🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉மிக மிக நல்ல நாள் எது...?

"வணக்கம் நண்பரே..."

"ஓ... நீயா... வந்துட்டியா..."

"என்ன ரொம்பச் சலிச்சுக்கிறே... மனித வாழ்வில் போனா வராதது எது ? பதிவிலே எவ்வளவு கலக்கினேன். இன்னைக்குத் தலைப்பு என்னங்கிறதை மட்டும் சொல்லு. 'டக்' என்று பதிலை சொல்றேன்."


"மிக மிக நல்ல நாள் எது ?"

"ச்சே... இவ்வளவு தானா... உழைப்பாளர் தினம்..? அன்னையர் தினம்..? தந்தையர் தினம்..? ஆசிரியர்கள் தினம்..? குழந்தைகள் தினம்..? சுதந்திர தினம்..? குடியரசு தினம்..? காதலர் தினம்..?"

"நிறுத்து... நிறுத்து... இது தான் 'டக்' என்று பதிலா ? இன்னும் கொஞ்ச நாள்லே வருசம் முழுக்க எதாவது ஒரு தினம் என்று ஆக்கிடப் போறாங்க"

"நிறையப் பேரு சிரிக்கிறதே இல்லே, அதே மாதிரி குடிதண்ணீரை வீணாக்குகிறோம். குளிக்கிற தினம், சிரிப்பு தினம் - இப்படி நிறையத் தினம் வரப்போகுது. அன்பில் வாழும் இதயம் தன்னை... தெய்வம் கண்டால் வணங்கும்... ஆசை இல்லா மனிதர் தம்மை... துன்பம் எங்கே நெருங்கும்...? சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... (படம் : உலகம் சுற்றும் வாலிபன்)"

"ம். நல்ல பாட்டு... இந்தத் தினங்கள் பற்றிய ஆராய்ச்சி அப்புறம் வச்சிக்கலாம்; இப்போ விசயத்திற்கு வா..."

"சரி; சின்ன வயசிலே இருந்து யோசித்துச் சொல்றேன்; அப்போ அப்போ பாட்டுப் பாடுவேன்."

"சரி... ஆரம்பி... நானும் தெரிஞ்ச பாட்டைப் பாடுறேன்..."

"நல்ல நாளா... எனக்குத் தெரிஞ்சி நல்ல நாள் என் பிறந்த நாள் தான். அன்னைக்குத் தான் சந்தோசமா இருப்பேன். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். (நிறையப் பணமும் கிடைக்கும்) கோயிலுக்குச் சென்று மனதார சாமி கும்பிடுவேன். அன்னைக்கு மட்டும் பொய் பேச மாட்டேன். எல்லோருக்கும் இனிப்பு வழங்குவேன். நண்பர்களுடன் கும்மாளம். அன்னைக்கு முழுக்க ஒரே ஜாலி தான். இன்னையிலே இருந்து அந்தக் கெட்ட பழக்கத்தை விட்ருவேன். (?) ஹாப்பி ஹாப்பி இன்று முதல் ஹாப்பி (படம் : ஊட்டி வரை உறவு)"

"அடேய்... நீ பிறந்தது நல்ல நாளா... இல்லையா... என்பதை மத்தவங்க தாண்டா சொல்லணும் ! நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே.... நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே... ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ (படம் : பாகப்பிரிவினை)"

"உனக்கு வேற பாட்டு கிடைக்கலையா... சரி... அதை விடு... நான் வேலைக்குச் சேர்ந்த நாளும், முதல் மாத சம்பளத்தை வாங்கி வீட்டில் அம்மாவிடம் கொடுத்த நாள். அந்த நாளை மறக்க முடியாது !"

"அடுத்த மாசம் முழுசா சம்பளத்தை வீட்டிலே கொடுத்தியா ?
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒன்னிலே... தேதி ஒன்னிலே... மனுசன் படாத பாடு படுவது இருபத்தொன்னிலே... இருபத்தொன்னிலே... தேதி ஒன்னுலே இருந்து ... சம்பள தேதி ... ஒன்னிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... கொண்டாட்டம்... இருபத்தொன்னிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்... திண்டாட்டம்... (படம் : முதல் தேதி)"

"முதன்முதலா அவளைப் பார்த்த நாள்... என்னைப் பறி கொடுத்த நாள்... நேற்று போல் இன்று இல்லை... இன்று போல் நாளை இல்லை... அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே... ஒன்று தான் எண்ணம் என்றால் உறவு தான் காதலே... எண்ணம் யாவும் சொல்லவா ? (படம் : தம்பிக்கு எந்த ஊரு)"

"நீ எதையும் சொல்ல வேண்டாம்... கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு... அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு... அவன் கனவில் அவள் வருவாள், அவனைப் பார்த்துச் சிரிப்பாள்... அவள் கனவில் யார் வருவார், யாரைப் பார்த்து அழைப்பாள்.....? (படம் : அன்னை) போச்சுடா... டேய் எழுந்திரி ! கற்பனையிலே எங்கேயோ போயிட்டே... அப்புறம் கல்யாணம் நடந்ததா... இல்லையா ?"

"எல்லார் வாழ்விலும் காதல் வரும். அந்த முதல் காதலை மறக்க முடியுமா ? ... ம் ... அவ கொடுத்து வைக்கலை... காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா... இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா... ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா...நர்ஸு பொண்ணைக் காதலி... கட்சி தாவல் இங்கே தர்மமடா... ஹோய்... ஹோய்... (படம் : வசூல் ராஜா MBBS)"

"சரி... சரி... இதெல்லாம் சகஜம் தான். மனசை தேத்திக்கோ... இப்ப அவளை முதலில் சந்தித்த நாளை விடப் பிரிந்த நாள் ஞாபகம் இருக்குமே... பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை... காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை... மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை... சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை... (படம் : அன்னை)"

"வெறுப்பேத்திரீங்களா... நீயே பதிலை சொல்லு... பாசமென்றும் நேசமென்றும்... வீடு என்றும் மனைவி என்றும்... நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே... ? அமைதியெங்கே... ? அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இன்பமா - இல்லையே... அது ஏன்... ஏன்... நண்பனே... (படம் : உயர்ந்த மனிதன்)"

"என்ன அப்செட் ஆயிட்டே... பொதுவா யோசி... சரி நானே சொல்றேன். மிக மிக நல்ல நாள் எது ? 'இன்று' தான் - அப்படின்னு தினமும் உற்சாகத்துடன் எழுந்திரி... அது மட்டுமல்லாமல் [ இன்னைக்கு முழுக்கச் சந்தோசமாக இருப்பேன். எவ்வித கஷ்டத்தையும், பிரச்சனைகளையும் கண்டு கலங்க மாட்டேன். பொய்யோ, கஷ்டத்தையோ, எமாத்துறதோ யாருக்கும் செய்ய மாட்டேன். பெரியவர்களுக்கு மரியாதையும், அடுத்தவர்களின் பேச்சுக்கு மதிப்பும் கொடுப்பேன். என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி மற்றவர்களுக்குச் செய்வேன். ] - இப்படி நல்லபடியா உனக்குத் தோணுறதை எல்லாம் நினைச்சிக்கிட்டு சுறுசுறுப்பா வேலையைப் பாரு... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... படம் : பணம் படைத்தவன்"

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை...!"

"அடேய்... பிரச்சனையோடோ / கஷ்டங்களோடோ தூங்குபவன், காலையில் பிரச்சனையோடோ / கஷ்டங்களோடோ தான் எழுந்திருப்பான். உலகத்திலேயே உண்மையான பணக்காரன் யார் தெரியுமா ? படுத்தவுடன் நிம்மதியா தூங்குறான் பாரு ... அவன் தான். சரி... அதை விடு...

நம்ம ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் குறள் எண் 336-ல்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

பொருள் : " நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை " என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்.

அதனாலே எப்படி இருக்கணும் / வாழணும் என்பதை யோசனை செய்.....
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே... இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே... நீ அதை நீ மறக்காதே... நீ அதை நீ மறக்காதே... நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா...? நியாயம், காயம் அவனே அறிவான்...அவனிடம் அதை நீ விட்டுச் செல்... ஹே... தோழா ... முன்னால் வாடா... உன்னால் முடியும்... (படம் :அழகிய தமிழ் மகன்) ஆக என்னைப் பொறுத்தவரை...

மிக மிக நல்ல நாள் - இன்று

"இது எல்லோருக்கும் தெரியாதா ? முடிவா நான் சொல்றேன் பாரு... பாட்டிலே..."

ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்... அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்...

© சுபதினம் வாலி K.V.மகாதேவன் சீர்காழி கோவிந்தராஜன் @ 1969 ⟫


"முடிவில் நல்ல பாட்டோடு முடித்த மனசாட்சிக்கு நன்றி !"


நல்ல நாள் மட்டும் தெரிஞ்சிகிட்டா போதுமா... ஏன்...? வாங்க இதையும் தெரிஞ்சிக்குவோம் : இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமையான பதிவு. உண்மையில் நல்ல நாள் இன்று தான். தலைவருக்கு சினிமாப் பாடல்கள் மனப்பாடமாக தெரியும் போல இருக்கிறதே.

  பதிலளிநீக்கு
 2. கமெண்ட் மாடரேஷனை எடுங்க தலைவரே.

  பதிலளிநீக்கு
 3. சார் பாட்டாலேயே ஒரு பதிவு கலக்கிட்டீங்க; ஓட்டுகளும் போட்டாச்சு

  பதிலளிநீக்கு
 4. எல்லா நாளும் நல்லதே நடக்கட்டும் நன்றி..!

  பதிலளிநீக்கு
 5. பாடலில் தொடங்கி குறளில் முடித்த விதம் அருமை . நிறைய செய்திகளை சொல்லிப்போகும் பதிவு .

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு நன்றி அண்ணா மேலும் உங்கள் தளத்தை மிக அழகாக வடிவமைத்து உள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 7. எல்லா நாளும் நல்ல நாளாக இருக்கட்டும், பதிவு அருமை, சும்மா பாட்டுக்களை வைத்து பின்னி எடுத்தீட்டிங்க.

  பதிலளிநீக்கு
 8. எதுகை மோனையுடன், விறுவிறுப்பான நடையில் சொல்ல நினைத்தவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 9. ஆகா... நல்ல கருத்து!!

  வாழ்க்கையில் எத்தனை நாட்கள் வந்தாலும், இன்றே நல்ல நாள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்...

  "Yesterday is history, tomorrow is a mystery, and today is a gift."

  நேற்று கடந்தவை அனைத்தும் வரலாறு;
  நாளை வருபவை அனைத்தும் உலர் ஆறு;
  இன்று நடப்பவை மட்டுமே பெரும்பேறு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ! உங்கள் கருத்தை பார்த்தவுடன் ஒரு புதிய பாட்டு ஞாபகம் வந்தது.....

   நேற்று என்பதும் கையில் இல்லை.....
   நாளை என்பதும் பையில் இல்லை.....
   இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.....
   தோழா.....! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக
   மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்... அன்பே.....

   (படம் : உன்னாலே...உன்னாலே) நன்றி நண்பரே !

   நீக்கு
 10. naam seytha oru seyalai karuththil kondu, oruvar nammai nandriyudan nokkum naal nannaal aakum.

  subbu rathinam.

  பதிலளிநீக்கு
 11. கலக்கலான தரமான பதிவு நண்பரே..பாடல்கள் அனைத்தும் முத்தாய்ப்பானது .

  பதிலளிநீக்கு
 12. சுவராஸ்யம். எனக்கும் நல்ல நாள் இன்றுதான்.

  பதிலளிநீக்கு
 13. ரசித்தேன்.

  நகுதற்பொருட்டன்று..........

  இப்படிச் செய்து நிறைய நண்பர்களை இழந்தேன்.

  பதிலளிநீக்கு
 14. திரைப்பட வசனங்கள் என்றாலும் நல்ல கருத்துக்கள்தான்்்்

  அருமை......

  பதிலளிநீக்கு
 15. அருமை...நல்ல கருத்துக்கள்.உண்மைதான்...!

  பதிலளிநீக்கு
 16. enna solla ethu solla......

  arumaiyaana pathivu....illai illai.....arumaiyaana paadam

  பதிலளிநீக்கு
 17. அருமை..அந்தக் கால பாடல்கள் முதல் இந்தக்கால பாடல்கள் வரை அனைத்து வரிகளை ரசித்து கேட்பீர்கள் போல.. அதுதான் வார்த்தைக்கு வார்த்தை பதிவில் சினிமா பாடல்கள் உதாரணமாக சொல்ல முடிந்திருக்கிறது.. அருமையான பதிவு தனபாலன் சார்.. ! தொடருங்கள் உங்கள் அட்டகாசமான பதிவுகளை...! வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 18. நன்றி, எனது தளத்திற்கு வந்தமைக்கும் வாழ்த்தியதற்கும்.

  பதிலளிநீக்கு
 19. எந்நாளும் இனிய நாளாக மலரட்டும்.

  பதிலளிநீக்கு
 20. திண்டுக்கல் தனபாலன் அன்பரே!

  முதலில் என்னை மன்னிக்கவும்! தங்களுக்கும் ஒரு வலைத்தளம் உள்ளது என்பதை நான் இன்றுதான் தெரிந்துகொண்டேன்!

  தங்களின் "மிக மிக நல்ல நாள் எது? எனும் இந்த பதிவு வித்தியாசமாக பதிவு! நல்ல கருந்தாழ்வு கையாண்டுள்ளீர்கள்! இறைவன் நாடினால்! உங்கள் வலைதளத்தை தினமும் பார்வையிடுகிறேன்! - அபூவஸ்மீ

  பதிலளிநீக்கு
 21. நல்ல திரைப்படப் பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.
  நல்ல நாள் எது என்றால், ‘எழுந்தால் மலச்சிக்கலும், படுத்தால் மனச்சிக்கலும் இல்லாத நாளே நல்ல நாள்.’(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை கடன் வாங்கி, சிறிது மாற்றி சொல்லியிருக்கிறேன்.)

  பதிலளிநீக்கு
 22. நேற்றென்பது செல்லாக்காசு;நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு,இன்று என்பது கையில் இருக்கும் பணம்!எனவே இன்றே நல்ல நாள்.

  பதிலளிநீக்கு
 23. தனபாலன் சார் பாடல்களைக் கொண்டு நல கருத்துகளைப் பகிர்ந்த்ததொடு மட்டும் இல்லாமல் பாடல் இடம் பெற்ற திரைப் படம் முதற்க் கொண்டு கூறியது கலக்கிடீங்க போங்க. உங்கள் வலைபூ வடிவமைப்பு அருமை. துக்காகவே நீங்க எனக்கு கிளாஸ் எடுக்கணும் போல.


  email subscription work agavillai...எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. முயன்று கொண்டுளேன்


  படித்துப் பாருங்கள்

  வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

  பதிலளிநீக்கு
 24. கருத்து முத்துக்களை கவிதை நடையில் கோர்த்த அருமையான
  என் மனங்கவர்ந்த பதிவு தனபால்! நன்று!

  த ம ஓ 7

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 25. பாட்டும் பொருளும் செம ரசித்து மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 26. காலையில் எழுந்து அந்த ஏக இறைவனான ஒரே இறைவனான வணங்கினால் எல்லா நாளும் நல்ல நாளே....எங்க தளத்திற்கும் வாங்க.உங்கள் பாணியில் ஒரு மறுமொழி கீழே....

  உங்கள் தளத்திற்கு என்னுடைய முதல் வருகை....FOLLWER ஆகிவிட்டேன் ......

  எனது தள கட்டுரைகளில் சில:பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்

  பதிலளிநீக்கு
 27. மிக அருமையான பதிவு சகோதரா பாடல் - தங்கள் வரிகள, என்று கலக்கல். விளையாட்டு விளையாட்டாக எவ்வளவு சீரியஸ் matter இது.
  நல்ல மனமும்- குணமும் இருந்தால் எல்லா நாளும் நல்ல நாளே!
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 28. அன்றாடம் நினைத்து நினைத்து
  நம்மை புதுப்பித்துக் கொள்ளவேண்டியதை
  அருமையாகச் சொல்லிப் போகும் அழகான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 29. இந்த நாள் இனிய நாள். அருமையாகச் சொல்லி அசத்தியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 30. அன்பின் தனபாலன்

  அருமையான் உரை - இன்று தான் நல்ல நாள். நாளும் பொழுதும் என் செய்யும் .... தினந்தினம் எழுந்த உடன் நமக்கு நாமே இன்று தான் நல்ல நாள் என்று சொல்லிக் கொண்டு ஆக்க பூர்வமாக சிந்தித்தால் அதுவே நல்ல நாள். எத்தனை பாடல்கள் - இறுதியில் முத்தாய்ப்பான முடிவு. நினைவாற்றல் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 31. நல்ல நாள் எந்த நாள் என்று தெளிய வைத்த பதிவும், அதை ரசிக்கும்படி படிக்கவைத்ததும் அருமை!

  பதிலளிநீக்கு
 32. நல்ல பகிர்வு நண்பரே... நன்றி...!

  பதிலளிநீக்கு
 33. NSK ஒரு படத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாட்டாலே பதில் சொல்வார் அதே போல இருந்தது. இத்தணைப்பாடல்கள் படத்தின் பெயருடன் அழகாக கொடுத்துள்ளீர். முக்கியமா ஆழமான கருத்தை கவனித்தேன். நன்றி தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 34. மிகவும் வித்தியாசமான பதிவாக இது இருக்கிறது..தொடர்ந்தும் சில பல பதுவுகளை படித்துவிட்டு தான் நல்ல நாள் ல உங்க ப்ளாக்க தொடங்கியிருக்கிறீங்களா என்னு சொல்லனும்..........ஹி....ஹி......ஹி அப்புறமா வாரன்

  பதிலளிநீக்கு
 35. தனபாலன் சார் அருமையாய் பாடல் முலம் நல்ல நாள் எது இன்று தான் சொன்னீர்கள்....கண்டிப்பா இன்று தான் சிறந்த நாள் இதை விட்டால் அவ்வளவு தான்.....

  பதிலளிநீக்கு
 36. ரொம்ப நல்ல பதிவு தனபாலன் சார்...ரொம்ப சுவாரிசியம்மா எழுதுரேங்க...
  எல்லா பாட்டுமே எனக்கு பிடித்த பாட்டுகள் தான்...
  ஒவொரு நாளுமே இனிய நாளே...
  அப்புறம் உங்க ப்ளாக் டிசைன் ரொம்ப அருமை...
  அடிக்கடி சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 37. நல்ல நடை..பட்டால பட்டய கிளப்பிருக்கீங்க..அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 38. அருமை நண்பரே...
  என்னால் bloggerஇலிருந்து குருத்துரைஎற்ற இயலவில்லை. கூகுள் கணக்கையே காண்பிக்கிறது... என்ன செய்வது? உதவி செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 39. எளிய நடையில் கலக்குகிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 40. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பாடல் இடம் பெற்ற திரைப் படம் 'உயர்ந்த மனிதன்'.
  'உயர்ந்த உள்ளம்' அல்ல!

  நல்ல பதிவு. நாளெல்லாம் நல்ல நாளே! நாள் என் செயும்... வரிகளையும் சேர்த்திருக்கலாம்! பாடல்கள் தனியாகத் தரவில்லையா?

  அழகிய தமிழ்மகன் வரிகளையும், பின்னூட்டத்தில் ஒரு கருத்தையும் படித்த பிறகு எங்கள் யோகா மாஸ்டர் அடிக்கடிச் சொல்லும் வரிகளையும் இங்கு பகிர்கிறேன்.

  "நேற்று என்பது உடைந்த பானை
  நாளை என்பது மதில்மேல் பூனை
  இன்று என்பது
  கையில் உள்ள வீணை!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. படத்தின் பெயரை திருத்தி விட்டேன். யோகா மாஸ்டர் அவர்களின் அருமை வரிகளை ரசித்தேன். அடுத்த பதிவில் DD Mix (பதிவிற்கேற்ற பாடல் வரிகளின் தொகுப்பு) தொடரும்... நன்றி சார் !

   நீக்கு
 41. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.