🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அந்'தரத்திலே'... (SET 2) ISO - Part 5

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு - Self Evaluation Test (SET 1) கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்) ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்... இனி...


பகுதி இரண்டு

சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு

(SELF EVALUATION TEST : LEADERSHIP)

சுருக்கமாக SET என்று வைத்துக் கொள்வோமா...?

26) Do you keep a stand-by decision for any problem ? (மற்றொரு நம்பத் தகுந்த முடிவு)

27) Do your share your responsibility with your colleagues ? (பொறுப்புகள்)

28) Do you honour your sub-ordinates ? (மதித்தல்)

29) Can you work accepting to the situation ? (ஏற்றுக் கொள்ளுதல்)

30 Can you read your subordinate mind ? (அறிதல்)

31) Can you handle your people as a group ? (திறம்பட பயன்படுத்துதல்)

32) Are you avoiding rigidness ? (கடுமையான கண்டிப்பு)

33) Can you select a right person for the right job ? (தேர்ந்தெடுத்தல்)

34) Are you engaging young subordinates for special tasks which need more physical work ? (பிரத்தியோகமான கடும் வேலை)

35) Do you have the mental balance ? (மனதின் சமநிலை)

36) Do you encourage healthy competition ? (ஊக்கப்படுத்துதல்)

37) Do you have sense of humour ? (நகைச்சுவை உணர்வு)

38) Can you take your team in the right direction ? (சரியான பாதை)

39) Are you taking actions promptly ? (காலத் தாமதமின்றி)

40) Do you reward a good reformer ? (கூடுதல் வெகுமதி)

41) Can you take the prime responsibility when offered ? (வாய்ப்பு வரும் போது)

42) Do you have open-mind to receive suggestions / complaints from others ? (பரந்த மனப்பான்மை)

43) Do you care for your people ? (அக்கறை)

44) Are you easily accessible to your subordinates / colleagues ? (எளிதில் அணுகும் தன்மை)

45) Can you admit your mistakes always ? (ஒப்புக் கொள்ளுதல்)

46) Are you keeping your promises ? (தொடர்ந்து வைத்திருத்தல்)

47) Do you avoid over-riding ? (முந்துதல்)

48) Are you a good listener ? (உற்றுக் கேட்பது)

49) Do you take the initiative when hard jobs come to you ? (முதலில் தொடங்குதல்)

50) Do you negotiate when hard jobs come to you ? (உடன்படிக்கைக்குப் பிறகு)

தோழர்களே... இது ஒரு சுய பரிசோதனை... உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு (சில கேள்விகள் தவிர்த்து) அல்லது நண்பர்களுக்கு உதவலாம்... சரி...
15 கேள்விகள் 'YES' என்றால் (15)x(+2)=30 மதிப்பெண்கள். மீதம் 10 கேள்விகள் (10)x(-1)=-10 மதிப்பெண்கள். இந்தப் பகுதியில் மதிப்பெண்கள் = 30-10 = 20

SET 1-ல் எடுத்த மதிப்பெண்களையும் சேர்த்துக் கொண்டு ஞாபகம் வைத்துக் கொண்டு வரும் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்... முடிவு...? முடிவில் பார்த்துக் கொள்ளலாம் நண்பர்களே...

தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி... நானும் கீழே உள்ளது போல் தீபாவளி வாழ்த்துச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன் :

உங்களின் இன்பங்கள் யாவும் பெட்ரோல், டீசல், தங்கம், கியாஸ் சிலிண்டர், இன்னும் பலவற்றின் விலைகள் போலத் தினமும் உயரட்டும்... உங்களின் துன்பங்கள் யாவும் மின்சாரம் போலச் சுத்தமாக இல்லாமல் போகட்டும்...

நாள்தோறும் ரசிகன்... பாராட்டும் கலைஞன்... காவல்கள் எனக்கில்லையே... சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்-சிரிக்காத நாளில்லையே... துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்... மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே... என் சோகம் என்னோடுதான்... (படம்: புதுப் புது அர்த்தங்கள்)

"அடுத்த பகிர்வு பாட்டு பகிர்வா...? அதென்ன தலைப்பு இப்படி...?"

ஆமா மனசாட்சி... பாட்டுப் பகிர்வு தான்... பாட்டுக்கு எதிர்ப்பாட்டு தான் யோசிக்கணும்... "பாதிக் கிணறை தாண்டியாச்சி" என்கிற தலைப்பை தான் நினைத்தேன்... பிறகு ஒரு மாற்றம்... அப்புறம் நண்பர்களே... இந்த மதிப்பெண்கள் எல்லாம் உங்களின் தரத்தைப்பற்றி நீங்கள் அறிய தான்... அதனால் கருத்துரையில் மதிப்பெண்களைச் சொல்ல தேவையில்லை... என் ISO குரு எப்படி இந்த நூறு கேள்விகளுக்கு என்னிடம் பதில் வாங்கினார் என்பதைப் பற்றி வரும் SET பதிவுகளில்... நன்றி...

பாட்டுப் பகிர்வு ? இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சுயமதிப்பீடு மதிப்பெண்ட்கள் குறைவாகத் தான் இருக்கும்.
    தீபாவளி வாழ்த்து அருமை.
    அடுத்ததற்கு காத்திருக்கிறேன்.
    உங்களுக்கு முதல் கருத்திடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கேஸ், மின்சாரம்ன்னு கலந்துகட்டி வாழ்த்து சொன்ன விதம் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. நாள்தோறும் ரசிகன்...
    பாராட்டும் கலைஞன்...
    காவல்கள் எனக்கில்லையே... சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்-
    சிரிக்காத நாளில்லையே...
    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்...
    மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே...

    என் சோகம் என்னோடுதான்...

    புது புது அர்த்தங்கள் தந்த வாழ்த்துப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் உபயோகமான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன விதமே சூப்பர்..
    இதற்கு முந்தைய பாகம் இன்னும் படிக்கல..இந்த பதிவு அருமை..மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பதிவுலகில் தங்களின் உழைப்பை எடுத்துக்காட்டும் ஓர் உன்னத பதிவு!

    பதிலளிநீக்கு
  7. இன்பமும் பெட்ரோலும்...துன்பமும் மின்சாரமும்...அருமையான ஒப்பீடு!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பதிவுகள் ஏதாவது ஒருவிதத்தில் மக்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கு தனபாலன், வாழ்த்துகள் மக்கா...!

    பதிலளிநீக்கு
  9. தீபாவளி கிண்டல் வாழ்த்து செம !

    பதிலளிநீக்கு
  10. பதிவு அருமை...அதைவிட உங்கள் தீபாவளி வாழ்த்து சூப்பரோ.. சூப்பர்..

    பதிலளிநீக்கு
  11. அனுபவத்தால் அமைந்த தங்கள் பகிர்வு அருமை சகோதரரே!!

    பதிலளிநீக்கு
  12. எனக்கு நானே மதிப்பெண் போட்டுக் கொண்டேன் அருமையான பதிவு சார்

    பதிலளிநீக்கு
  13. 32. கடுமையான கண்டிப்பு அந்த நேரத்திற்கு மட்டும் செல்லுபடியாகும்.
    அன்பால் பல காரியங்களை சாதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. \\உங்களின் இன்பங்கள் யாவும் பெட்ரோல், டீசல், தங்கம், கியாஸ் சிலிண்டர், இன்னும் பலவற்றின் விலைகள் போல தினமும் உயரட்டும்... உங்களின் துன்பங்கள் யாவும் மின்சாரம் போல சுத்தமாக இல்லாமல் போகட்டும்...\\ நம்மை வாட்டி வதைக்கும் துன்பத்தையும் நகைச்சுவையா மாதத்திய தங்கள் சாமர்த்தியத்தை பாராட்டியே தீர வேண்டும்!!

    \\நாள்தோறும் ரசிகன்... பாராட்டும் கலைஞன்... காவல்கள் எனக்கில்லையே... சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்-சிரிக்காத நாளில்லையே... துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்... மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே... என் சோகம் என்னோடுதான்... (படம்: புது புது அர்த்தங்கள்)\\ பதிவு பின்னூட்டம் எல்லாத்திலும் இப்போவெல்லாம் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டீங்க, என்ன ஆச்சு, இவ்வளவு குஷி!!

    பதிலளிநீக்கு
  15. பயன்தரும் ஆக்கம் !

    பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டிய பதிவு

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு கேள்விகள்! நம்மை மேம்படுத்தி கொள்ள உதவும்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள தகவல்.

    துன்பங்கள் மின்சாரம் போல் இல்லாமல் போகட்டுமா? அவ்வளவு மோசமாவா இருக்குது?

    பதிலளிநீக்கு
  18. சுய மதிப்பீடு ஆய்வு....முடிவு...?

    தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன விதம் அருமை...

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  19. நல்ல கேள்விகள் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. ஆய்வுகள் எப்போதுமே நல்லது தானே.
    பதிவிற்கு நன்றி சகோதரா.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. சுயமதீப்பிடு மிகவும் நல்லம்! அடுத்த பாட்டுப்பதிவா விரைவாக தாங்கோ முதல் ஆளாக வர காத்து இருக்கின்றேன் சார்!

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்திய விதம் அருமை நண்பரே....
    சுய மதிப்பீடு மிக நன்று...

    பதிலளிநீக்கு
  23. பயனுள்ள் பதிய வு
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மிக்க நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. அருமை தனபாலன் சார் ! சுய மதிப்பீடு ஆய்வின் இரண்டாவது பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.....உங்க வழக்கமான குறும்பு அந்த தீபாவளி வாழ்த்தில் தெரிந்தது !! இன்றிலிருந்து உங்களை தொடர ஆரம்பித்துள்ளேன், நன்றி, தொடரட்டும் உங்கள் இடுகைகள் !

    பதிலளிநீக்கு
  25. நல்ல பகிர்வு.தீபாவளி வாழ்த்து வித்தியாசமாய் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  26. உங்கள் தீபாவளி வாழ்த்துகள் புதிய கோணத்தில் இருந்தது அண்ணா சூப்பர்
    மற்றும் SET 1 அருமை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  27. நல்ல கேள்வியும் சுயமதிப்பீடும் ஒரு கேள்வி ஏன் தமிழில் கேள்விகள் இருக்கவில்லை ?

    பதிலளிநீக்கு
  28. நிறைவான வாழ்வுக்குத் தேவையான பயனுள்ள அறிவுறுத்தல்கள்.

    பதிலளிநீக்கு
  29. மிகவும் உபயாகமான பதிவு தனபாலன் சார் நன்றி

    தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. இப்படி ஒரு தீபாவளி வாழ்த்தை எங்கேயும் பார்த்ததில்லைய்யா..சூப்பர்.

    பதிலளிநீக்கு
  31. பயனுள்ள பதிவு அண்ணன் தனபாலன் அவர்களே.மேலும் உங்களின் தலத்தில் உள்ள கோடிங்குகளை கொஞ்சம் நீக்கி விடுங்கள்.உங்களின் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வதாக தெரிகிறது

    பதிலளிநீக்கு
  32. உங்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தியினை இப்போது தான்
    என்னால் படிக்க முடிந்தது.

    //“இன்பங்கள் விலைவாசி போல எப்போதும் ஏறட்டும்”

    “துன்பங்கள் மின்சாரம் போல சுத்தமாகவே இல்லாமல் போகட்டும்”//

    அடடா! எவ்வளவு அழகான வரிகள்!

    மிகவும் ரஸித்தேன் சிரித்தேன்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள், நண்பரே!

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  33. ஒரு விளையாட்டுப்போல இருந்தாலும் வித்தியாசமாகவே யோசிக்கிறீங்கள் எப்பவும்.....நன்றி !

    பதிலளிநீக்கு
  34. 17X 2 =34-8=26....!!

    ஆனால் இதில் எனக்குப் பொருந்தாது என்று நான் நினைத்த மூன்று கேள்விகளுக்கு yesம் இல்லை NO வும் இல்லை! அப்போ நான் நல்லவனா கெட்டவனா! தீபாவளி வாழ்த்துகள் வரிகள் 'சூப்பரு' ரகம்.

    பதிலளிநீக்கு
  35. தங்களின் பதிவுகைள ெமாபல் வீவ் (வும்) ைவத்தால் என்னேபால் உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்

    பதிலளிநீக்கு
  36. மிகவும் வித்தியாசமான பகிர்வு! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  37. வலைச்சரத்தில் வந்த எனது வலைத் தளம் பற்றிய செய்தியை சிரமேற்கொண்டு எனக்கு மெயில் செய்த தங்களது நற்குணத்திற்கு எனது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல.
    தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துகள் நண்பா!

    பதிலளிநீக்கு
  38. அனுபவத்தால் அமைந்த பயனுள்ள பதிவு... பாராட்டுக்கள்..தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் பற்றியும்
    தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
    நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
    வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
    பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/11/2.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    தங்களுக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும்
    அன்பான வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in .

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் அய்யா,
    பயனுள்ள தகவல்
    வையம் வாழிய வாழ்க....

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் நண்பரே தொடர்து வருகை புரிவதற்கு மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் பல பல !

    பதிலளிநீக்கு
  42. http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
    அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  43. நல்ல பதிவு.
    Vetha.Elanagthilakam

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.