திங்கள், 16 டிசம்பர், 2013

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், திண்டுக்கல் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...

புதன், 11 டிசம்பர், 2013

மனதில் கனம் இருந்தால்...


(படம் : தெய்வப் பிறவி) மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்... வீணான யோசனைக்கே இடமாக்கும்... (2) - பல விபரீத செயல்களை விளைவாக்கும்... தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்... (2) தானே நம்பாதது சந்தேகம்...! எனக்கொரு சந்தேகம் : மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

திங்கள், 2 டிசம்பர், 2013

விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...! (பகுதி 13)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...