🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



காதல் செய்...! காதல் செய்...!

வணக்கம் அன்பர்களே... (படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...!2 நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?



© ராமன் அப்துல்லா வாலி இளையராஜா 🎤 நாகூர் அனிபா @ 1997 ⟫

அட...! பேசும் தாய்மொழியின் அருமை பெருமை உட்பட முழுமையாகக் கற்றுத் தேறாதவர்கள், மற்ற மொழிகளை முழுமையாகக் கற்கத் தான் முடியுமா ? அப்படி வல்லவரானாலும், அவ்வாறு முடியவில்லை என்றாலும், இழிவாகப் பேசுவதும், எழுதுவதும், ஏன் நினைப்பதும் கூடத் தான் சரியா...? மொழியை மட்டும் சொல்லவில்லை... பேசும் மொழியே இப்படியிருக்கும் போது பிறந்த நாடு, இன்னும் பலவற்றைப் பற்றிப்ப்ப்ப்ப்...

நிறுத்து, நீ நினைப்பது சரியா மனசாட்சி...? Cool Cool...! சந்தேகமே இல்லை... இன்னைக்கு எந்த விசயத்திற்குத் தூண்டில் போடுகிறாய் என்று தெரிந்து விட்டது... பதிவின் கடைசியிலே சொல்ல வேண்டிய குறளை இப்பவே சொல்கிறேன்... இதே போல மற்றவர்களிடம் கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்றவரை, தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டுமென்று சொல்கிறார் நம்ம தெய்வப் புலவர் :-

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (குறள் எண் 702)


(படம்: பாரத விலாஸ்) எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தும், எல்லாம் ஒருதாய் பிள்ளைகள்2 வாழை வழியாக வந்து பேசிப் பழகும் கிள்ளைகள்2 சத்தியம் எங்கள் தேசம்... சமத்துவம் எங்கள் கீதம்... வருவதைப் பகிர்ந்து உண்போம்... வந்தேமாதரம் என்போம் // இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு... எல்லா மக்களும் என் உறவு... எல்லோர் மொழியும் என் பேச்சு... எல்லா மதமும் என் மதமே... எதுவும் எனக்குச் சம்மதமேன்னு இந்தப் பாட்டிலே வர்ற மாதிரி கருத்துரை இட்டவர்கள் எல்லாம் சம்"மதம்" ன்னு சொல்லிட்டாங்க இந்தப் பதிவிலே...! சிரிக்க மட்டும் சொல்லவில்லை... புரிந்து உணர்ந்து கொள்வதில் தான் பலருக்கும் தா"மதம்" ஆகிறது...!

அது சரி, குறள் சொல்கிறது போல் தெய்வத்தோடு ஒப்பிட வேண்டாம் சாமீ...! எந்த மனிசனையும் முதல்லே மனிசனா மதித்தாலே போதும்...! நல்லவன் வாழ்வான்←படத்தின் பெயர் பாட்டு: →தன்மானம் காப்பதிலே, அன்னை தந்தையைப் பணிவதிலே, பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காண - பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே... /// சத்தியத்தின் எல்லையிலே, உயர் சமரச நெறிகளிலே2 அன்பின் சக்தியிலே, தேச பக்தியிலே, உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே - இப்படி எல்லா இடங்களிலும் ஆண்டவன் இருக்கின்றான்; அன்பு மனங்களில் சிரிக்கின்றான் என்று பாட்டிலே வருது... இந்தக் காதல், அதாவது அன்பு... அதோடு பலதும் சேர்ந்து... நினைத்து, எனக்குச் சந்தேகம் வந்து தலை சுத்துது...! இதோ : 2 in 1

இந்த உயிர்கள் தான் பலவகையா இருக்கே... எறும்பு, கொசு, மூட்டைப்பூச்சி - இதெல்லாம் சின்ன உசிர்கள்... அப்புறம் எலி, பூனை, நாய், நரி, ஆடு, மாடு, கோழிக எல்லாம் கொஞ்சம் பெரிய உசிர்கள்... அப்புறம் புலி, சிங்கம், கரடி, குதிரை, யானை - இதுக எல்லாம் அதை விடப் பெரிய உசிர்கள்... கடைசியா மனிசங்க... இப்படி உயிர்கள் பலவிதமாக இருக்கு... இதிலேயும் என்னை மாதிரி அப்பிராணி உசிர்கள் (ஹிஹி...!), கொடுமைக்கார உசிர்களென்னு வேறே இருக்கு... இப்படிப் பலவித இருக்கிற உயிர்களிடத்திலே, எந்தெந்த உயிருக்கு எத்தெத்தனை சதவீதம் அன்பு கருணை, ஈடுபாடு, இன்னும் பலவற்றைச் செலுத்தணும்ன்னு ஒரு பட்டியலிருந்தால் ரொம்பச் சந்தோசம் !

ஹா... ஹா... நீ சொல்றதெல்லாம் உருவ வகைகள், வடிவ வகைகள்... அதுதானேயொழிய உயிருக்கு வகைகள் கிடையாது... அளவும் கிடையாது... இப்போ எறும்பிற்குள்ளும் உசிர் இருக்கு... யானைக்குள்ளும் உசிர் இருக்கு... எறும்பிற்குள்ளே சின்ன உசிரும், யானைக்குள்ளே பெரிய உசிருமா இருக்கு...? எல்லா உடம்பிற்குள்ளும் ஒரே மாதிரி தான் உசிர் இருக்கு... உயிருக்கு உருவமோ, வடிவமோ, அளவோ கிடையாது...

உயிருக்கு உருவமோ, வடிவமோ கிடையாதுன்னா, அப்புறம் எப்படி உயிர்களின் மேல் நான் சொன்னதை எல்லாம் காட்டுவது / செலுத்துவது...?

உயிர்களென்னா உயிர்கள் தான்... அதுலே பெரிசு சிறிசுங்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... உலகத்திலே புல்லு தொடங்கி மனிதர்கள் வரைக்கும் உசிர்கள் பலவகைப் பட்டாலும் உள்ளே இருக்கிற உயிர் ஒன்று தான்... அதிலே பேதப்படுத்திப் பார்க்கக் கூடாது... அதுக்காகத் தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் அன்பின் உருவமான வள்ளலார்

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்; தம்முயிர்போல் எண்ணி உள்ளே; ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்; யாவர்அவர் உளந்தான் சுத்த; சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்; இடம் என நான் தெரிந்தேன் அந்த; வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்; சிந்தைமிக விழைந்த தாலோ...!

எப்படி உயிருக்கு உருவமோ, வடிவமோ கிடையாதோ, அதே போலத்தான் அன்பிற்கும் உருவம், வடிவம், அளவு, எல்லை எல்லாம் கிடையாது... அன்பு என்றால் அன்பு தான்... அன்பை அளந்து காட்டச் சொன்னால் அறிவீனம்... இவ்வளவு நேரம் All in one என்று சொல்ல வர்றதை புரிஞ்சிக்காம... அதென்ன Two in one மனசாட்சி...? ஒரு சின்ன நிகழ்வு சொல்றேன்...

முகமது நபிகள் ஒருநாள் தரையில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்... தரையில் படர்ந்திருந்த அவரது ஆடையில் ஒரு பூனைக்குட்டி வந்து படுத்துத் தூங்கி விட்டது... தொழுகைக்கு நேரமாகி விட்டபடியால் தரையில் அமர்ந்திருந்த நபிகள் நாயகம் எழ நினைத்தார்... அப்போது தனது ஆடையில் படுத்திருந்த பூனைக்குட்டியைப் பார்த்தார்... தனது சகோதரியை அழைத்து ஒரு கத்திரிக்கோலையைக் கொண்டு வரச் சொன்னார்... பூனையின் உறக்கத்திற்குத் தொந்தரவு கொடுக்காமல், படர்ந்திருந்த ஆடையைக் கத்தரித்து விட்டு தொழுகைக்குக் கிளம்பினார்.

இது போல் இருப்பது தான் அன்பு காட்டுவது... கருணையோடு இருப்பது... உண்மை பக்தி / ஈடுபாடு + இன்னும் பல...! புரிகிறதா மனசாட்சி...?

இதோ: 2 in 1 எனக்குப் புரிவதற்கு எதற்கும் இந்தப் பதிவிலே உயிர் என்றிருக்கும் இடத்திலெல்லாம் கடவுள் என்று மாற்றி வாசிக்கிறேன் !

நீங்களும் அப்படியே வாசித்து விட்டு, (படம் :) அறை எண் 305ல் கடவுள் - முதலில் எதைக் காதலிக்கச் சொல்கிறாரென்று முடிவில் பார்ப்போமா நண்பர்களே...?



© அறை எண் 305ல் கடவுள் நா. முத்துக்குமார் வித்யாசாகர் வித்யாசாகர் @ 2008 ⟫

காதல் செய், காதல் செய் - மஞ்சள் வெயிலைக் காதல் செய்...! ஹோய்... காதல் செய், காதல் செய் - வெள்ளை மழையைக் காதல் செய்...! திண்ணை வைத்த வீட்டை, சிட்டுக்குருவி கூட்டை, தாடி வைத்த ஆட்டை காதல் செய்...! வண்ணப்பூக்கள் தோட்டம், வெள்ளிப் பனிமூட்டம், விண்ணில் மேகக்கூட்டம் காதல் செய்... வாழும் வாழ்வை நீ காதல் செய், ஓடும் ஆற்றை நீ காதல் செய், போகும் ஊரை நீ காதல் செய்...! நான் என்ற அகந்தை துளியும் இன்றி உயர்ந்த மலைகள்...! கால் மிதித்த இடத்தில் பாத சுவட்டை அழிக்கும் அலைகள்...! மாட்டுக்கொம்பில் கட்சி பாசம், டாட்டா காட்டும் குழந்தை நேசம், காற்றில் வரும் மீன்கள் வாசம் - இதையும் காதல் செய்...!

காதல் செய்...! காதல் செய்...! உன்னில் உள்ளதைக் காதல் செய்...!
காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!! அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    அருமை ஐயா
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. சுற்றும் ஸ்மைலி சூப்பர்! மாறும் நிறங்களில் வரும் வரிகள் சொல்லும் கருத்து அழகு.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது உண்மைதான் அன்புள்ளவர்களே ஆனந்தமாய் வாழ்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. உயிர் பற்றிய விளக்கங்கள் அருமை. நபிகள் நாயகம் பூனை கதை இதுவரை அறியாதது. பாடல்கள் இணைப்பு ரூமை.
    தலை சுத்துற படம் புதுமை

    பதிலளிநீக்கு
  5. ஆஹா, வாலண்டைன்ஸ் டே கொண்டடத்தை களைகட்ட வச்சுட்டிங்களே ! கலக்குங்க அன்னக்!

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் சரி
    மதத்தை தோற்றுவித்தவர்கள்
    நல்லவர்கள்தான்

    ஆனால் மதத்தில்
    இணைந்து கொண்டவர்கள்
    அவர்களைப் போல் இல்லையே?

    வெறியர்களாகவும், ஈவு இரக்கமின்றி
    கொலை செய்பவர்களாகவும்,
    மனித நேயமற்று இருக்கிறார்களே
    அதற்கு என்ன செய்ய?

    நிகழ்காலத்தில்
    மதங்களைக் கடந்து மனித நேயத்துடன்
    விளங்குபவர்களைப் பற்றி
    நிறைய எழுதுங்கள்.

    அவர்களைப் பார்த்து
    இந்த உலகம் திருந்தட்டும்

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் தனபாலனாக மாறிக் கொண்டு இருக்கீங்க போல.

    பதிலளிநீக்கு
  8. அருமையான முயற்சி அய்யா..
    உயிர் என்ற எழத்துக்கள் மட்டும் ஏன் சிவப்பில் இருக்கு என்று குழம்பினேன்
    முடிக்கும் பொழுதுதான் தெரிந்தது...

    பதிலளிநீக்கு
  9. உன்னையே நீ உணர் என்பதை ,உன்னில் உள்ளதை காதல் செய் என்று குறள் ,சினிமாப் பாடல்மூலம் உணரதந்தமைக்கு பாராட்டுக்கள் !
    த .ம் 7

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு தடவையும் கருத்துக் குவியலோடு தொழில் நுட்பத்தை இணைத்துத் தரும் உங்கள் பதிவு தனித்தன்மை வாய்ந்தது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.
    பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. காதலர் தினத்திற்கு வெகுஅருகில் காதல் பற்றிய விஷயங்களோடு வேறுசில நல்ல கருத்துக்களையும் சொல்லி அசத்திட்டீங்க டி.டி. தலையே சுற்றுகிறது என்பதற்கு சுற்றுகிற அந்த தலையின் படம் மனதைக் கவர்ந்தது!

    பதிலளிநீக்கு
  12. சுத்தும் ஸ்மைலி ஃபேஸும், பதிலுள்ள இரண்டு வரிகள் நிறம் மாறுவதும் புதுமையாக உள்ளன.

    பிரவரி 14 க்கான பதிவு(அப்படின்னு நான் நினைக்கிறேன்) சூப்பருங்க‌.

    பதிலளிநீக்கு
  13. சம்'மதம்', தா'மதம்' அருமை. கருணை தான் காதல். அருமையான கருத்து .

    பதிலளிநீக்கு
  14. நபிகள் நாயகம்பற்றிய அரிய தகவலையும் அழகிய கருத்துள்ள பாடல்வரிகளையும் படித்தேன் அருமையாக உள்ளது. (த.ம ஓட்டும் போட்டுவிட்டேன்.)

    பதிலளிநீக்கு
  15. அன்பில்லாதவருக்கு இந்த உலகம் சொந்தமில்ல. பிற உயிர்களிடத்தில் அன்பு செய்தால் உலக சந்தோசங்கள் அனைத்தும் நம் வசப்படும்

    பதிலளிநீக்கு
  16. பசிக்கும் போது உணவை நாடும் வயிறு
    காலத்தை நோக்கி ஓடும் அறிவு
    தேவையை அறிந்து கொடுக்கும் உயர் மனது
    நல்லவர் நல்லவை நாடி நிற்பர்

    பொருத்தமான கட்டுரை பொருத்தமான நேரத்தில் கொடுப்பதில் திண்டுக்கல் தனபாலனின் திறமை மகிழ்விக்கும்

    என் உணர்வுகளை
    என் ஆசைகளை
    நான் உங்களுக்காக கட்டுப் படுத்த
    நான் மனதளவிலும்
    நான் உடலளவிலும்
    நான் பாதிக்கப் படுவேன்

    நான் வளர்ந்தவன்
    நான் வளர்த்துக் கொண்டவன்
    நான் நானாக வாழ விடுங்கள்
    நான் கொண்டிருக்கும் கொள்கையால்
    நான் உங்கள் கொள்கைக்கு விரோதமானவனல்ல

    எனக்கு வரும் நோய் உங்களுக்கு வர விரும்புவதில்லை
    எனக்கு கிடைத்த ஞானம் உங்களுக்கு வரப் போவதுமில்லை
    எனக்கு கிடைத்த ஞானத்தின் மீது உங்களுக்கு ஆர்வமுமில்லை
    எனக்கு கிடைத்த ஞானத்தின் மீது மட்டும் உங்களுக்கு வருத்தம் வருவது ஏன் !

    உங்கள் வழி வந்தவன்
    உங்கள் வழியை தடை செய்யாமல்
    உங்கள் வழி மாறுகிறேன்
    தனக்கென ஒரு வழி அறிந்தமையால்

    பதிலளிநீக்கு
  17. அன்பே சிவம், சிவமே அன்பு, வடிவமற்ற உயிரும் வடிவமற்ற அன்பும் ஒன்று தான்..
    பதிவில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் வேலைப்பாடுகள் பிராமாதம் டிடி

    பதிலளிநீக்கு
  18. காதலர் தினப் பதிவு அருமை. ஒருவன் ஒருத்தினு காதலர்களுக்கு மட்டும்னு இல்லாமல் மொத்த உலகுக்கே அன்பை போதிக்கும் ஒரு நாள் தான் காதலர் தினம் என்ற பெயரில் நம் நாட்டில் கொண்டாடுவது. அதை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. எல்லோரிடமும் ஒரேப்போல் அன்பை செலுத்தவேண்டும் என்று வலியுறுத்திய பகிர்வுப்பா.

    உயிர் என்று வந்துவிட்டால் உயிர் உயிர் தானே. அது சிறிசானால் என்ன பெரிசானால் என்ன? அதற்கும் உணர்வு இருக்கும் வலி இருக்கும்.

    அன்பை செலுத்த மனம் நிறைந்த அன்பு இருந்தாலே போதும்.

    அருமையான அற்புதமான பகிர்வுப்பா.

    அதையும் சுவைப்பட சொன்னது சிறப்பு

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!!

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  21. அன்புதான் தெய்வம், அன்புதான் உலகம், அன்புதான் அனைத்தும் என்பதை சொல்லும் பதிவு மிக அருமை.

    வாழும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அந்த வாழ்க்கையை விரும்பி(காதலித்து) வாழ்ந்தாலே போதும் என்கிறீர்கள்.
    பகிர்ந்த பாடல்கள் மிக அருமை.
    தலைசுத்துவைதை காட்டும் படம் அழகு.
    சிறப்பாய் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அருமை மிக அருமை. தனபாலன் திரைப் பாடல்களாலேயே அன்பை அழகாக உணரவைக்கிறீர்கள். இந்த அன்பு எங்கும் பரவி எல்லோரிடமும் நிலைக்கட்டு,. மிக மிக நன்றி. அன்புதினம் சிறக்க இந்த ஒரு பதிவு போதும்.

    பதிலளிநீக்கு
  23. தலைவரே உங்களின் எழுத்தும் சிந்தனைகளும் மிக அருமை உங்களுக்கு பேச்சு திறமை இருந்தால் மிடியாவில் முயற்சி செய்யலாம் நிச்சயம் மிக பிரபலமாக ஆகலாம். இப்ப நான் பிரபலமாக இல்லையா எனக் கேட்கலாம். இபோது நீங்கள் பிரபலம் வலையுலகில் ஆனால் நீங்கள் மிடியாவில் புகழ் பெற்றால் தமிழ் உலகம் எங்கும் பேசப்படுவீர்கள். அப்படிபட்ட ஒரு நாள் மிக விரைவில் வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  24. நபிகள் நாயகம் பற்றிய தகவலுடன் அன்பை பற்றி ஆராய்ந்த விதம் வெகு சிறப்புங்க சகோ. உங்களைப்போல எதையும் வித்தியாசமாக சொல்ல யாரால் இயலும்...

    பதிலளிநீக்கு
  25. அன்புக்கு அன்பு
    அளவுகோலற்றது. நல்ல பல விளக்கங்கள்.
    அசத்தும் தொழில் நுட்பம்.
    டிடிக்கு நிகர் டிடிதான்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  26. உங்கள் வழி என்றுமே தனி வழி, DD! மிகச் சிறப்பாக காதலர் தின பதிவு போட்டு, அதில் சிறந்த கருத்துக்களையும் சொல்லி அசத்திட்டீங்க!
    கடைசியில் உயிர் என்று இருக்குமிடங்களில் கடவுள் என்று மாற்றி இரண்டாம் முறையும் வாசித்துவிட்டேன்!
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  27. எப்போதும் போல் அருமையான கருத்துப்பகிர்வு... மதம் கொண்டு அலைபவர்களுக்கு உபதேசம். ///மனிதனைக் கடவுளாய் நினைக்காவிட்டாலும் பரவாயில்லை.. மனிதனாய் நினையுங்கள்//// சிந்திக்க வைக்கின்றது.



    பதிலளிநீக்கு
  28. அன்பைப்பற்றி அருமையான கதையுடன் கருத்துகள். பதிவில் என்னென்னவோ மேஜிக் செய்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. மிக மிக அருமையான இடுகை! உயிர் என்பது இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களிடமும் உள்ளதுதான்...வகைகள் கிடையாது, சிற்து, பெரிது கிடையாது! ஆம் ஊண்மைதான் DD!!! தாங்கள் சொல்லியது சரியெ! சித்தர்களும் சொல்லுவது "உயிர் என்பது ஒன்றுதான்....வெளித்தோற்ற்ம் மட்டும்தான் மாறுபடுகிறது" என்றாழகான தத்துவத்தை நீங்கள் அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்!

    செடி கொடி மரங்களிலும் உயிருண்டுதான்!

    இந்த உலகையே காதலிக்கத் தொடங்கி விட்டால் அப்புறம் ஏது பிரச்சினைகள்!

    ஆதாலால் காதல் செய்வீர் செய்வோம்!

    வாழ்த்துக்கள்! அருமையான ப்கிர்வுக்கு!


    பதிலளிநீக்கு

  30. அன்பின் தனபாலன் அன்பு குறித்த பதிவு நன்றாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாதது அன்பு. அதைச் செலுத்தமனம் எனும் அட்சயபாத்திரம் வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும் எனும்போதுஏனோ, ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறதுசரியாக நினைவு இல்லை. யாரோ ஜீவகாருண்ய சங்கத்தவரிடம் பேசுவது போல் இருக்கும். ” தூங்கும்போது கொசு கடித்தாலோ மூட்டைப் பூச்சி கடித்தாலோ என்ன செய்வீர்கள் “ என்னும் பொருளில் இருக்கும். மேலும் “வாடிய பயிர்கள்’ பற்றி வள்ளலாரை மேற்கோள் காட்டுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. சைவமோ அசைவமோ உயிர்க் கொலை செய்துதான் உண்கிறோம். சக மனிதரிடம் ஏற்ற தாழ்வு காணாது அன்பு செய்வது சிறந்தது ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. உங்களால் மட்டுமே இப்படி பதிவுகள் எழுத முடியும்...அருமை கூடுதலாக தலைசுற்றுகிற அந்தபடம்....

    பதிலளிநீக்கு
  32. மதம் குறித்த தங்கள் பதிவில் தங்கள் கருத்துக்களுக்கு அனைவரும் சம்மதம் தருவார்கள்

    பதிலளிநீக்கு
  33. அண்ணே!
    அன்பை பற்றி அழகாக சொல்லிடீங்க..

    நபிகள் பற்றிய தகவல் ,எனக்கு புதிது...

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  34. அன்பைப்பற்றி அன்போடு பகிர்ந்து கொண்டுள்ளது அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  35. உள் நின்று உணர்த்தும் உணர்வுகளைத் தன் வசப்படுத்தி ஒழுக்கத்தாலும்
    உயரிய நற் பண்புகளாலும் உயர்ந்தவர்கள் பிற உயிர்கள் மீதும் தன் மீதும்
    காட்டும் புனிதமான அன்பின் வெளிப்பாடே காதல் எனக் கொள்ளலாம்
    அத்தகைய காதலைக் கௌரவித்து மிக மிக அருமையான ஆக்கத்தை அள்ளித்
    தந்த அன்புச் சகோதரருக்கும் என் மனமார்ந்த காதலர் தின வாழ்த்துக்களையும்
    பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் நான் பெருமை கொள்கின்றேன் .வாழ்த்துக்கள்
    சகோதரா .

    பதிலளிநீக்கு
  36. வணக்கம்
    அண்ணா.

    உண்மையில் உயிர் என்பது ஒன்றுதான் அதன் உருவங்கள்தான் வித்தியாசம் இது பற்றி பகவத் கீதையில் கூட கிருஸ்ணபரமாத்மா மிக அழகாக சொல்லியுள்ளார்..
    அதிலும் முகமது நபிகள் அன்பு செலுத்திய கதையும்நன்று..


    என்ன சொல்ல எப்படி சொல்ல..காதலர் தின சிறப்பு பதிவு மிகச் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்... வாழ்த்துக்கள் அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  37. உண்மைதான்..மனிதனை மனிதனாக மதித்தாலே போதும்.
    two-in-one எப்படிங்க இப்படி எல்லாம் கலக்குறீங்க..தல சுத்துற smiley கலக்கல்!
    'காதல் செய்' மிகவும் பிடித்தது..அனைவரும் காதலில் விழவேண்டும் :)
    அருமையான பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  38. இது வெளியிட அல்ல..உங்கள் பதிவில் வரிகளை copy பண்ண முடியவில்லையே..அப்படி நீங்கள் அமைத்திருக்கிறீர்களா? அப்படியானால் எப்படி? :)

    பதிலளிநீக்கு
  39. உயிர்களில் பேதமில்லை! கடவுள்களிலும் பேதமில்லை! எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற அருமையான கருத்தை அழகிய பாடல்களுடம் பகிர்ந்த விதம் சிறப்பு. முகமது நபியின் வாழ்வில் நடந்த சம்பவமும் அவரது கருணை உள்ளத்தை கண் முன்னே நிறுத்தியது. சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  40. பிரதிபலன் பாராம அன்பு செய்வது குறித்து நல்ல பகிர்வு சகோ.

    நபிகள் அவர்கள் பற்றிய கதை அருமை.. ரசித்தேன். நன்றி. :)

    பதிலளிநீக்கு
  41. சரியாக சொன்னீர்கள்.

    முகமது நபி எல்லா உயிருக்கும் தன் உயிரை விட மதிப்பளிக்க சொல்லியவர். குறளையும், நபியையும் இணைத்து எழுதியுள்ளது அருமை.

    பதிலளிநீக்கு
  42. //இதிலேயும் என்னை மாதிரி அப்பிராணி உசிர்கள்//
    நீங்க நல்லவரா... ரொம்ம்ம்ப நல்லவரா...?

    //அன்பு என்றால் அன்பு தான்...//
    மிகச் சரி... உவமையோ, உவமானமோ, உவமேயமோ, உருவகமோ அன்பை விளக்கவோவன்றி உணர வைக்க இயலாது.

    //காற்றில் வரும் மீன்கள் வாசம் - இதையும் காதல் செய்//
    இப்பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
    நீரில்லாமல் மீனில்லை...
    மீனில்லாமல் நானில்லை...
    அதுவும் ஒகேனக்கல்லில் துள்ளத் துள்ள எடை போட்டு பொரிச்சு தருவாங்களே... ஐயோ.. அந்த சுவைக்கு "அலாவுதீன் அற்புத விளக்கு" படத்து அசோகன் மாதிரி நான்..!!

    பதிலளிநீக்கு
  43. புதுசு புதுசா யோசிக்கிறீங்களே... ம்ம்ம்.. சூப்பர்...

    பதிலளிநீக்கு
  44. காதலர் தினத்துக்கான பதிவு அட்டகாசம். பாரதவிலாஸின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  45. காதலர் தினத்துக்கான பதிவு அட்டகாசம். பாரதவிலாஸின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  46. உயிர் ஒன்றேதான். அதிலுள்ள உணர்வுகளும் ஒன்றேதான். செடிகொடிகளுக்கும் இது பொருந்தும். பொதுவில் சொல்லப்போனால் அவரவர் மனதைப் பொறுத்து அமைவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  47. உயிருக்கு உருவம் கிடையாது! அந்த உயிரின்றி எதுவும் நடவாது! என்பதை அருமையான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  48. முன்னமே அன்பு புரிவதில் பெரிய சிக்கல் பலருக்கு, இதில் பட்டியல் வேறு இட்டு விட்டால்.. முடிந்தது சங்கதி... ஹ்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  49. வாவ்.. சூப்பர். நபிகள் நாயகம் அருளுரை அருமை. படம் மிக அழகு. வாழ்த்துகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  50. உண்மையான அன்பு எப்போதும் வாழும் நேசி என்பதன் பாடல் வரிகள் அருமை ]பகிர்வுக்கு நன்றி தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  51. அன்பைப் பற்றிய பதிவு அருமை ஐயா.நபிகள் நாயகம் பற்றிய கதை அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  52. உயிருக்கு உருவமோ வடிவமோ கிடையாது.சரியாச் சொன்னீங்க.அன்பு செலுத்துகிறவங்க பேதம் பார்ப்பதில்லை.யோசிக்க வைக்கிறது உங்கள் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  53. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தம்மையும் தம் அயலாரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அருமையான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  54. காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரா !

    அருமையான பதிவு வழமை போல் அசத்தி விட்டீர்கள். அன்பு கருணை காதல் உயிர் அனைத்தையும் அருமையாக விளக்கி விட்டீர்கள். எல்லா உயிர்களையும் அன்பு செய்வோம். முயற்சி செய்வோம்.
    நன்றி..! வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  55. காதல் செய்.. காதல் செய்.. என்று தலைப்பிட்டு, எல்லா உயிர்களிடமும் அன்பு செய் என்று அருமையாக விளக்கிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நபிகள் நாயகத்தின் கதையை ரசித்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
  56. கணினி நுட்ப திறனாற்றலோடு
    அழகாகப் பதிவைப் பகிரும்
    தம்பி - உன் பதிவில்
    "உன்னில் உள்ளதைக் காதல் செய்" என்ற
    முடிவுக்கு எடுத்துக்காட்டாக
    "நீயும் நானும் ஒன்னு - இது
    நெசந்தான் மனசுல எண்ணு...!
    பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்த
    பூமியைப் புதுசாப் பண்ணு...!" என்ற
    நல் வழிகாட்டலைத் தந்தமையை
    பாராட்டுகின்றேன் நம்பி!

    பதிலளிநீக்கு
  57. அன்பு காதல் கடவுள் அனைத்தையும் ஒரே நேர்க் கோட்டில் கொண்டு வந்த திறன் பாராட்டத் தக்கது. 'தொடர் வருகை' எனும் அன்பால் பாரதிக்குமாரையும் வலைப் பூ நுகர வைத்த உங்க அன்புக்கு நன்றி பாலாண்ணா. பிரதிபலன் பாராத அன்பு!

    பதிலளிநீக்கு
  58. ஒவ்ஒவொரு பதிவுக்கும் எவ்வளவு மெனக்கிடறீஙக டிடி. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  59. அசத்தல் கிராபிக்ஸ்.. காதலின் மற்றொரு பரிமாணம்..

    பதிலளிநீக்கு
  60. சிறப்பான பதிவு.சித்தர்கள் சொல்லில் இருந்து தொடங்கிய வரிகள் சிந்திக்கத் தந்த வரிகள் இன்ட உயிர் உடலில் இருக்கும் வரைதான் எதுவுமே செய்யவும் நினைக்க்கவும் முடியும்

    பதிலளிநீக்கு
  61. உண்மைதான்!அன்பு என்றால் அன்பு தான்! அதை எந்த அளவுகோல் வைத்தும் மதிப்பீடு செய்தல் இயலாது என்பதை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!

    'ஆதலினால் காதல் செய்வீர்' என்று பாரதி சொன்னது போல, அனைத்தையும் காதல் செய் என்றெழுதியிருப்பது மிக அழகு!!

    பதிலளிநீக்கு
  62. சிந்திக்கவைக்கும் சிறப்பான ஆக்கம். தேர்ந்த பாடல்களுடனும் உதாரணங்களுடனும் விளக்கியமைக்கு நன்றியும் பாராட்டும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  63. ஆகா... அருமையான பதிவு... நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி மட்டுமல்ல... மிகச்சிறந்த பாட்(டு)டாளியும் கூட... அதிலும் அந்த 2 இன் 1 யுக்தி மிக அருமை...! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  64. டாபிக்கைக் கொண்டு செல்லும் விதம் அருமை.
    நீங்கள் சொல்வது உண்மைதான்...
    உயிர்களிடத்து அன்பு செய்தல் வேண்டும்.
    சில சமயங்களில் மனிதனுக்கு அன்பு/உதவி செய்யும் போது கவனம் தேவை என்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
  65. நல்ல பதிவு. உயிருக்கு மட்டுமல்ல நாம் பெரும் மகிழ்வுக்கும் உருவமும் அளவும் கிடையாது, அன்புக்கும் அப்படியே..நல்ல கருத்து அன்பரே.

    தங்களது நடை ஒரு புது மாதிரியாக உள்ளது. ஒரு குதிரையின் நடை போல. வேகம் அதிகம்.திரும்பலும் குதிப்பும் அதிகம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  66. வணக்கம்
    அண்ணா

    இன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....அண்ணா இணைப்பு தரவேண்டி இல்லை...உங்களுக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  67. சொல்ல வந்த கருத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள் சார், அன்பில் எது சிறியது பெரியது என்று..... யோசித்து பார்த்தல் நீங்களும் புதிய பதிவர்கள், பிரபல பதிவர்கள் என்று பாராமல் எல்லோரையும் உங்களது கருத்துக்கள் மூலம் உற்சாக படுத்துகிறீர்கள், இதுதானே உண்மையான அன்பு ?!

    பதிலளிநீக்கு
  68. வாட்சப்பிலும் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ! பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  69. வணக்கம் ஜி
    அருமையான விடயங்களை தொகுத்து தந்த நல்ல பதிவு அன்பால் மட்டுமே எதையும் வெல்ல முடியும் அன்பு செலுத்துவதற்கு அளவில்லை

    வாட்ஸ்-அப்பில் அனுப்பியமைக்கு நன்றி எனது செல்லில் தமிழ் படிக்க முடியாது ஆகவே தேதியை வைத்து தளத்தில் படித்தேன் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.