வெள்ளி விழா


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அதுதிருமண வாழ்த்து மடல்

வைகைநதி நீர்குடித்து வண்ணத்தமிழ் நூல்படித்து
    செய்கையால் சிறப்புபெற்று பின்னியிலே புகழ்படைத்து

பொன்னைய்யர் தனலெட்சுமி பெரும்தவத்தால் பிறந்தசீலன்
    புன்னகையை எப்பொழுதும் பூப்பூக்கும் தனபாலன்

திண்டுக்கல்லில் சாந்தாராம் தம்பதிகள் பெற்றெடுத்த
    பெண்ணரசி புவனாவை மணமுடிக்கும் நந்நாளில்

மலர்த்தூவி நாங்களெல்லாம் மனமாற வாழ்த்துகிறோம்
    நலம்பெற்று வாழ்கவென நற்றமிழால் போற்றுகிறோம்

பால்நிறத்தில் ஆடைமாட்டி பவனிவரும் தனபாலா
    நூல்அதிகம் படித்தாலும் அடக்கமுள்ள பண்பாளா

பொறுமைக்கு நீஎன்றும் பூச்சூட்டி மகிழ்கின்றாய்
    திறமையாலே முன்னேறி தேனாற்றில் மிதக்கின்றாய்

இனிமையாக பழகுவதில் இணையில்லா இளவரசே
    தனிமையிலும் ஒழுக்கத்தில் தடுமாறா தமிழ்முரசே

கலைகொஞ்சும் அழகுமுகம் கவர்ச்சியான பூஞ்சிரிப்பு
    நிலையான அன்புக்கு இவைதானே உன்இருப்பு

பின்னிபெரும் ஆலையிலே வல்லுநர்கள் நடுவினிலே
    பொன்னாக மின்னுகிற பாசமிகு எம்தோழா

இருநான்கு இமைகளிலே இரவினிலே விளக்கேற்று
    பருவத்தின் கனவெல்லாம் நிஜம்செய்ய அரங்கேற்று

முத்தான கையெழுத்தை பிரசவிக்கும் உன்விரல்கள்
    பத்தினிபெண் புவனாவை பற்றிஇனி கவிவரைக

முன்னூறு நாள்பொறுத்து முத்துஒன்று பெற்றெடுத்து
    பின்னர்இடை வெளிவிட்டு ஒன்றுபெற்று அதைநிறுத்து

ஆலையிலே உற்பத்தியை அதிகமாக நேசித்தாலும்
    சேலைதரும் தனிசுகத்தில் சந்தோசத்தை வாசித்தாலும்

அரசாங்க திட்டத்தை அமுலாக்க பாடுபடு
    வருகின்ற சந்ததிக்கு வளம்சேர பாதைபோடு

செலவறிந்து செயல்முடித்து ஏழைகட்கு இரக்கபடு
    பலன்குவித்து பதுக்காமல் பெயர்நிலைக்க புகழைஎடு

உற்றதுணை யாகவந்த உத்தமியாம் புவனாவும்
    பெற்றுஇனி வரப்போகும் பிள்ளைகளும் தந்தைதாயும்

வருகின்ற வாழ்நாளில் வளம்பெற்று நலமுற்று
    கருமாரி அருள்பெற்று பல்லாண்டு வாழ்கவாழ்கவே

மண நாள் : 09/12/1993                                                        என அன்புடன் வாழ்த்தும்
நிகழ்விடம் : சௌராஷ்டிர சபா ஹால்,                          கவிஞர் கா.மு.அரங்கன்
திண்டுக்கல்.                                               பயிற்சி மையம் & நிர்வாக அதிகாரிகள்
                                                                                                             பின்னி லிமிடெட்,
                                                                               பி & சி மில்ஸ், சென்னை - 12.

அன்பு உள்ளங்களின் ஆசீர்வாதங்களை வேண்டி... அன்புடன் உங்கள் DD

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வெள்ளிவிழா தம்பதிகள் ஆண்டவன் அருளால் அனைத்து வளங்களையும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் டிடி. வெள்ளிவிழா மகிழ்ச்சி ஒருபுறம், மறுபடியும் நீங்கள் பதிவு போட்டிருக்கும் மகிழ்ச்சி மறுபுறம்.

  வாழ்க வளமுடன். இன்று போல என்றும் வாழ்க.. எல்லா வளமும், நலனும் பெற்று பல்லாண்டு வாழ்க

  பதிலளிநீக்கு
 3. மனம் நிறைந்த வாழ்த்துகள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. வளம் நிறைந்து நலம் செறிந்து வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. தேவியர் இல்லத்தின் சார்பாக உளம் கனிந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. மனம் நிறைந்த இனிய திருமணநாளுக்கான வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும்! நல்லா இருங்க !

  பதிலளிநீக்கு
 7. வள்ளுவன்-வாசுகி போல் என்றும் நலமுடன் வாழ்க வளமுடன்.

  மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் வெள்ளிவிழா வெற்றிவிழாவாய் ஆகட்டும்.

  உடல்நலம் பேணுக ஜி.

  பதிலளிநீக்கு
 8. உங்களுடைய நட்பு எங்களுக்குப் பெருமை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.இவ்வினிய நன்னாளில், நீங்களும், குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபால். மென்மேலும் உயர வாழ்த்துக்கள். அடுத்த வருடம் கிட்டத்தட்ட இதே சமயத்தில் எங்கள் வெள்ளிவிழா ஆண்டும் வருவதை ஞாபகத்துக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. பலனை எதிர்பாராமல் பிறருக்கு உதவும் தங்களின் பெருந்தன்மை மறக்க இயலாதது. மணம் முடித்து வெள்ளி விழா காணும் தருணத்தில் தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  வாழ்த்துகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 11. அகம் புறம் அனைத்தும் வெள்ளை நம் தனபாலனுக்கு. அவருடைய திருமதி
  புவனாவுடைய திருமண நாளுக்கு என் இனிய வாழ்த்துகள். மேலும் மேலும் நன்மைகள் நிறைவாக
  குன்றாத ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுங்காலம் வாழ
  ஆசிகள்

  பதிலளிநீக்கு
 12. உளம் கனிந்த மண நாள் வாழ்த்துக்கள்.அன்புடன் நீண்ட நாள் மகிழ்வுடன் வாழ மனமார்ந்த பிரார்த்தனைகள் - பாபு

  பதிலளிநீக்கு

 13. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. வெள்ளி தங்கமாகி பின்னர் பிளாட்டினமாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இல்லாளோடு இனிதே 53 ஆண்டுகள் கழித்தவன் வாழ்த்துகிறேன் எல்லாநலமும் பெற்று இன்னும் நீ சிறப்புடன் வாழ்க

  பதிலளிநீக்கு
 16. தங்களின் இனிய திருமண நாளில் நீங்கள் இருவரும் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 17. வலைச்சித்தர் அய்யாவுக்கு,
  இனிய மணநாள் வாழ்த்துகள்!
  பொன்விழா வாழ்த்துகள்!
  கணினித் தமிழ் வளர்த்து
  காண்க ஒரு நூறாண்டு!
  09-12-2052

  பதிலளிநீக்கு
 18. நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி . பதிவுலக பெருமக்களின் உள்ளம் கவர்ந்த திண்டுக்கல் தனபாலனுக்கு இல்லற வெள்ளி விழா வாழ்த்துகள் மென்மேலும் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துகள் தோழரே. உடல் நலம் பரவாயில்லையா

  பதிலளிநீக்கு
 20. திருமண வாழ்த்து சிறப்பு.
  அன்பின் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  வளமும் நலமும் பெற்று
  மகிழ்வுடன் வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்.
  வாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 21. இறைவனின் திருவருளால் இல்லற வாழ்வில் நூறாண்டு காண வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. இன்று பிளாக்கை திறந்தவுடன் உங்கள் பதிவு ஹான் என்று கண்ணைவிரித்து பார்த்து உடனே திறந்தால் மகிழ்ச்சி செய்தி
  மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் சகோ மென் மேலும் பல வாழ்த்துக்களை பெற வாழ்த்துகிறேன்
  வெள்ளியை தொட்ட உங்கள் மகிழ்ச்சி
  தங்கமாய் ஜொலிக்கட்டும்
  வைரமாய் மின்னட்டும்
  அதையும் தாண்டி ஒளிரட்டும்
  வாழ்த்துக்கள் பல

  பதிலளிநீக்கு
 23. எங்கள் மனமார்ந்த இனிய மணநாள் வாழ்த்துகள்! பல்லாண்டு எல்லா செல்வமும் தழைத்து வாழ்ந்திடவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 24. பல்லாண்டு வாழ்க டிடி ! வாழ்த்துக்கள் ! அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 25. வெள்ளி விழா காணும் மனமொத்த தம்பதியர்க்கு மனங்கனிந்த வாழ்த்துகள்! பொன் விழா, பவள விழாவென மேலும் பல விழாக்கள் கொண்டாட வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 26. இன்று -
  வெள்ளிவிழாக்காணும் வலைச்சித்தர்...
  வாழ்வில்
  எல்லா நலமும் வளமும் பெற்று
  வாழ்க பல்லாண்டு.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 27. அன்புள்ள தனபாலன் உங்களுககும்,உங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள். இல்லறவாழ்வு இனிதாக,மகிழ்ச்சியாக என்றென்றும் இருக்க ஆசிகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 28. இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் ! வாழிய நலம் !!!

  பதிலளிநீக்கு
 29. மனம் நிறைந்த இனிய திருமணநாளுக்கான வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும்!
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 30. மனம்நிறைந்த இனிய வெள்ளிவிழா திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 31. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோ டிடி .
  May God Bless you both Abundantly

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  அன்புடன்
  கார்த்திக் அம்மா

  பதிலளிநீக்கு
 33. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. கஜூனா beach இன் கடற்கரை மணல்போல் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்ம்..

  நீண்ட இடை வெளியின் பின்பு இங்கு புதுப்பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.

  அழகிய வாழ்த்துப் பா.

  பதிலளிநீக்கு
 34. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் டிடி அண்ணா.

  பதிலளிநீக்கு
 35. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
  மணமக்கள்
  அன்று போல் இன்றும்
  இன்று போல் என்றும்
  வளமுடனும் நலமுடனும்
  நீடூழி வாழ்க.

  பதிலளிநீக்கு
 36. பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ என் ஆசிகள் பல...

  பதிலளிநீக்கு
 37. இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள் .வாழ்க பல்லாண்டு காலம்

  பதிலளிநீக்கு
 38. நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தைகளும் மன மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழப் பிரார்த்தனைகள். வெள்ளி விழாவுக்கு வாழ்த்துகள். எங்கள் மனமார்ந்த நல்லாசிகள்.

  பதிலளிநீக்கு
 39. என்றும் இதுப்போல் மகிழ்வாக வாழ எங்களது அன்பு வாழ்த்துக்களும்.......வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 40. வெள்ளி விழாக் காணும்
  இணையர்களுக்கு - இனிய
  திருமண நாள் வாழ்த்துகள்!
  இல்வாழ்வு சிறந்து விளங்க
  நீடுழி மகிழ்வோடு வாழ
  வாழ்த்துகிறோம் ஐயா!

  பதிலளிநீக்கு
 41. வெள்ளிவிழா காணும் தங்க மனம் உள்ள தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் .தொடர்ந்து தமிழ்ச்சேவை செய்து
  நூறாண்டு காலம் வாழ்க
  நோய் நொடியில்லாமல் வளர்க
  ஊராண்ட மன்னர் புகழ் போலே
  உலகாண்ட புலவர் தமிழ் போலே.
  நூறாண்டு காலம் வாழ்க.

  பதிலளிநீக்கு
 42. வெள்ளிவிழாக் காணும் தம்பதிகள் இருவருக்கும் இன்றுபோல் என்றும் இன்பமாக தமிழோடும் அன்போடும் இணையற்ற சிறப்புப் பெற்று நூறாண்டு தாண்டி வாழ்க

  பதிலளிநீக்கு
 43. வெள்ளிவிழா நாயகருக்கும், அவரது நாயகிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேலும் பல பல சிறப்புகளைப் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ ஆசிகள்.

  மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 44. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 45. வெள்ளி விழா மணமக்கள் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் .

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் சகோதரரே

  நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  வெள்ளிவிழா கண்ட தாங்கள் மென்மேலும் சிறப்புடன் வாழவும். ஆண்டவனை உளமாற பிரார்த்திக்கிறேன்

  தாமதமாக வந்து வாழ்த்துரைப்பதற்கு மன்னிக்கவும்.இப்போதுதான் ஒவொருவர் வலைப்பூவாக சென்று வாசிக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 47. அடிக்கடி நினைத்துக்கொள்வது உண்டு ...
  நலம்தானே சகோ ?
  மணநாள் வாழ்த்துகள்
  இறைவன் நல்லருளால் நலமுடன் வாழ வாழ்த்துகள் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
  டிசம்பர் மாதம் நான் வலைபக்கம் வரமுடியாத சூழ்நிலை அதனால் உங்க்கள் வெள்ளிவிழா பதிவைப் பார்க்க வில்லை.
  எங்களின் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
  அருமையான கவிதை.
  என்றும் மகிழ்ச்சியாக குடும்பத்தினர்களுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
 49. மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா, உங்களுக்கும் அண்ணிக்கும்.

  பதிலளிநீக்கு
 50. இன்று தங்கள் வலைத் தளத்திற்கு முதன்முறையாக வருகிறேன். வெள்ளிவிழா கண்ட தங்களுக்கும் துணைவியாருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 51. இணையர் படம் வெகு அழகு. அன்பும் வாழ்த்துக்களும் சகோ. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :