வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...

திரைப்படம் : பிச்சைக்காரன் - பார்க்காதவர்களுக்கு ஒரு விளக்கம் : சொந்த ஆலையில் நடந்த விபத்தில் தன் தாய் பிழைக்க, ஒரு மண்டலம் பிச்சை எடுத்து தாயை மீட்பதாக கதை... முடிவில் ஒரு காட்சி தான் மேலே உள்ள படம்...! தாய் பிச்சை கொடுத்து விட்டு, தன் மகனிடம் சொல்வது, "நமக்கு ஆயிரம் வேலை இருக்கலாம்... ஆனால், நமக்காக யாரும் காத்திருக்கக்கூடாது... விருப்பமிருந்தால் பிச்சை போடு, இல்லையென்றால் உடனே அனுப்பி விடு... ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கையேந்தும் நிலைமை யாருக்கும் வரவேகூடாது" என்பார்... அதற்கு முன்பு தன்னுடன் பிச்சை எடுத்தவர்கள் அனைவரும் ஆலையில் வேலை செய்வதாக காட்சிகள் இருக்கும்... அந்தத் தாயின் உணர்வோடு சிந்திப்போம் - பேசுவோம் வாங்க...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞர்...அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க...