🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வாருங்கள்... வாழ்த்துவோம்...

வணக்கம் நண்பர்களே... கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அறிய "Google Forms" என்பதை வலைத்தளத்தில் பயன்படுத்தினோம்... மதிய உணவு ஏற்பாடு, நினைவுப் பரிசு என எங்களுக்குப் பலவிதங்களில் திட்டமிட்டு செயல்கள் புரிய உதவியது... வாங்க, அதை எவ்வாறு செய்வது என்பதை அறிவோம்...


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

முதலில் எனது Blogger Gmail a/c-ல் நுழைந்து கொள்கிறேன்... ← வலதுபுறம் மேலே இப்படி உள்ளதைச் சொடுக்கி, Drive என்பதைச் சொடுக்கினேன்... (நீங்கள் இங்கே சொடுக்கலாம் !) அடுத்த பக்கத்தில் (tab) https://drive.google.com/drive/my-drive என்று திறப்பதில் சொடுக்குகிறேன் : + NEWmoreGoogle FormsmoreBlank Form-யை தேர்வு செய்கிறேன்...

கீழுள்ளவற்றை ஒவ்வொன்றாகச் சொடுக்கி, மாற்றங்களைச் செய்கிறேன் :-

1) Untitled form → அழைப்பிதழ் தலைப்பு

2) Form Description → இடம், நாள் மற்றும் நேரம்

3) Untitled Question → வலைப்பதிவர் பெயர்... இதில் Required → on

4) மேலும் இதிலுள்ள Duplicate ஐகானைச் சொடுக்கி, கீழுள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பெயர் மாற்றி இணைக்கிறேன்...

5) வலைத்தள முகவரி / வசிக்கும் ஊர் * / தொடர்பு எண் * / முதல் நாள் வருகையா...? *

6) பல் சக்கரம் போல் மேலுள்ள Settings ஐகானைச் சொடுக்கி, GENERALEdit after submitTick மற்றும் PRESENTATIONShow link to submit another responseTick அடுத்து Confirmation message:தங்களின் வருகை உறுதி செய்யப்பட்டது...! நன்றி... என்று தட்டச்சு செய்து விடுகிறேன்...

7) கண் போல் மேலுள்ள Preview ஐகானைச் சொடுக்கி, அவ்வப்போது அழைப்பிதழ் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்...

8) கண் ஐகான் பக்கத்திலுள்ள Customize Theme-ஐகானைச் சொடுக்கி, Choose image-என்பதையும் சொடுக்கி, அழைப்பிதழுக்கேற்ப படத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்...

9) வாசகர்கள் இடும் தகவல்களைச் சேமிக்கச் சொடுக்குகிறேன் : RESPONSESCreate Spreadsheet-Icon → Select Create a new spreadsheetCREATE

10) முடிவாகச் சொடுக்குகிறேன் : SEND< >copy → எனது பதிவில் "paste" செய்கிறேன்...

11) அடடா...! பதிவை preview-வில் பார்த்தால் அகலம் அதிகமாக, நீளம் குறைவாக இருக்கிறதே...? No problem... "copy" செய்து வைத்துள்ள script-ல் எனது தளத்திற்கேற்ப மாற்றுகிறேன்...

12) முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன்...! வழக்கமாகப் பதிவு எழுதும் போது Compose view பக்கத்தில் இருப்போம்... இடதுபுறம் மேலே முதல் Icon <> ▿ என்றிருக்கும்... அது Compose view மற்றும் HTML view பக்கங்களுக்கு மாறுவதற்கான Icon... அதைச் சொடுக்கி HTML view என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்... பதிவில் எந்த இடத்தில் "paste" செய்கிறோமோ, அந்த இடத்தில் தோன்றும்...! இப்போ சற்று முன் உருவாக்கினதை, இந்தப் பத்தி முடிந்த பின் "paste" செய்து விட்டேன்... அது இதோ :-



அன்றாடம் வாழ்வில் நடக்கும் சிறு சிறு நகைச்சுவைகளைத் தனது "நகை"க்கும் எழுத்துகளின் மூலம் சுவாரஸ்யமாகச் சொல்வதில் கெட்டிக்காரர் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.விசுawesome அவர்கள்... அவர்களின் தளம் https://www.visuawesome.com Dr. G. விஸ்வநாதன் (Founder VIT) அவர்கள் மூலம் புத்தக வெளியீடும், வூரீஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் திரு. அருளப்பன் அவர்களின் தலைமையில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீடு விழாவிற்கு, கலிபோர்னியாவிலிருந்து வேலூர் வரும் இனிய நண்பரின் சார்பில், வலைப்பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்... புத்தக வெளியீட்டு விழா முடிந்ததும் பதிவர் சந்திப்பும் நடக்கப் போகிறது... சிறப்புப் பேச்சாளராக நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள்... வருகை தரும் அன்பர்கள் மேலே உள்ள படிவத்தில் நிரப்பி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்... தங்களின் கருத்து என்ன...? ஓ...ஓ... வழக்கமாக எனது பதிவின் முடிவில் எழுத்தின் சகவாசம்...! அதனால்...

விசு Awesomeமின் சகவாசத்தை விழாவில் வாழ்த்தி, கருத்துகளுடன் நட்பையும் பகிர்ந்து விரிவாக்குவோம்... நன்றி நண்பர்களே...

dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. டெக்னிகல் பதிவு! என் உடம்புக்கு ஆகாது!!!

    பதிலளிநீக்கு
  2. திரு விசுawesome அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் அவர்களே, நண்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒரே பதிவில் இரு செய்திகள். வெகு நாட்களுக்குப் பிறகு வலையில் வித்தியாசமான முறையில் ஒரு படிவத்தை இடுவது பற்றிய பதிவும், நண்பரின் விழாவிற்கான அழைப்பும். தங்களது உத்தி அருமை. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் பதிவு...
    மிகுந்த பயனுடையது ..
    வாழ்த்துகள்
    விழா சிறக்கவும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான தொழில்நுட்ப பதிவு. மிக உபயோகமான பதிவு. நண்பர் விசுவாசமின் புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்.

    த ம 6

    பதிலளிநீக்கு
  7. தொழில்நுட்ப தகவலுக்கு நன்றி! திரு விசுawesome அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. சகவாசம் சுக வாசமாய் மணம் பரப்ப வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள பதிவு.. நினைவில் நிற்கும்படியான கைவண்ணம்!..

    விழா சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. விழாவிற்கு எனது வாழ்த்துக்கள். GoogleForms ஐ விளக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள தகவல். விசு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    பயனுள்ள தொழில்நுட்பப் பதிவு.
    மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பை நினைவுபடுத்தி, திருவாளர் விசுAwesomeமின் சகவாசம் புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருப்பதைப் பதிவர்களுக்கு அறியத்தந்தது கண்டு மகிழ்ச்சி.
    விழா சிறப்புடன் அமையவும் வெற்றிபெறவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.
    த.ம.7.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பதிவு சகோ. திருமணம் போன்ற விழாக்களுக்குக் கூட உபயோகப்படுத்திக் கொள்ளலாம் போல. நன்றி சகோ :)

    பதிலளிநீக்கு
  14. கூகிளிலேயே பல மணி நேரம் கிடந்தாலும், சில விஷயங்கள் உங்களைப் போன்றவர்கள் சொன்னால்தான் தெரிய வருகிறது.
    ’GOOGLE FORMS” - சம்பந்தப்பட்ட மேல் அதிக விவரங்கள் தந்தமைக்கு நன்றி. விசுAwesomeமின் சகவாசம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள்.
    த.ம.10

    பதிலளிநீக்கு
  15. ஒரே பதிவில் இரு செய்திகள் தந்தவிதம் மிக அருமை... நண்பர் விசுவிற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஆர்கணைஸ் பண்ணி விழா ஏற்பாட்டை நீங்கள் சிறப்பாக செய்வதாக அறிந்தேன். உங்களுக்கு உங்கள் ஒத்துழைப்புக்கும் பாராட்டுக்கள் விசு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. டெக்னிக்கல் என்றாலே..எனக்கு சங்கடம்தான்.. புத்தகவிழா..அம்புட்டு தூரத்தில் நடப்பதால் என்னால் வர நிணைத்தாலும் முடியாது. அதனால் விழா சிறக்க எனது வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள பதிவு.

    பதிவர் விசு அவர்களின் நூல் வெளியீட்டுவிழாவும் பதிவர் சந்திப்பும் சிறப்பான முறையில் அமைய எனது வாழ்த்துகள் டி டி சார்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  18. புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி,.... விசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. புத்தகவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். பயனுள்ள தொழில்நுட்பபதிவினையும் அருமையாக தந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. நண்பரின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. தாங்கள் சொல்லிக் கொடுக்கும் படி செய்தாலும், கொஞ்சம் சிரமப்படவேண்டியிருக்கு. சொல்பதில் இல்லை. செய்வதில். விழா சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அய்யா வணக்கம். இதைத்தான் ஒரு கல்லில் ரெண்டு மாங்கா என்பதோ அல்லது, “ஆடு மேய்ச்ச மாதிரியும் அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும்“னு சொல்லுவாங்களோ? நா படிவத்தை நிரப்பிட்டேம்பா..

    பதிலளிநீக்கு
  23. திரு விசுawesome அவர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. திரு.விசுவாசம் அவர்களின் புத்தக வெளியீடு பற்றி வேறொரு பதிவில் படித்த நினைவு. புத்தக வெளீஇடு பதிவர் சந்திப்பு ஒரு கல்லில் இரு மாங்காய்....!

    பதிலளிநீக்கு
  25. மிகவும் பயனுள்ள பதிவு என பிறரின் பின்னூட்டங்கள் மூலம் அறிந்து கொண்டேன். வழக்கம்போல எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. :) என்பது வேறு விஷயம். வயசாச்சோல்யோ ! :)

    பதிலளிநீக்கு
  26. தொலில் நுட்ப பதிவு நல்லா இருக்கு . இன்னும் 2, 3 முறை படித்துத்தான் முயற்சிக்க வேண்டும்.....

    விசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒரே கல்லுல இரண்டு மாங்காய்...சூப்பர் சகோ..தொடர்ந்து அசத்துங்கள்.....தம +1

    பதிலளிநீக்கு
  27. ஆஹா! இப்படித்தான் ஃபார்ம் உருவாக்குவதா....அருமையான டெக்னிகல் பதிவு கூடவே நம் நண்பரின் விழா அழைப்பும்.....
    டெக்னாலஜி குறித்துக்கொண்டோம். முயற்சிக்கின்றோம்.

    எங்கள் வருகையைப் பதிந்துவிட்டோம்....

    பதிலளிநீக்கு
  28. வரவேற்புக்குரிய செய்தி!

    நுட்பமான அறிவின் அதிக தட்ப வெப்பம்
    என்னை சுட்டெரிக்கின்றது நண்பரே!
    (ஈரமான விறகு பற்றிக் கொள்ள நாள் ஆகும்)
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  29. நண்பர் விசு அவர்களின் புத்தக வெளியீடு சிறக்க எமது வாழ்த்துகள்.
    பயனுள்ள பதிவு நண்பரே முயன்று பார்க்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம்
    அண்ணா.

    நல்ல தொழில்நூட்ப பதிவு இதன் படி செய்து பார்க்கிறோம் நண்பர் விசுவாவின் புத்தக வெயியீடு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள். த.ம 24

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  31. எங்களூரில் நடக்கும் விழா. திரு விசு அவர்களும் அழைத்திருந்தார். கண்டிப்பாக பங்கேற்கிறேன். நேரில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  32. நண்பர் திரு விசு. அவர்களின் நூல் வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  33. தில்லை அகத்து கீதா அவர்கள் மூலம் அறிந்தேன்.... புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  34. மிகக் கடினமாகத் தோன்றும் செய்திகளையும் மிக எளிமையாக எடுத்துச் சொல்லி non technical people ஐ முயற்சி செய்ய வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    நண்பரது புத்தக வெளியீட்டு விழாவிற்கும் பதிவர் சந்திப்பிற்கும் வாழ்த்துக்கள்

    God Bless You

    பதிலளிநீக்கு
  35. ஹை!! என்னை கூட நல்ல டெக் பதிவரா மாத்திடுவீங்க போலவே!! சூப்பர் அண்ணா:)விசு அண்ணாவிற்கும் என் வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
  36. விழா சிறக்க எங்களின் நல்வாழ்த்துக்கள்.
    புத்தக வெளியீட்டிற்கு இனிய வாழ்த்து

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துகள்.
    புத்தக வெளியீட்டிற்கும் இனிய வாழ்த்து

    பதிலளிநீக்கு
  38. அருமையான விளக்கம் ,எளிமையாக புரிந்துகொள்ள முடிகின்றது, வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  39. வலைப்பூக்களில் படிவத்தைக் கையாள்வது எப்படி என விளக்கியதோடு "விசுAwesomeமின் சகவாசம் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்" பற்றியும் சுவையுடன் அழகாகப் பதிவு செய்தமைக்குப் பாராட்டுகள்!

    விசுAwesomeமின் சகவாசம் புத்தக வெளியீட்டு விழா சிறப்புற இடம்பெற எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  40. சொல்லுதல் , செய்தல்,தனபாலனுக்கு எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் "கோ"வால் செயல்.

    நண்பரின் புத்தக வெளியீடு சிறப்பெய்த வாழ்த்துக்கள்.

    பதிவர் கூடுகை , நினைத்தாலே இனிக்கிறது.

    விசு அவர்களுக்கு வாழ்த்துக்களும் வருகைதரும் அத்துணை பெரியவர்களுக்குஎன் வணக்கங்களும்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  41. வாழ்த்துக்கள். உங்களின் பணி பயனும் பெருமையும் உடைத்து

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.