🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



போதை வந்த போது புத்தி இல்லையே...








நீல வானம் மெல்ல மெல்லச் சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே...2 பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னைக் கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காணச் சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை...© சொர்க்கம் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 P.சுசீலா @ 1970 ⟫


கள்ளுண்ணாமை அதிகாரத்தைக் குறளின் குரலாக முந்தைய பதிவில் ஒரு உரையாடலாகப் பகிர்ந்து கொண்டேன்... குறளுக்கேற்ப பாடல் வரிகளைச் சொல்வது உங்கள் பொறுப்பு...! என்று இந்த இணைப்பில் சொல்லி இருந்தேன்... சரியான சில பாடல் வரிகளைச் சொன்னவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்... இதோ குறள்கள், விளக்கங்கள், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும்...! குறளுக்கேற்ப முக்கிய வரிகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன்... முழுப் பாடலை கேட்க கேட்பொலியை சொடுக்கவும்...

முந்தைய பகுதியை இங்கே சொடுக்கி வாசித்து விட்டும் தொடரலாம்...

அதிகாரம் 93 - கள்ளுண்ணாமை (926-930)

நான் சம்பாதித்த சொத்து, என்னவேணாலும் செய்வேன்... யாருக்காவது சிரமம் தர்றேனா...? குடிச்சிட்டு நான் பாட்டுக்கு செத்த பொணம் மாதிரி படுத்துக்கறேன்... நானா உளறினா தான் தண்ணி அடிச்சிருக்கேன்னு தெரியும்...

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்  
நஞ்சுண்பார் கள்ளுண் பவர் (926)  

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன - உனக்கும் தெரியாது...! இறந்த பின்னாலே நடப்பது என்ன - எனக்கும் புரியாது...! இருப்பது சில நாள் அனுபவிப்போமே - எதுதான் குறைந்து விடும்...? எதுதான் குறைந்து விடும்...? உஷ்.. ச்ச்ச்ச்ச்ச்... இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்...2© நவராத்திரி கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫


நீ உயிரோட இருந்தாலும் பொணம்தாண்டா... என்னது உளறலா...? க்கும்... இந்த நினைப்பு வேறயா...? யாருக்கும் தெரியாம நீ தண்ணி அடிச்சாலும், போதையில் இருக்கிற உன் கண்ணே காட்டிக் கொடுக்குது... உள்ளூரிலே எல்லோருக்கும் தெரிஞ்சி சந்தி சிரிக்குது...

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்  
கள்ளொற்றிக் கண்சாய் பவர் (927)  

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...2 உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது... உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... பாடும் பறவை... பாயும் மிருகம்...2 - இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை... ஆனால், அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை... // உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... சேவல் கூட தூங்கும் உலகைக் கூவி எழுப்பும் குரலாலே... ஏவல் செய்யும் காவல் காக்கும் - நாய்களும் தங்கள் குணத்தாலே... இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் - உறவை வளர்க்கும் காக்கைகளே...2 இனத்தை இனமே பகைப்பது எல்லாம் - மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...© அடிமைப்பெண் வாலி K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫

சிரிக்கட்டும்... சிரிக்கட்டும்... கவலையில்லை... நான் குடிக்கலேன்னு சொன்னா யாரும் நம்பவே மாற்றங்கப்பா... கொஞ்ச நேரத்திலே எனக்கே தெரியாம உண்மை தானா வெளியே வருது...! அதுக்கெல்லாம் நானா பொறுப்பு...?

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து  
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் (928)  

கடவுள் என் வாழ்வில் கடன்காரன்... கவலைகள் தீர்த்தால் கடன் தீரும்... ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா - நீ கூட குடிகாரன்...! போதை வந்த போது புத்தி இல்லையே... புத்தி வந்த போது நண்பர் இல்லையே... நாளை முதல் குடிக்க மாடேன்... சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும்... ஊத்திக்கிறேன் கொஞ்சம்... (3)© நீதி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫

இது வெறும் மனநோய் தான்டா... உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலே... கிணத்திலே விழுந்தவனைத் தேடிக் கண்டுபிடிக்க, ஒருத்தன் தீப்பந்தம் கொளுத்திட்டு குதிச்சானாம்... அப்படிதான் உன்னையெல்லாம் திருத்தவும் முடியாது... தெளிய வைக்கவும் முடியாது... நீயா திருந்தினாத்தான் உண்டு...!

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்  
குளித்தானைத் தீத்துரீஇ அற்று (929)  

மயக்கம் என்பது மாத்திரையா - மரணம் போகும் யாத்திரையா...? விளக்கு இருந்தும் இருட்டறையா - விடிந்த பின்னும் நித்திரையா...? வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து - வயதைத் தொலைத்து வாழுவதா...? இந்த உலகம் உன்னை அழைக்கிறது - அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது...! ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை... நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை... சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்... என் கண்ணோரம் இப்போது கண்ணீர்த் துளிகள்...© ராஜா சின்ன ரோஜா வைரமுத்து சந்திரபோஸ் 🎤 K.J.யேசுதாஸ் @ 1989 ⟫

போடாடேய்... போதையில் இல்லாத போதே, எத்தனை குடிகாரங்களோட அலப்பறையே பார்த்து இருக்கிறோம்... குடிச்சி சீரழிந்து, குடும்பம் சின்னாபின்னமாக்கிப் போன எத்தனையோ நண்பங்க வீட்டிக்கு போயிருக்கோம்... அங்கேயே நாங்கெல்லாம் ஃபுல்..! அப்பவே திருந்தலையாம்... இப்போ நீ வந்து சொன்னா மட்டும்...? அதெல்லாம் நினைக்க நேரமேயில்லே...!

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்  
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (930)  

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன் - ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்...2 அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா - இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா...2 மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்... என்னைப் பார்த்துக் கோப்பை தள்ளாடும்... காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்... தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்...2 இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி... என் கண்ணைக் கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி... சாராயத்தை ஊத்து... ஜன்னலைத்தான் சாத்து...2© சிந்து பைரவி வைரமுத்து இளையராஜா 🎤 K.J.யேசுதாஸ் @ 1985 ⟫

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நான் குறிப்பிட்ட பாடல் லிஸ்ட்டில் வருமா ஜி?!!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார் : இதோ நீங்கள் குறிப்பிட்ட பாடல் : 929 குறளுக்கு இந்த பாடலும் பொருத்தமாக இருக்கும்...

      ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு - சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு... மாண்டவனும் குடித்தவனும் ஒன்று - சிலர் மண்டையிலே ஏறலையே இன்று...

      கள்ளு குடிப்பவர்கள் நன்றி உண்போர் என்று வள்ளுவனார் சொல்லி வைத்தார் குறளிலே… சொன்னாலும் புரிவதில்லை... சொந்த புத்தி ஏதுமில்லை... பட்டால் தான் தெளிவு வரும் அறிவிலே... (2)

      நானும் குடித்திருக்கேன்... குடிப்போரை பார்த்திருக்கேன்... நல்ல புத்தி வருவதில்லை குடியிலே... ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே... ஊரில் நல்லவனாய் பேர் எடுத்துப்பாரு - உள்ளூர போதை வரும் புகழிலே... பாராட்டு கேட்கையிலே தலை வரைக்கும் ஏறும் - பண்பாடு போதை இல்லை குடியிலே... (2)

      நீக்கு
  2. எப்படி சார் இப்படி குறளோடு எழுத முடியாது வாழ்த்துகள் சார்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஜி
    குடியைப்பற்றிய குறளும், அதற்குறிய பாடல்களும் தேர்ந்தெடுத்தது அருமை.

    தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. இவ்வாறான தனபாலனின் பதிவுகளை நானே மின்நூலாக்கித் தருகிறேன்.

      நீக்கு
  5. பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து சொல்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை! எத்தனை பாடல்கள்! பெரும்பாலானவை பிடித்த பாடல்கள்!

    கள்ளுண்ணாமை - தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பான்மையான மாநில மக்கள் குடியில் வீழ்ந்து தான் கிடக்கிறார்கள்..... :( தயாரிப்பதை விடாமல் குடிக்காதே என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  6. கள் எனும் விடத்தின் கொடுமை..
    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
  7. தமிழகத்தின் இன்றைய சாபக்கேடு
    போதைதான் ஐயா
    பெண்கள் எல்லாம் கடப்பாறை ஏந்திவந்து கடையினை உடைக்க,
    ஆண்களோ வரிசையில் நிற்கிறார்கள், சரக்கு வாங்க
    நன்றி ஐயா
    நீண்ட நாட்களுக்குப் பிறகு த.ம வாக்கு எளிமையாய் விழுகிறது
    தம +1

    பதிலளிநீக்கு
  8. குறளும் சினிமா பாடலும் மிக அருமை.
    கள்ளுண்ணாமை அதிகாரம் நாள்தோறும் படிக்க வேண்டும் குடிமகன்.
    அதுவும் திண்டுக்கல் தனபாலன் பதிவை படிக்க வேண்டும்.
    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அருமை .சிறப்பான பதிவு தந்தமைக்கு வாழ்த்துகள் .நன்றி

    பதிலளிநீக்கு
  10. டி.டி ஜி!
    பொருத்தமான காலத்தை வென்ற பாடல்கள். துணைக்கு வள்ளுவனையும் வேறு கூட்டிவந்திருக்கிறீர்கள்!
    இன்றிரவு மீண்டும் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  11. மிகுதியாய் உழைத்துப் பொருத்தமான பாட்டுகளைத் தேடியெடுத்துச் சமூகத்துக்கு அவசியமான கருத்துகளைத் தந்து குறளையும் படிக்க வைத்துள்ளீர்கள் . பிரமாதமான பதிவு .

    பதிலளிநீக்கு
  12. அருமை..அருமை சிறப்பு சகோதரா
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  13. பொருத்தமான பாடல்கள், குறளுடன் அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  14. நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு....

    மிக்ஸிங்க் ஆகிடுச்சு, ஸாரி..... மிஸ்ஸாயிடுச்சு.

    பதிலளிநீக்கு
  15. வோட் காலையிலேயே போட்டு விட்டேன்..

    இது என்ன கொடுமை சகோ டிடி.. உங்கள் பக்கம் வருவோரை இப்பூடி வெருட்டக்கூடாது... முதல் படம் பார்க்கவே மனமெல்லாம் என்னவோ பண்ணுது.. சரி போனாப்போகுது என நெம்ம்ம்ம்ம்ம்பிப் படிச்சால்ல்ல்ல்.. டமார் என கழண்டு விழுவதைப் பார்க்க .. ஏதோ பெட்டிக்குள்ளிருந்து வழுக்கி விழுவதைப்போல இரு பீலிங்காகுதே கர்ர்ர்:) திடுக்கிட வைக்கிறீங்க கர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  16. இருப்பது சிலநாள்.. அனுபவிப்போமே.. என்னதான் குறைந்துவிடும்?... ஹா ஹா ஹா சரிதானே?:) கண்ணதாசன் அங்கிள் ஆச்சே விட்டுக்கொடுக்க மனம் வருகுதில்லை...

    ஒரு விதத்தில் உண்மைதானே.. அடுத்தவருக்கு துன்பம் கொடுக்காமலும், தப்பில்லாமலும்.. மனச்சாட்சிக்கு விரீதமில்லாமலும்.. வாழ்க்கையை ஹப்பியாக என்சோய்ய்ய்ய்ய் பண்ணுவதில் தப்பென்ன இருக்கு....

    கடசிவரை எதையுமே அனுபவிக்காமல்.. ஓடி ஓடி உழைச்சு.. பணத்தைப் பூட்டி வச்சிட்டு... வாழ்வை முடித்தோர் எததனை பேர் உண்டு.. அதனால் என்ன லாபம்?:)..

    சிந்து பைரவி... பார்க்காதோர் உண்டோ?.. 3,4 தடவைகள் பார்த்திட்டோம்ம்ம்ம்:)..

    மொத்தத்தில் குடி குடியைக் கெடுக்கும்... அதிலிருந்து மீள்வதற்கு இப்போ எத்தனையோ முறைகள் வைத்தியங்கள் வந்தபோதும்.. பல குடும்பங்கள் இன்னமும் அழிஞ்சுகொண்டிருக்கிறது.. முக்கியமாக கிராமப் புறங்களிலும்.. வறிய நிலைமையில் இருப்போரிடமும்...

    நல்ல பதிவு.. பகிர்வு.

    பதிலளிநீக்கு
  17. குறள்கள் உங்கள் நுனி நாக்கில்!

    திரைப் பாடல்கள் உங்கள் அடி நாக்கில்!!

    பதிலளிநீக்கு
  18. ஆகா! நான் என்னவோ, அந்த மொத்தப் பதிவின் கருத்துக்கும் பொருத்தமாய் ஒரு குறள் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அந்த ஒரே பதிவில், இத்தனை குறள்கள் இருக்கின்றன என்பது நீங்கள் விளக்கிய பிறகுதான் தெரிகிறது.

    புதுமையான முறையில் குறளார்வம் வளர்க்கும் தங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க ஐயா! வாழ்க!

    பதிலளிநீக்கு
  19. என் பதிவில் ஒரு நண்பர் புலால் உண்ணாமை பற்றி திருவள்ளுவரின் குறள்களை மேற்கோள் காட்டி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  20. அருமை டிடி.சிந்து பைரவி பாடல் ஒரு பிரபல பாடகர் பற்ற் நான் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறத்..

    பதிலளிநீக்கு
  21. அருமையான பாடல் தொகுப்பும், அதுக்கேற்ற குறளும் ரசித்தேன் டிடி.

    பதிலளிநீக்கு
  22. பாடல்களைத் தேர்ந்த்தெடுத்துத் தொகுத்ததும்
    குறளுடன் இணைத்ததும்,பதிவிட்ட நேர்த்தியும்
    மிக மிக அற்புதம்
    ஒரு பாடல் மட்டும் எனக்குப் புதியது
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  23. குறள், திரைப்பாடல் பொருத்தங்கள் சரிதான். தமிழ்நாட்டின் டாஸ்மாக் இதிகாசத்தைப்பற்றி தன்காலத்திலேயே ஞானக்கண்ணால் கண்டுவிட்டாரோ வள்ளுவர்? அது சரி, குடிப்பவர்களைக் குறளைப் படிக்கவைப்பதெப்படி?

    பதிலளிநீக்கு
  24. கள்ளுன்னாமை பற்றிய உங்கள் பதிவு ,மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் போதையை தருதே ஜி :)

    பதிலளிநீக்கு
  25. உங்கள் குறள் அறிவும் அபார திரைப்பாடல் நினைவாற்றலும் பிரமிக்க வைக்கின்றன. நீங்கள் ஆசிரியராய் இருக்க வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  26. குறள் + DD விளக்கம் + சினிமா பாடல் பின்னணி என்று கலந்து கட்டி அடிக்கிறீர்கள். மூன்று விஷயங்களையும் ஒரே புள்ளியில் இணைப்பது சாதாரண விஷயம் அல்ல. நிஜமாகவே ‘சரக்கு’ இருந்தால்தான் முடியும். போதைக்கு எதிரான புதுவித பிரசார உத்தி... கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  27. கவிஞர் கண்ணதாசன் இருக்கிறாரே - அவர்
    தேவாரம், திருவாசகம், புராணம், திருப்புகழ், திருக்குறள் என
    எல்லாவற்றுக்குள்ளும் நல்ல பொருளைப் பொறுக்கி
    தன் பாட்டினில் இறுக்கி விளையாடியவர் அன்று!
    ஆனால், இன்று தம்பி தனபாலன்
    திரைப்பாட்டுக்குப் பொருந்தி வரும் திருக்குறள்
    திருக்குறளுக்குப் பொருந்தி வரும் திரைப்பாடலென
    வலைப்பதிவுகளில் துள்ளி விளையாடுவதைக் கண்டு
    எல்லோரும் பாராட்டி நிற்கின்றனர் நன்றே!

    பதிலளிநீக்கு
  28. சினிமா பாட்டுக் பற்றி அதிகம் தரியாது. ஆனால் குறளை நீங்கள் ஒப்பிடும் போது ஆச்சரியமாக இருக்கிரது. என்னே அருமை.அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. போதையை விற்ற விற்பன்னர்கள் குடும்பமும் நாசமாக போகட்டும்...

    பதிலளிநீக்கு
  30. எப்படித்தான் உங்களால் திருக்குறளுக்குத் தகுந்த பாடல்களைக் கண்டு பிடிக்க முடிகிறதோ? பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  31. குடிப்பது தப்பில்லை - தினமும் 6 லீட்டர் தண்ணீர் குடியுங்கள் :) :)

    அழகான விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ டிடி.

    பதிலளிநீக்கு
  32. வழக்கம் போல எல்லாமே அருமை டிடி! அது சரி நம்ம "குடி"மக்கள் மனசுல இந்த "சுருதி" ஏறணுமே!!!

    அருமை டிடி!! உங்கள் உழைப்பு செம!

    கீதா: மேற் சொன்ன கருத்துடன்.... டிடி தண்ணித் தொட்டி தேடி வந்த பாடல் அன்று நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் !
    அதெப்படி டிடி சார் உங்களால் மட்டும் இப்படி எல்லாம் சிந்தித்து குறளையும் பாடலையும் ஒப்பிட முடிகிறது ! நமக்கெல்லாம் அந்தத் திறமை இல்லை இருந்தும் தங்கள் எழுத்துகளால் நாங்கள் மகிழ்வு கொள்கிறோம் தொடர்ந்து தாருங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் நன்றி

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  34. பதிவு பொட்டில் அடித்தார்போல் உள்ளது நண்பரே...
    மதுரையில் இருந்து,
    ராஜ்கண்ணன்...

    பதிலளிநீக்கு
  35. மணித நேயத்தை தொலைத்த ஆட்சியாளர்களின் மனம் இனியாவது? திருந்துமா?

    பதிலளிநீக்கு
  36. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// உங்கள் பாணியில் மறுபடியும் ஒரு பாடம். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. ரொம்ப நாட்களுக்குப் பின் உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன்.

    ரொம்ப அருமை. குறளோவியம் தனி புத்தகமாக வெளீயிடலாமே.

    சங்கை ஊதுவோம். விடியும் போது விடியட்டும். இல்லை. விரைவாக விடிந்தால் எவ்வளவோ வீடுகளில் அடுப்பெரியும். அடுத்த தலைமுறைக்கு நாம் உதாரணமாக இருக்க வேண்டாகா

    பதிலளிநீக்கு
  38. தமிழ் மணத்தில் வாக்களிக்க ஆசைதான். ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை. காரணம் தெரியவில்லை. புரியவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  39. திங்கள்கிழமைதிண்டுக்கல்வருகிறேன்சந்திக்கமுடியுமாஅலைபேசிஎணதாருங்களேன்-எனதுஎண்-9047896065

    பதிலளிநீக்கு
  40. போதை வந்த போது புத்தி இல்லையே,புத்தி வந்த போது நண்பன் இல்லையே/நல்ல நடிகர் சுருளிராஜன்.கூடா பழக்கமும் கேடில் விடியும்/

    பதிலளிநீக்கு
  41. வணக்கம்
    அண்ணா
    கருத்தோடு பாடலை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  42. பழைய திரைப்பாடல்களை ரசித்தாலும் பெரும்பாலும் மேலோட்டமாகவே ரசித்துவிட்டுப் போகிறோம்.. உள்ளே இவ்வளவு ஆழமான சிந்திக்கத் தூண்டும் வரிகள் இருப்பது இப்போதுதான் புலப்படுகிறது. திருக்குறளோடு பொருத்தி விளக்கும் விதம் பாராட்டுக்குரியது. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  43. அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
    சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
    தொடர்புகளுக்கு : editor@sigaram.co

    பதிலளிநீக்கு
  44. அருமையான விழிப்புணர்வு கதம்பம்

    பதிலளிநீக்கு
  45. என் பால் விழாது எதிர்ப்பால் உன் தகதை உணர்ந்தால்
    அது நன்னெறி. வாழ்க வளமுடன்.
    இது போல் நிறைய கவிதைகளை கனவுகளை காட்சி
    பொருளாக்கவும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.