எப்போதாவது வருவதே கவிதை ! (பகுதி 9)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தூக்கத்தைத் தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...


இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாகத் தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ளது. முதலில்...

கவிதைகள்...

அருவி
அட...!...!
மலைக் கன்னியின்
நரைத்த கூந்தல்
இவ்வளவு நீளமா...?
விடிவெள்ளி
ஆதவனை வரவேற்க
இயற்கை நியமித்த
அழகான
ரிசப்ஷனிஷ்ட்
ஹைக்கூ

குழந்தை அழுதது
குடிக்காத பாம்புக்கு
"புற்றில் பால்"

பெண் குழந்தைகளைச் சுமக்கும்
உயிரற்ற தாய்

வெள்ளை என்பது
சமாதானமல்ல,
மீன்கள் பேசிக் கொண்டிருந்தன.
"கரையில் கொக்கு"

நண்பனுக்காக உயிரை விடுவது எளிது ஆனால்
உயிரைக் கொடுக்கும் நண்பன் கிடைப்பது அரிது
சுமைகள்

தோண்டி எடுக்காதவரை
தங்கம் - பூமிக்குச் சுமை !

உதவாதவரை
கைகள் - உடலுக்குச் சுமை !

திறக்காதவரை
பெட்டி - வீட்டிற்குச் சுமை !

முத்து இடாதவரை
சிப்பி - கடலுக்குச் சுமை !

மனிதா, உழைக்காதவரை
நீ - இவ்வுலகிற்குச் சுமை !
அனைத்தும் கவிதையே

எப்போதும் வருவது அல்ல கவிதை
எப்போதாவது வருவதே கவிதை !

நினைக்கும் போது வருவது அல்ல கவிதை
நெஞ்சம் கனக்கும் போது வருவதே கவிதை !

கண்கள் ரசிக்கத் தொடங்கி விட்டால்
காணும் காட்சி எல்லாம் கவிதையே !

சந்தோசத்தில் மனம் பூரிப்படைந்து
சிந்தும் சிரிப்புக்கள் எல்லாம் கவிதையே !

நேசிக்கும் உள்ளங்களுக்குள் சிறு சச்சரவு நேர்ந்து விட்டால்
மௌனம் கக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் கவிதையே !

பசியால் வயிறு வாடி விட்டால்,
கிடைக்கும் உணவுகள் எல்லாம் கவிதையே !

எதிர்பார்த்துக் கிடைக்காவிட்டால்,
சிந்தும் கண்ணீர்த் துளிகள் எல்லாம் கவிதையே
நட்பு (பூ)

பூவிலே சிறந்த பூ
புன்னகையாய் பூக்கும் பூ
அனைவரிடமும் மலரும் பூ
அனைத்தும் பகிரும் பூ
என்றும் வாடாத பூ
எதையும் தாங்கும் பூ
இன்பத்தில்
பங்கெடுக்கும் பூ
துன்பத்தில்
தோள் கொடுக்கும் பூ
நினைவுகளாய் அழியாய் பூ
நீடித்து நிலைக்கும் பூ
பார்க்க வடிவமில்லாப் பூ
பழகப் பழகச் சுவை தரும் பூ
உருவமே இல்லாத பூ
உயிரையும் கொடுக்கும் பூ
முப்பிறவியிலும் தொடரும் பூ
மூன்றெழுத்தால் பூத்தப் பூ - நட்பு (பூ)
சிந்தனைக்கு...

01. சில நேரங்களில் உனக்கு நீ, ஊமையாக வாழ்வது நல்லது.
02. அருவியின் வீழ்ச்சி நதியின் எழுச்சியாகிறது.
03. உழைத்து உருகு. உருகும் மேகமே மழை. உருகா மேகம் புகை.
04. நிமிடங்களை நாம் லட்சியம் செய்யாவிட்டால் வருடங்கள் நம்மை அலட்சியம் செய்து விடும்.
05. கைகளால் சுமக்க முடியாத சுமைகளையெல்லாம் இதயத்தால் சுமக்கும் வல்லமை மனிதனுக்கு உண்டு.

ஹி...ஹி...

மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும் வரை என்ன செய்தீங்க ?
கணவன் : இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்...! அது சரி, காலண்டர்லே என்ன பாக்குறே ?
மனைவி : பல்லி விழும் பலன் பாக்குறேன்.
கணவன் : குடு... நான் பாக்குறேன், ஆமாம் பல்லி எங்கு விழுந்துச்சி ?
மனைவி : நீங்க சாப்பிட்ட சாம்பார்லே தான்...!
கணவன் : அடிப்பாவி, அது இருக்கட்டும், ஊர்லே இருந்து வந்த என் அம்மா, ஏன் கோபமா இருக்காங்க ?
மனைவி : திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு, அவங்க படத்தை மாட்டி வைச்சிருந்தேன்... அதான்...!

பொன் மொழிகள்...

01. அமைதி இன்ப வாழ்வுக்கு வழி - சிசரோ

02. ஞானத்தின் பெருத்த சத்தமே... ஆழ்ந்த மௌனம்...

03. அமைதியே இன்ப மயமான வாழ்க்கை - ஸீலி

04. வாழ்வையும் சாவையும் சமமாய் வரவேற்பவரே ஞானி...

05. மனிதன் அடையும் பெரும் பேறு அமைதி - ரஸ்சல்

06. உற்றுப்பார் உனக்குள்ளே தான் உறைந்திருக்கிறது உனது உன்னதம்...

07. மனிதன் அடையும் பெரும் பாக்கியம் அமைதி - அகஸ்தீன்

08. பெரியோர்க்கு அழகு பெருந்தன்மை.. பெருந்தன்மைக்கு அழகு மன்னிப்பு...

09. ஆசை முடியும் கட்டத்தில் அமைதி பிறக்கும் - எட்வர்ட்பால்

10.உருவாக்கியவர் கூட சொந்தம் கொண்டாடுவதில்லை... அதனால் தான் அது பொன்மொழி

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்கு பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். மிக்க நன்றி !

இதே போல் மற்றொரு அசத்தல் பகிர்வு : இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. மிகவும் ரசித்துப்படித்தேன்
  சுவாரஸ்யமும் பயனும் கலந்த பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஜீவனுள்ள அருமையான படைப்புகள் ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளிடம் இருக்கும் உன்னதங்களை உற்றுப்பார்த்து வெளிக்கொண்டு வந்திருக்கும் உங்கள் பணியும் உன்னதம்தான் !

  பதிலளிநீக்கு
 4. பகிர்வுக்கு மிக்க நன்றி . ஆழமான கருத்துகள் .சிந்திக்கவும் வைத்தன சிலவற்றில் அடங்கிய நகைச்சுவை மகிழ்வையும் தந்தன .வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. குழந்தைகளின் படைப்புகள் சிறப்பாக இருந்தன. பல்சுவையும் இணைந்து மகிழ்வைத் தந்தது. நல்ல தொகுப்பு

  பதிலளிநீக்கு
 6. தனித்துவமான, நயமான கவிதை வரிகள். அதுசரி... கன்னியின் கூந்தல் ஏன் நரைத்துப் போனது?!....

  பதிலளிநீக்கு
 7. அருவி கவிதையும், குழந்தை அழுதது கவிதைகள் எனக்கு பிடித்தது...

  பதிலளிநீக்கு
 8. கவி போட்டியில்
  நான் நடுவரானால்
  முதல் தேர்வு.....
  அனைத்து கவியும்
  நாட்டமை தீர்ப்பு எப்படி ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு படைப்பும் ஒண்ணை ஒண்ணு தூக்‌கிச்சாப்பிடுது. இதான் பெஸ்ட்டுன்னு எதையும்‌ சொல்ல முடியாதபடி எல்லாமே சூப்பரு!

  பதிலளிநீக்கு
 10. உயிரோட்டமுள்ள யதார்த்தமான கவிதைகள். நல்ல முதிர்ச்சியும் தெரிகிறது. அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் அருமையான ஆக்கங்கள். படைத்த குழந்தைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. அனைத்துப் படைப்புகளும் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 13. குட்டிக் குட்டியாக வியக்கும் ஆக்கங்கள்.
  மிக நன்று.
  அனைவருக்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 14. ந‌ல்ல‌ தொகுப்பு..மிக‌வும் ர‌சித்தேன்..

  பதிலளிநீக்கு
 15. அனைத்தையும் ரசித்தேன். நட்பு(பூ) சூப்பர்.

  பதிலளிநீக்கு
 16. மழலை அரும்புகளின் பல்சுவை இதழ் படித்தது போலிருந்தது இந்த பதிவு..மாணவ மாணவியருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

  த,ம-6

  பதிலளிநீக்கு
 17. நிறைய முத்துகள் காணக் கிடைக்கின்றன! kகுழந்தைகளின் திறமை வியக்க வைக்கிறது! எங்கிருந்து பிடித்தீர்கள்?

  பதிலளிநீக்கு
 18. தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.. எவ்வளவு அழகழகான படைப்புகள். மாணவமணிகளின் படைப்புகளைப் படிக்கப் படிக்க ஆனந்தமாக இருக்கிறது. தமிழிலக்கிய உலகின் ஒளிமயமான எதிர்காலம் கண் முன் தெரிகிறது. மாணவ கண்மணிகளுக்கும் உங்களுக்கும் ஒரு சேர ஒரு பெரிய பூச்செண்டு!!!. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள் பல்லாயிரம்.

  பதிலளிநீக்கு
 19. நேரடியாக பதிவுகள் தெரியும்படியும் கருத்திடும்படியும் இருந்தால் பரவாயில்லை, ரெண்டு முறை தேடித் தேடி கிளிக் செய்ய வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. அனைத்தும் கவிதையே தலைப்பில் வந்திருக்கும் கவிதை அருமை..உன்னதமான உங்கள் பணி தொடரட்டும்..

  பதிலளிநீக்கு
 21. அருமையான படைப்புகள் மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  அவர்களின் திறமைக்கு வாயில் அமைத்துக்கொடுத்த தாங்களுகம் பாராட்டுக்குரியவர்.

  பதிலளிநீக்கு
 22. ரசிக்கும்படியான தொகுப்பு,

  பகிர்வுக்கு நன்றி ...

  பதிலளிநீக்கு

 23. கவிதைகள் அனைத்தும் நச் என்றும் சுறுக் என்றும் இருக்கின்றன. எழுதிய குழந்தைகள் யார் என்று தெரிவித்தால் அவர்களுக்கும் அது இன்னும் ஊக்கம் கொடுக்கும் என்பது என் அபிபிராயம். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். முக்கியமாக இவற்றை ஒருங்கிணைத்து வெளியிடும் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 24. அருமையான பகிர்வு.
  ரசித்தப் படித்தேன் தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 25. புதுக் கவிதைகள் அத்தனையும் மிக மிக அருமை.
  அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. புதுக் கவிதைகள் மனதை கொள்ளை கொள்கின்றன. அருமையான பதிவு.
  பகிர்விற்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 27. குழந்தைகளின் கற்பனையை பிரமிப்புடன் பார்க்கவைக்கும் கவிதைகள் பகிர்வுக்கு நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 28. இனி எங்கபாடு திண்டாட்டம்தான் இவ்வளவு சிறப்பா எழுத ஆரம்பிச்சா என்னோட தளத்துக்கு ஆட்கள் வரமாட்டாங்களே.அருமை தொடந்து எழுதுங்க

  பதிலளிநீக்கு

 29. அருமையான தொகுப்பு! நல்ல பணி! வாழ்த்துக்கள்! அனைதுதும் சுவையே!

  பதிலளிநீக்கு
 30. அருமையான தொகுப்பு..கவிதைகள்,சிந்தனைக்கு,பொன்மொழிகள் எல்லாமே ரசித்து வாசிக்கும் படியுள்ளது.

  பதிலளிநீக்கு

 31. அற்புதமான தொகுப்பு...அதிலும் ஹைக்கூ கவிதைகள் அருமை.tm15

  பதிலளிநீக்கு
 32. ஆஹா மலை கன்னியின் கவிதை அருமை...!

  சிந்தனை....ஹி ஹி....ஹைக்கூ எல்லாமே சூப்பர்ப்...!

  பதிலளிநீக்கு
 33. இந்நாள் குழந்தைகள் மட்டுமல்ல முன்னாள் குழந்தைகளும் இரசிக்கக்கூடிய பதிவு இது.

  பதிலளிநீக்கு
 34. குழந்தைகளுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் பாராட்டுக்களும், நன்றியும்.
  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  பதிலளிநீக்கு
 35. வணக்கம்
  தனபால்(அண்ணா)

  அருமையன பதிவு அண்ணா..நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 36. அத்தனையும் அற்புதம்! மிகமிகச் சிறப்பு!
  வாழ்த்துக்கள் தனபாலன் சார்!

  த ம. 17

  பதிலளிநீக்கு
 37. எல்லா கவிதைகளுமே அருமை.
  'பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ' என்று என் சிறுவயதில் ஒரு பிரபல சினிமாப் பாடல் உண்டு. நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 38. // எப்போதாவது வருவதே கவிதை

  சிந்தும் கண்ணீர்த் துளிகளெல்லாம் கவிதையே //

  சிதறும் எண்ணங்களெல்லாம் கவிதையா !

  சிந்துமுன் கண்ணீர்த் துளியிலே சிலவெடுத்து
  சிந்து பாட, ஒரு சீர் கொண்டு
  முந்தி வந்து மோனையுடன்
  முத்து முத்தாய் வழிகிறதே நின் முகத்தில் !!

  கயல்விழியே ! நீதானே என்
  கவிதை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.movieraghas.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  பதிலளிநீக்கு
 39. குழந்தைகளின் படைப்புகள் பிரமிக்க வைக்கின்றன.
  அதுவும் 'அனைத்தும் கவிதையே', 'சுமைகள்'ஆச்சரியப் படுத்துகின்றன.
  எந்த வயதுக் குழந்தைகள் இவர்கள்?
  வாழ்த்துக்கள் படைப்பளிக் குழந்தைகளுக்கும், அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 40. பயன்தரும் சிறந்த பதிவுகள்
  தொடருங்கள் ஐயா...
  நான்
  அடிக்கடி படிக்க வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 41. ஒரே பதிவில் எல்லா விசயங்களையும் சொல்லிவிட்டீர்கள் நண்பரே அருமை அருமை

  நீரோடை மகேஷ்

  பதிலளிநீக்கு
 42. ஆஹா மிகவும் சூப்பர்ர்.. அத்தனையும் அருமை ரசித்தேன்...

  எப்போதாவது வருவதுதான் கவிதையோ?.. ஹையோ நீங்க பொல்லுக் கொடுத்து அடிவாங்கத் துணிஞ்சிட்டீங்க:)... எப்பவும் கவிதை எழுதுவோர் கல்லோடு கலைக்கினம்... இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறீங்களோ?:) எனக்கெதுக்கு ஊர் வம்பு.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

  பதிலளிநீக்கு
 43. சிந்தனைக்கு பொன்மொழிகள் என அனைத்தும் மிக அருமை

  பதிலளிநீக்கு
 44. ரசித்துப் படிச்சேன். அருவி கவிதையும், குழந்தை பாலுக்கு அழுத கவிதையும் மனதைத் தொட்டது. எல்லாமே அருமை தான். இவை இரண்டும் மிகச் சிறப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 45. சுவாரஸ்யமும் பயனும் கலந்த பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 46. குழந்தைகளின் படைப்புகள்..அருமையான தொகுப்பு !

  அருவி கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 47. முதல் ஆளாக வந்து வலைச்சரத்தில் தங்கள் வலைப்பூ சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறிய அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றி.

  சீனா ஐயா கூறியது போல தாங்கள் வலைச் சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற்க்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 48. நல்லதொரு தொகுப்பினை தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 49. நட்பு பாட்ல அருமை.
  குழந்தைகளுக்கு என்று தொகுத்தவை அனைத்தும் அருமை.
  கண்கள் ரசிக்க தொடங்கி விட்டால் காணும் காட்சி எல்லாம் கவிதைதான் அருமை.
  உதவாதவரை கைகள் உடலுக்குச் சுமைதான் உண்மை.
  வாழ்த்துக்கள் தனபாலன் நல்ல தொகுப்புக்கு.

  பதிலளிநீக்கு
 50. மிகவும் ரசித்துப்படித்தேன்அருவி கவிதையும், குழந்தை பாலுக்கு அழுத கவிதையும் மனதைத் தொட்டதுநன்றி

  பதிலளிநீக்கு
 51. அனைத்தும் அருமை. இருமுறை படித்து மகிழ்ந்தேன், பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 52. மாணவச்செல்வங்களின் சிந்தனை வியக்கவைத்தது. இயற்கை, மனிதர்களின் மூடநம்பிக்கை, எண்ணங்களின் எழுச்சி, சிந்தனை, சிரிப்பு என்று எல்லாப்பக்கங்களிலிருந்தும் வியக்கவைக்கும் படைப்புகளை அள்ளித்தந்த செல்லங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். ஊக்கமளிக்கும் தங்கள் அன்புக்குப் பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 53. நட்பை பற்றிய கவிதையும், பொன்மொழியை பற்றிய வரியும் மிக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 54. ரசித்துப் படித்தேன். அருமையான பதிவு. "வெள்ளை என்பது சமாதனமல்ல.." அருமை. மற்றவையும் நன்று

  பதிலளிநீக்கு
 55. ' பூ ' மணமணத்தது !
  கவிதை கமகமத்தது !

  பதிலளிநீக்கு
 56. அருவி, கரையில் கொக்கு - ரசித்தேன். அப்போ எப்போவாது தான் கவிதை எழுதனுமோ என்று நினைத்தேன்..நல்ல வேலை..'கண்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டால்..' வரி எப்பொழுதும் எழுதலாம் என்று சொல்லியது :)
  மொத்தத்தில் அனைத்தும் அருமை! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 57. அருவி கவிதை ஹைக்கூ சுமைகள் விடிவெள்ளி அனைத்தும் அருமை அண்ணா படித்தேன் வியந்தேன்

  பதிலளிநீக்கு
 58. அனைத்தும் அருமை. ஹி... ஹி... நல்லா இருந்துது.

  பதிலளிநீக்கு
 59. அருவி ப‌ற்றிய‌ க‌விதை அருமை! ந‌ட்பைப்ப‌ற்றி எழுதிய‌ சிறு ஹைக்கூ க‌விதை அதனினும் அருமை!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.