நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?
பொய் சொன்னாலும், மெய் சொன்னாலும், வாயால் சொல்லிப் பலனில்லே...!2 - அதை மையில நனைச்சிப் பேப்பரில் அடிச்சா, மறுத்துப் பேச ஆளில்லே...!2 உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...!2 கலகம் வருது-தீருது, அச்சுக்கலையா நிலைமை மாறுது...!2
⟪ © குலமகள் ராதை ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
நல்ல பாட்டு மனசாட்சி... வருங்காலத்தில் நிலைமை வேற மாதிரி...!
என்னப்பா இப்படி சொல்லிட்டே...! புத்தகங்கள் படிக்கலேன்ன எப்படி...? சரி அதை விடு... மனிசங்க ஓரளவிற்கு மனிசங்களா இருக்கணும்ன்னா எத்தனை சதவீதம் சரியா இருக்கணும்...?
இப்படி கேள்வி கேளு...! "படிக்கலேன்ன" என்பதை "வாங்கலேன்ன" என்றும் சொல்லலாம்...! இது நுகர்வு யுகம்... எல்லாவற்றிலுமே "ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா...?" என்று நுகர்வு கலாச்சார மனம் எதிர்பார்க்கத்தான் செய்யும்... வாழ்க்கை நெறிமுறைகளையும் அதைப் போல எடுத்துக் கொள்ள முடியுமா..? என்பது தான் மிகப் பெரிய கேள்வி... நாம் எல்லோருமே நல்ல குணங்களோடு தான் வாழ ஆசைப்படுகிறோம்... அப்படி வாழ இயலாத போது அல்லது முடியாத போது, ஏதேனும் சலுகை கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறோம்... வாழ்வைக் கெடுத்தும் கொள்கிறோம்...
ஹேஹே...! ஹேஹே...! வாழ்க்கையின் எந்த நெறிமுறைகளுமே படிப்பதற்கும், அடுத்தவர்க்கு உபதேசிப்பதற்கும் அல்லது அடுத்தவர் உபதேசத்தைக் கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்... ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்கும் போது, வசதியாக அதை மறந்து விடுவது தானே நமது வாடிக்கை...? இதிலென்ன வேடிக்கை...? கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை, சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்... குள்ளநரி போல் தந்திரத்தால், குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்... வெள்ளிப் பணத்தால் மற்றவரை, விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்...2 மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ... (படம் : அழகு நிலா)
இப்போது சிறப்பான மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்வோம் :
வடலூர் வள்ளல் இராமலிங்க சுவாமிகளை எல்லோருக்கும் தெரியும்... உயிர்களிடத்தில் இரக்கம் காட்டும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைத் தனது எழுத்தாலும், சொல்லாலும், செயலாலும் நடைமுறைப்படுத்தி போதனை செய்தவர்... அவர் வடலூரின் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள் மாலை 6 மணிக்கு, ஜீவகாருண்ய ஒழுக்கம் பற்றிச் சொற்பொழிவு நடப்பதாக ஏற்பாடு... வள்ளலாரின் அன்பர் ஒருவர் அருகிலுள்ள சிதம்பரத்திலிருந்து, வண்டி மாடு பூட்டி வடலூருக்கு வந்தார்... வள்ளலார் வருவதற்கு 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது... சொற்பொழிவாற்ற உள்ளே வந்த வள்ளலார் அன்பரிடம், "என்ன தாமதமாகி விட்டதா..?" என்று கேட்டார்... " ஆமாம் சுவாமி, கொஞ்சம் தாமதமாகி விட்டது... இத்தனைக்கும் வண்டி மாட்டை விரட்டி விரட்ரென்று விரட்டினேன்" என்றார்... வள்ளலார் தனது சொற்பொழிவை அப்படியே நிறுத்தி விட்டு, "அன்பரே, முதலில் நீங்கள் வந்த வண்டி மாட்டைக் கொஞ்சம் காண்பியுங்கள்" என்றார்... இருவரும் சென்று வாயில் நுரை தள்ள, மூச்சு வாங்க படுத்திருந்த மாட்டைப் பார்த்தனர்... வள்ளலார் உள்ளம் பதைக்கச் சொன்னார், "அன்பரே, நீங்கள் இங்கு விரைந்து வந்திருப்பது எதற்காக...? நான் ஜீவகாருண்ய ஒழுக்கம் பற்றிப் பேசவிருக்கும் கருத்துக்களைக் கேட்பதற்காக; ஆனால் அதற்காகப் பாவம் ஒரு வாயில்லா ஜீவனை வதைத்து இங்கே வந்திருக்கிறீர்கள், உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்ட வேண்டுமென்று நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன் விளையப் போகிறது...? வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்து இந்த வாயில்லா ஜீவனின் உடல் வருத்தத்தைப் போக்கி கவனிப்போம்...!"
நண்பர்களே... கேட்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அதன் கருத்தை உள்வாங்கிக் கொள்ளாதவரை, சொற்பொழிவு அல்லது புத்தகங்களில் சுவையும், உவமையும், கதையும், சுவாரஸ்யமும், தகவல்களும், இருந்து பயனில்லை...அதே வேளை படித்ததை / கேட்டதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் , பகிர்ந்து கொண்டால், விளக்கிச் சொல்லும் திறமை பெற்றால், மேலும் சிறப்பு... அது தான் சிறப்பு...! அப்படியில்லையென்றால் , கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்கள்...
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (குறள் எண் 650)
அதே சமயம் அவர்களின் உள்வாங்கிய எண்ணங்களை அடுத்தவர்களைக் காயப்படுத்தும் பேச்சிலும், மமதையான எழுத்திலும் தெரிந்து கொள்ளலாம்...! பல அனுபவங்களால் வலியை உணர்ந்த மனது அடுத்தவர்களைக் காயப்படுத்தவும் நினைக்காது... நெஞ்சில் அருளும் அன்பும் இல்லாத கல் போன்ற மனதில், எவ்வளவு தான் நற்குண விதைகளை விதைத்தாலும், அவை முளைக்கப் போவதில்லை... முதலில் மனத்தை இளகிய வயலாக மாற்றினால், இடுகிற அன்பு விதைகள் எல்லாம் சிறப்பான விளைச்சலாய் மாறி, இந்த உலகையே உன்னதப்படுத்தும்...!
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு... பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு...!
⟪ © படிக்காத மேதை ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 M.S.ராஜேஸ்வரி @ 1960 ⟫
இதோ பதிவின் முதல் பாட்டிற்குப் பதில் : இனி வருங்காலத்தில் மழை அரிது; மரம் அரிது; காகிதமும் அரிது...! அதனால் அச்சுக்கலை என்பதே இருக்கப் போவதில்லை... எல்லாம் இனி மின்நூல்கள் தான்...
நண்பர்களே... எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் காண வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்... பொருளாதார சிக்கல்கள் உட்படப் பல இருந்தாலும், முக்கியமாக எதிர்பார்ப்பு... அந்த எதிர்பார்ப்பு என்னவென்று உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்... ஒரு அங்கீகாரம், சிறிய பாராட்டு - இது தான் முடிவான எதிர்பார்ப்பு... இதை விடப் பதிப்பகத்தாரின் நிலை சொல்லி மாளாது... புத்தக விற்பனை மூலம் சாதனை படைத்திருந்தாலும், கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 பேர்களுக்கு மேல் ஒரு கட்டுரை பதிவிறக்கம் செய்து வாசிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா...? 5000 பேர்கள் என்பது இன்றைய நிலவரப்படி... நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும்... மனது முழுவதும் சந்தோசம் - அதுவும் திருப்தியாக...! யாருக்கு...? "டாலர் நகரம் புகழ்" அண்ணன் ஜோதிஜி (தேவியர் இல்லம்) அவர்களின் மின் நூலை வாசிக்கச் சொடுக்கவும் ஈழம் : வந்தார்கள் வென்றார்கள்
இலவச மின் நூல் திட்டம் - Link 1 : திரு. சீனிவாசன்
உங்களின் ஒரு வருடத்திலுள்ள 100 பதிவுகளை விருப்ப வரிசைப்படி மாற்றி மின் நூலாக்கலாம் - Link 2 : Blog to Book
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்...? வாழும் போதும் செத்துச் செத்துச்செத்துப் பிழைப்பவன் மனிதனா...? வாழ்ந்த பின்னும் பெயரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...? பிறருக்காகக் கண்ணீரும், பிறருக்காகச் செந்நீரும், சிந்தும் மனிதன் எவனோ, அவனே மனிதன் மனிதன் மனிதன்...!!!
நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...? அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
மனிதனாக மாற வேண்டும் முடிந்தவரை விரைவில்...
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள்... நன்றி!!!!!
வள்ளலாரின் கதை நிஜமாகவே நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஇந்த பிளானெட்டில் இருக்கும் வரை முழுக்க முழுக்க நல்லவராகவே இருப்பது என்பது சுலபமான வேலை அல்ல
பதிலளிநீக்குஇருவேறு விஷயங்களை உங்கள் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் DD. ஜோதிஜியின் அந்தப் புத்தகம் நானும் இறக்கி வைத்துள்ளேன். இனிதான் படிக்கணும்.
மின் புத்தகமாக்கும் திட்டம் மிகச் சிறப்பான ஒன்று. வரும் நாட்களில் அதிகமாக மின் புத்தகங்கள்தான் இடமபெறும் என்பதும் நிதர்சனம்!
பதிலளிநீக்குவள்ளலார் செய்தி புதிது .அறிந்ததை பகிர்வது பற்றி திருக்குறள் மூலம் சொன்னது அருமை.
பதிலளிநீக்குஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம்......
பதிலளிநீக்குமுதல் வருகை....உங்களுக்கே...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதனபாலன்(அண்ணா)
மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் பதிவை படிக்கு ஒவ்வொரு மனிதனும் திருந்த செய்யும் விதமாக உள்ளது. அதிலும் வள்ளலார் பற்றி கூறிய விளக்கம் மற்றும் இறுதியில் மனிதன் படத்தில் இருந்து சுட்டிக்காட்டிய பாடல் வரிகள் உண்மையான வரிகள்....
வாழ்த்துக்கள் அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்கு‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி தைப்பூசம் நடந்துள்ள சமயத்தில் வெளியிட்டமைக்கு நன்றி! ஜோதிஜி அவர்களின் மின் நூலைப் படிக்க உதவியமைக்கும் நன்றி!
அருமையான பகிர்வு .
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநிறைய தேவையான விளக்கங்கள் .உங்கள் கட்டுரைகள் அனைத்தும் சேவை என்ற ஒரு உயர்ந்த கொள்கையை கொண்டு தரப்பட்டவை .வளரட்டும் உங்கள் தொண்டு வள்ளலார் கொள்கையைக் கொண்டு .
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு...
பதிலளிநீக்குஇணைய எழுத்தாளர்களின் நாடியைப் பிடித்திருக்கிறீர்கள்...
வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்...!
பதிவு அருமை. நன்றி...
பதிலளிநீக்குவாடிய பயிரைக்கண்டபோது வாடியவரைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நூல்கள் பற்றிய கருத்துக்களுக்கும் பதிவுகளை நூலாக்க வழி காட்டியுள்ளமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குமின் நூல் திட்டம் மிகவும்
பதிலளிநீக்குபயன் தரும்..
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
Good.
பதிலளிநீக்குமது பாட்டில் மீது ,நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று எழுதி விற்பதால் என்ன பயன் ?
பதிலளிநீக்குவள்ளலார் கருத்தை தலைப்பிலேயே ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள் !
+6
நெகிழ வைத்தது.. நல்ல பதிவு DD..
பதிலளிநீக்குநீங்கள் தத்துவஞானியாக மாறிக்கொண்டிருக்கிறீரகள்.....
பதிலளிநீக்குமலையளவு படித்தாலும்
பதிலளிநீக்குகடுகளவாவது நடைமுறைப்படுத்தாவிடில்
எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணேயாகும்.
எந்த ஒரு நல்ல விஷயத்தை படித்தாலும் அதில் ஏதாவது ஒன்றை நடைமுறையில் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும்.
இல்லாவிடில் நூலகம் அமைத்துவிட்டு புத்தகங்களை வாங்கி அடுக்கிவிட்டு அனைவருக்கும் காட்டி தம்பட்டம் அடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
அன்பே சிவம் என்று அனுதினம் மேடையில் பேசிவிட்டு போகும் வழியில் கசாப்புக் கடைக்கு சென்றும் கறி வாங்கி தின்றால் என்ன பயன்?
வீட்டிற்கு வந்தததும் அற்ப காரணங்களுக்காக மனைவி, பெற்றோர், மக்களை , வேலைக்காரர்களை, அண்டை வீட்டுக்காரர்களை அன்பின்றி ஏசி, சண்டை போடுவதால் என்ன பயன்?
முதலின் நம்முடைய மனதை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் மனதை சரி செய்ய செய்ய முயற்சி செய்வதில் பொருள் உள்ளது.
அறன் எனப்பட்டதே இல்வாழ்கை என்று அரிசுவடியிலிருந்து புலவர் பட்டம் பெறும் வரை திருக்குறளைப் படித்து எல்லோருக்கும் விரிவுயாற்றி கைத்தட்டல் பெற்றுவிட்டு அறத்திற்கு புறம்பான வழியில் பொருளீட்டி, வாழ்க்கை நடத்துவதால் என்ன பயன்?
இன்று இந்த உலகத்தில் பெரும்பான்மையோர் சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றாக இருப்பதினால்தான். இந்த உலகத்தில் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.
உண்மைதான் சார்..... இந்த நுகர்வு யுகத்தில் எல்லா போதனைகளும் ஒரு காதில் வாங்கி மறு காதில் போய் விடுகிறது. வள்ளலார் கதை அதை எளிதில் புரிய வைத்தது. மனம் கவர்ந்த பதிவு.
பதிலளிநீக்குவள்ளலார் பற்றிய செய்தி சிந்திக்க வைத்த செய்தியாகும்
பதிலளிநீக்குமின்னூல் திட்டத்தை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குவடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! இனி மின்நூல் காலம் என்ற போதிலும், ஒரு புத்தகத்தை விரித்து படிக்கும் அனுபவமே தனி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
மிக மிக அருமை தனபாலன். வடலூர் அடிகளார் போல மனம் வாய்த்துவிட்டால் வாழ்க்கைக்குப் பயன் கிடைக்கும். அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குவயலாம் மனத்தில் விதையாம் அன்பைத் தூவச் சொன்ன கருத்து அருமை.
பதிலளிநீக்குவள்ளலார் தவல் புதுசுண்ணா. நல்ல மனிதனாய் மாற முயற்சிக்குறேன்.
பதிலளிநீக்குகுலமகள் ராதை அழகுநிலா பாட்டு மிகவும் பிடிக்கும் எனக்கு.
பதிலளிநீக்குவள்ளலார் கதை மிக அருமை. மக்கள் ஒரு கருத்தை ஏன் சொல்லப்பட்டது?, எதற்காக சொல்லபட்டது என்று உள்வாங்கி கொள்ளதவரை பயனில்லை என்பது உண்மைதான்.
மின்நூல்கள் பற்றியவிபரம் அருமை.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் சிறந்த பதிவுக்கு.
PDF வடிவங்கள் குறித்து இரண்டு நாளாய் யோசித்துக் கொண்டிருந்தேன் சரியான நேரத்தில் உங்கள் பகிர்வு.... மிகவும் நன்றி... :)
பதிலளிநீக்குஇந்த மின்னூல் திட்டம் குறித்து நன்கு அறிவேன். என்னோட வலைச்சர ஆசிரியர் வாரத்தில் கூடப் பகிர்ந்தேன். ஆனால் என்னோட பதிவுகளைப் பகிர இயலாது. பலதுக்கும் காப்பி ரைட் வேண்டும். :)))) முக்கியமாய்க் கண்ணன் கதைகளும் அங்கே வந்திருப்பதால்!!!!!!!!!!!!!!! ஆகவே இத்திட்டத்தில் இணைய முடியவில்லை.
பதிலளிநீக்குவள்ளலாரின் கருத்தைத் தலைப்பில் வைத்தமைக்கும் வாழ்த்துகள். உண்மைதான், இன்றைய நாட்களில் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற சொலவடை மிகப் பொருந்தி வரும். :))))))) சலுகை மட்டுமா இலவசம் எங்கே கிடைக்கும்னு இல்லை எதிர்பார்க்கிறோம்!!!!!!
பதிலளிநீக்குவள்ளலாரின் கதை இன்று குழந்தைகளுக்கு தூங்கும்நேர கதையாக உதவப் போகிறது, நன்றி!
பதிலளிநீக்குசரிதான், நுகர்வோர் மனதை வாழ்வில் அனைத்திலுமா பயன்படுத்துவது?
மற்றவர் உணரும் வண்ணம் அழகாகச் சொல்வதற்கு அருமையான எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்கிறீர்கள்.
மொத்தத்தில் அருமையான பதிவு, நன்றி சகோதரரே.
மனதை இளகிய வயலாக மாற்றினால் அதில் இடும் அன்பு விதைகள் பயிர்களாகி உலகை வளப்படுத்தும்.. மிக அருமை தனபாலன் சகோ. அற்புதமா சொல்லி இருக்கீங்க.. :)
பதிலளிநீக்குநல்ல பகிர்வு, பிறகு தான் வாசிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமிக அற்புதமான கருத்தை நாம் மட்டும் கேட்டு படித்து பயன்பெறுவதோடு அனைவருக்கும் பயன்படும் விதமாக எடுத்து சொல்வதை அழகாக விளக்கிய விதம் சிறப்புங்க சகோ. மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குநிச்சயம் அனைவருக்கும் பயன்படும்
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு
மிக்க நன்றி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - என்று வருந்தியவர் வள்ளலார் சுவாமிகளைப் பற்றிய தகவல் மனதை நெகிழச் செய்தது.
பதிலளிநீக்குவழங்கியமைக்கு நன்றி!
பாடல் வரிகளும் கருத்து விளக்கங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குபிறருக்கு பயன் தரும் பதிவு
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
என்னதான் படித்தாலும் அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தாதவரை வீணே. வள்ளலார் தொடர்பான சம்பவம் மனம் தொட்டது.
பதிலளிநீக்குமின்னூலாக்கம் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமே இல்லை. பகிர்வுக்கு நன்றி தனபாலன்.
மனிதன் மனிதனாக வாழவேண்டும்
பதிலளிநீக்குபல நல்ல கருத்துகள் பெறுமதிப் பதிவு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வள்ளலாரின் வாழ்க்கை நிகழ்ச்சி அருமையான படிப்பினை! குறள்விளக்கமும் பாடல்விளக்கமும் சிறப்பு! மின்னூல்கள் தரவிறக்க லிங்க் தந்தமைக்கு நன்றி! மிக அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் சார். வள்ளலார் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மாமனிதர் .வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் என்பதற்கு பயிரை இப்படி வாடவிட்ட மனிதரின் செயலால் தான் வள்ளலார் அந்த பொருள் பட கூறினார் என்று கேட்டேன் .ஏற்றுகொள்ளும் வகையில் உள்ளதுதானே .மிக்கநன்றி சார்
பதிலளிநீக்குவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அன்பின் உருவானவரைப் பற்றிய அருமையான பதிவு ஐயா.
பதிலளிநீக்குமின் நூல் விவரங்களும் மிகவும் பயன்தரத் தகுந்தது. நன்றி ஐயா
த.ம.15
வள்ளலாரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆசை! வழக்கம்போலவே மிகச்சிறப்பான பதிவு. ஜோதிஜியின் உழைப்பு அளவிடற்கரியது. அவரின் இந்த ஈழம் பற்றிய புத்தகம் தரவிரக்கத்தில் ஒரு புதிய மைல்கல்லைத் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அதை வாசித்து முடிக்கவில்லை. மிகப்பெரிய புத்தகமாக இருப்பதால் கணிணியில் வெகுநேரம் அமர்ந்து படிக்க முடிவதில்லை. புத்தகமாக வந்திருந்தால் சக்கை போடுபோட்டிருக்கும்.
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கு 17
பதிலளிநீக்குபடித்த படி நட ! சொல்வதை விட செய்வது தான் கடினம் ! நல்ல பாடல் தொகுப்பு .
பதிலளிநீக்குவழக்கம்போல வ்யத்தகு கருத்துக்கள்....
பதிலளிநீக்குமேலும் தொடரட்டும்.
வள்ளலாரின் உயிர்களிடத்தில் அன்பாய் இருக்கும் செயல் அறிந்து உளம் மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமின் நூல் தரவிறக்கிப் படிக்க ஆவலாய் உள்ளேன், விரைவில் - இறை நாட்டம்.
சொல்லவந்த விடயம் எதுவோ .....? வழமைபோல் அழகாய் சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குநேர்வாழ்க்கை கொண்டேகி நித்திலம் காய்க்கமுதல்
ஊர்வாழ உள்ளம் உழு !
வழக்கம்போல வியத்தகு கருத்துக்கள். வாழ்த்துக்கள் சகோ...
பதிலளிநீக்குஅருமை தனபாலன்.
பதிலளிநீக்குத.ம. +1
மின் நூல் - நல்ல விஷயம்.....
அன்பு சகோதரருக்கு வணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொருவரும் தம்மைப்பற்றி சுய ஆய்வு செய்யவும், தம்முள் மறைந்திருக்கும் நற்குணங்கள் வெளிப்பட்டு நல்லவர்களாக வாழ உதவும் அற்புதமான விடயங்களைப் பதிவாக தந்த விதம் ரசிக்க வைத்தது. தொடரட்டும் தங்கள் பணி. பகிர்வுக்கு அன்பான நன்றிகள் சகோதரர்..
ஐயே வாக்களிக்க மறந்திட்டேன் இதோ 20 ம் வாக்கு
பதிலளிநீக்குAnaithum arumai Sako...
பதிலளிநீக்குநல்ல தகவல்களுடன் பகிர்வு...
பதிலளிநீக்குஜோதிஜி அண்ணனின் ஈழம் வந்தார்கள் வென்றார்கள் வாசிப்பில்...
வாழ்த்துக்கள் சகோதரா...
வள்ளலாரின் கதை பகிர்வுக்கு நன்றி .மின்நூல் இன்னும் பயன் தரும் விடயம் தனபாலன்சார்.
பதிலளிநீக்குWell written. Continue.
பதிலளிநீக்குவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_23.html
வள்ளலார் பற்றிய செய்தி சுவையாக இருந்தது. படித்ததும் வள்ளலாரின் வடலூர் சத்திய ஞானசபைக்கு போய் வந்த நினைவுகள் வந்து போயின. நன்றி !!
பதிலளிநீக்குஇந்த வள்ளலார் தொடர்பான பதிவு படிக்கும், கேட்கும் எவர் மனத்திலும் நிற்கும். அந்த அளவிற்கான ஆழமான பதிவு.
பதிலளிநீக்குகருத்துக்களுக்கு ஏற்ற பாடல் வரிகள்!
பதிலளிநீக்குவழக்கம் போல கலக்கல் !
அன்பின் தனபாலன்..வணக்கம்.
பதிலளிநீக்குஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html
ஒவ்வொரு பதிவிலும் எதையாவது வித்தியாசமாக தருவது என்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வியப்பை அளிக்கிறது. அருமை. வாழ்த்துக்கள். ஆனால் உங்களுடைய பதிவிலுள்ள சில வரிகளை மேற்கோள் (copy and paste) காட்டி கருத்துரை இட முடிவதில்லை. எதற்காக right click வசதியை disable செய்துள்ளீர்கள்?
பதிலளிநீக்குஒன்றே செய்யினும் நன்றே செய்க ! என்பது போல, ஒன்றே பேசினும் நன்றே
பதிலளிநீக்குபேசுக!
மிக அருமையான பதிவு DD அவர்களே! வள்ளலார் பற்றி அறியாதோர் எள்ளலுக்கு உள்ளாவார் என்பது எமது கருத்து!! நம் தமிழ் மண் பெருமைப் பட வேண்டும்! பகிர்வுக்கு மிக்க நன்றி! மின்னூலாக்குவது பற்றி அருமையான தகவல், பயனுள்ளதகவல் உங்கள் சேவையை என்னவென்று சொல்லுவது!
பதிலளிநீக்குபுத்தகம் மின்னூலாக்குவது பற்றி நாங்களும் தற்போது அறிந்து கொண்ட தகவலை அடுத்த இடுகையில் சொல்கின்றோம்! மிக்க நன்றி!
வள்ளலார் எடுத்துக்காட்டு நல்வழிகாட்டல்.
பதிலளிநீக்குதங்கள் தேடலின் பெறுதி
சிறந்த பதிவால் வெளிப்படுகிறது.
வாழ்த்துகள்
அருமையான, விசயத்தை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள், பாராட்ட தகுதியில்லை எமக்கு.
பதிலளிநீக்குKillergee
அன்பின் திரு தனபாலன்,
பதிலளிநீக்குநல்ல பல தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துகள். குறிப்பாக வள்ளலார் கதை மிகச் சுவையாக இருக்கிறது.
அன்புடன்
பவள சங்கரி
நல்லதோர் பகிர்வு... சிறப்பான இரு விஷயங்களை குறிப்பிட்டுள்ளீர்கள்...
பதிலளிநீக்குமிக அருமையான கருத்துக்களையும் மிக அருமையான பாடல்களையும் வள்ளலாரின் சம்பவத்தையும் படிப்பவர்கள் மனதில் ஆழமாய்ச் சென்று பதியுமாறு சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஆதங்கத்தின் தொனி எழுத்தில் வெளிப்பட்டிருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குஆமாம்,உலகம் இதிலே அடங்குது, படித்ததனால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு மற்றும் மனிதன் பாடல்களையெல்லாம் யார் எழுதியது என்பதைக் குறிக்காமலேயே போயிருக்கிறீர்களே....அதனையும் குறித்தே எழுதியிருப்பீர்களெனில் படிக்கிற நிறையப்பேருக்கு இப்படிப்பட்ட நல்ல கருத்துக்களை யார் எழுதியிருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்கும் அல்லவா?
வள்ளலார் தகவல் சிறப்பு. அனைத்தும் பயனுள்ள தகவல்களாக இருந்தன. நன்றி.
பதிலளிநீக்குவள்ளலார் கதையைப் படிக்கும் போது, 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' என்று போராட்டம் நடத்திக் கொண்டே பிளாஸ்டிக் கோப்பையில் டீ குடிப்பவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்!!
பதிலளிநீக்குமனிதனாக வாழ மட்டும் மனிதனால் முடிவதில்லை... என்ன விந்தை!!
அருமையான கருத்துகள்..
வணக்கம் சகோதரா!
பதிலளிநீக்குவழமை போல் அனைத்தும் அருமை
வள்ளலார் வார்த்தைகள் நெகிழவைத்தது.கல் மனதில் எத்தனை நற் குணங்கள் விதைத்தாலும் வளராது இளகிய வயலாக மாறினாலே அன்பு விதைகள் சிறப்பாக வளரும், எத்தனை உண்மை.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்றல்லவா பெரும்பாலும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
வள்ளலாரின் வாழ்வும் சிந்தனைகளும் மனிதத்தின் அற்புதம்!
பதிலளிநீக்குஎல்லாக் குறள்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மனத்தில் ஆழப் பதிக்கிறீர்கள் அண்ணா!
தங்கள் பதிவுகள் தரவிறக்கம் செய்துகொள்ளும் நல்ல தருணத்துக்கு காத்திருக்கிறேன்:)
நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவண்டி மாடுகள் பற்றிய கவலை உலகிற்கு எப்போதும் கிடயாது...
வள்ளலார் கதை இன்றைய பெரும்பான்மைக்கு மிகப் பொருந்தும். ஒரு எண்ணத்தை அதன் ஒட்டு மொத்த பொருளையும் வெளிப்படுத்தாமல் செயல்படுத்துவது மிகவும் இயல்பாக வருகிறது நமக்கு. அரசியல் தேர்வுகளிலிருந்து அந்தரங்கத் தேர்வுகள் வரை தினம் இந்தத் தெளிவில்லாமல் திண்டாடுகிறோம்.
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை.
ஜோதிஜிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகளை மின் நூலாக வெளியிட வேண்டும்.
The content about the vallalaar is very nice.
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே..உங்கள் பதிவு என்றாலே கருத்துசெரிவு நிறைந்திருக்கும்..நானும் சொடுக்கி படிக்கிறேன்..நன்றி..
பதிலளிநீக்குஇன்றைக்கு நான் எழுதும் கருத்துரை வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுதுகிறேன்.
பதிலளிநீக்குநான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன் என்று தலைப்பிலேயே ஓராயிரம் சொல்லிவிட்டீர்கள்! வள்ளலார் கூறியது நம்மில் பெரும்பாலோருக்குப் பொருந்தும். ஊருக்குத்தான் உபதேசம்!
மின்னூல் பற்றிய உங்கள் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன். உங்களது படைப்புகளையும் மின்னூல் வைத்வாத்தில் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல்கள்
பதிலளிநீக்குயதார்த்தம் மற்றும் அறம்... இவற்றிற்கு உள்ள வேறுபாடு தான் எப்போதும் மனிதனை பாடாய்படுத்துகிறது. ஒன்று அவன் மிருகமாகவே இருந்து விட்டு போயிருக்கலாம். சிங்கம் மானை வேட்டையாடுவது குறித்து குற்றவுணர்வு கொள்வதில்லை. இல்லையா, மனிதன் நினைத்தவுடன் மகாத்மாவாக மாற முடிந்திருக்கலாம். அது மிக கடினமான காரியமாக இருக்கிறது. இரண்டிற்கு நடுவில் நடக்கும் ஊஞ்சலாட்டம் வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கிறது.
பதிலளிநீக்குDear sir,I had studied "Vallalar's manumurai kanda vasagam" when I was 8 years old. The king was shedding tears and crying how i will compensate the loss of the calf to the cow."Nallor manadhai nadungacchaidheno" is a great verse and it transforms human mind and directs it in the right direction.Your presentation with matching film songs makes the reading memorable and interesting.well done sir.
பதிலளிநீக்கு