🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11)

நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை எல்லாம் என் நேரம்...! (பகுதி 10) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... மேலும்...

இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாகத் தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளைச் சிலவற்றை ரசியுங்கள்...

கவிதைகளுக்கு ஏற்றது போல் ஞாபகம் வந்த பொன்மொழிகளை ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று ரசித்து விட்டு, (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவைக் கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சொடுக்கி ரசித்து விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி...

இரட்டைக் குழந்தைகள்
பொன்மொழி : விவேகானந்தர் :- (1) மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளைக் கடந்து செல்லவேண்டும். (2) நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள். (3) உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள். (4) மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. (5) உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

அழிப்பதில் அல்ல - ஆக்கத்தில்
கெடுப்பதில் அல்ல - கொடுப்பதில்
பிரிப்பதில் அல்ல - உறவினில்
பெறுவதில் அல்ல - தருவதில்
மறப்பதில் அல்ல - நினைப்பதில்
வெறுப்பதில் அல்ல - பொறுப்பதில்
அவநம்பிக்கையில் அல்ல - நம்பிக்கையில்
செருக்கினால் அல்ல - சிறப்பினில்
நிதியினில் அல்ல - நீதியில்
ஏற்பினில் அல்ல - இழப்பினால்
இகழ்வதில் அல்ல - புகழ்வதில்
வெறுப்பினில் அல்ல - அன்பினில்
அன்பே சிறந்த தென்றல்...!
எனவே, தியாகமும்... நட்பும்...
இரட்டைக் குழந்தைகளே...

நற்பண்புகளின் தாய்
பொன்மொழி : வில்லியம் ஷேக்ஸ்பியர் :- வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன... (1) பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். (2) பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். (3) பிறரைக் காட்டிலும் குறைவாகப் பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அன்பே புனிதத்தைப் பெற்றெடுத்த தாய்
பண்பே மரியாதையை ஈன்ற தாய்
பாசமே உன்னத உறவுகளின் தாய்
நேசமே மனித நேயத்தின் தாய்
கல்வியே அறிவை வளர்க்கும் தாய்
கருணையே இரக்கத்தைப் பொழியும் தாய்
உறவே சுற்றங்களைக் காணும் தாய்
உரிமையே சுதந்திர நாட்டின் இனிய தாய்
நட்பே நண்பர்களை உருவாக்கும் தாய்
நன்றியே நற்பண்புகளின் அழகுத் தாய்

நிழலாய் வா...!
பொன்மொழி : பெஞ்சமின் - துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே...!

கல்வியே நீ பூவாய் வராதே -
உதிர்ந்து விடுவாய்...!
நிலவாய் வராதே - மறைந்து விடுவார்...!
நிழலாய் வா - அப்போதுதான்
என்னுடன் வருவாய்...!

மரியாதை அது மனித மாண்பு
பொன்மொழி : பெர்னாட்ஷா :- கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்... கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்... உங்கள் நம்பிக்கையைப் பணத்தின் மீது வைக்காதீர்கள்.... பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்... நல்லவராய் இருப்பது நல்லது தான்... ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது... சாலமன் : அகந்தை முன்னே செல்லும்; அவமானம் பின் தொடரும்

மனித மாண்பு மனிதனுக்கு மரியாதை
என்பதை நீ உணர்ந்திடு...!
உணர்த்திடு அதன் நன்மையை...!
குப்பைத் தொட்டியில் கொசுவைப் போல் சிசு !
மறு தாய் சிசுவுக்கு யாரம்மா...?
குப்பையாலும் நானுனைத் தாங்குவேன்...!
என் குழந்தையே நீயும் என்று
அணைக்கும் பாரதத்தாய்...!
இங்குப் பெற்றதாய் மனதில் மாண்பில்லை...!
இதைக்கண்டு கொந்தளிக்கும் சமூகம்
மறுக்கிறது பிறர் நலச்சேவையை...!

மனிதா...!
உடைந்த இதயத்தை
உன் உளியால் செதுக்கு...! மனிதம்
உதயமாகும் உலகில்...!

பணம் பணம் என்ற பேராசை பேயால்
குணம் என்ற இரக்கத்தைத் தூக்கிலிட்டான்...!
செழிக்கும் மனிதனுக்கு மாண்பில்லை
விளைவு...? அவன் நடைப்பிணம்...!
நிலையில்லா உலகினில் மனித மாண்பு
நிலையில்லாமல் போய் விடுமா...?

எங்கே மனிதன்..? தேடினேன்; தேடினேன்...
ஓங்கி நிற்கிறான் மனிதன்...?
ஒடுங்கி நிற்கிறது அவன் உள்ளம்
தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...!

வழமையானதோர் வாய்க்கால்
வயல்வெளியோ வெட்டி
வெற்றியோடு நாடெனும்
வயலில் அறுவடை செய்...!

உடைந்த இதயத்தை உன் விழியால் செதுக்கு
உதயமாகும் உலகில் மனிதம்...!

வெற்றியின் துளிகள்
பொன்மொழி : அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி :- எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன... சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன... செயலில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன... பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன... ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது...!

நம்பிக்கை நார் மட்டும்
உன் கையிலிருந்தால்
உதிர்ந்த பூக்கள் ஒவ்வொன்றாய்
வந்து ஒட்டிக் கொள்ளும்...!
ஏற்றப்படாத அலங்கார
விளக்குகளை விட எரியும்...!

அழுக்கான விளக்குகள் அழகானவை
நீ சுடர்விட்டுக் கொண்டே இரு...!
நண்பனே...!
வாழ்வதற்காக அல்ல வெல்வதற்காக...!

உழைக்காத நேரங்கள் எல்லாமே
ராகுகாலம்... !
ஒவ்வொரு விடியலையும்...
நம்பிக்கையோடு எதிர்கொள்...!
ஒவ்வொரு இரவிலும்...
நம்பிக்கையோடு உறங்கப் போ...!
உன் இயல்பை மாற்று...!
உன் இயக்கத்தை மாற்று...!
அப்போது வீசும் உன் திசைகளில்...
வெற்றிக்காற்று...!

தோல்வியைச் சந்திக்காத யாரையும்
வெற்றி சந்திக்காது...!


நீ ஒதுக்கப்படும் சபையில் -
நிமிர்ந்து நில்...!
நீ புகழப்படும் சபையில் -
அடக்கமாய் இரு...!
நீ நேசிக்கப்படும் இடங்களில் -
அன்புடன் இரு...!
நீ ஜெயிக்கப்படும் தறுவாயில் -
வேகமாக இரு...!
நீ ஜெயித்த பிறகு -
அதிவேகமாய் இரு...!

தியாகத்தால் உலகை வெல்வோம்
பொன்மொழி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். :- இன்றைக்கு வாழ்கின்ற நாம், நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்... நாம் வந்த வழியை மறந்து விட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்... ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருப்பது தான் தியாகம்...

தாயகமே தலை வணங்கும்
தியாகத்திற்கு-அது
நல்ல தலைவரை
உருவாக்கும் இஞ்ஞாலத்திற்கு...!

சிலர் கருகி பலர் உருகி
பறக்க விட்டோம்-தேசியக்கொடியை..!
நல்லதோர் தியாகத்தால்...
சிரிக்கின்றோம் - இன்று...!
இறந்தாலும் இறவாத நினைவுகள்
ஈன்றாலும் கிட்டாத மகிழ்வுகள்

தன் வாழ்வை இரட்டிப்பாக்கி
வாழ்வளித்தாள் தெரசா
நாம் உறங்க, உறங்காத
மனிதர்கள் நாட்டு எல்லையில்...!
நாம் சிரிக்க...
உடல் வருத்தும் பெற்றோர்கள்...!

கல்லின் தியாகம் சிலையானது...!
மூங்கிலின் தியாகம் குழலானது...!
புல்லின் தியாகம் உணவானது...!
மேகத்தின் தியாகம் மழையானது...!
எனவே...
தியாகத்தால் மேன்மையடைகிறோம்
தியாகத்தால் உலகை வெல்வோம்...!

எது நல்ல மனித உருவாக்கம்...?
பொன்மொழி : அன்னை தெரேசா :- உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது...!

கல்-தான் சிதைக்கப்படுகிறோம் என்று
சிந்தித்திருந்தால், கருவறைக்குள்
கடவுளாய் இருந்திருக்க முடியாது...!
தாய் - ஐயிரண்டு மாதங்கள் தன்னை
ஒறுத்திருக்கா விட்டால்,
மனித உருவாக்கம் நடந்திருக்காது...!
தன்னையே உருக்கி மனித மனங்களில்
உறைந்த அன்னை தெரசாவின்
தியாகம் ஒடுக்கப்பட்டோர் உய்வடைய !
எனவே...
தியாகம் நல்ல மனித உருவாக்கம்

படி - நவீன ஆத்திசூடி
பாடல் : பாவேந்தர் பாரதிதாசன் - படி படி படி :- காலையில் படி, கடும்பகல் படி, மாலையில் படி, நல்ல நல்ல நூலைப் படி, சங்கத்தமிழ் நூலைப்படி, கற்பவை கற்கும் படி, வள்ளுவர் சொன்னபடி, கற்கத்தான் வேண்டும்படி, கல்லாதவர் வாழ்வதெப்படி...? (படி³) அறம் படி, பொருள் படி, இன்பம் படி, அகப்பொருள் படி, புறப்பொருள் படி, புகப் புகத்தால் அறிவு புலப்படும் என்ற சான்றோர் சொற்படி (படி³) பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகமே மாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி...? (படி³) சாதி என்றும் தாழ்ந்தபடி, நமக்கெல்லாம் தள்ளுபடி, சேதி அப்படித் தெரிந்துபடி, தீமை வந்திடுமே மறுபடி (படி³) தொடங்குகையில் வருந்தும்படி, இருப்பினும் தொடர்ந்துபடி, அடங்கா இன்பம் மறுபடி, ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி (படி³)

திகாலையில் எழுந்து படி
ர்வமுடன் ஆழ்ந்து படி
மைப்பொழுதும் வீணாக்காமல் படி
ன்றவளை தொழுது படி
வகையுடன் உணர்ந்து படி
ரார் போற்றப் படி
தையும் தவிர்க்காமல் எழுதி எழுதி படி
ற்ற இறக்கத்துடன் படி
யமின்றி படி
வ்வொன்றாக ஒழுங்குபடுத்திப் படி
யாமல் படி; ஓவியமும் படி
வை சொல் அனைத்தையும் படி

உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சேரட்டும்... மிக்க நன்றி !

இன்னும் ஐந்து நாட்களே உள்ளன... விவரம் ↓

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி இங்கே சொடுக்கவும்...

உங்களின் கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...!

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நல் சிந்தனையைத் தூண்டும் பதிவு .... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வட்ட புகைப்படம் தொட்டதும் சதுரமாகிறது! அட!

  நவீன ஆத்திச்சூடிக்கும் ஒரு அட!

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான பதிவாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. தலைப்பே அருமை! படி ஆத்தி சூடி சுப்பர். குழந்தைகளின் படைப்புகள் ஆச்சர்யப் பட வைக்கின்றான். தொகுத்த விதம் வடிவமைப்பு அனைத்தும் பிரமாதம்

  பதிலளிநீக்கு
 5. நீ ஒதுக்கப்படும் சமயத்தில் நிமிர்ந்து நில்

  இது ஒன்றே வாழ்க்கைக்கு போதுமானது.

  பதிலளிநீக்கு
 6. நவீன ஆத்திச்சூடி அருமை.
  ///தோல்விகளைச் சந்திக்காத யாரையும்
  வெற்றி சந்திக்காது///
  வெற்றியின் இரகசியத்தை இதைவிட யாராலும் எளிமையாகச் சொல்ல இயலாது. நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  எங்கோ... ஒரூ மூலையில் உறங்கி கிடக்கும் மனிதைர்களை தட்டி எழுப்பும் பதிவு........

  மனிதா உடைந்த இதயத்தை
  உன் உளியால் செதுக்கு -மனிதம் உதயமாகும் உலகில்.
  பதிவு அருமை வாழ்த்துக்கள்.அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள்
  பிறர் நலம் பேணுதலே உங்கள் மாண்பு .

  பதிலளிநீக்கு
 9. எதிர்கால ப்ளாக் எழுத்தர்களின் சிந்தனைகள் அருமை !அதற்கு பொருத்தமாய் உங்களின் கை வண்ணமும் அருமை !

  பதிலளிநீக்கு
 10. தங்கத் தாம்பாளத்தில்
  வைர அட்டிகை வைத்தது போல்
  கருத்தும் பகிர்ந்தவிதமும்
  அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. நற்பண்புகளின் ஊற்றுக்கண்களாய் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 12. நவீன ஆத்திசூடி ஏன் மாணவர்களுக்கு பயன்படும்.. சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 13. பகிர்வுக்கும் பொன்மொழிகளுக்கும் நன்றி. குழந்தைகளின் உலகம் ஆச்சரிய குறிகளுக்க சொந்தமானதுதான்..
  கல்வியை நிழலாக வரச்சொல்வது மிக ரசித்தது...

  பதிலளிநீக்கு
 14. விஜய தசமி நன்னாளில்,விவேகமான கவிதைகள்.அனைத்தும் அருமையான கருத்துக்கள் தாங்கி வந்துள்ளன. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. தோல்வியை சந்திக்காதவன் வெற்றியின் சுவையை உணரமுடியாது

  பதிலளிநீக்கு
 16. அருமையான கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. தனபாலனின் பதிவுகளைப் படித்து வந்தாலே மனம் பண்பட்டுவிடும் மிகவும் நன்றி. கவிதைகள் அனைத்தும் பொன்னானவை.

  பதிலளிநீக்கு
 18. அன்பின் தனபாலன் - தன்னலம் தவிர்த்துப் பிறர் நலம் பேணு - பதிவு அருமை.

  குழந்தைகளீன் படைப்பு - பெரியவர்களீன் படைப்புகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் படைப்புகளாக - அருமையான ச்நிதனையில் எழுதப்பட்ட பதிவுகளாக உள்ளன். அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

  ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்ற ஒரு புகழ் பெற்ற ப்ழமொழியினைச் சேர்த்து எழுதியமை நன்று.

  மிக மிக இரசித்தேன் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. அத்தனை படைப்புக்களும் அருமையாக இருக்கின்றன. Ôநிழலாய் வாÕ என்பது அவற்றில் மிகச் சிறப்பாக மிளிர்கிறது. குழந்தைகளின் படைப்புகள் என்று நீங்கள் சொன்னால் தான் தெரியும் என்கிற அளவுக்கு அவ்வளவு முதிர்ச்சி அவர்களின் எழுத்துக்களில்!

  பதிலளிநீக்கு
 20. தன்னலம் மறந்தால் பெரும்பேர் இன்பம் என்பதை அழகாகச் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 21. நன்கு யோசித்து எழுதிய அர்த்தமுள்ள ஆழமான பதிவு.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் அய்யா! அருமையான சிந்தனை. குழந்தைகளின் கவிதைகள் வியப்பூட்டுகிறது. அவர்கள் நிச்சயம் நாளைய உலகில் வெற்றி எனும் சிகரத்தில் வலம் வருவார்கள். வாழ்த்துக்கள் அந்த பிஞ்சுகளுக்கு. கவிதைகளுக்கு அழகான பொன்மொழிகளை தங்களுக்கே உரித்தான பாணியில் கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள். நல்லதொரு சிந்தனைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் அய்யா. தொடருவோம்.

  பதிலளிநீக்கு
 23. அனைத்துப் பதிவுகளும் மிகவும் அருமை... குறிப்பாக மரியாதை அது மாண்பு மிகவும் அருமை.... நல்ல முறையில் வார்த்தெடுத்தால் இன்னும் சிறந்த எழுத்துகளை எதிர்நோக்கலாம் இனிவரும் காலங்களில்

  பதிலளிநீக்கு
 24. ஒவ்வொரு கவிதையையும் ரசித்துப் படித்தேன். மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் "வெற்றியின் துளிகள்" கவிதை அருமை. நல்ல சிந்தனைகளைத் தூண்டும் உங்களது இந்த முயற்சி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 25. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. நல்லனவற்றை புதியனவற்றைக் கற்றுக் கொள்ள உகந்த நாளாகிய இன்று அருமையான அற்புதமான தகவல்களுடன் கலைக் களஞ்சியமாக தங்களின் பதிவு!..

  பதிலளிநீக்கு
 26. கவிதைகளும் அவற்றில் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் வழங்கியுள்ள பொன்மொழிகளும் அருமை. மிகுந்த அக்கறையுடன் தொகுத்து வழங்கியுள்ள உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 27. கவிதை பொன்மொழிக் கதம்ப இணைவு மிக அருமை.
  மிக சிறப்பான பதிவு.
  நானும் வேதாவின் ஆத்திசூடி என்று ஓரு தலைப்பில் எழுதியுள்ளேன்.
  நேரமிருப்பின் பார்க்கலாம்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  http://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf/

  பதிலளிநீக்கு
 28. இனிய விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!

  எதைப் பாராட்டுவது?... எதை விடுவது?....

  அத்தனையும் அற்புதம். கவிதைகளும் அதனோடு தந்த பொன்மொழிகளும்
  அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மிஞ்சி நிற்கின்றன.

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  பதிலளிநீக்கு
 29. புதிய புதிய சிந்தனைகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.
  பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 30. முதலில் இப்படி ஒரு அழகுப் பாப்பா படம் போட்டால் எப்படி மேலே சென்று உங்கள் பதிவைப் படிப்பது? :)
  இருந்தாலும் ஒருவழியாக ஒன்றுவிடாமல் படித்து ரசித்தும்விட்டேன். 'நிழலாய் வா', 'வெற்றியின் துளிகள்' - மிகப்பிடித்தது.
  பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. உழைக்காத காலம் எல்லாமே ராகு காலம் .
  ரசித்து படித்தேன்.

  ஒரு மணி நேரமா சும்மாவே உட்கார்ந்து இருக்கிறீர்களே ? என்று (தெரியாத்தனமாக ) ஒருவரிடம் நாகையிலே இருந்தபோது கேட்டுவிட்டேன்.

  நேற்று நீங்கள் இந்த புதிய வேலையை என்னிடம் செய் என்று கொடுத்தது நினைவு இருக்கிறதா என்று பதில் கேள்வி போட்டார்.

  ஆம் என்று திக்கினேன்.

  துவங்கலாம் என்று தான் நினைத்தேன். அதற்குள் ராகு காலம் வந்து விட்டது. அது முடியட்டும் என்று உட்கார்ந்து இருக்கிறேன், என்றார்.

  திருத்தவே முடியாத பலர் நமது வட்டங்களில் ...

  இவர்கள் தமைச் சார்ந்த அலுவலகத்திற்கும்,சமூகத்துக்கு மட்டுமல்ல, தன வீட்டிற்கே தனக்கே ஒரு பாரமாக நாளடைவில் போய்விடுவதை பார்த்திருக்கிறேன்.

  தனது கடமைகளை உணராதவரை,
  தடி கொண்டு திருத்த இயலுமா என்ன ???

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 32. விஜயதசமி வாழ்த்துக்கள்.
  கவிதையாகட்டும்,அதற்கேற்ற பொன்மொழியாகட்டும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கின்றன.அக்குழந்தையின் படம் மனதைக்கொள்ளை கொள்கிறது.கவிதை எழுதிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.அதை அழகாக்கி தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்,நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 33. தங்களின் எந்தப்பதிவைத்தான் பாராட்டாமல் இருக்க முடியும்.. வழக்கம் போல அருமை அருமை..

  பதிலளிநீக்கு
 34. படைப்பு புதிய சிந்தனைகளை வரவழைக்கும்.

  பாராட்டுக்கள் - தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 35. குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா அவர்களுக்கு அடுத்த இடம் தனபாலன் அவர்களுக்கே. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 36. குழந்தைகள் பாக்கியம் செய்தவர்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி சிந்திக்கச் செய்து எழுத வைக்கும் தனபாலனின் அருமையை அவர்கள் உணர வேண்டும். தலைப்புக்கேற்ற பொன் மொழிகளைக் காட்டி அவர்களை மேலும் ஊக்குவிக்கும் உங்கள் உத்தி பாராட்டுக்குறியது தனபாலன்.

  பதிலளிநீக்கு
 37. சிறப்பான கவிதைகள்.
  அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 38. எல்லாமே அருமை தனபாலன் சார்.
  குறிப்பாக நவீன ஆத்திசூடி சூப்பர்.

  பதிலளிநீக்கு
 39. சிறப்பான கவிதைப் பகிர்வு!!.. குழந்தைகள் எழுதியது என்று போட்டிருக்கிறது.. ஆனால் எவ்வளவு அறிவு முதிர்ச்சி!!. வியக்க வைக்கிறார்கள்.. தங்களின் முயற்சி பாராட்டத்தகுந்தது. மேலும் இம்மாதிரி பதிவுகள் தொடர வேண்டுகிறேன். மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 40. அடடா அடடா.. சொல்ல வார்த்தை இல்லை.. பல்சுவை கலந்த சூப்பர் பதிவு...

  பதிலளிநீக்கு
 41. ”தன்னலம் தகர்த்து, பிறர்நலம் பேணு”... ஆமா.. ஆமா... இதுக்குத்தான் சொல்றது அதிராவுக்கு எல்லோரும் வோட் பண்ணுங்கோ என:)) ஆரு அதிராநலம் பேணீனம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்:)).. சரி சரி ஆரும் முறைக்கப்பூடா:)).. நீங்க உண்மையில் தன்னலம் கருதாமல் அனைத்தும் செய்றீங்க தனபாலன்...

  பதிலளிநீக்கு
 42. தனபாலன், நீங்கள் தன்னலம் தகர்த்துப் பிறர் நலம் பேண சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மிக அருமை.

  வெற்றியின் துளிகள், நவீன ஆத்திசூடி இரண்டும் மிக மிக அருமை.
  பொன்மொழிகள் எல்லாம் அருமை.
  அருட்தந்தையின் எண்ணம் ஆராய்தலிருந்து பகிர்ந்து கொண்டது மிக மகிழ்ச்சி.
  பொன் மொழி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்:- அருமை.வசதி இருக்கும் போது எளிமையாக இருப்பது தியாகம் மிக
  உண்மை.
  உங்கள் பகிர்வுகள் எல்லாம் நிதானமாய் படித்து கடைப்பிடிக்க தூண்டும் அருமையானவை.
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 43. குழந்தைகளின் படைப்புக்களையும் அதற்கு இணையான பொன்மொழிகளையும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 44. படைப்புக்கள் சிறப்பாக உள்ளன, பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 45. ";/நிழலாய்வா அப்போதுதான் என்னுடனே வருவாய்" amdkr'qi vmshyf.
  amdkr'qi jlsvd

  பதிலளிநீக்கு
 46. உண்மைக்காக எதை வேண்டுமானாலும் விடலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையை விடக்கூடாது - விவேகானந்தரின் பொன்மொழிகள் அருமை.
  ஷேக்ஸ்பியர்,பெர்னார்ட் ஷா, பெஞ்சமின் போன்ற வெளிநாட்டு அறிஞர்களுடன், நம் நாட்டு அறிஞர்களுடைய பொன்மொழிகளும் அருமை.
  புதிய ஆத்திசூடி எல்லாக் குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று.
  பாராட்டுக்கள், குழந்தைகளுக்கும், உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 47. குழந்தைகளின் கவிதைகள் அனைத்தும் அருமை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 48. சிறப்பான கவிதைகள். பாராட்டுகள்.

  புதிய ஆத்திச்சூடி மிகச் சிறப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 49. தங்களது பதிவில் இப்போது வரும் படங்களை பார்த்து பிரமித்தேன்,....இன்னும் நிறைய CSS image hover effect மூலம் செய்யுங்கள் ...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. மிகவும் அருமை ..
  ஒவ்வொரு வரியும் சிந்திக்க தூண்டும் முத்துக்கள்

  பதிலளிநீக்கு
 51. எனக்கு ரொம்ப பிடித்தது புதிய ஆத்திசூடிதான் ரொம்ப நல்ல கீது...

  பேஷ் பேஷ்.

  அப்புறம் எப்படி இப்படி ஒரு வடிவமைப்பு .... பலூன் பகுதி வேறு... ரொம்ப அருமை... உங்கள் பலூன்கள் ஜோர்.

  ரொம்ப மெனெக்கெட்டு பதிவிடுகிறீர்கள்....

  ஒரு முத்திரையை பதிப்பது என்றால் சும்மாவா?

  பதிலளிநீக்கு
 52. நண்பர்களின் பதிவை copy செய்யும் போது அவர்களின் இணைப்பையும் கொடுக்கவும்... மிகவும் சந்தோசப்படுவார்கள்... நன்றி...

  அறிவாளி என்பதன் எதிர்பதம் என்ன? : http://pandianpandi.blogspot.com/2013/10/blog-post_14.html - See more at: http://www.thamizhmozhi.net/2013/10/blog-post_3804.html?showComment=1381974576500#c1570449394266754900  //நான் முகநூலில் என் நண்பர் பகிர்ந்ததைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டேன். பொதுவாக யாருடை வலைப்பூவிலும் தகவல்களை நகல் எடுப்பதில்லை. நான் எடுத்திருந்தால் நிச்சயம் கீழ் இணைப்பு அல்லது தள பெயரைக் கொடுத்திருப்பேன்.நீங்கள் தெரிவித்த வலை முகவரியை நீங்கள் பதிந்தபின் தான் நானே அறிவேன்... உதாரணமாக http://www.thamizhmozhi.net/2013/10/blog-post_3878.html?showComment=1381631111620#c4461975086013376547

  இப்பக்கத்தில் இருக்கும் தகவல் தினமலர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என இருக்கும். // முகநூலில் இருந்து நிறைய செய்திகளை என்னைப் போலவே மற்றவர்களும் பகிர்கின்றார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகின்றது. தங்கள் ஆலோசனைக்கு என்னுடைய வணக்கங்களைக் கூறிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 53. அருமையான முயற்சி
  ஆமா தனபால் தம்பி திண்டுக்கல் என்று எதற்கு பேர் வந்துச்சு ?
  தனபால் என்ற உங்கள் பேர் நீங்கள் உங்களுக்கு வைத்ததா ?
  இல்லை உங்கள் மாமன் வைத்த பேரா ?
  நீங்க ஆசைப்பட்டு இன்னும் போகாத இடம் எது ?
  கனவும் கற்பனையும் இல்லாத மனுஷனை நீங்கள் பார்த்தது உண்டா ?
  கேள்விகள் ஆயிரம் ஆயிரம் கேட்கலாம் நான்
  நான் யார் ?என கேட்க சொல்லிய ரமணர் பாதையில் நடப்போம் ....................நான்யார் ?
  கோயம்புத்தூர் பாலு என்கிற நான் யார் ?
  இந்த எழுத்தும் இதை எழுதுகிற நானும் எழுதுகிற நீமிஷதில் ஒன்றென் உணர்ந்த சாதாரண மனுஷன் நான் .

  பதிலளிநீக்கு
 54. நெஞ்சில் சிந்தையைத் தூண்டும் பதிவு நண்பரே..
  நவீன ஆத்திசூடி மிகவும் அருமை...

  பதிலளிநீக்கு
 55. பள்ளிக்குழந்தைகளின் படைப்புக்கள் என்றாலும் கருத்துக்கள் இமயமாய் உயர்ந்து நின்றது. படைப்பாளிகளின் பெயர்களையும் சேர்த்து வெளியிடலாமே! நன்றி!

  பதிலளிநீக்கு
 56. மழலைகள் உணர்வில் நாவில்
  மயக்கங்கள் இல்லை என்றும்
  தளிரவை ஆக்கம் எல்லாம்
  தந்ததே இன்பம் ஒன்றாய் ..!

  மருகிடா மாண்பு கொண்டு
  பருகிட தந்தீர் நீங்கள்
  தருநிழல் குளுமை போலே
  உருகுதே உள்ளம் சேர்ந்து...!

  அத்தனையும் முத்துக்கள்
  ஆக்கம் தந்த சிறுவர்களையும் நெஞ்சார வாழ்த்துகிறேன்

  தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்

  வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 57. படி - நவீன ஆத்திசூடி
  பன்னிரு உயிர் முதலெழுத்தாக வர
  படி! படி! படி! எனச் சிந்திக்கவைத்து
  வழிகாட்டும் பாவைப் படித்தேன்
  சிறந்த பதிவு!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.