🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நீங்க மரமாகப் போறீங்க...

"வாங்க... வாங்க... தனபாலன்...! பார்த்து ரொம்ப நாளாச்சி"

"வணக்கம் நல்லமுத்து அவர்களே, சௌக்கியமா?"

"சௌக்கியம் தனபால். எப்படி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு...?"

"நல்லா இருக்கு...! என்ன தோஸ்து, விவசாயத்திலே இறங்கிடிங்க...? தப்பா நினைச்சிக்காதீங்க, எவ்வளவு நிறையப் படிச்சிருக்கிறீங்க, உங்களுக்குக் கிடைக்காத வேலையா...?"

"முதல்லே நம்ம தோட்டத்து எளனிய குடி... தனபால், நானும் படித்து முடித்தவுடன் வேலை தேடினேன். நினைத்த வேலை கிடைக்கலே. அதனாலே சும்மா இருக்க முடியுமா...? அப்பாவோட ஒரு ஏக்கர் நிலம் இருந்திச்சி. சின்னதா ஆரம்பிச்சேன். இப்ப...? வா, பக்கத்திலே தான் தோட்டம்... போகலாம்"

"தோஸ்து... இந்த மாதிரி பச்சைப் பசேலென்று வயல்வெளியைப் பார்த்தாலே மனசு முழுக்கச் சந்தோசமா இருக்கு...!"


"பாரு... இது தான் நம்ம தோட்டம். ஒரு பக்கம் காய்கறிகளைப் போடறேன். இந்தப் பக்கம் தென்னந்தோப்பு, அந்தப் பக்கம் வாழை... இப்ப தான் வளர்ந்துக்கிட்டிருக்கு... அப்பா கொடுத்த ஒரு ஏக்கரை ஐந்து ஏக்கரா ஆக்கியிருக்கேன்... இதைக் கவனிக்கவே நேரம் போதலே... வா... இன்னும் கொஞ்சம் உள்ளே போகலாம்... இது தான் என் Office...! கயத்துக் கட்டிலே உட்காரு..."

"அருமை...! அமைதியான இடம்... கலப்படமில்லாத காற்று... விதவிதமா பறவைகளின் சத்தம்... சொர்க்கம் நண்பா...!"

"இங்கேயே இரு, எனக்குக் கொஞ்சம் வெளியிலே வேலையிருக்கு. பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துறேன். இதெல்லாம் நம்ம தோட்டத்துப் பழங்கள், சாப்பிடு...! உதவிக்குத் தோட்டத்து நண்பர்களைக் கூப்பிட்டுக்கோ. அதோ அந்தக் கேட்டை தாண்டி உள்ளே போய்ப் பாரு... நிறைய மரம் வளர்த்து வைச்சிருக்கேன். எல்லா மரங்களும் என்னுடைய உயிர் நண்பர்கள்... சரி வரட்டுமா?"
ooo - O - ooo

1. அரசமரம் நான்...! என்னுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தும் அளவிற்குச் சக்தி வாய்ந்தது... என்னுடைய குச்சிகளை எரிப்பதால் மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை நீக்குவேன். சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கும் உதவுவேன்... இன்னும் பல...
2. ஆலமரம் நான்...! இந்தியாவின் தேசிய மரம்...! பல நூறு காலம் வாழ்வேன்... மழை, வறட்சியால் பாதிக்கப் பட மாட்டேன்... ஏனென்றால் என் விழுதுகள் என்னைத் தாங்கிக் கொள்ளும்... என் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை... என் இலைகளை அரைத்து உடலில் உள்ள கட்டிகளின் மேலே பூசிக்கொண்டால் கரைத்து விடுவேன்... எனது பட்டையை இடித்து வாயில் ஊற்றிக் கொப்பளித்துக் கொண்டால், வாய்ப்புண், வாய் நாற்றம், நா வெடிப்பு, ஈற்றுப்புண் இவற்றை நீக்குவேன்... ஆலும் வேலும் பல்லுக்குறுதி...! நான்கும் இரண்டும் சொல்லுக்குறுதி...! இன்னும் பல...

3. மாமரம் நான்...! கனிகளில் ராஜ கனியும், முக்கனிகளில் முதல் கனியும் நான் தான். எனது இலைகள் ஒரு கிருமி நாசினி என்பதால், என்னை மாவிலைத் தோரணமாக வீட்டு வாசலில் கட்டுகிறார்கள்... மலச் சிக்கலை போக்குவேன்... ஜீரண சக்தியை அதிகரிப்பேன்... வாய்ப்புண், வயிற்றுப் புண்ணையும் ஆற்றுவேன்... என் இலை, பூ, பிஞ்சுக் காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை... இன்னும் பல...

4. பலாமரம் நான்...! முக்கனிகளில் இரண்டாவது நான்... என்னை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும்... இரத்தத்தை விருத்தி செய்வேன்... உடலுக்கு ஊக்கமளிப்பேன்... நரம்புகளுக்குப் புத்துணர்வு அளிப்பேன்... வாய்ப்புண், குடற்புண், வயிற்றுப் புண்ணையும் ஆற்றுவேன்... வாயுத் தொல்லைகளை நீக்குவேன்... எனது பழத்தை அதிகம் சாப்பிட்டு வயிறு பொருமலால் அவதிப் படுபவர்களுக்கு, எனது கொட்டையை மென்று சாற்றை மட்டும் விழுங்கினால், உடனே வயிற்றுப் பொருமலை நீக்குவேன்... இன்னும் பல...
5. வாழை மரம் நான்...! முக்கனிகளில் மூன்றாவது நான்... தாவர வகை என்றாலும் என்னை வாழை மரம் என்றே சொல்கிறார்கள்... உலகில் மிகப் பெரிய தாவரம் நான் தான்...! எல்லாவற்றுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு... செவ்வாழை விளையாட்டு வீரர்களுக்கும் பூவன் வாழை குழந்தைகளுக்கும், இவ்வாறு பல வாழைகள் மூலம் பலவிதமாக உதவுகிறேன்... எனது வாழைப் பூ அவியல், நீரழிவு என்கிற உடற்குறை உள்ளவர்கள் சாப்பிட்டு நலமாக உள்ளார்கள்... எனது தண்டை இடித்துச் சாறெடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று, ஆகியவற்றை மறையச் செய்வேன்... சுருக்கமாக எனது எல்லா உறுப்புகளும் உண்பதற்கும், எல்லா வகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது...

6. பனை மரம் நான்...! அன்றைய காலத்தில் ஓலைச் சுவடிக்கு உதவினேன்... எனது பனங்கிழங்கு ஆண்மைக்கு அருமருந்தாக இருக்கிறது... வெட்டைச் சூடு தணிய, வெண்குஷ்டம் விலக, காசநோய் விலக, சரும நோய்கள் விலக, போகம் பெருக, உடல் பருக்க, உடல் வலுவடைய, இன்னும் பல வழிகளில் உதவுவேன்... இன்னும் பல...

7. சந்தன மரம் நான்...! இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் நான்... சந்தனம் தயாரிக்க உதவுகிறேன்... உடல் சருமத்திற்குக் குளிர்ச்சி அளிப்பேன்... உடல் வெப்பம், சிறுநீர் எரிச்சல், சிறு நீர்க்கட்டுக் குணமாக, உடல் இளைக்க உதவுவேன்... பல மருந்துகள் தயாரிக்கவும், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் உதவுவேன்... இன்னும் பல...

8. தேக்கு மரம் நான்...! நிறையத் தண்ணீர் குடித்தால் நன்றாக வளருவேன்... நீண்ட காலத்திற்கு நன்மை அளிப்பேன்... என்னைப் பொறுமையாக வளர்த்தவர்கள் இன்று குரோர்பதிகளாக உள்ளார்கள்... மேசையாகவும், நாற்காலியாகவும், இன்னும் பல விதங்களில் உதவுவேன்... அவ்வளவு எளிதில் உடைய மாட்டேன்... இன்னும் பல...
9. முருங்கை மரம் நான்...! என்னைக் கற்பகத் தரு என்று சொல்வார்கள்... உடல் வலுவுடன் இருக்க, இருப்புச் சத்து அதிகரிக்க, உடல் சூட்டைத் தணிக்க, பித்தத்தைக் குறைக்க, இளநரையைப் போக்க, மூல நோயைப் போக்க, ஆண்மையை அதிகரிக்க... இன்னும் பலப் பல...



10. புங்கை மரம் நான்...! வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழலைத் தருவேன்... எனது பூக்கள் மருந்தாகப் பயன்படும்... எனது விதைகள் மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படும். எனது இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது... இன்னும் பல...




ooo - O - ooo

"நண்பா... நண்பா.. என்ன தூக்கமா...? தோட்டத்தைச் சுத்திப் பார்த்த அலுப்போ...?"

"அது மட்டும் இல்லே நண்பா, நிறையப் பழம் சாப்பிட்டேன்... அருமையான காற்று! கயத்துக் கட்டிலே அப்படியே படுத்திட்டேன்... இதிலே கனவு வேறே...! நாளைக்கு என் வீட்டிற்கு வரணும்... உங்களை வைத்து ஒரு கட்டுரை எழுதப் போறேன்... வரட்டுமா?"

"அதெல்லாம் வேண்டாம்பா... நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?"

"நீங்க வாங்க தோஸ்து... அப்புறம் பேசிக்கலாம்"

ooo - O - ooo

"வாங்க நல்லமுத்து... இன்னும் உங்களைப் பற்றித் தான் எழுத வேண்டியிருக்கு, இதோ :-"

"என் நண்பரைப் பற்றி... நிறையப் படித்தவர் என்பதை விட நன்றாகப் படித்தவர். கூடப் பிறந்தவர்கள் பிற தொழில்கள் செய்தாலும், 'இந்தத் தொழிலை நான் செய்வேன்' என்று, லாப நோக்கத்துடன் செய்யாமல், செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய்யும் அன்பு நண்பரின் தொழில் விவசாயம்...! உழவே தலை...! அருமையான தோட்டங்கள், பலவித மரங்கள், கலப்படமில்லாத காற்று, எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பு நண்பர்..... சுருக்கமாக 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் மரம், செடி, கொடிகளை நேசிக்கும் அந்தப் பாசமான முதியவரைப் போல. அவர் பெயருக்கேற்ற 'நல்ல முத்து' தான்"

"தனபால்...! என்னைக் கடைசியில் கிழவன் ஆக்கிட்டியே! ஹா... ஹா... மேலே உள்ளதில் ஐந்து வகை மரம் தான் என் தோட்டத்தில் உள்ளது. என் தோட்டத்தில் உள்ள வேப்ப மரம், புளியமரம், கொய்யா மரம், தென்னை மரம், நாவல் மரம், மாதுளை மரம், பப்பாளி மரம், மருதாணி மரம்... இன்னும் பலவற்றை எழுதவில்லையே?... அது சரி.. அது என்ன தலைப்பு...? "நீங்க மரமாகப் போறீங்க"-ன்னு...?"

"நீங்கள் மரம் மீது உள்ள பற்றைப் பார்க்கும் போது அந்தப் படத்தின் முதியவர் பாத்திரம் நினைவிற்கு வந்தது. அப்புறம் மரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடியுமா தோஸ்து...? அதனால் பத்து மரங்களைப் பற்றி மட்டும் எழுதினேன்... மற்ற மரங்களைப் பற்றி விரிவாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்... சரி, இப்ப தலைப்பிற்கு வருவோம். இது ஒரு சுய பரிசோதனை... நாளை முதல் 'நீங்க மரமாகப் போறீங்க' என்று வைத்துக் கொண்டால் 'என்ன மரம் ஆவீங்க?' சொல்லுங்க நல்லமுத்து"

"ஓ...! இது தான் நீ கண்ட கனவா...? ம்... நான் எப்போதும் நல்லவனாக, நல்ல மனிதனாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்..."

"தோஸ்து... இந்தக் கதை எல்லாம் விடப் பாடாது... இது ஒரு சிந்தனை தானே...?! 25 வருடமா விவசாயம் செய்கிற, பல மரங்களை அறிந்த நீங்களே இப்படிச் சொன்னால் எப்பட...? சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்லுங்க நண்பா...!"

"மேலே நம்பர் இரண்டு... ஆலமரம்...!"

"நான் நினைத்தேன்... உங்கள் குடும்பத்தை நீங்கள் தானே தாங்கிக் கொள்கிறீர்கள்... உங்களை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்...!"

"அதெல்லாம் சரி. நீ என்ன மரம் ஆவே?"


© குலவிளக்கு கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1969 ⟫

"திரைப்படத்தில் வராத பாடலை கேட்டாயா...? "பனை மரம் - தென்னை மரம் - வாழை மரம் - மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்...!" பாடலில் மூன்றாவது மரம், பதிவில் ஐந்து...! நம்ம நண்பர்களிடம் கேட்டு விடலாம்..."

"நண்பர்களே!
நீங்க மரமாக போறீங்க...
என்ன மரம் ஆவீங்க...?

"என்ன மரம் ஆகலாம் ?" என்று முடிவு செய்து விட்டீர்களா ? அப்படியே உங்க மந்திரச் சொல்லையும் இங்கே சொடுக்கி சொல்லிடுங்க... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பதிவு மிகவும் நன்றாக இருக்கு. வாழையில்தான் எல்லா பாகங்களும் மற்றவர்களுக்கு பயன் படும் விதத்தில் இருக்கு. நானும் வாழைமரம்தான்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு மரத்தின் பயனை மனிதனால் தரமுடியாது தலைவரே...

    பதிலளிநீக்கு
  3. அத்தனை மரமும் பயன்படும் மரம்தான்...

    மரமானால் போதும் இதில் எதற்கு பாகுபாடு...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அழகிய தகவல் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அழகான அருமையான பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தன பாலன் - அருமையான பதிவு. மரங்களைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய பதிவு. மேலும் என்ன மரமாக விரும்புகிறீர்கள் என ஒரு கேள்வி. எனக்குப் பிடித்த வாழைப்பழம், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழை இலை என அனைத்தையும் தரும் வாழைமரம் - தன் பாகங்கள் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கும சிறந்த குணம் உடைய வாழைமரம் - ஏற்கனவே தனபாலனும் சகோதரி லெட்சுமியும் மாற விரும்பிய வாழைமரம் ஆக நானும் விரும்புகிறேன். நல்வாழ்த்துகள் தனபாலன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. நல்ல பயனுள்ள தொகுப்பு... மரங்களில் என்ன பாகுபாடு...



    உங்கள் கருத்துக்காக

    காதல் - காதல் - காதல்

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பயனுள்ள தகவல். மனித வாழ்வின் மாற்றத்திற்கு மரங்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. அண்ணே.... மரங்கள், பழங்கள் பயனை அனுபவ பகிர்வு மூலம் அருமையா பகிர்ந்திருகிங்க....

    பதிலளிநீக்கு
  10. நம்ம ஊரு சிறுமலை வாழைபழம் ருசியோ ருசி... அதை பத்தி ஒரு பதிவு போடுங்களேன்....

    பதிலளிநீக்கு
  11. விதை வீதி... // சௌந்தர் // said... 3

    அத்தனை மரமும் பயன்படும் மரம்தான்...

    மரமானால் போதும் இதில் எதற்கு பாகுபாடு...
    >>>>
    ரிப்பிட்டு

    பதிலளிநீக்கு
  12. வித்தியாசமாக யோசித்து மிக அழகாக
    மரத்தின் பலன்களை விவரித்துள்ளது அருமை
    படங்களுடன் பதிவு அட்டகாசம்.வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  13. நான் பப்பாசி மரம் ஆகலாம்னு பாக்கிறேன்!பழம் கொடுப்பேன்,ஆனால் சட்டுனு முறிந்து விழுந்து விடலாமே?

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு சகோ. அருமையாக இருக்கு, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அன்பு நண்பரே,
    மரங்களின் பலன்களை நீங்கள் சொன்ன விதம் மிக அருமை.
    நாம் வெளிவிடுவதை உட்கொண்டு நாம் சுவாசிப்பதை வெளிவிடும்
    அரிய செயலைச் செய்யும் மரங்களுக்கு இணை வேறு எதுவுமில்லை.
    பனைமரத்தின் அத்தனை பாகங்களும் மனிதனுக்கு உதவுகின்றன.
    தனக்கான வளர்ச்சிக்கு மனிதனிடம் தண்ணீரும் எதிர்பார்ப்பதில்லை.
    எதிர்பாராது உதவி செய்யும் பனைமரமாக ஆவதற்கே நான் விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான பயனுள்ள பதிவு.... வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  17. பாஸ் என்ன இது இயற்க்கை வாரமோ???ஹா ஹா....

    இயற்க்கை கொஞ்சும் படங்கள் பதிவு.... சூப்பர்

    பதிலளிநீக்கு
  18. தனபாலன், இயற்கையை மனிதன் நேசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். அதற்கேற்ற நல்லதொரு பதிவை அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நான் பனைமரமாகத்தான் விரும்புவேன். பனைபொருட்கள் மனித குலத்துக்குப் பயனுள்ளவையல்லவா? நன்றி!

    பதிலளிநீக்கு
  19. எந்த மரமானாலும் சரியே
    மனிதனாக மட்டும் வேண்டாம்!


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  20. “சின்ன வயசுல ஆசிரியர் கேள்வி கேட்டு பதில் தெரியாம..நின்றால் ஏண்டா..மரம் மாதிரி நிக்கிற..?என்று சொல்லுவார்...நாங்க ஆல்ரெடி மரம்தான்ங்க...இதுல என்ன பேதம்..கட்டுரையின் வாயிலாக மரத்தின் பலன்களையும் அறிந்துகொண்டோம் நன்றி

    பதிலளிநீக்கு
  21. நான் மரங்களை நேசிப்பவனாகவே இருக்கிறேன், விரும்புகிறேன்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. இயற்கையை சிறப்பித்து பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.

    மரத்திற்கு தர மட்டுமே தெரியும். மனிதனுக்கு பெற மட்டுமே தெரியும். மனிதன் மரமானாலே பெரிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  23. இந்த யுடான்ஸ் வாக்கு பட்டையை எப்படி ஒரே வரியில் வரும் படி அமைத்தீர்கள்? நான் என்ன செய்தும் அடுத்த வரியில் தான் அமைகிறது. இல்லையெனில் வர மறுக்கிறது. கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.

    பதிலளிநீக்கு
  24. பல வகையான மரங்களின் குணநலன்களை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நல்ல பதிவு நண்பா.
    காட்டைஅழித்து காசு பார்க்கும் கயவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய பதிவு இது.நான் மரமாக இருபதைவிட,மரத்தோட்டமாஹா இருபத்தைநேசிகிறேன்.
    எல்லா மரமும் என்னிடம் இருகுமேநண்பா....

    பதிலளிநீக்கு
  26. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.ஏதேதோ திட்டங்கள் போடுகிற அரசு மரம் வளர்க்க அல்லது வளர்ப்பவருக்கு உதவ ஏதேனும் திட்டம் போடலாம்.

    பதிலளிநீக்கு
  27. Naan No. 2 Sir! En Nilaimai athuthan. Arumaiyana pathivu. Arputhamaana sinthanai. Thodaravum.
    Tamilmanam 9.

    பதிலளிநீக்கு
  28. பயனுள்ள மரங்களைப்பற்றி இனிமையான் பகிர்வு...

    ஒவ்வொரு விரல்களும்
    ஒருமரமானல் இருபது மரங்களாகலாமே!

    எனக்கு எல்லா மரங்களும் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  29. அருமையான பதிவு. மரங்களைப் பற்றிய அருமை தகவல்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. எந்த வகை மரம் என்றாலும் மனிதனுக்கு மட்டும் அல்ல இந்த பூமிக்கும் பயன்தருகிறது.

    மிக அருமையான சிந்தனையை பதிவு செய்துள்ளீர்கள்... நண்பரே...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  31. தலைப்பைப் பார்த்தவுடன் எனது எண்ணம் எங்கெல்லாமோ போய் வந்தது. நாம் இறந்த பின் புழுக்களினால் உண்ணப்பட்டு அதைப் பறவைகள் உண்டு. பின் அவை விதிகளுடன் ஐக்கியமாகி திரும்பவும் மரமாகி என எங்கள் மறுபிறப்பு எண்ணம் எல்லாம் தோன்றியது. ஆனால் கதை இப்படிப் போய் விட்டது. பரவாயில்லை நான் என்ன மரமாக இருந்தாலும் சந்தோசப்படுவேன். இயற்கையின் படைப்புக்கள் அத்தனையும் அற்புதமே நச்சு மரமாக இருந்தாலும் மனமுடைந்து வாழ்வை இழக்க நினைப்பவனுக்கு அதுவும் உதவுகின்றதுதானே. அனைத்தும் சிறப்பு ஒரு விடயம் எனது எடிட்டிங் உங்களுக்குப் பயன்படுவது மனதுக்குச் சந்தோசமாக இருக்கின்றது. அன்று நம்பிக்கையில் கண்டேன். இன்று முருங்கை மரத்தில் பார்க்கின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
  32. அடடா அருமையான பதிவுங்க,, மரங்களை அதிகமாக தெரிந்துகொண்டேன்,

    பதிலளிநீக்கு
  33. அட... பார்ரா என்ன அருமையான விளக்கம்.

    நம்ம ஒட்டு வாழைக்கே

    பதிலளிநீக்கு
  34. ஆஹா அருமையான பதிவு, பல விபரங்களையும், மரங்களின் மருத்துவ குணத்தையும் விளக்கமா சொன்னது அருமை..!!!

    பதிலளிநீக்கு
  35. மிகச் சிறப்பாகத் தொகுக்கப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  36. கண்ணுக்கு குளிர்ச்சியும் வாய்க்கு ருசியும் தரும் மரங்கள்

    பதிலளிநீக்கு
  37. மரங்களைப் பற்றி அருமையான பதிவு.

    நல்ல காற்று, பறவைகளின் ஒலி, அது தரும் நிழல். மரங்கள் எல்லாம் அழகு தான். மனிதன் அதை மதித்து போற்றினால் நன்மைகள் பல.

    பதிலளிநீக்கு
  38. பயனுள்ள பதிவு. ஆனால் ஒரு நெருடல். எடுத்துக்காட்டாக கடலியலைப் படித்துவிட்டு விவசாயத்தை தொழிலாக கொள்வது சரியா? பிறகெதற்கு படித்து பட்டம் வாங்கவேண்டும்.?
    அது சரி, நிழற்படத்தில் தேக்கு மரம் என்பதில் தேக்குமரமாகத் தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  39. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை அளித்து வரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

    பதிலளிநீக்கு
  40. மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை நண்பரே. இணைந்து விட்டேன்.
    இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு நன்றி

    Mahes

    பதிலளிநீக்கு
  41. மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை.

    நான் எல்லா மரமுகாக ஆசைதான் ஆசை யாரை விட்டது. அனைவருக்கும் பயன் தரும் மரங்களின் அணிவகுப்புகள் அருமையோ அருமை..

    பதிலளிநீக்கு
  42. சிறந்த தளம்
    பாராட்டுகள்.
    திண்டுக்கல் வரும்பொழுது சந்திப்பேன்.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    பதிலளிநீக்கு
  43. மரங்களின் மேன்மையை சொல்லும் உபயோகமான பதிவு ... இனிமேலும் யாரையும் பார்த்து என்ன மரம் மாதிரி நிக்கிற ? என சொல்லி மரத்தை கேவலப்படுத்த முடியாது ...!

    பதிலளிநீக்கு
  44. மிகவும் அருமையான பதிவு + சிந்தனை

    பலாப்பழத்த பார்த்தாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்நாவூறுது

    பதிலளிநீக்கு
  45. தொடர்ண்ந்து என் வலைப்பக்கம் வருகை தருவதற்கு மிக்க நன்றி

    வேலை பிஸியினால் இது வரை இங்கு கமெண்ட் போட முடியல .

    முடிந்த போது வருகிறேன்.

    http://samaiyalattakaasam.blogspot.com

    www.chennaiplazaik.com

    பதிலளிநீக்கு
  46. உபயோகமான பதிவு. நான் ஏற்கனவே மரமாகிவிட்டேன். உண்மையில் ஹோமியோபதியின் அடிப்படையும் இதுதான். நாம் எந்த தாவரத்தின் குணத்தை கொண்டிருக்கிறொம் என்பதை அடிப்படையாக கொண்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  47. நல்ல பதிவு....
    பயன் தரும் மரங்கள் பலவற்றையும் அருமையாக பட்டியல் இட்டு இருக்கிறீர்கள்..

    விடயத்திற்கு வருவோம்..

    //நீங்க என்ன மரமாக போறீங்க?//

    மரங்கள் அனைத்தும் பயன்தருபவை என்ற கருத்து பல மக்கள் மனதில் விதைக்கப்பட்ட ஒரு பெருந் கற்பிதம். அதன் காரணமாகவே, இன்று நாம் பல இடங்களில் மண்வளத்தை இழக்க நேரிடுகிறது!!

    எனவே, உங்கள் கேள்விக்குப் பதிலாக நான் என்ன மரமாக விரும்பவில்லை என்று கூறுகிறேன்...

    நான் எந்த சூழ்நிலையிலும் கருவேல மரமாக பிறக்கவே கூடாது என்று நினைக்கிறேன்..

    நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி வறட்சிக்கு வித்திடும் கொடூர தாவரம் அது..
    முடிந்தளவு எங்கு பார்த்தாலும் அதனை வெட்டுங்கள்!!

    சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்!!

    இந்த கருத்தை எல்லா நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    பி.கு:
    என் கருத்துகள் உங்களுக்குப் பிடிக்காமலோ, புண்படுத்துவதாகவோ இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  48. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  49. பல தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  50. மரங்களின் சிறப்பு அருமையாக உள்ளது கற்பனை அருமை நான் தேக்குமரமாக இருக்க விரும்புவேன்

    பதிலளிநீக்கு
  51. எந்த மரமானாலும் ஒன்றுதான்
    நாம் தான் அவைகளை வேறுபடுத்துகிறோம்
    கூறு போடுகிறோம், வெட்டிச் சாய்கிறோம்
    வெட்கமின்றி.

    பிறக்கும்போது தொட்டிலாகவும்
    வளர்ந்து வாழும் காலத்தில் நாலு காலுடைய கட்டிலாகவும் மற்றும் பல பொருட்களாகவும் உண்ணும் உணவுப் பொருட்களாகவும், கனிகளாகவும்,
    முடிவில்
    நாம் இந்த உலகை விட்டும் போகும் பொது காலில்லாக் கட்டிலாகவும் எரியூட்டும் விறகாகவும். சிவனை நினைத்து பூசிக்கொள்ளும் விபூதியாகவும் நாம் விடும் நச்சுக் காற்றை நல்லதோர் பிராண வாயுவாகவும் மாற்றித் தந்து நம்மை காப்பாற்றும் மரங்களை மனிதனோடு ஒப்பிடுவது ஹிமாலயத் தவறு.மரங்கள் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தியாக பிறவிகள். அவைகளை கூண்டோடு அழிப்பவர்கள் ஈனப் பிறவிகள் என்பதில் சந்தேகமில்லை.

    மரங்கள் தெய்வங்கள். அதனால்தான் புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.
    அவைகள் இன்றும் கோயில்களில் தல விருஷங்கலாக மதிக்கப்பட்டு வணங்கப்பட்டன
    இன்றும் வணங்கப்படுகின்றன.

    பல லட்சக்கணக்கான உயிர்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பேய்களுக்கும், தேவர்களுக்கும் புகலிடமாக மரங்கள். விளங்குகின்றன.

    மதியுடையோர் மரங்களைப் போற்றுவார்.

    மதிகேடர்கள்தான் மரங்களை அழிப்பார்.

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் சகோதரரே.!

    தங்கள் பதிவை ரசித்துப் படித்தேன்.அருமையான நண்பரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்...! மரங்களின் மருத்துவ குணங்களோடு நீங்கள் இந்த பதிவை எழுதி மரங்களின் பெருமைகளை சுட்டிக் காட்டியிருந்தது மிகச் சிறப்பு. எவ்வகையிலும், மனிதனை விட மரங்களின் சிறப்பு மேலோங்கியதுதான்..தங்கள் கருத்து முற்றிலும் சரிதான்.. மனிதனுக்கு பயனுள்ள
    மரங்களின் பெருமைகளை அறிய தந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.