🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...!

வணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்கும் உதவும் சிலவற்றை முந்தைய பதிவில் : அதான் எனக்குத் தெரியுமே - பூரி மசால்...! படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... மேலும்...


நண்பர்களே சிறு வேண்டுகோள் : கீழே உள்ள Play button-னை சொடுக்கவும். ஒருமுறை அழுத்தினால், பதிவை வாசிக்க முடியாதென்பதால்... Ω இருமுறை சொடுக்கவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் Load ஆகிவிடும்.


தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் வலைப்பூ வழிகாட்டுதல் பகிர்வு ஒன்றில் 'Post Settings' விளக்கியதில் Labels, Schedule, Permalink, அடுத்து Location ↔ Options இடையில் Search Description பற்றிச் சொல்லவில்லையே என்றேன். அது போல் எதுவுமே இல்லையே என்றார். நீங்கள் பதிவு எழுதும் வலது பக்கத்தில் உள்ளதா...? கீழே : (விளக்கப்படம்) ஏன்...? எப்படி...? எதற்கு...? :-

உங்களின் பிளாக்கர் (Gmail)Account-ல் நுழைந்து கொள்ளவும். பலருக்குப் பல தளங்கள் இருக்கலாம். அதில் மாற்ற வேண்டிய தளத்தைத் தேர்வு செய்து கொள்ளவும். கவனிக்க Δ = க்ளிக் (Click)

1st : 1. Δ Settings »» 2. Δ Search preferences »» 3. (Meta Tags என்று இருக்கும்) Δ edit »» 4. Enable search description? → 'yes' என்பதை select செய்யவும். அங்கே உள்ள கட்டத்தில் உங்களின் தளத்திற்கான சிறு குறிப்பை 150 எழுத்துக்களுக்கு மிகாமல் இடவும். பிறகு »» 5. Δ save changes எனது தளத்திற்கு வாழ்வியல் வழிமுறைகள் மற்றும் வாழ்வதற்கான நெறிமுறைகள் என்று கொடுத்துள்ளேன். இப்போது கொடுத்த குறிப்பை இணையத்தில் தேடினால் இந்த தளம் வரலாம். இதோ இங்கே Δ செய்து பார்க்கவும். விளக்கத்திற்குக் கீழே உள்ள படம் 2nd : இப்போது நீங்கள் பதிவு எழுதும் பக்கத்தில் மேலே உள்ளபடத்தில் உள்ளது போல் Search Description (SD) வந்திருக்கும். முந்தைய பதிவோ அல்லது புதிய பதிவை எழுதி முடித்த பின் SD-யை Δ செய்து எழுதும் பதிவைப் பற்றிய சிறு விளக்கம் (150 எழுத்துக்களுக்கு மிகாமல்) அல்லது தலைப்பையே எழுதி »» Δ Done !

இதோ விளக்கப்படம். "மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன?" என்று எனது முந்தைய பதிவைச் சோதனைக்காக இணையத்தில் தேடிய போது...! இனிய நண்பர் எனது தளத்தில் உள்ள பல பதிவுகளை அப்படியே தலைப்பு உட்பட (https://avinashikidsworld.blogspot.com/) அவர் தளத்தில் பார்த்தேன். நோகாமல் நோம்பு கும்பிடுவது? என்றொரு அவரது பதிவைப் பார்த்தவுடன் சிப்பு...சிப்பு வந்து விட்டது. email-யுடன் அவரது Profile-நல்ல பதிவர்...! "நன்றி அல்லது எனது தள இணைப்பைக் கொடுக்கவும்" என்று ஒரு தகவல் அனுப்பினேன். சிறிது நாட்கள் கழித்து அவ்வாறு செய்து விட்டதாகத் தகவல்...! இப்போது எனது பதிவில் உள்ள சிலவற்றை மட்டும் Copy and Paste (C&P) செய்கிறார்... தானாகத் திருந்தினால் தான் உண்டு !

நண்பர்களே... நமக்கு ஏற்படும் அனுபவங்களின் மூலம் சில விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை பகிர்வுகள், சிறப்பான கட்டுரைகள், கதைகள், படங்கள், கவிதைகளை C&P தளத்தில் பார்க்கும் போது மனம் சஞ்சலப்படும்... C&P செய்யும் அன்பு உள்ளங்களே... முடிவில் நன்றி என்று சொல்லி அந்தந்த தளத்தின் இணைப்பையோ + பதிவரின் பெயரோடு கொடுத்தால், அதை விட அவர்களுக்கு மகிழ்ச்சி ஏது..? மற்றபடி இந்த SD-யின் பயன்கள் : (1) C&P (2) நமது இணையத் தளத்தை அனைத்து தேடுபொறிகளிலும் (Browser) எளிதாகத் தேடி முதலில் வருவதற்கும், (3) கதை, கட்டுரை, செய்தி அல்லது மற்றவை, ஏற்கனவே இணையத்தில் உள்ளதா என்று அறிந்து, அதற்கேற்ப பகிர்வுகளைப் பதிவிடவும் உதவும். உங்கள் பதிவில் முக்கியமான வரியைக் கூட இணையத்தில் தேடலாம்.

இப்போது SD-ல் எந்த வரியைக் கொடுக்க வேண்டும் என்பது, உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... எப்படியோ... அவினாசியில் ஒரு நண்பர் கிடைத்து விட்டார்... அதுவரையில் சந்தோசம்...! குடிகாரர்களுக்கு ஒரே மருந்தான "தானாகத் திருந்தினால் தான் உண்டு" இன்று முதல் இதற்கும் மந்திரச் சொல்லாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சரி தானே நண்பர்களே...?

1. Meta பற்றி விக்கிப்பீடியாவில் அறிய : இங்கே Δ
2. ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா? : இங்கே Δ
3. வாசகர்களை அதிகரிக்க Meta Tags : இங்கே Δ

நண்பர் 'தமிழ்வாசி 'இல்லையே' என்றதால் தான் இந்த 'தேடல்'... தெரிந்ததைக் கூறி உள்ளேன்... அவருக்கு நன்றி... இதோ meta tags - தினம் தினம் மனதில் நம்மை அறிந்தோ அறியாமலோ பலவற்றைத் திருடுகிறோம்... அட... மற்றவர்களின் நல்ல ஒரு பேனா அல்லது அலைப்பேசி பார்த்தால் கூட...

இரு... இரு... அதெல்லாம் ஆசை என்று தானே சொல்வார்கள்...?

அது சரி... நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்... ஆசை ஒரு நாள் பேராசையாக உருமாறிப் பல பிரச்சனைகளை உண்டு பண்ணும்... அதைப் பற்றி பிறகு...! நம்ம வள்ளுவர் குறள் எண் 281-ல்... எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. பொருள் : அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனதால் கூடத் திருட நினைக்காதவாறு, தம் மனதை முதலில் காத்துக் கொள்ள வேண்டும்...

282-ம் அதே அதே... உலகத்திலேயே மிகப் பெரிய கள்வன்...?

ஓ அதுவா...! உலகத்திலேயே மிகப் பெரிய கள்வன் → இதோ வாசிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களைத் திருடிக் கொண்டு இருக்கும் DD ! ஹா...ஹா...

இது மெகா டேக்...! நன்றி = பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...!

நண்பர்களே... இப்போது மேலே உள்ள Play ≥ பட்டனைச் சொடுக்கி, என்றும் அலுக்காத சிறப்பான 'டூப் மாஸ்டரை' ரசித்துச் சிரிக்கலாம்...

அப்படி என்ன தான் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம்...? அறிய இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிகமிகமிகப் பயனுள்ள விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்க திண்டுக்கல்லாரே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஹஹா..
    அப்படியே சத்தம் இல்லாமல் C&P செய்பவர்களை விரட்ட இன்னும் சில வசதிகளை செய்து விட்டீர்கள்.. அதான் Noscript re-direct....
    C&P செய்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். போக போக பழகி விடும்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான சிந்தனையும் நல்ல உள்ளமும் கொண்ட தனபாலன் அவர்களே நீங்கள் சொல்லிய அத்தனையும் அருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அவர் மேல் கோபப் படாமல் நண்பராக ஏற்றுக் கொண்டது சிறப்பு DD! நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் இரண்டு தடவை படித்தால்தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நிறைய தொழில் நுட்ப விஷயங்களையும் எழுதுங்கள் தனபாலன் சார். SD எழுதி இருக்கறேன். ஆனா; சோதித்து பார்த்ததில்லை.
    C&P பற்றி எழுதிவிட்டு படாத பாடு பட்டுக் கொண்டிக்கிறேன், நீங்கள் சொல்வது போல சொல்லி யாரும் மாறப் போவதில்லை.தானாக மாறினால்தான் உண்டு.
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள குறிப்புகள்..
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள விஷயம்... நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  9. இன்று தான் தேடி பார்த்தேன்.என் பதிவுகள் எங்காவது இருக்கிறதா என்று..
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பதிவின் ஒரு வரியை அப்படியே இணையத்தில் தேடிப் பார்ப்பதற்கும் இந்த முறைக்கும் என்ன வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
  11. வள்ளுவர் கருத்தில்: ஆசை நம் உழைப்பில் நிறைவேறுவது நியாய ஆசை.மற்றது பிறரது உழைப்பை கவர்வது அநியாய ஆசை. பதிவருக்கு சூப்பரான வழிகாட்டு தான் - நன்றி

    பதிலளிநீக்கு
  12. @அப்பாதுரை அவர்களுக்கு ஒவ்வொரு பதிவிற்கும் நமது பிரத்யோக குறிப்பை உருவாக்க...

    அறிந்த / அறியாத நண்பர்களுக்கும் சிறு குறிப்பு மூலம், எளிதான தேடல் மூலம் நம் பகிர்வை அறிய வைக்க...

    உதாரணம் : நண்பர்கள் இல்லேன ---> HERE - யை (மேலே பதிவில் உள்ள) சொடுக்கி பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  13. நல்ல தேடல் மற்றும் விளக்கமான பகிர்வு சார்...

    meta tag நமது வலைப்பூவுக்கு முக்கியமான ஒன்று என்பதை இப்பதிவின் மூலம் பலரும் அறிய வாய்ப்பு அளித்த உமக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. blogger இல இவ்வளவு இருக்கா? சிறந்த வழிகாட்டல் ஐயா!

    பதிலளிநீக்கு
  15. எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்று கூறினால், அதனை உண்மையிலேயே எழுதியவருக்கு நல்லதோ, அல்லதோ சென்று சேரும். அப்படி செய்யாவிட்டால் காப்பி செய்வதும் ஒருவகையில் புகழ்ச்சியே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. வலையை கலையாக செய்வது உங்கள் கலை
    தங்கள் வலையில் மாட்டினால் மீள்வது கடினம்
    சுவைபட விளக்கத்துடன் உள்ளது கட்டுரை
    https://www.google.co.in/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oq=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&aqs=chrome.0.57j62l3.952j0&sourceid=chrome&ie=UTF-8

    பதிலளிநீக்கு
  17. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. 'திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
    நிறைய யோசனைகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    ஒரு சில தளங்களுக்கு எழுதும்போது அவர்கள் இந்த meta tag எழுதச் சொல்லுவார்கள். இப்போது புரியாதது இப்போது புரிந்தது!

    //உலகத்திலேயே மிகப்பெரிய கள்வன்-
    இதோ வாசிக்கும் அணைத்து அன்பு உள்ளங்களையும் திருடிக்கொண்டு இருக்கும் DD!// அப்படியே வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  19. மிகமிக பயனுள்ள பதிவு தனபாலன் சார்!
    எனக்கும் இதன் அவசியம் இருந்தது. இங்கு நீங்கள் தந்தமை மிகவும் உதவியாகிறது.
    பகிர்விற்கு மிக்க நன்றி!

    த ம.11

    பதிலளிநீக்கு
  20. ஹா ஹா ஹா மெட்டா டாக் பற்றி சொல்லும் போதும் ஒரு குரலா.. நல்ல பதிவு..

    டிடி எனக்கு ஒரு டவுட்டு

    இப்போ search preferance இல் நீங்க கொடுத்த அதே வாக்கியத்தை அச்சு பிசகாமல் நானும் கொடுத்தால் என்னுடையது முதலில் வருமா இல்லை உங்களுடையது முதலில் வருமா

    சொல்லுங்க டிடிசொல்லுங்க
    சொல்லுங்க டிடிசொல்லுங்க

    ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  21. பயனுள்ள குறிப்புகள்..
    பாராட்டுக்கள்..
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  22. @சீனு அவர்களுக்கு, முதலில் குரல் அல்ல குறள்...

    இப்போது குரல் : (ஹிஹி) "நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி" என்று நீங்கள் இணையத்தில் தேடினாலும் எனது "உங்களின் மந்திரச் சொல் என்ன?" எனும் DD பதிவு மட்டும் வரும்...

    உங்கள் தளத்தில் அல்லது வேறு தளத்தில் - ஒரு பதிவில் இதே வரி (நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி) இருந்தால் அதுவும் வரும்... அதற்குப் பெயர் தான் Copy and Paste...

    சிறப்பாக கவிதைகள் எழுதுபவர்களுக்கும் இது மிகவும் உதவும்... மற்றவற்றை யோசிங்க...

    "(இப்படியும் இருந்துத் தொலைகிறார்கள்...!)" என்று இணையத்தில் தேடினால்... அட...! உங்களின் சமீபத்திய பகிர்வு வருகிறது...

    புரிதலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  23. இராப் பகலாய் கண் முழித்து இதயத்தை வருத்தி நாம்
    இரண்டு வரிகளில் கவிதை எழுதும் போதும் மனதளவில் நினைப்பது இது போல் எம் உணர்வுகள் திருட்டுப் போகக் கூடாது என்று தான் சகோ :(
    இந்த ஜென்மங்களை நீங்கள் மன்னித்தது போல் நிட்சயம்
    என்னால் மன்னிக்க முடியாது சிறப்பான பகிர்வு இது
    அனைவருக்கும் நன்மை அளிக்கும் .வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
  24. பயனுள்ள தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  25. பயனுள்ள தகவல் அய்யா ... மிக்க நன்றி ....

    பதிலளிநீக்கு
  26. அன்பின் திரு தனபாலன்,

    பயனுள்ள பகிர்விற்கு மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  27. பயனுள்ள கட்டுரை
    இதை அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணி என் தளத்துல போட்டுடுறேன்

    பதிலளிநீக்கு

  28. ஒரே கருத்து பலருக்கும் இருக்கக் கூடாதா? எழுத்துக்கு எழுத்து அப்படியே எழுதாமல் ஒரு கருத்தை வேறு விதமாக சிந்தித்து எழுதுவது திருட்டாகுமா.?நமக்கு ஒரு கரு உருவாகும்போது இணையத்தில் வேறு யாராவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்து ஒத்த கருத்து இருந்தால் எழுதக் கூடாதா.?பழைய கவிதைகளைப் பற்றி எழுதினால் அந்தக் கவிதையின் வரிகளைத் திருடியதாகுமா.?நான் இணையத்திலிருந்து பல பாடல்களின் பொருள் தெரிந்து கொண்டு எடுத்தாண்டிருக்கிறேன். சிறந்த பதிவுக்குப் பாராட்டுக்கள். சிந்திக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  29. அனைத்தும் பாதுக்காக்க வேண்டிய பயனுள்ள தகவல்கள் !

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  30. நானும் என்னுடைய பதிவுகளைப் பார்த்தேன்..நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  31. திருக்குறளுடன் வந்த தகவல் பகிர்வு அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  32. நல்ல பயனுள்ள பதிவு தனபாலன் அண்ணா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    அறியாத விடயங்களை அறியவைத்தமைக்கு மிக நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  34. @G.M Balasubramaniam அவர்களுக்கு, வேறு விதமாக சிந்தித்து எழுதுவது கண்டிப்பாக தவறேயில்லை ஐயா... ஏன் அப்படியே எழுதுவது கூட தவறேயில்லை... அதே சமயம் நன்றி என்பது நற்பண்புகளின் தாய் என்பதையும் அறிய வேண்டும்...

    அவரவர் அனுபவத்திற்கேற்ப, புரிந்து கொண்ட திறமைக்கேற்ப சிந்தனைகளும் கருத்துக்களுமே ஆகும்... அதுவெல்லாம் தனது தான் என்று முழு உரிமை கொண்டாடுவது சரியல்ல... சரியென்றால் புரிதல் அவ்வளவே... பக்குவப்பட்ட மனம் சரியான தீர்வு சொல்லும்... முந்தைய அனைத்து பதிவுகளிலும் ஒரு வரி அதிகமாக காணலாம்... அது : என்னைப் பொறுத்தவரை...

    கிட்டத்தட்ட ஒன்னரை வருடத்திற்கு பின்... பதிவில் சொன்னது போல் ஒரு தேடலில் தான் இது தெரியும்... சந்தோசமே தவிர துளி கூட வருத்தம் இல்லை... அதிலும் ஒரு நண்பர் கிடைத்த சந்தோசம்...

    அப்படி திருக்குறள் உட்பட இலக்கியங்கள், பாடல்கள், மற்ற அனைத்தும் படைத்தவர்கள் இவ்வாறு நினைத்திருந்தால் - நமது நிலை...?

    எல்லாமே ஒரு சுழற்சி தான்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  35. நம்மள யாரும் காப்பி அடிக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்...-:)

    பதிலளிநீக்கு
  36. மிகவும் பயனுள்ள பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  37. நல்ல பகிர்வு... உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு ரசனையோடு வெளிவருகிறது.

    பதிலளிநீக்கு
  38. மிகவும் பயனுள்ள பதிவு தனபாலன்.. நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  39. பதிவு நல்லாதான் இருக்கு!
    பைரவர் - காலதேவன், நாய் என பல பொருளுண்டு. எனவே தலைப்பு தான் கொஞ்சம் இடிக்குது!

    பதிலளிநீக்கு
  40. மிகப் பயனுள்ள விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்கஅண்ணா நானும் முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  41. நல்லது தலைவரே....

    நான் ஊர்ல இல்லாதப்போ பதிவை போட்டா எப்படி...!

    பதிலளிநீக்கு
  42. "தீதும் நன்றும் பிறர் தர வாரா.... வரட்டும்.. வரும்.. ஆனால் இதுவும் கடந்து போகும்.." அருமை..

    பதிலளிநீக்கு
  43. நான் ஏற்க்கனவே இந்த (உங்களது )ஆக்கத்தைப் படித்துவிட்டேன் சகோ
    எனது கவிதையை திருடிய ஆடு எங்காவது எம்பிட்டால் சொல்லுங்கள்
    விருந்து வைத்திடுவோம் :))

    பதிலளிநீக்கு
  44. பதிவைத் திருடறவங்களை என்ன சொல்றது?? :))) நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. பதிவர் உலகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள் தனபாலன். பல பயனுள்ள தகவல்களை அறியச் செய்கிறீர்கள். நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  46. உபயோகமான தகவலுக்கு நன்றி நண்பரே ! உடனடியாக மாற்றிவிட்டேன் ...

    --

    பதிலளிநீக்கு
  47. அட, இவ்வளவு விரிவா, விளக்கமா, நல்லா இருக்கு தனா பதிவு!

    பதிலளிநீக்கு
  48. அருமையான தொழில்நுட்ப தகவல்கள்! செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் நன்றியுடன்! ஆனால் ஆக்கங்களை திருடுகிறார்கள் என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியுள்ளது! உங்கள் பதிவை திருடியவரையும் நண்பனாக ஏற்றுக்கொண்டது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  49. ஒரு முறைதான் படித்துள்ளேன். மீண்டும் படிக்க வேண்டும்.

    மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  50. Meta tag பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  51. நல்ல விஷயம்.. நான் இப்போதுதான் முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  52. டிடி பெயர் நல்லாயிருக்கே.அட,சகோ !தங்க வேல் காமெடி உங்களுக்கும் ரொம்பவும் பிடிக்கும் போல..மொத்தத்தில் பகிர்வு சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
  53. பயனுள்ள விஷயம். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  54. நல்ல தகவல் அண்ணா... திருடுரவங்க இருக்குற வர எதுவுமே பண்ண முடியாது ... ஆனா நம்மள கொஞ்சம் எல்லோருக்கும் தெரிய வைக்கலாம்னு சொல்லிட்டீங்க

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.