அரிதரிது மானிடர் ஆதல் அரிது...
முத்கலர் சிறந்த தவசீலர். ஞானி. பண்பு நிறைந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவருடைய குடிலுக்கு துர்வாச முனிவர் வந்தார். முத்கலரின் குடும்பத்தார் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
"சுவாமி ! தங்கள் இன்று இங்குத் தங்கி, உணவு அருந்திச் செல்ல வேண்டும்" என்றார் முத்கலர்.
"எனக்கு விருந்து படைக்க உம்மால் இயலுமா?" என்று ஏளனத்துடன் கேட்டார் துர்வாசர்.
அதற்கு முத்கலர் "எளியேனிடம் இருப்பதை வைத்து உபசரிக்கிறேன். பெருந்தன்மையுடன் ஏற்று அருள வேண்டும்" என்றார்.
முத்கலர் மேற்கொண்டு விருந்து ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். நதிக்கரைக்குச் சென்ற துர்வாசர் கர்மானுஷ்டானங்களை முடித்து விட்டு வந்தார். முத்கலரும் அவரின் மனைவியும் துர்வாசருக்கு விருந்து படைத்தனர். எளிமையான விருந்தாயினும் சுவையாக இருந்தது. மனநிறைவுடன் சாப்பிட்டு முடித்தார் துர்வாசர். பெரும் ஏப்பத்துடன் எழுந்தவர், ஆசி கூட கூறாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
பத்து நாட்களுக்குப் பின் போதுமான தானியங்களை உணவாக்கி துர்வாசருக்குப் படைத்தாகி விட்டது. அன்றும், அடுத்து வரும் நாட்களுக்கும் அரை வயிற்றுக் கஞ்சிதான் உணவு. தொடர்ந்து பத்து நாட்கள் முத்கலர் வயல் வெளிக்குச் சென்று தானியங்களைச் சேகரித்து வந்தால், பதினோராவது நாள் முழுச் சாப்பாடு கிடைக்கும்.
நாட்கள் கழிந்தன. பதினோராவது நாள் முத்கலரும் அவரின் குடும்பத்தாரும் சாப்பிட அமர்ந்த அந்த சரியான வேளையில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். முத்கலர், இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும் முகமும் அகமும் மலர துர்வாசரை வரவேற்றார்.
"வரவேற்பு, மரியாதைகள் எல்லாம் இருக்கட்டும். எனக்குப் பசி காதை அடைக்கிறது. இன்று இங்கு தான் உணவருந்தப்போகிறேன், சமையல் தயாரா?" என்றார் கடுகடுப்புடன்.
மறுகணம் வாழையிலை விரிக்கப்பட்டது. தங்களுக்காகத் தயார் செய்த உணவை இன்முகத்துடன் துர்வாசருக்குப் பரிமாறினர் முத்கலர் குடும்பத்தினர். அன்றும் திருப்தியான சாப்பாடு உண்டு முடித்த துர்வாசர், வழக்கம் போல எதுவும் பேசாமல் புறப்பட்டுப் போய் விட்டார்.
முத்கலர் குடும்பத்தாரின் அரைப் பட்டினி நிலை தொடர்ந்தது. எனினும் அவர்கள் எவரும் இம்மியளவேனும் முகம் கோணவில்லை. நித்திய கர்மானுஷ்டானங்களை செய்வதும், எஞ்சியுள்ள நேரத்தில் வயல்வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வருவதும் வழக்கமானது.
சரியாக, பதினோராவது நாள் அழையா விருந்தாளியாக மீண்டும் வந்தார் துர்வாசர். இந்த முறையும் முத்கலர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் அந்த முனிவரை உபசரித்து விருந்து படைத்து அனுப்பினர்.
இப்படி குடும்பத்தார் அரை கஞ்சியுடன் காலம் கழிப்பதும், முத்கலர் தானியங்களைச் சேகரித்து வருவதும், பதினோராவது நாள் துர்வாசர் வந்து உணவைக் காலி செய்து விட்டுப் போவதும் தொடர்கதையானது. இரண்டு மாதங்கள் கழிந்தன. துர்வாசர் வருவது இது ஏழாவது முறை. ஆனால் அன்று அவரின் முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு வித மலர்ச்சி.
"முத்கலரே ! இன்று நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உமது திட சிந்தனையும் விருந்தோம்பலையும் சோதிக்கவே இப்படி ஒரு பரீட்சை வைத்தேன். அதில் நீர் வென்று விட்டீர். உமக்கும் உம் குடும்பத்துக்கும் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நான் சாப்பிட்டுச் சென்றாலும், ஒவ்வொரு முறையும் இன்முகத்துடன் நீங்கள் விருந்தளித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த சீரிய பண்பு என்னை மட்டுமல்ல, தேவர்களையே வியக்க வைத்தது. இனி நீங்கள் இந்தப் பூவுலகில் துன்பப்பட வேண்டாம். உங்களுக்கு சொர்க்க வாசம் கிடைக்கப் போகிறது. வாசலில் பொன் மயமான ரதத்துடன் தேவதூதர்கள் காத்திருக்கிறார்கள். செல்லுங்கள் " என்றார்.
அதற்கு முத்கலர் "மகரிஷியே ! உங்களது கருணைக்கு மனமார்ந்த நன்றி. எளியேனுக்கு சொர்க்கத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால், சொர்க்க லோகம், பூலோகம் ஆகியவற்றுக்குள்ளே வித்தியாசங்களை உபதேசிக்க வேண்டுகிறேன்" என்றார்.
"முத்கலரே ! பூலோகம் 'கர்ம பூமி'. ஆனால், சொர்க்கத்தை 'போக பூமி' என்பர். கற்பனைக்கும் எட்டாத சுக போகங்கள் நிறைந்தது அது. பருவகால வேறுபாடுகள் இன்றி எப்போதும் பூத்துக் குலுங்கும் மரங்கள், வேண்டியதைத் தரும் கல்ப விருட்சம், வசீகரமான அப்சரஸ் மங்கையர் ஆகியவை நிறைந்தது சொர்க்கம். மனிதன் ஒருவன் பூமியில் செய்த நற்செயல்களின் பயனால் மட்டுமே சொர்க்கத்தை அடைய முடியும். சுருங்கச் சொன்னால் உம்மைப் போன்ற புண்ணிய சீலர்களும், அறநெறிச் செல்வர்களுமே சொர்க்கத்துக்குள் புக முடியும்" என்றார் துர்வாசர்.
"சுவாமி ! சொர்க்க லோகத்தின் குறைகள் என்னென்ன?" என்று வினவினார் முத்கலர்.
அதற்குத் துர்வாசரோ, "ஒன்றே ஒன்று தான். அங்கே நாம் செய்த புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியுமே தவிர, புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்ள, நற்காரியங்களை ஆற்ற வாய்ப்பில்லை. எவராக இருந்தாலும் சொர்க்க லோகத்தில் போகங்களை அனுபவிப்பதால், அவர்களது புண்ணிய பலன்கள் படிப்படியாகக் குறைந்து மீண்டும் பூமியில் பிறக்க நேரிடும். அப்படி 'கர்மபூமி'யான பூமிக்கு வருபவர்கள் இங்கு தானம், தர்மம் மற்றும் நற்செயல்களைக் கடைப்பிடித்து மீண்டும் புண்ணியத்தைப் பெருக்கலாம். ஆகவே சொர்க்கத்துக்குப் புறப்பட வாருங்கள்" என்றார்.
உடனே முத்கலர் "மன்னியுங்கள் சுவாமி ! சொர்க்கத்துக்குப் போக எனக்கு விருப்பமில்லை" என்று கூறியவரைப் பார்த்து துர்வாசர் "முத்கலரே ! சொர்க்கத்தை வேண்டாம் என்கிறீர்களே !" என்று வியப்புடன் கேட்டார்.
"ஆமாம் அறச் செயல்கள் எதுவும் செய்ய வாய்ப்பில்லாத சொர்க்கம் எனக்குத் தேவையில்லை. ஆயுள் உள்ள வரையிலும் இந்த கர்ம பூமியிலேயே உழன்று, பாடுபட்டு உழைத்து, அறநெறிகளைக் கடைப்பிடித்து, பிறருக்குத் தொண்டு புரிந்து வாழவே ஆசைப்படுகிறேன். அதில் கிட்டும் மன நிறைவும், மகிழ்ச்சியும் 'போக பூமி'யான சொர்க்கத்தில் கிட்டுமா?" என்றார் முத்கலர்.
முத்கலரின் இந்த பதிலால் மகிழ்ச்சியடைந்த துர்வாசர், அவரைக் கட்டியணைத்துப் பெருமிதப்பட்டார். அந்த பொன் மயமான ரதம் தேவதூதர்களுடன் விண்ணில் சென்று மறைந்தது.
பார்த்தீர்களா நண்பர்களே ! மூவரும், தேவர்களுமே செய்ய முடியாத ஒரு செயல் அறச்செயல், புண்ணியத்தைப் பெரும் பாக்கியம், அத்தகைய அறச்செயலைச் செய்து பெரும்பேறடைவதற்கான இடம் நாம் வாழும் இக்கர்ம பூமியில் இம்மனித தேகத்தில் மட்டுமே கடவுள் கருணையினால் கிடைத்துள்ளது. ஆகவே, ஜீவகாருண்யமாகிய புண்ணியச் செயலைச் செய்து மூவரும் தேவரும் போற்ற வாழ்ந்து உத்தமராவோம் !
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
⟪ © கந்தன் கருணை ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 K.B.சுந்தராம்பாள் @ 1967 ⟫
மற்றவர்களிடம் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் ? மேலும் அறிய இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
நல்ல பதிவு .. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு
பதிலளிநீக்குமிக அரிய பகிர்வு. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதொடர்ந்து நிறைய நீதிபோதனை பதிவுகளை பகிர்ந்துவருகிறீர்கள்..!!
பதிலளிநீக்குபடிப்பவர்களின் மனதைக் கவரும் விதமாகவும் எழுதுகிறீர்கள்.
படித்து முடித்ததும் மனதிற்கு நிறைவாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி தனபாலன் அவர்களே..!!
நல்ல பதிவு ..thanks
பதிலளிநீக்குமுத்கலர் மனிதகுலத்துக்கு ஒரு வழிகாட்டி. அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குசொர்க்கலோகத்தினைப் பற்றி அருமையாக நல்ல கதையுடன் விளக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குநீண்ட நாள் கழித்து வந்தேன் தங்கள் வலைக்கு...
பதிலளிநீக்குநிறைவான பதிவை கண்டேன்.
நன்றி.
அருமையான பதிவு
பதிலளிநீக்குஇதைதான் திருவள்ளுவர் "அறத்தால் வருவதே இன்பம் :
என்றும் அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் என்று
தெளிவாக கூறியுள்ளார்.
அதை நாம் புரிந்து கொண்டு
அதன்படி நம் வாழ்க்கையை அமைத்து கொண்டால் இன்பமாக மன நிம்மதியுடன் வாழலாம்
தொடர்ந்து நிறைய நீதிபோதனை பதிவுகளை பகிர்ந்துவருகிறீர்கள்..!!
பதிலளிநீக்குபடிப்பவர்களின் மனதைக் கவரும் விதமாகவும் எழுதுகிறீர்கள்.
படித்து முடித்ததும் மனதிற்கு நிறைவாக இருந்தது
மிக அருமையான நீதி நிறைந்த கதை .
பதிலளிநீக்குவெளியிட்ட உங்களுக்கு என் நன்றி .
நல்ல கருத்து பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் - பூலோகத்திற்கும் சொர்க்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கியமை நன்று. தொடர்ந்து பூலோகத்திலேயே வசிக்கத் தீர்மானித்ததும் நன்று. நல்லதொரு சிந்தனை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅனைவரும் அறிந்து கொள்ள வாண்டிய அருமையான விஷயம். சிறப்பான பதிவுக்கு நன்றி,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறப்பான பதிவிற்கு நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
ம்... நீதிக்கதை அருமை..
பதிலளிநீக்குவிருந்தோம்பலின் பெருமை கூறிய மனநிறைவான பதிவு...விருந்தோம்பலை விட சிறந்தது எதுவும் இல்லை...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள கதை. சொர்க்கலோகத்தைப் பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் சில விசயங்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html
அருமை நண்பரே ! .
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை நண்பரே
பதிலளிநீக்குகண்ணுக்குத் தெரியா விண்ணுலகில் சென்று
வாழ்வதை விட
வாழும் வாழ்வை கண்முன்னே செம்மையாக்கி கொள்ள உதவும்
மண்ணுலக வாழ்வே பெரிது என நீங்கள் எடுத்த முடிவு ... அருமை.. அருமை...
வணக்கம்! இவ்வுலகம் கர்ம லோகம், மேல் உலகம் என்பது, போக லோகம் என்பதனைச் சொல்லி பூமியில் நாம் செய்ய வேண்டிய செயல்களை உணர்த்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅப்போ சொர்க்க லோகத்திலையும் குறைகள் இருக்கு நல்ல பதிவு நண்பரே
பதிலளிநீக்குநிறைவான பதிவு...Pl turnoff Facebook popup bro...
பதிலளிநீக்குநல்லதொரு நீதிக்கதையை சுவாரசியமாக எடுத்து கூறியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
அருமையான பதிவு. இப்போதுள்ள கலியுலகில் 'பாவமே' பிரதானமாக இருக்கிறது. புண்ணியம் 'கானல் நீராக' காணப்படுகிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல கதை அருமையான நீதி அருமை
பதிலளிநீக்குஅருமையான பதிவு !
பதிலளிநீக்குஅறநெறி கூறும் அருமையான கதை!
பதிலளிநீக்குநன்றி!வாழத்து! பாராட்டு!
புலவர் சா இராமாநுசம்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
பதிலளிநீக்குஎனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் தனபாலன் சார்..
பதிலளிநீக்குசார் சமீபத்தில் உங்கள் ஊருக்கு வந்திருந்தேன் அது பற்றி எழுதிய பயண கட்டுரை அதீதம் இதழில் வந்துள்ளது. கீழே உள்ள லிங்கில் படித்து பார்க்கவும்
பதிலளிநீக்குhttp://www.atheetham.com/?p=486
விரைவில் என் ப்ளாகிலும் இதனை பகிர்வேன்.
உடனே வந்து விட்டு திரும்பியதால் உங்களிடம் தெரிவிக்க வில்லை இன்னொரு முறை வந்தால் உங்களை சந்திக்க முயல்கிறேன்
UNGALATHU INTHA IDUGAYAY VALAISARTTHIL INAITHU ULLEN .
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/04/blog-post_15.html
NANDRI,
GUNA
கருத்துள்ள கதை சொல்லிய விதம் அருமை .
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குநல்ல பதிவு ...
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க
தமிழ் DailyLib
அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்
To get the Vote Button or Link to DailyLib Logo
தமிழ் DailyLib Vote Button
Thanks,
Krishy