது வெற்றி . தோல்விக்கும் ஒரு காரணமுண்டு வெற்றிக்கும் ஒரு காரணமுண்டு. சுழலும் உலகில் வெற்றியும் ,தோல்வியும் சுழலும்

    பதிலளிநீக்கு
  17. நமது வாழ்க்கையும் ஒரு சொற்றோடர் போலதான்- அருமையான வாழ்க்கை பாடம்!பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டிய வெற்றிக்கான வழியை தெளிவு பட சொல்லிட்டிங்க. உங்க நற்சிந்தனைகள் தொடரட்டும்...
    த.ம-9

    பதிலளிநீக்கு
  18. //கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..!//

    காலம் பொன் போன்றது
    கடமை கண் போன்றது.

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. /// .. இந்த ரகசியங்களை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை///

    தனபாலன்சார்... அருமையாகச் சொன்னீர்கள்.
    குழந்தைகளுக்கு முன்னர் நாமே இதை புரிந்துகொள்ளணும்...:)

    முத்தாய்ப்பாய்ச் சொன்ன /// ஊருக்குச்சிந்தும் வான்மழை தன்னில், உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு...! நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்... நாளைகள் இன்றே வருவதுண்டு...! /// மனதை நிறைத்தது.
    மிக மிக அருமையான பதிவு! பகிர்விற்கு மனம்நிறைந்த நன்றிகள் பல!!! வாழ்த்துக்கள்!

    த ம. 10

    பதிலளிநீக்கு
  20. ///////
    நமது வாழ்க்கையும் ஒரு சொற்றோடர் போலதான்- அருமையான வாழ்க்கை பாடம்!பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டிய வெற்றிக்கான வழியை தெளிவு பட சொல்லிட்டிங்க. உங்க நற்சிந்தனைகள் தொடரட்டும்...
    ///////


    அதே..அதே....

    பதிலளிநீக்கு
  21. தோல்வியின் இரகசியத்தை இதுவரை எனக்குள் சொல்லவில்லை அன்று அந்த தொழிலதிபர் சொன்னதே வெற்றியின் இரகசியம் என்ன என்பதை சொல்லிவிட்டது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. வாழ்க்கைக்குத் தேவையான அருமையான கருத்துக்களைத் தந்திருக்கும் பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. //தோல்வியின் ரகசியத்தை நான் எனக்குள் சொல்லவேயில்லை.//

    இது.... பன்ச்.

    இந்தக் கட்டுரையை மகவும் ரசித்தேன்.இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  24. சிந்தனை தரும் கருத்துகள்

    தொகுத்து தந்த விதம் அருமை

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  25. பட்டாசான சிந்தனை. பட்டால்தான் வாழ்க்கை. பட்டாலும் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. கெட்டாலும் வாழ்வதுதான் வாழ்க்கை. தோல்வியை நினைத்து துவளாமல், வெற்றியை நோக்கி வாழ்வதுதான் வாழ்க்கை. புதிய வேகம் தரும் உங்கள் கட்டுரைக்கு எனது சிறப்பான வாழ்த்துகள்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  26. தோல்வியின் ரகசியத்தை ஆராயாமல் வெற்றியின் முன்னேற்றத்திற்கு நேரத்தை செலவிட்டால் வெற்றிக்கனியை பறித்துவிடலாம்.. காலம் பொன்னானது,கடமை கண்ணானது. அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி. தொழிலதிபர் கதை அருமையான எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  27. தோல்வி என்ற நெகட்டீவ் எண்ணத்தை விட்டுட்டு வெற்றி என்ற பாஸிட்டீவ் எண்ணம் வேண்டும் என்பதை தொளிவா பாடல்களுடன் விளக்கி இருக்கீங்க இனிமையான பாடல்களை கொடுத்து சிந்தனைகளை விதைக்கிறீர்கள் நன்றி!!!.

    பதிலளிநீக்கு
  28. அருமை நண்பா சிந்திக்க தூண்டும் விதைகளை தூவும் பதிவு

    பதிலளிநீக்கு
  29. தோல்வியை மறந்து வெற்றிப் பாதையில் எப்படி செல்ல வேண்டும் என்ற உங்கள் பதிவு அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  30. அருமையான கட்டுரை... வாழ்க்கையில் சோர்வுறும் சமயங்களில் இது போன்ற கட்டுரைகள்தான் நம்மை உரமேற்றிக்கொள்ளும் பூஸ்ட்...அருமை...
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.. என் அறிமுகம் குறித்து தெரிவித்தமைக்கும் என் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  31. வருடக்கணக்கிலாகிறது பாட்டைக் கேட்டு.
    சொல்லக் கூடாத ரகசியம் சுவையானக் கண்ணோட்டம்.

    பதிலளிநீக்கு
  32. பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  33. நல்லதொரு பணியை செய்துவருகிறீர்கள்,சூப்பரான பாடல்கள்..அருமையான விளக்கங்கள்,

    பதிலளிநீக்கு
  34. தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்ற தெரிந்து விட்டால் வாழ்வில் நலமாய் இருக்கலாம். தோல்வியை கண்டு துவளாத மனப்பக்குவத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
    தொழில் அதிபர் கதை அருமை.
    பாடல் பகிர்வு நல்ல தேர்வு.
    நம்பிக்கை கொடுத்து வெற்றிக்கு அழைத்து செல்லும் கட்டுரை அருமை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  35. மற்றுமொரு தரமான படைப்பு தனபாலன் ஜி...

    தமிழ் மணத்தில் தலைப்பு வரவில்லை..என்னவென்று பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  36. தோல்வியின் ரகசியத்தைத் தனக்குள் சொல்லாத தொழிலதிபர், இடையில் வரும் தடங்கல்களை எண்ணாமல், இலக்கை நினைப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்ற செய்திகள் மனதுக்கு வலுவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம்
    தனபால்(அண்ணா)


    அருமையான படைப்பு மனித வாழ்வில் வெற்றிப் பாதையை அடைய பல தடைகளை தாண்டியாக வேண்டும் இந்த பதிவுக்கு ஏற்றது போல் பாடல் அருமையாக உள்ளது பாராட்டுக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  38. வழக்கம்போல அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  39. தோல்வியில் இருந்துதான் பல நல்ல விடயம் படிக்க முடியும்.!அருமையான விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  40. வார்த்தை விளையாட்டு போல் வாழ்க்கையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் ..எதுவும் கடந்து போகும் arumai. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  41. வாழ்க்கை பாடத்தை அழகாக புள்ளிகள் ஊடாக எடுத்துக்காட்டிவிட்டீர்கள். கதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  42. தொழிலதிபர் உதாரணம் யோசிக்க சிந்திக்க வைக்கிறது நண்பா...!

    பதிலளிநீக்கு
  43. வாழ்வின் அடிப்படை விஷயங்கள் ,புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எளிய நடையில் அருமையாய் , பாடல் வரிகளுடன் எடுத்துக் கூறிய விதம் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  44. வழக்கம்போல அருமையான பதிவு. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  45. மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு

  46. பொல்லா உலகில் போற்றுதல் பெற்றிட
    சொல்லாத ரகசியத்தின் சூட்சுமங்கள் தந்தீர்
    எல்லாம் படித்தேன் இதயத்தில் மகிழ்ச்சி
    எப்போதும் தருவீர் இதுபோல் பதிவுகளே...!

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  47. மிக அருமையான கருத்து தனபாலன். அதைச் சொன்ன விதமும் வெகு அருமை.

    பதிலளிநீக்கு
  48. வாழ்க்கையைப் பற்றிய நல்ல பதிவு உங்களது டச்சுடன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  49. இன்று உங்கள் பதிவு என்போன்ற சுவீட் 16 ஆட்களுக்கும்:) புரியும்படியா மிகத் தெளிவா, நல்ல நகைச்சுவையோடு வெளிவந்திருக்கு...

    ஒவ்வொரு நாள் என்பது, இறைவனால் எமக்கு கொடுக்கப்பட்டுள்ள கிஃப்ட் ஆம். நாளை இருப்போமோ இல்லையோ என்பது நமக்குத் தெரியாது, அதனால முடிஞ்சவரை வாழ்க்கையை அழகாக்கி சந்தோசமாக்கி.. வாழுவோம்.

    பதிலளிநீக்கு
  50. ஒரு நேர்த்தியான சொற்றொடரை அமைத்தல் போலவே வாழ்க்கையை இனிதாய் அழகாய் மாற்றும் வழிவகைகையைச் சொன்ன பாங்கு அசத்தல். எண்ணிப் பார்த்தால் எத்தனை இலகுவாக இருக்கிறது வாழ்க்கை... நாம்தான் அதில் விழும் சின்னச் சின்ன முடிச்சுகளையும் நிதானமாய் அவிழ்க்கத்தெரியாமல் மேலும் மேலும் சிக்கலாக்கிவிடுகிறோம் போலும். வழக்கம்போலவே மனந்தொடும் வகையில் எளிமையான அருமையான வாழ்வியல் கட்டுரை. பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  51. காற்புள்ளி, நிறுத்தற்குறிகளைக கொண்டு அருமையான வாழ்க்கைப் பாடம்... வாழ்க்கையும் இப்படியே நின்று நிதானித்து தொடர்ந்து செல்ல வேண்டிய இடங்களை தெரிந்து தெரிவு செய்தால் பயணம் அருமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  52. தமிழில் எழுதும் கலையை உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  53. வாழ்க்கையின் யதார்த்தம் உணர்த்தும் பதிவு
    நன்றி சகோ
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா

    பதிலளிநீக்கு
  54. தோல்வியின் ரகசியத்தை நான் எனக்குள் சொல்லவேயில்லை-----அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  55. புள்ளிகளை வைத்து ஒரு பதிவு. மிக நல்ல பதிவு; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம்.

    தொழில் அதிபர் கதை மனதில் ஆழப் பதிந்தது.

    பதிலளிநீக்கு
  56. எளிமையான ஆனால் பயனுள்ள பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  57. .பணிவான வணக்கம் இந்த இடுகையும் என்னுள்ளத்தில் மிகப் பெரிய பதிப்பை உண்டாக்கின எல்லாப் பதிவர்களும் எனக்கு அறிவுரை மட்டும் அல்ல அறுத்தாலும் சொல்லி இருக்கிறார்கள் எனது பிழையான கற்பிதங்கள் உங்களால் காணமல் போயின நன்றி ..

    பதிலளிநீக்கு
  58. சொற்றொடர் போலத்தான் வாழ்க்கை - அருமையாச் சொல்லியிருக்கிறீர்கள்.
    சொல்லக்கூடாத ரகசியம் நம் தோல்வி பற்றியது.

    எளிமையாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவுகள்.

    பாடலும் பாடல் வரிகளும் சூப்பர்!
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  59. அருமையான பதிவு. உங்களுக்கே உரித்தான பாணியில் அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். உங்கள் பதிவைப் படித்தால் எப்போதுமே மனதுக்குள் ஒரு உற்சாகம் தான். எதிர்நீச்சல் படப் பாடலை உங்கள் பதிவின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பின் கேட்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  60. சொற்களைக் கொண்டே
    மிகப் பெரிய விஷயத்தை மிக மிக
    எளிதாக அழகாகவிளக்கிப்போனது
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  61. சிறந்த பதிவு

    உண்மையில் முயற்சி உள்ளோருக்கு
    வெற்றி ஒர் எட்டாப் பழமல்ல...

    பதிலளிநீக்கு
  62. அன்பின் தனபாலன் - அருமையான சிந்தனை - கருத்துகள் நன்று - தோவியினைக் கண்டு துவளாமல் வெற்றிப் பாத்தியின நோக்கிச் செல்ல வேண்டும் - அருமை அருமை - வாழ்க்கையில் கால் அரை முற்றுப் புள்ளிகள் நன்று நன்று.

    நல்லதொரு பதிவு - குறள் எதிர் நீச்சல் நன்று நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  63. எதிர் நீச்சல் பாட்டு அருமையான எடிட்டிங்

    பதிலளிநீக்கு
  64. சொற்றொடரிலிருந்து வாழ்க்கைக்கு அழகாய் அருமையாய் எங்களை அழைத்துச் சென்றீர்கள்... எம் பிள்ளைகளுக்கும் உங்க லிங்க்கை தந்திருக்கிறேன் பாலண்ணா.

    பதிலளிநீக்கு
  65. வார்த்தைகளும் புரிந்தன. வாழ்க்கையும் புரிந்தது. ஒவ்வொரு சொல்லும் வேதமாக...

    பதிலளிநீக்கு
  66. வாழ்க்கையையும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளியோடு இணைத்து ஒப்பிட்டிருப்பது அழகு, தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்கவேண்டும் என்பதும் சரியானதே. ஆனால் எத்தனை பேரால் முடிகிறது? மனசும் திரும்பத் திரும்ப அதையே நினைச்சு நினைச்சு ரணமாகும். இனியாவது மாற முயற்சி செய்யணும். :(

    பதிலளிநீக்கு
  67. இன்னிக்கு இதை மறுபடி படிக்க நேர்ந்தது. :)

    பதிலளிநீக்கு
  68. குறியீடுகள் குறுக்கீடு செய்கிறது வாழ்வுதனை - சமநிலை கொள்ள சமத்துவம் பேண உனக்குக் கீழே இருப்போரை எண்ணு தோல்வி இல்லைத் தம்பி தூங்கா மனச்சாட்சி தாங்கி உனைச்சென்று சரித்திரம் காணுது உன்னை நம்பி.. அழகிய ஆய்வு பாடல்வரிகளில் பதில்களை சூடி பக்குவம் தருகிறது தனபாலனின் திறமைக்கு ஒரு மகுடம் தந்தேன்.... மிக மிக அருமை...

    பதிலளிநீக்கு
  69. அழகாக கோர்த்து கொடுத்து இருக்கீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.