🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!

வணக்கம் நண்பர்களே... (படம் : தாயில்லா பிள்ளை) /// கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு... நாம் எட்டிசென்றால் சுடும் நெருப்பு என்ன‌ நெருப்பு...? ஒட்டும் இரு உள்ள‌ம் த‌ன்னில் ப‌ற்றிக் கொண்ட‌து... அந்த‌ புத்த‌ம்புது நெருப்பைத் தானே காத‌ல் என்ப‌து...! க‌விஞ‌ர் சொன்ன‌து...! படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா... DD : பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா... நான் படிப்பதெங்கே...? புதிய பாடம் வாத்தியாரம்மா...!


அதிகாரம் 113 ♥♥♥ காதற்சிறப்புரைத்தல் ♥♥♥

(காதலன் → காதலி) என் கண்மணிக்கு ஓர் மடல்...

அன்பே... ! பாலும் தேனும் கலந்திணைந்து சுவை தருவதைப் போல, வெண் முத்துப் பற்களிடையே உமிழ்நீர் சுரக்கும் சுவையிதழ் முக்கனியே...! சத்தமில்லாமல் என்றும் இனிய மொழி பேசும் என் அமுத செல்லமே !

உடம்பிற்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவல்லவோ நமது உறவு...!

என் கருமணி உட்படக் கண்கள் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் உன்னைத் தவிர, என் பார்வைக்கு வேறு பாவைக்கு இடமேது விண்மணியே...?

அரிய பண்புகள் பல தெரிந்தும், அன்பையே அணிகலன்களாகக் கொண்ட என் வைரமே... உயிர் இழந்து தவிக்கும் இந்த உடலுடன் நீ இணைந்தால் தான் உடலுக்கு உயிர் வரும் என்பதும் அறிவாய் தானே தங்கக் கடலே...?

பண்புகள் மட்டுமா என் குணவதியே... ஒளி வீசும் உனது கண்களைப் போல நற்குணங்களைக் கொண்ட உன்னை நான் நினைப்பதே இல்லை... மறந்தால் தானே நினைப்பதற்கு...? முழுமதியே... தொழுமழகே... அங்கே நான் எவ்வாறு ? என் கவிதையே...! கண்மணியே...!! கற்கண்டே...!!!


(காதலி → காதலன்) என் உயிருக்கு ஓர் மடல்...

எனது கண்ணை மூடி இமைத்தாலும் வருந்தாத நுட்பமான அறிவுடைய என் காதலரே... என் கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக முடியுமா என்ன...?

ஐயகோ... கண்ணுக்கு மை தீட்டினால் எங்கே நீங்கள் மறைந்து விடுவீர்களோ என்று பயந்து மை தீட்டாமல் உள்ளேன் என் கண்ணாளனே...!

அது மட்டுமா...? சூடான பண்டங்களைச் சாப்பிட்டால் நெஞ்சில் வாழும் உங்களுக்குச் சுட்டு விடும் என அஞ்சுகிறேன் என் நெஞ்சாள்பவனே...!

கண்ணுக்குள் இருக்கும் நீங்கள் மறைந்து விடுவீர்கள் என்று கண்களை இமைக்காமல் காத்திருப்பதைக் கண்டு, சுற்றத்தார் உங்களது அன்பைப் புரிந்து கொள்ளாமல் முழிக்கிறார்கள் எனதன்பின் கள்வனே...! காதல் வீரனே...!

உருவம் தான் இரண்டானாலும், உள்ளத்தில் ஒருவராக அன்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை உணராத ஊர் மக்கள், பலவற்றைப் பழித்துரைப்பது வேடிக்கையாக உள்ளது எனது வசீகரனே...! நாம் அறிவோம்... நம் காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!


(படம் : பெற்ற மகனை விற்ற அன்னை) தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும், கண்கள் உறங்கிடுமா...? காதல் கண்கள் உறங்கிடுமா...? காதல் கண்கள் உறங்கிடுமா...? ஒன்று கலந்திடும் நெஞ்சம், உறவை நாடி கெஞ்சும்...! கண்கள் உறங்கிடுமா...? காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா...? (நீங்கள் தான் சொல்லணும் காதல் உள்ளங்களே...!)
காதல் கடிதம் பரிசுப் போட்டி விதிமுறைகள் - திடங்கொண்டு போராடு :இங்கே

© பேசும் தெய்வம் வாலி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫

இன்றைக்கும் அசத்திக் கொண்டிருக்கும் கவிஞர் வாலி அவர்களின் ஆரம்பக் காலக் காதல் கடிதம்... (எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்... ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்...) ஏட்டளவில் - வலைப்பதிவளவில் கொஞ்சமாகக் கொஞ்சி, காதல் தரும் பல வித உணர்வினை பகிர்ந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி...

நிலவே... மலரே... இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அடா அடா வாசிச்சாலே காதலிக்கணும் போல இருக்குதே..............

    அனுபம் நிறையப்போல......துள்ளி வருகுது வர்ணனைகள்

    ஹி ஹி சுப்பர் அண்ணே

    பதிலளிநீக்கு
  2. திருக்குறள் டிஸ்ப்ளே செய்திருக்கும் விதம் சிறப்பு, அழகு.
    இதே படத்தில் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல...' என்றொரு பாடல் உண்டு. அதன் வரிகளும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பத்தாவது படித்த போது இனிக்கத்தான் செய்தது. வரவேண்டிய பாதி மதிப்பெண்களை காணாமல் போக வைத்தது.

    பதிலளிநீக்கு
  4. உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் ஓர் இனிய இதயச் சுவடி .பாட நூல்களில் பதிவுச் செய்ய வேண்டிய பதிவுகளை தொடர்ந்து தரும் உங்கள் ஆற்றல் உயர்வானது .வளர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  5. என் கனகா இந்தப் பாட்டையும் எழுதி இருப்பாள். அந்தப் படம் அப்போது வரவில்லை.:)))
    அருமையான பதிவு.பாடலும் உங்கள் கடிதமும்,திருக்குறளும் வெகு அருமை. அன்றையப் பாடல்களைக் கேட்பதே இனிமை.காதல் வராமல் போய்விடுமா என்ன. வாழ்த்துகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  6. திருக்குறளை மேற்கோள் காட்டியே காதல் கடிதம் எழுதுவது எப்படி என சொல்லிவிட்டீர்கள். நன்று. வாழ்த்துக்கள் நல்ல திரைப்படப் பாடல்களைத் தந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  7. ராமதாஸ் வகையற காதலை எதிக்கும் நேரத்தில் காதலை வாழ்த்தியமைக்கும் நன்றி,,,, வாழ்க காதல்

    பதிலளிநீக்கு
  8. நீங்களும் எழுதலாமே காதல் கடிதம்

    பதிலளிநீக்கு
  9. வள்ளுவர் காலத்து காதலர்கள் சூடானதை சாப்பிடக்கூட அஞ்சினார்கள் என்றால் அவர்கள் உண்மையான காதலர்கள் !இப்போ ..காதலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உண்பதெல்லாம் சுடச்சுட FASTFOOD தான் !

    பதிலளிநீக்கு
  10. அந்தப் படகுத் துறையில் பேனாவும் காகிதமுமாக நடிகர் திலகம் ஒரு ராஜாங்கமே நடத்திக் காட்டியிருப்பார். கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!.. குறள் 1121ல் பனிமொழி - என்றிருக்க வேண்டும்?...

    பதிலளிநீக்கு
  11. பல நண்பர்களின் நீங்கா நினைவுகளை நினைவு படுதிருக்கிரீர்கள் என்றால் நண்பர்களுக்கு கோபம் வரும் "மறந்தால் தானே நினைக்க" நினைவை அதிக படுத்தி வீட்டீர்கள்.நண்பரே உங்க மக்களை பெற்ற மகராசி கொடுத்து வைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் பரபரப்பு நேரத்தில் படிக்கவேண்டியாதாயிருக்கிறது....

    இருந்தாலும் அழகு....
    ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள தனபாலன்..

    வணக்கம். தவறாமல் என்னுடைய பதிவிற்கு வந்து கருத்துரைக்கும் உங்களுக்கு நான் நிரம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என்னுடைய பணியின் இறுக்கம் காரணமாகத் தொடர்ந்து வரவியலாத சூழல் உள்ளது. இருப்பினும் உங்கள் வலைப்பக்கம் வந்தால் பயமாக இருக்கிறது. ஏனென்றால் எத்தனை விதமாக வித்தைகள் காட்டுகிறீர்கள். விதவிதமாக வண்ணம். கருத்துக்கள். அருமையாக உள்ளது. என்னென்னமோ பயன்பாடுகள். எனக்கு இதெல்லாம் தெரியாது. கற்றுக்கொள்ளவேண்டும். கணிப்பொறியில் புகுந்து விளையாடுகிறீர்கள் தனபாலன். அதேசமயம் மற்றபதிவர்களுக்கும் உபயோகமான தகவல்களையும் பரிமாறிக்கொள்கிறீர்கள். உங்களின் பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  15. திருக்குறளின் துணைக்கொண்டுக் காதல் மழையாக படைத்துள்ளீர்கள் .அருமை.

    பதிலளிநீக்கு
  16. காதல் என்பதே தெவிட்டாதது, அதுவும் உங்கள் வார்த்தைகளில் இந்த காதலை பற்றிய பதிவு இன்னும் அருமை. நன்றி, தொடர வாழ்த்துக்கள்....ஊடலை பற்றியும் நீங்கள் எழுதலாமே.


    அது எப்படி உங்களது தளமும் செல்ல மறந்த இடங்கள் பட்டியலில் உள்ளது என்று கூறலாம் ? உங்களது பதிவு போட்டவுடன் முதலில் படிப்பவன் நான், கருத்துக்கள் இட நேரம் இடம் தரவில்லை என்றால் நான் படிக்கவில்லை என்று ஆகிவிடுமா என்ன ? மிகவும் புண்படுத்தியது உங்களது வரிகள்....

    பதிலளிநீக்கு
  17. குறள் வழியில் பதிவை கொண்டு செல்லும் அழகு அருமை.. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. காதல் எனும் அழகிய உணர்வை அழகாக பதிந்திருக்கிறீர்கள். அருமை. மேலும் தொடர்க!

    பதிலளிநீக்கு
  19. தமிழ் ஊற்று இப்படி பொங்கி சிறப்பிக்குதே தனபால், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு

  20. காதலின் சிறப்பே சற்று மிகைப் படுத்திக் கூறலாகும். உங்கள் பதிவில் காதல் மடலுக்குத் துணைபோக வள்ளுவரும் திரை இசையும் ஓடோடி வருகின்றது. வாழ்த்துக்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  21. காதல் கடிதம் போட்டிக்கு எழுதுபவர்களுக்கு உதவும்படியாக குறள் எடுத்துக் கொடுத்துவிட்டீர்கள்!

    இவற்றைவைத்துக் கொண்டு நீங்களே ஒரு அருமையான கடிதம் எழுதிவிடுங்களேன்!

    பழைய இனிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சிதான்!

    பதிலளிநீக்கு
  22. சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
    பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
    கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. இன்பத்துப் பாலை இனிய விளக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  24. பாடலும், திருக்குறளும் அருமை! பதிவைத் தொகுத்த விதமும், அழகும் சிறப்பாக உள்ளது! வாழ்த்துக்கள் தனா!

    பதிலளிநீக்கு
  25. அப்பப்பா என்ன பல காதல் மொழிகள்..!!!!
    .தனபாலன் மிக மிக இனிமை! அசத்திவிட்டீர்கள்.
    மிகவாக ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  26. அட... உங்களையும் காதல் இழுத்துக்கொண்டு வந்திட்டுதே...

    அருமை!அத்தனையும் தருதே
    காதலுக்குப் பெருமை!

    வாழ்த்துக்கள் தனபாலன் சார்!...

    பதிலளிநீக்கு
  27. தேடிப்பிடித்து அனைத்து காதல் வர்ணணைகளையும் கொடுத்துவிட்டீர்கள் போல அசத்தலான பாடல்களும் என்ன சொல்ல இதமான பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  28. காதலுக்கு மரியாதை செய்த உங்களுக்கு வாழ்த்துகள்...

    காதல் என்பது சட்டென விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளக்க முடியாத ஒரு உணர்வு. அனுபவிக்கும் போது நாம் காதல் வயப்பட்டிருகின்றோம் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. காதல் அனுபவம் முடிந்த (?​) பிறகு, ஏன் காதலித்தோம் என்ற கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாது. காதலிக்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். அது தொடர்ந்து நீடிக்கும் போதுதான் அதாவது 'எல்லாவற்றையும் மறத்தல்' நீடிக்கும் போதுதான் காதல் தொடர்ந்து இருக்கின்றது. ஆனால் இது சாத்தியமா..? எந்த வயதில் வரும் காதல், உள்ளபடியான காதல் ? பதில் தேட வேண்டிய மற்றொரு கேள்வி !

    உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  29. "படிக்க வேணும் புதிய பாடம்..." கே.வி.மகாதேவனின் இன்னிசையில் அறுபதுகளில் அனைவரையும் கவர்ந்த பாடல். இன்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
  30. அச்சச்சோஒ காதல்பற்றி அத்தனை அண்டவாளாம் தண்டவாளமெல்லாம் நீங்களே சொல்லிட்டீங்க:))) அப்போ இனி எப்பூடித்தான் எல்லோரும் காதல் கடிதம் தீட்டப்போகினமோ தெரியேல்லையே ஜாமீஈஈஈ:)).

    பதிலளிநீக்கு
  31. காவியமாய் நெஞ்சில் ஓவியமாய் தீட்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. இதைத் தொகுத்து நீங்களும் போட்டியில் பங்குபற்றலாமே.. பரிசு உங்களுக்கே...

    பதிலளிநீக்கு
  33. வள்ளுவர் குரளுக்கு உங்களின் இனிமையான விளக்கம் அருமை! ஒவ்வொன்றையும் ரசித்தேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  34. காதல் என்றதும் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுகிறார்கள்...!!

    அருமையான போட்டி வைத்துள்ளார் சீனு அவர்கள். அதில் பங்குபெறுபவர்கள் உங்களின் பதிவைப் படித்தாலே போதும்.
    நீங்களும் பரிசுபெற வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  35. திருக்குறள் அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. பழைய பாடல்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. காதல் இனிமையான ஒரு உணர்வுதானே சகோ!

    பதிலளிநீக்கு
  38. கண்ணுக்கு மை தீட்டினால் எங்கே நீங்கள் மறைந்து விடுவீர்களோ.. அடேயப்பா வள்ளுவன் மிகச் சிறந்த காதலன்


    மிக அருமையான பதிவு சார்... போட்டி பற்றி தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  39. திருக்குறள்...பழைய பாடல்கள்...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  40. அன்பான வார்த்தைகளில் அழகிய தொகுப்பு !

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  41. காமத்துப்பாலுக்கான தங்களின் விளக்கம் எல்லா வயதினருக்கும் சுவைக்கும்.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  42. நல்ல செய்தி. புதுமையான முறையில் கூறியது அதிலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  43. காமத்துப் பாலின் திருக்குறள்கள் தொகுத்துக் கொடுத்திருக்கும் விதம் அருமை.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  44. இதுவரை இந்த அதிகாரம் கண்ணில் பட்டதில்லை, வழக்கம் போல் சிறப்பான குறள் விளக்கம்.

    பதிலளிநீக்கு
  45. அண்ணே!
    நல்ல முயற்சி உங்களுடையது!

    ரசித்தேன்!
    மகிழ்ந்தேன்!

    அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
    அவர்கள்.
    மலரிலும் மெல்லியது-எனும் கவிதபுத்தகம் எழுதியுள்ளார்.
    அதில் காமத்துப்பால் குறள்களை வைத்து புதுகவிதைகள் தந்திருப்பார்.
    அதனை நினைவூட்டியது.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  46. அருமையான் பாடலும் காதல் கருத்தும் திருக்குறள் விளக்கமும் ரசிக்கும் பதிவு வாழ்த்துக்கள் தொகுப்புக்கு!

    பதிலளிநீக்கு
  47. திருக்குறளை மேற்கோள் காட்டியே காதல் கடிதம் எழுதுவது எப்படி என சொல்லிவிட்டீர்கள். நன்று. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  48. எங்கும் காதல் மயமாயிடுச்சே!

    அருமையான குறள் - எழுத்துரு ரகசியம் என்னா வாத்தியாரே?

    பதிலளிநீக்கு
  49. சூடான பண்டங்கள்... இது கல்லூரி நாட்கள்ல நான் மிகவும் ரசித்த ஒரு குறள்.

    நீங்க எழுதியிருக்குறதை கட்/பேஸ்ட் பண்ன முடியலியே? இதான் டெக்னிக்கா?

    பதிலளிநீக்கு
  50. காதல் எல்லா காலத்திலும் இனிமையானது.. அருமையான குறள் மற்றும் பாடல் விளக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  51. அழகியபாடல்களுடன், குறளையும் இணைத்து ஒரு காதல்கடிதம் வரைந்துவிட்டீங்க. தந்திருக்கும் திரைப்பாடல் இனிமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. திடம கொண்டு போராடு அறிவித்த காதல் கடிதம் எழுதும் போட்டியாளர்களுக்கு அழகான குறிப்புகள் கொடுத்து விட்டீர்கள். திருக்குறள் படிங்க அழகான காதல் எழுதலாம்னு சொல்லாம சொல்லிடீங்க.
    ஸ்பீக்கர் ரிப்பேர் ஆனதால பாடல் கேட்க முடியல.
    நல்ல தொகுப்பு

    பதிலளிநீக்கு
  53. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    குறள் வழிக் கவிதை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  54. திருக்குறள் தொகுப்பு அருமை ஐயா.

    கடிதப் போட்டி குறித்த அறிவிப்பை தங்களது தளத்தில் கண்டு தான் கலந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  55. காதல் வர்ணனை இதுவரை கேட்டிலாத வகையில் ஆச்சரியப்பட வைத்தது. நூறு பர்ஸன்ட் காதல் இந்த வகைதான். மிகவும் ரஸிக்க வைக்கிரது.
    எவ்வளவு பின்னூட்டம் கொடுக்கும் உங்களின் பகிர்வு ஸூப்பரோ,ஸூப்பர்.

    பதிலளிநீக்கு

  56. வணக்கம்!

    வள்ளுவன் பாடிய வண்டமிழ்க் காதலை
    அள்ளிப் பருகி அகமகிழ்ந்தீா்! - தெள்ளிய
    நீா்காட்டும் காட்சிபோல் நேரிய உன்பதிவு
    சீா்காட்டும் என்றும் செழித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  57. எப்படித்தான் இவ்வளவு தகவல்களைத் திரட்டி அற்புதமாக பதிவை இட முடிகிறதோ? ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரே பிரச்னை, உங்கள் தளம் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. பின்னூட்டம் இடவும் கடினமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  58. எப்படிங்க இப்படியெல்லாம்? அருமை.

    பதிலளிநீக்கு
  59. பாடல் அழகு... வள்ளுவர் குரலும் அழகு...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  60. பாராட்டுக்களும் நன்றியும். இனிமையான பாடல் இணைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  61. .

    வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.

    வள்ளுவன் வாழ்வாங்கு வாழ்ந்தவன்

    உலகத்தே வந்தவர் நெஞ்சத்தில் நிற்பவன்

    அவனே சொல்லிவிட்டான்.

    அப்பீல் உண்டா..?

    காதல் அப்படிங்கற கடல்லே குளிச்சவங்க இருக்காங்களே

    வாழ்தல் என்பதில் இருக்கும் சுகமும் தெரியும்.

    திண்டுகல் தனபாலன் அவர்களே !!

    உங்கள் வருகைக்கு நன்றி.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  62. அருமையான தொகுப்பு.

    பாடல் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  63. அரும்பும் காதலை
    விரும்பும் வகையில்
    அழகாய்ப் பதிந்தீர்...
    சிறந்த படைப்பு!

    பதிலளிநீக்கு
  64. இதன்மூலம் காதல் அழகு பெற்றது.

    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  65. காதல் என்பது காமத்தின் ஒரு பகுதி
    பெற்றோர்க்கு நாம் பட்டகடன்
    அவர் கணக்கில் வராகடனாய்
    ஆகிவிடும்

    உண்மைகாதல் என்பது
    பெற்றோரை ஏமாற்றியதால் வருவது

    பதிலளிநீக்கு
  66. ஆகாகா... அருமைங்க.. கலக்குங்க!

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.