அப்படிச் சொல்லுங்க...!
வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பர் : "என் மகன் சின்ன வயதிலிருந்தே பள்ளி விழா நாடகத்தில் நடிப்பதென்றால் விருப்பம். இப்போ என் பையன் பத்தாம் வகுப்பு; அவனுக்கு அதிகாரி வேடம்; அவன் நண்பனுக்கு மேலதிகாரி வேடம்; இடம் : அலுவலகம்; நண்பனோடு சேர்ந்து ஒரு நல்ல உரையாடல் இருக்கணும். அதுவும் வித்தியாசமாக...!" என்றார். இதோ...
641 : "வரப் போகிற விழாவில் நீங்க தான் பேச வேண்டும்... அதற்காக எல்லாரிடமும் பேசி, மற்ற ஏற்பாடுகளையும் நீங்க தான் செய்யணும்... உங்களிடம் இருக்கும் மற்ற எந்தச் சிறப்பைக் காட்டிலும், நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும், சிறந்த சிறப்பு இருக்கு...!"
642 : "நானா...? ஏதாவது பேசி...? ஏன்னா... ஆக்கமும் அழிவும் நாம் சொல்லும் சொல்லால் ஏற்படுவதால், எந்தச் சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டுமே..."
643 : "அப்படி எல்லாம் ஏன் நினைக்கிறீங்க...? நீங்க பேசினா, கேட்பவர்களை தன் வயப்படுத்தும் பண்புகளும், கேட்காதவர்களையும் கேட்க விரும்பும் திறமையும் உங்ககிட்டே இருக்கு... அதை நம்புங்க..."
644 : "சரி... எல்லாரிடமும் பேசி ஏற்பாடு செய்ய சொல்லிட்டீங்க... யாரிடம் பேசகிறோமோ, அவங்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை எல்லாம் அறிந்து பேசணும் இல்லையா...? அப்படிப் பேசுவதை விட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லையில்லையா...?"
645 : "யார் யார் என்று ஒரு பட்டியல் தருகிறேன்... நீங்க சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து கொண்டு, அப்புறம் எல்லார்கிட்டேயும் பேசுங்க... சரியா...?"
646 : "சரி... மற்றவங்க பேசும் போது, சொற் குற்றம் பார்க்காமல், அவங்க பேச்சின் பொருளை மட்டுமே பார்க்க முயற்சி செய்கிறேன்... மற்றபடி எல்லார்கிட்டேயும் என் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேசி விடுவேன்..."
647 : "...ம்... நீங்க நினைத்ததை மற்றவங்க ஒத்துக் கொள்ளும் ஆற்றல் உங்ககிட்டே இருக்கு... உங்க சொல்லுக்கு சோர்வே இருக்காதே... எந்தச் சபைக்கும் அஞ்சாத உங்களை, கேட்பவங்க எதிரியா இருந்தாலும், உங்களை வெல்வது கஷ்டம் தான்..."
648 : "நன்றி... முதலில் நாம் சொல்லும் கருத்துக்களை ஒழுங்காக, வரிசையாகக் கோர்த்து, இனிமையா சொன்னா, எல்லோரும் என்ன... இந்த உலகமே நம் கட்டளையை ஏற்று விரைந்து செய்வாங்க..."
649 : "அதற்காகத் தான் உங்களைத் தேர்வு செய்தேன்... நீங்க தான் குறையில்லாத, குறைவான சில சொற்களைக் கொண்டு, தெளிவான விளக்கம் தர முடியும்... மத்தவங்க பல சொற்களைக் கொண்டு, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்..."
650 : "இப்ப மேலும் நம்பிக்கை வந்து விட்டது... கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவங்க, கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவங்க... மிக்க நன்றி...!"
" அப்படிச் சொல்லுங்க...! "
என்ன நண்பர்களே... "ஒரே திருக்குறளாக உள்ளதே..." என்று நினைப்பது தெரிகிறது... என் நண்பர், அதிகாரி வேடங்கள் என்று சொல்லி விட்டாரா... அதிகாரி என்றால் அதிகாரம் வேண்டாமா...? ஆனால், நான் எடுத்த அதிகாரம் : (65) சொல்வன்மையில் உள்ள பத்து குறள்களும்... அதனின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்... நண்பர்களே, இரண்டும் சரியாக இருக்கா என்று பாருங்க... முடிவாக :
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் எண் : 200)
விழாவில் நடந்ததோ வேறு... என்ன நடந்தது...? அறிய இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நீங்க சொல்லுங்க...
641 : "வரப் போகிற விழாவில் நீங்க தான் பேச வேண்டும்... அதற்காக எல்லாரிடமும் பேசி, மற்ற ஏற்பாடுகளையும் நீங்க தான் செய்யணும்... உங்களிடம் இருக்கும் மற்ற எந்தச் சிறப்பைக் காட்டிலும், நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும், சிறந்த சிறப்பு இருக்கு...!"
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
642 : "நானா...? ஏதாவது பேசி...? ஏன்னா... ஆக்கமும் அழிவும் நாம் சொல்லும் சொல்லால் ஏற்படுவதால், எந்தச் சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டுமே..."
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
643 : "அப்படி எல்லாம் ஏன் நினைக்கிறீங்க...? நீங்க பேசினா, கேட்பவர்களை தன் வயப்படுத்தும் பண்புகளும், கேட்காதவர்களையும் கேட்க விரும்பும் திறமையும் உங்ககிட்டே இருக்கு... அதை நம்புங்க..."
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
வேட்ப மொழிவதாம் சொல்.
644 : "சரி... எல்லாரிடமும் பேசி ஏற்பாடு செய்ய சொல்லிட்டீங்க... யாரிடம் பேசகிறோமோ, அவங்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை எல்லாம் அறிந்து பேசணும் இல்லையா...? அப்படிப் பேசுவதை விட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லையில்லையா...?"
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.
பொருளும் அதனினூஉங்கு இல்.
645 : "யார் யார் என்று ஒரு பட்டியல் தருகிறேன்... நீங்க சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து கொண்டு, அப்புறம் எல்லார்கிட்டேயும் பேசுங்க... சரியா...?"
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
646 : "சரி... மற்றவங்க பேசும் போது, சொற் குற்றம் பார்க்காமல், அவங்க பேச்சின் பொருளை மட்டுமே பார்க்க முயற்சி செய்கிறேன்... மற்றபடி எல்லார்கிட்டேயும் என் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேசி விடுவேன்..."
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
மாட்சியின் மாசற்றார் கோள்.
647 : "...ம்... நீங்க நினைத்ததை மற்றவங்க ஒத்துக் கொள்ளும் ஆற்றல் உங்ககிட்டே இருக்கு... உங்க சொல்லுக்கு சோர்வே இருக்காதே... எந்தச் சபைக்கும் அஞ்சாத உங்களை, கேட்பவங்க எதிரியா இருந்தாலும், உங்களை வெல்வது கஷ்டம் தான்..."
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
648 : "நன்றி... முதலில் நாம் சொல்லும் கருத்துக்களை ஒழுங்காக, வரிசையாகக் கோர்த்து, இனிமையா சொன்னா, எல்லோரும் என்ன... இந்த உலகமே நம் கட்டளையை ஏற்று விரைந்து செய்வாங்க..."
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
649 : "அதற்காகத் தான் உங்களைத் தேர்வு செய்தேன்... நீங்க தான் குறையில்லாத, குறைவான சில சொற்களைக் கொண்டு, தெளிவான விளக்கம் தர முடியும்... மத்தவங்க பல சொற்களைக் கொண்டு, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்..."
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
சிலசொல்லல் தேற்றா தவர்.
650 : "இப்ப மேலும் நம்பிக்கை வந்து விட்டது... கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவங்க, கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவங்க... மிக்க நன்றி...!"
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
உணர விரித்துரையா தார்.
என்ன நண்பர்களே... "ஒரே திருக்குறளாக உள்ளதே..." என்று நினைப்பது தெரிகிறது... என் நண்பர், அதிகாரி வேடங்கள் என்று சொல்லி விட்டாரா... அதிகாரி என்றால் அதிகாரம் வேண்டாமா...? ஆனால், நான் எடுத்த அதிகாரம் : (65) சொல்வன்மையில் உள்ள பத்து குறள்களும்... அதனின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்... நண்பர்களே, இரண்டும் சரியாக இருக்கா என்று பாருங்க... முடிவாக :
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் எண் : 200)
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகடிச்ச காயத்திற்கு மருந்து போட்டுட்டு அப்புறமா கமென்ட் போடுறேன்!
பதிலளிநீக்குஉரையாடலுக்குப் பொருத்தமாகப் பத்துக் குறள்களும் அமைத்துள்ளீர்கள். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் சொற்களும் நல்ல சொற்களாக வரும்! "நான் என்ன சொன்னேன் என்பதற்குத்தான் நான் பொறுப்பு... நீங்கள் என்ன எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்கு அல்ல..." என்ற வரிகளும் நினைவுக்கு வந்தன! :))
பதிலளிநீக்குமொத்தத்தில் அருமையான பதிவு.
மறுபடியும் ரசித்தேன். பொருத்தமான பதிவு.
நீக்குஅப்படிச் சொல்லுங்க,,, அருமை
பதிலளிநீக்குகுறளும் விளக்கமும் அருமை. சிறந்த தேர்வுதான்,
பதிலளிநீக்குதிருக்குறளுக்கு புதிய உரைநடையே எழுதியிருக்கீங்க...சூப்பர்.....
பதிலளிநீக்குஉங்களை திருக்குறள் தனபாலன் என்று அழைத்தாலும் சரியே..!
பதிலளிநீக்குSinna varikalil periya vidayankalai sirappai solluddinka . unkal pulamaiyo pulamai
பதிலளிநீக்குValthukkal
எளிய விளக்கங்கள்.
பதிலளிநீக்குஅருமை.
தொடருங்கள்.
விளக்கம் அருமை. நல்லா புதுமையாவும் இருக்கு.
பதிலளிநீக்குநல்ல முயற்சி, குறள் 650 தங்களுக்கு சரியாக பொருந்தும் . நன்றி
பதிலளிநீக்குகுறளும் விளக்கமும் அருமை... நன்றி...
பதிலளிநீக்குபதிவு அருமை சகோ.. " கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவங்க, கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவங்க... " சில கல்லூரிகளிலும் , பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் சகோ..
பதிலளிநீக்குசொல்வன்மை குறித்து அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குBest choose... Beautifull thirukkural...
பதிலளிநீக்குவித்தியாசமான, அருமையான முயற்சி...வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஎளிமையான விளக்கம். சுஜாதா முயன்றது போல..ஹ்ம்..அருமை தொடருங்க திண்டுக்கல் தனபாலன்..!
பதிலளிநீக்குதிருக்குறளுக்கு புதிய உரை நடை தந்த தாங்கள் இனி இளைய திருவள்ளுவர் என அழைக்கபடுவீர்!
பதிலளிநீக்குவித்தியாசமான உரைநடை ! அருமை வாழ்த்துக்கள் நண்பரே !
பள்ளிக்கு பிறகு குறளை இது போலதான் படிக்க
பதிலளிநீக்குசந்தர்ப்பம் வாய்க்கிறது. அருமை.
"முதலில் நாம் சொல்லும் கருத்துக்களை ஒழுங்காக, வரிசையாக கோர்த்து, இனிமையா சொன்னா, எல்லோரும் என்ன... இந்த உலகமே நம் கட்டளையை ஏற்று விரைந்து செய்வாங்க..."
பதிலளிநீக்குஉண்மைதான் தோழரே..
பேசுவது ஒரு கலை. குறைவாக பேசுவது, நிறைவாக பேசுவது, பிறர் ஏற்றுக் கொள்ளும் கருத்தை சுவைபட பேசுவது எல்லாம் அழகாய் திருக்குறள் மூலம் சொல்லிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
உங்கள் மகன் நன்றாக பேசி இருப்பார் தானே!
உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் திண்டுக்கல் தனபாலனா இல்லை திருக்குறள் தனபாலனா?
பதிலளிநீக்குஅருமை நண்பரே...
அருமை.
பதிலளிநீக்குதொடருங்கள்.
வித்தியாசமான பார்வை - பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஆஹா... கோனார் தமிழ் உரைக்கு ஆப்பா?!
பதிலளிநீக்குஇதைவிட யாரும் சிறப்பா குரல் விளக்கம் தர முடியாது தனபால் சார்! வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வு தனபாலன். வாழ்த்துக்கள்... (த.ம.7)
பதிலளிநீக்குசிறப்பான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான இயல்பான மொழிபெயர்ப்பு. தொடருங்கள்
பதிலளிநீக்குகுறள்கள் மூலம் சொன்ன உரையாடல்களுக்கு நானும் குறள் மூலமே சொல்கிறேன்
பதிலளிநீக்குஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)
நல்லவற்றை கேட்டறிந்ததால் எங்களுக்கும் பெருமையே. பதிவுக்கு வாழ்த்த்துக்கள்!
சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிகக் கடுமையாக வேலை செய்துள்ளீர்கள் தனபாலன்.
பதிலளிநீக்குசிறப்பு. பதிவு அருமை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான விளக்கங்களும் திருக்குறள் வரிகளும்!
பதிலளிநீக்குhttp://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
அடடா...! எவ்வளவு அருமையான படைப்பு. எளிமையாக,அழகாக, தெளிவாக..
பதிலளிநீக்கு"அதிகாரத்தை" ரசிக்க ரசிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.
இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறோம்!
நல்ல கருத்துகள். குறளைப் பயன்படுத்தியது அருமை.
பதிலளிநீக்குஎளிமையான வார்த்தைகளில் திருக்குறளை இனிமையுறச் செய்திருக்கிறீர்கள்.. நன்றி. வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குசொல்லுதலும் சொல்லப்படலும்
பதிலளிநீக்குரெம்ப முக்கியம் சார்
அது அழகா சொல்லபட்டு இருக்கிறது இங்கு
குறளும் விளக்கமும் அருமை. சிறந்த தேர்வுதான்,
பதிலளிநீக்குவழ்த்துகள்.
பதிலளிநீக்குவள்ளுவன் வகுத்ததை தொகுத்து அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
சார்,
பதிலளிநீக்குகுறல்களுக்கு விளக்கம் ரொம்ப சிம்பிளா, புரியிற மாதிரி எழுதி இருக்கேங்க. அதை ஒரு உரையாடல் மாதிரி குடுத்து ரொம்பவே வித்தியாசமா பண்ணி இருக்கேங்க. ரொம்ப ந
ஆக்கமும் அழிவும் நாம் சொல்லும் சொல்லால் ஏற்படுவதால், எந்தச் சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டுமே..
பதிலளிநீக்குசொல் வன்மை பற்றிய ஆக்கப்பூர்வமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
திருக்குறள் கருத்துக்களை மக்கள் மத்தியில் தங்கள் வலைப் பதிவின் மூலம் எடுத்துச் சொன்னமைக்காக எனது நன்றி!
பதிலளிநீக்குகுறளும் அதற்கான விளக்கங்களும் கஸ்டமில்லாமல் விளங்கக்கூடியதாக இருக்கிறது.அருகருகே இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ !
பதிலளிநீக்குஅருமை அண்ணா.... தமிழ்மணம் இன்றய சிறந்த பதிவுகளில் உங்கள் பதிவும் இன்று.. வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசூப்பர் திருக்குறள் விளக்கம் சொன்ன விதம் அருமை நன்றி
பதிலளிநீக்குகுறள் முதலில் சொல்லிவிட்டு பிறகு
விளக்கம் சொல்லி இருக்கலாம்
இது ஓரு குறையாக எனக்கு தோன்றுகிறது
வளர்ந்துகொண்டே இருப்பதுதான் தமிழ்
பதிலளிநீக்குகாலத்திற்கேற்ப என்றும் தன் இனிமை, இளமை மாறாது
பாராட்டுக்கள்
சுவையானதொரு உரையாடல் மூலம், திருக்குறள் கருத்துகளைப் படிப்போர் மனதில் பதிய வைத்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குமிக நல்ல முயற்சி.
பாராட்டுகள் தனபாலன்.
திருக்குறளை கரைத்து குடித்து விட்டீர்கள் போல . நிச்சயம் தமிழர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவணக்கம் சொந்தமே.உரையாடலுக்காக குறளா??குறளுக்கான உரையாடலா???மிக அருமை.எங்கிருந்து தான் இப்பிடி எல்லாம் ஐடியா கண்டுபிடிக்கிறீங்களோ....!வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.சந்திப்போம்.
பதிலளிநீக்குஇருவரின் வசனமும் ஒவ்வொரு குறளின் பொருள் என்பதை உணர்த்தும் வண்ணம் உரையாடல் அமைத்திருப்பது புதிய உத்தி.ஆசிரியர்கள் திருக்குறள் கற்பித்தலில் இந்த உத்தியைப் பயன்படுத்தலாம்.பிரமாதம்
பதிலளிநீக்குஅருமையான கருத்துப் பதிவு!
பதிலளிநீக்குஅருமையாக இருக்கு.. நல்ல முயற்சி..
பதிலளிநீக்குஇலக்கங்களைப் பார்க்கும் போது திருக்குறளாகத்தான் இருக்கும் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது....
பதிலளிநீக்குவித்தியாசமான நல்ல முயற்சி (த.ம.15)
செம சூப்பரா சொல்லி இருக்கிங்க சகோதரே! நான் ரசித்து விரும்பி படித்தேன்... அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசெம சூப்பரா சொல்லி இருக்கிங்க சகோதரே! நான் ரசித்து விரும்பி படித்தேன்... அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குmmmm!
பதிலளிநீக்குnalla vilakkam...
mmm!
பதிலளிநீக்குnalla
karuthu!
எல்லாக் குறள்களுக்கும் சரியான விளக்க உரையாடல்கள். என்னை கவர்ந்தது
பதிலளிநீக்கு"அதற்காகத் தான் உங்களை தேர்வு செய்தேன்... நீங்க தான் குறையில்லாத, குறைவான சில சொற்களைக் கொண்டு, தெளிவான விளக்கம் தர முடியும்... மத்தவங்க பல சொற்களைக் கொண்டு, சொன்னதையே திரும்பத் திரும்பக் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்..."
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (649)
அருமை
(த.ம) 16
பதிலளிநீக்குஎளிய விளக்கம் நல்ல முயற்சி இன்னும் கூட சிந்தியுங்கள் ....
பதிலளிநீக்குஉங்கள் பணி சிறந்தது
வழமை போல கலகிட்டிங்க சார்
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே!
பதிலளிநீக்குகுறள் அடிப்படையில் உரையாடல் அருமை!
பதிலளிநீக்குசொல்வன்மை அதிகாரத்தின் பத்துக் குறள்களையும் அருமையான எழுத்துவன்மையால் எங்கள் உளம் புகுத்திவிட்டீர்கள். நன்றியும் பாராட்டும் தனபாலன்.
பதிலளிநீக்குஆஹா, 'பேச்சு' பேச்சா இருக்கனும்ன்னா, வள்ளுவர் "சொல் வன்மை" படிக்கனும், படிக்கிறது புரியனும்ன்ன, திண்டுக்கல் தனபாலன் "உரை'யாடலை கேட்கனும். பரிமேல் அழகர், முவா, முக, சாலமன் பாப்பையா, சுஜாதா லெவலுக்கு வந்துருக்கு இந்த உரை.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி.
எளிமையான நடையில் அருமையான குறள் பகிர்வு! அருமை! வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
தாங்கள் குறிப்பிட்ட அதிகாரத்தின் அர்த்தங்கள் அருமை அண்ணா! எளிய வகையில் குறள்களின் அர்த்தங்கள் அறியும்படியாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்முயற்சி. அடியோ இரண்டு. ஆனால் பொருளோ?. தெய்வப் புலவர் வழங்கியதை பள்ளி, கல்லூரிகளில், பேருந்துகளில் படித்ததை ஞாபகப்படுத்தி வருகீறர்கள். அருமையான பதிவு. தொடருங்கள்.
பதிலளிநீக்கு65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பரே
பதிலளிநீக்குஅழகா எழுதறீங்க, டேப்லட் பிசி பதிவின் பின்னூட்டம் தவறுதலாக அழிந்துவிட்டது. மீண்டும் தர முடியுமா., மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. தொடருங்கள்.
பதிலளிநீக்குதிருக்குறள் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குஇனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
வித்யாசமான கோணத்தில் குறளின் வீச்சைப் பரவச் செய்த முயற்சி பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஅற்புதம் தனபாலன்.
அப்படிச் சொல்லுங்க,,, அருமை
பதிலளிநீக்குதிருக்குறளுக்கு மிக மிக எளிமையான விளக்கம். அருமையான பதிவுங்க தனபாலன் ஐயா.
பதிலளிநீக்குஎளிமையான விளக்கம் ..நன்றி..
பதிலளிநீக்குபயனுள்ள முயற்சி.
பதிலளிநீக்குமிகவும் இரசித்தேன்.
பலமுறை தங்கள் பக்கத்துக்கு வந்து பக்கம் திறக்க கால தாமதமானதால் திரும்பி்ச் சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போது தங்கள் பக்கம் விரைவாகத் திறக்கிறது.
அருமை...
பதிலளிநீக்குஅழகாக சொல்லியிருக்கீங்க
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
திருக்குறள் மூலம் அழகுற எடுத்துரைத்து இருக்கீங்க
பதிலளிநீக்குமிக மிக அருமை
அன்புடையீர்,
பதிலளிநீக்குவணக்கம்.
தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
அன்புடன்
vgk
இனிமையான விளக்கங்கள் சார் .. மிகவும் ரசித்தேன் படித்தேன் நன்றிகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே பின்தொடர்வாளராக இணைந்து விட்டேன். உங்களது அருமையான வலைப்பூவின் அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குகாலதாமதமாய் வந்தேன்.. படித்தேன்.. அருமை.. வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள அருமையான பதிவு தோழரே.மேலும் தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குதிருக்குறள் சொல்வன்மை பற்றிய விளக்கம் அருமை.அம்மாடி! என்னமா பின்னி பெடல் எடுக்கிறீங்க..
பதிலளிநீக்குசொல்லுக சொல்லிற் பயனுடைய...
பதிலளிநீக்குஎன்ற குரளுக்கேற்ப மிகவும் பயனுள்ள கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்!
பாராட்டுக்கள்!
அருமையான முயற்சி .. தொடரட்டும்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...
அருமை..குறள் கூறும் உங்கள் குரல் இனிதினும் இனிது நண்பரே..
பதிலளிநீக்குஎளிமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது உங்கள் பதிவு.
பதிலளிநீக்குதிருக்குறள் விளக்கமும், குறிப்பாக சொன்ன விதமும், மிக அருமை! மிக்க நன்றி.
பதிலளிநீக்குமிக தத்ருபமாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇதற்கு ஒரு ISO முத்திரை குத்திட வேண்டியதுதான்.
அருமை ஐயா .. நன்றி
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான முயற்சி
பதிலளிநீக்குமனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 25
பதிலளிநீக்குகுறள் பலரிடம்` போக நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்§
பதிலளிநீக்குஅருமையாக தொகுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குமேலும் தொடர வாழ்த்துக்கள் .
நல்ல முயற்சி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு...
பதிலளிநீக்குநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பதிலளிநீக்குபயனில சொல்லாமை நன்று
என்பதற்கிணங்க அருமையாய் சொல்லி இருக்கீங்க!!
உங்க ஊர் மதுரை பக்கம் வந்ததால் கருத்திட தாமதமானது..அருமையான விளங்கம் தனபாலன் சார்...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
வேலன்.
Arumaiyaana padhivu. Kanini nilaiyam sella iyalaadhadhaal mobilil karuththidugiren. Kuralin porulai uraiyaadal vadivil thandhadhu arumai. Vaalththukkal ullame. Namma pakkamum konjam vaangalen : http://newsigaram.blogspot.com
பதிலளிநீக்குநல்ல விஷயம் செய்தீர்கள்....
பதிலளிநீக்குபுன்னகையுடன்
வீரா...
நல்ல விஷயம் நண்பரே..
பதிலளிநீக்குப்ரியமுடன்
வீரா
அட்டகாசமாக இருக்கிறது தனபாலன்... இத்தனை அழகாய் ஒரு உரையாடல் வடிவத்தில் ஒரு அதிகாரத்தை விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது....
பதிலளிநீக்குஅட்டகாசமாக இருக்கிறது...... இத்தனை அழகாக திருக்குறளின் ஒரு அதிகாரத்தை விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் தனபாலன்.
பதிலளிநீக்குமிக அருமையான குரல் உரையாடல்! T.M.28
பதிலளிநீக்குபதிவு அருமை.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎப்படிங்க பதிவுகளும் எழுதிட்டு இத்தனை பேருக்கு பதிலும் போடறீங்க? ஆச்சரியமா இருக்கு. நல்ல பதிவுக்கு நன்றி. பத்துக்குறள்களும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான தொடக்கம் தனபாலன்....
பதிலளிநீக்குஉங்கள் தளத்திற்கு வந்து பார்க்கும்போது எத்தனை அருமையான சிந்தனைகள்....
திருக்குறள் இரண்டே வரிகளில் வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியது....
நீங்கள் அதை சிரத்தையுடன் பொருள் சொல்லி...விளக்கம் தரும்போது அதை கோர்வையாக ஒவ்வொரு அதிகாரமும் அடுத்தடுத்து எழுதி சுவையாக ரசிக்கும்படியாக தந்தது சிறப்புதனபாலன்.....
அன்புவாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்பா...
திருக்குறள் உலக பொதுமறை நூல் , மக்கள் அரிதாகவே பயன்படுத்துகிறார்கள் .நல்ல பதிவு !
பதிலளிநீக்குஅருமை உங்கள் முயற்சி. ரசித்துப் படித்தேன்.
பதிலளிநீக்கு//ஆக்கமும் அழிவும் நாம் சொல்லும் சொல்லால் // என்ன அருமையான வார்த்தைகள்....நமது வார்த்தையின் சிறப்பையும், பார்த்து எதையும் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்....தொடர வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குகருத்து பதிய பல தடங்கள் தாண்டி வருவது ... எதிலும் புதுமை இதிலும் புதுமை .இது உங்கள் செயல்பாடு . நீங்கள் ஒரு புதுமை விரும்பி . நாங்கள் உங்களை விரும்புபவர்கள் உங்கள் ஆற்றலைக் கண்டு மகிழ்பவர்கள்
பதிலளிநீக்குஒரு அதிகாரத்தின் பத்து குறட்பாக்களையும் இணைத்து ஓர் உரையாடல் இதுவரை நான் கேட்டறியாதது. புதுமையான அருமையான முயற்சி
பதிலளிநீக்குஉங்கள் சொல்வண்ணம் இங்கே கண்டேன் .அருமை
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் - அருமை அருமை - குறள்களும் விளக்கங்களும் - நாடக வசனமாக - சிறப்பான பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் - என் வாழ்க்கையிலும் இச்சொல்வன்மை அதிகாரம் வந்திருக்கிறது. அதனைப் பற்றி எழுதிய பதிவு இதோ : http://cheenakay.blogspot.in/2007/11/5.html
பதிலளிநீக்குபொறுமையாக இறுதி வரை படிக்கவும் - இறுதியில் தான் வருகிறது சொல்வன்மை அதிகாரம்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உலகப்பொதுமறையை எவ்வளவு அழகாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் நயம்பட விளக்கியுள்ளீர்கள். கருத்துரையிடுவதிலும். சொந்த வலைதளத்திலும் கருத்துக்களைச் சொல்வதிலும் வல்லவர் என்பதைக் காட்டிவிட்டீர்கள். வளர்க உங்கள் பணி.
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சி .இன்றைய வாழ்வுடன் தொடர்புபடுத்தி திருக்குறளை படிக்கும்போது அதனை நினைவுகொள்ளல் எளிதானது. வாழ்த்துக்கள்.நன்றி
பதிலளிநீக்குகுரளும் பொருளும் அருமை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் மகனுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் குறளின் குரல் பயனுள்ளதாக் இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
அருமையான பதிவு...திருக்குறளும் உங்கள் சொல்வன்மையும்...நன்று நன்று!
பதிலளிநீக்குஅருமையான பத்து குறள்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி!
குறளை வைத்து அழகாக குரல் கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்று நண்பரே...
பதிலளிநீக்குமிகவும் அருமையாக உள்ளது. தொடருங்கள்.
பதிலளிநீக்குஅட, வசனத்தைக் குறளாவே சொல்லிட்டிங்களா.. :) புதுமை! அருமை!
பதிலளிநீக்குஎளிய வகையில் எல்லோருக்கும் புரிகிறது ஜி வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு