🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉யானையின் காதில் தமிழ் பேசியது கிளி.!?

வணக்கம் நண்பர்களே... நம் நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பதிவைத் தொடர்கிறேன்...


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு


கணிதம் எழுத்து அறிவு இவை இரண்டும் உயிர்வாழ் மக்களுக்குக் கண்கள் போன்றவை என்பதால்,
எல்லோரும் கற்க...

இனிக்கும் தமிழைப் பலவிதங்களில் எழுதலாம் (மாற்றலாம்) வாங்க... கணினியில் இருக்கும் Ms-Word - யை பயன்படுத்தி இருப்போம்... அதில் ஆங்கில எழுத்துக்களை நமது விருப்பமான எழுத்துருவை (Font) தேர்வு செய்து மாற்றுவோம்... நம் கணினியில் குறைவாக உள்ள தமிழ் எழுத்துருக்களை வைத்தும் அதே போல் மாற்றி, தமிழை அழகு செய்து ரசித்திருப்போம்... சரி, இந்த https://oss.neechalkaran.com/tamilfonts/ இணைப்பிலிருந்து அழகான தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட சில பக்கங்களின் இணைப்புகள் இதோ :-

- -

ஒவ்வொரு இணைப்பாகச் சென்று அங்குள்ள Download-யை சொடுக்கி அனைத்தையும் அல்லது பிடித்தவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பின் மீது இருமுறை & Install சொடுக்கி, கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்... இனி Ms-Word-ல் தமிழ் எழுத்துக்களை அழகாகப் பலவிதங்களில் மாற்றி அலுவலகம் மற்றும் நம் தேவைகளுக்குப் பயன்படுத்தி அசத்தலாம்...! இதே போல் நம் வலைப்பூவிலும் செய்து பார்ப்போமா...?

வலைப்பூவின் புதிய தோற்றத்திற்கேற்ப விளக்கங்கள் தருகிறேன்... நாம் பதிவு எழுதும் பக்கத்தில் இடதுபுறம் மேலே முதல் Icon <> ▿ என்றிருக்கும்... அது Compose view மற்றும் HTML view பக்கங்களுக்கு மாறுவதற்கான Icon... அழகான பல தமிழ் எழுத்துருக்களாக மாற்ற, சில script-களை HTML view-வில் சேர்க்க வேண்டும்... கீழே உள்ள பெட்டியில் உள்ள script-யை சுட்டியால் (mouse) தேர்வு செய்து, உங்கள் (keyboard) விசைப்பலகையில் Ctrl-C சொடுக்கி, அதாவது நகல் (copy) எடுத்து, நீங்கள் எழுதின பதிவின் ஆரம்பத்தில் ஒட்டி (paste) விடவும்... script-ல் இரு இடத்தில் உள்ள NAME1, மற்றும் LINK, TEXT இவற்றை மாற்ற வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் தொடர்கின்றன...
LINK-யை தேர்வு செய்வோமா...? முதலில் இங்கே தமிழ் எழுத்துருக்கள் செல்லவும்... அங்கு 25 விதமான தமிழ் எழுத்துருக்களைக் காணலாம்... அங்கு விரிவாக என்பதைச் சொடுக்கினால், வரும் திரையில் மேலே சொன்னது போல் Download-யை சொடுக்கி கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்...! அதற்கு அடுத்ததாக அடைப்புக்குறிக்குள் இருப்பது தான் LINK...! நமக்குப் பிடித்த எழுத்துருவில் உள்ள அடைப்புக்குறிக்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று, Right-Click செய்து, Copy link address-யை தேர்வு செய்து சொடுக்கிக் கொள்ளுங்கள்... அதை LINK என்னுமிடத்தில் paste செய்து கொள்ளுங்கள்... 25 தமிழ் எழுத்துருக்கள் தான் உள்ளனவா...? கவனிக்க அங்கு என்றுள்ளதைச் சொடுக்கிக் கொண்டே இருக்கலாம்... இன்றைய நாள் வரை கிட்டத்தட்ட 2300 எழுத்துருக்கள் உள்ளன...!

NAME1 இரண்டிலும் அந்த எழுத்துருவிற்கேற்ப பெயரை உங்களின் விருப்பப்படி ஆங்கிலத்தில் இடவும்...

TEXT என்பது நம் பதிவு முழுவதுமே அல்லது ஒரு பத்தியோ அல்லது ஒரு வரியோ அல்லது ஒரு சொல்லாகக் கூட இருக்கலாம்...! முடிவாக ஒரு முடிவிற்கு வந்த பின், முடிவாகப் பதிவை Preview பார்க்கவும்... எழுத்துருவின் அளவை மாற்ற font-size: 21pt என்பதில் உள்ள எண்ணை மாற்றி, மறுபடியும் Preview பார்த்து திருப்தியானதுடன் பதிவை வெளியிடவும்... வெவ்வேறு எழுத்துருக்களைக் கொண்டு வித விதமாகப் பதிவை அலங்கரிக்க - மீண்டும் செய்க : ①②③

ஒரு பாடலை ரசிப்போம்...

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்... தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்... தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்... தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்... தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்... தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்... தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ...!

© பஞ்சவர்ணக்கிளி பாரதிதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1965

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம்
  அண்ணா

  தொழில்நுட்பம் சார்ந்த பதிவும் மிக மிக சிறப்பாக உள்ளது உண்மையில் வலைப்பூ எழுதும் நமக்கு மிகவும் பயனுள்ள பதிவு தொடருகிறேன் வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயனுள்ள பதிவு வழக்கம்போல் டிடி அசத்தல். டீஃபால்ட் ஆக அமைந்துள்ள லதா,விஜயா,நிர்மலா என்ற யூனிகோட் ஃபாண்டுகள் சில நேரங்களில் அலுப்பூட்டுகின்றன. அழகான மாற்று ஃபாண்டுகள் பதிவுக்கு மெருகு சேர்க்கும்.

  பதிலளிநீக்கு
 3. அருமை ஜி
  நான் இப்படி எழுத்துகளை விதவிதமாக எழுதுவதை விரும்புபவன். கையால் எழுதுவது போன்ற தோற்றம் அழகு.

  பிறகு கணினியில் போய் முயலும்போது புரியாதவைகளை அழைத்துக் கேட்டுக் கொ'ல்'வேன்.

  மிக்க நன்றி திரு.நீச்சல்காரருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் கொடுத்துள்ள "தமிழ் எழுத்துருக்கள்" தளத்தில் பல பக்கங்களை திறந்து (92 முறை சொடுக்கி...?!) எந்த எழுத்துருவை தேர்ந்தெடுப்பது என்பது தான் சிறிது நேரமாகலாம்... மற்றபடி நீங்கள் பூட்டுக்கான ஸ்கிரிப்ட் இணைப்பீர்கள் அல்லவா...? அதற்கு அடுத்து பதிவில் கொடுத்துள்ள ஸ்கிரிப்ட் இணைக்க வேண்டும் ஜி... இந்தப்பதிவில் ஏழு வகையான எழுத்துருக்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளேன்...

   நீக்கு
 4. சிறப்பு. பயனுள்ள பதிவு. நன்றி உங்களுக்கும் நீச்சல்காரருக்கும்

  பதிலளிநீக்கு
 5. உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்வேன். உங்களுக்கும் திரு நீச்சல் காரன் அவர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான எழுத்துருக்கள். எழுத்துருக்கள் பயன்படும். தங்களுக்கும் நீச்சல்காரன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மகிழ்ச்சியான செய்தி! புதிய வலையில் எழுதுவதற்கே இன்னும் தடுமாற்றமாக இருக்கு டிடி இனித்தான் பழகவேண்டும் இந்த எழுத்துருவை!

  பதிலளிநீக்கு
 8. பயனுள்ள பதிவு.
  உங்களுக்கும், நீச்சல்காரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.

  பாடல் மிகவும் பிடித்த பாடல்.
  கேட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 9. எனக்கு இந்தப் பதிவு மிகவும் தேவை, மீண்டும் வந்து படிச்சுப் பார்த்துத் தெளிவாகோணும்.. என் புளொக்கில் இன்னும் மாறவில்லை புதுசு:))

  பதிலளிநீக்கு
 10. டிடி உங்களுக்கும் நீச்சல்காரருக்கும் மிக்க நன்றி.

  வாசித்துக் கொண்டுவிட்டேன். செய்து பார்த்து முயற்சி செய்கிறேன். அதன் பின் பதிவும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 11. நன்றி...நன்றி.
  ஒன்று தங்களுக்கு. மற்றொன்று நீச்சல்காரருக்கு.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  நல்ல அருமையான பயனுள்ள பதிவு. எழுத்துருக்கள் விதவிதமாக மிக அழகாக உள்ளன. நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். அருமையான பதிவை தந்த தங்களுக்கும், தங்கள் நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்.
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. பயனுள்ள பதிவு ஐயா
  சில எழுத்துருக்களை தரவிறக்கம் செய்துள்ளேன்
  பயன்படுத்திப் பார்க்கிறேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 14. அருமையான பதிவு பயனுல்ல தகவல்கள். பாடலும் அருமை. உங்களுக்கும் நீச்சல்காரருக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 15. குறிப்பு வைத்துக் கொள்கிறேன்; இன்ஷா அல்லாஹ் பிறகு தேவைப்படலாம்!

  நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 16. MS Wordஇல் இந்த எழுத்துருக்களை நிறுவிக்கொண்டேன். வலைப்பதிவில் சற்றே நிதானமாகச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. செய்துவிடுவேன். நீச்சல்காரனைப் போன்ற இளைஞர்கள் என்னமாய் வேலை செய்கிறார்கள்! வாழ்க அவர்கள் தொண்டு!

  பதிலளிநீக்கு
 17. அருமையான, பயனுள்ள பதிவு. பாராட்டுகள்! பயன்படுத்திவிட்டு ஐயம் இருப்பின் தொடர்புகொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. வழிகாட்டல் அருமை.....நீந்த முயல்கிறேன்... நன்றி!

  பதிலளிநீக்கு
 19. மிகத் தாமத வருகைக்காக வருந்துகிறேன்!

  இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதப் போவதாக நம் வாட்சப்புக் குழுவில் தெரிவித்தபொழுதே ஆவல் தெரிவித்திருந்தேன். ஆனால் பதிவை நீங்கள் வெளியிட்டு இத்தனை நாட்கள் கழித்துத்தான் வருகிறேன். காரணம் மறதி மட்டுமில்லை, ஊரடங்கு காரணமாக எனக்கிருக்கும் கணினிச் சிக்கல்கள், கைப்பேசியிலிருந்து வலைப்பூக்களில் கருத்திட முடியாமை எனப் பல காரணங்கள்!

  உண்மையிலேயே இது மிகவும் எளிமையாக உள்ளது. அழகாக விளக்கிய உங்களுக்கும் அந்த மாபெரும் தமிழ் எழுத்துருத் தொகுப்பை உருவாக்கித் தமிழ் உலகுக்கு வழங்கியிருக்கும் நீச்சல்காரன் அவர்களுக்கும் நன்றியோ நன்றி!

  பதிலளிநீக்கு
 20. திரு.ஸ்ரீராம் அவர்களின் கருத்துரை :- நீச்சல்காரருக்கும் உங்களுக்கும் நன்றி. கணினி வந்த உடன் மறுபடி இந்தப் பதிவைப் படித்து என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன். நான் இன்னும் நியூ ப்ளாக்கருக்கு மாறவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று மாலை தானாகவே பொசுக்கென நியூ பிளாக்கருக்கு மாறி விட்டது என் ப்ளாக்கர் பக்கம்!

   நீக்கு
  2. கைப்பேசியில் ஏதோ ஒன்று செய்யப்போக, தவறுதலாக உங்கள் கருத்துரை நீங்கிப் போக, கடையில் இருக்கும் கணினிக்கு உடனே வந்தேன்... இனி கைப்பேசியில் எதுவும் செய்யக்கூடாது... ம்... சரி, எனக்கும் இவ்வாறு காட்டியது :- // Blogger’s new interface is now available automatically. If you want to revert back to the legacy interface, use “Revert to legacy Blogger”. The legacy interface will be available until August 24 //

   முன்பு இருந்த மாதிரி கூட Icon-கள் இல்லாமல், அவைகளும் மாறி விட்டது...! பழகுவது ஒருபுறம் இருந்தாலும், எழுதிய தொழினுட்ப பதிவுகள் அனைத்திலும் மாற்ற வேண்டுமே என்று தான் சிந்தனை... அப்போது தான் நண்பர்கள் சந்தேகம் கேட்டால், "இந்தப்பதிவு போல் செய்யுங்கள்" என்று அதன் இணைப்பைக் கொடுக்க முடியும்...! அடுத்து என்ன எழுதலாம் என்று சிந்தனையை இது போக்கி விட்டது... அனைத்தும் நன்மைக்கே...

   நீக்கு
  3. நான் பழைய ப்ளாக்கர் முறைக்கே மறுபடி மாறி விட்டேன்!

   நீக்கு
 21. அனைவரையும் தொழில் நுட்பத்தில் அனைத்துச் செல்லும் தங்களது பாங்கே பாங்கு. அழகு, அழகு..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.