புதன், 22 ஜூலை, 2015

உயிரே உயிரே...

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து... உயிர் தாங்கி நானிருப்பேன்... மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்... மலை மீது தீக்குளிப்பேன்... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே - அதற்காகவா பாடினேன்...? வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே - அதற்காகத்தான் வாடினேன்...! முதலா ? முடிவா ? அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...! உயிரே உயிரே... வந்து என்னோடு கலந்து விடு...© பம்பாய் வைரமுத்து ஹரிஹரன், K.S.சித்ரா @ 1995 ⟫


புதன், 15 ஜூலை, 2015

தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!


முந்தைய பதிவான →இதயமே இதயமே← பதிவில் கண் சிமிட்டும் கண்களும், கண்ணீர்த் துளிகளும் சரிவர வருமா...? என்கிற சின்ன சந்தேகம் இருந்தது... பாராட்டி பரவசப்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... எல்லாப் புகழும் வள்ளுவருக்கே...! அதன் அடுத்த பகுதி விரைவில்...

புதன், 8 ஜூலை, 2015

இதயமே இதயமே...

பனியாக உருகி நதியாக மாறி... அலைவீசி விளையாடி இருந்தேன்... தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து... உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்... இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்... (2) கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே... நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்... இதயமே இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே... இதயமே இதயமே... என் விரகம் என்னை வாட்டுதே... நிலவில்லாத நீல வானம் போலவே... உயிரில்லாமல் எனது காதல் ஆனதே...© இதயம் வாலி இளையராஜா S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫

புதன், 1 ஜூலை, 2015

கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி...


இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்... முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்... இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்... மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்… இயற்கை சிரிக்கும்... பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே... (படம் : கவலை இல்லாத மனிதன்) இருக்கும் வரை சந்தோசமா இருக்கணும்... சாகும் போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ன்னு பல பேரும் சொல்றாங்களே, இது சாத்தியமா...?