மரம் நட்டவர்களை மறக்கலாமா ? (பகுதி 6)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...


இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாக தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ளது. முதலில்...

கவிதைகள்...

நீ வாழும் வரை

சூரியனை நேசி மறையும் வரை
இரவை நேசி விடுயும் வரை
ஒளியை நேசி அணையும் வரை
பூவை நேசி அது உதிரும் வரை
காயை நேசி கனியாகும் வரை
கல்வியை நேசி நீ வாழும் வரை
அன்று...இன்று

படிக்கட்டு ஏறி கல்வி பயில
சோம்பல் பட்டேன் அன்று...
அதன் விளைவு பல மாடி
கட்டிடங்களுக்கு கல் சுமக்கிறேன் இன்று...
உறவுகள்

அன்பை கற்றுக் கொடுத்த - அம்மா
அறிவைக் கற்றுக் கொடுத்த - அப்பா
கல்வியைக் கற்றுக் கொடுத்த - ஆசிரியர்
பாசத்தைக் கற்றுக் கொடுத்த - சகோதரி
தைரியத்தைக் கற்றுக் கொடுத்த - சகோதரர்
இனிய உறவுகளைக் கற்றுக் கொடுத்த உயர்ந்த ஆசிரியரே... நன்றி...

Beautiful Lines
'Rivers' Never go 'Reverse'
So Try to like a River
Don't get back of your... Aim
வெற்றி

வெற்றி உன் கையில்
தொட்டுவிடும் தூரத்தில்
வெற்றி இல்லை
அதனை விட்டுவிடும்
தூரத்தில் நானும் இல்லை
இதை மனதில் கொள்...
வெற்றி உனக்கே...!

தோல்வி

தோற்றது தோல்வி அல்ல.
தோற்றதை நினைத்து
மனம் உடைந்து விடுவது
தான் தோல்வி...
தியாகம்-அது மனித மாண்பு

சுதந்திர தியாகிகள்
தங்கள் உயிரையும் மறந்து
தாய்நாட்டிற்காக உழைத்தவர்கள்
கதருக்கு ஆசைப்பட்டார்கள்-ஆனால்
காருக்கு ஆசைப்படவில்லை !
மாற்றுவேட்டி வைத்திருந்தார்கள்-ஆனால்
மாடி வீடு வைத்திருக்கவில்லை
கல்லடி வாங்கினார்கள்-ஆனால்
கால்காணி நிலம் கூட வாங்கவில்லை
புகழ் சேர்க்கத் தெரிந்ததே தவிர
பொட்டுத் தங்கம் சேர்க்கத் தெரியவில்லை
நாட்டுக்கு உழைத்து ஓடாய்த் தேய்ந்தார்கள்
போராடாமல் அவர்கள் பிழைப்பைத் தேடி
போயிருந்தால் இன்று நம் கதி !
பொட்டல் காட்டைச் செப்பனிட்டு
பயிர் செய்தது போல்
இருளில் இருந்த இந்தியாவின் பெருமைகளை
இமயத்தின் உச்சிக்கு கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்
மரநிழலில் உறங்கும் நாம்
மரம் நட்டவர்களை மறக்கலாமா...?
அது மனித மாண்பாகுமா...?
நன்றி !
நற்பண்புகளின் தாய்

அம்மா...! நீ...! என்...
விழிகளில் அழுதிட
இதழ்களில் சிரித்திட
இமைகளில் உறங்கிட
இம்சையை இரசித்திட
வெற்றியில் களித்திட
தோல்வியில் துவண்டிட
முத்தத்தில் மகிழ்ந்திட
உயிருடன் கலந்திட
இன்பத்தைப் பெருக்கிட
இன்னலைக் கலைந்திட
இறைவனால் பரிசளிக்கப்பட்ட
இனிய தேவதை
நீ... அம்மா...!
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து எனக்கு
உருவம் தந்த
தெய்வம் நீ...!

அன்பு - தியாகம்

ஒரு துளி கண்ணீரைத்
துடைப்பது அன்பு...
மறுதுளி கண்ணீர் வராமல்
தடுப்பது தியாகம்...

சிந்தனைக்கு...

1 முதல் 99 வரை உள்ள எண்கள் ஆங்கில எழுத்தால் எழுதும் போது A,B,C,D என்ற எழுத்துக்கள் இடம் பெறாது...

A என்ற எழுத்து ThousAnd என்றதிலும், B என்ற எழுத்து Billion என்றதிலும், C என்ற எழுத்து Crore என்றதிலும், D என்ற எழுத்து HundreD என்றதிலும் மட்டும் தான் இடம் பெறும்...

தேர்வுக் குறள்கள்

பொருளும் அழகும் பொருந்தின விடைத்தாள்
மார்க்கும் அழகும் பெறும்.

எழுத்தைத் தெளிவாய் எழுதுக இல்லையெனில்
எழுதவில் எழுதுளம் நன்று.

படையில்லா மன்னவர் போலக் கெடுமே
விடையில்லா மாணவர் மார்க்கு.

பெயிலாவாய் என்றே இருப்பினும் செய்யற்க
காப்பி யடிக்கும் தொழில்.

மணிக்குள் எழுதி முடியாதோர் என்கற்றும்
மார்க்குகள் மிக்கு பெறார்.

நன்கெழுதுதல் தேர்ச்சிக்கு வித்தாகும் பார்த்தெழுதல்
என்றும் இடுக்கண் தரும்.

படித்தார் படியாதார் என்ப தொருவர்
விடையினால் காணப் பெறும்.

குழந்தைகளே... நானும் எனக்குப் பிடித்த குறளை கொஞ்சம் மாற்றுகிறேன்

பதிக கசடறப் பதிப்பவை பதிந்தபின்
நிற்க அதற்குத் தக.


பொருள் : மனதில் பதிப்பதற்குத் தகுதியான நல்லவற்றைப் பழுதில்லாமல் பதிய வேண்டும்... பதித்த பின்னர், பதிந்த அந்த நல்லவற்றுக்கேற்றவாறு தகுந்தபடி நடக்கவும் வேண்டும்௦...

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும்...

இப்படி அசத்துறாங்க... நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது...? இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. குழந்தைகள் எழுதிய குறள்கள்/ கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.
  அம்மாவைப் பற்றிய

  அதில் ஒரு சந்தேகம்:
  மணிக்குள் எழுதி முடியாதோர் என்கற்றும் மார்க்குகள் மிக்கு பெறுவர்.
  மிக்கு என்றால் - குறைவான என்று பொருளா?

  நீங்கள் சற்று மாற்றி எழுதியிருக்கும் குறளும் அருமை!
  பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான பகிர்வு சிந்தனை, கவிதை குறள் என பல்சுவை பகிர்வு.. அருமை

  பதிலளிநீக்கு
 3. உபயோகம் புரியாவிட்டாலும் சிந்தனைக்கு சமாசாரம் சுவாரசியம் :-)
  குறள் உங்கள் சரக்கா? நன்று.
  formatting உழைப்புக்கு வணக்கம்.

  பதிலளிநீக்கு
 4. பல்சுவைப்பகுதிகள் அனைத்தும் அருமை...பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. குழந்தைகளின் கவிதைகள்,புதுமைக் குறள்கள் அனைத்தும் அருமை....

  பதிலளிநீக்கு
 6. தேர்வுகள் நடக்கும் சமயத்தில் குழந்தைகளுக்கான மிகவும் ப்யனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. எதைப் பாராட்ட எதை விட? எல்லாமே அருமை. அதிலும் தோல்வியைப் பற்றிய விளக்கம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 8. குழந்தைகளின் மிகச் சுவையான பகுதி. பகிர்விற்கு நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 9. சோம்பல் மற்றும் தோல்வி பற்றிய கவிதை அருமை
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

 10. குழந்தைகள் பதிவுகள் அருமை.குழந்தைகளும் பதிவுகளைப் படித்து, எழுதவும் செய்கிறார்கள் என்றால் அவர்களை ஊக்குவிக்கும் பெருமை உங்களைச் சேரும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் சிறப்பாக உள்ளது. வாழத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருமே ரசிக்கும் பல்சுவைப் பதிவு.

  பதிலளிநீக்கு
 13. மாணவர்களின் படைப்புக்கள் வெகு அருமை! குறிப்பாக ஆறைப் பற்றிய அந்த ஆங்கில பொன்மொழி சிறப்பு! தங்களின் புதுக்குறளும் ரசிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. மிக அருமையான பகிர்வு. கவிதை சிறப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 15. பணம்,சிந்தனை இதுபோல ”குழந்தைகளுக்கான பல்சுவை பகுதி “ என்ற தனி பேஜ் உருவாக்கினால் அவர்கள் சுலபமாக படிக்க ஏதுவாகும்.
  அவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கும்...உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. உங்களை போன்றோர் ஊக்கம்தான் குழந்தைகளுக்கு ஆக்கம் தரும்.கவிதைகள், தேர்வுக்குறள்கள் அனைத்தும் அருமை. குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  அருமையான படைப்பு நல்லசிந்தனை ஓட்டம் உள்ள கருத்து வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 18. உங்கள் கட்டுரை அனைத்தும் திண்டுக்கல் ஹல்வா போன்று இனிக்கின்றது

  பதிலளிநீக்கு
 19. தனபாலன்ஜி...மற்றுமொரு தரமான பகிர்வு...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 20. எத்தகைய திறமை எங்கெல்லாம் மறைந்திருக்கிறது! இதைத்தான் தாமஸ் கிரே தன் கவிதையில் சொன்னான்...”full many a gem of purest ray serene.....(என் பதிவில் தமிழில் படியுங்கள்!)

  பதிலளிநீக்கு
 21. குழந்தைகளின் படைப்புகள் புதிதாக
  மலர்ச்சியாக குறும்பாக உள்ளன.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. கவிதைகள், ஆங்கில எண்களில் வரும் எழுத்துக்கள், குறள்கள் எல்லாம் அருமை.
  அட, ABCD ABCD என்று பல இடங்களில் சொல்லப்படும் எழுத்துக்களுக்கு எண்களில் சில இடங்கள் தானா என்று வியந்தேன். தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

  பதிலளிநீக்கு
 23. அருமை .. அருமை.. எல்லாமே அருமை வரிகள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. காலத்துக்கு ஏற்ற பதிவு. குழந்தைகள் படித்தால் நலம்.
  நற்பண்புகளின் தாய் மிக நன்றாக இருக்கிறது.

  தேர்வு குறள்கள் நன்று. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
  உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இதைப் படித்து நல் முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. அத்தனையும் அருமை! அதிலும் முத்தாய்ப்பாக நீங்கள் எழுதிய குறள் மிக மிகச் சிறப்பு.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு. உங்களின் மாற்று குறள் மிக மிக அருமை சார்.. அனைவருக்கும் பிடித்த குறிப்பாக மாணவர்களுக்கு உபயோகமான பொருத்தமான பதிவு. மாணவர்களின் படைப்புகள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 27. பள்ளிக் கூட மாணவர்கள் அல்ல இவர்கள் சொல்லித்தரும் மகான்கள் . குறளும் அழகே.கவிதைகளும் அழகே . பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு


 28. குழந்தைகள் எழுதிய குறள்கள்/ கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.
  அத்தனையும் அருமை!
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 29. கவிதைகள் எல்லாம் சிறிய பிஞ்சுகளின் வாசம் என்றால் நம்ப முடியவில்லை அதுவும் தோல்வி கவிதை சாரம் அவ்வளவு அருமை பகிர்ந்த உங்கள் மனதிற்கு வாழ்த்துகள்இனைந்துவிடேன் எப்போது அவர்கள் திறமைக்கு ஒரு மனம்திறந்த சல்யுட் மாற்று குறல்கள் எல்லாம் அருமை உங்கள் குறலின் விளக்கமும் அருமை

  பதிலளிநீக்கு
 30. நல்ல தகவல் சார்... உங்களால் மட்டுமே எழுத முடிந்ச சில விஷயங்கஙள்

  பதிலளிநீக்கு
 31. குழந்தைகளின் படைப்புகள் மிக மிக சிறப்புங்க. உறவுகள் பற்றிய வரிகள் கவர்ந்தது. வாழ்த்துக்கள் மழலைகளுக்கு நன்றி தங்களுக்கு சகோ.

  பதிலளிநீக்கு
 32. குழந்தைகளின் படைப்புகளை வெளியிடதற்ற்கு மகிழ்ச்சி. அனைத்தும் நன்று. மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

 33. அருமை!அருமை! அருமை!
  எமக்கே!
  பெருமை பெருமை! பெருமை!
  உமக்கே!

  பதிலளிநீக்கு
 34. கவிதைகள், சிந்தனைகள்,தேர்வுக் குறள்கள் எல்லாமே அருமையான பகிர்வு.உங்கள் பகிர்வுகள் எப்பொழுதுமே அட்டவணையிட்டு, அடிக்கோடிட்டு,நிறப்படுத்தி இப்படி தெளிவாக பகிர்வதில் உள்ள சிரத்தைக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 35. தாமதமாய் கண்டுவிட்டேன் .அதற்குள் எல்லோரும் உண்டுவிட்டார்கள் .தவறு என்னுடையதே .அடுத்தமுறை அள்ளிப் பருகிடுவேன் ஆனந்தமேனச் சொல்லிடுவேன்

  பதிலளிநீக்கு
 36. @கவியாழி கண்ணதாசன்

  உங்கள் பதிவுகள் எல்லாமே ஒன்றிற்கு ஒன்று சிறந்த பதிவுகள்
  குறளும் ,பொருளும் அருமை.

  பதிலளிநீக்கு
 37. எல்லாமே கருத்தாழம் மிக்கன என்றாலும்
  ஆறுகள் பற்றியது ஆழம் மிகுந்தது.
  அனைவருமே அமிழக்கத் தக்கது.

  சுப்பு தாத்தா..
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 38. வெற்றி தோல்வி.. மிகவும் அருமை சார்!

  பதிலளிநீக்கு
 39. ஏராளமானவர்கள் கருத்திடுகிறார்கள்.

  தங்களின் பதிவு எத்தனை தரமானது என்பதை அது உணர்த்துகிறது.

  மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறேன் தனபாலன்

  பதிலளிநீக்கு
 40. அருமை அதுவும் அந்த தேர்வுத் திருக்குறள் ப்ப்ப்பா சான்சே இல்ல நான் பழக்க தோசத்தி்ல் மனப்பாடம் செய்துகொண்டேன்... இதை பிரிண்ட் எடுத்து என் தம்பிக்கும் கொடுத்தேன்.. அவன் இதை அவன் பள்ளி ஆசிரியரிடம் காட்ட போவதாக கூறியுள்ளான்..
  ஏனென்றால் இது தேர்வு காலம் என்பதால் பயனுள்ளதாக ருக்கும் எனறு கூறினான் என்ன ஒரு நல்லெண்ணம்

  பதிலளிநீக்கு
 41. குழந்தை இலக்கியம், குழந்தைகளின் இலக்கியம் இரண்டுக்கும் இயற்க்கை உரமாய் தங்கள் தளம். பாராட்டும் வாழ்த்தும் தங்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்கும்.

  பதிலளிநீக்கு
 42. தேர்வுக்குறள்கள் அருமை. :-) அதிலும்.. அந்தக் கையெழுத்து பற்றிய குறள் ;)

  பதிலளிநீக்கு
 43. தியாக மரம் நட்ட மாமனிதர்களை மறக்கவா முடியும். நல்ல பதிவு. அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.