🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நீங்கள் பறவையானால்...?


வாங்க குழந்தைகளே, காலாண்டு தேர்வு எல்லாம் நன்றாக முடிந்ததா ? என்னம்மா, பாட்டுப் போட்டி நடத்திருவோமோ ? // நண்பர்களைத் துயரத்திலே கண்டுகொள்ளலாம்... நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்... வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்... மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்... உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்... என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்... வருங்கால மன்னர்களே வாருங்கள்... என் வார்த்தைகளைச் செவி கொடுத்து கேளுங்கள்... இருக்கும் வரைக்கும் இறக்கை விரித்துப் பறக்க வேண்டும் தும்பிகளே... இமய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே ஹோஹோ...


© ராஜா சின்ன ரோஜா வைரமுத்து சந்திரபோஸ் 🎤 S.P.பாலசுப்பிரமணியம் @ 1989 ⟫

இப்போ எங்களைக் கண்டு கொள்ளுங்க... பாட்டு எல்லாம் எங்களுக்கு தெரிந்தளவு சொல்கிறோம்...! வேறு எதாவது சுவாரஸ்யமா கேள்வி கேளுங்க அப்பா...!!!

அப்படியா சரி, நீங்கள் பறவையானால்...? என்ன பறவையாக மாறுவீர்கள்...? உங்களின் அரட்டை ஆரம்பம் ஆகட்டும்... நான் உங்களின் பேச்சிற்கேற்ப பாடல்களைப் பாடுவேன்... [ வாசிப்பவர்கள் பாடலை ரசிக்க பா என்பதற்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று ரசித்து விட்டு, (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவை கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், பா என்பதன் மேல் சொடுக்கிப் பாடி விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி... ] பா 1
இன்னிசை நின்று போனால், என் இதயம் நின்று போகும்-இசையே… உயிரே… எந்தன் தாய்மொழி இசையே, என் இமைகள் துடிப்பதும் இசையே, எங்கும் இசையே... மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்... கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்... ஐம்புலன்கள் எந்தன் இருப்பு... செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு... நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு... ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு... இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்… இசையோடு போவேன்... இசையாவேன்... ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்...! இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்...! (படம் : முகவரி) அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்...


கொஞ்சமாகச் சோறு வைத்தால் கூட எல்லா காகத்தையும், கத்திக் கூப்பிட்டுச் சாப்பிடுகிறதே... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்-322) - உயர்ந்த குணம் இல்லையா...? அது மட்டுமா...? ஒரு காகம் இறந்தால் கூட, அனைத்து காகங்களும் சேர்ந்து கரைகிறதே... ஒண்ணா இருக்க கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்... காக்கா கூட்டத்தை பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க...? ஒற்றுமையை நாம் காகத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும்... அதனால் காகம் தான் என் விருப்பம்... பா 2
எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே... இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை2 எத்தனையோ இந்த நாட்டிலே...2 பட்சி ஜாதி நீங்க - எங்க பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க...!2 பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க... பழக்கத்தை மாத்தாதீங்க... எங்கே பாடுங்க... கா கா கா... (படம் : பராசக்தி)


வேடனின் பசியை போக்குவதற்காக ஜோடிப் புறாக்கள் இரண்டும் நெருப்பில் விழுந்து தன்னை வதக்கிக் கொண்ட கதை உங்களுக்குத் தெரியும்... 'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இன்னொருத்தருக்காக தன் உயிரை தந்தாவது உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தியது மட்டுமில்லாமல், சமாதானம் இன்று வீட்டிற்கு, நாட்டிற்கு, ஏன் இந்த உலக நாட்டிற்கே தேவை என எடுத்துக்காட்டும் புறாவாகப் பறக்க ஆசை... பா 3
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே... கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே... காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே... காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே... ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்... அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்... இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்... ஒரே வானிலே ஒரே மண்ணிலே... ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்... (படம் : ஆயிரத்தில் ஒருவன்)


உருவத்தில் சின்னதாக, அழகான, சுறுசுறுப்பான, நமக்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுப்பூர்வமான பறவை எது தெரியுமா...? யாருக்கும் எந்த தொந்தரவும் தராத 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்படும் சிட்டுக்குருவி தான்... தொல்காப்பியம், பாரதியார் கவிதை உட்பட இலக்கியங்கள், திரைப்பாடல்களில் அதிகம் பேசப்பட்ட, சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும் அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்க இப்போது முடிவதில்லை... ...ம்... சுதந்திரமாகச் சிட்டுக்குருவியாகப் பறக்கிறேன்... பா 4
மரத்தில் படரும் கொடியே; உன்னை வளர்த்தவரா இங்குப் படர விட்டார்...?2 மண்ணில் நடக்கும் நதியே; உன்னைப் படைத்தவரா இந்த பாதை சொன்னார்...? உங்கள் வழியே உங்கள் உலகு... இந்த வழிதான் எந்தன் கனவு... சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...? தென்றலே உனக்கேது சொந்த வீடு...?2 உலகம் முழுதும் பறந்து பறந்து... ஊர்வலம் வந்து விளையாடு...! (படம்: சவாலே சமாளி)


செவிச்செல்வம் தான் செல்வத்துள் எல்லாம் தலை என்பதற்கேற்ப கேட்கும் சக்தி அதிகம் கொண்ட கிளி தான் எனக்குப் பிடித்த பறவை... விதவிதமாய்ப் பறக்கும் எந்த நிறப் பறவை ஆயினும் பஞ்சவர்ணக் கிளியின் ஐந்து வண்ணங்களுள் ஏதேனும் ஒரு நிறத்தில் அடங்கி விடுமே...! நாக்குத் தடுமாறிப் பேசும் உளறுவாயர்கள் உட்படக் கிளியின் குரலை ரசிக்காதவர்கள் யாரும் உண்டோ...? கற்றுக் கொண்டதைத் திரும்பக் கூறும் ஆண்டாளின் இடக்கையில் இருக்கும் சிறப்பு வாய்ந்த அழகான கிளியாகப் பறக்க வேண்டும்... பா 5
அந்த விண்ணில் ஆனந்தம், இந்த மண்ணில் ஆனந்தம் - அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்... வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம் - அட மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்... வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்... பெண்ணே நரை எழுதும் சுயசரிதம், அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்...! பச்சைக் கிளிகள் தோளோடு; பாட்டுக் குயிலோ மடியோடு; பூலோகம் ஆனந்தத்தின் எல்லை; இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை... சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு–அட சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு...? அட பாசம் மட்டும் போதும் கண்ணே... காசு பணம் என்னத்துக்கு...? (படம் : இந்தியன்)


எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி உள்ள பறவை எது தெரியுமா...? சூரியனைத் தொட வேண்டுமென்று, எத்தனை முறை உடல் கருகி மண்ணில் விழுந்தாலும், தன் சாம்பலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து கம்பீரமாய்ப் பறக்கும்... எந்த விசயத்திலும் வெற்றி பெற வேண்டும் என நினைக்க வைக்கும் லட்சியவாதி பறவை பீனிக்ஸ் என் லட்சியம்... பா 6
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்... உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்... நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்... சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்... தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும் பூ மாலை காத்திருக்கும்... நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா...? வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா...? வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றிக் கொடி கட்டுங்கள்... சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்... (படம் : படிக்காதவன்)


பறவைகள் அனைத்திலுமே பார்க்க மிக மிக அழகானது மயில்... எவ்வளவு நேரமானாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்... அது தன் மின்னும் நீலப் பச்சை வண்ணத்திலும் சரி, தோகை விரித்தாடும் அதன் நடன நளினத்திலும் சரி, ஈடு இணையற்ற ஒரு பறவை... இந்தியாவின் தேசியப் பறவை தான் எனது விருப்பம்... பா 7
பூமி எங்கும் பூந்தோட்டம்; நான் காண வேண்டும்... புதுத் தென்றலோ-பூக்களில் வசிக்கும்... ஆகாய மேகங்கள்-நீரூற்ற வேண்டும்... அந்த மழையில்-மலர்களும் குளிக்கும்... அருவிகளோ-ராகம் தரும்... அதில் நனைந்தால்-தாகம் வரும்... தேவதை விழியிலே அமுத அலை... கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை... தோகை இளமயில் ஆடி வருகுது; வானில் மழை வருமோ...? கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ...? தேன் சிந்தும் நேரம்-நான் பாடும் ராகம்; காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ...? (படம் : பயணங்கள் முடிவதில்லை)


நாங்கள் இன்னும் சொல்கிறோம்... சரி, நீங்கள் பறவையானால்...?

படித்தால் மட்டும் போதுமா... ? நல்லவன்... எனக்கு நானே நல்லவன்... சொல்லிலும் செயலிலும் நல்லவன்...! படத்தின் பெயரையும் பாடலின் முதல் வரியையும் சொன்னேன்... ஹாஹா... இதோ பாடலில் சொல்கிறேன்...! பா 8
சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்...2 கீரிப் பிள்ளைபோலே ஊர்ந்து செல்ல வேண்டும்-மண்ணில் கீரிப் பிள்ளைபோலே ஊர்ந்து செல்ல வேண்டும் ஹோய்...! தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்...2 தூய உள்ளம் வேண்டும்; என்றும் சேவை செய்ய வேண்டும்...2 (படம் : படித்தால் மட்டும் போதுமா... ?)


சரி இதற்கு மேல் போனால் வாசகர்கள் பறந்து விடுவார்கள்... ஹிஹி... அருமை குழந்தைகளே... முந்தைய பதிவுகளில் சிறப்பான கவிதைகளைப் படைத்த உங்களுக்குச் சொல்லவா வேண்டும்...? ஒற்றுமை, சமாதானம், சுறுசுறுப்பு, செவிச்செல்வம், லட்சியம், ரசனை, அழகு என யப்பப்பா...! அசத்தி விட்டீர்கள்...! எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...!

இன்னொன்று, தன் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லையெனில், தனது மார்பைப் பாறையில் மோதி, அதில் வரும் ரத்தத்தைத் தனது குஞ்சுகளின் வாயில் ஊட்டுமாம் பெலிகான் பறவை... உங்களையும் படிக்க வைக்க, நல்ல முறையில் வளர்க்க, ஒவ்வொரு பெற்றோர்களின் உண்மை நிலையும் இது போல் தான்; உணர்ந்து புரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே... அதே போல் எவ்வளவு தூரத்தில் பறந்தாலும், தடைகள் பல வந்தாலும் தன் கவனத்தைத் திருப்பாது, தன் பார்வையை இரையின் மேல் வைத்திருக்கும் கழுகின் கூரிய பார்வை போல் உங்களது அறிவுக் கூர்மையும் இருக்க வேண்டும்...

இன்னும் குயில், மைனா, மணிப் புறா, மரங்கொத்தி என தனக்குப் பிடித்த பல பறவைகளின் சிறப்புகளையும், இந்த பதிவிற்கான பதிலையும் எத்தனை வாசகர்கள் சொல்லி விட்டுப் பறக்கிறார்கள் என்பதையும் அடுத்த முறை சந்திக்கும் போது நீங்கள் காணலாம்... இப்போது நாம் பேசின பறவைகளை மட்டும் பார்ப்போமா...? நன்றி குழந்தைகளே... வாழ்த்துகள்...


image 1
image 2
image 3
image 4
image 5
image 6



பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... பாடல்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... கொடிகள் எல்லாம் பல விதம்... கொடிக்குக் கொடி ஒரு விதம்... கொண்டாட்டம் பல விதம்-நான் அதிலே ஒரு விதம்...! கொண்டாட்டம் பல விதம் நான் அதிலே ஒரு விதம்...!

© இருவர் உள்ளம் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

நண்பர்களே... நீங்கள் பறவையானால்...?

பறவை ஆகி விட்டோம்... எந்த மரம் பிடிக்கும்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஃபெலிகன் பறவை பற்றிய செய்தி மிகப் புதியது. மிக நன்றி தனபாலன். அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு

  2. எதிலும் பட்டுக் கொள்ளாமல் விண் மார்க்கமாய் கண்படும் தூரத்தில் பறந்து திரிவதே ஆனந்தம். இதில் கிளிஎன்ன மைனாவென்ன.. அனைத்துமே ஆனந்தம்!

    பச்சைக் கிளிகள் தோளோடு பாடல்வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பெலிகான் பறவை பற்றி இன்னிக்குதான் தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் எல்லோருக்குமே மயில்தான் பிடித்த பறவையாய் இருக்க கூடும். மத்த பறவையெல்லாம் இதுக்கப்புறம்தான்.

    பதிலளிநீக்கு
  5. காலை வேளையில் மகிழ்ச்சி தந்த பதிவு. எதார்த்தமாக நேற்று குழந்தைகளுடன் வீட்டில் உள்ள எறும்புகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    தனபால்(அண்ணா)


    அருமையான பாடல் அதற்கு விளக்கமும் அருமை குருவிப் படமும் அருமை அழகான கருத்துக்கள் பதிவை ஒளிர வைக்குது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மயிலாடுதறை பக்கம் நான் ஆனால் மயில் இங்கு பார்க்க முடியவில்லை
    சிட்டுக் குருவியின் இனிய கூவல் மகிழ்வு தரும் அதையும் காணவில்லை
    காக்கைதான் நிறைந்து உள்ளது அதனை மனிதர்கள் சாப்பிடாததால்
    அருமையான கட்டுரை தந்து பட்சிகள் மீது பாசம் வர வைத்துவிட்டீர்கள்
    குழந்தைகள் பாடலில் ,கதைகளில் அதிகமாக பறவைகள் வரும்
    பாடல், அதற்க்கான விளக்கம் அருமை குருவிப் படமும் அருமை.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. அழகிய குருவிப் படத்தையும் பிடிக்க முடியாமல் பாதுகாக்கும் வைத்துள்ளீர்கள் .பட்சிகளை பாதுகாப்பதில் திறமை

    பதிலளிநீக்கு
  9. இனிய பாடல்களும் ,
    அற்புத படங்களும் ,,
    ஆனந்தப் பகிர்வுகளுமாய்
    அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  10. உங்களைப் போன்று என்னால் உடனே பறக்க முடியாது ...எதுக்கும் பாராசூட் ஒன்றை வாங்கிகிட்டு பறக்க முயற்சிக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  11. மிக அற்புதமாய், குழந்தைகளோடு, குழந்தைகளாக வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  12. எல்லோரையும் பறவையாய் பறக்க வைத்து விடுவீர்கள் போல.எப்போதும்போல இப்போதும் அருமை

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் சென்று இருக்கும் உயரத்திற்கு என்னால் பறக்க முடியாது ,எதுக்கும் ஒரு பாராசூட் ரெடி பண்ணிக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  14. பதிவும்,குதித்து தாவுகிற பறவைகளும் உண்மையில் பறக்க தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  15. அழகான பாடல்களுடன் சிறப்பான பதிவு அண்ணா...

    பதிலளிநீக்கு
  16. வருடம் ஒரு முறை எங்க ஊருக்கு போனாலும் தவறாமல் எங்களை காண வரும் மயில் அழகான அந்த காட்சியை நினைவுபடுத்தி போகும் தங்கள் வரிகள்... சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
  17. அட! துவக்கத்தில் தத்தும் பறவைகளைக் கண்டு விழிகளை எடுக்க சில நிமிடங்கள் ஆனது. நல்லதொரு கேள்வி, அதற்கு குழந்தைகளின் அருமையான பதில்கள்..பரவசப்படுத்தும் பறவைகளின் குணங்கள்!!! அருமையானா பதிவு! காலையில் அனைவரையும் மகிழ்விக்கும் சிட்டாக மாறவே எனக்கும் ஆசை! குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. பறவைகள் பல விதம் . ஒவ்வொன்றும் ஒரு விதம். கருத்துகள் அருமை

    பதிலளிநீக்கு

  19. சிட்டுக் குருவிகளின் படம் அருமை!
    நம நாட்டில் காணமுடியாத சிட்டுக் குருவிகளை நான் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகக் கண்டேன் பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. தங்கள் பதிவைப் படித்ததும் நானும் குழந்தையானேன்!

    பதிலளிநீக்கு
  21. பதிவைப்படிக்கும் நம்மையும் குழந்தையாக்கி விடும் அற்புதமான பகிர்வு.

    படங்களும் பாடல்களும் இனிமை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் தன பாலன் - அருமையான் சிந்தனையில் உருவான பதிவு - வழக்கம் போல் கைவண்ணம் மிளிர்கிறது - பறவைகள் - அவற்றிற்கேற்ற பாடல் வரிகள் - பா வினில் கை வைத்த வுடனே பாடல் வரிகள் - பலே பலே

    இறுதியில் அனைத்துப் பறவைகளும் சுழல்கின்றன - அருமை அருமை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. சில மழலைகளின் சிறகுகள் பெற்றவர்களாலே ஒடித்துவிடப்படுகின்றது. அவர்களை கூண்டுக்கிளியாக வைத்தே வளர்க்க ஆசைப்படுகின்றனர். அதன் விளைவை முதலில் அனுபவிப்பவர்களில் முதன்மையானவர்கள்கூட அவர்களேதான்.

    பறத்தல் என் சுதந்திரம்!!!

    பதிலளிநீக்கு
  24. நீங்க சொன்ன மாதிரி மாற முடிந்தால் நன்றாக தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  25. அழகான அருமையான பதிவு என்னை விண்ணில் பறவைப் போலப்
    பறக்கச் செய்தது உண்மை.

    பதிலளிநீக்கு
  26. உங்கள் பதிவைப் பார்த்து மனதில் இறக்கை முளைக்கப் பறக்கத் தோன்றியது எனக்கும்...

    அழகிய, மனதிற்கு மகிழ்வுதரும் பதிவு சகோதரரே!

    இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. அருமையான,கருத்துமிக்க பாடல்களுடன் பதிவு நன்றாக இருக்கு.அறிவாளியான,
    பகிர்ந்துண்ணும் பறவை காகம் பிடிக்கும். வாழ்த்துக்கள்,நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...அதுபோல தங்களுடைய பதிவுகளும் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்..

    பெலிகன் பறவை உணவு கிடைக்காதபோதுபாறையில் உடலை மோதி இரத்தஃதை தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் என்ற விடயத்தைப் படிக்கும்போது பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் உணர வைத்தது.. அறிவுரைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... அனைவருக்கும்தான்....

    எவ்வளவு வயதானலும் அவரவர்கள் அவரவர் பெற்றோருக்கு குழந்தைகளுக்தானே...!!!

    குதிக்கும் சிட்டுக்கருவிகள் அழகோ அழகு..!

    பதிவோடு உணர்வுகளையும் சேர்த்து வழங்கும் தங்களது எழுத்துநடை அற்புதம்..பகிர்வுக்கு மிக்க நன்றி...தனபாலன் சார்...

    இன்று என்னுடைய தளத்தில்: பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

    பதிலளிநீக்கு
  29. பெலிகன் பறவைப் பற்றிய செய்தி புதிது . அறிந்து கொண்டேன். பெலிகன் பறவையை பெற்றோர்களுடன் ஒப்பீடு காட்டியது சிறப்பு.

    பறவைகள் பலவிதம் கண்டுகொண்டேன்.
    மனம் நிறைந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ஹை! சுப்பர்ப்! படிக்கப் படிக்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு தனபாலன்.

    நான் பறவையானால்... ம்... ஆந்தை!! காரணம்.. 1. மக்கு நான். ஆந்தையானால் கொஞ்சம் புத்திசாலியாக வாழலாம். 2. பகல்ல தூங்கப் பிடிக்கும். 3. இரவுலதான் முக்கியமான வேலைல்லாம் பார்ப்பேன். யாருமில்லாத அமைதியான உலகம் அது. 4. தோற்றம் கூட எனக்கு மாட்ச்சிங்கான பறவை அது ஒன்றுதான். குட்டியா க்யூட்டா இருக்கும். ;)) பாருங்க, எவ்வளவு அழகா இருக்கு ஒவ்வொன்றும். http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    உண்மையில் ஒவ்வொரு பறவையினதும் வாழ்க்கை வட்டத்தை ஒவ்வொரு முறை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. இணைத்திருக்கும் படங்கள் அனைத்தும் அழ..கு.

    பதிலளிநீக்கு
  32. பொருத்தமான இடங்களில் அருமையான பாடல்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. குயில்பாட்டு வந்தென்ன இளமானே?
    குயில் பாட்டு விட்டுப்போச்சே.
    எனககு குயிலின் குரல் மிகப்பிடிக்கும்.
    மற்ற பறவைகளின் குணங்களின் பட்டியல் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  34. அண்ணே...!
    மனதை சிலிர்க்க வைத்தது..
    பெலிகன் பறவை தகவல் எனக்கு புதிது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணே...

    பதிலளிநீக்கு
  35. வழக்கம்போல எல்லா இடத்திலும் DD 'டச்!
    பாடல்களைக் கேட்க முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  36. புதிய முயற்சியுடன் கூடிய பதிவு

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  37. T.M -10

    பறவைகளின் மேஜிக் போட்டோ சூப்பர்,
    பறவைகள் பல விதம் பாடல் பகிர்வும் அருமை

    பதிலளிநீக்கு
  38. சிறிது நேரம் நானும்
    வானில் பறந்த உணர்வு
    அருமையான அழகான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. பதிவுடன் படங்களும் அழகோ அழகு!
    ரசித்துப் படித்தேன் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  40. அடேங்கப்பா, எத்தனை பறவைகள், எத்தனை தகவல்கள், எத்தனை பாடல்கள்! அசத்தல்! :-)

    பதிலளிநீக்கு
  41. பறவைகள் பற்றிய பகிர்வு ,படங்கள் படப்பாடல்கள் என்று மிக அருமை.ஆ ஆஆ இந்த பதிவில் தான் எத்தனை டெக்னிக் !

    பதிலளிநீக்கு
  42. புதிய செய்திகள் பல அறிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  43. பறவைகளையும் சிறுவர் சிறுமியரையும் இணைத்து சிறப்பான கருத்துக்களை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! கலக்குங்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  44. ஃபெலிகன் பறவை பற்றிய செய்தி மிகப் புதியது,
    பறவைகளின் படங்கள் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  45. I have tried many times to register my comment.But Today only I could post a comment.Interesting post.Enjoyed reading it.

    பதிலளிநீக்கு
  46. குழந்தைகளை பறவைகளாய் ஆக்கியதொடல்லாமல்
    எங்களையும் ஆக்கிவிட்டீர்கள். ஆகா நன்றி!

    பதிலளிநீக்கு
  47. பறவைகள் பற்றிய பதிவானதால் இதைப் பகிர்கிறேன். ஒரு பருந்து( கழுகு.?) படத்தின் கீழே இருந்த வாசகம் " THEY FLY HIGH, BECAUSE THEY THINK THEY CAN." முடியும் என்று நம்பினால் எதையும் சாதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  48. பதிவு கண்ணுக்கும் விருந்து
    கருத்துக்கள் கொண்ட மருந்து
    மனதுக்கு மகிழ்ச்சி.
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  49. பறவைகள் போலப் பறப்போமா என்று சொல்லவே பறப்பது போல
    உள்ளது. பாடல்கள் தேடிப் பதிவு செய்த விதம் அருமை.
    உருளும் பறவைகள் படம் அருமை.
    தங்கள் திறமைக்கு இனிய வாழ்த்து.
    அருமை!..அருமை டி.டி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  50. நான் பெயர் தெரியாத பறவையாக பறக்க விரும்புகிறேன். நானே பறவையாக முழு வானிலும் :)

    பதிலளிநீக்கு
  51. பறவைகள் போல பறக்க ஆசைதான்.
    நீங்கள் இங்கு பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமை.
    பெலிகான் பறவைகள் பாசம் பற்றிய செய்திகள் அருமை.
    இங்கு(நியூஜெர்சி) சிட்டு குருவிகள் எங்கும் சுற்றி திரிகின்றன.
    அதனுடன் என் காலை பொழுதுகள் இனிமையாக போகிறது.
    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் பாடல் மிகவும் பிடிக்கும்.
    எல்லா பாடல்களும் மிகவும் பிடித்தவைதான்.
    வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றி கொடி கட்ட வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவுக்கும், அருமையான பாடல் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. பா..... எட்டும் சூப்பர்.. அழகாக கதை சொல்கிறார் அந்த அப்பா.

    எப்பூடித்தான் நீங்க குழந்தைக்காகக் கதை சொன்னாலும்.. படிச்சதென்னமோ பெற்றோர்தானே:) (இங்கு:)) ..

    பெலிகான் பறவைக் கதை படிச்சு என்னமோ ஆகிட்டுது எனக்கு... சே..சே.. இப்படியும் பறவைகளா? மனிதர்களை மிஞ்சிட்டுதே...

    பதிலளிநீக்கு
  53. நான் பறவையானால்ல்...... நிட்சயம் “பெலிகான்” ஆக இருக்க மாட்டேன்ன்ன்ன் ஹா..ஹா..ஹா.. ஏனெண்டால் எனக்கு ரத்தம் கண்டால் பயம்:))..

    பதிலளிநீக்கு
  54. ஒரு கதாகாலேட்ஷபம் கேட்டமாதிரி இருக்கிறது....

    குழந்தைகள் ரசிக்குபடி நல்லதொரு அறிவுரைகள்.. கருத்துக்கள்... பாடல்கள்... கலக்கலான பதிவு....

    நானும் ஒரு குழந்தையாய் பறந்தேன்...

    ஆனால் பாடல்களைத்தான் முழுதாய் கேட்க நேரமில்லை...

    விடுமுறை முடிந்து அனைவரும் இன்று பள்ளிக்கு திரும்பியாகனும்...

    சரி இதிலிருந்து இன்னிக்கு மாணவர்களுக்கு நானும் கொஞ்சம் அறவுரை சொல்லிடுறேன்...

    நல்லது

    பதிலளிநீக்கு
  55. சிறகில்லாமலேயே பறக்கும் பறவைகள் சிறுகுழந்தைகள். அவர்களிடம் கேட்டு வாங்கிய பதில் அசத்தல். ஒவ்வொரு பறவையும் ஒரு விதத்தில் சிறப்பு. எனக்கும் இமாவைப்போலத்தான் ஆசை. ஒவ்வொரு பறவையாகவும் சிலநாள் வாழ்ந்துபார்த்திடவேண்டும். சிந்திக்கவைக்கும் சிறப்பான பதிவு. பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  56. நானும் குழந்தையானேன், பறவையோடு மனமும் பறந்தது.

    பதிலளிநீக்கு
  57. அழகான அருமையான பதிவு படம் அதைவிட மிக அருமை.
    ''பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க ..பழக்கத்தை மாத்தாதீங்க..'' அர்த்தமுள்ள வரிகளை நினைவு படுத்தியமைக்கு நன்றி. கொண்டாட்டம் பல விதம் நீங்கள் அதிலே ஒரு (தனி) விதம்தான்.

    பதிலளிநீக்கு
  58. பெலிகான் பறவை பற்றிய செய்தி சுவையோ சுவை! எனக்கு பெலிகான் பறவையாகத்தான் ஆசை!

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  59. எனக்கும் சிறகடிக்க ஆசை..கற்பனை உலகத்தில் மிதக்க வைத்து விட்டீரகள்...

    பதிலளிநீக்கு
  60. நிறைய முறை இந்த பாடல்களை கேட்டு இருக்கிறேன், ஆனால் பறவைகள் பற்றி அதில் வந்ததை நினைத்ததில்லை..... தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உங்களது பதிவினில் எப்போதும் ஒரு புதுமை html வடிவில் இருக்கும், அது இங்கும் தொடர்கிறது..... வாழ்த்துக்கள் சார் !

    பதிலளிநீக்கு
  61. தகவல்களுக்கு நன்றி. பகிர்ந்த பாடல்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
  62. இந்த பதிவை மிகவும் ரசித்து படித்தேன்.. குழந்தைகளிடம் ஆசிரியரும் குழந்தையாகி வகுப்பெடுத்தது போல் இருந்தது. பறவைகளின் பண்புகளை சொல்லி குழந்தைகளுக்கு அழகாக வழி காட்டி விட்டீர்கள். எல்லா பெற்றோரும் பெலிகான் பறவைகள்தான்!

    பதிலளிநீக்கு
  63. நண்பரே,
    புதிதாக ஓர் இணையதளம் தொடங்கியுள்ளேன்.
    pimbam.com

    இதுவரை யாரும் இதனைப் பார்த்தது போல் தெரியவில்லை.
    நீங்கள் பார்த்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

    அன்புடன்
    புதின்

    பதிலளிநீக்கு
  64. //வாங்க குழந்தைகளே..//

    இதோ வந்துட்டோம்..
    :D

    ஸ்வாரஸ்யமான பதிவு.
    பெலிகன் பற்றிய செய்திகளுக்கும் தான்.
    நன்றி :)

    பதிலளிநீக்கு
  65. புதிய கருத்துடன் உங்களது டச்சில் பாடல்களுடன் அருமை.

    தனபாலன் பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  66. படங்கள் அனைத்தும் அழகு...அருமை... பகிர்ந்த பாடல்கள் சூப்பர் tm-22

    பதிலளிநீக்கு
  67. 'நீங்கள் பறவையானால்' பதிவு நவீன தொழிற் நுட்பத்தில் வெளிவந்திருக்கிறது.
    அந்த 'பா' சீரிஸ் எப்படி செஞ்சிங்கன்னு தெரியல?
    வெல்டன் DD!.

    பதிலளிநீக்கு
  68. கவிதை செய் நேர்த்தியில்
    மனம் லயித்துக் கிடக்கிறது!
    சூப்பர் கவிதை சார்!

    பதிலளிநீக்கு
  69. வணக்கம் அய்யா, ரசித்து படிக்க சிறப்பான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றீங்க. பறவைகளின் பண்புகளுடன் பாடல்களும் பலவிதம்.

    பதிலளிநீக்கு
  70. நானும் பறவையாகிறேன்
    உங்கள் வலைப்பூவில்...!

    பறவைகள் கொண்டு பாடம் நடத்தும்
    பக்குவம் கொண்டான் பாரினில் உண்டோ
    திறமைகள் வளர்க்க சின்னம் சிறுவரை
    சிந்தனை பாடலால் சீர்செய் பாலனே ..!

    பெலிகான் பறவை பெருமை தந்தது
    புறாவும் அதனில் புத்தனை வென்றது
    காகத்தின் ஒற்றுமை கண்ணீர் தந்தது
    பீனிக்ஸ் மட்டும் உறுதி சொரிந்தது ...!

    பறவைகள் ,பாடல்கள்,உதாரணங்கள் அத்தனையும் அருமை ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  71. படங்களைக்கண்டு பிரம்மித்தேன் சகோ.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  72. பறவைகளின் பண்பும் அதுக்கேற்ற அருமைப்பாடல்களும் தந்து பகிர்வில் நெஞ்சைத்தொட்டது பாடல் பச்சைக்கிளிகள் இந்தியன் தான்! நன்றி பகிர்வுக்கு தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  73. பெலிகான் பறவையைப் பற்றி புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.. நன்றி!!

    பதிலளிநீக்கு
  74. குழந்தைகளுக்கான படைப்பும் படைத்த விதமும் மிக அருமை!
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  75. அருமையான பாடல்...
    அழகான விளக்கம்...
    அழகிய பகிர்வு....
    வாழ்த்துக்கள் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  76. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுமே திருவிழா போலத்தான் இருக்கின்றது. ஃபெலிகன் பறவை பற்றி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  77. பறவைகளுடன் நாமும் சுதந்திரப் பறவைகளாக வானில் பறந்து மகிழ்ந்தோம்.

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  78. அருமையான கருத்துக்களும் படங்களும் நிரைந்த அற்புதமான பதிவு! அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  79. பறவைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த அழகிய பகிர்வு!

    பதிலளிநீக்கு
  80. மிக அருமையான தகவல் கொண்ட பகிர்வு..நன்றி

    பதிலளிநீக்கு
  81. நல்ல பாடல்களும் பதிவும் . பறவை இனத்துக்கு சமர்ப்பணம்

    பதிலளிநீக்கு
  82. அருமையான பதிவு தனபாலன். அதுவும் பதிவுகளுக்கு நடுவில் பொருத்தமான பழைய பாடல்கள் சுட்டிகளில்... மிகவும் அசத்தல். இந்த பதிவை இன்று என் குழந்தைகளுக்கும் காட்டினேன்.
    தமிழ் மணத்தில் வாக்கும் அளித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  83. பெலிகான் பறவை பற்றிய செய்தி புதிது.

    அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  84. என் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். காகம் நம் செயல் களை கவனிக்கும். வாடகை வீட்டில் இருந்த போது அந்த வீட்டின் பின் புறத்தில் சமையல் அறை. வெளி கதவு உண்டு. நான் பணிபுரிந்த அலுவலகமும் வீடும் அருகில் என்பதால் மதியம் ஒன்றரை வாக்கில் சாப்பிட வருவேன் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எதிரில் இருக்கும் சுவற்றில் ஒரு காக்கையும் வரும் கரையும், நான் சாப்பிடுவதற்கு முன் அதற்கும் சாதம் வைப்பேன். பல சமயங்களில் எனக்காக காத்திருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருக்கும். பின் நேரம் தவறி நான் சென்றபின் எனக்கும் காக்கைக்கும் டச் விட்டுப் போச்சு. வீடும் மாறியாச்சு.

    பதிலளிநீக்கு
  85. அய்யா உங்களின் பதிவின் நுட்பமும் , தொழில் நுட்பமும் ஆகா எப்படி இப்படி நாம் நிறய பேச வேண்டும்...

    நடக்கும் என்றே நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  86. காகமாய் விரைந்து வந்தேன்
    கண்களில் நீர் அடங்கக் கண்டேன்
    தாகமே தீர்க்கும் நல்ல
    தரமான படைப்புக் கண்டு .....!!!!!

    வாழ்த்துக்கள் சகோதரா .இன்பத்திலும்
    துன்பத்திலும் சிரித்து மகிழும் வாழ்வு
    நிலைத்திட வேண்டும் அழகிய பறவைகள் போல் எந்நாளும் .

    பதிலளிநீக்கு
  87. ஆஹா, படிக்கையிலேயே ஜிவ்வுனு பறந்து போயிட்டேன். சிட்டுக்குருவியை எனக்கும் பிடிக்கும். ஆனால் இப்போ அதிகம் பார்க்க முடியறதில்லை. தேன் சிட்டும் அதற்கேற்ற சுறுசுறுப்போடு இருக்கு. சின்னதா இருந்தாலும் நல்ல குரல் வளம். :)))

    பதிலளிநீக்கு
  88. பெலிகான் பறவை பற்றிய தகவல் புதிது .நன்றி சார்

    பதிலளிநீக்கு
  89. மிக அருமையான பதிவு.... பாராட்டுக்கள்!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.