🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



காதல் தானும் கடலினும் பெரிதே...!

அழகிய திமிருடன் இருவிழி புயல் என்னைத் தாக்குதே... ஒஹ்ஹ் ஹோ ..வ்ஹொஅ whoa whoa... ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே... ஓ ஏய்ஏய்ஏய்... உடைபட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே...ஏஏ நெரிசலின் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே !

© ரன் விவேகா வித்யாசாகர் 🎤 வித்யாசாகர், சாதனா சர்கம், ஜாக் ஸ்மெல்லி @ 2002 ⟫

என்னடா ஆச்சி...? புயல் தாக்கி பல வருசமாச்சே...! ஹா... ஹா...

இல்லே, இது காதல் குரு அடிக்கடி பாடுற பாட்டு....!


என்னது காதல் குருவா...? கேள்விப்பட்டதே இல்லை... இதென்ன யோகா குரு, ஆன்மீக குரு மாதிரி காதல் குரு...?

அவர் வந்து நம்ம தெருவிலே இருக்கிற 28 வயது தம்பி...! நம்ம தெருவிலே இருக்கிற இளவட்ட பசங்க எல்லாம், அவர்கிட்டே தான் காதல் ஐடியாக்களைக் கேட்பாங்க... 28 வயசிலே 7 பேரை காதலிச்சிருக்கிறார்ன்னா பார்த்துக்கோயேன்...! அதனாலே தான் அவர் குரு ஸ்தானத்திற்கு உயர்ந்திட்டார்...! எப்பேர்ப்பட்ட வளர்ச்சி பார்த்தாயா...?

28 வயசிலே 7 காதல்... இதிலே அவர்க்கு காதல் குருன்னு பட்டம் வேற...! அடப்பாவமே...! வேலைக்குப் போறாரா...? இல்லை இதே வேலையா...? ஆமா இந்த வயசுலே இந்த மாதிரி பசங்களோடயெல்லாம் எதுக்காகப் பழக்கம்...?


© வசூல் ராஜா MBBS வைரமுத்து பரத்வாஜ் 🎤 கமல்ஹாசன், குழுவினர் @ 2004 ⟫

காதலை அனுபவித்தவன் அதிர்ஷ்டசாலி என்பதை விட அறிவாளி... அடிபட்டுத் தெளிந்தவன் என்பதை விடப் புரிந்தவன் புத்திசாலி...! ஆழ்வார்பேட்டை ஆளுடா, அறிவுரையே கேளுடா... ஒரே காதல் ஊரில் இல்லையடா... காதல் போயின் சாதலா...? இன்னோர் காதல் இல்லையா...? தாவணி போனால் சல்வார் உள்ளதடா...! காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா... இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா... ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா...நர்ஸு பொண்ணைக் காதலி... கட்சி தாவல் இங்கே தர்மமடா... ஹோய்... ஹோய்... பார்த்தாயா அவரோட தர்மம்...! எனக்கு போர்யடிச்சிச்சின்னா இந்த காதல் வசூல் ராஜாவோட ஒரு அரை மணிநேரம் பேசிக்கிட்டே இருப்பேன்... உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பிச்சிடும்...! ஒரே ஜாலி தான் போ...!



© பாத காணிக்கை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா, J.P.சந்திரபாபு, L.R.ஈஸ்வரி @ 1962 ⟫

ஆஹா...! காதல் என்பது எது வரை...? கல்யாண காலம் வரும் வரை...! கல்யாணம் என்பது எதுவரை...? கழுத்தினில் தாலி விழும் வரை... பெண்ணுக்கு இளமை எது வரை...? பிள்ளைகள் பிறந்து வரும் வரை...← இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அனுபவ பாடல்...! ஆனா, "காதல் தானும் கடலினும் பெரிதே...! பெரிய செல்வம் - குழந்தை செல்வம்"ன்னு நற்றிணை-166 சொல்லுது...!

இப்படித்தானப்பா பலவற்றையும் அந்த காதல் குருவிடம் சொல்லுவேன்... இப்போ அவர் ஞாநி ஆகிட்டார்...! ஏன்னா சமீபத்தில் கல்யாணம் ஆச்சி...! குரு இப்போ எட்டாவதா ஒருத்தரிடம் மாட்டி சீடன் ஆயிட்டார்...! நல்லது...! இப்போ விசயத்திற்கு வர்றேன்... காதல்ங்கிறது எந்த வயசிலே வந்தா நல்லது...? எந்த வயசு வரைக்கும் இருந்தா நல்லது...?

காதல்ங்கிறது பொழுது போக்கில்லே... காதல்ங்கிறது வாழ்க்கை... வாழ்க்கைய முடிச்சிக்கச் சொல்றதும் காதலில்லே...! அது கோழைத்தனம்... அப்புறம் என்ன கேட்டே, எந்த வயசிலே காதல்...? எந்த வயசிலும் காதல் இருக்கும்... அது இளமையிலே தொடங்கி இறுதி வரைக்கும் இருக்கும்... ஆனா பல காதலா இருக்காது... ஒரே காதலா இருக்கும்... அது தான் காதல்...!

சரி தான்... அறியாத தெரியாத புரியாத வயதில் ஏற்படும் அந்த கற்பனை வாழ்வில் 100-க்கு 99 பேர்கள் கடந்திருப்பார்கள் என்று சொல்கிறேன்...

தன் துணை உயிரோடு இருந்தாலும்... இல்லாவிட்டாலும் என்பதை விடத் தான் உயிரோடு இருக்கும் வரை தன் துணையோடு மனதில் வாழும் உண்மைக் காதல்கள் உள்ளன இவ்வுலகில்...! எடுத்துக்காட்டாக ஒரு மேல்நாட்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வைச் சொல்கிறேன் :- வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50)
80 வயதான ஒரு முதியவர் ஒருவர், தன் கைவிரலில் அடிபட்டிருந்த காயத்திற்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்... அப்போது காலை மணி 8:30... அவர் வாங்கியிருந்த டோக்கன் எண்ணைப் பார்த்தால், அவரை மருத்துவர் பார்ப்பதற்குக் காலை 9:30 மணி ஆகும் போலத் தோன்றியது... நேரே மருத்துவரிடம் சென்றார்... எனக்குக் காலை 9 மணிக்கு ஒரு முக்கியமான அப்பாயின்மென்ட் இருக்கிறது... அதனால் உடனே எனக்கு மருத்துவம் பார்க்கும்படி கேட்டார்... அவரின் வயோகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மருத்துவர், உடனே காயத்திற்குக் கட்டுப் போடத் தொடங்கினார்... "அப்படியென்ன முக்கியமான அப்பாயின்மென்ட்...?" கட்டைப் போட்டுக் கொண்டே கேட்டார்... "வீட்டில் என் மனைவி கடந்த 5 ஆண்டுகளாக மூளை நோயால் அவதிப் படுகிறார்... நாள்தோறும் காலை 9 மணிக்கு அவளுடன் உணவு அருந்துவது தான் எனக்கு முக்கியமான அப்பாயின்மென்ட்...! இன்னும் சொல்லப் போனால், அவளது மூளை நோய் காரணமாக எல்லாமே மறந்து விட்டது...! நான் யார் என்பது கூட மறந்து விட்டது..." என்றார் முதியவர்... "நீங்கள் யார் என்பதே உங்கள் மனைவிற்கு மறந்து போய் விட்டது என்றால், எதற்காக அவர்களுடன் காலை உணவு...?" கேட்டார் மருத்துவர்... "என் மனைவிக்கு வேண்டுமானாலும் என்னைத் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் எனக்குத் தெரியுமே அவள் என் மனைவி என்று...!" அமைதியான பதிலைக் கேட்டு கண் கலங்கினார் மருத்துவர்...



© திருடாதே கண்ணதாசன் S.M.சுப்பையா நாயுடு 🎤 P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1961 ⟫

இளமையிலே காதல் வரும் - எது வரையில் கூட வரும்...?2 முழுமை பெற்ற காதல் எல்லாம் - முதுமை வரை ஓடி வரும்...2

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா.
    காதல் பற்றி அற்புதமாக பாடல் மூலம் விளக்கம் அளித்துள்ளீர்கள் அத்தோடு நல்ல கதை ஒன்றையும் சொல்லி எங்களையும் பிரமிக்க வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. காதலித்துக் கல்யாணம் ஆன பின்பும் காதலிக்கும் ( ஒருவரை ஒருவர்தான்!) கணவன் மனைவியின் காதல் ரெண்டு பேரும் வேலை செய்யும் (வெவ்வேற ஆஃபீஸில்) போது வந்து இப்போதும் தொடர்கிறது(டச் வுட்!) அப்போ.... சரியான நேரத்துலே வந்துருச்சுன்னு வச்சுக்கலாம்:-)))

    பதிலளிநீக்கு
  3. கல்யாணத்திற்குப் பிறகு வருவதுதான் காதல்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள வலைச்சித்தரே!

    காதல் விளையாட்டில் ‘ரன்’ சதத்தைத் தாண்டி விட்டீர்கள். வசூல்ராஜா வேறு அருமையாக எம்.பி. எம்.பிக் குதிக்கிறார்.

    காதல்ங்கிறது பொழுது போக்கில்ல...வாழ்க்கை! காதல் போயின் சாதல் கோழைத்தனம்... வாழ்க்கை வாழ்வதற்கே... அருமையாக சொன்னீர்கள.
    ‘கையில் என்ன கொண்டு வந்தோம்... கொண்டு செல்ல...’

    ‘எதைக் கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு..?.’ கீதை சொல்கிறது.

    முதியவர் மனைவியை நேசிப்பது மருத்துவரைப்போல படிப்பவரையும் அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. “என் மனைவிக்கு வேண்டுமானால் என்னைத் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் எனக்குத் தெரியுமே அவள் என் மனைவி என்று...” அருமை.

    புதுமலர் அல்ல; காய்ந்த
    புற்கட்டே அவள் உடம்பு!
    சதிராடும் நடையாள் அல்லள்
    தள்ளாடி விழும் மூதாட்டி
    மதியல்ல முகம் அவட்கு
    வறள்நிலம்! குழிகள் கண்கள்!
    எது எனக்கின்பம் நல்கும்?
    ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

    -குடும்பவிளக்கில் பாரதிதாசன் முதியோர் காதல்பற்றிஅழகாகச் சொல்வது இதைப் படிக்கின்ற பொழுது நினைவுற்கு வந்தது.

    நன்றி.
    த.ம. 5.

    பதிலளிநீக்கு
  5. உண்மைக் கதை மனதைத் தொட்டது.பகிர்ந்தமைக்கு நன்றி! அதற்கு பொருத்தமான திரைப்பட பாடலான ‘முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்.’ என்ற பாடலை எடுத்து காட்டியிருப்பதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. முதியவரின் அன்பு - நெகிழ்ச்சி!..

    மற்றபடி - இனிமையான பாடல் வரிகளுடன் அழகிய பதிவு!..

    பதிலளிநீக்கு
  7. 'இருக்கின்றாள் என்பதொன்றே ' என்ற பாரதிதாசனின் 'முதுமைக் காதல்' வரிகளை ஞாபகப்படுத்திய பதிவு, நன்றி.

    பதிலளிநீக்கு
  8. காதல் என்பது என்று ஆரம்பித்து ஒரு பாரா சொல்லி யிருக்கின்றீர்கள் பாருங்கள் அது அம்சம்......அருமை...

    முதியபருவத்திலும் தொடரும் காதல் தான் உண்மையான காதல்! கதை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மனதை நெகிழ்த்திவிட்டது.

    காதலுக்காக வாழும் மனிதர்களும் இருக்கின்றார்கள்தான்.....வேறு எவரையும் மணக்காமல்....உண்மையான காதல்!

    பதிலளிநீக்கு
  9. காதலுக்குகாக சொன்ன கதை ரெம்ப மனதை நெகிழச்செய்துவிட்டது. நல்லபாடல் தெரிவுகள், பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  10. முதியவரின் அன்பு பிரமிக்க வைத்தது.பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  11. காதல் கதை...அன்யோன்யம்,அன்பு,காதல்,தாய்மையுணர்வு என காதலின் முழு இடம் அது. பாடல்களும், பதிவும் அருமை, அருமை சகோ. தம +1

    பதிலளிநீக்கு
  12. தூய்மையான அன்பு தானே காதல்... அது வாழ்நாள் இறுதிவரை இருந்தால் தான் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. காதல் என்பது மனதைப் பொறுத்தது. உண்மைதான் உண்மைக்காதல் ஆயுள் வரைக்கும் அல்ல அதற்குப் பின்னும் கூட வரும். நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ :)

    பதிலளிநீக்கு
  14. எப்படி தான் இப்படி எல்லா கட்டத்தின் பாடல்களையும் மனப்பாடமா, ரசனையா போட்டுதாகுறீன்களோ!!! சூப்பர் அண்ணா!

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு.

    முதுமைக்காதல் பற்றி எழுதியுள்ளது ஏற்கனவே கேள்விப்பட்டதோர் கதைதான் என்றாலும் மிகவும் சிந்திக்க வைப்பது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. தங்கள் பதிவினை எங்கள் பதிவுகள்போலவே இப்போது மாற்றியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    முன்பெல்லாம், ஏதோவொரு நான்கு வரிகள் மட்டும் முதலில் காட்சியளிக்கும். விரிவாக மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும் என்று சொல்வீர்கள். பிறகு ஆங்காங்கே பல இடங்களில் ‘க்ளிக்’கச் சொல்லியிருப்பீர்கள்.

    பின்னூட்டம் இடும் இடத்தினைக் கண்டுபிடிப்பதும் சற்றே கஷ்டமாக இருந்தது. அதுபோல பிறரின் பின்னூட்டங்களைப்பார்க்கவும் மீண்டும் மற்றொரு இடத்தில் ’க்ளிக்’க வேண்டிய தொல்லை இருந்தது.

    அவையெல்லாம் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டி இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

    இப்போது எல்லாம் சரியாக சுலபமாக உள்ளது. இதுவே தொடரட்டும் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன், DD Sir. - VGK

    பதிலளிநீக்கு
  17. நூற்றுக்கு நூறு இது உண்மை. எல்லாவயதையும், தூண்டுகோல்களையும் தாண்டி வரும் காதல் உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்புமற்றது. நீங்கள் சொல்லியிருந்த கதையை நேரில் கண்டவன். 90 வயதை அடைந்த முதியவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை மருத்துவ மனைக்கு கொண்டுவந்தவர்கள் அவசரத்தில் அவரது மனைவியை மறந்து விட்டனர். அந்த அம்மையார் வீட்டிலேயே கவலையுடன் இருந்தார். மருத்துவமனையில் கண்விழித்த பெரியவர் பெரிதாய் சத்தம் போட்டு கலாட்டா செய்தார். யாருக்கும் அவரைக் கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை. சமயோசிதமாக ஒருவர் பெரியவரின் மனைவியை உடனே அழைத்துவரும்படி சொல்ல அப்படியே செய்தனர்.
    தன் மனைவியைப் பார்த்த பெரியவர் கரகரவென கண்களில் நீர் சுரக்க அவரது கன்னங்களை தடவியபடியே ' நான் உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு பாத்தியா..' என்று கண்ணீருக்கிடையே சிரிப்புடன் கேட்டது எல்லோரையும் கலங்கடித்தது.

    இருவரும் கண்களில் சுரக்கும் கண்ணீருடன் ஒருவரது கன்னத்தை ஒருவர் தடவியபடியே இருந்தது உண்மையிலேயே மனதைப் பிசையச் செய்ததோடுமட்டுமல்லது புல்லரிக்கவும் வைத்தது. எத்துனை உண்மையான காதல்.

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  18. என் திருமணமே காதல் திருமணம் தான்!

    பதிலளிநீக்கு
  19. அன்பின் தனபாலனுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் போது நான் “காதல் என் கோணத்தில் “ என்று எழுதிய பதிவு நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.in/2011/02/blog-post_24.html
    அந்த வயோதிகக் காதலையும் “ இன்னும் ஒரு காதல் கதை” என்று ஃபெப்ருவரி 2012-ல் பகிர்ந்திருக்கிறேன் . காதலுக்கு எங்கள் வாழ்க்கையே ஒரு உதாரணம் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. அருமை நண்பரே உண்மையான காதலைப்பற்றிய உயர்வான பதிவு
    என் மனைவிக்கு வேண்டுமானால் என்னைத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எனக்குத் தெரியுமே என் மனைவி என்று

    எத்தனை உயர்வான காதல் அந்தக் கிழவருக்கு ஸூப்பர்
    அருமையான பாடல் தொகுப்பு வாழ்க காதல் முதுமை வரை.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரர்
    உண்மைக் காதலின் உயிர் வடிவம் தங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. அசத்தல்..

    பதிலளிநீக்கு
  22. அருமையான காதல்பற்றிய பதிவு
    தளரந்திடும் முதுமை வரினும் தளர்வுராக் காதல், கவிதை அல்லவா.

    பதிலளிநீக்கு
  23. முதியவரின் அன்பு நெகிழ வைத்தது ஐயா
    தம 18

    பதிலளிநீக்கு
  24. நல்ல வளர்ச்சி 28 வயதில் ஏழு காதல் இன்னும்ஒரு அரை சேர்த்தால் ஏழரை ஆகியிருக்கும்.... இவர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான காதல் கதை. பாடல்களும் டிடி.
    நன்று...நன்று...

    பதிலளிநீக்கு
  26. காதலுக்கு வயதில்லை.
    40+க்குப் பிறகு காதல் கூடினால் வாழ்வு வளமாகும்.

    பதிலளிநீக்கு
  27. முன் பின் தெரியாத ஆண் /பெண் இடையே பற்றிக் கொள்வது மட்டுமே காதல் ,தாலி கட்டிய பின் அன்புடன் வாழ்பவர்களை, அன்னியோன்யமான தம்பதிகள் என்று வேண்டுமானால் கூறலாம் :)

    பதிலளிநீக்கு
  28. காதல் பற்றி சொல்லப் போனால்
    28 அகவையில 7 காதல் பண்ணுவதை விட
    80 அகவையில கட்டிய மனைவியைக் காதலிப்பது மேல்
    மேலும், சொல்லப் போனால்
    கண்ட கண்ட ஆளைக் காதலிப்பதை விட
    கட்டின ஆளைக் காதலிப்பது மேல்

    பதிலளிநீக்கு
  29. காதலைப் பற்றி சொன்ன பதிவும் கதையும் சுவாரஸ்யம்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  30. காதலும் கற்றுமற என்று யாரும் சொல்லி இருக்கானோ ஹா ஹா ஹா பாடல் வரிகளுடன் அருமையான பகிர்வு !
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. ஆஹா..........

    முதியோர் காதல் இனிமைதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  32. காதலைப் பற்றிய அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  33. மனசாட்சி.. மனசாட்சின்னு உங்கள் பதிவுகளில் படிப்பது கொஞ்சம் டல் அடிக்கும். இந்த பதிவுல ஆரம்பமே தூள் (பாடல் ஹம்மிங்.. ப்ப்பாஆ).

    பதிலளிநீக்கு
  34. காதலில் முதியோரின் கதை அருமைதான்!

    பதிலளிநீக்கு
  35. ஆரம்ப அடிகளைப் பார்த்தபோது பதிவு வேறு விதமாகச் செல்லும் என்று நினைத்தேன். ஆனால் நச்சென்று மனதில் பதியுமளவு உணர்வுபூர்வமாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நண்பர் சொன்னது. காதல்என்பது எதுவரை..காதலன் பர்சில் பணம் தீரும்வரை...

    பதிலளிநீக்கு
  37. அருமையான பதிவு கண்கலங்கி விட்டது. அருமையான காதல் கதை.

    பதிலளிநீக்கு
  38. சூப்பர். முதல் தடவ வாசிச்சதுமே புரிஞ்சிடுச்சு அண்ணா

    பதிலளிநீக்கு
  39. முதியவரின் காதல் ஆச்சரியப்படுத்தியது...அருமையான பதிவு...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  40. முதியவர் கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். உண்மையான காதல் முதுமை வரை தொடரக்கூடியது. அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  41. இதற்கு பெயர் தான் காதல், அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  42. "நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
    நேசம் நிறம் மாறுமா...!
    கால காலங்கள் போனாலும் என்ன...
    காதல் தடம் மாறுமா!"
    என்ற வரிகளை முணுமுணுக்க வைத்தது 'டச்சிங்'-கான கதை...அருமை !

    பதிலளிநீக்கு
  43. அந்தக் காலத்து காதல் போல் இந்தக் காலத்து காதல் நிலைத்து நிற்பதில்லை...

    பதிலளிநீக்கு
  44. தம +
    அருமை அண்ணா தொடருங்கள்

    அரிதானவர் அந்தக் கணவர்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.