வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 மற்றும் 2013 செப்டம்பர் 1 அன்றும் சென்னையிலும், 2014 அக்டோபர் மாதம் 26 அன்று மதுரையிலும், நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....
வாருங்கள் வலைப்பதிவர்களே... பங்கேற்ப விரும்பும் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால், அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்... நன்றி...
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com நன்கொடை வழங்குவோர், தங்களின் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை விவரங்களை மேலுள்ள மின்னஞ்சலுக்கோ, +91 9443193293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்... வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் கீழ் பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன...
முக்கிய விளக்கம் : விழாவிற்கு வரும் அனைவர்க்கும் தரப்படவுள்ள “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தயாரிப்பதற்கு அடிப்படைத் தகவல்கள் கீழுள்ள "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதிலிருந்தும் எடுக்க வேண்டி இருப்பதால், அதில் தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைப்பேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என... சுருக்கமாக : எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் தரலாம்... நன்றி...
வருகையை உறுதி செய்யும் கீழுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் :- 01/10/2015 நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 20/09/2015 க்குள் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...
பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறும், திருவிழாவின் அழைப்பைத் தளத்தில் இணைக்கும் வழிமுறையைக் கீழே கொடுத்துள்ளபடி செய்யுமாறும், அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... நன்றி...
உங்களின் தளத்தில் வலைப்பதிவு பற்றிய தகவலை (Side Gadget) இணைக்க :
முதலில் கீழ் பெட்டியுள்ள script முழுவதையும் சுட்டியால் select செய்து விட்டு, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C என்பதை அழுத்தி COPY செய்கிறோம்...
உங்களின் தளத்தில் உள் நுழைந்தவுடன் இடது புறத்திலுள்ள Layout என்பதைச் சொடுக்கவும்... »» வலது புறத்திலுள்ள Add a Gadget சொடுக்கி, வரும் popup திரையில் HTML/JavaScript என்பதைத் தேடி, அதைச் சொடுக்கவும். »» அங்கு Content என்பதில், Ctrl key-யை அழுத்திக் கொண்டு V என்பதை அழுத்தவும் »» அதற்கு மேலுள்ள Title என்பதில் வருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும் என்று தலைப்பு கொடுத்து விட்டு »» save என்பதைச் சொடுக்கவும்... தளத்தின் அகலத்திற்கேற்ப Side Gadget-யை சரி செய்ய : உங்கள் தளத்தில் இணைத்த Gadget-ன் கீழுள்ள "Edit" என்பதைச் சொடுக்கி, script-ல் width="300" என்பதை அவரவர் தளத்திற்கேற்ப (Example : width="250") என்று மாற்றலாம்... நன்றி...
பிற்சேர்க்கை : வருகையை உறுதி செய்து விட்டு, தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வரவே முடியாதவர்கள், வலைத்தளம் பற்றிய தகவல்களுடன், "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதில், தங்களைப் பற்றிய அனைத்து சிறப்புகளையும் தரலாம்... வலைப்பதிவர் கையேட்டில் அவை இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... அத்துடன் முக்கியமாக "கலந்து கொள்ள வாய்ப்பில்லை" என்பதையும் மறவாமல் தெரிவிக்கவும்... நன்றி...
வாருங்கள் வலைப்பதிவர்களே... பங்கேற்ப விரும்பும் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால், அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்... நன்றி...
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com நன்கொடை வழங்குவோர், தங்களின் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை விவரங்களை மேலுள்ள மின்னஞ்சலுக்கோ, +91 9443193293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்... வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் கீழ் பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன...
முக்கிய விளக்கம் : விழாவிற்கு வரும் அனைவர்க்கும் தரப்படவுள்ள “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தயாரிப்பதற்கு அடிப்படைத் தகவல்கள் கீழுள்ள "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதிலிருந்தும் எடுக்க வேண்டி இருப்பதால், அதில் தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைப்பேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என... சுருக்கமாக : எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் தரலாம்... நன்றி...
வருகையை உறுதி செய்யும் கீழுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் :- 01/10/2015 நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 20/09/2015 க்குள் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...
பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறும், திருவிழாவின் அழைப்பைத் தளத்தில் இணைக்கும் வழிமுறையைக் கீழே கொடுத்துள்ளபடி செய்யுமாறும், அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... நன்றி...
உங்களின் தளத்தில் வலைப்பதிவு பற்றிய தகவலை (Side Gadget) இணைக்க :
முதலில் கீழ் பெட்டியுள்ள script முழுவதையும் சுட்டியால் select செய்து விட்டு, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C என்பதை அழுத்தி COPY செய்கிறோம்...
உங்களின் தளத்தில் உள் நுழைந்தவுடன் இடது புறத்திலுள்ள Layout என்பதைச் சொடுக்கவும்... »» வலது புறத்திலுள்ள Add a Gadget சொடுக்கி, வரும் popup திரையில் HTML/JavaScript என்பதைத் தேடி, அதைச் சொடுக்கவும். »» அங்கு Content என்பதில், Ctrl key-யை அழுத்திக் கொண்டு V என்பதை அழுத்தவும் »» அதற்கு மேலுள்ள Title என்பதில் வருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும் என்று தலைப்பு கொடுத்து விட்டு »» save என்பதைச் சொடுக்கவும்... தளத்தின் அகலத்திற்கேற்ப Side Gadget-யை சரி செய்ய : உங்கள் தளத்தில் இணைத்த Gadget-ன் கீழுள்ள "Edit" என்பதைச் சொடுக்கி, script-ல் width="300" என்பதை அவரவர் தளத்திற்கேற்ப (Example : width="250") என்று மாற்றலாம்... நன்றி...
பிற்சேர்க்கை : வருகையை உறுதி செய்து விட்டு, தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வரவே முடியாதவர்கள், வலைத்தளம் பற்றிய தகவல்களுடன், "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதில், தங்களைப் பற்றிய அனைத்து சிறப்புகளையும் தரலாம்... வலைப்பதிவர் கையேட்டில் அவை இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... அத்துடன் முக்கியமாக "கலந்து கொள்ள வாய்ப்பில்லை" என்பதையும் மறவாமல் தெரிவிக்கவும்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாலையில் அழைப்பிதழைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி .மாபெரும் விழாவை ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறோம். இப்போதே என் வலைப் பதிவில் விட்ஜெட்டை இணைக்கிறேன். அடுத்த வாரத்தில் வலைப் பதிவர் திருவிழா பற்றி எழுதுகிறேன்.விழாவிற்காக முத்துநிலவன் அவரால் தலைமையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்
பதிலளிநீக்குநன்றிகள்
நீக்குகடந்த அரைமணி நேரமாக திரட்டிகளின் ஆதரவை தேடி களைத்தேன்
பேசமா ஒரு விண்ணப்ப பதிவு ஒன்றை வெளியிடவேண்டியதுதான்
மிக்க நன்றி சார்..தெளிவான விவரங்கள்.....காத்திருக்கிறோம் ....30 ஆம் தேதி வலைப்பூ பயிற்சிக்கு.
பதிலளிநீக்குஅன்றைய தினம் இவரையும் நாம் பெருமைபடுத்தலாமே தனபாலன்!
பதிலளிநீக்குஇவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசு
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.
கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக் காரில் வாடகை வாங்காமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு ஏற்றிச்சென்று உதவியுள்ளார். நூற்றுக்கணக்கான பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நிறைய பேர் பிழைத்து உள்ளனர் என்ற இந்த வியக்க வைக்கும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன்.
ஏழை மக்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட ‘515’ கணேசன் என்று அழைக்கப்படும் 62 வயதான எஸ்.கணேசன், தனது சேவை குறித்து கூறியது:
குடும்பச் சூழ்நிலையால் 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியாமல் அப்போதிலிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அப்போ ஆலங்குடியில வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் இறந்துபோன உறவினரின் சடலத்தை காரில் எடுத்துச் செல்ல வழியில்லாம தள்ளுவண்டியில வச்சு அவங்களே வீட்டுக்கு தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு. \
ஊரில் 2 வாடகைக் கார் இருந்தும் அவங்க காரில் பிணத்தை எல்லாம் ஏத்துறதில்லை. இந்த சம்பவத்துக்கு அப்புறம் இரும்பு வியாபாரம் செய்து சேர்த்து வச்சிருந்த ரூ.17 ஆயிரத்தைக் கொண்டு 44 வருஷத்துக்கு முன்னாடி 515 என்ற பதிவு எண்ணுள்ள காரை வாங்கினேன்.
அவசர தேவைக்காக தவிக்கிறவங்களுக்கு மட்டும் அந்தக் காரை வாடகை வாங்காமல் ஓட்டவேண்டும் என்பதே என் லட்சியம். பெரும்பாலும் பிரசவம், விபத்து, அனாதைப் பிணங்களை ஏற்றிச்செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எத்தனையோ அனாதைப் பிணங்களை நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கேன். நானா காசு கேட்க மாட்டேன். ஒருசிலர் டீசல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.
ஒரு முறை சென்னையில இருந்து ஒரு பிணத்தை ஏத்திக்கிட்டு வர போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து நான் டீசல் போட்டுக்கிட்டு வந்துட்டேன். நீங்க டீசல் மட்டும் போடுங்க. ஊருக்கு போயிருவோம் என்றேன். என்னை அங்கே வரச்சொன்ன பெண்ணிடம் கையில காசு இல்லை. டக்குனு தாலியைக் கழற்றிக் கொடுத்து இதை அடகு வச்சு டீசல் போட்டுக்கிட்டு வாங்கன்னாங்க. இதுக்காடா நம்ம கார் வாங்குனோம்னு மனசு கொதிச்சுப் போச்சு. வேண்டாம்மான்னு சொல்லிட்டு அங்கேயே கொஞ்சம் கடன் வாங்கி டீசல் போட்டுக்கிட்டு பிணத்தை ஊருக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.
இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இதை 2 வருஷத்துக்கு முன்னாடி ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினேன். பிணம் ஏத்துறதுக்குன்னே சகல வசதியோட இப்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், என்னுடைய காரும் ஓடிக்கிட்டேதான் இருக்குது. இப்போது அவ்வளவாக பிரசவ உதவி கேட்டு யாரும் வருவதில்லை.
எனக்குன்னு ஒரு குழி நிலம்கூட கிடையாது. இன்றைக்கும் பழைய இரும்பு வியாபாரம்தான் செய்கிறேன். அதை வச்சுத்தான் காரை பராமரிக்கிறேன். 5 மகள்களில் 4 பேருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன். ஏழை சனங்களுக்கு இறுதிக்கட்டத துல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்” என்றார்.
அய்யா வணக்கம். உங்கள் யோசனையைச் செயற்படுத்தலாம் தான். ஆனால், இப்போதைக்கு வலைப்பதிவர் உலகோடு தொடர்புடைய ஊக்குவிப்புகளை மட்டுமே யோசிக்கிறோம். மற்றபடி நம் உலகின் நல்லவர்களை யெல்லாம் பாராட்டும்படி நாமும் வளரணும்ல? நன்றி நண்பரே
நீக்குஇவரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். அவரது சொந்த ஊரான ஆலங்குடியிலேயே சிறப்பான பாராட்டுவிழா ஒன்றை நடத்த நம் நண்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நிச்சயம் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.. நமது விழா (11-10-2015) நடக்கும் முன்பே அவருக்குப் பாராட்டுவிழாவை அங்கேயே நடத்தி அந்த நல்ல செய்தியை நம் விழாவில் அறிவிப்பதோடு, இயலுமெனில் அவரையும் நம் விழாவிற்கு அழைப்போம். தகவல் தந்த நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் அவசியம் நம்விழாவில் வந்து அவரைச் சந்திக்க வேண்டுகிறேன்.
நீக்குவணக்கம்! வலைப்பதிவர் திருவிழா -2015 இற்கான முதல் அழைப்பிதழை தங்கள் வலைத்தளத்தில் முதன்முதல் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅழைப்பிதழில் செய்ய வேண்டிய சில திருத்தங்கள்:
நாள் , கிழமை குறிக்கப் பட்டுள்ளன. நேரம் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி முடிய என்பது போல) சொல்லப்படவில்லை. மதுரை வலைப்பதிவர் அழைப்பிதழிலும் ஆரம்பத்தில் இதே தவறு நடந்தது.
உங்கள் வலைத்தளத்தில் ‘ரைட் க்ளிக்’ செய்ய முடியாது என்பதால், உங்கள் பதிவினில் உள்ள Side Gadget இற்கான ‘HTML / Java script’ ஐ நகல் (COPY) செய்ய இயலவில்லை.
நன்றி!
தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு : // உங்கள் வலைத்தளத்தில் ‘ரைட் க்ளிக்’ செய்ய முடியாது என்பதால், உங்கள் பதிவினில் உள்ள Side Gadget இற்கான ‘HTML / Java script’ ஐ நகல் (COPY) செய்ய இயலவில்லை. //
நீக்குஅதனால் தான் :-
"உங்களின் தளத்தில் வலைப்பதிவு பற்றிய தகவலை (Side Gadget) இணைக்க :" என்று படிவத்தின் கீழே விளக்கம் கொடுத்துள்ளேன்... அதன்படி செய்ய வேண்டும் ஐயா... நன்றி...
திரு. முத்து நிலவன் ஐயாவின் தகவலுக்காக காத்திருக்கிறேன்... காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கலாம்...
நீக்குஇளங்கோ ஐயா காலை ஆறுமணிக்கே வந்தாலும் சந்திப்பு துவங்கி விட்டதாகத்தான் பொருள்
நீக்குமதுவை நான் வழிமொழிகிறேன். என்றாலும் டிடி நேரத்தைக் குறிப்பிட்டு மாற்றம் செய்திருக்கிறார் கவனிக்க. நன்றி
நீக்குநீங்கள் சொல்லியபடி எனது வலைத்தளத்தில் Side Gadget ஐ இணைத்து விட்டேன். நன்றி!
நீக்குவிழா சிறப்புற அமைவதற்கு எங்களது நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குத ம +3
நட்புடன்,
புதுவை வேலு
அய்யா வணக்கம். தங்கள் தளத்தில் இன்னும் நம் விழாப் பற்றிய அறிவிப்புத் தாங்கிய இணைப்பைத் தரவில்லையே? அவசியம் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
நீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குதம +1
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு பற்றிய அழைப்பிதழ் கண்டு மகிழ்கியுற்றேன். எனது தளத்திலும் திருவிழா இணைப்பை சேர்த்துவிட்டேன். புதுக்கோட்டைக்கு வர முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குபிரமாதம் அண்ணா. விழா இனிதே நடக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதகவல் படிவத்தை விரைவில் பூர்த்தி செய்து அனுப்புகிறேன். நன்றி.
விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅட இந்த வருஷம் நம்ம ஊர்லயா!!! அவசியம் வர்றேன்.
பதிலளிநீக்குநண்பர் அப்துல் (எனக்குப் பிடித்த சினி நாயகரே என்று உங்களிடமே சொல்லியிருக்கிறேன்ல?) நம்ம ஊர்ல நீங்க இல்லாமலா? நீங்கள் பலவேலைக்காரர். இப்போதே உங்கள் to do பக்கத்துல குறிச்சி வச்சிக்கங்க...
நீக்குபுதுக்கோட்டையில் நிகழ இருக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழா- சிறப்புடன் அமைய விழைகின்றேன்..
பதிலளிநீக்குஅதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்!..
அழைப்பிதழை எனது தளத்தில் இணைத்துவிட்டேன். நன்றி.
பதிலளிநீக்குவலைச்சித்தருக்கு வணக்கம்.
பதிலளிநீக்குஇந்த அறிவிப்பைத் தங்கள் வலைத்தளத்தில் விட்ஜெட் ஆக வைத்து வெளியிடும் அனைத்து வலைப்பதிவர்ககும் விழாவில் ஒரு நினைவுப் பரிசு தராலாமா என்று யோசிக்கிறோம் - த ங்கள் பணிகள் எங்களால் என்றும் போற்றப்படும். நன்றிகள் பலகோடி
Muthu Nilavan ஐயா அவர்களுக்கு, இவையெல்லாம் சிறிய வேலைகள் தான் ஐயா... சென்ற வருடம் மதுரையில் பதிவர்கள் சந்திப்பு திருவிழா நடந்து முடிந்த வரை முகப்பில் படம் வைத்திருந்தது போல் இப்போதும்... நன்றி ஐயா...
நீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழாவுக்கு வருகை தரும் பதிவர்கள் மட்டுமே கையேட்டில் இடம்பெற முடியுமா?
Durai A அவர்களுக்கு, விளக்கங்கள் திரு.முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவில் →இங்கே← சொடுக்கவும்... நன்றி...
நீக்குதகவலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.......
பதிலளிநீக்குஅசத்தி விட்டீர்கள் அண்ணா. தங்களின் அளப்பரியது. தன்னார்வம், பிரதிபலன் பாராத உதவி, உழைப்பு ஆகியவற்றால் நீங்கள் புதுகை நண்பர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றோ இடம் பிடித்து விட்டீர்கள். நேரில் சந்திப்போம். விழா குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி அண்ணா.
பதிலளிநீக்குஅன்புள்ள திருமிகு வலைச்சித்தருக்கு,
பதிலளிநீக்குவணக்கம். புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா அழைப்பிதழ் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. விழா சிறப்பாக நடைபெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஒரு கை ஓசைதான்’. பலனை எதிர்பாறாமல் பணியாற்றும் தங்களுக்கு என் பாராட்டும் நெஞ்சார்ந்த நன்றியும்.
த.ம.15
.
அன்பின் பதிவர் அஜீஸ் அவர்களுக்கு, அந்த சமூக சேவகரின் செல்போன் தர இயலுமா ?
பதிலளிநீக்குவிழா வெற்றிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆகா..... களை கட்ட ஆரம்பிச்சிருச்சேய்...........
பதிலளிநீக்குபதிவர் திருவிழா அழைப்பிதழை எனது தளத்தில் போட்டாச்ச்! வருவதற்கு டிக்கெட் புக் பண்ணி......யாகணும்! உடனே அந்த வேலையைச் செய்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த நிகழ்விற்காக உழைக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். விழா சிறக்கட்டும்.
நன்றி சகோதரி.
நீக்குபயணச்சீட்டு முன்பதிவு செய்தாயிற்றா...?
(சும்மா ஒரு நினைவூட்டல்தான்) அவசியம் வருக வருக
பிரம்மாண்டமாக இருக்கப்போகிறது விழா!
பதிலளிநீக்குஉளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ... கலக்குவோம்
பதிலளிநீக்குஇந்த வருடமும் கலந்து கொள்ள முடியாது போன்று தோன்றுகிறது! அக் 10, 11, 12 தேதிகளில் முறையே சனிப்பிரதோஷம், என் தாத்தாவின் திதி, மஹாளய அமாவாசை வருகின்றது. என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்! விழா சிறக்க வாழ்த்துக்கள்! கேட்ஜெட் என் தளத்தில் இணைத்துவிடுகின்றேன்! விழா பற்றிய பதிவுகளையும் அவ்வப்போது இடுகின்றேன்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்... புதுக்கோட்டை அதிரும் போல.... த.ம18
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைப்பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துகள். இதனை ஒருங்கிணைத்து செயல்படும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குநானும் அந்த சமயம் புதுக்கோட்டை வர உத்தேசிக்கிறேன்.
விட்ஜெட் போடுறவங்களுக்கு நினைவுப் பரிசா. கேக்கவே இனிப்பா இருக்கே. :) போட்டுருவோம். :)
அப்புறம் புதுக்கோட்டை என்பதால் பதிவர், சகோதரர் அஜித் அவர்கள் சொன்ன 515 கணேசன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பு செய்ய நானும் கேட்டுக்குறேன். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வலைச்சித்தருக்கு வணக்கம்.
பதிலளிநீக்குநீங்க வலைப்பதிவர் விழாவுக்கு எவ்ளோ செய்றீங்க...
இதையும் செய்ய மாட்டீர்களா?
தமிழ்மணம், வலைச்சரம், தமிழ்இண்ட்லி, தேன்கூடு, தமிழ்த்திரட்டி உள்ளிட்ட வலைத்திரட்டித் தளங்களின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் திரட்டி நிர்வாகிகளில் யாரேனும் ஒருவர் விழாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திட வேண்டுகிறேன். அவர்களின் வலைப்பக்க வளர்ச்சிக்கு உதவும் பேருதவியை விழாவில் பாராட்ட விரும்புகிறோம்.
அதோடு, அவரவர் தளத்தில் இந்த நம் விழா விட்ஜெட்டை விழா முடியும் வரை முகப்பில் வைக்கவும் கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி
வாழ்த்துக்கள்,,,,,,
பதிலளிநீக்குவணக்கம் ஜி பிரமாண்டமாக இருக்கிறது விழா சிறப்புற எமது வாழ்த்துகள் முயற்சிக்கிறேன் வருவதற்க்கு.
பதிலளிநீக்குவிழா சிறப்புற வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குநாங்களும் கலந்து கொள்ள முயற்சிக்கிறோம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த வருடமும் கலக்குவோம்....
பதிலளிநீக்குமகிழ்ச்சி...!
பதிலளிநீக்குவிழா சிறக்க எனது நல்வாழ்த்துகள்!
என் பதிவில விட்ஜட் போட்டாச்சு!
பதிலளிநீக்குவிழா இனிதே நடைபெற மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குஎனக்கு அழைப்பே தேவையில்லே ,என் வீட்டு விசேஷமாச்சே :)
பதிலளிநீக்குவிட்ஜெட்டை ஜெட் வேகத்தில் இணைத்து விட்டேன் :)
அப்படிச் சொல்லுங்க பகவானே நன்றி நன்றி.
நீக்குவிழா இனிதே சிறப்புற வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குநல்ல முயற்சி வாழ்த்துக்கள் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...
பதிலளிநீக்குவிழா சிறப்பற அமைய நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் அய்யா ,
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் 10 10 2015 ல் நடைபெறவுள்ள “வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா “ இனிதே நடைபெற நல் வாழ்த்துக்கள் .
விண்ணப்பப் படிவத்தில் , பாலினம் என்பதில் (1) ஆண் , (2) பெண் என்று மட்டும் விபரம் கோரப்பட்டுள்ளது , , மூன்றாம் பாலினம் , திருநங்கை என்றும் சேர்த்து , , அவர்கள் விரும்பினால் அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கலாமில்லையா ?
<> கே.எம். அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி - 627416
இதை நமது திருநங்கைத் தோழர் பிரியா பாபு சார்பாக நானும் வழிமொழிகிறேன்.
நீக்குஇணைத்து விட்டேன் ஐயா... நன்றி...
நீக்குஅட! அருமையா வந்துருச்சே டிடி! கலக்கிடுவோம்!
பதிலளிநீக்குவிழாவைச் சிறப்பிக்க உழைத்துவரும் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! வாழ்த்துகள்! பாராட்டுகள்!
உங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். முடிந்தவரை வருவதற்கு முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் வலைபதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் DD.. கலக்குங்க.. உங்களைப் போல ஒரு சிலரால் தான் வலைபூவுலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.. கவிஞர் முத்து நிலவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. சிறப்போடு நடத்துங்க.. அந்த நேரத்தில் தாயகத்தில் இருக்கும் பாக்கியம் கிடைத்தால் நானும் கலந்துகொள்வேன்..
பதிலளிநீக்குஎன்னால் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா! ஆனால், இணைப்பை என் வலைப்பூவில் காட்சிப்படுத்தி விட்டேன். நன்றி! விழா சிறப்பாக நடைபெற என் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றிநண்பரே.
நீக்குதமிழ் வலைப்பதிவர் கையேட்டில் சேர்க்க தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய மறக்காதீர்
ஓ! நாம் வராவிட்டாலும் அதில் சேர்க்கலாமா? எனக்குத் தெரியாது ஐயா! தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!
நீக்குபதிவர் விழா பற்றிய விபரத்தை நீங்கள் சொல்லியபடி என் தளத்தில் இணைத்துவிட்டேன். கணக்கு விபரத்தைக்குறித்துக் கொண்டேன். விரைவில் நன்கொடை அனுப்புவேன். விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதாங்கள் அன்புடன் அனுப்பிய தொகை வந்தது சகோதரி.
நீக்குநன்றி நன்றி. விழாவிற்கும் அவசியம் வர வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅழைப்பிதழ் கண்டு மகிழ்ச்சி அண்ணா..
பதிலளிநீக்குவிழா சிறக்கட்டும்...
திண்டுக்கல்லாரே!அணில் மாதிரி நானும் ஏதோ எழுதிட்டேன் பாருங்க!
பதிலளிநீக்குபார்த்தேன் ரசித்தேன், பதிலும் இட்டுவிட்டேன் நன்றிகள் பற்பல
நீக்குவிழா சிறக்க வாழ்த்துகள். அக்டோபரில் விழா என்பதால் இப்போதே ஏதும் முடிவெடுக்க இயலாது. சந்தர்ப்பத்தைப் பொறுத்துத் தான்! :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல முயற்சி எத்தனை அருமையான அழைப்பு - விழா வெற்றிப் பெற இறைவனை பிராத்திக்கிறேன்
பதிலளிநீக்குதங்களின் கலை வண்ணத்தை கண்டு வியக்கிறேன்..
என்னுடைய வலைத்தளத்தில் போட்டாச்சி
http://vriddhachalamonline.blogspot.in/.../blog-post_20.html
வாழ்த்துக்கள். இந்தாண்டும் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதால் வருத்தமாக உள்ளது. தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய உலகலாவிய பட்டியலென்றைச் சேகரித்துவருகிறேன். அதன் இப்போதைய புள்ளிவிவரத்தை விரைவில் வெளியிடுகிறேன்.
பதிலளிநீக்குபோற்றத் தக்க பணி இந்த தொகுப்பு அவசியம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நீக்குவலைபதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குவிழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
பதிவு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றேன் | மிக்க மகிழ்ச்சி | சொந்த மண்ணில் திருவிழா | கண்டிப்பாக கலந்துகொள்வேன்
பதிலளிநீக்குகலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொலைதூரப் பறவைகளான எங்களுக்கு பறந்து வர முடியவில்லை என்பது மிகவும் வருத்தமே! விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவலைப்பதிவர் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக கோவையிலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு விழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...
பதிலளிநீக்குஅய்யா தனபாலன் அய்யா, கோவம் வேண்டாம். தங்களின் ஆலோசனையின் பேரில் எனது வருகையை உறுதி செய்து விட்டேன். நன்றி.வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. பார்த்து செய்யுங்க
பதிலளிநீக்குவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள். அதற்காக பாடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அன்பான பாராட்டுகள். என்னுடைய வலையிலும் விட்ஜெட்டை இணைத்துவிட்டேன். நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குDear sir,I will be attending the get together.since this is an intellectuals get together I want to present my project "Inspirational park"If the members are interested I will also present my experience in Antarctica.You may have to spare about 45mts time.If you confirm by email I shall come prepared for it.I will come in my car and i will come with my wife.Kindly resarve one a/c room.Any advance reqd for meeting the expenditure,please mail me your bank a/c no. .Karanthaiyar knows more information about me.you may refer to him also.Thank you.
பதிலளிநீக்குவாழ்த்துகள்... இரண்டொருநாளில் தீர்மானிக்கிறேன் வருவது பற்றி..என் வலைப்பூவில் வந்து தகவல் அளித்த டிடிக்கு சிறப்பு நன்றி.
பதிலளிநீக்குகையேடுக்கான தகவல்களை அனுப்பி இருக்கின்றேன். இந்த முறை பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற என் இனிய வாழ்த்துகள்.
நன்றி.
எங்களால் வருவதற்கு நினைத்துக் கூட பார்த்திட முடியாத நிலையிலுள்ளோம் தூர தேசத்தில் இருந்து தூதாக வாழ்த்தினை மட்டும் அறிவித்துவிடுகிறோம் வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குதகவல் அனுப்பிவிட்டேன் தனபாலன் சார். நன்றி. வெளி நாட்டில் இருப்பதால் வர இயலாத நிலையில் உள்ளேன். விழா சிறக்க வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதகவல்கள் அனுப்பப் பட்டு விட்டன. விழா சிறக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு