🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்...?


நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...


மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்...

01 : நிறைய உதவி செய்தேன்... இப்ப..? நன்றி கெட்ட மனுசங்க தான்.
02 : அடுத்தவனை ஏமாற்றி விட்டு வாழ்கிறானே... அவன் தான்.
03 : எல்லாமே தனக்குத் தான் என்று நினைக்கிற சுயநலக்காரன் தான்.
04 : கர்வம் அல்லது அகங்காரம் உள்ள மனுசங்க தான்.
05 : பொறாமை குணம், பேராசை உள்ள மனுசங்க தான்.
06 : பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவங்க தான்.
07 : விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவங்க தான்.
08 : தவறு செய்ததை மன்னிக்கத் தெரியாத கோபக்கார மனுசங்க தான்.
09 : எல்லாவற்றுக்கும் சந்தேகப்படும் மனுசங்க தான்.
10 : நம்ப வைத்து கழுத்தரிக்கும் துரோகிங்க தான்.
11 : பணத்தால் மாறுகிற, பணம் தான் எல்லாமே என்று வாழும் மனுசங்க.
12 : எனக்கு ஜால்ரா அடிப்பவனைத் தவிர, என் கருத்தை எவன் ஏற்றுக்
       கொள்ளவில்லையோ அவன் தான்.
13 : பாராட்டோ, வெற்றியோ அல்லது ஒரு அங்கீகாரம் வந்தவுடனே தலை
       கால் புரியாம ஆடுகின்ற மனுசங்க தான்.
14 : வாழ்க்கையில் பல தவறுகள் செய்து கொண்டு, தினமும்
       மணிக்கணக்கில் தன்னைப் பற்றிப் பிரார்த்தனை செய்கின்ற
       "பசுத்தோல் போர்த்திய புலி" வேசம் போடும் நயவஞ்சகக்காரன் தான்.
15 : எல்லாக் கெட்ட பழக்கங்களையும் (புகை, பாக்கு, மது, மாது, etc,) செய்து
       கொண்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் கெடுக்கிறது இல்லாம,
       அடுத்தவனையும் கெடுக்கிறானே... அவன் தான்.
16, 17, 18, 19, 20, ................ இது ஒரு மெகா தொடர் நண்பர்களே...

இவையெல்லாம் எதனால் வருகிறது...? நம் மனத்தினால் தானே... ஆகவே மனிதனின் மிகப் பெரிய எதிரி அவரவர் மனம் தான்... ஐ... நான் வந்துட்டேன்... உன் மனசாட்சி தான்... அதுக்குள்ளே முடிவு சொன்னா எப்படி...? ரொம்ப சீரியஸ்யா எழுதுறே மாதிரி இருக்கு. எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே வேலை செய்வே... சந்தோசமா இல்லேனா அது மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி ஆச்சே... சரி...சரி... நீ எழுது, பாட்டு பாடுறதை குறைச்சிக்கிறேன்...

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே..." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னாரே... அன்பையும், பல நல்ல விசயங்களையும் ஊட்டி வளர்கிறார்களே, பிறகெப்படி மனித மனம் மாறுகிறது...? என்னது...? அன்னையின் வளர்ப்பினிலேயா..? அது அந்தக் காலம்... இப்போ ஆயாவின் வளர்ப்பினிலே தான்... இது பரவாயில்லே, சில வீடுகளில் போகோவும், கார்ட்டூன் நெட்வொர்க்கும் தான், குழந்தைகளை வளர்க்கிறது - இதனாலே பல "ஆட்டிசம்" (மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு) குழந்தைகள் உருவாகப் போகுது.

குழந்தை கருவில் வளரும் போது, தாய் எது பற்றி அதிகம் நினைக்கிறாரோ அதன் தாக்கம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை என்னென்ன பார்க்கின்றதோ / கேட்கின்றதோ / ரசிக்கின்றதோ / ருசிக்கின்றதோ / இன்னும் என்னென்ன நடக்கின்றதோ, அவை தான் பெரியவனாக வளர்ந்த பிறகும், அந்தக் குணம் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்போ, இதற்கு முழுக் காரணம் பெற்றோர்கள் என்று சொல்லி விடலாமா ? அந்தக் குணத்தை மாற்ற முடியாதா ? சின்னச் சந்தேகம் : அம்மா குழந்தையின் மத்தியப் பிரதேசத்தைக் கவனிப்பாங்க... (வயிறு அதாவது உடல்நலம்) அப்பா குழந்தையின் உத்தரப் பிரதேசத்தைக் கவனிப்பாங்க... (மூளை அதாவது அறிவு) அப்போ, இதற்கு யார் யார் காரணம் ? அம்மாவா ? அப்பாவா...? இல்லை குழந்தையா ? "பத்துத் திங்கள் சுமந்தாளே, அவள் பெருமைப் படவேண்டும்... உன்னைப் பெற்றதனால் அவள், மற்றவராலே போற்றப்பட வேண்டும்... க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌, த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்... உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உல‌க‌ம் அழ‌ வேண்டும்..." (படம் : நான் ஏன் பிறந்தேன்)

நம் அறிவை வளர்த்துக் கொள்ளத் தான் படிக்கிறோம். அப்படியா ? படித்தால் மட்டும் போதுமா ? நிறைய விசயங்களையும் அனுபவம் மூலம் பெறுகிறோம். இது சரி... படிக்காத மேதைகள் பல பேர் உண்டு... இதனால் நல்ல பண்புகளும், குணங்களும் தானே மேம்பட வேண்டும் ? அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும் ? "நிறைகுடம் தளும்பாது" என்பார்களே ! காலி குடமும் அப்படித்தான் "உன் நண்பர்களைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்." என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்களிடம் மட்டும் இருக்கும் காலம் உண்டு... அதாவது படிக்கும் பருவத்தில். அப்போது ஏற்படும் காதலைக் கூட நண்பர்கள் சொல்வது படி அல்லது நண்பரையே தூது விடுவது. அந்த வயதில் காதல் வருவது சகஜம் தானே... முடிவில் காதலிப்பவருக்குக் கல்யாணம் ஆகிவிடும். சில சமயம் தூது விட்ட நண்பருடன் கல்யாணம் ஆகி விடும்...! வெண்ணிலவே... வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா...? விளையாட ஜோடி தேவை...! (படம் : மின்சார கனவு) நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் பொறுத்தே நம் குணமும் மாறுகிறது. அது நண்பர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும்... இரட்டை வேசம் போடும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தாலே போதும். "வந்த நாள் முதல் இந்த நாள் வரை... வானம் மாறவில்லை... வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்" (படம் : பாவ மன்னிப்பு)

சரி, அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ? அதற்குப் பல வழிகள் உள்ளன... பேசுபவரின் கண்ணைப் பார்த்து, பேச்சை வைத்து, செய்கைகளை வைத்து... இன்னும் நிறையச் சொல்லலாம். இதற்கு நாம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக "நான் இருக்கிறேன் கவலைப்படாதே / நான் உதவி செய்கிறேன்" என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்பவர்களை (யாராக இருந்தாலும்) நம்பவே கூடாது. சொல்பவர்கள் யாரும் செய்வதில்லை. செய்பவர்கள் யாரும் சொல்வதில்லை. அடடே ! பஞ்ச் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ? "நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும், நல்லவர் கெட்டவர் யாரென்றும், பழகும் போதும் தெரிவதில்லை, பாழாய்ப் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள், முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும் குழையும், காரியமானதும் மாறும்..ம்... காரியமானதும் மாறும்" (படம் : நாடோடி)

நம்ம திருவள்ளுவர் "தெரிந்து தெளிதல்" அதிகாரத்தில், (குறள் எண் 501 முதல் 510 வரை) இந்த இரட்டை வேசம் போடும் ஆசாமிகளை எவ்வாறு கண்டு கொள்வது, யார் யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் யாரை நம்ப வேண்டும், நம்பிய பின் என்னென்ன செய்யக்கூடாது - என்று பல விசயங்கள் சொல்லி இருந்தாலும்,

அவற்றில் இரண்டு குறள்கள் மட்டும் (குறள் எண் : 502 மற்றும் 504)
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
பொருள் : நல்ல குடியிலே பிறந்து {நல்ல மனிதனாகப் பிறந்து}, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக் கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். பொருள் : ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே, நாம் இருக்கும் இடம் பொறுத்துத் தான் நம் குணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறுகிறது... அது நம் மனம் தான் தீர்மானிக்க வேண்டும். அவனால் தான், நான் கெட்டேன் என்பதை விட என்னால் அவன் திருத்தினான் என்பது சிறப்பு. உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மைக் காண்பது தான் - ஞாபகம் இருக்கட்டும். ஆக என்னைப் பொறுத்தவரை,

மனிதனின் மிகப்பெரிய எதிரி : அவரவர் மனம் தான்.

பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு - கண் மூடிப் போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும் - என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே - உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும் - நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது... (படம் : நினைத்ததை முடிப்பவன்)
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற


© மனம் ஒரு குரங்கு V.சீதாராமன் D.B.ராமச்சந்திரன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫

மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன...? → இங்கே ← சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தலைப்பில் கேட்ட கேள்வியை பார்த்து விட்டு அவரவரே அவரவருக்கு எதிரி என்று தான் நினைத்தேன். நீங்களும் அவரவர் மனம் என்று தான் சொல்லி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவைக் கலந்து அருமையான வரிகளை பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை...முடித்த விதம் அருமை (TM 3)

    பதிலளிநீக்கு
  4. மனிதன் மிகப் பெரிய எதிரி யார் என்பதை அருமையான விளக்கங்களுடன் அலசி மனம் என்று நிறைவு செய்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  5. தனபாலன் சார்.. பதிவு ரொம்ப அருமை. மனம் ஒரு குரங்கு. அதை தாவ விடாம நிலையா இறுக்கி பிடிச்சோம்னா தெளிவான வாழ்க்கைதான்.அனைவருக்கும் எதிரி அவங்க மனசுதான்..

    பதிலளிநீக்கு
  6. நம் மனமே எதிரி யா ? நல்ல கோர்வையான வரிகள் .மனமே நம்மை வழிநடத்தும் சரியான தேரோட்டி

    பதிலளிநீக்கு
  7. நல்ல பாடல்களுடனும் குறல் வரியும் கலந்து வந்த பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  8. உண்மை
    அதை ரெம்ப அழகா பொருள் புரிதலோடு சொல்லிட்டீங்க
    நிறைய விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறீர்கள்

    நல்ல ஆரோக்கியமான பதிவு sir

    பதிலளிநீக்கு
  9. முத்தாய்பான வரிகளில் "அவரவர் மனமே அவருக்கு எதிரி" மனதை பக்குவப்படுத்த படித்த பலருக்கும் தெரிவதில்ல.

    பதிலளிநீக்கு
  10. அங்கிள் இவற்றில் எல்லா விதமானவர்களையும் நான் சந்தித்து விட்டேன்

    நல்ல பதிவு...........

    பதிலளிநீக்கு
  11. மனிதனுக்கு மனிதனே எதிரி! இதை சிறப்பாக பல்வேறு உதாரணங்களுடன் நகைச்சுவைகலந்து பறிமாறிய விதம் அருமை! தொடரட்டும் உங்கள் சேவை! வாழ்த்துக்களும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  12. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...நன்று!

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு தனபாலன் சார் மிக்க நன்றி.... தமிழ்மணம்8

    பதிலளிநீக்கு
  14. எமை ஆளும் மனதை நாம் ஆளக் கற்றுக் கொண்டால்
    வாழ்வில் எல்லா நலனும் உண்டாகும் ஆக மனிதனின்
    மிகப் பெரிய எதிரி அவரவர் மனம்தான்.வாழ்த்துக்கள்
    மேலும் தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு. முதல் நண்பனும் மனம்தான் முதல் எதிரியும் மனம்தான்.

    பதிலளிநீக்கு
  16. அருமையாக சொன்னீர்கள்..அவரவர் மனம்தான் எதிரியும்,நண்பனும்..அதை நம் வளர்ச்சிக்கும்,நல்ல எண்ணத்துக்கும் ஆட்டுவித்தால் நம்மை ஆளாக்கும்,கெட்ட எண்ணம் கொண்டால் அழித்தும் விடும்.

    பதிலளிநீக்கு
  17. நமது எதிரி மனம் மற்றும் நமது செயல்களே!

    நல்லா கூறி இருக்கீங்க ஆனால், நீங்க எழுதும் போது அடிக்கடி ப்ரேக்கட் ல அதிகம் குறிப்பிடாதீங்க.. இது உங்க பதிவை படிக்க தடையா இருக்கு. ஒரு ஃப்ளோவா போகும் போது ஸ்பீட் பிரேக்கர் மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. எண்ணம்போல வாழ்க்கைன்னு கரெக்டா சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள். நல்ல பகிர்வு நண்பரே

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப அழகாக உங்கள் பாணியில் தெளிவாக சொன்னீர்கள் ஆமாம் மனசே காரணம் அதுக்கு மனமே சாட்சி...

    பதிலளிநீக்கு
  20. மனம் ஒரு குரங்குன்னு அப்பவே சொன்னாங்க....
    அருமையான பதிவு... :)

    பதிலளிநீக்கு
  21. எதார்த்தமாக, எளிய தமிழில், நகைச் சுவை கலந்து கருத்துகளைத் தருகிறீர்கள். அவை மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
    பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  22. ஒவ்வொரு மனிதனின் மனம் தான் அவனுடைய வாழ்வை தீர்மானிக்கும் சக்தி என்பதை நல்ல பாடல் வரிகளுடன் தந்தமை வெகு அருமை.

    பதிலளிநீக்கு
  23. மனம் ஒரு குரங்கு, அதை கட்டுபாட்டுக்குள் வைக்காவிடில் கஷ்டமும் நமக்கே இல்லையா...? அருமையான பதிவு....!

    பதிலளிநீக்கு
  24. மனிதனின் எதிரி அவனுக்குள்தான் இருக்கிறான்,அருமை.

    பதிலளிநீக்கு
  25. நான்,தங்கள் தலைப்பு புகைப்படத்தைப் பார்த்ததும் மனம், காதல் என்றுதான் நினைத்த்தேன். தாங்களும் சரியாக கூறி விட்டீர்கள். நல்ல ஓர் அலசல்...

    பதிலளிநீக்கு
  26. உங்கள் பாணியிலேயே எனது கருத்துரை
    இரவும் வரும் பகலும் வரும்
    உலகம் ஒன்றுதான்!
    உறவு வரும் பகையும் வரும்
    இதயம் ஒன்றுதான்

    - பாடல்: கண்ணதாசன் (படம்: இரவும் பகலும்)

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப சரிதான் எதிரியும் நண்பனும் ஒன்றேதான் அதாவது மனசு

    பதிலளிநீக்கு
  28. நம்முள்ளேயே வாழும் எதிரி...!!

    அருமைங்க தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  29. உண்மையை அருமையானவும் அழகாகவும் சொன்னிர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  30. மனம் தான் எல்லாம்.சொன்னவிதம் அருமை.நல்லதொரு பதிவு !

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரியும் அவன் மனம்தான், நண்பனும் அவன் மனம்தான்! உங்கள் பாணியில் வழக்கம்போல ஒரு சிறந்த அலசல்!

    பதிலளிநீக்கு
  32. அழகாக வரிசைப் படுத்தி , ஒரு இக் வைத்து, இக்கை உடைத்து, உடைத்த காரணத்தை வரிசைப்படுத்தி..... அழகோ அழகு. அருமையாய் எளிமையாய் பகிர்ந்தமை பாராட்டுக்குரியது. வழக்கம் போல அசத்தல் பதிவு! நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  33. நல்ல ஆழமான சிந்தனை...அருமை. ஒரு மனிதனை தீவிரவாதியாக்குவதற்க்கும் அதே மனிதன் சீர்திருத்த வாதியாவதற்க்கும் அவனது மனமே காரணம்.வாழ்த்துக்கள்...நண்பரே..

    பதிலளிநீக்கு
  34. எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

    Reaசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  35. அழகான

    அற்புதமான

    ஆழமான


    படைப்பு தோழரே...

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நண்பரே..
    ஆழ்ந்த கருத்துக்களால்
    நமக்கு நாமே எதிரி என்பதை மிகத்
    தெளிவாக உரைத்திருக்கிறீர்கள்..
    அருமை அருமை..
    ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து..

    பதிலளிநீக்கு
  37. உங்களுடைய தனித் தன்மையே சினிமா பாடல்களில் உள்ள நல்ல வரிகளை உங்கள் பதிவுக்கேற்ற வகையில் மேற்கோள் காட்டுவதுதான். மெயக்ப் பெரிய எதிரியை சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  38. கருத்துக்கள் அனைத்தும் அருமை..வேறென்ன சொல்ல..நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  39. மனிதன் மிகப் பெரிய எதிரி அவரவர் மனம் தான். அருமை அருமை...

    பதிலளிநீக்கு
  40. மனிதனின் மிகப் பெரிய எதிரி மனம்தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. மிக நன்றாக காரணங்களை அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  41. அருமையான பதிவு நல்ல காமெடி இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. நல்ல பதிவு நண்பரே.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    பதிலளிநீக்கு
  43. thanks for your comments mr.dindigul dhanapal... please comment me at each and every moments.. it will be a great help to my writings. thank u

    பதிலளிநீக்கு
  44. மனிதனின் மிகப் பெரிய எதிரி அவன் மனது தான் ...மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே.நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  45. புதிய வரவுகள்:இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு
  46. தவறை மன்னிக்கத்தெரியாத கோபக்கார மனுசங்க பட்டியலில் நானும் இருக்கேன் அண்ணே! எனக்கு இருக்கிற கெட்ட பழக்கத்தில ரொம்ப கெட்ட பழக்கம் அது தான்! அருமையான பதிவு அண்ணே!

    பதிலளிநீக்கு
  47. அருமையான கருத்துகள் கொண்ட பதிவுக்கு நன்றி. ஆனால் பின்னூட்டம் கொடுக்கிறத்ஹுக்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கு. :(

    பதிலளிநீக்கு
  48. இவ்வளவு திரட்டிகள் இருப்பதே இன்னிக்குத் தான் தெரியும், தினம் உங்க பதிவுக்கு வர நினைச்சும் முடியாமல் போயிட்டு இருந்தது. இன்னிக்கு எப்படியாவது வரணும்னு வந்து பார்த்துப் படிச்சுட்டேன். :))))

    பதிலளிநீக்கு
  49. அருமை. பயனுள்ள கருத்துக்கள். இறுதியில் முடித்த பாடல் - வாய்விட்டுப் பாட வைத்தது - சூழ்நிலை மறந்து.
    நன்றி

    பதிலளிநீக்கு
  50. தன்னைத் தானே திரும்பிப் பார்க்கும் குணம் வாய்த்துவிட்டால் எதிரியும் நண்பனாகிவிடக் கூடும்.

    இதுபோன்ற தலைப்புக்களில் எழுதுபவர்களும் சிந்திப்பவர்களும் குறைந்துவரும் வேளையில் உங்கள் எழுத்துக்கள் ஒளியூட்டுகின்றன தனபால்.

    பதிலளிநீக்கு
  51. என் எதிரியும் இதை ஒத்துக்கொள்கிறான்.

    பதிலளிநீக்கு
  52. என்னது...? அன்னையின் வளர்ப்பினிலேயா..? அது அந்தக் காலம்... இப்போ ஆயாவின் வளர்ப்பினிலே தான்... இது பரவாயில்லே, சில வீடுகளில் போகோவும், கார்ட்டூன் நெட்வொர்க்கும் தான், குழந்தைகளை வளர்க்கிறது

    //////////

    நல்லதொரு விழிப்புணர்வுக் கருத்து சார்.

    பதிலளிநீக்கு
  53. உண்மைதான் மனம்தான் ஒரு குரங்கு நம்மை சீழிக்கும் ஒரு வியாதி அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.தாங்கள் தொத்துள்ள பாடலகளைப்பார்க்கும் போது 80 காலங்களில் வெளிவந்த இளைய ராஜாவின் பாடல்கள் இன்னும் ஆட்சி செய்கிறது.மனம் பறிக்கும் அந்தப்பாடல்களையும் தொகுத்தால் நன்றாகயிருக்கும்.தெய்வீகராகம் தெவிட்டாத பாடல்/

    பதிலளிநீக்கு
  55. மனம் தான் அன்பரே உங்கள் பாடல் மிக்சிங்கை எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  56. eththanai paadalkal ungalukku theriyum!

    nantru !
    sakotharaaa!
    rom......pa thaamatamaaka vanthutten!

    entha kuzhanthaiyum nalla kuzhan..."
    intha varikal pulamai piththan avarkal ezhuthiyathaaka arintha ninaivu!
    ethukku uruthi paduthi kollungal!

    பதிலளிநீக்கு
  57. ’மனம் கொண்டேதே மாளிகை’ என்பார்கள். மனம் என்ன சொல்கிறதோ அது தான் எல்லாம் அதனால் மனதை வசபடுத்த தெரிந்தவனுக்கு உலகம் வசப்படும்.
    நீங்கள் சொல்வது சரி மனம் தான் முதல் எதிரி, நண்பன் எல்லாம்.

    பதிலளிநீக்கு
  58. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் சகோ மனமே மனிதனின் முதலெதிரி.அதை சரிபடுத்த தெரிந்துக்கொண்டாலே போதும்..

    மிக அருமையாக சொல்லியிருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  59. அவரவர் மனமே அவருக்கு எதிரி!
    mikavum arumai.

    பதிலளிநீக்கு
  60. கமென்ட்டில் க்ளிக் செய்து Show Original போஸ்ட் இல் க்ளிக் செய்து மட்டுமே உங்கள் படைப்புகளை பெரும்பாலும் படிக்க முடிகிறது நண்பரே..

    பதிலளிநீக்கு
  61. நான் தான் எனக்கு எதிரி....... என் மனம் பார்க்கும் பார்வையில் தான் அடுத்தவன் தெரிகிறான்... அதனால் தான் பெரும்பாலும் என்னிடம் இருந்து துவங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  62. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

    பதிலளிநீக்கு
  63. வாழ்த்துக்கள் நண்பரே
    அருமையான படைப்பு
    அனைத்து படைப்புகளும் சிறப்பானவை

    பதிலளிநீக்கு
  64. மிக அருமையாக அலசியுள்ளீர்கள் மனிதனின் மிகப் பெரிய எதிரி யாரென்று.83 வது கருத்தாகப் பதிகிறேன் போல உள்ளது. ஆயினும் வந்திட்டேன் அதற்கு மகிழ்வடைகிறேன். எத்தனை பெரிய விடயம் இது. நன்றாக, சிந்தனையைத் தூண்டுகிறது. நல்வாழ்த்து சகோதரா.மேலும் தொடரட்டும்.இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  65. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  66. மனம்தான். சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  67. தீதும் நன்றும் பிறர் தர வாரா..

    நமது மனமே நமது முதல் எதிரி...
    முதல் தோழனும் கூட!!

    பதிலளிநீக்கு
  68. இந்தப் பதிவில் கூறிய விஷயங்கள் காலத்திற்கு ஏற்ற
    எளிதில் தென்படாத விஷயங்கள். இப்பதிவும் தங்களின் பிற பதிவுகளும்
    சிறந்த தொண்டு ஆயிற்று

    பதிலளிநீக்கு
  69. திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
    “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  70. (1) மோகன் குமார், (2) Abdul Basith, (3) வரலாற்று சுவடுகள், (4) சீனு, (5) ராதா ராணி, (6) sakthi, (7) சங்கவி, (8) ஹாலிவுட்ரசிகன், (9) கவிதை வீதி... // சௌந்தர் //, (10) Sasi Kala,

    (11) செய்தாலி, (12) கலாகுமரன், (13) எஸ்தர் சபி, (14) s suresh, (15) விக்கியுலகம், (16) chinna malai, (17) அம்பாளடியாள், (18) Gobinath, (19) ஸாதிகா, (20) படைப்பாளி,

    (21) கிரி, (22) பாலா, (23) மனசாட்சி™, (24) ராஜ், (25) முனைவர் பரமசிவம், (26) ARIVU KADAL, (27) நண்டு @நொரண்டு -ஈரோடு, (28) MANO நாஞ்சில் மனோ, (29) சென்னை பித்தன், (30) ரஹீம் கஸாலி,

    (31) பரிதி.முத்துராசன், (32) இரவின் புன்னகை, (33) தி.தமிழ் இளங்கோ, (34) வல்லத்தான், (35) Lakshmi, (36) வெங்கட் நாகராஜ், (37) AROUNA SELVAME, (38) அன்பை தேடி,,அன்பு, (39) ஹேமா, (40) ஸ்ரீராம்.,

    (41) Atchaya, (42) Manimaran, (43) இராஜராஜேஸ்வரி, (44) ரெவெரி, (45) மகேந்திரன், (46) பழனி.கந்தசாமி, (47) Jaleela Kamal, (48) T.N.MURALIDHARAN, (49) vanathy, (50) Kumaran,

    (51) VijiParthiban, (52) Athisaya, (53) வே.நடனசபாபதி, (54) asa asath, (55) Madusudan C, (56) Doha Talkies, (57) சுந்தரவடிவேலு, (58) http://amuthamthamizh.blogspot.com/, (59) எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங், (60) திருவாளப்புத்தூர் முஸ்லீம்,

    (61) கிஷோகர், (62) ஆட்டோமொபைல், (63) sambasivam6geetha, (64) Seshadri e.s., (65) சிவகுமாரன், (66) சுந்தர்ஜி, (67) கோகுல், (68) சிட்டுக்குருவி, (69) தனிமரம், (70) விமலன்,

    (71) PREM.S, (72) Seeni, (73) கோமதி அரசு, (74) அன்புடன் மலிக்கா, (75) thottarayaswamy, (76) ரெவெரி, (77) தமிழினம் ஆளும், (78) scenecreator, (79) கவி அழகன், (80) kovaikkavi,

    (81) ராமலக்ஷ்மி, (82) மாதேவி, (83) ஆளுங்க அருண், (84) Meena, (85) தி.தமிழ் இளங்கோ, (86) Ezra Rajasekaran, (87) Chennai Man, (88) Alagarsamy Tamilselvan, (89) Asa Asath, (90) Chezhiyan Mozhiyan


    மேலே உள்ள அனைத்து அன்பு உள்ளங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும், சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டதற்கும், வாக்கு அளித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல...

    பதிலளிநீக்கு
  71. மனமே மனமே தான்

    மிக அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  72. unmai thaan avaravar manathai thooimai paduthinaale pothum ethir endru oruvan veliyil illai ullukkul thaan irukkiran...

    பதிலளிநீக்கு
  73. சார்…உங்களது கருத்துப்பதிவுக்கு நன்றி!...மனிதனின் மிகப்பெரிய எதிரி அவனது மனம் தான் என்பது மிகச்சரியான தகவல். ஏனென்றால் அங்கு தான் சோம்பல் உருவாகிறது . மனச்சோர்வு உருவாகிறது. கோபம் உருவாகிறது. குரோதம் உருவாகிறது . வீரம் உருவாகிறது . விரோதம் உருவாகிறது. ஆசை உருவாகிறது . அடிமைத்தனம் உருவாகிறது. இவையல்லாம் மனிதனுக்கு எதிரி தானே: இவை தோன்றுமிடம் மனது தானே!. அருமை…மனிதனின் மிகப் பெரிய எதிரி யார்.

    பதிலளிநீக்கு
  74. வணக்கம் தனபால் (அண்ணா)

    மனிதனுக்கு மிகப் பெரிய எதிரி யார் என்ற கேள்விக் கனையை தொடுத்து மிக அழகாக கருத்தை சொல்லி விட்டிர்கள் எப்படிப்பட்ட மனிதனையும்எதிரியாகவும் தீயபாதையில் செல்ல வழிவகுப்பது மனந்தான் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது ,மறக்கவும் முடியாது என்ற கருத்தை பறைசாற்றியுள்ளிர்கள்

    அதற்கு எடுத்தக்காட்டாக பல பாடல் வரிகளையும் அங்காங்கே புகுத்தியுள்ளிர்கள் அது மட்டுமா திருவள்ளுவர் சொன்ன இரண்டடி குறல் மூலமும் விளக்கம் கொடுத்திர்கள் நல்ல படைப்பும் நல்ல முத்தான சொற்பிரயோகங்களையும் கொண்டு எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் திண்டக்கல்.தனபாலன்
    (யாரைத்தான் நம்புவது) என்ற பாடல் அடிதான் எனக்கும் நினைவுக்க வருகிறது.(அண்ணா)


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  75. வணக்கம்
    திண்டுக்கல் தனபால் (அண்ணா)

    25.11.2012இன்று உங்களின் பதிவு(மனிதனின் மிகப்பெரிய எதிரியார்) ஒன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  76. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com

    பதிலளிநீக்கு
  77. வணக்கம்
    திண்டுக்கல் தனபால்(அண்ணா)

    19,01,2013 உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் பதிவாகி உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி,
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  78. மிக நல்ல பகிர்வு.வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.மிக்க நன்றி சார் பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  79. ஜிஎம்பி ஐயாவின் பதிவைப்படிச்சுட்டு அங்கே கொடுத்த சுட்டி மூலம் வந்தேன் டிடி. ஏற்கெனவே வந்திருக்கேன். மனதை வெல்ல முடிஞ்சால் நல்லாத் தான் இருக்கும்! அதான் போராட்டமே! வேண்டாதவற்றைப் பற்றிக் கொள்கிறது! வேணுங்கறதைத் தவிர்க்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.