உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1)
வணக்கம்... அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... "என்ன தோஸ்து, விவசாயத்திலே இறங்கிடிங்க...? தப்பா நினைச்சிக்காதீங்க, எவ்வளவு நிறைய படிச்சிருக்கிறீங்க, உங்களுக்குக் கிடைக்காத வேலையா...?" ← இது முந்தைய பகிர்வின் ஒரு உரையாடல் "நீங்க மரமாக போறீங்க..." பதிவில் எனது பால்ய நண்பரோடு...! (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) உரையாடல் தொடர்கிறது வித்தியாசமாக… :-
சிறு வேண்டுகோள் : கீழே உள்ள Play button-னை சொடுக்கவும். ஒருமுறை அழுத்தினால், பதிவைப் படிக்கும் போது பாடலை கவனமாகக் கேட்க முடியாதென்பதால், இருமுறை சொடுக்கவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் Load ஆகிவிடும்...!
உரையாடலைப் படித்து விட்டு, குறளுக்கேற்ற திரைப்படப்பாடல்களை ரசிக்க, உரையாடலுக்கு முன்னுள்ள இதயத்தை சொடுக்கவும்...
⟪ © தாய்க்கு பின் தாரம் ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫ வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே... நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே...2 ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே... தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே... இது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே...! அதாலே மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...! இது மாறுவதெப்போ திருந்துவதெப்போ நம்ம கவலை...! சரியா நல்லமுத்து...?
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது... நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக2 பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக2 அடிச்சுப் பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக... ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே... என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே... பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே2 பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே; நாம் ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே2 இந்த தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே...! ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே... ⟪ © பிள்ளைக் கனியமுது ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫
வாங்க பாலன், நல்ல பாட்டு... சிரமம் தான்... துன்பம் தான்... இருந்தாலும் வேறு எந்தத் தொழிலைச் செய்து திரிந்தாலும், முடிவில் நம்ம உழவுத்தொழில் செய்பவர்களையே உலகம் "புவ்வா"விற்கு எதிர்பார்க்கும் இல்லையா...? எங்க அப்பா சொன்னபோது தெரியவில்லை... இந்த உழவுத் தொழில் தான் சிறந்தது, முதன்மையானதுன்னு இப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன்...உழந்தும் உழவே தலை
எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள... சோத்தில் நாம கையை வைக்க - சேத்தில் வைப்பான் கால... ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்... சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு... நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு...! முடி வெட்டும் தொழில் செய்யும் தொடர்ந்தான் இல்லையேல் - நமக்கெல்லாம் ஏது அழகு...? நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல் - வெளுக்குமா உடை அழுக்கு...? எந்தத் தொழில் செய்தாலென்ன...? செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே...! ரீப்பிட்டே... சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே... ஓஓ ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ... சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ... ⟪ © சந்திரமுகி ✍ வாலி ♫ வித்யா சாகர் ☊ S.P.பாலசுப்ரமணியம் @ 2005 ⟫
அட... நீங்க சொல்வது சரி தான்... இதை விடத் திருப்தியான தொழில் எதுவும் கிடையாது... எந்தத் தொழிலைச் செய்தாலும், அவங்களுக்கெல்லாம் சாப்பிடும் பொருட்களையெல்லாம் தந்து தாங்குகிற நீங்க தானப்பா இந்த உலகத்திற்கே அச்சாணி...!எழுவாரை எல்லாம் பொறுத்து
இல்லாமை நீக்க வேண்டும்; தொழில் ஆக்கம் வேண்டும்; இங்கு எல்லோரும் வாழ வேண்டும்... முன்னேற என்ன வேண்டும்...? நல்லெண்ணம் வேண்டும்; தன் உழைப்பாலே உண்ண வேண்டும்...! பாடுபட்ட கை அது பாட்டாளி கை2 செய்யும் தொழிலைத் தெய்வமாக... நிலைநிறுத்தி... உடல் வருத்தி... அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை...! வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை; காட்டை மேட்டைத் தோட்டமாக்கி... நாட்டு மக்கள் வாட்டம் போக்கி... அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை... உன்னை என்னை உயர வைத்து; உலகமெல்லாம் வாழவைத்து; அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை...! ⟪ © அன்னமிட்ட கை ✍ வாலி ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫
நன்றிப்பா... மத்தவங்களுக்கும் உழவு செய்து அதனால் கிடைக்கிற திருப்தி இருக்கே, அதை வார்த்தைகளிலெல்லாம் சொல்ல முடியாது... உரிமையோடு உயர்வா வாழ்க்கை வாழ்ற திருப்தி இருக்கு... ஏதோ ஒரு வேலைக்குப் போயிருந்தால், "ஐயா சாமி..."-ன்னு வாழ்க்கை முழுவதும் அவங்க தர்றதை வச்சி பொழைப்பு நடத்தி அவங்க பின்னாலே தான் போகணும்...! வேறே வழியில்லை...தொழுதுண்டு பின்செல் பவர்
முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து; முழு மூச்சா அதற்காகத் தினம் உழைத்து...2 மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ2 வழங்கும் குணம் உடையோன் விவசாயி... விவசாயி... விவசாயி... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...? ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்...2 உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...! விவசாயி... விவசாயி... இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி; எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி...2 பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி...! பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி...! விவசாயி... விவசாயி... கடவுள் என்னும் முதலாளி; கண்டெடுத்த தொழிலாளி; விவசாயி... விவசாயி... ⟪ © விவசாயி ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫
நல்லாவே சொன்னீங்க...! சுயமாக தொழில் செய்யும் எல்லோருக்கும் இந்த திருப்தியும் இருக்கும்... ஆனா, எந்த நாடு என்றால் என்ன...? எந்த ஆட்சியாளர்களின் நிழலையும் உங்க கீழே கொண்டு வர சக்தி இருக்கே... அந்தளவு இந்த உழவுத் தொழிலால் தானிய வளமும், அதனால் அருளும் உடைய கருணையாளர்கள் நீங்களாச்சே...!அலகுடை நீழ லவர்
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்; மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்2 மலர் முடிந்து பிஞ்சு வரும், வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்; காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே...! எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே...! தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ... உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்; உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்2 பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்; மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே...! நெஞ்சில் ஒரு களங்கமில்லை; சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ...ஆ...ஆ... வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை2 ஆ...ஆ...ஆ...ஆ... ⟪ © பாசமலர் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் ☊ T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫
அதெல்லாம் விடுப்பா...! இதுவரைக்கும் யார்கிட்டேயும் கையேந்தும் நிலைமை வரலே... எங்ககிட்டே கேட்டு வர்றவங்களுக்கு இல்லைன்னு சொல்லாமல் கொடுக்க எங்களாலே கொடுக்க முடியுதே... இதை விட என்ன சந்தோசம் வேணும்...?கைசெய்தூண் மாலை யவர்
பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி...!2 புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி...!2 வாய்க்காலையும் வயற்காட்டையும் - படைத்தாள் எனக்கென கிராம தேவதை...! தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால், இனித்திடும் வாழும் நாள் வரை...! குழந்தைகள் கூட, குமரியும் ஆட... மந்த மாருதம் வீசுது... மலயமாருதம் பாடுது...ஊ...ஊ...ஊ... ஊ...ஊ...ஊ... ஊ...ஊ...ஊ... ஊ...ஊ...ஊ... பூப்பூக்கும் மாசம் தை மாசம்... ம்ம்ம்… ஊரெங்கும் வீசும் பூ வாசம்... ம்ம்ம்… சின்ன கிளிகள் பறந்து ஆட... இன்று கவிகள் குயில்கள் பாட...2 புது ராகம்... புது தாளம்... ஒன்று சேரும் நேரம் இந்நேரம்... ⟪ © வருஷம் 16 ✍ வாலி ♫ இளையராஜா ☊ P.சுசீலா @ 1989 ⟫
பயிர் செழித்து வளர என்னப்பா செய்றே...?இப்போது மேலே உள்ள Play ≥ பட்டனைச் சொடுக்கி, வரிசைப்படி இந்தப் பதிவில் உள்ள அற்புதமான பாடல்களின் வரிகளை DD Mix-ல் கேட்கலாம்...
(படம் : தளபதி) தை பொறக்கும் நாளை... விடியும் நல்ல வேளை.. பொங்கப் பானை வெள்ளம் போலப் பாயலாம்... அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு... அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்...
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஐயா அவர்களின் இழப்பு ஈடுகட்டமுடியாததொன்றாகும். மிக அருமையான பதிவு.
நன்றி.
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
பதிலளிநீக்குகடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி... அந்த விவசாயிகளின் குரலாக இருந்த நம்மாழ்வார் ஐயாவின் ஆத்மா சாந்தியடைவதாக...
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற தங்களது சீரிய எண்ணம் வாழ்க! நம்மாழ்வார் ஆன்மா அமைதியுறட்டும்!
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிவசாயத்தின் சிறப்பினை விளக்கும் பதிவு அருமை ஐயா.தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!
பதிலளிநீக்குவணக்கம் பாலான்ணா.
பதிலளிநீக்குகடந்த ஆண்டின் கடைசி நாள் சோகம் நம்மாழ்வார் அவர்களின் இழப்பு.
தங்கள் வாய் முகூர்த்தம் பலித்து உழவுத் தொழில் உயர்விலிருக்கட்டும்.
வளமும் நலமும் நிலைபெற்று வாழ்க!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குமண்ணின் பெருமை நினைவுகூறும் சிறப்பானதொரு பகிர்வு!
நம்மாழ்வார் இழப்பு வருந்த வைக்கும் இழப்பு.
பதிலளிநீக்குநகரும் கட்டுரைப்போட்டி பொம்மை புன்னகைக்க வைத்தது.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சிறப்பானதொரு பகிர்வு!தொலைநோக்குடன் கூடிய நம்மாழ்வார் நல்ல சிந்தனைகளை நாம் செயலில் கொண்டு வர வேண்டும்.தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎந்நாளும் மனம் மகிழ்ச்சியில் திழைக்கவும். நிம்மதிகள் தழைக்கவும்.நாடு நலம் பெறவும். நல்லவர்கள் பெருகவும். வறுமைகள் நீங்கவும். வருமானம் செழிக்கவும். மனமுருகி இறைவனிடம் வேண்டுங்கள்.
I wish you all a magical
Festive Season filled with
Loving Wishes and beautiful thoughts.
May your coming year mark the beginning
of Love,
Happiness and Bright Future.
Like Birds, Let Us, Leave Behind What We Don’t Need To Carry...
GRUDGES, SADNESS, PAIN, FEAR And REGRETS.
Life Is Beautiful... Enjoy It...
HAPPY NEW YEAR 2014
வணக்கம் சகோதரர் தனபாலன்!
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!
உழவுத்தொழில் பற்றி அருமையான பதிவு!
பாடல் தெரிவுகளும் அதனுடன் நல்ல கருத்துள்ள இடங்களைத்
தெரிவுசெய்து போட்டமையும் மிகச்சிறப்பு!
அருமை! வாழ்த்துக்கள் சகோ!
புத்தாண்டு முன் எப்போதையும் விட மகிழ்ச்சியை அள்ளித் தரும் ஆண்டாக அமையட்டும், D.D மற்றும் நட்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் தனபாலன்!!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
பதிலளிநீக்குஉழவே பிரதானம் என வள்ளுவனார் கூறிய குறளுடன் திரைப் பட பாடல்களை கோர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு அருமையாக அஞ்சலி செலுத்தி விட்டீர்கள்!
பதிலளிநீக்கு+1
பல பயன்மிக்க ஆக்கங்களையும், மனிதருக்குத் தேவையான அடிப்படை வாழ்க்கை முறைகளை தங்களின் பதிவுகளின் மூலமும், பாடல்களின் மூலமும் கொடுக்கும் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்... இன்றுபோல் என்றும் இனிமையாய் அமைந்திட, வாழ்ந்திட எனது மனமுவந்த வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஅருமையான பதிவு .2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉழவுத் தொழிலைப்போல் உழவர்களின் வாழ்க்கையும் சிறந்தால், விவசாயம் நசிவதேது... உழவர்களுக்கும் நல்ல விடியல் ஒன்று பிறக்கட்டும்(நமக்கும் சேர்த்து)
பதிலளிநீக்குஇயறக்கைகாக போரடி அதனுடனே சங்கமித்த நம்மாழ்வார் அய்யா அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்
பதிலளிநீக்குமென் மேலும் சிறப்புடன் வாழ புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! தனபால்! பதிவு அருமை!
பதிலளிநீக்குசெய்திகள் தங்கள் முயற்சிக்கு எடுத்துக் காட்டு!
உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்!! நல்லதொரு மிக அருமையான ஒரு பதிவு நண்பரே! அ துவும் உழவுத் தொழிலைப் போற்றும் பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அற்புதமான ஒரு பதிவு!
பதிலளிநீக்குஇயற்கை விஞ்ஞானி திரு நம்மாழ்வாரின் மரணம் ஒரு பெரிய இழப்புதான்! அவரது கொள்கைகளையும், முயற்சிகளையும் நாம் முனைந்து செய்ய முயல வேண்டும்!! அருமையான பதிவு அதுவும் பாடல்களுடன், திருக்குறள்களுடன் சொன்ன விதம் நல்ல கற்பனை வளம்! தாங்கள் technology யிலும் அசத்துகின்றீர்கள்!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்!..
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..
உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்!! வீணில் உண்டு களித்திருப்போரை (கழித்திருப்போரை)நிந்தனை செய்வோம்!..
நல்லதொரு பதிவு வழங்கிய அன்பின் தனபாலன் அவர்களுக்கு விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக நன்றி!..
இனிய வாழ்த்துகள் தனபாலன்.
பதிலளிநீக்குஇயற்கைக்காக போராடிய நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
பதிலளிநீக்குதங்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திண்டுக் கல்லிலே அமர்ந்து
பதிலளிநீக்குகல்லாய் இருப்பவர்க்கும்
கல் கல் கல் என
கல கல என்னும் சலங்கை ஒலி போல்
குரளைச் சொல்லும் உங்கள்
பாங்கு பரவசம் தருகிறது.
தனிப் புகழ் பெறுகிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
உங்கள் பதிவு மூலம்
உங்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும்
எங்களது புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
பரிமேலழகர், மணக்குடவர், உரை அந்தக்காலம்.
போப்,திரு.வி.க. ராமலிங்கம் பிள்ளை உரை நடுக்காலம்.
திண்டுக்கல்லார் உரை திருக்குறளுக்கு ஓர்
பொற்காலம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.menakasury.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
உழவின் பெருமை பல்லாற்றானும் சிறப்புறப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஉழவின் சிறப்பை மிக நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு அஞ்சலி.
பதிலளிநீக்குநீண்ட நேரமானது படத்திலிருந்து வெளியே வர !! கீழேயுள்ள நகரும் படமும் அருமை. உழவின் சிறப்பை சொல்லும் இப்பதிவும், பாடல்களும் இனிமை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம்மாழ்வாரின் மரணம் மிகப் பெரிய இழப்பே
பதிலளிநீக்குஅதை ஒரு பதிவாகக் கொடுத்து அஞ்சலி செய்தமைக்கும்
விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்த
ஆழமான சிந்தனையுடன் கூடிய பகிர்வுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 12
பதிலளிநீக்குசிறந்த புத்தாண்டுப் பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபல பதிவர்களால் பாராட்டுப்பெற்ற தங்கள் பணி தொடர எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉள்ளம் உவக்க
பதிலளிநீக்குஉழவு காப்போம்
உண்மை பேசி
உயர்வு காப்போம்
உறவை பேண
உணர்வை மதிப்போம்.
பொங்கலுக்கு ஏற்ற அருமையான பதிவும் அதற்கேற்ற பாடல்களும் குறள்களும்.மிக்க நன்றி....!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினவாக வெளியிட்டுள்ள உழவு அதிகாரத்தின் குறள்களும் அத்தோடு இணைத்துள்ள பாடல்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!
திரு கோ. நம்மாழ்வார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
தனது 75 வது வயதிலும் மக்களுக்காக விவசாயத்திற்காக போராடிய நம்மாழ்வாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்புதான். பதிவும் மிக அருமை. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநம்மாழ்வாருக்கு உங்களுடன் சேர்ந்து நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம்.
பதிலளிநீக்குஅவர் தனது உயிராக மதித்த உழவு பற்றிய திருக்குறள்களை கொண்டே அவருக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியவிதம் அருமை.
நல்ல பதிவு. திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு பதிவை சமர்ப்பித்திருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... சிறப்பான பகிர்வு. நன்றி!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர் பயணங்களால் தெரியாமலே போய்விட்ட செய்தி
பதிலளிநீக்குஉலகை நேசிக்கும் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு
உங்கள் பதிவு அருமை அண்ணா
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விவசாயம் செழித்தால்தான் எந்த நாடும் செழிப்படையும். இங்கு விவசாயம் செழிக்காமல் இல்லை. ஆனால் இடைத்தரகர்களின் அக்கிரமம்தான் விவசாயி இன்றுவரையிலும் ஏழையாகவே இருக்க காரணம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநம்மாழ்வாருக்கு என் அஞ்சலி.
பதிலளிநீக்குஉழுதுண்டு வாழ்கிறவர்கள் ஒப்பில்லாதவர்கள்
உங்கள்குடும்பத்திநருக்கும்,உங்களுக்கும் வாழ்த்துகள். அன்புடன்
மிக்க நன்றி தனபாலன் அவர்களே. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களின் உதவிகள் புதிய பதிவர்களுக்கும், அதிகம் தெரியாத பதிவர்களுக்கும் உபயோகமாக உள்ளன.
பதிலளிநீக்குவிவசாயத்தின் சிறப்பினைக் கூறும் வெகு அழகான பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அனைவரும் 2014ல் சந்தோஷமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டி பிரார்த்திப்போம்.
நம்மாழ்வருக்கு நல்ல ஒரு அஞ்சலி
பதிலளிநீக்குசெயற்கையையே விரும்பும் மனிதர்களுக்கு இயற்கை வழி விவசாயத்தின் மேன்மையை தன வாழ்நாள் முழுதும் நினைவூட்டியவர் நம்ம நம்மாழ்வார்!
பதிலளிநீக்குதிரை இசையின் கருத்து முத்துக்களையும் அதனோடு திருக்குறளின் கருத்துக்களையும் இணைத்த பதிவு அருமை.
உழவின் மேன்மை உணர்த்தும் தை மாதத்தை வரவேற்க உள்ள நிலையில் உழவர் சித்தர் நம்மாழ்வார் இழப்பு ஈடு இணையற்றது.பகிர்வுக்கு நன்றி சார். எமது வலைப பக்கம் வாருங்கள் www.ilakkanatheral.blogspot.in
பதிலளிநீக்குK.S. GOPINATH, LANDHAKOTTAI,DINDIGUL
டிசம்பர் கடைசி நாள். கடந்த ஆண்டு ஒரு உறவின் இழப்பு. இந்த ஆண்டு திரு. நம்மாழ்வார். நான் முன்பே எழுதியது போல் இதெல்லாம் மறந்துபோகும். புத்தாண்டை வரவேற்பதில் முனைந்து விடுவோம். தனபாலன் பதிவு என்றாலே குறளின் மகிமையும் ,கருத்துள்ள திரைப்படப் பாடலின் ஒலியும் இருக்கும். வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டிடி.
பதிலளிநீக்குபகிர்வு நன்று.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதனபாலன் (அண்ணா)
மறைந்த விஞ்ஞானி நம்மாழ்வர் அவர்களின் ஆத்மா சாத்தியடையட்டும்...
உழவின் சிறப்பு பற்றிய பதிவும் அற்கான குறள்பாக்களும் பாடல்கள் மிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். அருமை.
பதிலளிநீக்குஅவர்களுக்கு வணக்கங்கள், அஞ்சலிகள்.
மிக பொருத்தமான் பாட்ல்கள் மிக அருமை.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வணக்கம் தனபாலன் சார் !
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும்,.!
நம்மாழ்வார் முன்மொழிந்த நன்மையுறும் நல்லுரங்கள்
செம்மண்ணில் ஊறிநின்று வேர்வளர்க்கும் - இம்மையிலே
வாங்கிவந்த ஈடில்லா வாழ்தகவை ஈந்திறந்தான்
தாங்கிடுமோ மண்ணின் தவிப்பு !
இவன் இயற்கைக்கு உரமான
இன்னோர் இலை -என்றும்
இதயத்தை விட்டகலா
இரத்தத்தின் இழை.!
ஆழ்வாருக்கென் ஆழ்ந்த அனுதாபகங்கள் !
உழவின் சிறப்புப்பார்வை பற்றிய பதிவும் பாடல்களும் அருமை தனபாலன் சார்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
பதிலளிநீக்குவணக்கம்!
தமிழ்மணம் 22
உழவன் உயா்வை உரைக்கும் பதிவைத்
தொழுதேன் மனத்தால் தொடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அன்புடையீர்.
பதிலளிநீக்குதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
தங்களுக்கு இனிய புத்தாண்டு (2014) வாழ்த்துக்கள். உங்களின் வேகம் பிரம்மிக்க வைக்கிறது இந்த ஆண்டும் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி யாவரும் போற்றும் விதமாக... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநம்மாழ்வாருக்கு உங்களுடன் சேர்ந்து நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தனபாலன் சார். இயற்கை விஞ்ஞானியின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் திரு தனபாலன். நம்மாழ்வார் ஐயாவிற்கு அருமையான அஞ்சலி! அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
ஆண்டின் துவக்கமே நல்ல படைப்புடன் துவங்கியுள்ளது. வாழ்த்துக்கள்! பெரியவர் நம்மாழ்வார் மரணமடைந்தது ஈடுசெய இயலாத இழப்பாகும்.அவரது ஆன்மா சாந்தி அடைவதாக!
பதிலளிநீக்குசிறக்கட்டும்
பதிலளிநீக்கு2014
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழ்மணம்+1
பதிலளிநீக்குநம்மாழ்வாரை நாம் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்! இறந்த பிறகு பெருமை பேசி [அரசு செலவில்] சிலை வைப்பது தான் தமிழன் மரபு ஆயிற்றே!
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி... அந்த விவசாயிகளின் குரலாக இருந்த நம்மாழ்வார் ஐயாவின் ஆத்மா சாந்தியடைவதாக...
பதிலளிநீக்குtha/ma/24
Tamilmanam +1
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநம்மாழ்வார் அவர்களின் இழப்பு ஈடுகட்டமுடியாததொன்றாகும்.
நன்றி.
ஐயாவின் இழப்பு வேதனை...
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பகிர்வு மிகவும் அருமை...
சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புள்ள திண்டுக்கல் தனபாலனே!
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் வசிப்பவர்களை நாங்கள் திண்டுக்கல்லான் என்று அன்பாக கூப்பிடுவது வழக்கம். எங்கள் சொந்தங்கள் அங்கும் உள்ளது; அது இங்கு தேவையில்லை.
உலகத்தில் எனக்கு மிக மிக பிடித்த இரண்டு ரயில் நிலையங்களில் ஒன்று திண்டுக்கல்! மற்றொன்று எழும்பூர்!
என் ஐந்து வயதில் அங்கு இறங்கி பழனி -உடுமலை-பாலக்காடு செல்லும் கட்டை வண்டி ரயில் பயணம் இன்றும் நினைவு உள்ளது!
பின்குறிப்பு:
அப்போ! இலவச ஐஸ் கோல்டு (ice cold) தண்ணீர் திண்டுக்கலில் பிடிப்பெண்; கூஜாவில் தான்!) எல்லாம் போச்சு! நம் நாடு நாசமாப் போச்சு!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்..
பதிலளிநீக்குதிரு நம்மாழ்வார் ஐயாவின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.
குறள்களுடன் அருமையான பகிர்வு தனபாலன் சகோ..
இனி மிஞ்சும் இயற்கையை நம்மால் முடிந்த அளவு காப்போம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் சகோ.
தங்கள் பதிவும் அனைவரின் பின்னூட்டமும் எனக்கு உற்சாகத்தை அளித்தது. மேலும் இத்தனை பேரா உங்களுடன் என்ற ஆச்சர்யத்தையும் அளித்தது. :)
கண்டிப்பாக தொழிலில் மிகச் சிறந்தது விவசாயமே. விவசாயத்தை ஊக்குவிக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்குகளில் விவசாயமும் ஒன்று
பதிலளிநீக்குதிரு நம்மாழ்வார் ஐயாவின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎனது கணனிப் பிரச்சனையால் தாமதமாக கருத்திட நேர்ந்தது.
பதிவு சிறப்பு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நம்மாழ்வார் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..
பதிலளிநீக்குபிரமிக்கவைக்கும் வித்தியாசமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
நம்மாழ்வார் இயற்கையோடு கலந்துள்ளார்.நல்ல பதிவு.புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் சார்
பதிலளிநீக்குஇன்றுமுதல் தங்களை feedlyயில் பின்தொடர்கிறேன்.
ஒரு எச்சரிக்கைக்காக சொல்லிக்கிறேன்!!
நம்மாழ்வாரின் மரணம் மிகப் பெரிய இழப்பபு. அவருக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை. அதை அழகாகச் செய்துள்ளீர்கள் தனபாலன்.
பதிலளிநீக்குஉங்கள் தளத்திற்கு எப்போது வந்தாலும் வியப்போடுதான் திரும்புகிறோம். எவ்வளவு டெக்னிக். அசத்தறீங்க. மகிழ்ச்சியாக வாழ்த்துகள்
உழுதுண்டு தவிர மற்ற குறள்கள் எனக்குப் புதியவை. அறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் வளமும் நலமும் பெருகட்டும்.
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநம்மாழ்வாரின் எண்ணம் போல எங்கும் இயற்கை செழிக்கட்டும்..அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!
உழவின் சிறப்பு பற்றி அருமையான பதிவும் ஏற்ற பாடல்களும்! மிக அருமை!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!.
பதிலளிநீக்குவழக்கம் போல், சமூக நோக்கில் கலைகட்டிவிட்டது பதிவு!
அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகிறேன்
பதிலளிநீக்குஉழவின் சிறப்பை அறியாதோரும் அறியும் வண்ணம் சிறப்பான பதிவு. நன்றி தனபாலன். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் மறைவு ஒரு ஈடு செய்யவியலாத இழப்பு நமக்கு. அவருக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலி உரித்தாகட்டும்.
பதிலளிநீக்குஉழவர் சிரிக்கணும் என்று பதிவிட்ட தங்களின் வாக்கு இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து நனவாகட்டும்!!!
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!!
சுழலும்
பதிலளிநீக்குபுகைப்பட பெட்டி
ரொம்ப அருமை
பதிவும் அருமை..
தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குசகோதரருக்கு வணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
இன்பம் பொங்கும் திருநாளாக
பதிலளிநீக்குஇதயம் மகிழும் ஒரு நாளாக
இந்நாள் உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும்
மகிழ்ச்சி பொங்கும் நாளாகத் தொடர
என் இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு
வாழ்த்துக்கள் சகோதரா !
பதிலளிநீக்குவணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கான சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். நம்மாழ்வாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
த.ம.27
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
விவசாயத்தின் சிறப்பினை விளக்கும் சிறந்த பதிவு !
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉழவர் பெருமை என்றும் வாழ்க!
அவர் தம் புகழ் எங்கும் ஓங்குக !
அருமை!வாழ்த்துக்கள்...
உழவின் மேன்மை உரையாடல் வடிவில் மிக சிறப்பு. அனைவரும் நினைவில் கொள்ளவேண்டிய பதிவு.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் சகோதரரே. நம்மாழ்வார் ஐயாவிற்கு தாங்கள் செய்த சமர்ப்பணம் தங்களுடைய மனிதாபிமானத்தைக் காட்டுகிறது. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். நன்றி.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
DD,
பதிலளிநீக்குThere's a cube rotating in this page with multiple images displayed on it.
is that HTML code ? How u did that ? Is it possible to share the code ? My ID : ViswanathVRao at gmail dot com.
Thank you;
மூச்சு உள்ளவரை விவசாயத்திற்காக!
பதிலளிநீக்கு