🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?


ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்குச் சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...?© அன்பே சிவம் வைரமுத்து வித்யாசாகர் உதித் நாராயண், திப்பு @ 2003 ⟫

கள்ளுண்ணாமை அதிகாரத்தைக் குறளின் குரலாக முந்தைய பதிவில் ஒரு உரையாடலாகப் பகிர்ந்து கொண்டேன்... குறளுக்கேற்ப பாடல் வரிகளைச் சொல்வது உங்கள் பொறுப்பு...! என்று இந்த இணைப்பில் சொல்லி இருந்தேன்... சரியான சில பாடல் வரிகளைச் சொன்னவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்... இதோ குறள்கள், விளக்கங்கள், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும்...! குறளுக்கேற்ப முக்கிய வரிகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன்... முழுப் பாடலை கேட்க கேட்பொலியை சொடுக்கவும்...

அதிகாரம் 93 - கள்ளுண்ணாமை(921-925)

ஏண்டா... தண்ணி, சிகரெட், கஞ்சா - இப்படி இன்னும் என்னென்ன போதை பழக்கத்துக்கெல்லாம் அடிமையா இருக்கே...? எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே... மத்தவங்க உன் மேலே வைச்சிருந்த மதிப்பும் மரியாதையும் போச்சி... பயமும் சுத்தமா போச்சி...

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்  
கட்காதல் கொண்டொழுகு வார் (921)  

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா...? மனிதன் தானா...? - இல்லை, நீ தான் ஒரு மிருகம்... இந்த மதுவில் விழும் நேரம்... மனமும் நல்ல குணமும் - உன் நினைவை விட்டு விலகும்... நீ தான் ஒரு மிருகம் - இந்த மதுவில் விழும் நேரம்... மானைப் போல் மானம் என்றாய்... நடையில் மத யானை நீயே என்றாய்... வேங்கை போல் வீரம் என்றாய்... அறிவில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய்... மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்...© ஒளிவிளக்கு வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫

போகட்டும்டா... அதுக்கென்ன இப்போ...? மூத்தவங்க என்ன, எங்க அப்பா அம்மா ஆனாலும் சரி... நல்ல நண்பர்களும் சரி... யாரோட மதிப்பும், அறிவுரை ஆலோசனை எல்லாம் எனக்குத் தேவையேயில்லை... நான் 'தண்ணி'க்காட்டு ராஜாடா...!

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்  
எண்ணப் படவேண்டா தார் (922)  

பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்... புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்... முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்...? முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்...! // திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்...! கண் போன போக்கிலே கால் போகலாமா...? கால் போன போக்கிலே மனம் போகலாமா...? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா...?© பணம் படைத்தவன் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

அடேய் கூஜா... உன்னைப் பார்த்து நீ சொன்னவங்க யாரும் சந்தோசப்பட மாட்டாங்க... பாவி, பரிதாப்படுவாங்கடா... அவ்வளவு ஏண்டா, எந்த தப்பையும் மன்னிக்கிற உங்க அம்மாவே சகிச்சிக்க மாட்டாங்க... வெட்கமா இல்லே உனக்கு...?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்  
சான்றோர் முகத்துக் களி (923)  

கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ...? விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...? சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான் சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே... சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...© வசந்த மாளிகை கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1972 ⟫

என்னது வெட்கமா...? அப்படி ஒன்னு இருக்கோ...? ஹே ஹே... என்னைப் பார்த்து அந்த வெட்கமே ஓடிப் போயிருச்சு...! அட இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...? எனக்கு வேண்டியது எந்நேரமும் போதை...!

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்  
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு (924)  

மதுவுக்கு ஏது ரகசியம்...? அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்...2 மதுவில் விழுந்தவன் வார்த்தையை - மறுநாள் கேட்பது அவசியம்...! அவர் இவர் எனும் மொழி - அவன் இவன் என வருமே... நாணமில்லை வெட்கமில்லை - போதை ஏறும் போது... நல்லவனும் தீயவனே - கோப்பை ஏந்தும் போது... சிலர் குடிப்பதுபோலே நடிப்பார்... சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்... சிலர் பாட்டில் மயங்குவார்... சிலர் பாட்டிலில் மயங்குவார்...!© சங்கே முழங்கு கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫

அடேய்... இப்படி எந்நேரமும் போதையிலே இருக்க, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமெல்லாம் போகுதே... பணத்தை விடு, இப்படி உடம்பை சீரழிச்சிக்கிறேயே... இதைவிட முட்டாள்தனம் உலகத்திலே எதுவுமேயில்லை... அது விசம்டா... மனுசனா நீ...?

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து  
மெய்யறி யாமை கொளல் (925)  

குடிக்காதே தம்பி குடிக்காதே... தம்பிதம்பி... தம்பியோவ்... குடிக்காதே தம்பி குடிக்காதே... நீ குடிச்சிபிட்டு குடலு வெந்து துடிக்காதே... நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே... உன் வீட்டை ஒரு கழுதை கூட மிதிக்காதே...2 நல்ல மனுஷன் சாராயத்தைத் தொட்டதுமில்லை - அது தொட்டவனை லேசில தான் விட்டதுமில்லை... மனுஷனோட ரத்தத்தை தான் அட்டை குடிக்கும் - ஆனா, மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்...2 பாடுபட்டு பணத்தை சேர்த்து குடியில் விடாதே - உன் பிள்ளை குட்டி எல்லாத்தையும் தெருவில் விடாதே...2 பைய பைய கறையுறது சில்லறைதாம்பா... உன் பரம்பரைக்கு மிஞ்சுறது கல்லறைதாம்பா...2© நான் குடித்துக் கொண்டே இருப்பேன் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1980 ⟫
அடுத்த பகுதி இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பதிவு. அருமை. நான் ரெண்டு பாட்டு சஜஸ்ட் பண்றேன் ஜி...

    1. ரம் இது ரம் மதுரம்... கிக்குக் கொடுக்குது ரம்மு... காத்துக்கொடுத்தது அம்மு... உதறலெடுக்குது.. உளறச்சொல்லுது.. உலகமிருப்பதே மறந்து போகுது...


    2. ஆண்டவனே நீயிருந்தால் சொல்லு.... பிறர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு... மாண்டவனும் குடித்தவனும் ஒன்று... சிலர் மண்டையிலே ஏறலையே இன்று...

    பதிலளிநீக்கு
  2. அருமை டிடி அசத்தல் பதிவு."பேணாப் பெருங்குற்றம்" வள்ளுவனின் சொல்லாடல் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. போதைக்கு அடிமையாகும் பேதைகளை விழிப்புறச் செய்யும் அருமையான பதிவு. குறள் - திரையிசைப் பாடல்கள் ஒப்பீடு மனம் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பதிவு டிடி வழக்கம் போல!!! அனைத்துமே அம்சம்!!! பேணாப்பெருங்குற்றம்!! அட!! என்ன ஒரு அழகான வார்த்தை!! இன்று குடித்துக் குடித்தே சீரழியும் மக்களை நினைக்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. 'குடி'மகன்கள் கேட்க வேண்டிய குரல்கள், குறள்கள்.

    பதிலளிநீக்கு
  6. பேணாப் பெருங்குற்றம்
    வியந்து போனேன் ஐயா
    தங்களுக்கு வலைச் சித்தர் என்பேதோடு
    குறள் நெறிச் செல்வர் என்னும் பட்டமும் வழங்கியே தீர வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  7. பதிவு மிக அருமை . இதன் பின்னுள்ள உங்கள் உழைப்பை எண்ணி உங்களைப் பாராட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  8. இதற்கு மேலும் சிறப்பாக எவராலும் சொல்லமுடியாது..

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  9. குடிகாரர்கள் எவரும் தைரியமாக சொல்ல முடியாது "நான் மனிதன்" என்று.

    பதிலளிநீக்கு
  10. மதுவின் மயக்கத்தில் கிடக்கும் மாக்களுக்குணர்த்த திருக்குறள் கருத்துகளை திரைக்குரல்களோடு ஒப்பிட்டுள்ள வழங்கியுள்ள தங்களின் அரிய முயற்சிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா திடீரென அந்த மனிதன் கழண்டு விழுந்தாரா.. பயந்திட்டேன்ன் ஹா ஹா ஹா..:)..

    நான் கூறிய பாட்டு இடம்பெறவில்லை... தப்புப்போலும்:)..

    வழமைபோல அழகிய பதிவு அழகான பாடல் உவமைகளோடு.

    பதிலளிநீக்கு
  12. நமக்குக் குறள் ஞானமும் திரைப்பாடல் ஞானமும் நெக்ஸ்ட் டு நத்திங்

    பதிலளிநீக்கு
  13. பழைய பாடல் வரிகள் மட்டுமே எனக்கு பரிச்சயம் ,உங்களால் எப்படி பொருத்தமான புதுப் பாடல் வரிகளும் நினைவுக்கு வருகிறது ஜி :)

    பதிலளிநீக்கு
  14. குறள், பொருள், பாடல்
    பொருந்தி அமையப் பதிவெழுதும்
    ஆற்றல் மிக்க அறிஞரே!
    எனக்கு என்னமோ
    "தைரியமாகச் சொல்
    நீ மனிதன் தானா" என்ற
    பாடல் சொல்லும் உண்மையை
    நம்மாளுங்க பின்பற்றினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  15. ஆஹா இத்தனை பாடல்களா !!எல்லாமே அருமை ..பாட்டு கேட்டாவது திருந்தின சரி ..
    கலைமகள் கைப்பொருளே எத்தனை கருத்துள்ள பாடல் !!

    பதிலளிநீக்கு
  16. நூற்றில் ஒருவர்..இருவர் திருந்துவதாக தெரிகிறது..திருந்தியதாக இருந்தால் பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் வேலையே இருக்காதே...

    பதிலளிநீக்கு
  17. ‘குடிமகன்’கள் பெருகியிருக்கும் இந்நாளிம் மிகவும் அவசியமான ஒரு பதிவு. இது வரைப் படிக்காத குறள்களுக்குப் பொருத்தமான பாடல்கள். பாராட்டுகள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் !

    உயிர்நிறைந் தூட்டிடும் ஒப்பிலாக் கற்கை
    அயிரமு தன்ன அளித்தாய் - மயிரிழந்தால்
    மானொன்று மண்ணில் மடியுமாம் ! கற்றாரும்
    தானென்று வாழ்தல் தவறு !

    அருமையான பதிவு எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுதோ தெரியலையே !

    வாழ்த்துகள் டிடி சார் வாழ்க நூறாண்டு !

    பதிலளிநீக்கு
  19. மதி நுட்பமும்
    தொழிற் நுட்பமும்
    பின்னிப் பிணைந்த பதிவு
    அற்புதம்

    பதிலளிநீக்கு
  20. எனக்கு பல சம்பங்கள் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  21. Really very interesting and innovative, thirukkural comparison with cinema songs,, 😝😃💐🌷 கும்பிடறேங்க

    பதிலளிநீக்கு
  22. சிறப்புப் பதிவிற்கு அன்புடன் வாழ்த்துகள்
    எனது இரண்டாவது வலையில்தான்
    ஆக்கங்கள் போடுகிறேன்.
    இங்கு வாருங்கள்:- https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு நான் சொன்ன பாடலும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி.
    தொழில் நுடபம் அருமை.
    பாடல்கள் , குறள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. அருமையான பாடல்களின் இனிய சிந்தனைக்களஞ்சியம் டிடி!

    பதிலளிநீக்கு
  25. உங்கள் ஒரு பாடல் தேர்வில் என் ஒரு தேர்வும் தேறிவிட்டது)))

    பதிலளிநீக்கு
  26. அருமை அருமை இதை பவர் பாய்ன்ட் பிரசென்டேஷனாக மாற்ற முடியுமா என யோசியுங்கள். உங்களால் முடியும்.

    பதிலளிநீக்கு
  27. ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களுக்கு பொருத்தமான பாடல்களைத் தந்து வழக்கம்போல் அசர வைத்துவிட்டீர்கள். நானும் குறளுக்கேற்ற பாடல்களை தர முயற்சித்தேன். முடியவில்லை

    பதிலளிநீக்கு
  28. குறளும், அதற்கேற்ற சினிமா ‘குரலும்’ பொருத்தமாக தேர்வு செய்வது, அதை எளிமையான மொழிநடையில் கொண்டு செல்வது சாதாரண விஷயமல்ல. குறள், சினிமா இரண்டும் நன்றாக தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். படைப்பை நேர்த்தியாக்க, கொட்டிய அந்த உழைப்புக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. சிறப்பான கருத்துக்களுடன் மிக அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  30. வெகு அருமை. குறட்பாக்களும் பொருத்தமான திரைப் பாடல்களும்
    ..... தங்களின் சிரத்தைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  31. very nice , i found this blog. it has best content in tamil
    thanks , now i will visit this blog daily
    http://www.sirfor.com/en/narain-karthikeyan-biography-career-achievement-family/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.