🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!


"எப்படியெல்லாம்
வாழக்கூடாதோ
அப்படியெல்லாம்
வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே
இப்படித்தான்
வாழவேண்டும்
என்று சொல்லும்
யோக்கிதை
எனக்குண்டு"



கவிஞர் கண்ணதாசன்


குடிமகனிடம் ஒரு உரையாடல்


ஏண்டா... தண்ணி, சிகரெட், கஞ்சா - இப்படி இன்னும் என்னென்ன போதை பழக்கத்துக்கெல்லாம் அடிமையா இருக்கே...? எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே... மத்தவங்க உன் மேலே வைச்சிருந்த மதிப்பும் மரியாதையும் போச்சி... பயமும் சுத்தமா போச்சி...

போகட்டும்டா... அதுக்கென்ன இப்போ...? மூத்தவங்க என்ன, எங்க அப்பா அம்மா ஆனாலும் சரி... நல்ல நண்பர்களும் சரி... யாரோட மதிப்பும், அறிவுரை ஆலோசனை எல்லாம் எனக்கு தேவையேயில்லை... நான் 'தண்ணி'க்காட்டு ராஜாடா...!

அடேய் கூஜா... உன்னைப் பார்த்து நீ சொன்னவங்க யாரும் சந்தோசப்பட மாட்டாங்க... பாவி, பரிதாப்படுவாங்கடா... அவ்வளவு ஏண்டா, எந்த தப்பையும் மன்னிக்கிற உங்க அம்மாவே சகிச்சிக்க மாட்டாங்க... வெட்கமா இல்லே உனக்கு...?

என்னது வெட்கமா...? அப்படி ஒன்னு இருக்கோ...? ஹே ஹே... என்னைப் பார்த்து அந்த வெட்கமே ஓடிப் போயிருச்சு...! அட இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...? எனக்கு வேண்டியது எந்நேரமும் போதை...!

அடேய்... இப்படி எந்நேரமும் போதையிலே இருக்க, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமெல்லாம் போகுதே... பணத்தை விடு, இப்படி உடம்பை சீரழிச்சிக்கிறேயே... இதைவிட முட்டாள்தனம் உலகத்திலே எதுவுமேயில்லை... அது விசம்டா... மனுசனா நீ...?

நான் சம்பாதித்த சொத்து, என்னவேணாலும் செய்வேன்... யாருக்காவது சிரமம் தர்றேனா...? குடிச்சிட்டு நான் பாட்டுக்க செத்த பொணம் மாதிரி படுத்துக்கறேன்... நானா உளறினா தான் தண்ணி அடிச்சிருக்கேன்னு தெரியும்...

நீ உயிரோட இருந்தாலும் பொணம்தாண்டா... என்னது உளறலா...? க்கும்... இந்த நினைப்பு வேறயா...? யாருக்கும் தெரியாம நீ தண்ணி அடிச்சாலும், போதையில் இருக்கிற உன் கண்ணே காட்டிக் கொடுக்குது... உள்ளூரிலே எல்லோருக்கும் தெரிஞ்சி சந்தி சிரிக்குது...

சிரிக்கட்டும்... சிரிக்கட்டும்... கவலையில்லை... நான் குடிக்கலேன்னு சொன்னா யாரும் நம்பவே மாற்றங்கப்பா... கொஞ்ச நேரத்திலே எனக்கே தெரியாம உண்மை தானா வெளியே வருது...! அதுக்கெல்லாம் நானா பொறுப்பு...?

இது வெறும் மனநோய் தான்டா... உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலே... கிணத்திலே விழுந்தவனைத் தேடிக் கண்டுபிடிக்க, ஒருத்தன் தீப்பந்தம் கொளுத்திட்டு குதிச்சானாம்... அப்படிதான் உன்னையெல்லாம் திருத்தவும் முடியாது... தெளிய வைக்கவும் முடியாது... நீயா திருந்தினாத்தான் உண்டு...!

போடாடேய்... போதையில் இல்லாத போதே, எத்தனை குடிகாரங்களோட அலப்பறையே பார்த்து இருக்கிறோம்... குடிச்சி சீரழிந்து, குடும்பம் சின்னாபின்னமாக்கிப் போன எத்தனையோ நண்பங்க வீட்டிக்கு போயிருக்கோம்... அங்கேயே நாங்கெல்லாம் ஃபுல்..! அப்பவே திருந்தலையாம்... இப்போ நீ வந்து சொன்னா மட்டும்...? அதெல்லாம் நினைக்க நேரமேயில்லே...!

ஹலோ DD... உன் மனசாட்சி பேசுறேன்... சில தொழினுட்ப பதிவிலேயே திருக்குறளும் இருக்கும், ஒரு திரைப்படப் பாடலாவது இருக்கும்... இந்தப் பதிவுல எதையும் காணாம்...? என்ன பதிவு இது...? ஒருவேளை இது திருக்குறளின் எந்த அதிகாரம்...?-ன்னு கேட்கப் போறீயா...?

ம்ஹிம்... நானே சொல்லி விடுகிறேன்... 'கள்ளுண்ணாமை' அதிகாரம்...

பார்ரா...! ம்... ஓஹோ, இது நம்ம பாணியிலே குறளின் குரல்... குறளை கையிலெடுப்பவர்களுக்கு நன்றியை தெரிவிச்சிக்கிறேன்... சரி, எங்கேப்பா குறளுக்கேத்த பாடல் வரிகள்...?

சொல்றேன் இரு... இந்தப் பதிவுக்குப் பதிலா, முந்தைய பதிவுகள் போல பத்து திரைப்படப்பாடல் வரிகளைக் கொடுத்து... ம்ஹிம்... இதோட முதல் குறளுக்கு ஒரேயொரு திரைப்படப்பாடல் சொல்லிட்டா, 'கள்ளுண்ணாமை' அதிகாரம்-ன்னு வாசிக்கிற எல்லோரும் உடனே சொல்லிடுவாங்க... அதனாலே இந்த முறை வித்தியாசமாக...

பாடல் வரிகளைக் கருத்துரையில் சொல்லப் போறது வாசகர்களா...?

ஆமா ஆமா... இதே பதிவு குறளோடு, குறளுக்கேற்ப பாடல் வரிகளுடன் அடுத்த பதிவு வரும் போது மிகவும் ரசிப்பார்கள்... (!)

அவ்வளவு தானே...? அடுத்த பதிவில் "பட்டை"யை கிளப்பிடுவோம்... மன்னிச்சு... "பாட்டை"யை கிளப்பி விட்டு'டுடு'வோம்...!

கம்முன்னு இரு... நாம குறளுக்கேற்ப 10/15 பாடல்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்... கருத்துரையிலே வர்ற பாட்டோடு எத்தனை பாடல்கள் ஒத்துப் போகிறதுன்னு பார்ப்போம்...


அன்பர்களே... குறள்களையோ, இந்த உரையாடலையோ நல்லா படிச்சிப் பாருங்க... 'குடி' பற்றிய பாடலோ, அதன் தத்துவப் பாடலோ, உங்கள் மனது பாடுமே - அதை அப்படியே கருத்துரையில் → ↓

தங்களின் பாடல் வரிகள் என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கவியரசு அல்லவா
    அருமை
    தங்களின் பதிவினைப் பார்த்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன ஐயா

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவைப் படிக்கவந்தால் சிந்திக்குமாறு செய்துவிடுகிறீர்களே, இது நியாயமா?

    பதிலளிநீக்கு
  3. கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி

    பதிலளிநீக்கு
  4. கண்ணதாசன் த க்ரேட்....

    டிடி... நமக்கு ..திருக்குறள் கேட்டா கண்டுபிடிச்சிடுவோம்....பாட்டு கேட்டா கடின மாச்சே.....சரி முயற்சி செயிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. 4. அடா என்னடா பொல்லாத வாழ்க்கை....இதுக்கு போயி அல ட்டிக்கலாமா....

    இது மட்டும் உடனே தோணிச்சு....மத்ததும்..பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முதல் புகைப்படமே அருமை.
    அடுந்து வந்த "அர்த்தமுள்ள இந்து மதம்" நூலின் தொடக்கவரிகள் நன்று

    "நீ உயிரோட இருந்தாலும் பொணம்தான்" மிகச்சரியான வார்த்தை ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  7. குறளை கையில் எடுக்க வைத்து விட்டீர்கள். மெதுவாக பாடல்களை யோசித்து போடுகிறேன்.
    புதுமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சாவுதற்கு முன்னாடி குடியை விட்டதால் நல்லவராக ஆகி விட்டாரே...

    பதிலளிநீக்கு
  9. "போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்" (கண்ணதாசன் காரைக்குடி)
    "விடுங்கடா சும்மா ! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?" (என்னடா பொல்லாத வாழ்க்க)
    "ஜெயிச்சுட்டா புகழ் போதையில் ஆடுரானே
    தோத்துட்டா சரக்கு போட்டுஆடுரானே" (கந்தா கார வட)
    "பிணத்துக்கு முன்னாள் நாளைய பிணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது"
    "குடிகாரன் பேச்சு அது விடிஞ்சு புட்டா போச்சு" ( போட்டது பத்தல (சகுனி )

    பதிலளிநீக்கு
  10. ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்ப நான் கேள்வி கேக்கணும் சர்வேசா

    பதிலளிநீக்கு
  11. சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
    சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டிலில் மயங்குவார்..

    மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
    மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்..

    படம் :- சங்கே முழங்கு..

    சரியாக இருக்கின்றதா!..

    மூளைக்கு வேலை கொடுக்கின்ற பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம், இரண்டு மனம் வேண்டும் நான் இறைவனிடம் கேட்பேன்

    பதிலளிநீக்கு
  13. தன் கெட்ட குணங்களையும் அப்பட்டமாகச் சொன்ன அதிசயக் கவிஞன் கண்ணதாசன்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. கள்ளுண்ணாமை அதிகாரத்தை மறுபடி படிக்க வைத்து விட்டீர்கள். நன்றி .

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு அண்ணா .... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. புதுமையான எழுத்துக்கள்..புதுமையான போட்டியோ..? யோசிக்க வைத்து விட்டீர்கள்.
    கஷ்டப்பட்டு நினைவோடு போட்டி போட்டதும் நினைவில் வந்து நின்ற
    பழைய பாடல்கள்...சமீபத்தில் இன்னும் அதிகம் வந்திருக்கலாம். தெரியவில்லை.


    உலகே மாயம் வாழ்வே மாயம்....!
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ..தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்....!
    தகிட தகிமி தகிட தகிமி தந்தானா.....ஹ்ருதய ஒலியில் ...
    ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்....உலகைப் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணீ.....கண்மணீ,,,,,!
    பாலூட்டி வளர்த்தகிளி...பழம்கொடுத்து பார்த்தகிளி...!
    சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னாலே தாங்க மாட்டார்...!

    பதிலளிநீக்கு
  17. நான் விட்டெறிஞ்சேன் சல்லியை...
    அட! ஊத்திக்கிட்டேன் மில்லியை....!

    நிஜத்தில், ஒரு மனிதனையோ, அவனது வாழ்க்கை தரத்தையோ ஒரு மில்லி மீட்டர் அளவுக்காவது குடி உயர்த்தியதாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை. ஆனால், சாக்கடை முனைகளில் இட்டுத் தள்ளியிருக்கிறது.

    அறிவுரை சொல்வதற்கு கண்ணதாசனாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சசிபெருமாளாக இருக்கலாம். அல்லது DDயாகவும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.....

    சொர்க்கம் மதுவிலே...

    நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு...

    குடிமகனே.... குடிமகனே

    பதிலளிநீக்கு
  19. குடி மகனே. ... பெரும் குடிமகனே....
    வோட் போடுவது பின்னேரம் வந்துதான்.

    பதிலளிநீக்கு
  20. நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் போது!

    திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?

    உலகம் சுற்றுவது எதனலே?



    பதிலளிநீக்கு
  21. கள்ளுண்ணாமை... வாசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  22. திரைப்படங்களுக்கும் எனக்கும் தொடர்பு விட்டுப்போய் ஐம்பது ஆண்டாயின ; ஆதலால் பாட்டு எதுவும் எனக்குத் தெரியாது .குறளை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்துகிற உங்களுக்குப் பாராட்டு .

    பதிலளிநீக்கு
  23. தி.தனபாலன் - இடுகையைச் சாக்கிட்டு எல்லோரையும் 'குடி' பற்றி நினைக்கவிட்டுவிட்டு, அதற்குப் பிராயச்சித்தமாக 'கள்ளுணாமை'யைப் பற்றி எழுதினால் ஆச்சா?

    பதிலளிநீக்கு
  24. ஒரு பாட்டு கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே :)
    ஆஹா இதோ தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் :)

    ஆண்டவனை பார்க்கணும் அவனுக்குக்கு ஊற்றனும்


    பதிலளிநீக்கு
  25. இரண்டு பாடல்கள் நினைவில் தட்டுகின்றன:

    1) நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்..

    2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..ஒரு கோலமயில் என் துணையிருப்பு ..

    இரண்டாவது பாடல் கோப்பையில் ஆரம்பித்தாலும் அது காட்டும் மனிதன் வேறு..அவனது உலகமே வேறு! ஆகையால் இது வெறும் ‘குடி’ப்பாட்டு அல்ல!

    பதிலளிநீக்கு
  26. நான் சொல்ல நினைத்த பாடல்களை எல்லாம் சொல்லி விட்டார்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறாவாயில்லை பகவான் ஜீ கூட்டப்படாமல் சொல்லுங்கோ:).

      நீக்கு
    2. கூச்சத்தை விட்டு சொல்ல்ல்ல்றேன் .....சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
      மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்:)

      நீக்கு
  27. ஹா நெஞ்சு வரை வருகிறது ஆனால் நான் சொல்ல வருவதை பிறர் சொல்லி விட்டனரே

    பதிலளிநீக்கு
  28. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா

    உலகம் பிறந்தது எனக்காக...

    எங்கே வாழ்க்கை தொடங்கும்...

    போனால் போகட்டும் போடா...

    பதிலளிநீக்கு
  29. பதிவைப் பார்த்து நெடுநாள் ஆகிவிட்டது என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால்..ஏதோ கேள்வி கேட்டுவிட்டீர்கள். மாணவன் பயப்படுவதுபோல பயந்து, படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  30. அருமையான இன்றைய சூழலில்
    அவசியமான பதிவும் கூட
    குடி என்பதற்கான விளக்கமும்
    தண்ணீருக்குள் தீப்பந்தமும்...அருமை
    பகிர்வுக்கும் அடிக்கடித் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  32. 'நான்' நிரந்தர (மாணவன்) அழிவதில்..லை
    எந்த நிலையிலும் எனக்கு
    ம..'ரணமில்லை'.
    அன்பே சிவம்

    பதிலளிநீக்கு
  33. மதுக்கடைகளை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் அதிகரித்து வரும் வேளையில் நல்ல பதிவு . பாடல் வரிகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. பாட்டெல்லாம் எனக்குத் தெரியாது.ஆனால் நீங்கல் எழுதியிருப்பது இன்றைய சுடும் யதார்த்தம்

    பதிலளிநீக்கு
  35. குடி, புகைத்தல், விலைப்பெண் உறவு
    எல்லாமே எல்லை மீறினால்
    மனநோய் தான்

    உளநல மருத்துவரின் மதியுரைப்படி இவ்வாறானவர்களை நன்நடத்தைப் பிரிவில் சேர்க்கலாம். அவர்கள் திருந்த வாய்ப்புண்டு.


    நாளை முதல் குடிக்க மாட்டேன்
    சத்தியமடி தங்கம்
    இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
    ஊத்திக்கிறேன் கொஞ்சம்
    http://tamilaavanam.blogspot.com/2013/02/Tamil-Old-Songs.html

    ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன்
    நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்
    சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
    எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன்
    http://ithayathamarai.blogspot.com/2011/06/raatthirikki-konjam.html

    பதிலளிநீக்கு
  36. குடிப்பதுக்கு ஒரு மனம் இருந்தால் பாட்டு நினைவில் வருகின்றது இரண்டு மனம் வேண்டும் வசந்தமாளிகைப்படப்பாடல்))! அருமையான பகிர்வு கண்ணதாசன் போல வெளிப்படையாக யாரால் எழுத முடியும்.

    பதிலளிநீக்கு
  37. நண்பர் யாழ்பாவண்ணன் சொல்லிய நாளைமுதல் குடிக்கமாட்டேன் பாடலும் கவிஞரின் பாடலே!

    பதிலளிநீக்கு
  38. இப்படியான காலத்தின் அடையாளங்கள்
    என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  39. நல்ல சிந்தனைப் பதிவு நன்றி டிடி
    tamil manam - 15
    https://kovaikkavi.wordpress.com/
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  40. குடிப் பாடல் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது அதே கண்ணதாசனாரின்,

    "தெய்வம் தந்த வீடு
    வீதி இருக்கு
    தெய்வம் தந்த வீடு
    வீதி இருக்கு
    ...
    ...
    ...

    மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
    கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
    தேனென்ன கடிக்கும்
    தேளென்ன ஞானப்பெண்ணே!
    வாழ்வின் பொருள் என்ன
    நீ வந்த கதை என்ன

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்"

    என்னே வரிகள்! சித்தர் பாடல் பாணியில் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் !

    தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா ? மனிதன் தானா ?

    இது மட்டும்தான் சார் நினைவுக்கு வருது அடுத்த பதிவுக்கிடையில் கண்டுபிடிக்கிறேன் இன்னும் சில பாடல்களை

    அனைத்தும் இரசித்தேன் நன்றி !

    பதிலளிநீக்கு
  42. தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்..
    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடம்போலே...
    பார்த்த ஞாபகம் இல்லையோ..
    சரக்கு வச்சிருக்கேன் எரக்கி வச்சிருக்கேன்..
    மச்சி ஓபன் த பாட்டில்.. ஆடாம ஜெயிச்சோமடா..
    கோடான கோடி குளிப்போம் விளையாடி..
    சரோஜா சாமானிக்காலோ.. அப்டியே எல்லா வெங்கட் பிரபு படமும் எடுத்துக்கங்க கண்டிப்பா ஒரு சரக்கு பாட்டு இருக்கும்...

    பதிலளிநீக்கு
  43. சினிமா,அதன் ஸம்பந்தப்பட்ட பாட்டுகள் என அடுத்தடுத்து பார்க்க வசதியில்லாத தேசத்தில் இருந்தவள்நான். அதனால் ஏதும் மனதில் வருவதில்லை. பின்னூட்டங்களைப் படிக்கும்போது சில ஞாபகம் வருகிறது. தமிழ் வானொலிப்பெட்டியில் கேட்டதுடன்ஸரி. இப்படிதான் எண்ணம் போகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.