🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉உங்களின் மந்திரச் சொல் என்ன...?

"என்ன அண்ணே! இன்னைக்கி என்ன பதிவு ?"

"வாம்மா... என் தங்கச்சி! மந்திரச் சொல்லைப் பற்றி எழுதப் போறேன்!"

"அண்ணே! நானும் கூட கலந்துக்கலாமா?"

"எனக்கே பதிவு எழுத நேரம் கிடைக்கலே. என் தொழில் அப்படி! நேரம் கிடைக்கிற நேரத்திலே கரண்ட் போயிடுது... சரி! வா மகாராணி! நீயும் கலந்துக்கோ. 'நல்லது நடந்தா சரி!' முதல்லே நீ சௌக்கியமா? வீட்டிலே எல்லாரும் நலமா? குட்டிச் செல்லம் எங்கே? மாப்ளே எங்கே?"

"சௌக்கியம் அண்ணே! வீட்டிலே எல்லோரும் நல்லாயிருக்காங்க... குழந்தை அண்ணியோட விளையாடுறான். என் பொண்ணு ஸ்கூலுக்கு போயிருக்கு. அவரு வெளியூறு போயிருக்காரு. என் ஆபீசிலே அரை நாள் தான் வேலை... அதான் உங்களைப் பார்க்க வந்துட்டேன்."

"ரொம்ப 'சந்தோசம்!' ஆரம்பிக்கலாமா?

"இப்ப நான் முதல்லே சொல்றேண்ணே! 'அம்மா' என்னும் மந்திரச் சொல்லுக்கு இணையாக வேறு சொல்லே இல்லை"

"ஆரம்பமே அசத்திட்டே! இதை உணர்ந்தவர்கள் வாழ்விலிருந்து அவர்களின் 'அம்மா' பிரிவதேயில்லை. அவர்களின் ஆசீர்வாதத்தோடு எழுதுவோம். பெற்றோர்களின் 'ஆசீர்வாதம்' இருந்தால் எதையும் சாதிக்கலாம். 'துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!' என்று தன் தாய் சொல்லைக் கேட்ட சிவாஜி, ஒருபோதும் தோல்வியை நெருங்கவிடாத மாவீரன் ஆனார்."

"நான் சொல்றேண்ணே... 'நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!'- இந்த மந்திர வார்த்தைகள் தான் ஒரு சாதாரண இளைஞனாக இருந்த ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது."

"அருமை! இதையும் தெரிஞ்சிக்கோ.... 'நன்றி மற்றும் பாராட்டு'-இந்தச் சொற்களை ஒரு மந்திரச் சொல்லாக நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. நம் வாழ்க்கையில் எப்போதும் கலந்து இருக்க வேண்டும். நம்ம மனசுக்குள்ளேயே ஒருத்தரைப் பற்றி பாராட்டினாலோ, நன்றி தெரிவித்தாலோ எந்தப் பிரயோசனமும் இல்லை"

"ஆமாம் அண்ணே! அன்னை தெரசா சொன்னது : 'அன்பு, ஆதரவு, நன்றி' - இவைகளுக்கு ஏங்குவோர்களின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகமாம்!"

"அப்புறம் தங்கச்சி! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தூக்குத்தூக்கி படத்தில் ஒரு வசனம் வரும். "கொண்டு வந்தால் தந்தை... கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி... உயிர் காப்பான் தோழன். " இந்த பழமொழிகள் எல்லாம்....."

"ஒரு நிமிஷம் அண்ணே! நீங்க என்ன சொல்லவறிங்கன்னு தெரியுது. 'இந்த பழமொழிகள் எல்லாம் அந்தப் படத்தில் அரச குமாரன் வாழ்க்கையில் நடப்பதாக அருமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார்கள்.' என்று தானே? அதை விடுங்க. ஒவ்வொன்ன கேட்குறேன். அதென்ன கொண்டு வந்தால் தந்தை? அப்பா அப்படியா இருக்கார்? என்னைத் தான் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். தெரியுமா?"

"உனக்கு மட்டுமல்ல. முக்கால்வாசி வீட்டிலேயும் இப்படித்தான். அப்பாக்களுக்கு மகள்களைப் பிடிக்கும். அம்மாக்களுக்கு மகன்களைப் பிடிக்கும். அது ஒரு பிரியம் என்று சொல்வதை விட ஒரு கவனிப்பு அல்லது கண்காணிப்புன்னு வைச்சிக்கோ. 'கொண்டு வந்தால் தந்தை' என்றால் நீ பணம் அல்லது பொருள் என்று நினைக்கிறே. அப்படிக் கொண்டு வந்து கொடுத்தாலும் அவரா அனுபவிக்கப் போகிறார்? நமக்குத் தானே உழைக்கிறார்? எந்தெந்த அனுபவத்தைக் கொண்டு வந்தான்? எந்தெந்த 'நல்ல பழக்க வழக்கம்' கொண்டு வந்தான்? அப்படீன்னு எடுத்துக்கோ."

"அடுத்தது தான் கோப கோபமாக வருது. சீர் கொண்டு வந்தால் தான் சகோதரியா? நானென்ன அப்படியா இருக்கேன்?"

"அடியேய்! தெரியாத் தனமா சொல்லி மாட்டிக்கிறது... இது தானா? இந்த பழமொழிகள் எல்லாம் அம்மாவை உயர்வாக சொல்வதற்காக சொல்லப்பட்டது. இப்படி ஒப்பிட்டு ஒப்பிட்டே நாம காலத்தைக் கடத்துகிறோம்... இப்ப அது ஒரு கலாச்சாரமாக ஆகி விட்டது."

"இதுக்குத்தான் கமல் சார் சொன்னாரு போலிருக்கு 'பழமொழி சொன்ன ஆராயக் கூடாது. அனுபவிக்கனும்'-ன்னு... போதும் அண்ணே!"

"இங்கே பார்! நீ தான் நடுவிலே கேள்வி கேட்டே! 'செய்வதைச் திருந்தச் செய்'... அடுத்து 'கொலையும் செய்வாள் பத்தினி' என்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண், தான் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகளிலும் உயர்த்திக் காட்டுவாள். ஏழ்மை, வறுமை, கல்லாமை, இல்லாமை மற்றும் பல கெட்ட பழக்கங்களைக் கொலை செய்வாள் என்று அர்த்தம்."

"நான் கூட வேற மாதிரி நினைச்சிட்டிருந்தேன். அண்ணே! நான் ஒன்னு சொல்றேன். 'அம்மா இல்லேன அன்பு போச்சி, அப்பா இல்லேன அதிகாரம், உறவுகள் போச்சி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லேன ஆதரவு போச்சி, சம்சாரம் போச்சின்னா சகலமும் போச்சி'"

"அம்மா! தாயே! நீ சொன்ன சரிதாம்மா! அதோட 'நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி' இதையும் சேர்த்துக்கோ. 'உயிர் கொடுப்பான் தோழன்' என்றால் நமக்காக உயிரை விடுவதல்ல. ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த மானத்திற்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே உயிர்த் தோழன். நம்ம திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் ....."

"திருக்குறள் சொல்லப் போறீங்களா? போதும் அண்ணே! நேரம் ஆகும்!"

"அடிப்பாவி! சரி.... நட்பைப் பற்றி ஐந்து அதிகாரம் இருக்கு. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு-குறள் எண் 781 முதல் 830௦ வரை... அப்புறம் படி. திருக்குறள்லே எல்லாமே மந்திரச் சொல் தான்! கண்ணதாசன் பாடல்களிலும், நம்ம நடிகர்களின் 'பஞ்ச்' வசனக்களிலும் நிறைய மந்திரச் சொற்கள் உள்ளது!"

"சரி அண்ணே! அப்புறம் 'மெய்ப் பொருள் காண்பது அறிவு'" என்று அடிக்கடி சொல்வீங்களே... அதைப் பற்றி சொல்லலாமே"

"ஓ அதுவா! இறைவன் நாடினால் அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். அந்தக் கருத்தை ஒட்டி 'அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?' என்று மூன்று பதிவுகளாக ஏற்கனவே எழுதி உள்ளேன்... இப்ப ஒரு கதையைக் கேள்"


ஒரு குருவிடம், சீடன் ஒருவன் கோபமாக கூறினான் : "எனது தியானம் கொடுமையாக இருக்கிறது. கவனம் சிதறுகிறது. உடம்பும் ஒத்துழைக்க மறுக்கிறது. கொஞ்ச நேரத்தில் தூங்கியும் விடுகிறேன்"

குரு அமைதியாகக் கூறினார் : "இந்த நிலை மாறும்"

சிறிது நாள் கழித்து அதே சீடன் கூறினான் : "இப்போதெல்லாம் என் தியான அனுபவம் அற்புதமாக உள்ளது. தூக்கம் இல்லாமல் விழிப்புணர்வோடும், மனம் அமைதியாகவும் இருக்கிறேன்"

குரு சிரித்துக் கொண்டே கூறினார் : "இதுவும் கடந்து போகும்"

'வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை' என்பதை உணர்த்து விட்டான் என்பதை, குரு, சீடனின் முகம் பார்த்து அறிந்து கொண்டார்.


"இங்கே பாரு... இவ்வளவு நேரம் பொறுமையா படித்து விட்டு நண்பர்கள் டீ குடிக்கிறாங்க... அண்ணி கிட்டே சொல்லி டீ போடச் சொல்லு."

"சரி அண்ணே! அப்புறம் பொண்ணு நல்ல மார்க் வாங்குது. பையன் தான் சுமார். அவனை என்னான்னு கேளுங்க"

"அது சரி! மறுபடியும் வாயக் கிளறாதே... ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க. அது தப்புன்னு சொல்லலே. குழந்தைகளுக்குச் சொத்து சேர்க்கிறதை விட படிப்பு செல்வம் தான் முக்கியம்! நீயாவது தினமும் இரண்டு மணி நேரமாவது டி.வி. பார்க்காம குழந்தைகளுக்குச் சொல்லித் தா. குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம். மார்க்கெல்லாம் பார்க்காதே. புரிந்து படிக்கிறார்களா என்று பாரு. உன் சமையல் பற்றி அண்ணி சொன்னா... எப்ப பாரு நூடுல்ஸ், பிரட், பாக்கெட் புட்ஸ்-காலையிலே இதைச் சாப்பிட்டு மதியமும் இதையே குழந்தைகள் எப்படி சாப்பிடும்? ஒன்னு செய்! நீ ஒரு நாள் மதியம் ஆபிஸ் கேண்டீன்லே சாப்பிடாம, நீ காலையிலே செய்ற ஐட்டங்களை நீயே மதியம் சாப்பிட்டுப் பாரு! உண்மை தெரியும். கொஞ்சம் சீக்கிரம் எழுந்து சாதம், இரண்டு காய்கறி கூட்டு, முக்கியமா கீரை, செஞ்சா என்னவாம்? 'நம்ம உடம்பும் மனசும் தான் ரொம்ப முக்கியம்'..... என்ன மௌனமாயிட்டே?"

"இல்லே 'மௌனம்' கூட சில இடங்களில், சில நேரங்களில் மந்திரச் சொல் என்று சொல்ல வந்தேன்."

"அது சரி! இப்ப அறிவுரை சொன்னாலும் சரி, ஆலோசனை சொன்னாலும் சரி! யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு சின்ன கணக்கு கேட்குறேன்... பதில் சொல்லு."


"பால்காரன்கிட்டே இரண்டு அளவுப் பாத்திரம் தான் இருக்கு. 3 லிட்டர் ஒன்னு. 5 லிட்டர் ஒன்னு. நீ 4 லிட்டர் பால் வாங்கணும் என்று வைத்துக் கொள். அவன்கிட்டே இருக்கிற இரண்டு அளவுப் பாத்திரத்தை மட்டும் வைச்சிக்கிட்டு ஏதோ பண்ணி, அவனது அண்டாவில் உள்ள பாலிருந்து உன்னோட பாத்திரத்தில் ஒரே தடவையாக 4 லிட்டர் ஊத்திட்டுப் போயிட்டான். அது எப்படி ஒரே தடவையா 4 லிட்டரா ஊத்தினான்?"


"அண்ணே! கொஞ்சம் இருங்க! டீ கொண்டு வந்துறேன்"

"என்ன பதிலையே காணோம்? உன் பொண்ணுகிட்டே போன வாரமே கேட்டேன். இரண்டு முறைகள் சொன்னா. அதிலே எது ஈஸி?-ன்னு என்கிட்டே கேட்குறா. இப்ப படிக்கிற குழந்தைக்ககிட்டே நாம தான் நிறைய தெரிஞ்சிக்கணும்"

"நான் பதில் சொல்லட்டா? பால்காரன் தானே ஊத்தினான்? அவனுக்கு தெரிஞ்சா போதும். உங்களை மாதிரி என்கிட்டே கேட்டா பால்காரனையே மாத்திருவேன்!..."

"ஹா ஹா ஹா ஹா"

"சீரியசாக எழுதுகிறீர்களே என்று உங்களை சிரிக்க வைத்தேன். எனக்கும் பதில் தெரியும். மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம் அண்ணே! அது சரி... இப்ப மேலே இருந்து படிக்கிறேன். தப்பு இருந்தா சரி பண்ணுங்க!... ...ம்... ஏன் அண்ணே! அங்கங்கே என்னை 'டி' 'டி' ன்னு சொல்ற மாதிரி இருக்கு"

"மன்னிச்சிக்கோ தாயே! உன் பேரு திவ்யா இல்லையா? அந்த 'D'-ன்னு எடுத்துக்கோ தங்கச்சி. சரி..... பப்ளிஷ் பண்ணறதுக்கு முன்னாடி சரி செஞ்சிறேன்."

"அண்ணே! சும்மா ஒரு ஜாலிக்காக கேட்டேன். நீங்க அப்ப 'டி' பேசினால் தான் எனக்குப் பிடிக்கும். ஒரு சின்ன விசயத்திற்கும் 'மன்னிப்பு' கேட்கிறீங்க. இந்த மாதிரி இருந்தா குடும்பத்திலே எந்த பிரச்சனையும் வராது. அதை விட நல்லா சமாளிக்கிறீங்க... உங்களை மாதிரி 'எல்லா இடத்திலும் சமயோசிதமாக சமாளிக்கிற திறமை வேண்டும்'. அப்புறம் அண்ணே! நான் வந்ததாலே இந்தப் பதிவே மாறிப் போச்சா? உங்க மந்திரச் சொல் என்ன?"

"வரிசையா 25 மந்திர சொல்லோ, மந்திர வார்த்தைகளோ எழுதி விட்டு, "நண்பர்களே உங்களின் வாழ்க்கையில் படிக்கும் சமயத்திலோ, செய்யும் தொழிலோ, கஷ்டப் படும்போதோ, இல்லை எப்போதாவதோ, ஒரு மந்திரச் சொல் அல்லது மந்திர வார்த்தை உங்களை மாற்றி இருக்கும். அது என்ன?"-என்று கேட்டு முடிக்கலாம் என்று இருந்தேன். சரி இருக்கட்டும். 'நடப்பதெல்லாம் நன்மைக்கே!' என்று நான் நினைப்பதில்லை. 'நடப்பதெல்லாம் நம்மலாலே!' என்று தான் நினைப்பேன். அப்புறம் என் மந்திரச் சொல்லை தான் மேலே கதையிலேயே சொல்லிட்டேனே!"

"சரி நீங்க எழுந்திரீங்க அண்ணே! என் குழந்தையோடு விளையாடிட்டே இருங்க! முடிவுரையை நான் டைப் செய்து பப்ளிஷ் செய்றேன்"

"எனது நண்பர்களே! (அண்ணனின் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் தான்) இதுவரை எழுதியதில் எனக்குத் தெரிந்த சில சொற்களையோ, வார்த்தைகளையோ ஹைலைட் பண்றேன் மந்திர சொல்லாக! உங்களின் கருத்துகளை எழுதுங்கள். ப்ளாக் வைத்துள்ளவர்கள் 'உங்களின் வாழ்க்கையை மாற்றிய மந்திரச் சொல் என்ன?' என்பதை எழுதுங்கள். நானும் உங்கள் தளத்திற்கு வந்து கருத்துச் சொல்கிறேன்.

அண்ணனுக்கு நன்றி! உங்களுக்கும் நன்றி!

"மந்திரச் சொல்லை சொல்லலைனா நீங்க என்ன மரம் ஆவீங்க...? சொல்லுங்க... இங்கே நீங்க மரமாக போறீங்க... என்னும் பதிவை, படிக்காதவர்கள் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி....."

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. தங்களது மந்திரச்சொல் மிக அருமை....

  வாழ்த்துக்கள்!

  --உதயசுரியன்.

  பதிலளிநீக்கு
 2. அடடா.. எத்தனை மந்திரச் சொற்களை சொல்லியிருக்கீங்க.. அப்படியே அண்ணன், தங்கச்சி பேசுவதுபோல... கொடுத்துள்ளது.. இன்னும் அருமை.. இதனால் அனைவரின் மனதிலும் எளிதாக நினைவில் நிற்கும்.அருமை தனபாலன் அவர்களே...!!!

  வாழ்த்துகள் அன்பரே..!!!

  பதிலளிநீக்கு
 3. இத்தனை மந்திரச் சொற்களையும் இன்றுதான் முழுவதுமாக பொருளறிந்துகொண்டேன்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!!

  பதிலளிநீக்கு
 4. மௌனமே மந்திரச்சொல்!

  மந்திரித்த பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. மந்திரச் சொற்கள் மிக அருமை. பழமொழிகளை உங்கள் கருத்து மொழியாக மாற்றிய விதம் அருமை. உண்மைதான். ஒவ்வொன்றும் நாம் எடுத்துக் கொள்ளுகின்ற முறையில் தான் இருக்கின்றது. கெட்டதிலும் ஒரு நல்லதைக் காண வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு குடிகாரனை நாம் வெறுப்போம். ஐரோப்பியர்கள் அவர் ஒரு நோயாளி என்றே பார்ப்பார்கள். இப்படித்தான் பலதும். வித்தியாசமான உங்கள் எழுத்துக்களின் தொடர்ச்சி நீளட்டும் நன்றி

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கையில் விழுபவனை தூக்கி நிறுத்தும் மந்திரச் சொல் பற்றிய பதிவு அருமை... நண்பரே...
  இதில் தங்களோடு, சகோ..வும் கலந்துகொண்டது சிறப்பாகவும், எளிமையாகவும் அமைந்துள்ளது...

  இருவருக்கும் வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 7. செமத்தனமா கலக்கி இருக்கீங்க, மந்திரச்சொல் "மருந்து"....!!! வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையாக இருக்கு மந்திரச்சொற்களும் அதற்கு விளக்கமும்.
  மெளனமும் ஒரு மந்திரச்சொல் என நீங்க குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 9. அற்புதமான பதிவு...


  ஒவ்வொறுவருடைய வாழ்க்கையிலும் அவர்களை எப்படி வடிவமைப்பது என்று தீர்மானிப்பது அவரு்டைய மனதில் இருக்கும் மந்திரசொல்தான்...


  நல்ல விவாதம்.. அழகிய சொல்லாடல்

  கலக்குங்க தோழரே...

  பதிலளிநீக்கு
 10. மந்திரச் சொற்கள் எல்லாம் அருமை.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 11. பதிவு அருமை. மிகவும் நீளமாக இருக்கிறது. திருக்குறள் உதாரணம் காட்டும் நீங்கள் நச் சென்று கொஞ்சம் சுறுக்கி பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
  http://atchaya-krishnalaya.blogspot.com
  http://atchaya48.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்! ஒரு சின்ன கட்டுரையில் அநேக செய்திகள்.பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 13. திண்டுக்கல் தனபாலின் குண்டுக்கல் அளவுக்குப் பெரிய
  வைரக்கல்!
  நன்று! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 14. ஐ ஜாலி எனக்கும் மந்திரச்சொல் கிடைத்துவிட்டது

  பதிலளிநீக்கு
 15. அற்புதமான பதிவு நண்பரே..

  இந்த மந்திர சொற்கள்தான் பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு இருக்கிறது..

  அருமையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
 16. இந்த சொற்கள்தாங்க மந்திரம்..
  வாழ்கையே மாத்திப் போடக் கூடியது.
  அருமையான 'சபாஷ்' பதிவு..
  த.ம. 7 உடா 5

  பதிலளிநீக்கு
 17. வித்தியாசமான வடிவம்.நல்ல கருத்து.திறமையான தொகுப்பு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. உங்க சில பதிவுகளைப் படிச்சிருக்கேன். பயனுள்ள விஷயங்களை எழுதறீங்க...ரொம்ப பெரிய சேவை.

  என் மந்திரச் சொல் "மௌனம்" / "புன்னகை"

  பதிலளிநீக்கு
 19. நண்பரே அருமையான பதிவு
  மந்திரம் என்றால் எது மனதை திறம் உடையதாக செய்து முழு ஆற்றலுடன் செயல்பட வைக்கிறதோ அதுவே மந்திரம்
  அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்
  உதாரணத்திற்கு மரா மரா என்ற சொல்லே ஒரு பாமரனுக்கு மந்திர சொல்லாக மாறி அவரை ராமாயணம்காவியம் இயற்றும் வால்மீகி மகரிஷியாக்கியத்தை நினைவில் கொள்க.

  பதிலளிநீக்கு
 20. அன்பு நண்பரே,
  நம் ஒவ்வொரு நிலையிலும் ஒரு மந்திரச்சொல் நம்மை பட்ட தீட்டும்..
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 21. உண்மையிலேயே மந்திரச் சொற்கள்தான்!(அதுவும் தமிழ் நாட்டில் ‘அம்மா’ என்னும் சொல்!!)

  பதிலளிநீக்கு
 22. அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. மந்திர சொற்கள் அருமை..


  வாக்கு (TM-11)
  அன்போடு அழைக்கிறேன்..

  மௌனம் விளக்கிச் சொல்லும்

  பதிலளிநீக்கு
 24. எதார்த்தமாக எழுதும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.... ரெம்ப சூப்பர் பாஸ்

  பதிலளிநீக்கு
 25. உரையாடலின்மூலம் அழகாக தன்னம்பிக்கையூட்டும் மந்திரச் சொற்கள் சொல்லியுள்ளீர்கள். அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 26. உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன் தோழரே. வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 27. " இந்த நிலை மாறும் , இதுவும் கடந்து போகும் " - இதுவே எனக்கு பிடித்த மந்திரச்சொல் ... பதிவு அருமை ...

  பதிலளிநீக்கு
 28. மந்திரச் சொற்கள் மற்றும் பழமொழிகள் பற்றிய உங்கள் பார்வை சுவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. நாட்டாமை....
  இப்படி தீர்ப்பே சொல்லாம போனா எப்படி??

  மந்திரசொற்கள் உண்மையில் மந்திர சக்தி வாய்ந்தவை தான்!!
  அருமையான பதிவு..

  ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு சக்தி...
  நீங்கள் சொல்லியுள்ள பல சொற்கள் பல நேரங்களில் என் வாழ்க்கை வண்டியைத் திருப்பி உள்ளன..

  ஆனால், பல நேரங்களில் நான் சோர்ந்து ஒதுங்க நினைக்கும் போதோ, மலைத்து நிற்கும் போதோ எனக்குள் ஒரு புதிய சக்தியைக் கொடுக்கும் மந்திர சொல்...
  அது உங்க லிஸ்ட்ல இல்லை...

  அது..

  உன்னால் முடியும்.. உன்னால் முடியாதென்றால் வேறு யாரால் முடியும்?
  (You can!! If not you, then who?)

  பி.கு:
  முன்பு பல நேரங்களில், "நன்றி நண்பரே" "பகிர்விற்கு நன்றி" இப்படி சில வரிகளில் பதில் சொல்லிக்கொண்டு இருந்த என்னை சிந்தித்து பதில் எழுதத் தூண்டியமைக்கு (இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?) நன்றிகள் பல!!

  பதிலளிநீக்கு
 30. ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு. பகிர்தலுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 31. மந்திரச் சொற்களின் வல்லமையை அழகாகப் புரியவைத்துவிட்டீர்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. நல்லா சொன்னீங்க மாப்ளே...அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 33. அருமை! வாழ்த்துக்கள்!
  நல்ல நகைச்சுவை பதிவு
  படிச்சு படிச்சு சிரிப்பு தாங்கலை
  சூப்பர் பகிர்விற்கு நன்றி நண்பரே!
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
  சிந்திக்க

  பதிலளிநீக்கு
 34. மந்திரச்சொற்கள்! செமகலக்கலாக சுவாரசியமாக நல்லபல விடயங்களை சொல்லியிருக்கிங்க

  பதிலளிநீக்கு
 35. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 36. சொற்கள் ஜாலங்கள் செய்ய வல்லவை. மந்திரச் சொற்களை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். மௌனம்கூட ஒரு மந்திரச் சொல்லே என நீங்கள் சொல்லியிருந்தது எனக்கு மிக உவப்பானது. மிக நன்று.

  பதிலளிநீக்கு
 37. இத்தனை மந்திரச் சொற்களையும் இன்றுதான் முழுவதுமாக பொருளறிந்துகொண்டேன்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!!

  பதிலளிநீக்கு
 38. பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ .

  பதிலளிநீக்கு
 39. மந்திரச் சொற்கள் அனைத்தும் சிந்திக்கக் கூடியவை..
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 40. என் வாழ்வை மாற்றிய மந்திரச்சொல் "இதுவும் கடந்து போம்".. வாழ்வில் பல கஷ்டங்களில் இருந்த போது துணை வந்தது. நல்ல நிலைக்கு வரும்போதும் என‌க்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருந்தது..

  அற்புதமான கருத்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 41. ஆஹா.. அருமையான தொகுப்பு.. இத்தனை மந்திரச் சொற்களையும் உபயோகிச்சா மேஜிக் போட்ட மாதிரி வாழ்க்கையே நல்ல மாதிரி மாறிடுமே..

  பதிலளிநீக்கு
 42. நண்பர்களுக்கு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  நொடியாய்ப் பிறந்து
  மணித் துளியாய் மறைந்து
  புது ஆண்டாய் மலர்ந்த
  பொழுதே....
  வறண்ட வாழ்வும்
  தளர்ந்த கையும்
  உன் வரவால்
  நிமிர்ந்து எழுதே!
  புது வருடம் பிறந்தால்
  வாழ்வு மாறும்-என
  ஏங்கித் தவிக்கும்
  நெஞ்சம்..
  உன் வரவே
  நெஞ்சின் தஞ்சம்!
  இறந்த காலக்
  கவலை அதனை
  மறந்து வாழ
  பிறந்து வா வா
  என் புதிய வாழ்வே
  விரைந்து வா வா!
  அழுதுவிட்டேன்
  ஆண்டு முழுதும்
  முயன்று பார்த்தேன்
  விழுந்து விட்டேன்
  அழுத நாளும் சேர்த்து
  மகிழ்ந்து வாழ
  எழுந்து நின்று
  இமயம் வெல்ல
  இனிய ஆண்டே
  இன்றே வா வா
  நன்றே வா வா!

  அன்புடன் இனியவன்

  பதிலளிநீக்கு
 43. உங்ளின் மந்திர சொல் மிகவும் அருமை பாராட்டுகள் தொடர்க ...க

  பதிலளிநீக்கு
 44. அருமையான பதிவு. ஒரு கட்டுரையாக இல்லாமல் பேச்சு வழக்கில் கொடுத்தது இன்னும் அருமை.

  ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 45. அண்ணா ! உங்களது எழுத்து நடை, கௌத்துக்கள் அனைத்தும் நச்சென்று, எளிதில் புரியும்படியாய் உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 46. உங்கள் பதிவுகளின் போக்கு கொஞ்சம் வித்தியாசமாய் தான் இருக்கிறது!
  "இதுவும் கடந்து போகும்"

  பதிலளிநீக்கு
 47. மந்திரச் சொற்கள் அனைத்துமே மகத்தானவையே.!

  பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 48. சிலசமயம் மௌனம் கூட மந்திரச்சொல் தான். ரொம்பவும் உண்மை!
  என் வாழ்க்கையின் மந்திரச்சொல் 'இன்னிலேருந்து ஆங்கில அகராதி படி' என்ற என் பாஸ்-இன் சொற்கள் தான்!

  உங்களது இந்தப் பதிவை ரொம்பவும் ரசித்துப் பலமுறை படித்தேன் தனபாலன்.

  உங்கள் எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை!
  பாராட்டுக்கள் தனபாலன்!

  பதிலளிநீக்கு
 49. நல்ல சுவாரிசமாகச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே!

  என் மந்திரங்கள் 3 தான். எப்போதும்.
  1.மாற்றம் ஒன்றே மாறாதது.
  2.எல்லாம் நன்மைக்கே
  3.இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை.

  போனஸாக ஒன்று.

  காலம் ஆற்றும் சகல காயங்களையும்.:)

  பதிலளிநீக்கு
 50. அருமை.

  பொருத்தம். ரொம்பப் பொருத்தம். முன்னரே இதை எல்லாம் எழுதி வைத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.