திங்கள், 21 நவம்பர், 2016

பதிவர்களால் கற்றுக் கொண்டவை...!


ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஆண்டிப்பட்டி கணவா காத்து ஆள் தூக்குதே... அய்த்த பொண்ணு என்ன தாக்குதே...! அடி முக்கா பொம்பளையே... என்ன முழுசா நம்பலையே... நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே... // உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்பே... இந்த கிறுக்கிய ஏழை சிறுக்கிய எதுக்காக புடிச்சே...? // ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா... இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா...! ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... (படம் : தர்மதுரை) பயணத்தில் இயற்கையோடு ஒன்றி லயித்திருக்கும் போது, இப்படியுள்ள பாடல்களை கேட்பது தான் எவ்வளவு இனிமை...! வாங்க... ரசனையான ஒரு தொழிற்நுட்பத்தை பத்தியும் பேசலாம்...!

வியாழன், 3 நவம்பர், 2016

எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?


அனைவருக்கும் வணக்கம்... நீண்ட மாதங்களுக்கு பின் வலையில்... மகிழ்ச்சி...! சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைபேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்...! வியாபார ஆரம்பத்தில் ஊக்கம், உற்சாகம் தந்து, "ம்... மேலும் தொடருங்கள்" என்று மகிழ்வுடன் வாழ்த்தும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...