🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உன்னை அறிந்தால்... (பகுதி 1)

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் எண்ணங்களை மேம்படுத்தும் பாடல்களை ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மற்றுமொரு பதிவிற்கேற்ற பாடல்கள்...இனி...


நண்பர்களே... மனிதனின் பிரச்சனைகளுக்குக் காரணமான குணம் ஏது ? - முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியிடவில்லை. காரணம் பதிவின் நீளம். இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொல்லில் (Labels) வந்தவை. இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் பல இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை ஒப்பிட்டுப் பார்த்தல் - இதைப்பற்றி ஏற்கனவே அந்தப் பதிவில் அலசி விட்டோம்... இனி பாடல் வரிகளை வாசிப்போமா...? நீலக்கலரில்-அருமை வரிகள், சிவப்புக் நிறத்தில்-என் கருத்துக்களைக் கேட்டு நீங்க யோசிங்க... " மனசாட்சி : நான் பாட்டுக்குப் பாட்டு பாடுறேன்... "

01. படம் : தங்கப்பதக்கம், முதல் வரி : நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..

பாசம் என்று எதைச் சொல்வது..? பக்தி என்று எதைச் சொல்வது..? அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா..? பிள்ளை என்னும் துணை வந்தது.. உள்ளம் எங்கும் இடம் கொண்டது.. இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா..?

நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தான் கெட்டுப் போகிறோம்... நம் வளர்ப்பு அப்படி... அதையே நாமும் நம் குழந்தைகளிடம் செய்தால் எப்படி நண்பர்களே...? ஒரு குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்குக் கஷ்டம்... இரு குழந்தைகள் இருந்தால், நமது ஒப்பிட்டால் அவர்களுக்குக் கஷ்டம்... யோசிங்க நண்பர்களே...

"தூக்க மருந்தினைப் போன்றவை--பெற்றவர் போற்றும் புகழுரைகள்.. நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை--கற்றவர் கூறும் அறிவுரைகள்.. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை-நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை..." (படம் : நீதிக்குத் தலை வணங்கு)

02. படம் : பழநி, முதல் வரி : அண்ணன் என்னடா... தம்பி என்னடா...

பணத்தின் மீது தான் பக்தி என்ற பின், பந்த பாசமே ஏனடா...? பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா...

முந்தைய பதிவில் பணம் என்ன என்ன செய்யும்...? என்பதைப் படித்து விட்டதால்... குழந்தைகளாக இருக்கும் போது கூடப் பிறந்தவர்களுடன் பாசத்துடனும், பலவற்றை விட்டுக்கொடுத்தும் இருக்கிறோம்... வளர்ந்த பின் ஏன் பங்காளி சண்டை...? பெற்றோர்களின் குற்றமா...? பிள்ளைகளின் குற்றமா...? யோசிங்க நண்பர்களே... இதே பாட்டில் மற்றும் ஒரு உன்னத வரி :

"மனித ஜாதியில் துயரம் யாவுமே... மனதினால் வந்த நோய்யடா.. மனதினால் வந்த நோய்யடா..."

03. படம் : யூத், முதல் வரி : சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி.. வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி.. குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி.. இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி.. தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி.. தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல.. பாடம்படி பவளக் கொடி.. உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டி இல்லை.. உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை..

நல்லா கவனிங்க : "குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி.." அதனாலே இதெல்லாம் கண்டுக்க கூடாது... யோசிங்க நண்பர்களே...

"வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்... வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்... இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்... இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்... வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்.. வையகம் இதுதானடா..." (படம் : நான் பெற்ற செல்வம்)

04. படம் : உரிமைக் குரல், முதல் வரி : ஒரு தாய் வயிற்றில் வந்த..

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்.. தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்... நல்லவர் லட்சியம், வெல்வது நிச்சயம்... அண்ணா அன்று சொன்னார்.. என்றும் அதுதான் சத்தியம்... ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்... நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்...

இந்தப் பிறவியில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனப் பிறக்கிறோம்... அடுத்த பிறவி உள்ளதா என்று தெரியாது. அதற்குள் ஏனிந்த பிரிவு... யோசிங்க நண்பர்களே...

"குறும்புக்கார வெள்ளாடே.. குள்ள நரியை நம்பாதே.. கூடி வாழத் தெரிஞ்சுக்கோ.. குணத்தைப் போற்றி நடந்துக்கோ.. விரிஞ்சு கிடக்கும் பூமியிலே.. இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ.. விளக்கு வைக்கிற நேரம் வந்தா வீடிருக்கு புரிஞ்சுக்கோ.. வேட்டையாடு விளையாடு.. விருப்பம் போல உறவாடு.. நீ வெற்றி எனும் கடலில் ஆடு.." (படம் : அரச கட்டளை)

05. படம் : எதிர் நீச்சல், முதல் வரி : அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா..?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா.. அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா.. அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவையா வாங்கிக்கறா.. பட்டுப் பொடவையா வாங்கிக்கறா...

மின்சாரம் போய்விட்டதா..? முதலில் பார்ப்பது பக்கத்து வீட்டை..! ஆனால் இப்போது சில மாதமாகப் பார்ப்பதில்லை... தமிழக அரசின் கைங்கரியம்... சரி அதை விடுங்க... அடுத்தவர்களுக்கும் நம்மைப் போல் பிரச்சனை என்றால் நம் உள்மனது சந்தோசப்பட்டுக் கொள்வதேன்..? யோசிங்க நண்பர்களே... இதே பாட்டில்

"அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி..? அவன் சம்பளம் பாதி, கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டு நமக்கேண்டி..? பட்டு... நமக்கேண்டி..?"

06. படம் : சூரியகாந்தி, முதல் வரி : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்.. அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்.. எந்த வண்டி ஓடும்..? உனை போலே அளவோடு உறவாட வேண்டும்.. உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது.. அது சிறுமை என்பது, அதில் அர்த்தம் உள்ளது.. யாரும் இருக்கும் இடத்திலிருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..

நான் உயர்ந்தவனா / நீ உயர்ந்தவனா...?, நான் பெரியவனா / நீ பெரியவனா...? / நான் பணக்காரனா / நீ பணக்காரனா...? இப்படி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்... நீயா/நானா ? யோசிங்க நண்பர்களே...

"பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.. துணிவும் வரவேண்டும் தோழா.. பாதை தவறாமல் பண்பு குறையாமல்.. பழகி வரவேண்டும் தோழா.." (படம் : தெய்வத்தாய்)

07. படம் : படித்தால் மட்டும் போதுமா ?, முதல் வரி : அண்ணன் காட்டிய வழியம்மா..

தொட்டால் சுடுவது நெருப்பாகும்... தொடாமல் சுடுவது சிரிப்பாகும்.. தெரிந்தே கெடுப்பது பகையாகும்... தெரியாமல் கெடுப்பது உறவாகும்... அண்ணன் காட்டிய வழியம்மா... அவனை நினைத்தே நானிருந்தேன்-அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்... இன்னும் அவனை மறக்கவில்லை - அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை...

நான் நல்லா இருந்தா போதும்... அடுத்தவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன...? இதைப் பிழைக்கத் தெரிந்தவன் என்பதா? சுயநலம் என்பதா...? யோசிங்க நண்பர்களே...

"நன்றி கொன்ற உள்ளங்களைக் கண்டு கண்டு வெந்த பின்பு.. என்னடி எனக்கு வேலை..? நம்பி நம்பி, வெம்பி வெம்பி, ஒன்றுமில்லை என்ற பின்பு.. உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையைக் கண்டவன் ஞானி.. வானம் பார்த்துப் பறக்காதே.. பூமியில் பிறந்தாய் மறக்காதே.." (படம் : தர்மதுரை)

ரொம்ப யோசிக்கச் சொல்லிட்டேனோ...? அதனாலே பகுதி 1... ரொம்ப யோசனை செஞ்சா கூட பிரச்சனை தான். அதனால் நண்பர்களே, நான் இப்ப யோசிக்கிறேன் பகுதி 2-யைப் பற்றி... நன்றி...

"உலகத்தில் திருடர்கள் சரிபாதி... ஊமைகள் குருடர்கள் அதில் பாதி... கலகத்தில் பிறப்பது தான் நீதி... மனம் கலங்காதே மதி மயங்காதே... ஹ! என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே... தலைவன் இருக்கிறான் மயங்காதே... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே... ஆஹஹா... ஆஹஹா... ஓஹோஹோ... ஓஹோஹோ... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்..." (படம் : பணத்தோட்டம்)

அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பகிர்வு... தொடருங்கள் உங்கள் பகிர்வுகளை....

    பதிலளிநீக்கு
  2. தெரிந்த பாடல்கள்தான். ஆனால் அர்த்தங்களை ஊன்றிக் கவனித்ததில்லை.அதை கவனிக்கச் செய்துள்ளீர்கள்.பழைய பாடல்கள் மட்டுமல்லாது புதிய பாடல்களில் உள்ள நல்ல வரிகளையும் எடுத்துக்காட்டுவது சிறப்பு.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு - ரசித்தேன் புரிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அசத்தல் ஜயா...அனைத்தும் காலத்தால் அழியாதவை...!

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு பழைய பாடலுக்குள்ளும் ஒரு விட படிப்பினை ஒளிந்திருக்கிறது என்று அருமையாக கூறி உள்ளீர்கள். நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. உன்னை அறிந்தால் உலகம் உன் கையில்.
    ’சொல்லால் மட்டும் நம்பதே சுயமாய் சிந்தித்து நீ உணர்’
    என்று பெரியவர்கள் சொல்வது போல் அருமையான பாடல்களை கொடுத்து சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள்.
    தன்னை அறிதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அடடா இதில் பல பாடல்கள் எனக்கும் பிடித்தமானவை. பாடல் களஞ்சியம் நீங்கள்

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை படிக்க எல்லாம் அருமை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைதான்..குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்..குட்டிட்டே இருப்பவனும் முட்டாள்..குற்றம் பார்க்காமல் உறவுகளைஏற்று கொள்வதா..? இல்லை ஒதுக்குவதா..? நம்மை நாமே அறிந்து கொண்டால் எல்லாமே தூசுதான்..உன்னை அறிந்தால் பாடலின் அர்த்தம் கோடி பொக்கிஷம்..அனைத்து பாடல்களும் சிந்திக்க வேண்டிய அருமையான பாடல்கள் ..

    பதிலளிநீக்கு
  10. "அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி..? அவன் சம்பளம் பாதி, கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டு நமக்கேண்டி..? பட்டு.. நமக்கேண்டி..?"

    மிக பிடித்தமான ரசிக்கவைக்கும் பாடல் ...நல்ல கருத்து மிக்க பாடல்..... அருமை

    பதிலளிநீக்கு
  11. அனைத்து பாடலும் அருமையாவை .... நல்ல பகிர்வு சகோ ....வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  12. யோசித்து வையுங்கள் பகுதி இரண்டிற்கும் வந்து விடுகிறோம்

    பதிலளிநீக்கு
  13. அருமையான தொகுப்பு.. அளித்திருக்கும் ஒவ்வொரு பாடல்களிலும் அருமை.. அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கும் அருமை.. உங்களுடைய பணி.. சிறப்பானது.. நன்றி தனபாலன் அவர்களே..

    தொடருங்கள்.. அட்டகாசமான பதிவுகளை...!

    பதிலளிநீக்கு
  14. நல்லாவே இருக்கு - பாடல் தேர்வும் கருத்தும் - அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. நல்ல அருமையான இனிமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப நல்ல பகிர்வு...எல்லாமே நல்ல பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  17. பாடலை வைத்தே ஆக்கம் எழுதுபவர் தாங்கள் தானோ! நன்று நல்வாழ்த்து சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்..

    பதிலளிநீக்கு
  18. இதுவரை நான் வெறுமனே பாடல்களாக கருதியவற்றை பாடங்களாக தந்திருக்கிறீர்கள். அருமையான பதிவு.

    தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பகிர்வு சார் ,
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  20. மிக அருமையானதொரு முயற்சி! பாடல்களுக்கு தங்களின் விளக்கம் சிறப்பு! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. பதிவின் தலைப்பும், பாடல்களின் தொகுப்பும் அதோடு இணைந்த தங்களுடைய கருத்தும் மிக அருமை. வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு இந்த பாடல் எல்லாம் அதிகம் நான் கேட்டதே இல்லை.....தமிழ்மணம்10

    பதிலளிநீக்கு
  23. இரண்டும் ஆறும் நான் எப்போதும் ரசிக்கும் பாடல் ...
    மற்றவைகளும் எனக்கு பிடிக்கும் ஆனால் அந்த அளவுக்கு இல்லை ..
    பாடம் சொல்லும் பாடல்களுக்கு என் நன்றிகள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. தங்கள் கருத்தும், பாடல்களும் மிக்க அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. பல பெற்றோர்கள் செய்யும் பெரும் தவறு நமது குழந்தையை பிற குழந்தைகளுடன் கம்பேர் செய்து பேசுவது. இது அவர்களின் உள்ளத்தில் படிப்பில் ஆர்வத்திற்கு பதில் மன ரீதியாக தாழ்வு மனப்பான்மையையே வளர்க்கும். எனது கருத்து உங்களுடன் ஒத்து போகிறது.

    பதிலளிநீக்கு
  26. பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.நன்றி தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப நாளுக்கப்புறம் உங்க வலை எனக்கு கிராஷ் ஆகாம திறந்திருக்கு...அழகு...தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  29. எனக்கும் நிறைய பாடல்களை மனதில் ஊறச் செய்து விட்டீர்கள் தனபாலன். திரைப் பாடல்களிலேயே எத்தனை உதாரணங்கள் காட்ட முடிகிறது?

    பதிலளிநீக்கு
  30. அருமையான பாடல்கள்! நெஞ்சைத் தொடும் பாடல்கள்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  31. நல்ல அலசல்.. மெனக்கட்டு இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  32. அருமையான பாடல் நினைவூட்டல் மற்றும் அதன் கருத்துக்களை ஆழப்படுத்தி தந்தமைக்கு !!! தொடர்க !!!

    தமிழ் மணம் ப்ளஸ் !

    பதிலளிநீக்கு
  33. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  34. மற்றுமொரு சிறப்பான படைப்பு.வாழத்துகடகள் சொந்தமே!

    பதிலளிநீக்கு
  35. எனக்கு பிடித்த பாடல் பலவற்றை உங்கள் பாணியில் விவரித்த விதம் அருமை சகோ. தொடரட்டும் இப்பணி

    பதிலளிநீக்கு
  36. காலத்தால் அழியாத
    நெஞ்சை குடியிருக்கும்
    நல் பாடல்கள் சார்

    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  37. Arumaiyaana padhivu. Ellame enakkum pidiththa paadalgal thaan. Innum "paadal padhivugal" pala eludha vendum thozhaa.

    பதிலளிநீக்கு
  38. பாடல்களும் அதனுடன் உங்கள் கருத்துக்களும் அருமை. (த.ம. 18)

    பதிலளிநீக்கு
  39. அருமையான கலெக்சன்...\\வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்.. வையகம் இதுதானடா..\\ இது செம பன்ச்..

    பதிலளிநீக்கு
  40. பாடல்களும் விளக்கங்களும் சிந்திக்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  41. பாடல்களும் அதன் விளக்கங்களும் அருமை,

    பதிலளிநீக்கு
  42. அந்தக் கால சினிமா பாடல்களின் கருத்துச் செறிவே தனிதான். தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  43. அந்தக் கால சினிமா பாடல்களின் கருத்துச் செறிவே தனிதான். தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  44. அனைத்து பாடல்களும் அருமை அண்ணா..பழைய பாடல்கள் என்றுமே நெஞ்சில் இருந்து மறவாது என்பதை நிருபித்து விடீர்கள்.

    பதிலளிநீக்கு
  45. அடுத்தாத்து அம்புஜம் அருமையான தெரிவு. மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்ககூடாது என்பதை உணர்த்தும் பாடல்.

    பதிலளிநீக்கு
  46. இது வரை கேட்டிராத பாடல்கள் (நான்)

    அருமையான பதிவு அங்கிள்

    பந்திகளுக்கிடையே இடை வெளி இருந்தால் வாசிக்க இலகு அங்கிள்...

    பதிலளிநீக்கு
  47. என்னை அறியத் தயாராக இருக்கிறேன்...
    சீக்கிரமா அடுத்த பதிவு இடுங்க

    (பாடல் வர்களை இடும் போது கூடவே DDMIX கொடுங்க..பதிவில் நேரடியாக இல்லை என்றாலும் ஒரு இணைப்பிலாவது!)

    பதிலளிநீக்கு
  48. எல்லாமே அருமையான பாடல்கள் .கருத்துக்கள் புரிந்து கேட்ட்கும்போதும் வாசிக்கும்போதும் மிக அருமையாக இருக்குங்க
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  49. தங்கள் தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சி. ஏனெனில் தமிழை வளர்ப்பதற்காக தங்கள் முயற்சி அமைகின்றது. தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
    நன்றி(http://alasalkal1000.blogspot.com)

    பதிலளிநீக்கு
  50. தொடருங்கள் உங்கள் பாடல் தொகுப்பை...
    வித்தியாசமான பார்வைகள் ..ரசித்தேன்...வாழ்த்துக்கள் தோழரே

    பதிலளிநீக்கு
  51. ஹிஹிஹி, அர்த்தங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  52. வணக்கம்
    தனபால் அண்ணா

    உண்மையில் நல்ல கருத்து பழைய பாடல்களை எடுத்துக்காட்டி அதற்கான விளக்கத்தையும் அழகாக சொல்லி விட்டிர்கள் மிகவும் எனக்கு பிடித்த பாடல்கள் வாழ்த்துக்கள் மற்ற பகுதிகளை நான் தொடருகிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  53. பழைய பாடல்கள்...பகிர்வு இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  54. கவிதையில் இசையும் ராகமும் சேரும் போது அதை நம் மனதில் அசை போட முடிகிறதே தவிர அதன் அர்த்தங்களை பார்ப்பதில் உங்கள் எழுத்தின் மூலம் தான் இவ்வளவு அர்த்தங்களா என புரிகிறது

    பதிலளிநீக்கு
  55. வாழ்வியல் தத்துவங்களை வடித்தெடுத்த பாடல்களைத் தொகுத்து நிகழ்காலத்தோடு தொடுத்திருக்கும் நேர்த்தி அருமை.

    பதிலளிநீக்கு
  56. எல்லாமே மிக மிக அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  57. பதிவு அருமை... பாடல்கள் பாடம் சொல்கின்றன

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.