அடப்போங்கப்பா...! நீங்களும் உங்க பதிவும்...!


செல்லம்... அண்ணன்களையும் கூப்பிடு... இதோ 100 ரூபாய் நோட்டு... யாருக்குப் பிடிக்கும்...? எல்லோருக்கும் கை தூக்கிட்டீங்க... ம்... இப்போ ரூபாய் நோட்டை நல்லா மடிச்சி கசக்கிட்டேன்... இப்போ பிடிக்குமா...? மறுபடியும் கை தூக்கிட்டீங்க... சரி இப்போ ரூபாய் நோட்டை நல்லா மிதிச்சி அழுக்காக்கிட்டேன்...! இப்போ பிடிக்குமா...?

என்னப்பா... கை தூக்குற பயிற்சியா சொல்லிக் கொடுக்குறீங்க...? நோட்டைக் கசக்கினாலும், மிதிச்சி அழுக்கானாலும் அதோட மதிப்பு குறையுமா...? அது சுக்குநூறாகி கிழிச்சாத் தான் குறையும்... முதல்லே காலை கழுவிட்டு வாங்க...


இதோ வந்துட்டேன்... நீ சொன்னதும் சரி தான்... என்ன சொல்ல வந்தேன்னா, இந்த 100 ரூபா நோட்டைப் போல உங்க திறமையை உணரணும்... உங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம், தோல்வி வந்தாலும்... அதாவது நோட்டைக் கசக்கினாலும், மிதித்தாலும்... உங்ககிட்டே வளர்ற முயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை, அறிவு, துணிவு, பொறுமை, இன்னும் பலதும் இருக்கும் வரை... அதாவது மனது சுக்குநூறாகி கிழியும் வரை... உங்களை யாராலேயும் மதிப்பிழக்கவே செய்ய முடியாது... சரியா...? இப்போ சொல்லப் போறதும் உங்க எல்லோருக்கும் உதவும்... நேர்முகத் தேர்வுக்குப் போகும் மூத்தவனே, ஒழுங்கா கவனி...!

01 முதல்லே அவங்க சொல்றதை முழுசாக் கேட்டு புரிஞ்சிக்கோ... 02 அப்புறம் பொறுமையா பதில் சொல்லு... 03 பதில் தெரிஞ்சா சொல்லு... கற்பனையை வீட்டிலே வந்து சொல்லு...! 04 அதிகப்பிரசங்கித்தனமா கேள்வி எல்லாம் கேட்டுராதே.. 05 அவங்க கேள்வியிலே அடுத்த கேள்வி என்னாவா இருக்கும்ன்னு யோசி... 06 பயப்படாம எதுக்கும் முன்னேற்பாடோட இரு...

07 உன் தவற்றையோ, குறையையோ சொன்னாலும் கோபம் கோவிந்தா...! ஒத்துழைப்பு கொடு... 08 அதாவது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ற மாதிரி உன்னை மாத்திக்கோ...! 09 முக்கியமா வாக்குவாதம் செய்யாம, கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு... 10 ஒவ்வொருத்தருக்கும் பொறுமையா பதில் சொல்றது தான், நீ கொடுக்கிற பெரிய மரியாதை... 11 ஏன்னா அந்தப் பணிவே உன்னைப் பற்றி அவங்க மனதில் நல்லபடியா பதிஞ்சிடும், முக்கியம்...

12 அப்புறம் Written Test இருந்தா, நீயா எதுவும் எழுதாதே... தெரியலேன்னா "தெரியலே" அவ்வளவு தான்... யோசிக்காம அடுத்த கேள்விக்கு போ... 13 அப்பா blogலே கதை சொல்ற மாதிரி கதை உடாதே...! க்ம்... க்ம்... எந்தப் பதிலுக்கும் சான்று வேண்டும்...! 14 சும்மா பிரிச்சி மேயணும்... அதுக்காக மனசிலே நினைக்கிறதையெல்லாம் எழுதாம உண்மையை எழுது...! 15 அவங்ககிட்டே பேசினதும், எழுதினதும் ஒண்ணா இருக்கோணும்... 16 இங்கே கவனிக்கிற மாதிரி நடிக்கிறதெல்லாம் அங்கே முடியாது... எப்போதும் கவனமா இருக்கணும்... 17 முழிக்காதே... தெய்வமகன் சிவாஜி மாதிரி நெளியாதே...! கண்ணைப் பார்த்துப் பதில் சொன்னாலே பாதி வெற்றி தான்... 18 எல்லாத்தையும் விட பேசுற போதும், எழுதுற போதும் அதிசக்தி வாய்ந்த கடவுளை நினை...! கடவுள்ன்னு சொல்றது நேரத்தை...! அவ்வளவு தான்...! அந்த ஜெராக்சை எடுத்து கொடும்மா... பசங்களா... படிங்க...


To Become an outstanding Auditor
Remember GANAPATHY for
1. Big Ear - To Listen more
2. Long Nose - To Smell more
3. Big Head - To Think more
4. Small Eyes - To concentrate more
5. Closed Mouth - To talk less

MORE AMICABLE BUT VERY DISCIPLINED


01 Ability to Listen ஓஹோ, அப்ப்ப்பா...! நீங்க பேசின பதினெட்டும் இது தானா...? பதிவு எழுதுறதுக்கு நாங்க தான் இன்னைக்குக் கிடைச்சோமா...? அடப்போங்கப்பா...! நீங்களும் உங்க பதிவும்...! எங்களுக்குப் படிக்கிறதுக்கு நிறைய இருக்கு... நாங்க இரண்டு பேரும் எஸ்கேப்ப்ப்ப்ப்...!

அன்னையால் அன்னன்னைக்குப் படிக்காத அண்ணன்களை விட்டுங்கப்பா போகட்டும்... கொடுங்க, மிச்சத்தை நான் படிக்கிறேன்... தெரிஞ்சிக்கிறேன்...

என் ராசாத்தி... என்னைப் போலவே இருக்கே... ISO-விலே Internal Auditing-ன்னு இருக்கு... அதாவது அக தணிக்கை...! அதிலே Auditor's Skills-யை Interview-போறவங்களுக்குச் சொல்ற மாதிரி வித்தியாசமா... ம்ம்... சரி படி...

01 Ability to Listen
02 Be patient
03 Be understanding - (Listening to Facts, NOT ideas)
04 Question without offending
05 Remain within the audit scope - (Prepare next question mentally)
06 Preparedness - (Anticipate what is coming)
07 Co-operating - (Findings, NOT Faults)
08 Adapt to different situations
09 Discuss without arguing - (Analysing what is being said)
10 Respect and Evaluating the auditee
11 Communicating
12 Documenting the observations - (Taking Notes, NOT depending on memory)
13 Looking for objective evidence - (See for Objective NOT assumption)
14 Be analytical - (Write facts or findings, NOT opinions)
15 Reporting within the audit results - (Summarize what has been said)
16 Be alert - Always attentive, NOT faking attention
17 Observe body language, facial expressions & eye contact
18 Be time conscious - (Avoid Long and Lengthy Discussions)

அப்பா... அப்பா... மார்க்கெட் போயிட்டு அம்மா வந்துட்டாங்க போல...சத்தம் கேட்குது... ஓடுங்க... அம்மாவோட IN-டர்-NAL ஆ-DI-டிங் வேற மாதிரி...!

சரி சரி... உன் புத்தகத்தை எடு... சொல்லித் தரேன்... யம்மாடி...!

க்கும்... மாட்டினீங்களா எங்கிட்டே...! ரொம்ப நாளா Science-லே எனக்குப் புரியாததைச் சொல்லித் தர்றேன்னு டிமிக்கி கொடுத்திட்டு இருந்தீங்க... உங்களுக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்... அதனாலே எங்க ஆசிரியர்கிட்டேயே கேட்டுப் புரிஞ்சிகிட்டேன்... இப்போ நான் சொல்லித் தர்றேன்...! அப்புறம் ஒரு வருத்தம்... ஏம்ப்பா... ரூபா நோட்டிலே தேசப் பிதாவோட படம் போட்டிருப்பதே, அவருக்கு மதிப்புக் கொடுக்கத்தான்... அதைப் போய்க் கசக்கினா, கால்லே போட்டு மிதிச்சா... அவருக்கு நீங்க செலுத்தும் மரியாதை இவ்வளவு தானா...? தப்புக்கு வழிகாட்டியாக அப்பா இருக்கலாமா...? வேறு ஒரு உதாரணத்தை யோசிங்க அப்பா... இனி எங்கேயும் இப்படியெல்லாம் ISO வகுப்பிலே செய்யாதீங்க... சரியா...?

ISO... அட... அவ்வளவு தானா...! அறிய → இங்கேசொடுக்குவதற்கு முன்... இப்பதிவைப் பற்றிய தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அவசரப் படாம, நிதானமா யோசிச்சு அழகாச் செஞ்சா, இண்டர்வியூ என்ன? ஒரு பதிவைக் கூட உருப்படியாச் செய்யலாம்னு இப்ப தெரிஞ்சுக் கிட்டேன்..(அந்த கணபதி மேட்டர் தவிர - அதுமாதிரி ஆயிரம் அர்த்தம் சொல்லலாம், கிரிக்கெட் கணபதி தெரியுமில்ல?) அதி காலையில் ஒரு நல்ல பதிவு பாக்கத் தந்ததற்கு த.ம.1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அண்ணா.

  என்ன விளக்கம்.... சிறுவர் முதல் வளர்ந்தவர்கள் யாவரும் அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி.. அதில் படத்துக்கு கொடுத்த விளக்கம் நன்று த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. ஐய்யா .. திண்டுகல் பெரியவரே ...
  அளவுக்கும் மீறி கேள்வி கேட்டார்கள் என்று 12ம் வகுப்பு முடியும் முன் 14 பள்ளி கூடம் மாறியவன் நான். இங்கே வந்தால் அதே அறிவுரையா ? வேண்டாமையா .. வேண்டாம் ...

  பதிலளிநீக்கு
 4. பாடம் சொல்லிக் கொடுக்க, ரூபாய் நோட்டைக் கசக்கப்போய் இங்கேயே இன்டர்னல் ஆடிட் தொடங்கி விட்டதாக்கும்!

  :)))))))))))))

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி வித்தியாசமா எழுத முடியுது. அசத்தல் DD

  பதிலளிநீக்கு
 6. எச்சூழலையும் எதிர்கொள்ளும் துணிவும், மனப்பக்குவமும் இப்பதிவைப் படித்தபின் வரும் என்பதில் ஐயமில்லை. எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்தலின் பயனை உங்களது பதிவு முன்வைக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள அய்யா,

  நேர்முகத் தேர்விற்கு நல்ல பயிற்சி கொடுத்தீர்கள். பதினெட்டுப் படி ஏறி... உயர்வதற்கு வழி காட்டினீர்கள்.
  நன்றி.
  த.ம.7

  பதிலளிநீக்கு
 8. பதிவை அழகாக மனதில் பதியும் வண்ணம் கொடுப்பதே உங்களின் வெற்றி!
  நகைச்சுவை உணர்வோடு முடித்தது அதைவிட அருமை!!!
  வாழ்த்துகள் சார்..!

  பதிலளிநீக்கு
 9. ஆளுமைத் திறனை வளர்க்க உதவும் பதிவு.அருமை.

  பதிலளிநீக்கு
 10. வித்தியாசமான, உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. அட! "ரூபாய் நோட்டு" க்குள்ள இத்தனை "நோட்ஸா" ஒளிந்திருக்கின்றது. சரிதான் அதுல காந்தித் தாத்தாவை போட்டது சரியாத்தான் போட்டுருக்காங்க....அருமை டிடி. அது போல கணபதி சொல்லும் அறிவுரைகள் சூப்பர்! கடைசில பையன் வைச்சான் பாருங்க ஒரு பஞ்ச்!!! அவர்கிட்ட சொல்லுங்க "மகனே! நான் அந்த ரூபா நோட்டைக் கசக்கிச் சொல்லல......அத மதிக்கத்தான் கத்துக் கொடுக்கறேன் அந்த காந்திய....முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் அப்படினு " அவரது பஞ்சும் அருமைதாங்க....

  பதிலளிநீக்கு
 12. Dr B. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் கூறுவது போல எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றது
  பதிவு.. ISO சிந்தனைக்கு விருந்து!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 13. இதோ பூங்கொத்து. பிடியுங்கள். எதற்க்கென்று உங்களுக்கே தெரியும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... திருக்குறளும், திரைப்பட பாடல்களும் இல்லாமல் ஒரு பகிர்வு... புரிகிறது ஐயா...

   18 குறள்களை மேற்கோளாக சொல்லலாம் என்று நினைத்த போது, உங்கள் நினைவு வந்தது உண்மை...!

   நீக்கு
 14. எத்தனை தூற்றினாலும் அடிப்படை மனிதப்பண்புஅவரிடமிருக்கும்/

  பதிலளிநீக்கு
 15. DD Sir,

  100 ரூபாய் தத்துவம் சூப்பர் ! மனிதனின் விடாமுயற்சி நல்ல பயனைத்தரும்!
  அனைவரும் படிக்க வேண்டிய 100 ரூபாய் தத்துவம் !

  மதுரை சித்தையன் சிவக்குமார்

  பதிலளிநீக்கு
 16. வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.
  த.ம.11

  பதிலளிநீக்கு
 17. முன்னொரு காலத்துல.. நானும் சொன்னது..அட போங்கப்பா.....நீங்களும் உங்க பதிவுகளும்....??????

  பதிலளிநீக்கு
 18. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள அழகான கைக்கொள்ளவேண்டிய கருத்துகள். நேர்மறை சிந்தனை என்பதை உங்கள் பதிவில்தான் காணலாம். திருக்குறள் இல்லாத பதிவு. ஆடிட்டிங்க் பத்தி அக்குவேறு ஆணி வேறாகச் சொல்கின்றீர்களே. அவ்வளவு தெரியுமா. :)

  கடைசியில் பொண்ணு கொடுத்த பஞ்ச் பார்த்து அப்பாவுக்கு ஏத்த பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன் :)

  பதிலளிநீக்கு
 19. தேசப்பிதா இருக்கட்டுமுங்க.

  முதல்லே வீட்டுப் பிதா மாதாவை மதிக்கிரதுக்கு
  அவுக பேசுவத காது கொடுத்து பொறுமையா கேட்பதுக்கு
  இந்தக் கால புள்ளைங்களுக்கு சொல்லி கொடுங்க..  ஒன்னு தெரியுதுங்க... நாம எப்படி நம்ம அப்பா அம்மா கிட்டே
  மருவாதையா இருந்தோமோ அதுலே பாதி கூட
  இந்த காலத்து ஐ போன் ஐ பாட் புள்ளைங்க
  கொடுப்பதில்ல..
  அவுங்க புள்ளைங்க அவுங்கள வுட இன்னும் ஒரு படி
  கூடவே இருக்காங்க...

  யாரைக் குத்தம் சொல்லுறது ?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 20. நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கு .. பயனுள்ள தகவல் நன்றி

  பதிலளிநீக்கு
 21. அட, பிள்ளையாரை வைத்து ஒரு அனுபவப்பாடமா!! அப்புறம் அந்த 100 ரூபாய் நோட்டு தத்துவம். அசத்திட்டீங்க டிடி.
  எனக்கு மிகவும் உபயோகமான பதிவுதான்.

  பதிலளிநீக்கு
 22. வேலை தேடுவோர் மட்டும் அல்ல அவசியம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய பண்புகள். பதிவிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 23. மிக அழகான முறையில் பகிர்ந்து இருக்கீங்க.
  யாரு இப்ப எல்லாம் காது கொடுத்து கேட்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 24. வேலைதேடுவோர் மட்டுமின்றி அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியப்பண்புகள். அருமை அய்யா.
  தம16

  பதிலளிநீக்கு
 25. எனக்கு எப்பவும் ஒன்று தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் நேர்மறையான எண்ணங்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும் என்று, அருமையான விளக்கம். நானும் என் மாணவர்களுக்கு சொல்லித்தர உதவும். காப்பி அடித்துதான். நன்றி.

  பதிலளிநீக்கு
 26. ஐ எஸ் ஓ என்பதைப் பற்றிய தெரியாமல் இங்கே நாங்க ஐ எஸ் ஓ பெற்ற நிறுவனங்கள் என்று சொல்லிக் கொள்வது உங்களுக்குத் தெரிந்தது தானே?

  பதிலளிநீக்கு
 27. அடேங்கப்பா பதிவில் ISI(O) தரம் தெரிகிறது.

  எளிமைப்படுத்தி சொல்லியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. பொன் மொழிகளான பதிவு டிடி
  அருமை
  மெச்சுகிறேன் உங்கள் திறமைக்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 29. ஒரு நூறுரூபோய் நோட்டைக் கசக்கி எறிந்து மிதித்து இத்தனை நல்ல விஷயங்களாகச் சொல்ல உங்களால்தான் முடிகிறது. எத்தனை விசேஷமான அறிவு மொழிகள். கணேஷ் ஜி மூலம் எவ்வளவு அறிந்து கொண்ட கருத்துரைகள். எளிதில் புரிந்து கொண்டேன். நன்றி டிடி .அன்புடன்

  பதிலளிநீக்கு
 30. அருமை ஜி அசத்திட்டீங்க....
  18 படிகள் ஏறி வந்தது போல உணர்வு வந்தது
  சிறுவர்கள் முதல் அனைவரும் அறிய வேண்டிய விடயங்கள் இனி எந்த பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியது பொருத்தமே...
  இனி தேர்வுக்கு போனாலும் நானும் தேறி விடுவேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது நண்பரே... ஸூப்பர்.
  சரி தொடர்பு போய்க்கொண்டே.................... இருக்கிறதே.....
  குறள், பாடல்கள் இல்லாத பதிவு.
  இடையே சிறிது முதுகுவலி வந்தாலும் பொருட்படுத்தாமல் படித்து விட்டேன் வாழ்த்துகளுடன் – கில்லர்ஜி.
  தமிழ் மணம் ஐந்தாவது.

  பதிலளிநீக்கு
 31. அருமையான பகிர்வு அண்ணா...
  ஐ.எஸ்.ஓ. பற்றி ஒரு நல்ல பகிர்வு...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. இதே வழிகளைப்பின்பற்றிதான் இதுநாள்வரை என்னுடைய அனைத்து இன்டர்வியுக்களிலும் வெற்றி பெற்றிருக்கிறேன் அண்ணா . ஆனால் இதில் சில விஷயங்களைக்கடைபிடிக்காமல் இருந்துவிட்டேன் . நல்லவேளை ஞாபகப்படுத்தினிர்கள்

  பதிலளிநீக்கு
 33. நேர்முக தேர்வுக்கான நல்ல அறிவுரைகள் , திரைப்பட பாடல்கள் இல்லாமல் .😆

  பதிலளிநீக்கு
 34. அருமையான நேர்முகப்பயிற்ச்சி வழிகாட்டிப்பகிர்வு.

  பதிலளிநீக்கு
 35. நான் பதிவுலகிற்கு வந்தபின் இந்த டைடில் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது

  பதிலளிநீக்கு
 36. வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும்
  + சிந்தனையை உரமிட்டு வளர்க்கும் பகிர்வு
  தம 21

  பதிலளிநீக்கு
 37. படிக்காமல்..பாசாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு என்று நிணைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 38. நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்த பதிவு! ரூபாய் நோட்டு உதாரணம் கூறியதோடு அதை கசக்கி மிதிப்பது தவறு என்றும் ஐ.ஏஸ்.ஓக்களுக்கு குட்டு வைத்ததும் சிறப்பு! சிறந்ததொரு பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 39. பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனைத் தான் தரிசிக்கப்போவோம்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 40. பயனுள்ள பதிவு அனைவரும் படித்தல் அவசியம்...நானும் நிறைய கற்றுக்கொண்டேன் இப்பதிவில் நன்றி

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 41. நேர்முகத்தேர்வுகளுக்கு மட்டுமல்ல. ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து அளவளாவும்போதும் பின்பற்ற வேண்டிய பல அற்புதமான வழிகளைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் தனபாலன். அப்புறம் அந்த ரூபாய் நோட்டை மிதித்த விஷயத்தில் நானும் உங்கள் மகள் கட்சி. எவ்வளவு அழகாக நாசுக்காக சொல்லவேண்டியதை சொல்லிவிட்டிருக்கிறார். அருமை.

  பதிலளிநீக்கு
 42. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் அறிய வேண்டிய செய்திதான் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 43. தன்னம்பிக்கை தரும் அருமையான பதிவு.

  எனது வலைப்பூவுக்கு வந்து காலிபிளவர்மிளகு பொரியல் செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 44. சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால்..... பிரச்சனையே இல்லையே.........

  பதிலளிநீக்கு
 45. வாழ்க்கையை விட்டு கல்வி அகன்று போய்க்கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற பாடங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவைத் தரும்.
  தொடருங்கள் டி.டி சார்.

  த ம +1

  பதிலளிநீக்கு
 46. அய்யா மன்னிக்கவும்.
  தமிழ்மண வாக்குப் பட்டை எங்கே எனத் தெரியவில்லை.
  வாக்களிக்கலாம் என்கிற நம்பிக்கையில் த ம + 1 என்று சொல்லிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் சகோதரரே!

  எப்போதும் போல் வித்தியாசமான சிந்தனை அலசல்களுடன் ௬டிய, நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் பதிவு.

  நேர்முக தேர்வுக்கு செல்பவர்களுக்கு,ஏன் அனைவருக்குமே உபயோகமாகும்படியான அறிவுரைகள் அருமை.அறிவுரைகள் இல்லை! இல்லை!ஒவ்வொன்றும் பொன்மொழிகள். பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை.

  கடைசியில் அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள் என்பதை தங்கள் வாரிசுகள் நினைவு படுத்துகிறார்களே.! வாழ்த்துக்கள்..

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 48. நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி விட்ட பதிவு.

  பதிலளிநீக்கு

 49. பணத்தில் தொடங்கிய பதிவு பணத்தைப் போலப் பெறுமதியானது. அனைத்தும் அறிய வேண்டிய விடயங்களில்

  பதிலளிநீக்கு
 50. ISO பற்றிய எளிமையான விளக்கங்களை மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  ரூபாய் நோட்டு விஷயத்தில் நிறையவே யோசிக்க வைத்துள்ளீர்கள்.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.