புதன், 29 ஜனவரி, 2014

நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?


ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும், சாராய கங்கை காயாதடா...! ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும், காசுள்ள பக்கம் பாயாதடா...! குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா...! கள்ளுக்கடைக் காசிலே தாண்டா, கட்சிக் கொடி ஏறுது போடா...! (2) மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்...! உன்னால் முடியும் தம்பி ← இது படத்தோட பெயர்...!

புதன், 22 ஜனவரி, 2014

நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?


பொய் சொன்னாலும், மெய் சொன்னாலும், வாயால் சொல்லிப் பலனில்லே...! (2) - அதை மையில நனைச்சிப் பேப்பரில் அடிச்சா, மறுத்துப் பேச ஆளில்லே...! (2) உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...! (2) கலகம் வருது-தீருது, அச்சுக்கலையா நிலைமை மாறுது...! (2) (படம்: குலமகள் ராதை)

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (2)


வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... இதன் முந்தைய பதிவான உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1) பதிவை படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடருமாய் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...

புதன், 1 ஜனவரி, 2014

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1)


இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலச்சீர்திருத்தம், தொழில் மயமாக்கம், பசுமைப் புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்த, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்... இனி பதிவிற்கு செல்வோம்...