எது அறிவு...? (பகுதி 2)
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு... தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு... அது போல் - அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே2 எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே... அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே - இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே... ⟪ © தாய்க்குப் பின் தாரம் ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫ அனைவருக்கும் உழவர் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்...
முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் சொடுக்குக : இங்கே அப்பதிவில் :- அப்பா, பாடெல்லாம் அப்புறம்... இவங்க என் பள்ளித் தோழிகள், தோழர்கள்... எங்க பள்ளி ஆண்டு விழாவில் அறிவு என்னும் தலைப்பில் பேசணும்... அறிவெனும் தலைப்பில் தானே...? ம்... (தெய்வப் புலவரே, உதவி செய்...! ஆனா, க்கும்... பாட்டில்லாமல் - சிரமம் தான்... முடிவில் பார்ப்போம்...) ஒவ்வொருத்தருக்கும் எழுதிக் கொடுத்திட்டேன்... வாங்க குழந்தைகளே... மேடைப் பயம் போக இங்கே ஒரு முறை பேசுங்க...! முயற்சியும் பயிற்சியும் என்றும் வெற்றி தரும்... வாசகர்களுக்காக : ()←உள்ளே மனதின் சிந்தனை...
இனியார் வருவார் மருந்தார் தருவார் - பிழைப்பார் யார் யாரோ...? உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் - துணை யார் வருவாரோ...? நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் - நாளைக்கு யார் யாரோ...? பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் - முடிந்தார் யார் யாரோ...?2 நான் யார், நான் யார் நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? தாய் யார் மகன் யார் தெரியார்... தந்தை என்பார், அவர் யார் யார்...? நான் யார் நான் யார் நீ யார்...? ⟪ © குடியிருந்த கோவில் ✍ புலமைப்பித்தன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫ மருத்துவர் : கல்வி அறிவில்லாதவர்களால் முடியாததை, பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிந்து செயல்படுவது தான் எங்கள் அறிவு...!
(தொழிலாகச் செய்யாமல், ஒரு சேவையாகச் செய்யும் அனைத்து தெய்வங்களுக்கும் வணக்கங்கள்...)
மனிதன் மனிதனாக இல்லை, ஏன்..? - சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லை...! இதயம் இதயமாக இல்லை, ஏன்..? - இருப்பதை வெளியே உரைப்பதில்லை...! அறிவு பெரியதாக இருப்பதில்லை, ஏன்..? - அடுத்தவன் வாழ்வதைப் பொறுப்பதில்லை...! வாழ்வு சுலபமானதில்லை, ஏன்..? - சொன்னதைச் செய்தவன் எவனுமில்லை...! துணிந்து செல் ஹ... தொடர்ந்து செல் ஹாஹ... தோல்வி கிடையாது தம்பி... ⟪ © பால் குடம் ✍ வாலி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫ விளையாட்டு வீரர் : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் நடப்பதும், பயப்பட வேண்டியதற்குப் பயந்து, அதை விட்டு விலகி நடப்பது தான் எங்கள் அறிவு...!
(சாதிக்கும் வரை மற்றவர்களின் விமர்சனங்களை அறிவதை, கேட்பதை, பேசுவதைத் தவிர்த்து, செய்த சாதனைகளை மறந்து, இன்றைக்குத் தான் என் முதல் ஆட்டம் என்று ஒவ்வொரு முறையும் நினைத்தால்... நீங்க ஒரு சச்சின்...!)
காவலரே வேசமிட்டால் - கள்வர்களும் வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே...! காத்திருந்து கள்வனுக்குக் கைவிலங்கு பூட்டிவிடும் - கண்ணுக்குப் போடாத சத்தியமே...! போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்...! புரியும் அப்போது மெய்யான கோலம்...! கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும் - நீ காணும் தோற்றம் - உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு... உள்ளம் தெளிவாகும் - அடையாளம் காட்டும் - பொய்யே சொல்லாதது... ⟪ © நினைத்ததை முடிப்பவன் ✍ அ.மருதகாசி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫ காவலர் : என்னென்ன நடந்திருக்கும், எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்பதை அறிந்து காக்கும் திறனால், நாங்கள் நடுங்கும் படியான எந்தத் துன்பமும் ஏற்படாதது தான் எங்கள் அறிவு...
(சாதாரண மக்களையும் நடுங்க வைக்காமல் நண்பனாக இருக்க வேண்டுகிறேன்...)
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...? ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்2 உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...! விவசாயி... விவசாயி... ⟪ © விவசாயி ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫ விவசாயி : எந்த நன்மையையும் இல்லாத-செல்வங்கள் மட்டுமல்ல, எதனை உடையவரானாலும், அனைத்து நன்மையையும் விதைத்து, அறுவடை செய்யும் நன்மை உடையது தான் எங்கள் அறிவு...!
(அனைத்து உயிர்களுமே உங்களுக்கு அடுத்து தான்... வணங்குகிறேன்...)
குழந்தைகளே... படிப்பு மூலம் நமக்குக் கிடைப்பது படிப்பறிவு, அதாவது வெறும் தகவல்கள் என்பது முதற்படி... நமது அகத்துக்குள்ளே வளர்க்கும் பட்டறிவு என்பது இரண்டாம் படி... தெளிவாகப் பெற வேண்டிய ஞானம் என்பது மூன்றாம் படி... படிப்பு என்பது படிக்கும் காலத்திற்கு மட்டும்... வாழ்க்கை முழுவதும் கூட வர வேண்டியது கல்வி... மனிதனை அதாவது நம்மை முதலில் படிப்பது தான் உண்மையான கல்வி... அறிந்து தெரிந்து புரிந்த கல்வி மூலம் பெறும் அனுபவங்கள் தான் நல்ல பாடம்... நம்ம ஐயன் மனிதனுக்கு வேண்டிய அறிவை மூன்றே சீர்களில்... எது அறிவு...? :-
நன்றின்பால் உய்ப்ப தறிவு திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்2 கண் போன போக்கிலே கால் போகலாமா...? கால் போன போக்கிலே மனம் போகலாமா...? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...?⟪ © பணம் படைத்தவன் ✍ வாலி ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫
மனிதன் : அலை பாயும் மனத்தை, அது செல்லும் இடங்களிலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி / விலகி, நன்மையில் மட்டுமே செல்ல விடுவது தான் அறிவு ஆகும்...
அப்பா... இவர்களுக்கும் ஒவ்வொரு குறளைச் சொல்லி இருக்கலாமே...!
அட செல்லமே...! குறளின் குரல் தான் அனைவருக்கும்...! அதிகாரம் 43 - அறிவு உடைமை... மனிதனுக்கு என்று நீ முடிவாகப் பேசி அசத்திடு...! சரியா...! குழந்தைகளே நீங்களும் குறளையும் சேர்த்துப் பேசி விடுங்கள்... நன்றி...
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு... பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு... ஓர் நாளும் உனக்குக் கூடாது பயமே... ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே... மூட எண்ணத்தைத் தீவைத்து மூட்டு... அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு... (படம் : மகாநதி)
வாசகர்களுக்குப் பாடல்கள் வேண்டாமா...? ஒவ்வொரு குறளுக்கு முன்னுள்ள இதயத்தை சொடுக்கவும்... சிந்தனைக்கேற்ப + சிறிது குறளுக்கேற்ப பாடல் வரிகள் உள்ளதா...? கேட்கும் போது, குறளுக்கு அடுத்து வரும் "அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே" பாடல் படத்தின் பெயர் : அறிவாளி
நண்பர்களே... ஆசிரியப் பெருமக்களே... தங்களின் குழந்தை படிக்கும் பள்ளியில் இதை நல்ல முறையில் நீங்களும் செயல்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி... என்னை எழுத வைத்த குழந்தைகள் அனைவருக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் சொடுக்குக : இங்கே அப்பதிவில் :- அப்பா, பாடெல்லாம் அப்புறம்... இவங்க என் பள்ளித் தோழிகள், தோழர்கள்... எங்க பள்ளி ஆண்டு விழாவில் அறிவு என்னும் தலைப்பில் பேசணும்... அறிவெனும் தலைப்பில் தானே...? ம்... (தெய்வப் புலவரே, உதவி செய்...! ஆனா, க்கும்... பாட்டில்லாமல் - சிரமம் தான்... முடிவில் பார்ப்போம்...) ஒவ்வொருத்தருக்கும் எழுதிக் கொடுத்திட்டேன்... வாங்க குழந்தைகளே... மேடைப் பயம் போக இங்கே ஒரு முறை பேசுங்க...! முயற்சியும் பயிற்சியும் என்றும் வெற்றி தரும்... வாசகர்களுக்காக : ()←உள்ளே மனதின் சிந்தனை...
இனியார் வருவார் மருந்தார் தருவார் - பிழைப்பார் யார் யாரோ...? உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் - துணை யார் வருவாரோ...? நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் - நாளைக்கு யார் யாரோ...? பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் - முடிந்தார் யார் யாரோ...?2 நான் யார், நான் யார் நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? தாய் யார் மகன் யார் தெரியார்... தந்தை என்பார், அவர் யார் யார்...? நான் யார் நான் யார் நீ யார்...? ⟪ © குடியிருந்த கோவில் ✍ புலமைப்பித்தன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫
(தொழிலாகச் செய்யாமல், ஒரு சேவையாகச் செய்யும் அனைத்து தெய்வங்களுக்கும் வணக்கங்கள்...)
427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அஃதறி கல்லா தவர்
மனிதன் மனிதனாக இல்லை, ஏன்..? - சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லை...! இதயம் இதயமாக இல்லை, ஏன்..? - இருப்பதை வெளியே உரைப்பதில்லை...! அறிவு பெரியதாக இருப்பதில்லை, ஏன்..? - அடுத்தவன் வாழ்வதைப் பொறுப்பதில்லை...! வாழ்வு சுலபமானதில்லை, ஏன்..? - சொன்னதைச் செய்தவன் எவனுமில்லை...! துணிந்து செல் ஹ... தொடர்ந்து செல் ஹாஹ... தோல்வி கிடையாது தம்பி... ⟪ © பால் குடம் ✍ வாலி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫
(சாதிக்கும் வரை மற்றவர்களின் விமர்சனங்களை அறிவதை, கேட்பதை, பேசுவதைத் தவிர்த்து, செய்த சாதனைகளை மறந்து, இன்றைக்குத் தான் என் முதல் ஆட்டம் என்று ஒவ்வொரு முறையும் நினைத்தால்... நீங்க ஒரு சச்சின்...!)
428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
அஞ்சல் அறிவார் தொழில்
காவலரே வேசமிட்டால் - கள்வர்களும் வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே...! காத்திருந்து கள்வனுக்குக் கைவிலங்கு பூட்டிவிடும் - கண்ணுக்குப் போடாத சத்தியமே...! போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்...! புரியும் அப்போது மெய்யான கோலம்...! கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும் - நீ காணும் தோற்றம் - உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு... உள்ளம் தெளிவாகும் - அடையாளம் காட்டும் - பொய்யே சொல்லாதது... ⟪ © நினைத்ததை முடிப்பவன் ✍ அ.மருதகாசி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫
(சாதாரண மக்களையும் நடுங்க வைக்காமல் நண்பனாக இருக்க வேண்டுகிறேன்...)
429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
அதிர வருவதோர் நோய்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...? ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்2 உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...! விவசாயி... விவசாயி... ⟪ © விவசாயி ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫
(அனைத்து உயிர்களுமே உங்களுக்கு அடுத்து தான்... வணங்குகிறேன்...)
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் (430)
என்னுடைய ரேனும் இலர் (430)
குழந்தைகளே... படிப்பு மூலம் நமக்குக் கிடைப்பது படிப்பறிவு, அதாவது வெறும் தகவல்கள் என்பது முதற்படி... நமது அகத்துக்குள்ளே வளர்க்கும் பட்டறிவு என்பது இரண்டாம் படி... தெளிவாகப் பெற வேண்டிய ஞானம் என்பது மூன்றாம் படி... படிப்பு என்பது படிக்கும் காலத்திற்கு மட்டும்... வாழ்க்கை முழுவதும் கூட வர வேண்டியது கல்வி... மனிதனை அதாவது நம்மை முதலில் படிப்பது தான் உண்மையான கல்வி... அறிந்து தெரிந்து புரிந்த கல்வி மூலம் பெறும் அனுபவங்கள் தான் நல்ல பாடம்... நம்ம ஐயன் மனிதனுக்கு வேண்டிய அறிவை மூன்றே சீர்களில்... எது அறிவு...? :-
மனிதன் : அலை பாயும் மனத்தை, அது செல்லும் இடங்களிலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி / விலகி, நன்மையில் மட்டுமே செல்ல விடுவது தான் அறிவு ஆகும்...
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
நன்றின்பால் உய்ப்ப தறிவு
அப்பா... இவர்களுக்கும் ஒவ்வொரு குறளைச் சொல்லி இருக்கலாமே...!
அட செல்லமே...! குறளின் குரல் தான் அனைவருக்கும்...! அதிகாரம் 43 - அறிவு உடைமை... மனிதனுக்கு என்று நீ முடிவாகப் பேசி அசத்திடு...! சரியா...! குழந்தைகளே நீங்களும் குறளையும் சேர்த்துப் பேசி விடுங்கள்... நன்றி...
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு... பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு... ஓர் நாளும் உனக்குக் கூடாது பயமே... ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே... மூட எண்ணத்தைத் தீவைத்து மூட்டு... அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு... (படம் : மகாநதி)
வாசகர்களுக்குப் பாடல்கள் வேண்டாமா...? ஒவ்வொரு குறளுக்கு முன்னுள்ள இதயத்தை சொடுக்கவும்... சிந்தனைக்கேற்ப + சிறிது குறளுக்கேற்ப பாடல் வரிகள் உள்ளதா...? கேட்கும் போது, குறளுக்கு அடுத்து வரும் "அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே" பாடல் படத்தின் பெயர் : அறிவாளி
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
எந்தப் பதிவிற்கு எங்கு பின்னூட்டம் போடுவது என்பது தெரியாமல் ஒரே குழப்பமாக இருக்கிறதே?
பதிலளிநீக்குஅற்புதமான பாடல்கள்
பதிலளிநீக்குஎளிமையான அருமையான விளக்கங்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குபோலீசுக்கு நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கை ,எல்லோர் மனதிலும் உள்ளது ,தக்க சமயத்தில் வைத்துள்ளீர்கள் :)
பதிலளிநீக்குத ம 5
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
கருத்துள்ள பாடலும் பொது மறை விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவின்ர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதம +1
ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு குறளை பொருத்திக் காட்டியது அருமை . திருக்குறளின் சிறப்பு எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது அல்லவா? திருக்குறள் பற்றிய திரைப்படப் பாடலும் அருமை
பதிலளிநீக்குதிருக்குறளையும் திரைப் படப் பாடல்களையும் அழகாக இணைத்து தந்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருக்குறளோடு தலைவரின் பாடல்களையும் சேர்த்து அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள். தங்களுக்கும் குடிம்பத்தாருக்கும் இனிய போங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசெதுக்கப்பட்ட சிற்பத்தினைப் போல - மனதைக் கவர்கின்றது..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிரைப்பாடல்களும், திருக்குறள் பாடல்களும் மிக அருமை.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅருமை சகோ. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குஅற்புதமானா பாடல்கள்! கேட்டோம்...வழக்கம் போல்.விளக்கம் அருமை! அருமையான பகிர்வு! தலைவரின் பிறந்தநாளை னினைவுறுத்தி என்று சொல்லுவதை விட தாங்கள் எப்போதும் தலைவரை முன்னிறுத்தி இடும் பதிவுகல் எல்லாமே அருமைதான் ! என்றாலும் பிறந்தநாள் அன்று அவரைப் போற்றி வணங்குவோம்!
பதிலளிநீக்குபொங்கல் நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஒப்புமைக்காட்டி எழுதிய பதிவு நன்று!
பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பாடல்களும், திருவள்ளுவரின் வரிகளும் தங்களுக்கு என்னென்றும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளோடு அருமையான குறள் இதில் காவலர், விவசாயி மற்றும் மனிதனுக்கு சொல்லப்பட்டது மிகவும் அருமை நண்பரே...
பதிலளிநீக்குஅறிவாளி பாடலை மிக ரசித்தேன் நிச்சயமாக அறிவாளிகள் கேட்கக்கூடியதே...
தமிழ் மணம் – 12
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்
தலைவர் பிறந்த நாளுக்கான சிறப்பான பதிவு
பதிலளிநீக்குபொங்கல்வாழ்த்துக்கள்.........
முக்கால் அடியில் உலகை அளந்த அருமை
பதிலளிநீக்குதிருக்குறளில் மட்டுமே...!
தங்கள் பதிவிலும் அழகு மிளிர்கிறது...!
மிக அருமையான படிப்பினை...
பதிலளிநீக்குகுழந்தைகள் கொடுத்து வைத்தவர்
இப்படியான வழிகாட்டிக்கு. பயணம் தொடரட்டும்.
இனிய வாழ்த்து. Happy pongal
வேதா. இலங்காதிலகம்.
திருவள்ளுவர் தினநாளில் மிக நன்றாக திருக்குறளுடன் பாடல்களை இணைத்து ஒரு அருமையான பதிவு,பகிர்வு. "நம்மை முதலில் படிப்பதுதான் உண்மையான கல்வி " அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமையான குறள் விளக்கம் பாடல்களுடன்...
பதிலளிநீக்குஇனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா...
அருமை சகோ அருமை...தம +1
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குசிறந்த முறையில் திருக்குறளின் வரிகளுக்கு ஏற்றவாறு விளக்கங்களும்,அதற்கிசைவாய் திரைப்பட பாடல்களும் சுட்டிக்காட்டிப் பொருத்தியுள்ளது அருமையாக உள்ளது.
உண்மையிலேயே அறிவுக்கு விருந்தாகும் தங்களின் இந்த பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தங்களுக்கும், உழவர், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபோன பதிவோட தொடர்ச்சியா,சூப்பர். சூப்பர்.
பதிலளிநீக்குநான் இதனை தங்களின் அனுமதியோடு எங்கள் பள்ளிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
தங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
திருக்குறளில் இல்லாததும் சொல்லாததும் ஏதுமில்லை!! நாம் கல்லாததும் கருத்தில் நில்லாததும் தான் நிறைய.
பதிலளிநீக்குகண்டிப்பாக செல்படுத்துகிறோம் அய்யா. இனிய வாழ்த்துக்கள். தம+1
பதிலளிநீக்குஒவ்வொரு குறளும் விளக்கமும் அருமை ..மனிதனுக்கு ஒப்புமை செய்த குறள் அதன் பொருள் மிக பிடிச்சது
பதிலளிநீக்குவண்ணக்கம் !
பதிலளிநீக்குமுதலில் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரா !அருமையான குறள் அமுதினை வழங்கி அதற்கேப்ப விளக்கத்தினையும் அளித்தீர்கள் !மிகவும் பெருமைப் படுகின்றேன் சகோதரா தங்களின் இப் பணி மேலும் சிறப்பாகத் தொடர என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் . மிக்க நன்றி பகிர்வுக்கு .
அருமையான பதிவு.
பதிலளிநீக்குதிரும்பவும் ஒர முறை படிப்பேன்.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.
திருக்குறள் கருத்துக்களை வலையுலகில் பரவச் செய்திடும் தங்கள் வலைத் தளத்திற்கு நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.21
வானம் பொழிஞ்சும், பூமி விளைஞ்ச காலத்திலயே. வாடிவதங்கிய மக்கள். இப்போ..வானமும் பொழியாமல் பூமியும் பிளாட்டாக மாறி விளையாமல் இருக்கும்போது.. இன்று அந்த மக்கள் என்ன செய்கிறார்கள்.???????????.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் தனபாலன்
பதிலளிநீக்குவள்ளுவரின் வாக்கினை அருமையாக பகிர்ந்து வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குவழக்கம்போல தங்கள் பாணியில் அருமையான பதிவு. திருக்குறளை இந்த அளவிற்கு மிகவும் எளிமையாக பரப்புவது என்பதானது பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குமகாநதி பாடல் பொருத்தமாக உள்ளது.
பதிலளிநீக்குarumai anna
பதிலளிநீக்குதிரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
பதிலளிநீக்குஇசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்::மருதகாசி
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்ட தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்
அய்யா எனெனதொரு கருத்துச் செறிவுமிக்க அற்புதப் பாடல்!
அழகுற பதிவில் எடுத்து சிறப்பித்த வார்த்தைச் சித்தருக்கு
வழங்குகிறோம் நன்றியினை!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு அண்ணே !!!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
திருக்குறள் விளக்கங்கள் அருமை. அதுவும் காவலர் திருக்குறள் விளக்கம் மற்றும் உங்கள் வேண்டுகோள் மிக மிக அருமை.
பதிலளிநீக்குஉங்களின் ஒவ்வொரு பதிவையும் ‘கருத்துக் களஞ்சியம்’ என்றே சொல்லலாம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி தனபாலன்.
இப்போ பூனையெல்லாம் புலியாய் மாறிவிட்ட காலமாய் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஇன்றைய எனது பதிவு
பதிலளிநீக்கு"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
தங்களைப் போன்று நடை பயின்று வருகிறார். குழலின்னிசையாக......
பதிலளிநீக்குஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
பதிலளிநீக்குஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/
எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய் அகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குஅருமையான ஆழமான கருத்துகள் நன்று
பதிலளிநீக்கு“குடி” அரசில் “குடி” மகன் அல்லாதவனின் வாழ்த்துக்கள்.!!!
பதிலளிநீக்குதிருக்குறளையும் திரைப்படப்பாடல்களை எப்படித்தான் அழகாகப் பொருத்தமாக இணைத்துக்கொடுத்து வருகிறீர்களோ !
பதிலளிநீக்குமனதில் பதிவும் விதமாக செய்யப்படும் நல்லதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
//மனதில் பதிவும் விதமாக செய்யப்படும் நல்லதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.//
பதிலளிநீக்கு/மனதில் பதியும் விதமாக செய்யப்படும் நல்லதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள்’
என மாற்றிப்படிக்கவும்.
இதுதானே குறளின் சிறப்பு டிடி சார்.
பதிலளிநீக்குஅறிவென்றால் என்ன அறிவுடையோர் செயலென்ன அறிவின்மை எது என்பதற்கான வரைவிலக்கணங்களைக் குறளைவிடக் குறுகத் தறித்துரைப்பது எது...?
நன்றி!!!