🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



5 முதலாளிகளின் கதை

வணக்கம் நண்பர்களே... பதிவிற்குப் போகும் முன், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... கிட்டத்தட்ட ஆறு வருடம் முன்பு உங்களுக்கு ஒருவேளை இது உதவக்கூடும் என்று ஒரு பதிவைக் கண்டு, நானும் நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? எனும் பதிவை எழுதினேன்... அவரால் மீண்டும் ஒரு பதிவு... அவர் யார்...?

(1) அமேசான் கிண்டில் தமிழ் புத்தகம்
(2) கிண்டில் பற்றிய விளக்கங்கள்

மேலுள்ள இணைப்புகள் உங்களுக்கு, பதிவின் முடிவில் உதவும்... உதவ வேண்டும்...!

நம் வலைத்தள நண்பர் ஜோதிஜி அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு 5 முதலாளிகளின் கதை - அதைப் பற்றிய எனது கண்ணோட்டம் இந்தப் பதிவு... வாழ்வில் சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்கு ஒரு பாடம்...

ஆரம்பத்தில் அனைவரும் அறிய வேண்டிய சில சுய விவரங்களை முடித்த பின், திருப்பூருக்கு வந்த நாள் (1992 ஜூலை) முதற்கொண்டு, அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் தன்னுடைய அனுபவத்தை ஆரம்பிக்கிறார்... முதல் தலைப்பில் கிறங்கிப் போய் வாசித்தால், ஒரு திகில் கதை போலத் தான் எனக்கும் இருந்தது...! அந்த சிறு வயதிலும் 'தனக்கு ஏற்பட்ட தண்டனை' என்று மனம் தளராமல், அவருக்குக் கொடுத்த வேலையை மட்டும் கவனித்த அவரின் பொறுமையைக் கண்டேன்... அடுத்து, கூண்டில் அடைபட்ட கிளியாய் இருந்தாலும், நிர்வாகத்தின் சூட்சமங்களை கற்றுக் கொள்கிறார்... "தனது பலத்தை விடப் பலவீனங்களை அறிந்து கொள்பவனே தெளிவான பலம் பெறுவான்" என்பதை அடுத்து அறிய முடிகிறது... வாழ்வில் முதலில் அறம், அதன் பின் பொருள், முடிவில் தான் இன்பம் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது புரிகிறது...! (நம்..?) தாத்தா வள்ளுவருக்கு நன்றி...

பணம் பதினொன்றையும் செய்யும் என்பதையும், அதற்காக, தான் மட்டும் வளர பிறரை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கெடுக்கும் நபர்களையும் காண்கிறார்... எந்நேரமும் வெடிக்கக்கூடிய கோபத்தையும், அதற்கான வேதனையையும் அனுபவித்தாலும், தன் வழியைத் தொடர்ந்து பயணிக்கிறார்... ஒரு நேரம், அவருக்குள் இருக்கும் நேர்மையான நம்பிக்கை, அவருக்குத் தெரியாமலே நல்லதொரு மாற்றம் நிகழ்த்தி காலம் கொண்டு செல்கிறது... அந்த வழியில், சில இடங்களில் இருக்கக் கூடாத நாணமும், பல இடங்களில் பெற வேண்டிய ஞானமும் ஏற்படுகிறது...

மேலும் ஒரு புதிய நட்பும், அதனால் கிடைத்த புதிய வாய்ப்பும் கண்டு சிறிது அதிர்ச்சி அடைந்தாலும், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உழைக்கிறார்... தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட நாட்களுக்குள், நடுவில் வந்த எந்தப் பிரச்சனையும் தள்ளிப்போடாமல், அதற்கான தீர்வையும் கண்டு, உடனே செயல்படுத்துகிறார்... முதல் வெற்றியைப் பெற்று... "வெற்றி வெற்றின்னு அலுவலகத்துப் போனா, அங்கே ரெண்டு பணப் பேய் ஜிங்கு ஜிங்குனு ஆடுனதைப்" பார்த்தவுடன், வித்தியாசமான வாழ்வியல் தத்துவங்களை கற்றுக் கொள்கிறார்...

இதுவரை சொன்னது 10 தலைப்புக்குள் உள்ளவை... அடுத்த 4 பகுதிகள் தான் மிகவும் முக்கியம் :- தென்றல் வந்து தழுவியதும், விடவே முடியாத பல நல்ல கொள்கைகளால் காலம் காட்டிய வழியையும், மனித வாழ்வில் நழுவவே விடக்கூடாத வாய்ப்பைப் பற்றியும், வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான தன்னம்பிக்கையைப் பற்றியும், அருமையாக விவரித்து உள்ளார்... அதை உங்கள் கிண்டில் திரையில் காண்க... முத்தாய்ப்பாக "முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்" என்று முடித்துள்ளார்... அண்ணன் ஜோதிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்... நன்றிகள்... வாழ்த்துகள்... எனது பாணியில் நானும் முடிக்கிறேன் :-

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (661)

எந்த தொழிலாக இருந்தாலும், நம் வாழ்வில் எந்தச் செயலாக இருந்தாலும், அதைச் சாதித்து முடிப்பதற்கான செயல் உறுதி, நம் மன உறுதி மட்டுமே... மற்றவை எல்லாம் உறுதி அல்ல...

அமேசான் கிண்டில் இணைப்பு 5 முதலாளிகளின் கதை

நன்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பெரியோர்களே தாய்மார்களே நண்பர்களே உறவினர்களே தோழமைகளே உங்கள் ஆதரவுக்கு என் நன்றி. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  2. அனுபவப் பாடங்கள் என்றுமே பயன் உள்ளவை. உங்கள் பாசிடிவ் பதிவுகள் முன்னேற நினைப்போர்க்கு நல்வழிகாட்டி. நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இப்போதெல்லாம் என்னால் மின் புத்தகங்களை வாசிக்க முடியவில்லை. கண்கள் வலிக்கின்றன. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. அனுபவ பாடங்கள் விவரித்த விதம் அந்த நூலுக்கு பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பாக வள்ளுவர் குறள் சிறப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான மதிப்பீடு. படித்து எழுத நினைத்திருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். விரைவில் என் கருத்தை எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  6. பயணத்தில் பிறகு படிக்கிறேன் (ஜோதி)ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள் நிச்சயம் படிப்பேன்.

      நீக்கு
  7. அனுபவம் தரும் பாடம்... நல்லதொரு அறிமுகம் தனபாலன். பாராட்டுகள். நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நானும் தரவிறக்கம் செய்துவிட்டேன். படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நாம் நம் அனுபவங்களிலிருந்து மட்டுமல்ல, பிறர் அனுபவங்களிலிருந்தும் பாடம் கற்கிறோம்.கற்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அனுபவம்தானே வாழ்க்கை, என்னிடமும் ஒரு முதலாளி- தொழிலாளிக் கதை இருக்கு விரைவில் வெளியிடுகிறேன் நிறையப்பேருக்கு அது பயன்படலாம்.

    பதிலளிநீக்கு
  10. டிடி நல்ல அறிமுகம். ஒவ்வொரு மனிதருள்ளும் பல அனுபவங்களும் அதை ஒட்டிய கதைகளும் நிறைய இருக்கும். அனுபவங்கள் தான்நல்ல ஆசிரியர்னும் சொல்வதுண்டே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் அனுபவங்களும் கூட நமக்கு நல்ல பாடங்கள் கற்றுத் தரும். நம்முடைய + அவர்களின் நல்ல அனுபவங்களும் சரி கெட்ட அனுபவங்களும். சிலர் நமக்குத் தெரியாதவற்றைக் கற்றுத் தருவர் சிலர் நாம் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் அவர்களின் செயல்கள் நமக்கு நல்லதொரு பாடமாக அமைந்துவிடும்.

    ஜோதிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான புத்தகம் என்று உங்கள் விமர்சனம் சொல்கிறது. உங்கள் விமர்சனம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. அனுபவமே சிறந்த ஆசான் .ஜோதிஜியின் அனுபவ பகிர்வை  பகிர்ந்ததற்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  13. ஜோதிஜியின் புக்கை டவுன்லோட் செய்துவிட்டேன் ஆனால் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை சீக்கிரம் படிக்கனும்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான தகவல்.. அந்த புத்தகத்தை படிக்கிறேன். தங்கள் பாணியில் அருமையான விமர்சனத்திற்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல அறிமுகம் DD! நானும் ஜோதிஜியின் பதிவுகளில் கிண்டில் வெளியீடுகளைப் பற்றி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஆனால் எனக்கு இந்த கிண்டில் இன்னமும் கைவர மாட்டேன் என்கிறது.
    ஒரு நண்பர் அவருடைய புத்தம்புதுக் கிண்டிலை என்னிடம் கொடுத்துவிட்டுபி போனதில் புத்தகங்களை எப்படி வாங்குவது, படிப்பதற்குத் தரவிறக்கம் செய்வது என்று ஒரு முப்பதுநாட்கள் வைத்திருந்து தடுமாறிவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ebook reader களில் லேப்டாப்பில் படிக்க முடிகிற வசதி இருக்கிறது. இந்த சமாச்சாரம் மட்டும் பிடிபட மாட்டேனென்கிறது.

    பதிலளிநீக்கு
  16. ஏற்கனவே தொழிற்சாலைக் குறிப்புக்ள் என்ற அற்புதமான தொடரை எழுதியவர் ஜோதிஜி. இதையும் விரைவில் படித்துவிடுவேன். நல்ல நூல் அறிமுகம். நிறைவாக ஒரு குற்ளையும் இணைத்தது டிடியின் அக்மார்க் குறள் பன்ச் அருமை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.