செவ்வாய், 23 ஜூன், 2015

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...


(படம் சக்கரவர்த்தி திருமகள்) உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? கத்தி - இல்லே; கோடாரி - இல்லே; ஈட்டி ம்ஹூம்; கடப்பாரை - இல்லே; அதுவுமில்லையா...? அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...? - அது ஆயுதம் இல்லையே; அட தெரிய மாட்டேங்குதே, நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!

வியாழன், 18 ஜூன், 2015

விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!


விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்... மதியும் மயங்குதடா - சிறு மனதும் கலங்குதடா...! கொடுக்க எதுவுமில்லை - என் குழப்பம் முடிந்ததடா...! கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...! (படம்: அவன் தான் மனிதன்) ஆமா, விதியைப் பத்தி என்ன நினைக்கிறாய்...? ISO உட்பட பலவற்றிலும் உள்ளதை படிக்க மட்டும் தானா...? விதிகளை மதித்து செயல்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா...?

வியாழன், 11 ஜூன், 2015

நன்றி மறவாத நல்ல மனம் போதும்...


படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன் - படுக்கையிலே முள்ளை வச்சி பாத்து மகிழ்ந்தான்... பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் (2) - ஒருவன் - பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்... காவல் இருந்தான் (2) // ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா // சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை... ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை... (2) நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா... நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா... தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா... தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா... நாய்கள் மேலடா... (படம் : படிக்காத மேதை) குறள் எழுதி விட்டு பதிவு எழுதுகிறாயா...? இல்லை பதிவுக்கேற்ற குறள் சொல்லுகிறாயா...?" இந்த பலரின் சந்தேகத்தை பல பதிவுகளில் கருத்துரையில் தெரிவிக்கிறார்கள்... உனது பதில் என்ன...?

இரண்டும் தான் மனமே... வேண்டுமானால் குறள் தெரியாமல் இப்பதிவை எழுதி விடுகிறேன்... குறள் எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி... வாழ்வில் பல சமயங்களில் அதை அனுபவித்து இருக்கிறேன்... உணர்ந்து இருக்கிறேன்... திருந்தியும் இருக்கிறேன்... சந்தித்த ஒவ்வொரு மனிதரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு மறக்காமல் இருக்கின்றேன்... அவைகள் என்னவென்றால்... ஒவ்வொன்றாக சொல்கிறேன்... ஆனால் ஒன்று தான்...!

புதன், 3 ஜூன், 2015

உண்மையா...? பொய்யா...?


நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்... நல்லவர் கெட்டவர் யாரென்றும்... (2) பழகும் போதும் தெரிவதில்லை - பாழாய் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும், குழையும்... காரியமானதும் மாறும்... ம்... காரியமானதும் மாறும்... (படம் : நாடோடி) ஏம்பா இப்படி இருக்காங்க...?