🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!

வணக்கம் நண்பர்களே... ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், தோல்விகள், வலிகள், அவமானங்கள், துரோகங்கள் - இவற்றின் மொத்த உருவம் துன்பம்... இன்னும் பலபல காரணங்களுக்காகத் தன்னை மாய்த்துக் கொள்வதும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், தன் மனதையும் உடம்பையும், அதனால் மற்றவர்களையும் சிறிது சிறிதாகச் சீரழித்துக் கொள்(ல்)வதும் உண்டு... இதற்கான தீர்வு தான் என்ன...?

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது மாபெரும் பதிவர் திருவிழாவில், ஏதோ உடல் மட்டும் உலாவிக் கொண்டிருந்தது... காரணம் : அன்பின் உயிரான சகோதரியும், உயிருக்கு அன்பான துணைவியும் மருத்துவமனையில்...! மனம் பதறித்தான் போனது... இருந்தாலும் நம் மனம் சஞ்சலப்பட்டு கலக்கமடைந்தால்...? ம்... நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை தான்...

நம்ம திருவள்ளுவரின் (63) இடுக்கணழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களைச் சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை அடர்த்தி படுத்தியும் செய்தும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை கேட்க ஒவ்வொரு குறளுக்குப் பின்னுள்ள இதயத்தை சொடுக்கவும்...
(படம் : புதுப்புது அர்த்தங்கள்) நாள்தோறும் ரசிகன்... பாராட்டும் கலைஞன் -காவல்கள் எனக்கில்லையே... சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு... சிரிக்காத நாளில்லையே... துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும், மக்கள் மனம் போலப் பாடுவேன் நண்பா... என் சோகம் என்னோடு தான்...

பாட்டு பாடுனா விட்டிடுவேனா...? இதோ வந்துட்டேன்... நான் தான் துன்பம்...

வாடா வா ! ஹா... ஹா... இப்படி சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...! இதை விடச் சிறந்த வழி அல்லது ஆற்றல் வேறெதுவுமில்லை... தீதும் நன்றும் பிறர் தர வாரா...! தெரிஞ்சிக்கோ...!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில் (621)

© ராஜபார்ட் ரங்கதுரை கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1973 ⟫

"துன்பம் வரும் வேளையிலே சிரிங்க " என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க...2 பாம்பு வந்து கடிக்கையில், பாழும் உடல் துடிக்கையில், யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு...? இதில் கீழ்ப்புறத்தில் இனிப்பு, மேற்புறத்தில் கசப்பு - பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு - இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...! நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே... நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வரலே... ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ...

ஓஹோ... இப்போ பாரு... வெள்ளம் போல வர்றேன்...!

நீ சுனாமி போல வந்தாலும் சரி... அதற்கெல்லாம் தளராத மனசும் அறிவும் எங்கிட்டே இருக்கு...! நான் நினைச்சாலே நீ தானாக அழிந்து போவாய்...!

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

© என் அண்ணன் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு...? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு...?2 கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு...?2 நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு... ஹேய்ய்ய்...! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா... அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா...2 நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா... உண்டு உண்டு என்று நம்பி காலை எடு... இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு...2 இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து...!2 அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து...!

யம்மாடி...! அவ்வளவு ஊக்கம் உள்ளதா உன் மனசிலே...!!

அட துன்பமே...! நீ எப்படி வந்தாலும் அலட்டிக்க மாட்டேன்...! வலிகளை ஏற்றுக் கொள்... உனக்கே துன்பம் உண்டாக்கி வெல்லும் சக்தி இருக்கு...! அதனாலே ஓடிப் போயிடு...!! இல்லே என்னோட இருந்து சந்தோசப்படு...!!!

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (623)

© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

இருட்டினில் வாழும் இதயங்களே - கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் - என்பது கேள்வி இல்லை... அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் - வாழ்க்கையில் தோல்வியில்லை... வாழ்க்கையில் தோல்வியில்லை... தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை...2 குருடர்கள் கண்ணைத் திறந்து வைப்பேன்...! தனி ஆளானாலும், தலை போனாலும்... தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்...! தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் - சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே - எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை... வார்த்தையில் அடங்கவில்லை...

அப்படியா...? இதற்கெல்லாம் ஓடி விடுவேனோ...? தடங்கல் நிறையக் கொடுத்து வாழ்க்கையையே கரடுமுரடான பாதையா மாத்துறேன்...

ஹேஹேய்... எந்தப் பாதையாக இருந்தாலும், பாரமாக இருந்தாலும், இழுத்துப் போற காளையைப் போல், விடாமுயற்சி உள்ள வல்லவன் நான்...!

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624)

© நாடோடி மன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு 🎤 T.M.சௌந்தரராஜன்,P.பானுமதி @ 1958 ⟫

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்...? // அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி...! பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்...? // தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது - சிந்திச்சு முன்னேற வேணுமடி...! வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ...? // இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது சேரிக்கும் இன்பம் திரும்புமடி - இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி... // நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்...? // நாளை வருவதை எண்ணி எண்ணி அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி...!

அய்யய்யோ...! பயமா இருக்கே...! அழிந்து போய் விடுவேனோ...?

நீ எத்தனை வாட்டி வந்தாலும் சரி... அதற்கெல்லாம் கலங்கித் தளர்ந்து போற ஆள் நான் கிடையாது... பாவம் நீ...! உனக்கே இப்போ புரியுது பாரு...!

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் (625)

© சிகரம் வைரமுத்து S.P.பாலசுப்ரமணியம் 🎤 K.J.யேசுதாஸ் @ 1991 ⟫

கார்காலம் வந்தாலென்ன...? கடும் கோடை வந்தாலென்ன... ? மழை வெள்ளம் போகும் - கரை இரண்டும் வாழும்... காலங்கள் போனாலென்ன...? கோலங்கள் போனாலென்ன...? பொய்யன்பு போகும் - மெய்யன்பு வாழும்...! அன்புக்கு உருவம் இல்லை; பாசத்தில் பருவம் இல்லை... வானோடு முடிவும் இல்லை; வாழ்வோடு விடையும் இல்லை... இன்றென்பது உண்மையே; நம்பிக்கை உங்கள் கையிலே...! அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு... காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு...

உள்ளதைச் சொல்வேன்; சொன்னதைச் செய்வேன்; வேறொன்றும் தெரியாது... உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது...2 // பார்த்த உலகத்தில் பாசத்தைத் தவிர எதுவும் கிடையாது எதுவும் கிடையாது... (படம் : படிக்காத மேதை)

ஓஹோ பாசமா...? நல்லதா போச்சி... மறுபடியும் வர்றேன்...!

தொடரும் நண்பர்களே...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. குறளுக்கேற்ற பாடல்களை சரியாக தேர்வு செய்து வெளியிடும் நேர்த்தியே அழகு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. துன்பத்திற்கே துன்பம் கொடுத்து ஓட வைத்து விட்டு விடாமுயற்சியால் வாழ்வில் வெற்றி பெற்ற சாதனையாளர் நீங்கள்.

    அது போல மற்றவர்களும் உங்கள் இந்த பதிவை படித்தால் கவலை படாமல் கஷ்டம் வரும் போது இடிந்து விடாமல் எதிர்த்து சமாளிக்கும் துணிவு பெறுவார்கள்.
    அருமையான திருக்குறள் அதற்கு பொருத்தமான திரை இசை பாடல்கள் தேர்வு அருமை.
    உங்கள் தங்கையும், மனைவியும் நலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அச்சச்சோ......... சகோவுக்கும் துணைக்கும் என்ன ஆச்சு?

    இப்போது அவர்கள் நலம்தானே?

    பதிலளிநீக்கு
  4. திருக்குறளுக்கு இப்படி சினிமா பாடல்களின் மூலம் விளக்கம் சொல்ல உங்களால் மட்டுமே முடியும் !
    பாப்பா படத்தை க்ளிக்கிப் பார்த்தேன் ,,,செவ்வகம் நீள் வட்டமாகிறது ,இன்பமும் வரும் ,துன்பமும் வரும் வாழ்க்கையும் அப்படித்தான்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா ?
    கடைசி மாஜிக் படத்தையும் ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அய்யா, குறளுக்கேற்ற பாடல்கள் யாரும் செய்திடாத புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா. தங்களோடு பயணம் செய்யும் பாக்கியம் பெற்றேன். என்றேன்றும் மறவேன்.உங்கள் தங்கையும், மனைவியும் விரைவில் முழுவதும் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். துன்பத்தைத் தாங்கும் தங்கள் குணம் வியக்கத் தான் வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் ஒவ்வொரு பதிவர்களின் பதிவுகளையும் படித்து கருத்து இடும்போது அவர்கள் அவ்வளவு மகிழ்ந்து இருப்பார்கள்..... அவர்களை மகிழ்வித்து, மனதினுள் சில நேரங்களில் வேதனையை வைத்திருந்தும்.... அந்த சிரிப்பு எப்போதும் இருந்தது, இருக்க வேண்டும்.

    உங்கள் தங்கையும், துணைவியும் மீண்டும் நல்ல உடல் நலம் பெற பிராத்திக்கிறேன். இன்றைய பதிவு இதயம் தொட்டது.....

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு அருமையான குறள் 623. இதனை மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் பல இடங்களில் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளார்.
    ''உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது'' உண்மைதான் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
    சிரிக்காத நாளில்லையே....

    அருமையான பாடல்வரிகள் ....

    பதிலளிநீக்கு
  9. தற்போது எப்படி இருக்கின்றனர் ?
    நலமறிய ஆவல்...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் உயிர் தங்கையும், அன்பு மனைவியும் நலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் உடல் நலம் பெற வாழ்த்துக்கள் & பிரார்த்தனைகள்


    அந்த நேரத்தில்தான் நான் உங்களுக்கு போன் செய்தேன் ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. இப்போதுதான் காரணம் புரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் மனைவியும் தங்கையும் பூரண உடல்நலம் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறேன். துன்பத்திலும் மன தைரியத்துடன் இருக்கச் சொல்லும் பதிவு அருமை. அருமையான திருக்குறளோடு ஒத்துப்போகும் பாடல்கள்! இந்தப் பதிவு இப்பொழுது எனக்கும் தேவையானதாகத் தான் இருக்கு. நன்றி திரு.தனபாலன்!

    பதிலளிநீக்கு
  12. ஆமாம் நண்பரே துன்பங்களை மறந்துவிடவேண்டும்..

    அருமையான குரல்கள், சரியான பாடல் தேர்வு...

    வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  13. வாழ்க்கையே அலை போல
    நாம் எல்லாம் அதன் மேலே
    so...
    dont worry
    be happy
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. தங்கையும் மனைவியும் இப்பொழுது நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் .திடமான நெஞ்சமே காரிய சித்திக்கு உதவும் .

    பதிலளிநீக்கு
  15. படமும் உள்ளத்தை உருக்கும் கருத்தும் நெகிழவைத்தது

    பதிலளிநீக்கு
  16. உங்கள் தங்கையும் மனைவியும் பூரண நலம் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். எல்லோருக்காவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். துன்பத்திலும் தைரியத்துடன் இருக்கச் சொல்லும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  17. வரும் துன்பங்களை கண்டு களங்காமலும்... வந்த துண்பங்களை எதிர் கொள்ளும் மனபக்கவமும் வந்து விட்டால்....

    அவருடைய வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சிதான்....

    நல்லது...

    பதிலளிநீக்கு
  18. உங்கள் சகோதரியும், துணைவியும் நலம் அடைய பிரார்த்திக்கிறேன். துன்பம் பற்றிய கருத்துக்கள், தீர்வுகள் அருமை

    பதிலளிநீக்கு
  19. சிறு சோதனை அவ்வளவே
    நிச்சயம் கூடிய விரைவில் பூரண
    நலமடைந்து விடுவார்கள்
    வாட்டமுற்றோருக்கு தெம்பளிக்கும்
    அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  20. ஒரு சிறு குறை.. தங்களின் முழுமையான நிலைப்பாட்டை தெரிவிக்கவே இல்லையே...!

    துன்பத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இறுதிவரைக்கும் தங்களுடைய சகோதரிக்கும் துணைவியாருக்கும் என்ன நிகழ்ந்தது என்பதை தெரிவிக்காமலே விட்டுவிட்டீர்களே..

    அதுதான் வருத்தமாக உள்ளது.. எங்களுக்கும் மனசு கிடந்து அடிச்சுக்குது ஐயா.. தற்பொழுது இருவரும் நலம்தானே.. ?!

    பதிலளிநீக்கு
  21. குறள்கள் பாடல்கள் சொன்ன விஷயம் எல்லாமே அருமை.

    சிரிச்சுக்கிட்டே படித்தேன். ;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. புன்னகை புரியும் குழந்தைப்படம் அழகோ அழகு.

    படத்தேர்வுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  23. எனக்கும் பதிவர் விழாவில் நீங்கள் உங்கள் துணைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று சொன்னபோது மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.
    ஆனால் வரும் துன்பங்களைக் கண்டு கலங்கி நிற்காமல் மேலே ஆக வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தி, கவலையில் மூழ்கிவிடாத உங்கள் பண்பு மிகவும் போற்றத்தக்கது.
    உங்கள் அபிமானிகளான எங்களின் பிரார்த்தனைகள் என்றென்றும் உங்களுடன் இருக்கும். உங்களைப் பார்த்து நாங்களும் நிறைய கற்றுக் கொள்ளுகிறோம்.
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. குறள் பாடல் ஒப்பீடு தங்களிற்கு நிகர் தாங்களே.
    தங்கையும் துணைவியும் நலமடைந்திருப்பார்கள்.
    மேலும் உரமாக வாழ இறையருள் நிறையட்டும்.
    பதிவிற்கு இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  25. அருமை எனச் சொன்னால் போதாது இந்தப் பதிவை!

    துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் வாழ்க்கையில்
    முன்னேற நீங்கள் ஓர் உதாரணம்..
    உங்களின் சுமைகளை ஒரு குடும்பத்தலைவனாய்த்
    தாங்கும் அந்த மனோபாவத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்தான்...
    ஆனாலும் துன்பத்தைத் தாங்கும் மனோபாவம் ஆண்களுக்கும்
    பெண்களுக்கும் வித்தியாசப் படுமோ...

    காண்பித்த குறள்களும் பாடல்வரிகளும் மிகச் சிறப்பு!
    உங்கள் துணைவியும் சகோதரியும் நலம்பெற மனதார வேண்டுகிறேன்!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அய்யா,
    தங்களது ஆக்கம் எப்பொழுதும் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதனை ஆக்குவதற்கு நீங்கள் கை கொள்ளும் திறன் போற்றுதற்குரியது,
    அன்பான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. ellaam sugamaagum endru eppodhum ninaaithaal podhume!! nallavarkku nallathu thaan nadakkum nanbare.. don't worry be happii!!

    பதிலளிநீக்கு
  28. அருமையான,சிந்திக்க வைத்த பதிவு. பொருத்தமான குறள்,பாடல் தேர்வுகள் செய்து எழுத்தியிருக்கிறீங்க அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம் பெரிது.
    உங்க,மனைவி,சகோதரி பூரணநலம் பெற என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  29. இடுக்கண் வந்தும் தீரத்துடன்
    இருக்கும் தனபாலன் ஒரு அன்பு மயமான நல்லவர். அதனால் துன்பம் அணுகாமல் இறைவன் காப்பார்.

    பதிலளிநீக்கு
  30. ரஞ்சனி நாராயணன் சொல்வதை வழிமொழிகிறேன். பதிவு வழக்கம்போல அருமை. சிகரம் பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  31. இன்றைய பதிவைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். 'நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்' என்ற வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் இருவரும் இப்போது நலமா? எல்லாம் வல்ல அரவிந்த அன்னை அவரகளுக்கு நன்மை செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  32. சில காலமாக காணவில்லையே என்று நினைத்தேன். இப்போது காரணம் புரிந்தது. தங்களது துணைவியாரின் நலனுக்கும், சகோதரியின் நலனுக்கும் மற்றும் அனைவரின் நலனுக்கும் எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  33. "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க!
    சொல்லிவைத்தார் வள்ளுவர் சரிங்க!
    பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
    யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு?"- கவியரசர் கண்ணதாசன்


    //சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
    தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே//

    பிறந்துவிட்டேன். எல்லாம் எமக்கே ...எனப் போய்க்கொண்டே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. //ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
    அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாவ
    மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
    வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
    கோவேந்த ருழுதண்ட கடமை கேட்கக்
    குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
    பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
    பாவிமகள் படுந்து யரம் பார்க்கொணாதே. (விவேக சிந்தாமணி 7-7 )//

    இதை விடவா?

    பதிலளிநீக்கு
  35. எப்போதும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றறியேன் பராபரமே

    பதிலளிநீக்கு
  36. கடுமையான முயற்சியின் கீழ் தரும் உங்களின் ஒவ்வொரு படைப்பையும் அருமை !

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  37. உங்கள் சகோதரியும், துணைவியாரும் நலமடைய பிரார்த்திக்கிறேன்..!! வெகுவிரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.. கவலைப்படாதீர்கள்..!!

    பதிலளிநீக்கு
  38. துன்பத்தை நினைத்து துவண்டுவிடாமல் இருக்க மனவலிமை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் இந்த பதிவு படிப்பவர்க்கு அதை கொடுக்கும் !

    பதிலளிநீக்கு
  39. அண்ணே!
    முதலில் வீட்டில் உள்ள சொந்தங்கள் நலமாக இருக்கிறாங்களா...!?
    அவர்களிடம் எனது விசாரிப்பை சொல்லுங்கள்.
    நலம் பெறுவார்கள்!

    நல்ல கருத்துள்ளபகிர்வு...
    எனக்கு பாரம் குறைந்தது...
    நன்றி சகோ..!

    பதிலளிநீக்கு
  40. உதடு சிரித்தாலும் உள்ளம் சிரிக்குமா ? கடினம் தான்.

    பதிலளிநீக்கு
  41. இதெல்லாம் சினிமா பாடல்களா?

    பக்கம் வந்தா பட்டுன்னு விரியும் டெக்குனாலஜி சூப்பர்.

    பதிலளிநீக்கு
  42. உண்மையில் உங்களின் இன்றைய பதிவு என்னைக் கவலைக்கொள்ள வைத்தது தனபாலன் அண்ணா.

    உங்களின் மனைவியும் தங்கையும் குணமடைய வேண்டுகிறேன்.

    கவலைக்காக வள்ளுவர் சொன்னது எல்லாமே அந்த நேரத்திற்கான ஆறுதல் மொழிகள்கள் தான். அக்கருத்துக்கள் உங்களையும் ஆறுதல் அடைய வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  43. அலைபேசி மூலமாகவே உங்கள் தளத்தை பார்ப்பதால் தமிழில் கருத்து பதிய முடியவில்லை!

    நீங்கள் அழைக்கும் முன்பே பதிவை படித்து விட்டேன்! அருமையாக இருந்தது! மிக்க நன்றி!

    இது போல இன்னும் நிறைய பகிருங்கள்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  44. மனைவியும் சகோதரியும் நலம்பெற பிரார்த்திக்கிறேன் சகோ..

    பதிலளிநீக்கு
  45. குறளும் பாடல்களும் நம்மை நாமே தேற்றிக் கொள்ள உதவலாம் கடைசியில் THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED..இதுவே நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம்
    அண்ணா

    பதிவின் மூலம் உங்கள் வாழ்க்கையில் நடந்த துன்பங்களை நினைவு படுத்தி அதற்கு ஏற்றது போல குறள்பாக்களும் பதிவுக்கு ஒரு மகுடந்தான் ...பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்களின் மனைவி மற்றும் சகோதரி ஆகிய இருவரும் பூரண குமடைய இறைவனை பிராத்திக்கிறேன்....அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  47. பதிவர் சந்திப்பில் கொஞ்சம் பதட்டமாகத்தான் தெரிந்தீர்கள்! குறளும், அதற்கேற்ற உங்களின் சிம்பிளான விளக்கமும் பொருத்தமான பாடல் தேர்வும் அருமை! வாழ்த்துக்கள்! தங்கள் சகோதரியும் துணைவியும் நலமடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  48. சிறப்பான தொகுப்பு. நல்ல பதிவுக்கு நல்வாழ்த்துகள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  49. இப்படி விலாவாரியா பதிவையும் போட்டு எல்லோருடைய தளங்களஉக்கும் போய் கருத்துரையும் எப்படி இடமுடிகிறது உங்களால்??? ஆச்சர்யமாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  50. துன்பத்தைக் கண்டு நாம் பயப்படக் கூடாது; அழக் கூடாது.
    சிரித்துக் கொண்டே எதிர்நோக்கவேண்டும் - இந்த துணிச்சல்
    தரும் கருத்தினை பல நல்ல மேற்கோள் பாடல்களுடன்
    தந்த பாங்கு, உற்சாகம் தரவல்லது. நன்றி!

    பதிலளிநீக்கு
  51. தங்கள் சகோதரியும் தங்கள் துணைவியாரும் தற்போது நலமாயிருப்பார்களென்றெண்ணுகிறேன். அவர்கள்தம் பரிபூரண
    நல்சுகத்திற்காக எனது பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
  52. அருமையான பாடல்கள் மூலம் ஆசுவாசப்படுத்த முடியும் துன்பத்தை என்பதை அழகாய் செல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  53. ஹா..ஹா..ஹா... அழகாகச் சொல்லிட்டீங்க:) அதானே.. எத்துன்பம் வரினும் எங்கிட்டயேவா?:) எனக் கேட்டுக் கொண்டே சிரிக்கோணும்:)).. ஹையோ முருகா சொல்வது சுலபம்:) ஆனா அப்படி ஒரு நிலை வரும்போது.. கொஞ்சம் கஸ்டம்தான்ன்.. “இதுவும் கடந்து போகும் “ என நினைச்சிடோணும்.

    பதிலளிநீக்கு
  54. இன்று ஒரு துன்பம் வரும்போது அழுகிறோம், ஆனா ஒரு மாதமானபின் சிரிக்கிறோம்ம்.. ஆனா இதே சிரிப்பை அத்துன்பம் நேரும்போது ஏன் சிரித்து ஏற்றுக் கொள்ள முடிவதில்லை?.. இதுதான் மனித மனம்.

    துன்பம் வரும்போது சிரிங்க.. ஹா..ஹா..ஹா...

    பதிலளிநீக்கு
  55. உங்கள்.. அன்பான உயிர்களிரண்டும்... என்றும் உங்களோடு அன்பாக நலமாக சேர்ந்து இருக்க இறைவன் அருள் புரிவார்ர்...

    பதிலளிநீக்கு
  56. உண்மையில் சிறந்த கருத்துக்கள் .எழுத்தில் மட்டுமல்ல செயலிலும் உங்களின் தன்னம்பிக்கை தெரிகிறது .நன்மையே எப்போதும் நிகழட்டும்.நன்றி

    பதிலளிநீக்கு
  57. குட்டிப்பெண் உள்ள ஃப்ரேம், மாறுவது அழகாக உள்ளது. குறள்களும் அதற்கேற்றார்போல் வருகின்ற சினிமா பாடல்களையும் தெரிவு செய்திருப்பது நன்றாக உள்ளது.

    உயிருக்குயிரான உறவுகள் மருத்துவமனையில் இருக்கும்போது உடனிருந்து கவனித்திருந்தால், பிறகு இதுமாதிரியான மன உலைச்சலைத் தவிர்த்திருக்கலாமே ! இருவரும் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  58. இடையூறுகள் ஏதுமின்றி
    நிறையின்பம் பெருகிட என் பிரார்த்தனைகள் நண்பரே...
    ==
    அருமையான சிந்திக்கவைக்கும் ஆக்கம்...

    பதிலளிநீக்கு
  59. உங்கள் தனிப்பட்ட வாழ்வில் உள்ள சோகங்கள் ஏற்கனவே தெரியும். அதையெலாம் மனத்துக்குள் வைத்து பூட்டிவிட்டு முகத்தில் புன்னகையோடு உலாவரும் உங்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்... அனைத்து பிரச்சனைகளிலிருந்து மொத்தமாக விடுபட வேண்டுகிறோம். த.ம -20

    பதிலளிநீக்கு
  60. தங்களின் சகோதரியும், மனைவியும் பூரண நலம் பெற வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  61. அன்பின் தனபாலன்

    அருமையான பதிவு - இடுக்கண் அழியாமை அதிகாரம் - தேர்ந்தெடுத்த குறளமுதம் - குறளும் விளக்கமும் நன்று

    சகோதரியும் துணைவியும் பூரண நலமடைந்திருப்பார்கள் என நம்புகிறேன் - பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  62. என்ன ஆச்சு அவங்களுங்க...இப்பொழுது எப்படி இருக்கின்றிங்க...நலமாக இருக்க வேண்டி கொள்கிறேன்.

    மிகவும் அருமையான பதிவு...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

    பதிலளிநீக்கு
  63. துன்பங்களைக் கண்டு துவண்டுவிடக்கூடாது என்பதை தங்களை உதாரணமாக கொண்டு நாங்க புரிந்து கொள்ளும் வகையில் பகிர்ந்திருக்கிங்க.

    வீட்டில் இப்ப எப்படி இருக்காங்க. அனைவரும் கேட்பதே உங்களுக்கு ஒரு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காகவே கேட்காமல் இருந்தேன். (போனில் அழைத்து)

    பதிலளிநீக்கு
  64. தாத்தா வள்ளுவன் தனபாலன் ப்ளாகில் தினந்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
  65. என்ன ஆச்சு அவங்களுக்கு,இப்போ எப்படி இருக்காங்க,நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்..

    குறளுக்கேற்ற பாடல் வரிகளும்,விளக்கமும் சூப்பர்ர் சகோ!!

    பதிலளிநீக்கு
  66. துன்பத்தை எதிர்கொள்ளும் திடமான மனத்துக்கு எளிய முறையில் உபாயம் சொன்ன சிறப்பான பகிர்வு. குறள் மூலம் சுட்டியமை அழகு. பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  67. தற்போது இருவரும் நலமுடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். எங்கள் ப்ரார்த்தனைகளும் இணைந்திருக்கும்.

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  68. மிக அருமையான, ஊக்கமூட்டும் பதிவு!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!. இறையருளால், தங்கள் சகோதரியும், துணைவியும் நலமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் அவர்கள் பூரண நலம் பெற்று, நல்வாழ்வு வாழ என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  69. துன்பத்தின் தீர்வு தேடி
    தொல்தமிழ் குறளை மேய்ந்து
    இன்பத்தை எம்முள் சுரக்கும்
    இயல்பான வழியை சொன்னீர்...!

    அர்த்தமுள்ள பதிவு கண்டு
    அடிமனம் மலரக் கண்டேன்
    சொற்பதம் எல்லாம் அருமை
    சொக்குதே ஆன்மா எல்லாம்..!

    மறையது காட்டும் வாழ்வில்
    மனமது கொள்ளும் சலனம்
    இறையடி சேரும் மட்டும்
    இதுவும் கடந்துதான் செல்லும்...!


    அவசியமான பதிவு சார்
    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  70. அன்புள்ள தனபாலன்.

    வணக்கம்.

    எத்தகைய மனோதிடமும் துன்பங்களைத் துர்ர்த்துவிடும். வள்ளுவம் கேட்கவேண்டுமா? உங்கள் உயிருக்குயிரான சகோதரியும் துணைவியாரும் ஒரு குறையுமிலலாமல் வளமோடு இருப்பார்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  71. நண்பா தங்கள் மனோதிடத்தை நினைத்து நெகிழ்கிறேன்...சோதனைகள் விரைவில் கடந்து விட எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக...

    பதிலளிநீக்கு
  72. குறளும் அதற்கான பாடல்களும் அருமை...

    இப்பொழுது இருவரும் எப்படி இருக்கிறார்கள்...

    உடம்பை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  73. ஒரே நேரத்தில் உங்கள் மனைவிக்கும் சகோதரிக்கும் உடல் நலக்குறைவு என்பது உங்களுக்கு சோதனையான நேரம் எனத் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் தைரியத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அவர்கள் இருவரும் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


    பதிலளிநீக்கு
  74. சற்று மனது தளர்ந்து போய் இருந்த சமயம் உங்கள் இந்த இடுகை படித்தேன். 'பூஸ்ட்' குடித்தது போல இருந்தது. நன்றி தனபாலன். :-) இன்று மீண்டும் வந்து படித்தேன். வழக்கம் போல அருமை.

    உங்கள் உறவுகள் நலமாக இருக்க என் அன்பான பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  75. சுவாதியும்கவிதையும்சனி, 12 அக்டோபர், 2013 அன்று 9:59:00 AM IST

    ஒரு வழியாக கண்டுபிடித்து எழுதி விட்டேன் எனக்கு ஜோரா கை தட்டுங்க.ரொம்ப நன்றி சார். திருப்பியும் தயவு செய்து புதுக்கோட்டை வாங்க

    பதிலளிநீக்கு
  76. பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..நன்றி

    பதிலளிநீக்கு
  77. உறவுகளில் யாராவது ஒருவருக்கு துன்பவம் என்றாலே நாம் துவண்டு விடுவோம். இதில் மனைவி மற்றும் தங்கை இருவருக்குமே உடல் நிலை சரியில்லை என்றால் கேட்கவே வேண்டாம். மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிவிடுவோம். 'இதுவும் கடந்து போகும்' என்ற சொல்லே நம்மை பல துன்பங்களிலும் துவண்டு விடாமல் செய்கிறது.

    //சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!//
    நல்லதொரு டானிக் வார்த்தை!

    பதிலளிநீக்கு
  78. துன்பத்திலும் சிரிக்க முடியும் என்பதை
    அற்புதமாக குறளிலும் பாடல்களிலும் உதாரணம் காட்டி அருமையாகச் சொன்னீர்கள்
    உங்கள் துணைவியார் நலம் என்றும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  79. பாட்டு என்றால் பத்தும் பறந்து போகும் எமக்கு.
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கத் தானே செய்யும்.

    பதிலளிநீக்கு
  80. அட அருமை. கலக்கிட்டீங்க. உங்க பதிவுகளைப் படிச்சாலே மனசுக்குள்ள ஒரு உற்சாகம் பிறக்குது. உங்கள் மக்களுக்கேற்ற எளிமையான மொழி நடையும் கருத்துக்களை எடுத்துக் கூறும் முறையும் அருமை. அடுத்த பகுதியைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  81. புதுப்புது அர்த்தங்கள் பாடல் அடிக்கடி நானும் எனக்குள்ளே பாடிக்கொள்வது உண்டு... உண்மைதான் புன்னகை ஒன்றே துன்பத்தை எதிர்கொள்ளும் வழி...

    பதிலளிநீக்கு
  82. சகோதரியும், மனைவியும் இப்போது நலமுடன் இருக்கிறார்களா? துன்பத்தைக் கடக்க உதவும் குறட்பாக்களும், பொருத்தமான பாடல்களும் மிகவும் அருமை. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  83. அன்பின் திரு தனபாலன்,

    தங்கள் மனைவியும், சகோதரியும் விரைவில் பூரண குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். உள்ளம் நெகிழச்செய்த பதிவு.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  84. இதுவும் கடந்து போகும்.
    எதுவும் கடந்தே போய்விடும்.
    மீள வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  85. நீ சுனாமி போல வந்தாலும் சரி... அதற்கெல்லாம் தளராத மனசும் அறிவும் எங்கிட்டே இருக்கு...! நான் நினைச்சாலே நீ தானாக அழிந்து போவாய்...!!

    அழகான விளக்கம்,அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.