விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!
⟪ © அவன் தான் மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫ விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்... மதியும் மயங்குதடா - சிறு மனதும் கலங்குதடா...! கொடுக்க எதுவுமில்லை - என் குழப்பம் முடிந்ததடா...! கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...! ஆமா, விதியைப் பத்தி என்ன நினைக்கிறாய்...? ISO உட்படப் பலவற்றிலும் உள்ளதைப் படிக்க மட்டும் தானா...? விதிகளை மதித்துச் செயல்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா...?
