பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!
வணக்கம் நண்பர்களே... தொடர் பதிவிற்கு அழைத்த தேன் மதுரத் தமிழ் - கிரேஸ் அவர்களுக்கும், கில்லர்ஜி அவர்களுக்கும் நன்றி... // நீ என்பதைப் பொல்லாத நான் என்பதை நாம் செய்வது பாடல் தான்... யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது - அதை மாற்றி ஆள்செய்வது பாடல் தான்... கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்... மண்ணில் நாம் வாழகிற காலம் கொஞ்சம்... வாழ்விலும் சுவடுகள் எங்கே மிஞ்சும்...? எண்ணிப் பாருடா மானிடா... என்னோட நீ பாடடா... ⟪ © தசாவதாரம் ✍ வைரமுத்து ♫ ஹிமேஷ் ரேஷம்மியா 🎤 கமல்ஹாசன், மஹாலக்ஷ்மி ஐயர் @ 2008 ⟫
1. உங்களுடைய நூறாவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்...? - மண்ணில் இதைவிடச் சொர்க்கம் எங்கே...?
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா... ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா... ஓ ஓ ஓ ஓ ஓ... பழமுதிர்சோலை எனக்காகத்தான்... படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்... நான் தான் அதன் ராகம் தாளமும்... கேட்டேன் தினம் காலை மாலையும்... கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்... பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல் - நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்... நூழிலைப் போல் இங்குப் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்... தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, சிந்தை இனித்திட உறவுகள் மேவி, பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே, மண்ணில் இதைவிடச் சொர்க்கம் எங்கே...? நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை... என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை...2 இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க, இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்ந்திட...! பழமுதிர்சோலை எனக்காகத்தான்... ⟪ © வருஷம் 16 ✍ வாலி ♫ இளையராஜா 🎤 K.J.யேசுதாஸ் @ 1989 ⟫
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்...? - அன்பை நாளும் வளர்க்கணும்...
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி... சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா - துணியும் கிடைக்காது தம்பி...2 இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்... கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்... இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு... அத்தனையும் சொல்லிப் போடு... ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ஆடிப் பாடி நடக்கணும், அன்பை நாளும் வளர்க்கணும்... ⟪ © நல்ல நேரம் ✍ வாலி ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫
3. கடைசியாகச் சிரித்தது எப்போது...? எதற்காக...? - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...
அன்பில் வாழும் இதயம் தன்னை - தெய்வம் கண்டால் வணங்கும்... ஆசை இல்லா மனிதர் தம்மை - துன்பம் எங்கே நெருங்கும்...? பொன்னில் இன்பம், புகழில் இன்பம் - என்றே நெஞ்சம் மயங்கும்... பூவை போலச் சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்... சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... ⟪ © உலகம் சுற்றும் வாலிபன் ✍ புலமைபித்தன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1973 ⟫
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன...? - அறிவுக்கு வேலை கொடு... பகுத்தறிவுக்கு வேலை கொடு...
மண்வெட்டி கையில் எடுப்பார் - சில பேர் மற்றவர்க்குக் குழி பறிப்பார்... அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதைத் தானறிய மறந்திருப்பார்...! ஆகாத பழக்கமெல்லாம், மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம், ஆக்கத்தைக் கெடுத்துவிடும்... மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்... பந்தெடுத்து விட்டு எறிந்தால், சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்... இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால், பிறர்க்குத் தீங்கு செய்ய எண்ணம் வருமோ...? அறிவுக்கு வேலை கொடு... பகுத்தறிவுக்கு வேலை கொடு... மூடப் பழக்கத்தை விட்டுவிடு... காலம் மாறுது கருத்தும் மாறுது... நாமும் மாற வேண்டும்... நம்மால் நாடும் மாற வேண்டும் ⟪ © தலைவன் ✍ வாலி ♫ S.M.சுப்பையா நாயுடு 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன...? - உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா...? பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா...? // மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...! உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்... தலை வணங்காமல் நீ வாழலாம்...! ⟪ © வேட்டைக்காரன் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்...? - நிறைவே காணும் மனம் வேண்டும்...
அறிவும் அன்பும் கலந்திடவே... அழவில் வையம் மலர்ந்திடவே...2 நெறியில் மனிதன் வளர்ந்திடவே...2 நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே...2 உலகம் சமநிலை பெற வேண்டும்... உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்... நிறைவே காணும் மனம் வேண்டும்... இறைவா அதை நீ தர வேண்டும்... ⟪ © அகத்தியர் ✍ உளுந்தூர்பேட்டை சண்முகம் ♫ குன்னக்குடி வைத்தியநாதன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1972 ⟫
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்...? - அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்,
பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு, கண் மூடிப் போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன்... என் உறவை நான் மறவேன்... எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும்... என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்2 நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது...⟪ © நினைத்ததை முடிப்பவன் ✍ அ.மருதகாசி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫
8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்...? - உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி...
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் - கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு... காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் - கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு... கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி, குணத்துக்குத் தேவை மனசாட்சி - உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீ தான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே... மனசப் பாத்துக்க நல்லபடி - உன் மனசப் பாத்துக்க நல்லபடி... ⟪ © அருணோதயம் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1971 ⟫
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்...? - நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...
எங்கே வாழ்க்கை தொடங்கும்...? அது எங்கே எவ்விதம் முடியும்...? இதுதான் பாதை இதுதான் பயணம் - என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்... மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை... முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே... தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே... ⟪ © நெஞ்சில் ஓர் ஆலயம் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்...? - அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததைச் சேரு...
ஹே... ஆறு மனமே ஆறு... இங்கே அனைத்தும் அறிந்ததாரு...? அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததைச் சேரு... அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இல்லையம்மாஆஆஆஆ... அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்... தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்... ஆடாத ஜவ்வாது மணம் ஆடிடும் பொம்மி... ஆண்டவனைத் தாலாட்டிடும் இசை கேளடி பொம்மி... என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி... அவன் பாட்டு இல்லாத இடம் எங்கேடி பொம்மி...? முக்கண்ணன் முத்தாகத் தந்த பாட்டுப் படிச்சேன்... பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...! ⟪ © சந்திரமுகி ✍ பா.விஜய் ♫ வித்யா சாகர் 🎤 S.P.பாலசுப்ரமணியம், வைசாலி @ 2005 ⟫
பிடித்து விட்டேனா நண்பர்களே...? நன்றி... வாழ்த்துக்கள்...
1. உங்களுடைய நூறாவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்...? - மண்ணில் இதைவிடச் சொர்க்கம் எங்கே...?
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்...? - அன்பை நாளும் வளர்க்கணும்...
3. கடைசியாகச் சிரித்தது எப்போது...? எதற்காக...? - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன...? - அறிவுக்கு வேலை கொடு... பகுத்தறிவுக்கு வேலை கொடு...
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன...? - உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்...? - நிறைவே காணும் மனம் வேண்டும்...
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்...? - அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்,
8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்...? - உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி...
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்...? - நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்...? - அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததைச் சேரு...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
ஒரு முடிவோடத்தான் இருப்பீங்க போல. வேறு எவரும் செய்ய முடியாததை, செய்ய நினைக்காததை, அத்தனையையும் எழுத்து வடிவத்தில் கொடுத்துக்கிட்டு வர்றீங்க. சூப்பருங்கோ.
பதிலளிநீக்குஇவ்வளவு பாடல் வரிகளை எப்படித்தான் நினைவு வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை. இன்னொரு அப்துல் ஹமீத் நீங்கள். சிறப்பான பதிவு
பதிலளிநீக்குதிண்டுக்கல் காரர்கள் எல்லாம் பாடல்வரிகளைச் சரியாகச் சொல்லுவதில் கில்லாடிகளோ (பொறாமையா இருக்கு) இந்தப் பதிலுக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தையும் எடுத்துத் தொகுத்த உங்களுக்கு “நல்ல மனம் வாழ்க.. நாடுபோற்ற வாழ்க”
நீக்குஅசத்தி விட்டீர்கள் DD! பிரமாதம்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
கேள்விக்கான பதிலை மிகவித்தியாசமான முறையில் பாட்டோடு பகிர்ந்துள்ளீர்கள் அனைத்தும் சிறப்புவாழ்த்துக்கள்
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிறைவே காணும் மனமிருந்தால்
பதிலளிநீக்குஇருக்குமிடமே சொர்க்கமே
அருமையான வரிகள் ஐயா
இது போல் பாட்டுடன் பதில் வழங்க தங்களால் மட்டும்தான் முடியும்
அருமையான பதில்கள் நன்றி
அறிவைத் திறந்து பார்ப்போம் அதில் இல்லாததைச் சேர்ப்போம்
தம 5
பதிலளிநீக்குஎல்லாவற்றுக்கும் பொருத்தமான பாடல்கள்.... அருமை...
பதிலளிநீக்குஹோ! DD! வாவ்!!!! அருமை அருமை அருமை அத்தனைக் கேள்விகளுக்கும் பாட்டில் பதில்கள்! பின்னிட்டீங்க போங்க! மிக மிக மிக ரசித்தோம்!!!!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
இதற்கெனத் தானே - இந்நேரமா -
பதிலளிநீக்குநானும் காத்திருந்தேன்!..
ஆனந்த யாழை மீட்டுகின்றீர்கள்.. அருமை.. அருமை..
கேள்விக்கு பதில்கள் கேட்டால் பாடல்களாலே அருமையாக பதில் தந்துவிட்டுடீர்களே சபாஷ்
பதிலளிநீக்குவித்தியாசமாக பாட்டின் மூலமே
பதிலளிநீக்குசொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
பதிலளிநீக்குசூப்பர்... சூப்பர்...
பதிலளிநீக்குமிகவும் நன்றாக,சிறப்பாக பாடல்கள் மூலம் பதில்கள் தந்தது உங்கள் தனித்தன்மை.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை நீங்களே படம் வரைந்து காட்டி விட்டீர்களே,கேள்விக்கணைகளுக்கு ஹெட் போன் பாட்டு மூலம் பதில் கூறி ஆச்சரியப் படுத்தி விட்டீர்கள் ..அருமை !
பதிலளிநீக்குத ம 9
நான் நினைத்தேன் சூப்பரா ஒரு பதிவு வரும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.அசத்திட்டீங்க பாடல்கள் மூலம். வாழ்த்துக்கள் சகோ ...!
பதிலளிநீக்குகேள்விக்கெல்லாம் பாட்டாலே பதில் சொல்லி அசத்திட்டாரு...(நெனச்ச படி) இன்னும் கேள்வி இருந்தா கேளுங்க என்பது போல இருக்கு (என் கேள்விக்கென்ன பதில்...என் கேள்விக்கென்ன பதில் பாடல் நியாபகம் வந்தது)
பதிலளிநீக்குபாட்டாலே பதிலளிக்கும் உங்கள் பாணி சூப்பர் தனபாலன் சகோ :)
பதிலளிநீக்குவணக்கத்துடன் அண்ணார் அவர்களுக்கு, பாட்டுக்களை எப்படித்தான் பிடிப்பீர்களோ?. தொடர்புடைய பாடல்களை கருத்துட ஒட்டவைத்தது அழகு.
பதிலளிநீக்குபாடல்களுடன் பதில்கள் பலே!
பதிலளிநீக்குமனித குலத்துக்குத் தேவையான அனைத்து கருத்துக்களையும் எளிமையாக உங்கள் பதிவுகளில் பிரதிபலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தனபாலன்!
பதிலளிநீக்குகேள்வி பதில் அருமை
பதிலளிநீக்குமிக மிக அருமை சகோதரரே!
பதிலளிநீக்குஒவ்வொரு கேள்விக்கும் பாடல் வரிகள் உங்களுக்காகவே பதிலாகத்தரப் படைக்கப்பட்டுள்ளது போல இருக்கிறதே!
மிகவே ரசித்தேன்!
பகிர்விற்க்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!
பதிலளிநீக்குகேள்விக்கான பதில்களை பொருத்தமான திரைப்பட பாடல்களோடு தந்திருப்பது தங்களுக்கே உரித்தான சிறப்பு. இரசித்தேன்.வாழ்த்துக்கள்.
//அறிவை திறந்து பாரு அதில் இல்லாததைச் சேரு// ,& பதில் 6
பதிலளிநீக்குஅருமையோ அருமை....பாட்டிலே பதில் தங்கள் பாணி நயம்.நன்றி.
பாட்டிலே பதில் மிகவும் அருமை. நற்குணம் கொண்ட மனிதர் நீங்கள். நன்றி.
பதிலளிநீக்குபத்து கேள்விகளும் அதன் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம்....
ஒரு முறை தான் நீங்கள் எழுதிக் கொடுத்து விட்டீர்கள் .
பல முறைப் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அவசியத்தைப்
புரிந்து கொண்டேன். வெறும் பாடல் வரிகளை மனித உணர்வுகளோடு
அந்தந்த சந்தர்பத்துக்கு தகுந்தாற்போல நடைமுறையில் நம்மை
மாற்றிக் கொள்ள வைக்கும் திறமை மிக்க பதிவு. வித்தியாசமான,
எதார்த்தமான அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு. மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
சொல்லவரும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் வித்தியாசமான முறையில் பதிவிடும் தாங்கள் இம்முறை கேள்விகளுக்கு பொருத்தமான பாடல்களையே பதிலாய் வழங்கியமை சிறப்பு. பாராட்டுகள் தனபாலன்.
பதிலளிநீக்குபாட்டால் அருமையான பதில்.
பதிலளிநீக்குநீயே உனக்கு என்றும் நிகரனவன் என்ற பலே பண்டியா பாடல்தான் நினைவுக்கு வருது.
உங்களுக்கு நிகர் நீங்களே தான் தனபாலன்.
பாடல் பகிர்வு மிக அருமை.
அடடே இப்படி பாட்டிலே பதிலகளா
பதிலளிநீக்குஎதிர்பார்க்கவே இல்லை அண்ணா
உங்களின் ரசனை அற்புதம்
உங்களின் எடுத்தாள்கையும் அற்புதம்... வாழ்த்துக்கள்
தொடர்க
www.malartharu.org
தம. 14
பதிலளிநீக்குwww.malartharu.org
கச்சிதமாகப் பொருந்தும் பாடல் வரிகள்!
பதிலளிநீக்குசூப்பர் இதை விட என்ன சொல்ல முடியும் தங்கள் பகிர்வுக்கு.
பதிலளிநீக்குகேள்விக்கான பதில்களை உங்கள் பாணியிலேயே பாட்டாக பதில் சொன்னவிதம் சிறப்பு! அனைத்து பதில்களும் பாடல்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபாராட்ட வார்த்தைகள் இல்லை.
பதிலளிநீக்குஇந்தப் பதிவைப் படித்தாலே போதும்.மனம் லேசாகிவிடுகிறது. தனபாலன் உங்கள் நல்லமனம் எப்பொழுதும் நல்லதையே காணவேண்டும்.இவ்வளவு அருமையான பாடல்களைக் கேட்டு இனித்த காதுகளுக்கு படிக்கவும் கொடுத்தீர்கள். நன்றி மிக நன்றி.
பதிலளிநீக்குபாட்டாலே பதில் சொன்னார்...
பதிலளிநீக்குபதிலாலே புத்தி சொன்னார்...
இதற்க்கு தான் காத்திருந்தேன்...
இந்த பதில்கள் புதுவிதம்தான்...
(படம்: கரகாட்டக்காரன்)
குறிப்பு-
எனது கோர்வுக்கு மதிப்பளித்து பதிவிட்ட திரு. தி.த. அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
Killergee
இந்த மாதிரி பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும் DD.. அருமை!
பதிலளிநீக்குஎட்டிலும் காணா எழில்விடை கோர்த்திங்கே
பதிலளிநீக்குபாட்டிலே தந்தீர் பயன் !
அடடா அற்புதமான பாட்டுப் பதில்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அருமையான பாடல்களுடன் தொடர் பதிவு அருமை.
பதிலளிநீக்குஅருமை .வாழ்த்துகள்
பதிலளிநீக்குஆஹா பாடலிலேயே பதில்கள்.. சூப்பர்... கவிதையில் பதில் பாடலில் பதில் என... வலையுலகமே கலக்கலாக இருக்கு இத் தொடரால்.
பதிலளிநீக்குதமிழ்ப்பாட்டாலே கேள்விகளுக்குப் பதில் சொன்ன விதம் அருமை.பாராட்டுக்கள்.!
பதிலளிநீக்குஅலசியவை அனைத்தும் அருமையான பாடல் வரிகள்... பதிவுக்கு/பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஓ!! பாட்டாவே பாடிட்டீங்களா...
பதிலளிநீக்குஇதுவரைக்கும் படித்த கேள்வி பதிலில் தன்னம்பிக்கை தத்துவங்களோட மிகச் சிறப்பான பதிவா உங்க பதிவை கூறலாம்.
வாழ்கையை அருமையா அதனிடத்தில் ரசித்து வாழ்கிறீர்கள் என்று தெரிகிறது... இன்னும் நிறைய சொல்லுங்க..
டிடி நானும் தொடர் பதிவு எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஆனால் உங்களைப் போல பாட்டில முடியாதப்பா.
மிக நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
சூப்பர் சூப்பர் ! அத்தனை கேள்விக்கும் பாட்டிலேயே பதில் சொல்லி அசத்திட்டீங்க வலைசித்தரே !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
அனைத்து கேள்விகளுக்கும் பாடல்களின் மூலம் பதிலளித்திருப்பது வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் உள்ளன.
பதிலளிநீக்குஇப்படியொரு பதிலைத் தங்களால்தான் அளிக்கமுடியும். அருமை.
பதிலளிநீக்குஅருமையான பாடல்களால் சொன்ன மறுமொழிகள் பிரமாதம். சகல கலா வல்லுநராக இருக்கீங்க. வாழ்த்துகள். அது சரி, இந்தக் கேள்விகளைக் கேட்டவங்க யாரு? :))))
பதிலளிநீக்குகலக்கல் பதில்கள்.
பதிலளிநீக்குகேள்விகளுக்கு ஏற்ப்ப அத்தனை பாடல்களும் அருமை அண்ணா... பாட்டிலே பல கோடி நெஞ்சை நீங்கள் பிடித்து பல காலம் ஆயிற்றே....
பதிலளிநீக்குபாட்டாலே பதிலிறுத்த உங்கள் பதிவு அருமை! நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅன்புள்ள தனபாலன்
பதிலளிநீக்குவணக்கம். நான் பாக்யா இதழ் தொடர்ந்து அது ஆரம்பித்த காலத்திலிருந்து வாங்கி வருகிறேன். அதற்குக் காரணம் பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதில்தான். எந்தக் கேள்விக்கும் அவர் ஒரு குட்டிக்கதை சொல்வார். மிகமிகப் பொருததமாக இருக்கும். அதைப்படித்தால் மனப்பாரம் குறையும். சுவையாகவும் சுகமாகவும் இருக்கும்.
அதேபோன்றுதான் உங்களின் இந்தப் பதிவும். ஒவ்வொரு கேள்விக்கும் தாங்க்ள் பாடலைப் பதிலாக அளித்திருக்கிறீர்கள். அதுவும் பதில் அளித்திருக்கும் விதமே அருமையாக உள்ளது. பதிலை சொல்லிவிட்டுப் பின் அந்தப் பதிலைக் கொண்டு முடியும் பாடலைப் பதிவிட்டிருக்கிறீர்கள். மேலும் கேள்விக்கான பதில்களாக தாங்கள் அளித்திருக்கும் பாடல்கள் ஏனோதானோவென்று அமையவில்லை. பொறுப்பான பாடல்கள். மிகவும் தெளிவாக அதேசமயம் எளிமையாகவும் பாடல்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
கேள்வியும் பாடலுமாகப் படிக்க மனதுக்கு இதமாக உள்ளது. நன்றி தனபாலன். உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு தளத்தில் வாசிப்போரை இயங்க வைக்கிறது.
உங்கள் வலைப்பதிவு வாழ்வின் நிழல் என்று பாராட்ட விரும்புகிறேன். அல்லது வாழ்வின் உயிர்ப்பு என்றும் குறிப்பிட்டுப்
பாராட்ட விரும்புகிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதுதான் எங்கள் திண்டுக்கல் தனபாலன் என்ற DD - ன் அவர்களின் தனிச்சிறப்பு.. ! அவருடைய ஒவ்வொரு பதிவிலும் இந்த தனிச்சிறப்பை காணலாம்..!
நீக்குவாருங்கள் ஐயா.. உங்களை வரவேற்கிறோம்..
உங்களுடைய வருகைக்கும், தனி பாராட்டுக்கும் நன்றி.. !
பாட்டுக்கு பாட்டெடுத்து நீங்கள் தொடுத்துக் கொடுத்த இந்தப் பாடல்கள் பத்தும் நன்முத்துக்கள்
பதிலளிநீக்குபொருத்தமான பாடல்கள். பிரமாதம்.
பதிலளிநீக்குஎன் வழி தனி வழின்னு சொல்ற மாதிரி பாட்டாலையே எல்லா பதிலையும் சொல்லிட்டீங்க. ரசித்து படித்தேன்
பதிலளிநீக்குஅடடா! வித்தியாசமாகப் பதில் சொல்லி அசத்திட்டீங்க தனபாலன். ரசித்தேன் உங்கள் பதில்களை. முதலாவது பதில்... வெகு அருமை.
பதிலளிநீக்குஆஹா !!! அருமை ..பாடல் வரிகளாலே பத்தி சொல்லி அசத்திட்டீங்க DD சகோ !
பதிலளிநீக்குபதில்கள் ஒவ்வொன்றும் முத்துகள் !!
முத்துக்கு முத்தான
பதிலளிநீக்குபத்துக்குப் பத்தான
கேள்வி - பதில் - அது
கேட்கத் தூண்டும் பாட்டாலே
போட்டுக் காட்டி முழங்குகிறீர்!
பாராட்டுக்கள்!
அன்புள்ள தனபாலன் , முன்பொரு நாள் வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் .ஆனால் சினிமாப் பாடல்களையே கேள்விகளுக்குப் பதிலாகக் கூறும் உங்கள் திறன் அசாத்தியம் குறள் வல்லுனர் என்று மட்டுமல்லாமல் வாழ்க்கையை பொழுது போக்கும் சினிமாப் பாடல்கள் மூலம் புரிய வைக்கும் உங்கள் திறமை மீண்டும் கூறுகிறேன் அசாத்தியம் நெஞ்சு நிறைந்த பாராட்டுக்கள். உங்கள் மெயிலைப் பார்க்க வேண்டுகிறேன் . நன்றி.
பதிலளிநீக்குரொம்பவே ரசிக்க வைத்த பதிவு!.. பொருத்தமான பாடல்களை வழங்கி இருக்கிறீர்கள்!.. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதமிழ் திரைப்படப் பாடல்களாலேயே மிகப்பொருத்தமான பதில்கள். புதிய சிந்தனை. பாராட்டுக்கள் Mr DD Sir.
பதிலளிநீக்குநிஜமாவே பாட்டாலே பல கோடி நெஞ்ச்ங்களப் புடிச்சிட்டீங்கோ.....
பதிலளிநீக்கு"பாட்டுடைத் தலைவன்" போல "பாட்டுவிடைத் தலைவன் DD !"
பதிலளிநீக்குஅஹ்ஹ! ஹ! பாட்டாவே படிச்சுட்டீங்களா!?
பதிலளிநீக்குவணக்கம் DD , பாட்டை படிச்சி பதில் சொல்லிடீங்களே ...நல்ல பாட்டுப் பதில்கள்
பதிலளிநீக்குவித்தியாசமா பதில் சொல்லியிருக்கீங்க.. சில பாடல்களைக் கேட்டதேயில்லை.. அறிவுக்கு வேலை கொடு.. பகுத்தறிவுக்கு வேலை கொடா?!
பதிலளிநீக்குபொருத்தமான பாடல்களைக் கொண்டு எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள்....
பதிலளிநீக்குரசித்தேன் DD.
பாடல் வடிவில் நல்ல பதில்கள் வாழ்த்துக்கள்./
பதிலளிநீக்குபழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்.. அருமையான பாடலை நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி திரு. டிடி அண்ணா.
பதிலளிநீக்குஅனைத்து பதில்களும் அருமை..
பல்லாயிரக் கணக்கான பாடல்கள் இருந்தாலும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரி பாடல்களை recall செய்வது என்பது கடினம் . அந்த வகையில் உங்களின் திறமை பாராட்டத் தக்கதே
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குகேள்வி சுற்றுக்கு பாடல்களை, அதுவும் இனிமையான பாடல்களை பதிலாக தந்த பாவேந்தரே….. அருமை, அருமை ! நான்காம் கேள்விக்கான பதிலை மிகவும் ரசித்தேன் சார் !
பதிலளிநீக்குவழக்கம் போலவே பதிவில் கிராபிக்ஸ் ஜாலம் புரிந்து உள்ளீர்கள் !
த.ம. +1
பத்து கேள்விகளுக்கும் திரைப்பாடல் வரிகளையே பதிலாகக் கொடுத்து - DD வழி தனி வழி என்று அசத்திவிட்டீர்கள்!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்!
அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
இங்கே கிளிக்குக
கேள்விக்கு பாட்டாலே பதிலெடுத்து பத்து முத்து தந்த திதவே.-உங்கள்
பதிலளிநீக்குபதில்களுக்கு தக்கபரிசுகள்தான் வந்த கருத்துரைகள்!