உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (2)


வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... இதன் முந்தைய பதிவான உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1) பதிவை படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடருமாய் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...


அதிகாரம் 104 - உழவு (1036-1040)

சிறு வேண்டுகோள் : கீழே உள்ள Play button-னை சொடுக்கவும். ஒருமுறை அழுத்தினால், பதிவை படிக்கும் போது பாடலை கவனமாக கேட்க முடியாதென்பதால், இருமுறை சொடுக்கவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் Load ஆகிவிடும்...!

உரையாடலை படித்து விட்டு, குறளுக்கேற்ற திரைப்படபாடல்களை ரசிக்க, உரையாடலுக்கு முன்னுள்ள இதயத்தை சொடுக்கவும்...

© உன்னால் முடியும் தம்பி புலமைபித்தன் இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1988 ⟫ வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது...? ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ - வீடின்றி வாசலின்றித் தவிக்குது... எத்தனை காலம் இப்படிப் போகும்...? என்றொரு கேள்வி நாளை வரும்...! உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்...? - என்றிங்கு மாறும் வேளை வரும்...! ஆயிரம் கைகள் கூடட்டும்... ஆனந்த ராகம் பாடட்டும்... நாளைய காலம் நம்மோடு - நிச்சயம் உண்டு போராடு...! வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு...! புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு... பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க பாரதத்தின் (சொ)சோத்துச் சண்டை தீரவில்லே - இது நாடா இல்லே வெறும் காடா...? - இதைக் கேக்க யாரும் இல்லை தோழா (2)

பொன்னு வெளையிற பூமியடா; விவசாயத்த பொறுப்பா கவனிச்சி செய்றோமடா; உண்மையா உழைக்கிற நமக்கு - எல்லா நன்மைகளும் நாடிவந்து கூடுதடா... ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ... மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு; பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு...! மணப்பாறை மாடு கட்டி...!! மாயவரம் ஏறு பூட்டி...!!! சேத்த பணத்த சிக்கனமா செலவுபண்ண பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு - உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு - அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு…! (2)© மக்களைப்பெற்ற மகராசி அ. மருத காசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1957 ⟫

மனதார உதவி செய்யும் இந்த மனசு, உங்களுக்கு மட்டும் தான் இருக்கும்... நீங்க மட்டும் வேலை செய்யாம இருந்தா, எல்லோருக்கும் தேவைப்படுகிற, விரும்புகிற அறுசுவை உணவுக்கு எங்கே போவது...? அட அனைத்து பற்றையும் விட்டுவிட்டதாக சொல்ற துறவிகள் கூட உங்க கையை எதிர்ப்பார்த்துதான் வாழ வேண்டும்... முக்கியமாக அவங்க அறத்தில் கூட நிலைத்து நிற்க முடியாது...! உங்க ஏரோட்டம் நின்று போனா காரோட்டம் மட்டுமல்ல, எல்லா ஓட்டமும் நின்று போயிடும்... பயிர் செழித்து வளர என்னப்பா செய்றே...?

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி; சோம்பல் இல்லாம ஏர் நடத்தி; (2) கம்மா கரையை ஒசத்தி கட்டி; கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி; சம்பா பயிரை பறிச்சு நட்டு; தகுந்த முறையில் தண்ணீர் விட்டு; நெல்லு விளஞ்சிருக்கு, வரப்பும் உள்ளே மறஞ்சிருக்கு (2) - அட...! காடு விளஞ்சென்ன மச்சான்; நமக்கு கையும் காலும் தானே மிச்சம்... (2) இப்போ காடு விளையட்டும் பொண்ணே; நமக்கு காலமிருக்குது பின்னே; காலமிருக்குது பின்னே...! (2) மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு; பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி; (2) மதிலு வச்சு மாளிகை கட்டி; கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்; (2) வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே... பட்ட துயரினி மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்... (2© நாடோடி மன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன், பானுமதி @ 1958 ⟫

அது ஒன்னும் பெரிய ரகசியம் இல்லேப்பா... ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே போதும்... ஒரு பிடி எருவும் தேவையில்லை... பயிர் தானாக செழித்து வளரும்... கண்காணிக்க வேண்டியது தான் மிகவும் முக்கியம்...

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

முப்பாட்டன் காலம் தொட்டு முப்பாகம் யாரால...? கல்மேடு தாண்டி வரும் காவேரி நீரால; சேத்தோடு சேர்ந்த விதை நாத்து விடாதா...? நாத்தோட சேதி சொல்ல காத்து வராதா...? செவ்வாழ செங்கரும்பு; சாதிமல்லி தோட்டம்தான்; எல்லாமே இங்கிருக்கு - ஏதுமில்ல வாட்டம்தான்...! நம்ம சொர்க்கம் என்பது - மண்ணில் உள்ளது; வானில் இல்லையடி...! நம்ம இன்பம் என்பது - கண்ணில் உள்ளது; கனவில் இல்லையடி...! தைப்பொங்கலும் வந்தது; பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ... வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ... இந்த பொன்னி என்பவள் தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி...! இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி...!© மகாநதி வாலி இளையராஜா K.S.சித்ரா @ 1994 ⟫

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது, களை எடுப்பது, நீர் பாய்ச்சுவது - இதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா என்ன... ? நீங்க சொல்வது போல் பயிரைக் காவல் செய்வது தான் பெரிய விசயம்...

1038. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

நல்ல நல்ல நிலம் பார்த்து-நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே-நாணயத்தை வளர்க்கணும்... (2) பள்ளி என்ற நிலங்களிலே - கல்விதனை விதைக்கணும்; பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்... கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதைத்து; கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து; அன்னை தந்தை ஆனவர்க்கு தம் பொறுப்பை விதைத்து, பின்வரும் சந்ததியை பேணும் முறை வளர்த்து; இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்; இல்லாதார் வாழ்க்கையிலே - இன்பப் பயிர் வளர்க்கணும்...! பார் முழுதும் மனிதக்குலப் பண்புதனை விதைத்து; பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து, போர் முறையை கொண்டவர்க்கு - நேர்முறையை விதைத்து, சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து... பெற்ற திருநாட்டினிலே - பற்றுதனை விதைக்கணும்; பற்றுதனை விதைத்துவிட்டு - நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்...!© விவசாயி உடுமலை நாராயண கவி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫

ஆமாப்பா... தினமும் இங்கு வந்து செய்ய வேண்டியதெல்லாம் செய்யாம, சும்மா சோம்பேறியா சுத்தி திரிஞ்சா, வீட்டிலே துணைவி மனசிலே வெறுத்துப் போற மாதிரி, இந்த நிலமும் வாடிப் போய் பலனில்லாமப் போயிடும்...

1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்

மண்ணிலே தங்கம் உண்டு, மணியும் உண்டு, வைரம் உண்டு…! கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு, வேர்வை உண்டு…! நெஞ்சிலே ஈரம் கொண்டு, பாசம் கொண்டு, பசுமை கொண்டு…! பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு…! சேராத செல்வம் இன்று சேராதோ...? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ...? கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு... பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்...! தேர் கொண்ட மன்னன் ஏது...? பேர் சொல்லும் புலவன் ஏது...? (2) ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது...? போர் செய்யும் வீரன் ஏது...? போராடும் வேலை இல்லை; யாரோடும் பேதம் இல்லை... ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ... ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்... ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்... போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை; ஊரோடும் சேர்ந்துண்ணலாம்...!© பழநி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீனிவாஸ் @ 1965 ⟫

அட...! மனைவி மட்டுமா...? வாழ வழியில்லை, வேலையில்லைன்னு சொல்லிட்டு திரியற சோம்பேறிகளைப் பார்த்து நம்ம பூமித்தாய் கூட தனக்குள்ளே ஏளனமாய்ச் சிரிப்பாங்க...!

1040. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

இப்போது மேலே உள்ள Play ≥ பட்டனை சொடுக்கி, வரிசைப்படி இந்தப் பதிவில் உள்ள அற்புதமான பாடல்களின் வரிகளை DD Mix-ல் கேட்கலாம்...

© உழவன் வாலி A.R.ரகுமான் G.V.பிரகாஷ் குமார், சாகுல் ஹமீது, சுஜாதா மோகன் @ 1993 ⟫ சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு; கோலம் அழியவர கோடை மழை பெய்யாதோ...? வானத்து ராசாவே மழைகிறங்கும் புண்ணியரே; சன்னல் ஒழுகாதோ…? சார மழை பெய்யாதோ...? வடக்கே மழை பெய்ய வருங்கிழக்கே வெள்ளம்...! குளத்தாங்கரையில அயிர துள்ளும்...! கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்...! பச்ச வயக்காடு நெஞ்சகிள்ளும்...! நல்ல நெல்லு கதிரறுத்து புல்லை நெளிநெளியா கட்டு கட்டி; அவ கட்டு கொண்டு போகயிலே நின்னு கண்ணடிப்பான் அத்தைமகன்...! உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! மின்னலிங்கு படபடக்க...! மாரிமழை பெய்யாதோ ? - மக்கள்பஞ்சம் தீர... சாரமழை பெய்யாதோ ? - சனங்க பஞ்சம் மாற... மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே...! குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே...! மாரிமழை பெய்யாதோ...? - மக்கள்பஞ்சம் தீர... சாரமழை பெய்யாதோ...? - சனங்க பஞ்சம் மாற...

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம் சகோதரர்
  மிக நேர்த்தியாக பகிர்வு. தேர்ந்தெடுத்த பாடல்களும் மிகச் சிறப்பாக உள்ளது. வழக்கமான பாணியில் அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்..
  ---------
  தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  தங்களது வித்தியாசமான இந்த பதிவைப் பார்த்து மந்தில் இன்பம் பால்போல் பொங்குகிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 4. வழக்கம்போலவே அருமை DD. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 6. "உழவர் சிரிக்கணும்" ____ இது நடக்கணும், என்றைக்கு நடக்கும் ? தெரியலையே !! வழக்கம்போலவே பதிவும், பாடல்களும் அருமைங்க‌.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பழைய பாடல்கள் ,இடைக்கால பாடல்கள் என்று கலந்துநீங்கள்
  பொங்க வைத்த பொங்கல் அருமை !

  பதிலளிநீக்கு
 8. வழக்கம்போல அசத்திவிட்டீர்கள்...! வாழ்த்துக்கள்...!

  உழவர் சிரிக்கணும்... உலகம் செழிக்கணும்... உண்மையாகவே...!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 9. உழவர் சிரிக்கணும் ; உலகம் செழிக்கணும். அருமையான கருத்து . பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. உழவர் சிரிக்கணும் தனபாலன் வாழ்வும் உயரனும் என்று எல்லோரும் வாழ்த்தி பொங்கலே பொங்குக என்று வளையோர் அனைவரும் முழங்குவோம்

  பதிலளிநீக்கு
 11. அருமையான் பாடல்
  பாலச்சந்தரினை நினைவூட்டும் பாடல்..
  இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. எப்போதும் போல அற்புதமாத ஒரு பதிவு!!DD!! ?ஏரோட்டம் னின்றுவிட்டால் காரோட்டம் மட்டுமல்ல எல்லமே நின்றுவிடும்.....? அருமையான கருத்து...
  ஆனால், பாருங்கள் இப்போது ஏரோட்டம் குறைந்து, மண்ணெல்லாம் சிமென்டாக....செங்கற்கள் எல்லாம் பணமாக (கறுப்பு கற்களாக) மாறி காரோட்டம்தானே கூடி இந்த மண்ணை மாசுபடுத்தி நம்மை நல்ல காற்று சுவாசிக்க முடியாமல் வாழ விடாமல்....எதிர்காலத்தில் நம் உணவு எல்லாம் 'கப்ஸ்யூல்" வடிவத்தில் வந்து விடுமோ என்று ஃபிக்ஷன் எழுதும் அளவு வந்து விட்டதே! நம்மிடையே இருந்த ஒரு நல்ல மனம் படைத்த, உழவ்ர் வாழ வழி வகுத்துக் கொண்டிருந்த நல்ல உணவு பெற உழைத்துக் கொண்டிருந்த மா மனிதர் இயற்கை விஞ்ஞானி திரு நம்மாழ்வாரும் இந்தப் பொங்கலைக் காணாமல் போய்விட்டாரே! யார் உழவுக்கு வந்தனை செய்யப் போகிறார்கள்??

  எங்கள் அடுத்த பதிவு இது குறித்துதான்......நண்பரே!!!

  பகிர்வுக்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!!

  துளசிதரன், கீதா


  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  என்.கணேசன்

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும்இஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்,

  பதிலளிநீக்கு
 15. உழவன் சிரிக்கவேண்டும்தான். ஆனால் உழவன் இன்று எங்கே இருக்கிறான்? நிலத்தை, ரியல் எஸ்டேட் ஆசாமிகளிடம் அதிக விலைக்கு விற்றுவிட்டு, அங்கு காட்டப்படும் குடியிருப்புகளில் காவல்காரராக வேலை செய்கிறானே! போகட்டும், நிலத்தை வைத்திருப்பவனுக்குத்தான் எத்தனை சிக்கல்கள்! வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லையே! எனவே, நமக்கான அரிசியை விளைவித்துக் கொடுக்கும் தாய்லாந்து, கொரியா, வியட்நாம் நாடுகளில் வாழும் உழவர்களைத் தான் இன்று அதிகம் போற்றவேண்டும்போல் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 16. தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா .நல்ல படம் ,நல்ல பாடல்

  பதிலளிநீக்கு
 18. அண்ணா பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.நல்ல படம் .நல்ல பாடல்

  பதிலளிநீக்கு

 19. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்த்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  அண்ணா

  பதிவுக்கு உரிய வகையில் தலைப்பு மிக நன்று
  பாடலும்அதற்கான விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே...
  பொங்கல் நன்னாளில் இப்படி உழவின் மேன்மை சொல்லும் திருக்குறள்களை விளக்க உரையுடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது......
  வாழ்க நீங்கள்.... வளர்க உங்கள் பணி......

  பதிலளிநீக்கு
 23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  குணசேகரன். ஆர்

  பதிலளிநீக்கு
 24. அன்பரே ..
  சொத்துச் சண்டை அல்ல சோத்துச் சண்டை என நினைக்கிறேன் !! பாடலும் அவ்வாறே ஒலிக்கிறது என்றே தோன்றுகிறது !

  பதிலளிநீக்கு
 25. நன்றாக தேர்தெடுத்து உள்ளீர்கள் பாட்டுகளை !
  அன்பரே ..
  சொத்துச் சண்டை அல்ல சோத்துச் சண்டை என நினைக்கிறேன் !! பாடலும் அவ்வாறே ஒலிக்கிறது என்றே தோன்றுகிறது !

  பதிலளிநீக்கு
 26. உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் படிக்கறதே ஒரு அனுபவங்க. சூப்பர்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. தங்களுக்கும் குடும்பத்தார் மற்றும் வளைபதிவு குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 28. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் , அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. மண்ணின் வளம் செழிக்க உழவுத் தொழிலும் உழவர்கள் குடியும் உயர வேண்டும் ,பொன்னில் வடித்த தொகுப்பைப் போல எண்ணும் எண்ணம் நிறைவேறிட இனிக்கும் இன்பப் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் வழி சமைத்திட வேண்டும் சகோதரா மீண்டும் மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

  பதிலளிநீக்கு
 30. அருமை சார் ..
  இந்த கருத்துக்கள் அத்தனையும்
  செவியோடு நில்லாமல்
  மனதோடு சேர்ந்தால் மிக நன்று

  பதிலளிநீக்கு
 31. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும்இஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்,
  Vetha.Elanga´thilakam.

  பதிலளிநீக்கு
 32. திருக்குறளில் உள்ள ‘உழவு’ அதிகாரத்தை அருமையான பாடல்களுடன் இணைத்து எளிய விளக்கத்தை தந்து பொங்கலை அழகாக கொண்டாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! உங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 33. மிக நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்த குறள்களோடு பாடல்களையும் கொடுத்து வருகிறீர்கள். நல்ல உழைப்பு. வாழ்த்துகள்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. செம.. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் . த.ம 15

  பதிலளிநீக்கு
 35. குறள் விளக்கமும் அதற்கேற்ற பாடலும் அருமை! நெட் ஸ்லோவானதால் பாடல்களை கேட்க முடியவில்லை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 36. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  பதிலளிநீக்கு
 37. இந்த வலைப்பபூவின் டெம்ப்ளேட் அழகுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பிரமாதம்...

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் டிடி

  பதிலளிநீக்கு
 38. உழவரின் ஏரோட்டம் இல்லையென்றால்
  நம்முன்னே எந்த ஓட்டமும் நிகழாதே!
  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. தங்களின் இந்தப் பதிவும் தமிழ்ப் பொங்கல் போலவே இனிக்கிறது.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 40. பகிர்வு அருமை.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 41. தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. சிறப்பான பதிவு!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 43. உழவரைப் போற்றிப் பாராட்டும் பதிவு சிறந்த பொங்கல் வாழ்த்தாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 44. மனந்தொடும் பதிவு! மிக அருமை!

  பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
  எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
  இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 45. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ!!

  உழவரைப்பற்றிய டைமிங்கான பதிவு,அருமையான பகிர்வு!!

  பதிலளிநீக்கு
 46. உழவர் சிரிக்கணும், உலகம் செழிக்கணும் பதிவு அருமை சார். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 47. உழவரின்றி உணவேது, உணவின்றி உலகேது? உழவின், உழவரின் சிறப்பை உணர்ந்தால்தான் நாடு செழிக்கும். அருமையான பகிர்தலுக்கு நன்றிகள். உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 48. உன்னால் முடியும் தம்பி படத்தில் உள்ள இந்தப்பாட்டு எப்போ கேட்டாலும் மனதில் ஒரு வலி வந்து போவதுண்டு...!

  அருமையான தொகுப்பு...!

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தனபால்...

  பதிலளிநீக்கு
 49. அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் தனபாலன் சார்..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தினரது இனிய பொங்கல் நல்வாழத்துக்கள். வாழ்க வளமுடன்
  வேலன்.

  பதிலளிநீக்கு
 50. பொங்கல் நன்னாளில் உழவின் மேன்மை சொல்லும் திருக்குறள்களை விளக்க உரையுடன் தந்துள்ளீர்கள். மிக்கநன்றிகள்.

  கடமைகள் அதிகரித்துவிட்டது அதனால் வருவதில் தாமதங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். விடுபட்ட பகிர்வுகளை முடிந்தபோது தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 51. +1 நல்ல பதிவு: உழவர்கள் அழாமல் இருந்தாலே போதும்!

  பதிலளிநீக்கு
 52. தனபாலன் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 53. கருத்தும் கானமும்...
  தங்கள் பதிவில் கருத்துக்களையும் அது தொடர்பான பாடல்களையும் இணைத்து தந்த விதம் மனதில்
  பதிய சுலபமாய் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 54. 'எனது வலை நண்பரின் அழகான வலைப்பக்கம் பார்த்துத் தொடர வேண்டுகிறேன். திருக்குறளுக்கு அவரது எதார்த்தமான உரை ரசிக்கும்படியும் புரியும்படியும் இருப்பது தனிச்சிறப்பு - பாருங்கள், படியுங்கள், தொடருங்கள்" - இது எனது ஜி-ப்ளஸ் நண்பர்களிடம் இந்த உங்கள் வலைப்பக்கம் பற்றி நான் பகிர்ந்துகொண்ட செய்தி. வேறென்ன செய்ய, நல்லா இருந்தா பாராட்டுறது மட்டுமில்லாம நம்ம நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துறதுதானே சரி? நன்றி, தொடருங்கள் வலைச்சித்தரே! வணக்கம்

  பதிலளிநீக்கு
 55. அருமையான உழவர்திருநாள் பதிவு.
  சிறப்பான திருக்குறள், சிறப்பான சினிமா பாட்ல்கள், கோலம், கரும்பு தோட்டம், பொங்கல் படங்கள் எல்லாம் அருமை.
  சாரமழை பாடல் அருமை.
  சாரல் மழை பெய்து சனங்க பஞ்சம் மாறி உழவர் சிரிக்க வேண்டும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 56. நன்னெறி காட்டவே நல்கும் பதிவெல்லாம்
  இன்மைக்குள் சேரும் இசைந்து !

  தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

  குறளோடு பாட்டும் - வளம்
  குன்றா பாடல்களும்
  அறமோடு சேரும் - தமிழ்
  அழியாமல் வாழும்..!

  மென்மேலும் அழகிய பதிவுகள் தர வேண்டும்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  22

  பதிலளிநீக்கு
 57. இந்த வார வல்லமையாளர் ஆனதுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல சிறப்புகளைப் பெறவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 58. மிக மிக அருமையான பகிர்வு, உழவர் சிரிக்கனும்....

  பதிலளிநீக்கு
 59. கலைஞரின் குறளோவியம் டி.டி.யின் குறளோவியமும் வித்தியாசமாய் இரசிக்கத்தக்கதாய்...போற்றிப் பாதுகாக்கத் தக்கதாய்...வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :