🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நானே தலைவன்...! (பகுதி 14)

வணக்கம் நண்பர்களே... பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம்... தாங்கள் பேசியதை வலையில் படித்ததற்கு... அதுமட்டுமில்லாமல் அனைவரின் கருத்துரைகளும், அவர்களின் பேச்சிற்கேற்ப - பதிவு எழுதி முடித்த பின் சேர்த்த எனது பாடல்களும், கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பதிவை வாசிக்க நீங்களும் இங்கே சொடுக்கிப் பறக்கலாம்...! மேலும் அவர்களின் படைப்புகள் :-


↑இவ்வாறு↑ அசத்தும் போது என்ன செய்யலாம்...? கவிதைகளுக்கு ஏற்றது போல் ஞாபகம் வந்த திரைப்படப் பாடலை கொடுத்துள்ளேன்... கவிதையின் தலைப்புக்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று ரசித்து விட்டு, √ (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவைக் கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சொடுக்கி ரசித்து விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி...
ஆசை
உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே... ஓயாமலே என்னைப் பந்தாடுதே... உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே... நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே... படித்தால் இனித்திடும் புதினம்...! உன்னை நான் மறப்பது கடினம்...! அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு...! வலைக்குள் தவித்திடும் தவிப்பு...! துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் - மேனி சிலிர்க்கும், மிதக்கும், பறக்கும்...! வன குயிலே... குயில் தரும் கவியே... கவி தரும் இசையே... யேயேயே... (படம் : பிரியங்கா)

என் தோட்டத்திலும்
மரங்கள் வளர்த்தேன் !
நிறைவேறியது...
பறவைகள் வளர்க்கும் ஆசை !

கார்மேகம்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...! நாளை என் கீதமே எங்கும் உலாவுமே... நாளை என் கீதமே எங்கும் உலாவுமே... என்றும் விழாவே என் வாழ்விலே...! போகும் பாதை தூரமே - வாழும் காலம் கொஞ்சமே... ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா...!2 இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்2 கேளாய் பூ மனமே...! ஓ... ஓ... ஓ... (படம் : உதய கீதம்)

கதிரவனைக் கைது
செய்யக் கிடைத்த
ஒரே ஒரு 'வாரண்டு'

பதவி
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே; பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே...!2 ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு; அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு...! (படம் : நேற்று இன்று நாளை) பதவி வரும்போது பணிவு வர வேண்டும்; துணிவும் வரவேண்டும் தோழா...! பாதை தவறாமல் பண்பு குறையாமல், பழகி வரவேண்டும் தோழா...! அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் வேதம்... (படம் : தெய்வத்தாய்)

- பயம் கருதாமை
- தன்னலம் எண்ணாமை
வி - விருப்பத்தால் தேர்வு
செய்யப்பட்டவரே - தலைவர்

பகுத்தறிவுள்ளவன்
பட்டம் உள்ளவன்
பண்புடையவன்
பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குபவனால் மட்டுமே
பதவி ஆசையின்றி
நாட்டை ஆள முடியும்.

காற்றைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள்
கடலை மடித்துக் கொள்ளத் தெரிந்தவர்கள்
பூவில் தேனெடுக்கத் தெரிந்தவர்கள்
ஈர்ப்பு விசைக்கு விலகாமல் நின்றவர்கள்
அக்காலத் தலைவர்கள்...!

காற்றைக் காசாக்கத் தெரிந்தவர்கள்
கடலை அழுக்காக்கத் தெரிந்தவர்கள்
பூவை நசுக்கத் தெரிந்தவர்கள்
பணம் ஈர்க்கும் விசையில் சாய்பவர்கள்
இக்காலத் தலைவர்கள்...!

பகலில் நிலா முகத்தில் விழிக்கலாம்
இரவில் வண்ணத் தோரணையில் நனையலாம்
தண்ணீரில் இரயில் விடலாம்
காற்றில் கப்பல் விடலாம்
சாத்தியம் சாத்தியம் -
தன்னலமற்ற தலைவன் கிடைக்குமெனில்...

உருண்டு கொண்டிருக்கும்
உலகத்திற்கு மட்டுமல்ல...
உருவகித்துக் கொண்டிருக்கும்
எனக்கு மட்டுமல்ல...
உருவாக்கிக் கொண்டிருக்கும்
உமக்கு மட்டுமல்ல...
உண்மையைச் சித்தரிக்கும்
சித்தனுக்கு மட்டுமல்ல...
அனைவருக்கும் தேவை -
உண்மையுள்ள தலைவன் !

நட்சத்திர முகம் பூத்து
நம்பிக்கை நாற்று நட்டு
நட்புத் தண்ணீர் பாய்ச்சி
நம்பிக்கையுள்ள தலைவனை
அறுவடை செய்வோம் !
தலைவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு
எலெக்க்ஷன் கமிஷனுக்கு மட்டுமல்ல
ஒவ்வொரு மனுஷனுக்கும் உண்டு
நாடு நமதெனில் தலைவனும் நாமே !

என்(ண்) திசையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்
என் நாட்டை ஆள நல்ல தலைவனை !

உம்மை, எம்மை வழி நடத்துபவர்
சிறந்தவரானால்...
உலகை வழி நடத்துபவர்
சிறந்து விளங்கினால்...
பிரபஞ்சத்தை வழி நடத்துபவர்
சிறந்தவரானால்...
அண்டத்தை, அகிலத்தை
வழி நடத்துபவர்...
பதவி ஆசையில்லா தலைவரானால்...
தெய்வத்தன்மை பொருந்திய அவருக்கு
வெற்றிக் குளம் கீழ்படியும் !

தன்னலமற்ற தலைவனைத்
தேடுவதை விட-தானே தலைவன் என்ற
எண்ணம் வேண்டும்...!
பதவி ஆசையில்லா தலைவனைத்
தேடுவதை விட
பள்ளியில் படிக்கும் "நானே தலைவன்...!"
என்ற எழுச்சி எண்ணம் கொண்டு,
ஒற்றுமையுடன்
நாட்டைச் செழிப்பாக்குவோம்....!

வாழ்க்கை
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே, முள்ளுக்கு என்ன பெருமை...? சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை...? எங்கே நன்மை இருந்த போதும், ஏற்றுக் கொள்ளும் உலகம்...! அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்...! சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா... சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா... வானில் நீந்தும் நிலவில் நாளை, பள்ளிக் கூடம் நடக்கும்; பள்ளிக் கூடம் நடக்கும்...! காற்றில் ஏறி பயணம் செய்ய - பாதை அங்கே இருக்கும்; பாதை அங்கே இருக்கும்...! எங்கும் வாழும் மழலைச் செல்வம்- ஒன்றாய் சேர்ந்து படிக்கும்... இல்லை ஜாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்...! (படம் : உலகம் சுற்றும் வாலிபன்)

முள்ளோடு வாழ்க்கை
என்றாலும்
சிரித்துக்கொண்டே
வாழ்கிறது ரோஜா...!

கலைந்து போவது
உறுதி என்றாலும்
முகம்பார்க்க நினைக்கிறது
நீருக்குள் நிலா...!

உறவுகள்
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா... கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா...? மதித்து வந்தவர் யாரடா...? பணத்தின் மீது தான் பக்தி என்ற பின்... பந்த பாசமே ஏனடா...? பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா...! அண்ணன் தம்பிகள் தானடா...! (படம் : பழநி)

ஆசானுக்கும் மாணவனுக்கும்
உள்ள உறவு புதுக்கவிதை;
பள்ளிக்கும் ஆசிரியருக்கும்
உள்ள உறவு புராணம்;
தாய்க்கும் சேய்க்கும்
உள்ள உறவு தொடர்கதை;
இறைவனுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு விடுகதை;
காதலனுக்கும் காதலிக்கும்
உள்ள உறவும் விடுகதை;

அருவியின் உறவு மலை
அரிசியின் உறவு உலை
மரத்தின் உறவு இலை
சிற்பியின் உறவு கலை
இறைவனின் உறவு சிலை
தொண்டனின் உறவு தலை

இந்த உறவுகளின் பிற உறவுகளோடு
கலக்கலாம். ஆனால் கலைக்க முடியாது...
தாகப்படும் போது தண்ணீரும்
சோகப்படும் போது கண்ணீரும்
கொடுக்கும் உறவே உறவு

மற்றதெல்லாம் வெறும் உறவு

சிறகுகள் முளைத்தால்
உறவுகள் பிறக்கும்...!
உணர்வைப் பகிர்ந்தால்
உறவுகள் சிறக்கும்...!

வெற்றிப் படிகள்
மலையில் பிறந்த நதியால், மக்கள் தாகம் தீர்ந்தது; மரத்தில் பிறந்த கனியால், அவர் பசியும் தணிந்தது2 கொடியில் பிறந்த மலரால், எங்கும் வாசம் தவழ்ந்தது; அன்னை மடியில் பிறந்த உன்னால், என்ன பயன் தான் விளைந்தது...? நான் ஏன் பிறந்தேன்...? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்...? - என்று நாளும் பொழுதும் வாழும் வரையில், நினைத்திடு என் தோழா; நினைத்துச் செயல்படு என் தோழா - உடனே செயல்படு என் தோழா... // பத்துத் திங்கள் சுமந்தாளே, அவள் பெருமைப் படவேண்டும்; உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்; க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌, த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்; உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உல‌க‌ம் அழ‌ வேண்டும்...! (படம் : நான் ஏன் பிறந்தேன்)

மாணாக்கரே !
வாழ்க்கை எனும்
வாசலில் அழிக்க
முடியாத கோலம் தான்
வெற்றி தோல்வி !

வானைவிட்டு பூமிக்கு
இறங்கிவரும் ஒளியால்
நிலவுக்குத்தான் பெருமை !

மலையை விட்டு நதிக்கு
இறங்கிவரும் நீரால்
அருவிக்குத்தான் பெருமை !

இறங்கிப் போவது
அவமானம் அல்ல
-அது
அங்கீகாரத்தின் முதல் படி,
உன் வாழ்வில் உயர-உன்
வழியில் இறங்கிப் போ !

நீ முள்ளாய் இருப்பின்
சிரிப்பென்னும் மலரை
மலரச் செய்-மலரின்
வாசனையில் சில முட்கள்
மறைக்கப்படலாம்.

இரைதேடும் எறும்பு
வலை பின்னும் சிலந்தி
கூடுகட்டும் தேனீ-மண்
வீடு கட்டும் குழந்தை
இவர்களிடம் கேள்
தோல்வியைப் பற்றி...

இவர்கள் கூடச்சொல்வார்கள்
தோல்வியே வெற்றியின்
படிக்கட்டுகள் என்று...

உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சேரட்டும்... நன்றி நண்பர்களே...

முந்தைய "குறளில் குரல்" உட்படப் பல பதிவுகளில், பாடல்களைப் படிக்கச் சுட்டியைச் சொடுக்காமல் கொண்டு செல்லவும் என்று சொல்லி இருப்பேன்... மற்றவர்களின் பதிவுக்கு இணைப்பு (Link) கொடுக்க அனைவருக்கும் தெரியும்... Excel-லில் Macro போல நமது பதிவுக்குள்ளேயே இணைப்பு (Internal Linking) கொடுக்க முடியுமா...? எனும் தேடலின் போது... அட...! தமிழ் தளத்திலேயே உள்ளது... சகோதரி பொன்மலர் அவர்களுக்கு நன்றி... இங்கே சொடுக்கி அறியலாம்... நீண்ட பதிவு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவும்...

மேலே உள்ளே கவிதை தலைப்புகளை இணைத்தேன்... இதற்காகத் தான் இணைத்தேன்... நம்புங்கப்பா...! ஹிஹி... அந்தந்த தலைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கவும்... சிரமம் வேண்டாம்... மீண்டும் படித்த தலைப்பைச் சொடுக்கினால், கீழ் உள்ள "சரி தானே...? :" இடத்திற்கு வந்து விடலாம்...

சரி தானே...? :
உறவுகளின் வாழ்க்கை உட்பட பதவி ஒன்றே ஆசை என்றிருந்தால், வெற்றிப்படிகள் கார்மேகத்தில் மறைந்து விடும் அல்லவா...?


எந்த தலைப்பிலுள்ள கவிதை பிடித்திருக்கிறது ? சொல்லுங்க !

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா...

    தலைப்புக்கு ஏற்றது போல திறைப்பட பாடல்களும்... கவித்துளிகளும் பதிவுக்கு ஒரு மகுடம்...தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள் மத்தியில் உங்களுக்கு நிகர் யாருமில்லை நீங்களே தலைவன் தனபாலன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அண்ணா

    அனைத்தும் சிறப்பு என்றுதான் சொல்ல முடியும்
    என்அண்ணா..வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ஆசை கவிதை பிடித்திருந்தது அண்ணா. மேலும் அதற்க்கு தேர்ந்தெடுக்க பட்ட பாடலும் என் பேவரைட்டு. அப்புறம் நம்பிட்டோம்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பாடல்களுடன் குழந்தைகளின் படைப்புகளை அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள். பொன்மலர் பக்கத்துக்கு இணைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமை!அருமை!அருமை! வேறு என்ன சொல்ல?!!!! இன்றையத் தலைவன், அன்றையத் தலவன், உண்மையானத் தலைவன்-வார்த்தைகள் அருமை!

    தோல்வியே வெற்றிகளுக்குப் படிக்கட்டு (இதற்கு ராபர்ட் ப்ரூஸ் கதை நினைவுக்கு வந்தது), இறங்கிப் போவது அவமானம் அல்ல என்ற வெற்றிப் படிகள் கவைதை மிகவும் பிடித்துப் போனது! இதைப் படித்து அடுத்த தலைமுறையிலாவது ஒரு நல்ல தலைவன் உருவாகுவாரா? உருவாக வேண்டும் என்ற ஓர் ஆதங்கள் எழுகின்றது!!!

    பதிவு செய்வதிலும் டெக்னாலஜியில் கலக்குகின்றீர்கள்! அதைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி! நாங்களும் கற்கின்றோம்! ஏன் என்றால் எங்கள் பதிவு சில சமயம் நீள் பதிவாகின்றது!!

    அருமையான பதிவு!!!! அதைச் சொல்லும் விதத்திலும் மிளிர்கின்றீர்கள் வாழ்த்துக்கள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  7. தலைவன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறி, பதிவுலகின் தலைவன் ஆகிவிட்டீர்கள் நீங்கள்...!

    பதிலளிநீக்கு
  8. எல்லா கவிதைகளுமே அருமை. முதல் கவிதையே மேலும் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கிவிடுகிறது. சிறார்கள் தலைவனைப்பற்றி இந்தளவுக்கு யோசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. பகிர்ந்துகொண்ட பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்து கவிதைகளும் அற்புதம். குறிப்பாக ஆசை மிக மிக அருமை. அதற்கேற்ற திரைப்படப் பாடல்களும் சிறப்பு.
    பொன்மலரின் பதிவை படித்துவிட்டு ஏதோ ஒரு பதிவில் அதை பயன்படுத்தியதாக நினைவு. இது போல் பயனுள்ள தகவல்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வலையுலக யுவான் சுவாங் ஆகிய உங்கள் குறிப்புகள் எங்களுக்கு எப்போதும் பயன் அளிக்கும்

    பதிலளிநீக்கு
  10. அக்காலத் தலைவர்களுக்கும் ,இக்காலத் தலைவர்களுக்கும் உள்ள வேற்றுமையை சுட்டும் விதம் அருமை .தலைப்புகள் அனைத்தையும் சேர்த்து செய்த உங்கள் கருத்து அருமையுளும் அருமை !
    த ம 7

    பதிலளிநீக்கு
  11. தலைவன் நம் தலையின் உச்சியில் தான் இருக்கிறான்

    உணர்ச்சிகளை நெறிப்படுத்தினால் அவனை
    நாம் உணரமுடியும்

    இந்த உலகில் பூமியில் எவர்க்கும் இனி
    அடிமை செய்யோம் என்ற பாரதி வரிகள்
    வெறியாய் ஒவ்வொருவர் மனதிலும் பற்றிக்கொள்ளட்டும்

    எந்த ஒரு பயனும் கருதாது நமக்கு அனைத்தையும்
    நமக்கு அள்ளி அள்ளித் தரும் அந்த பரிபூரணன் ஒருவன்தான் நம் உள்ளங்களில் பதவி வகிக்கத் தகுந்தவன்

    நம்மை சுரண்டி கொழுக்கும் எண்ணம் கொண்ட சுயநல பிண்டங்களை வெறுத்து ஒதுக்குவோம்.

    அவனைத்தான் நம்முடைய தலைவனாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    அகந்தை அனைவரையும் அழிக்கும்
    அன்பு ஒன்றுதான் அனைவரையும் இணைக்கும்.

    நல்லதோர் கருத்துக்களை, நகைச்சுவையுடன்,
    நல்ல எடுத்துக் காட்டுகளுடன் நாள்தோறும்
    தந்து அறிவு மனம் பரப்பும் திண்டுக்கல்லார்
    வாசகர்களின் மனதை விட்டு என்றும் நீங்கார்.

    பதிலளிநீக்கு

  12. “பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா’ என்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் தெய்வத்தாய் அல்லவா? ஆண்டவன் கட்டளை என தவறாக சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

    வழக்கம்போல் திரைப்படப் பாடல்களை அழகாக உங்கள் கருத்தோடு இணைத்து பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு : மாற்றி விட்டேன் ஐயா... நன்றி...

      நீக்கு
  13. கண்ணதாசன் சொன்னது மிகச் சரி
    நாங்கள் உங்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது
    நிறைய இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. முள்ளோடு வாழ்க்கை
    என்றாலும் சிரித்துக்கொண்டே
    வாழ்கிறது ரோஜா...

    மிக அருமை.... வெகுவாய்க்கவர்ந்தது... ரசித்து மகிழ்ந்தேன்...

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு கவிதையும் மிகவும் அருமை ஐயா. அவற்றை இங்கே பகிர்ந்து ஒவ்வொரு இளம் படைப்பாளருக்கும் மென்மேலும் ஊக்கம் அளிக்கும் தங்களது பணி போற்றத் தக்கது.

    பதிலளிநீக்கு
  16. ஆசை தலைப்பிலுள்ள கவிதைதான் என்னைப்பொறுத்தவரை முதல் இடம். அனைத்து கவிதைகளும் நன்றாகத்தான் உள்ளன.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஆசை மேல் ஆசை. வெற்றிப் படிகள் ஏற இலகுவாய்.

    பதிலளிநீக்கு
  18. ஆசையும் கார்மேகமும் அருமையான ஹைக்கூ கவிதைகள்

    பதிலளிநீக்கு
  19. அனைத்துப் பாடல்களும் தொகுப்பும், பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு கவிதையும் தேன் போல இருக்கிறது.... குழந்தைகளின் திறமை பிரம்மிக்க வைக்கிறது..... பகிர்வுக்கு நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  21. எங்கேயோ போய்டீங்க !
    இப்படி ஒரு புதுமையாக ,அருமையான ,கவிதை ,கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பூ தமிழில் இருப்பதாக நான் பார்க்கவில்லை.நீங்கள் கொடுக்கும் விதமே ஒரு சிறப்பு .ஒரு நாள் பற்றாது இந்த கட்டுரையை படிக்க
    நல்ல பதிவு .வாழ்த்துகள் .வளர்க உங்கள் தொண்டு .

    பதிலளிநீக்கு
  22. பதவி என்னும் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. முள்ளில் சிரிக்கும் ரோஜா மனம் கவர்ந்தது..!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  24. பதிவும்.. நிறைந்த கவிதைத் துளிகளும்
    தலைப்பின் பண்பை நிமிர்த்தி நிற்கிறது...
    தலைமைப் பண்புகள் நிறைந்த பதிவு...

    பதிலளிநீக்கு
  25. //என் தோட்டத்திலும் மரங்கள் வளர்த்தேன்... நிறைவேறியது பறவைகள் வளர்க்கும் ஆசை...!//
    ஆஹா... அருமை... மிக மிக அருமை... வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  26. ஆசை முதலிடம் பிடித்தது..என்னவொரு சிந்தனை..பலரும் யோசிக்கும் இரண்டு விசயங்களை அழகாய்க் கவிதையில் இணைத்த விதம் மிக அருமை!
    //உன் வாழ்வில் உயர உன் வழியில் இறங்கிப் போ// மிகவும் கவர்ந்த வரிகள்!
    மற்ற கவிதைகளும் அருமை! பிள்ளைகளுக்கு என் பாராட்டுகள்!
    இணைப்புகளும் நன்று..எப்படி என்று அறிய நீங்கள் கொடுத்துள்ள பதிவைப் படிக்கிறேன், பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  27. நிஜம்மாவே நீங்க தலைவர் தான். மிக யோசித்து ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்ட பதிவுகளைப் பொருத்தமான பாடல்களோடு பதிந்து வருகிறீர்கள். உங்கள் பதிவுகள் என்றென்றைக்குமாய் அனைவருக்கும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும். :))))நினைக்கவே பிரமிப்பாய் இருக்கு.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது தனபாலன்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. உறவுகள் & வெற்றிப் படிகள் இந்த இரு கவிதைகளும் பிடித்திருந்தது சகோ :)

    பதிலளிநீக்கு
  30. பதவி என்பதற்குக் குழந்தைகள் கொடுத்திருக்கும் விளக்கம் வியப்பாக இருந்தது. சின்ன குழந்தைகள் சிந்திக்கும் அளவிற்கு பெரியவர்கள் சிந்திப்பதில்லையே, ஏன்?

    //இறங்கிப் போவது அவமானம் அல்ல - அது அங்கீகாரத்தின் முதல் படி, உ வாழ்வில் உயர, உன் வழியில் இறங்கிப்போ!//

    அர்த்தம் பொதிந்த வரிகள்.

    ஒவ்வொரு பதிவிலும் உங்கள் தொழில் நுட்ப அறிவையும் உயர்த்திக் கொண்டே போகிறீர்கள், வாழ்த்துக்கள். உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் உங்களுக்கே உரித்தான அரிய குணம்.

    எல்லாவற்றிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. முள்ளோடு வாழ்கையென்றாலும்
    சிரித்துக்கொண்டே வாழ்த்துகிறது ரோஜா.
    இன்னும் பல பிடித்தள்ளது.
    அருமையான வரிகள். அனைத்து பிள்ளைகளிற்கும்
    தங்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  32. எழுதியவர்கள் பெயரையும் போட்டால் இன்னம் மகிழ்வார்களே...

    பதிலளிநீக்கு
  33. அருமையான தொகுப்புங்க. குழந்தைகளின் பார்வையில் எவ்வளவு உண்மை தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  34. பல தலைப்புகளில் கவிதைகள். அவை குழந்தைகளால் எழுதப் பட்டிருக்கிறது என்பது சிறப்பு. சாதாரணக் கருத்துக்கலையும் கவர்ந்து இழுக்கும்படியாகத் தொகுத்துக் கொடுப்பது உங்கள் தனித்திறமை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  35. உள்ளம் கவரும் கவிதைகள்.
    கருத்துகளைச் சொன்ன விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  36. அற்புதமான தொகுப்புங்க.. பள்ளிக்குழந்தைகளுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. குழந்தைகளின் படைப்புகளை அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

    அருமையான கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  38. பள்ளிக்குழந்தைகளின் படைப்புக்கள் அற்புதம்! பிஞ்சுகள் மனதில் நல்ல சிந்தனைகள் வளர்வது மகிழ்ச்சி! ஆசை என்னும் முதல் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. சுருக்கமாக சொன்ன அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  39. ஒரு ஒரு பதிவிற்கும் நீங்கள் ரொம்ப மெனக் கெட்டு எழுதுகிறீர்கள் .
    நிறைய லிங்குகள் கொடுத்து ! பிரமிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  40. குழந்தைகளின் திறமையை இவ்வாறு வெளிக்கொணர்வதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். தங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  41. உங்களால் மட்டுமே முடியும் என்பதை
    ஒவ்வொரு பதிவிலும் நீரே 'தல' என்பதினை சொல்லாமல் சொல்லி நிறைவாய் பதிவிடுகிறீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா.
    (ஆமா...தல னு போட்டாதானே யாராவது வம்ப்புக்கு வருவாங்க...)

    பதிலளிநீக்கு
  42. 'வாழ்க்கை' மிக அருமை
    பொன்மலர் பக்கம் பலருக்கு பயன் தரும்.
    எப்படி இவ்வளவையும் தொகுக்க முடிகிறது.
    பதிவு மொத்தத்தில் மிக அருமை

    பதிலளிநீக்கு
  43. பள்ளிச்சிறார்களின் அருமையான தொகுப்பை பகிர்ந்த்துக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  44. எனக்கு ஆசை என்ற கவிதை பிடித்திருக்கிறது.
    சிறந்த தொகுப்பு
    அள்ளித் தாருங்கள்
    உங்கள் தத்துவ முத்தை

    பதிலளிநீக்கு
  45. தலைப்புக்கு ஏற்றது போல திறைப்பட பாடல்களும்... கவித்துளிகளும் பதிவுக்கு ஒரு மகுடம்

    பதிலளிநீக்கு
  46. அய்யா, பதவி அருமை...

    புதிய லிங்க் முயற்சி அருமை

    நன்றி

    பதிலளிநீக்கு
  47. அன்புத்தலைவனுக்கு தொண்டனின் வணக்கம்.
    பள்ளிக் குழந்தைகளின் திறமையை வெளிவுலகத்திற்கு கொண்டு வந்ததுக்கு முதலில் பாராட்டுக்கள்.
    இதில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  48. குழந்தைகளின் படைப்பு தேர்வு செய்த படல்கள் பாடல்கள் அனைத்தும் மனதை கவர்ந்ததது.
    முள்ளோடு வாழ்கையென்றாலும்
    சிரித்துக்கொண்டே வாழ்த்துகிறது ரோஜா அருமை.
    அனைத்தும் அருமை...!
    நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  49. உங்க சிறப்பான பணிக்கு என் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  50. எந்தத் தலைப்பா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனம் தொட்டது. குழந்தைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தேர்ந்தெடுத்த பாடல் வரிகளுடன் சிறப்பான பதிவு. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  51. தெளிவான கருத்துக்கள்.
    சிந்திக்க வைத்திடும் கவிதைகள்.
    ஆகா... பிரமாதம்!!!

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் சகோதரர்
    வழக்கம் போல் கவிதைகளுக்கு இணையான பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. தங்களின் ரசனை வியக்க வைக்கிறது. எனக்கு அனைத்து கவிதைகளும் பிடித்திருந்தாலும் குறிப்பாக ”வாழ்க்கை” கவிதை வெகுவாக கவர்ந்தது. நன்றிகள் சகோதரர்.

    பதிலளிநீக்கு
  53. கவியாழி சரியாகத்தான் சொல்லியிருக்காரு.

    பதிலளிநீக்கு
  54. விதிபல தாண்டும் விவேகங்கள் சேரும்
    சதிநிறை கூட்டம் சரிந்தே - மதியால்
    அதிபதிக ளாகும் அரும்புகள் வாழ்த்தும்
    பதிவுலகி லுன்றன் பதிவு !

    விரும்பும் வழியில் விளைந்திட வேண்டும்
    அரும்பில் வளரும் அறிவு !

    அருமை அருமை பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  55. தாகத்துக்கு தண்ணீரும் சோகத்துக்கு கண்ணீரும் தரும் உறவே உறவு என்ற வரி அருமை.
    தனபாலன் சார், எனக்கொரு சந்தேகம். நீங்கள் ஒரே ஒருவர் தானா? இல்லை ஏதாவது பத்து பதினைந்து பேர் கொண்ட குழு வைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  56. பார்தத்ததும், படித்தேன்... ரசித்தேன்.
    - Killergee

    பதிலளிநீக்கு
  57. இக்காலத் தலைவர்களும்- அக்காலத் தலைவர்களும் என்பது பிடித்தது.
    ஆயினும் எல்லாக் கவிதைகளுமே நன்று.
    இனிய வாழ்த்துகள் அத்தனை பேருக்கும்.
    மன்னிக்கவும் நீண்ட நாட்களாக வராமைக்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.