புதன், 26 பிப்ரவரி, 2014

பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?


அச்சச்சோ...! கப்பல் கவிழ்ந்து இப்படி நாம மட்டும் இந்த ஆளேயில்லாத தீவிலே ஒதுங்கிட்டோமே... சாப்பிட கூட எதுவும் இல்லையே இங்கு...!

கவலைப்படாதே நண்பா... இதோ கடவுளிடம் மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்... "கடவுளே... சாப்பிட ஏதாவது ஒரு வழி செய்...!"

வியாழன், 20 பிப்ரவரி, 2014

செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!


வணக்கம் நண்பர்களே... கிளி போல பேசு... இளங்குயில் போல பாடு... மலர் போல சிரித்து... நீ குறள் போல வாழு...! மனதோடு கோபம்-நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும் (படம் : நம்நாடு) ஆமா, போன வாரம் குழந்தையை அவங்களுக்கான தள்ளுவண்டியிலே ரோட்டிலே உட்கார வைச்சி கூட்டிட்டு வரும் போது, ஏதோ பேசிக்கிட்டே வந்தேயாமே... சொன்னா தான், கோபத்தை வரவழைக்க மாட்டேன்...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதல் செய்...! காதல் செய்...!


வணக்கம் அன்பர்களே... (படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...! (2) நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?

புதன், 5 பிப்ரவரி, 2014

நானே தலைவன்...! (பகுதி 14)

வணக்கம் நண்பர்களே... பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம்... தாங்கள் பேசியதை வலையில் படித்ததற்கு... அதுமட்டுமில்லாமல் அனைவரின் கருத்துரைகளும், அவர்களின் பேசிற்கேற்ப - பதிவு எழுதி முடித்த பின் சேர்த்த எனது பாடல்களும், கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பதிவை வாசிக்க நீங்களும் இங்கே சொடுக்கி பறக்கலாம்....! மேலும் அவர்களின் படைப்புகள் :-