🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சிறந்த பத்து (நண்பர்கள்)

வணக்கம் நண்பர்களே, "உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்... நான் உங்களைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வார்கள்... இன்று எனது வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களின் சிறப்புகளை, அவர்களே தன்னிடம் பிடித்தவற்றை உங்களுக்குச் சொல்கிறார்கள்...!



நண்பர் 01 : "சிறந்த ஒழுக்கமுடையவராய் வாழ்தல்"

நண்பர் 02 : "தம் செயலால் தம்மைப் பிறர் போற்றும்படி வாழ்தல்"

நண்பர் 04 : "வாய்மையுடையவராய் வாழ்தல்"

நண்பர் 05 : "நோயின்றி வாழ்தல்"

நண்பர் 06 : "பழிபாவங்களைச் செய்ய நாணுதல்"

நண்பர் 07 : "சிறந்த கல்வி உடையவராய் இருத்தல்"

நண்பர் 08 : "கற்றறிந்த பெரியோரை வழிபாடு செய்பவராய் இருத்தல்"

நண்பர் 09 : "தம் பகைவரை அழித்தலினும் தம்மை உயர்த்திக் கொள்ளுதல்"

நண்பர் 10 : "இளமையிலும் ஈட்டிய செல்வம் முதுமையிலும் குறையாதிருக்கும் படி வாழ்தல்"

" சிறந்த பத்து "
(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை. (01)

காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். (02)

மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை. (03)

வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை. (04)

இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை. (05)

நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. (06)

குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. (07)

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. (08)

செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று. (09)

முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று. (10)

நண்பர்களே... உங்களிடமே இருக்கும் நண்பனைக் கண்டு கொண்டீர்களா...? இல்லை, இந்த நண்பர்களைச் சந்தித்த ஞாபகம் வருகிறதா...? "இந்தப் பதிவு சிறந்த பத்து பதிவுகளாக இருக்கும்" என்று நினைப்பது தெரிகிறது... அதான் பக்கத்திலுள்ள, முன்னணி பிடித்த பத்து பதிவுகள் (Popular Posts Widget)-இல் உள்ளதே. அப்பப்போ மாறுமே. நாம கூட கொஞ்சம் மாறுவோம் என்று தான் !

திருவள்ளுவர் "நீ நிறையக் குறள்களைப் பதிவுகளில் நகலெடுத்து ஒட்டுகிறாய் (copy and paste) என்று சொல்லி விட்டாரா...! அதனால், திருக்குறளுக்குப் பதில் இந்த முறை எடுத்துக் கொண்டது, மதுரைக் கூடலூர்கிழார் அவர்களின் முதுமொழிக்காஞ்சியில், எனக்குப் பிடித்த முதல் (1) சிறந்த பத்து...

[ மற்றவை : (2) அறிவுப் பத்து (3) பழியாப் பத்து (4) துவ்வாப் பத்து (5) அல்ல பத்து (6) இல்லைப் பத்து (7) பொய்ப் பத்து (8) எளிய பத்து (9) நல்கூர்ந்த பத்து (10) தண்டாப் பத்து ] ஐயன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை... ஒரே ஒரு குறள் : (391)

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மனசாட்சி : இந்தக் குறளின் ஒவ்வொரு சொல்லுக்கும் நிறைய எழுதலாம்... சரி... மேலே மூன்றாவது விளக்கம் எங்கே...? மறக்கக் கூடாதே...!

நன்றி மனசாட்சி... அறிவில் மேதையாய் இருப்பதைவிடக் கற்ற கல்வி எதுவானாலும் மறக்காமல் இருப்பது மிகவும் சிறப்புடையது...(03)

இந்த நண்பர்கள் வரம் ஏதோ கேட்கிறார்கள் இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பத்து நண்பர்கள்....ரசித்தேன் ருசித்தேன் நன்றி...!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு... முதல் பத்தில் ஏதாவது ஒன்று இருந்தாலே மிகப்பெரிய விஷயம்...

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பத்து நண்பர்கள் என்றவுடன் என்னைப்பற்றிதான் சொல்லப்போரீங்கனு ஓடோடி வந்தேன்.. :)))) நல்லவேளை... நீங்க சொன்ன நண்பர்கள் எல்லோருமே உலகின் சிறந்த நண்பர்கள்...அருமை.. (tm2 )

    பதிலளிநீக்கு
  4. மேற்கூறிய இரு பத்துகளுமே அற்புதமானவை. முதுமொழிக்காஞ்சி படித்த நினைவிருக்கின்றது. மீண்டும் தேடிப்படிக்கின்றேன்.

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்துடன் கூடிய பதிவு . உங்களின் தேடல்களும் அதனூடான பதிவுகளும் மிக அருமையானவை ஐயா.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மேற்குரிய பத்து நண்பர்களும் எல்லோருக்குளும் கண்டிப்பாக இருக்க வேண்டியவை... உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. நல்லவேளை கடவுள் பக்தி அப்படினு ஒரு நட்பு இருந்ததுனா ஒரு நட்பை இழந்திருப்பேன்...இருக்குற நட்பை பத்திரமாகவும்,இல்லாத நண்பர்களை தேடவும் நினைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பத்து நண்பர்கள் யாராக இருக்கும் என்று பார்க்க வந்தால்...கலக்குறிங்க...

    பதிலளிநீக்கு
  9. அப்ப... நம்மைச்சுற்றி ஒரு பத்து பேர் இருப்பது நல்லாத்தான் இருக்கு!!!

    பதிலளிநீக்கு

  10. பத்து பத்து என்ன என்ன எனக் கேட்க‌
    பறந்தே ஓடி வந்தேன்.

    பத்தென நீங்கள் பகரும் பண்புகள் பலவையுமே
    பற்றிட வேண்டுமென பாங்குடன் எண்ணிய போதே
    பசி வந்திடப் பத்தும் பறந்தே போகும் என்ற‌
    பழமொழியை நினைத்தேன். தொலைந்தேன்.

    பத்தும் மறக்க வொண்ணா
    பாழும் உலகமிது.


    அந்தப்பத்து இதுவே.

    மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
    கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
    பசி வந்திடப் பறந்து போம்

    (நல்வழி பாடல் 26)

    அந்தப் பசி என்ன என்பதை
    சொல்லித்தெரியவேணுமா என்ன ?

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  11. அருமை சார் ,நல்ல நண்பர்களை அறிந்து கொண்டேன் .11 ம் நல்ல நண்பர் தனபாலன் சார் ! மறந்துடிங்க !

    பதிலளிநீக்கு
  12. முயன்றால் அனைவரும் நிச்சயம்
    அடையக் கூடிய நண்பர்களே
    வாழ்வில் சிகரம் தொட அனைவரும்
    அவசியம் தேவையான நண்பர்களே
    தொடர்ந்து பயனுள்ள பதிவுகளைத்
    தருவதற்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  13. பாங்குடன் அளித்த பகிர்வுகள்
    பத்தும் முத்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  14. எனக்குள்ளே இவ்வளவு நல்ல நண்பர்களா! அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  15. நம் வாழ்வை நெறிப்படுத்தும் அற்புதமான வழிகளை இந்த பதிவில் கூறி உள்ளீர்கள்..நன்றி

    பதிலளிநீக்கு
  16. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பத்தில் சுட்டி காட்டிவிட்டேர்கள் அண்ணா நட்புக்கு மட்டும் இது பொருந்தாது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  17. அருமை. இன்னும் உங்களிடம் இருந்து இதுபோன்ற நல்ல கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் நண்பர்களை எனக்கும் பிடித்திருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  19. சிறந்த பத்து நண்பர்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. உண்மையில் பத்தும் பத்துத்தான்..
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  21. அன்பின் தி.தனபாலன்

    தேர்ந்தெடுத்துத் தந்த இரு - பத்தும் சிறப்பானவை. பணிச்சுமைக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல கருத்துகள் - நல்வாழ்த்துகள் தி.தனபாலன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  22. நன்றாகவே சொல்லி இருந்தீர்கள். நான் ஒரு நாலடியார் பாடலையும் அதன் உரையையும் மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
    - நாலடியார் 213

    (பொ-ள்.) யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங் கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும்.

    பதிலளிநீக்கு
  23. அருமை அருமை... முற்றிலும் உண்மை

    மிக்க நன்றி பகிர்வுக்கு

    அமர்க்களம் கருத்துக்களம்
    www.amarkkalam.net

    பதிலளிநீக்கு
  24. நம் எல்லோருக்குமே இவர்கள் எல்லோரும் சிறந்த பத்து நண்பர்பகளாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்.

    இந்த எல்லாப் பத்துகளும் கொண்ட உங்களை நண்பராக அடைந்தது எங்கள் (பதிவர்கள்) வாழ்வில் பதினோராவது முத்து.

    அருமையான பின்னூட்டங்கள் உங்கள் பதிவுக்கு பெருமை சேர்க்கின்றன.

    குறிப்பாக திரு தமிழ் இளங்கோ அவர்கள் எழுதிய நாலடியார் பாடல்!

    பதிலளிநீக்கு
  25. அருமையான பத்து நண்பர்கள் அருமை கருத்துகள் நன்றி

    பதிலளிநீக்கு
  26. முத்துக்கள் பத்து ...எல்லாமே அருமைங்க சகோ இப்படிப்பட்ட நட்புக்கள் இருந்தால் வெற்றி நம் கையில்

    பதிலளிநீக்கு
  27. நீங்கள் தொகுத்த பத்து அனைத்தும் முத்துக்கள்! பிடியுங்கள் வாழ்த்துக்களை!

    பதிலளிநீக்கு
  28. தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னைக்கவர்ந்தவை அய்யா மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  29. பத்தும் மிகச்சிறந்த முத்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. நண்பனுக்கு நண்பன்
    எனக்கும் நண்பன்.

    பகிர்வு அருமை தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  31. அசத்தல் ஐயா உஙக டாப் 10 லிஸ்ட். முதுமொழிக் காஞ்சியா...? நான் படிச்சதில்லையே... உடனே படிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. தேடிப் பாக்கறேன் புத்தகம் கிடைக்குதான்னு. மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  32. சிறந்த பத்து நண்பர்களை முது மொழி காஞ்சி வாயிலாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! கடைபிடிக்க முயற்சிப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  33. போங்கண்ணா, என் ஃப்ரெண்ட்ன்னு தலைப்பிட்டு எங்க பேருலாம் போடுவீங்கன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  34. பத்தும் மிகச்சிறந்த முத்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  35. முத்தான பத்துக்கள்.பாஸ் மார்க் வாங்கவாவது முயற்சி செய்யவேண்டும்

    பதிலளிநீக்கு
  36. நோய் நோடி எல்லா சமயத்திலும் நாமாகத் தேடி வாங்கிக் கொள்வதில்லை தனபாலன், வேண்டாம்னாலும் வரும் அதனால நட்பு இல்லைன்னு ஆயிடுமா? இரண்டாவது பத்து சரியான அர்த்தம் புரிந்து கொள்ள கஷ்டமாய் இருக்கிறது, எளிய தமிழில் தர முடியுமா!!

    பதிலளிநீக்கு
  37. சிறந்த பத்து நண்பர்கள் யார் யார்? இப்போது என் மனதில் இந்த கேள்விதான் எழுகிறது.. தேடி கண்டுப்பிடிக்கணும். அருமையான பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. பத்துப் பத்தாக எழுதியவை சொத்துகள்.
    முத்தான இவையிருந்தாலவன் செல்வந்தன்.
    மிக்க நன்றி தனபாலன்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  39. சிறப்பான பத்து நண்பர்கள்.

    நல்ல பகிர்வு நண்பரே.

    பதிலளிநீக்கு
  40. பத்தும் மிக அருமை; நான் ஏதோ நம்ம பேரு வரும்னு நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
  41. "பல புத்தகம் படிப்பவர் பண்டிதன் ஆவார்"
    என்பது சரிதான்.

    பதிலளிநீக்கு
  42. நல்ல நண்பர்களை அடையாளம் காண நல்லபதிவு.

    பதிலளிநீக்கு
  43. வெகு சிறந்த பத்து மந்திரங்கள் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  44. என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html

    நன்றியுடன்,
    சிவஹரி

    பதிலளிநீக்கு
  45. அருமையான பதிவு. பத்தும் முத்துகள். தி.தமிழ் இளங்கோ அவைகளின் நாலடியாரும் நல்ல பின்னூட்டம். வாழ்த்துகள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  46. இலக்கியம் என்றாலே மக்கள் ஒரு அடி பின் வாங்குவார்கள்.செய்யுளின் விளக் கதையும் எழுதுங்கள் .நல்ல பதிவு !

    பதிலளிநீக்கு
  47. பத்துக்கள் அனைத்தும் பற்றிக் கொண்டன மனதை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  48. நல்லது சொல்கிறீர்...நன்றி..

    ப்ரியமுடன்
    -வீரா

    பதிலளிநீக்கு
  49. சிறப்பான நண்பர்கள்பா...

    வாழ்க்கைக்கு தேவையானவர்கள் கூட...

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் பகிர்வுக்கு....

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  50. முதுமொழிக்காஞ்சியின் பத்துக்களும் இனிய 10 நண்பர்களும் மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  51. இந்த பத்து நண்பர்கள் இருப்பவர்கள்தான் அரசியல்வாதியாக முடியும்னு சட்டம் போடனும்.

    பதிலளிநீக்கு
  52. நல்ல பதிவு சார். நல்ல நல்ல நண்பர்கள் பற்றிய புதியது.

    பதிலளிநீக்கு
  53. பத்து நண்பர்கள் வேண்டும்தான்
    ஆனா பாருங்க இரண்டு பேர்
    அடிக்கடி தொந்தரவு தராங்க
    அவங்கள நண்பர்களாக வைத்துக் கொள்கிறதா இல்லை?......

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் பாலன் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  55. தனபாலன் , பெரும்பாலான கருத்துக்கள் மனித பண்புகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்த ஒவ்வொரு பதிப்பின் போதும் முயற்சி செய்வதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  56. வித்தியாசமான தலைப்பில் வித்தியாசமான முறையில் நீங்கள் என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை மிகச்சரியாகச் சொல்லிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  57. அருமையான 10.

    //அறிவில் மேதையாக இருப்பதைவிட கற்ற கல்வியை மறக்காமல் இருப்பது சிறப்பு // மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
  58. நல்ல அருமையான விஷயம் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்...

    ஒரு மனிதனுக்கு இந்த பத்தும் இருந்தால் அவனே உயர்ந்தவன், சிறந்தவன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  59. "எளிமையே வலிமை" என்று அடிக்கடி சொல்வார், வட்டமுக வடிவேலன் என்கிற மூதறிஞர்... அவர் சொல்வது போலவே எளிமையாக ஓர் விஷயத்தை சொல்லி எல்லா தரப்பினர்களையும் சுலபத்தில் கவர்ந்து கிட்டத்தட்ட எண்பது பின்னூட்டங்கள் வாங்கி விட்டீர்கள்... அடுத்ததாக நானும் தங்களது எளிமையை அதன் வீரியத்தை மிகவும் பாராட்டி மகிழ கடமைப் பட்டுள்ளேன்..
    மேற்குறிப்பிட்டுள்ள வட்டமுகவடிவேலன் என்பவன் வேறு யாருமல்ல, அடியேன் தான் நண்பரே..ஹிஹி...

    பதிலளிநீக்கு
  60. அருமையான நண்பர்கள். ஆறாவது நண்பரைக் குறிக்கையிலே பலி, பாவங்கள் என்றிருப்பதை மட்டும் பழி, பாவங்கள் என மாற்றிவிடவும். தவறாக நினைக்க வேண்டாம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  61. வணக்கம்
    ஓய்வு நேரம் இருக்கும் ...
    மின்சாரம் இருக்கு..ஓய்வு நேரம் இருக்கு...விருப்பம் இருக்கு..அதனால் அன்புடன் அறிவிப்பு ..நண்பர்களில் முதலும் முடிவும் நீங்களும் ஒருவராக இருக்க விருப்பம்..நீங்கள் விருப்பமா!
    அறிய முக்கியமாக விருப்பம் ...

    பதிலளிநீக்கு
  62. தங்கள் தமிழறிவு நிறைந்த பதிவு பயனுடையதாகவும் கருத்தைக் கவர்வதாகவும் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  63. நீங்களே நல்ல நண்பர் . கருத்துரை எழுதினால்( எனது எங்கே!)தேட வேண்டும் அவ்வளவு பாராட்டுகள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  64. ஐயன் கண்டிப்பாக கோபித்துக்கொள்ள மாட்டார்..அவர் எழுதியதை எளிதாக மற்றவருக்குப் புரிய வைக்கிறீர்களே :)
    முதுமொழிக் காஞ்சியும் அறிமுகப்படுத்தி எளிதாக பிறருக்கு சொல்கிறீர்கள்..நன்றி. சத்தமில்லாமல் சங்க இலக்கியம் கற்றுக் கொடுக்கிறீர்கள் ..அருமை.

    பதிலளிநீக்கு
  65. சிறந்த பத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்,,,/

    பதிலளிநீக்கு
  66. நல்ல பதிவு வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.