நண்பர்களே... முதலில் இந்தப் பதிவை, என் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் கணக்கு பாடங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் சொல்லிக் கொடுத்த முறை எனக்கு பலவற்றில் உதவுகிறது. அது என்ன? என்று பார்ப்போமா?
நான் பள்ளிக் கூடத்தில் படித்த போது, எனது கணக்கு ஆசிரியர், ஒரு கணக்கை மட்டும் விளக்கமாக கரும் பலகையில் எழுதி விட்டு, மற்ற கணக்குகளை எல்லாம் இதே போல் செய்யுங்கள் என்று கூறி விட்டு, சிறிது நேரம் அவகாசம் கொடுப்பார். பிறகு, ஒவ்வொருத்தராக அருகில் கூப்பிட்டு, "கணக்கு அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்பார்.
"கணக்கை அறிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்கு கணக்கு சரியா தெரியலே, புரியலே..... மறுபடியும் செய்." என்பார்.
"கணக்கை தெரிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்கு கணக்கு சரியா புரியலே.... மறுபடியும் செய்." என்பார்.
அதற்காக, "கணக்கை நன்றாக புரிந்து கொண்டேன்" என்று சொன்னால், எப்படி புரிந்து கொண்டாய் என்பதை தெரிந்து கொண்டு , இரண்டாவது கணக்கை செய்யச் சொல்வார்.
[ அந்த இரண்டாவது கணக்கு, முதல் கணக்கில் சின்ன மாற்றம் செய்தால் விடை வந்து விடும். ]
நாமாக யோசித்து இரண்டாவது கணக்கின் விடையை சரியாக கண்டுபிடித்து, அவரிடம் காண்பித்தால், "இப்போது தான் முதல் கணக்கை நீ அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டாய், அடுத்து மூன்றாவது கணக்கை செய்" என்று கூறுவார்.
தவறாக செய்து விட்டு "எப்படி இந்த கணக்கை செய்வது" என்று அவரிடமே கேட்டால், "முதல் கணக்கை நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று கூறி பிறகு விளக்கமாக சொல்லிக் கொடுப்பார். இப்படியே இந்த கணக்கு வகுப்பு போகும்.
என்னடா இது... "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று எங்களுக்கு எரிச்சலாக அப்போது இருக்கும். ஆனால், அதை தெரிந்து கொள்ள சிறிது நாட்களிலே ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஏனென்றால் அவரே தான் தமிழ் வகுப்பும் எடுத்தார். கணக்கு வகுப்பையே இந்த பாடு படுத்துகிறாரே இப்போ என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் நினைத்தது மாறாக அருமையாக சொல்லிக் கொடுப்பார். சின்ன சின்ன கதைகள் சொல்லி, நகைச்சுவையாக சொல்லிக் கொடுப்பார். எல்லாவற்றுக்கும் ஒரு திருக்குறளை சொல்லி அழகாக விளக்கம் கொடுப்பார்.
கணக்கு வகுப்பில் மட்டும் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்று நாங்கள் நினைத்துக் கொள்வோம். ஒரு முறை தமிழ் வகுப்பில் அவரிடமே கேட்டு விட்டோம். "ஒவ்வொரு முறையும் கணக்கை முடித்து காண்பிக்கும் போது ஏன் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்கிறீர்கள்" என்று. அதற்கு அவர் சொன்ன பதில் :
" மாணவர்களே... இதை நான் கணக்கு பாடத்திற்காக மட்டும் சொல்வதாக எடுத்துக் கொள்ள கூடாது. எல்லா பாடங்களையும் அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். உங்களுக்கு எல்லாருக்கும் நான் சொல்லும் திருக்குறள் தெரியும்.
கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின்
அதற்கு விளக்கம் என்னவென்றால், நீங்கள் படிப்பதற்குத் தகுதியான புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டும். அந்த புத்தகங்களை எவ்வித பழுதில்லாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்த பின் அந்த புத்தகத்தின் தகுதிக்குத் தகுந்த படி நீங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.
தமிழைப் போல் கணக்கை மனப்பாடம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதை நான் என்ன தான் விளக்கமாக கூறினாலும் நீங்களாக அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டால், அதில் எளிய வழி இருந்தால் எனக்கும் நீங்கள் கூறலாம். அதற்காக தான் நான் அப்படி கூறுகிறேன்." என்று கூறினார்.
[... அப்போது நாங்கள் "எனக்கும் நீங்கள் கூறலாம்" என்று சொன்னதை நினைத்து சிரித்தோம். "நல்ல வேலை கணக்கைப் போல திருக்குறளையும் கேட்டிருந்தால்.....?" என்று நினைத்து பயந்தோம். மேலும் அவர் அந்த திருக்குறளை வைத்தே, அதிலும் "கசடறக் கற்பவை" என்பதற்கு மட்டும் அவர் இந்த பதிவின் தலைப்பைப் பற்றி கூறிய விளக்கங்கள் : ...]
"மாணவர்களே : தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அந்த குறளின் பொருளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். திருக்குறளில் இல்லாத விசயமே இல்லை. நான் சொல்லும் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" பற்றி சொல்கிறேன்.
1. அறிந்து கொள்தல் : பாட புத்தகத்திலுள்ளவற்றை மட்டும் நான் அறிந்து கொள்ள சொல்லவில்லை. உங்கள் தாய் தந்தையரைப் பார்த்து பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் உள்ள புத்தகத்தின் மூலம், நாளிதழ்கள் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் வானொலி, தொலைக்காட்சி மூலமும் பலப்பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால் சுயமாக கூட அறிந்து கொள்ளலாம்.
2. தெரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து கொண்ட பின், அதைப் பற்றிய தேடல் உங்களுக்கு வர வேண்டும். அதற்கு உங்கள் முயற்சியும், ஆர்வமும் இருக்க வேண்டும். மனதை தளர விடக் கூடாது. அப்படி முயற்சியும் ஆர்வமும் இருந்தால், அந்த விசயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
3. புரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து, தெரிந்து கொண்ட பின், அதை செயல் படுத்தி பார்க்க வேண்டும். பயம் இருக்கக் கூடாது. அதற்கு உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செயல் படுத்திப் பார்க்கையில், அந்த செயலில் நமக்கு கிடைக்கும் நன்மை/தீமை, வெற்றி/தோல்வி, லாபம்/தோல்வி, உங்களால் முடியும்/முடியாது போன்றவற்றை புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் செய்யும் செயலானது திருந்தச் செய்ய வேண்டுமென்றால் "அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல்" இந்த மூன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதைப் பற்றி உங்களுக்கு சரியாக அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் பல நேரங்களில் இந்த மூன்றும் உதவும்...." என்று கூறினார்.
அப்போது எங்களுக்கு ஒன்றுமே அறியவில்லை... தெரியவில்லை... புரியவில்லை. நண்பர்களே... உங்களுக்கு.....?
அடுத்த பதிவில் சிந்திப்போம்... போகலாமா...? :அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 2 என்னும் பதிவை, படிக்காதவர்கள் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி.....
அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

நிற்க அதற்குத் தக.

தங்களின் கருத்து என்ன நண்பர்களே ?
| தொடர்புடைய பதிவுகளை படிக்க : |

122 கருத்துக்கள்:
அன்பர்களின் கருத்துக்களை காண்பிக்க / மறைக்க !
உண்மையான எடுத்துக்காட்டும் சிறந்த வழிகாட்டலும் நிச்சயமாக மாணவானக இருந்தாலும் ஆர்வலராக இருந்தாலும் எதையும் ஆய்ந்து அறிந்து உணரந்து படிக்கும் போதும் செயலில் கொண்டுவரும்போதும் கற்றதன் பலனை உணரமுடியும் இதை ஏனையவர்கள் பின்பற்றலில் சிறப்பிருக்கிறது நன்றி தங்களின் அருமையான பதிவிற்காக
@நேசமுடன் ஹாசிம் அவர்களுக்கு, தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே!
வணக்கமுங்க!இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மிகவும் வேண்டிய ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்,பதிந்திருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.
உயந்த ? சிந்தனை ..பகிர்வுக்கு நன்றி..
ஆசிரியர்களுக்கான சமர்ப்பணம் உங்கள் உயந்த உள்ளத்தைக் காட்டுகிறது.
வெற்றியின் அடித்தளமாக விளங்கும் பண்புகளை மிக நேர்த்தியாக தங்களின் அனுபவம் மூலம் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
அருமை கணக்கு ஆசிரியர்கள் எல்லாரும் இப்படித்தான்
நல்ல பதிவு!
முதலில் ஒன்றை அறிவது தெரிந்து தெளிவது
பின் புரிந்து செயலாய்ப் புரிவது!
நன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நல்ல பதிவு!
மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை
மிக நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது
நன்று நன்றி!
அனுபவம் பேசுகிறது.அருமை
ஒரு ஆசிரியரின் வேலை கற்பிப்பது
என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்
அது யாராலேயும் முடியாது என்று சுவாமிவிவேகானந்தர் கூறியிருக்கிறார்
ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இருக்கும் அறிவை
உணர்ந்துகொள்ள வழி வகுத்து அவனுக்கு உதவி செய்வதே ஆசிரியரின் பணி
ஆனால் இன்று நடப்பதென்ன?
மாணவனின் கருத்தை யாரும் கேட்பதில்லை
பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கின்றனர்
அனைவரையும் ஒரே பாடத்தை படிக்குமாறு வற்ப்புறுத்த படுகின்றனர்
ஏற்றுக்கொள்ள மறுக்கும் குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர்
அதனால்தான் இன்று கற்பது ஒன்று
வாழ்க்கையில் நடப்பது ஒன்று.
உதாரணதிற்கு பலர் படிப்பது பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது கணக்கு
ஆனால் தொழில் புரிவது நடிகனாக பாடகனாக என அவர்கள் படித்த துறைக்கு தொடர்பில்லாத துறைகள்
இதனால் பெற்றோருக்கும் நஷ்டம் அரசுக்கும் நஷ்டம்
இன்று யாருக்கும் சுதந்திரமில்லை
யாராவது யார் மீதாவது எதையாவதை திணித்து அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதுடன் அவர்களின் நிம்மதியையும் இழக்கின்றனர்
இந்நிலை மாறுவது எப்போதோ?
இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் ....
நல்லா புரிந்தது...
எதார்த்தமான நடை! எளிமையான நடை...தொடருங்கள் தொடர்கிறோம்.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
இந்த பதிவு ஒவ்வொரு மாணவர்களிடம் சென்றடையவேண்டும்
நல்ல பதிவு விளக்கங்கள் நல்லா இருக்கு.
இந்த பதிவினைப் படித்த பின் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டேன்...
மூன்றிற்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்கியமைக்கு நன்றி..
இதனைக் கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தமைக்கு பாராட்டுகள்!
சிந்தனைக்கு விருந்தாக அமைந்த அருமையான பதிவு. வாழ்த்துகள்.
அருமையான பதிவு! தொடருங்கள்..
வளரும் பயிர்களுக்கோர் சிறந்த பதிவு நன்றி...
பகிர்வு அருமை..வாழ்த்துகள்
நண்பரே எம்முடைய பள்ளி நாட்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டீர்கள்...
நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குறேன்...
@Yoga.S.FR அவர்களுக்கு, நன்றி யோகா சார்!
@!* வேடந்தாங்கல் - கருன் *! அவர்களுக்கு, நன்றி நண்பா!
@ராஜா MVS அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!
@veedu அவர்களுக்கு, கணக்கு ஆசிரியரின் கண்டிப்பு பிற்காலத்தில் நமக்கு தித்திப்பு. நன்றி நண்பரே!
@புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கு, ஐயாவின் கருத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.
@enpaarvaiyil அவர்களுக்கு, அனுபவம் தானே வாழ்க்கை நண்பரே!
@Agarathan அவர்களுக்கு, கண்டிப்பாக தொடருவேன் நண்பரே!
@விச்சு அவர்களுக்கு, நன்றி ஐயா!
@atchayaஅவர்களுக்கு, நன்றி சகோதரி!
@நண்டு @நொரண்டு -ஈரோடு அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி ! நண்பரே!
@Lakshmiஅவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா!
@FARHAN அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே!
@ஆளுங்க (AALUNGA) அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே!
@ரா.செழியன். அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே!
@குடிமகன் அவர்களுக்கு, கண்டிப்பாக தொடருவேன் நண்பரே!
@♔ம.தி.சுதா♔ அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
#மாணவர்களே : தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அந்த குறளின் பொருளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். திருக்குறளில் இல்லாத விசயமே இல்லை# உண்மை ... எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம் ...
http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html
பதிவை படித்து அறிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், தெரிந்து கொண்டேன்.
வித்தியாசமான பதிவு பாஸ்.
மிகச் சிறப்பான பகிர்வு!
Arumai.
தெளிவாய் ஒண்ணும் புரியலை ஹிஹிஹி!
Supper this is the art of teach
அறிந்தது தான் - தெரிந்தும் புரிந்தும் கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி
அறிந்து,தெரிந்து,புரிந்து கொண்டேன். மிகவும் நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.
பல விசயங்களை அறிந்து கொள்ள தெளிவான பதிவு புரிந்து கொண்டேன் நண்பரே.நன்றி பகிர்வுக்கு.
மாப்ள உண்மைதான்...முக்கால் வாசி விஷயங்கள் அனுபவத்தோடு வந்து சேருகின்றன!
நல்லாயிருக்கு.தொடருங்க.
சார் மன்னிக்கவும்..
இப்போ தான் வாசித்தேன்....
இருந்தாலும் நாம நிறைய பேசியிருக்கோம். வாழ்த்துக்கள்.
உங்கள் விளக்கங்கள் அருமை! நல்ல விஷயங்கள் எப்போதும் தாமதமாத்தான் புரியும்......! ஆசிரியரை நினைவுகூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்!
நல்ல பகிர்வு த.ம.10
படிப்பதற்குத் தகுதியான புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டும். அந்த புத்தகங்களை எவ்வித பழுதில்லாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்த பின் அந்த புத்தகத்தின் தகுதிக்குத் தகுந்த படி நீங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.
திறமையான ஆசிரியரால், படிப்பில் ஆர்வத்தினை உருவாக்கி, சான்றோனாக்கும் வல்லமை ஒரு ஆசிரியனுக்கும், ஒரு மாணவனின் தந்தைக்கும் உண்டு.
பதிவில் மிகவும் எளிமையாக வலியுறுத்தி, உணர்த்தியிருப்பது அருமை.
அருமையான பகிர்வு, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...!!
தனபாலன் பகிர்விற்கு நன்றி.
நல்லதொரு பகிர்தல் நண்பரே
arumai..
நன்று
அறிந்தது. புரிந்தது. தெரிந்தது. பகிர்வுக்கு நன்றி
தனபாலன் நம்முடைய அனுபவங்கள்தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச்செல்கின்றன. கணித ஆசிரியர் தமிழாசிரியராக இருந்த சூழல் அருமை. ஆகவே அறிந்ததையும் அதனை நன்றாகத் தெரிந்துகொண்டதையும் அதனைப் புரிந்து இன்று எங்களுக்குக் கூறுவதையும் உணரும்போது அதன் அருமை புரிகிறது. தொடர்ந்து இதுபோல வேறுபட்ட அனுபவங்களைப் பகிரத் தாருங்கள். வாழ்த்துக்கள்.
நீங்கள் செய்யும் செயலானது திருந்தச் செய்ய வேண்டுமென்றால் "அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல்" இந்த மூன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதைப் பற்றி உங்களுக்கு சரியாக அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் பல நேரங்களில் இந்த மூன்றும் உதவும்...." என்று கூறினார்.//
உங்கள் ஆசிரியர் சொன்னது நன்றாக பயன் படுகிறது உங்களுக்கு.
நல்ல பதிவு.
அருமை
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" தேவையான பகிர்தல், பாராட்டுக்கள் நண்பரே!
உங்கள் விளக்கங்கள் அருமை... நல்ல விஷயங்கள் எப்போதும் தாமதமாத்தான் புரியும்...ஆசிரியரை நினைவுகூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...
பகிர்வு அருமை.
எங்கள் 11ம் ஆண்டு கணக்கு வாத்தியாரும் இப்படித் தான். கணக்கைப் புரிந்து செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். பசுமையான நினைவுகளை மீட்டுத் தந்தீர்கள். மாணவர்களாக இருக்கும் காலங்களில் ஆசிரியர்களின் அருமை தெரிவதில்லை. இப்போது தான் அவர்கள் வசங்களின் அர்த்தங்கள் புரிகின்றது. பகிர்விற்கு நன்றி நண்பரே...
நல்ல கருத்து நண்பரே
அனைத்திலும் வாக்களித்தேன்
தமிழ் மணம் 14
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்...
அழகான எளிமையானா எழுத்து நடை..பாராட்டுக்கள் நண்பரே..தொடர்ந்தும் எழுதுங்கள்..
ஒன்று நன்றாக விளங்குகிறது தனபாலன். பதிவுலகு பற்றி நீங்கள் நன்றாக அறிந்து, தெரிந்து புரிந்து செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள்
ஒரு நல்ல ஆசிரியராய்த் தம் பணியைச் சிறப்புற செய்த ஆசிரியருக்கும், ஒரு நல்ல மாணவனாய் அவர் சொன்னதைப் பின்பற்றி இன்றும் அவரது கருத்துக்களைப் பரப்பி பலரும் பயனடையச் செய்யும் தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டும். மிகவும் பயனுள்ள பகிர்வு.
@மதுமதி அவர்களுக்கு, நன்றி sir!
@தமிழ்கிழம் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@ananthu அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@N.H.பிரசாத் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@துஷ்யந்தன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@சென்னை பித்தன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@துரைடேனியல் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@கிரி ராமசுப்ரமணியன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@கவி அழகன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@மனசாட்சி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@RAMVI அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@கோகுல் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@விக்கியுலகம் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@asiya omar அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@K.s.s.Rajh அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@atchaya அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@MANO நாஞ்சில் மனோ அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@கும்மாச்சி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@"என் ராஜபாட்டை"- ராஜா அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@அப்பாதுரை அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@ராஜி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@ஹ ர ணி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@கோமதி அரசு அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@rajvel அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@ஈழவன் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@ரெவெரி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@ஷர்மி
அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
@M.R அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@mum அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@சுபேஸ் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
@G.M Balasubramaniam அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி Sir!
@கீதா அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி!
Hi i am JBD From JBD
Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com
@Part Time JobsThank You Sir!
அறிந்து கொண்டேன்
@சிவகுமாரன் அவர்களுக்கு, நன்றி நண்பரே!
சகோதரா! எனக்குத் தலை சுற்றுது ஆயினும் உமக்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
உயரிய சிந்தனையை அனுபவ ரீதியாகத் தந்தமை சிறப்பாக உள்ளது, பாராட்டுக்கள் நண்பா!
தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
@kovaikkaviஅவர்களுக்கு, மிக்க நன்றி சகோ!
@ஈழவன்அவர்களுக்கு, மிக்க நன்றி நண்பரே!
vvaalththukkal... nalla pakirvu..!
சிறப்பான கட்டுரை தனபாலன் சார்.திண்டுக்கல்லில் எந்தப் பள்ளியில் படித்தீர்கள்?
நல்ல தகவல் நன்றி நண்பா
நல்ல தகவல் நன்றி நண்பா
மதுரை சரவணன், Murugeswari Rajavel, ANBUTHIL - அனைவருக்கும் மிக்க நன்றி !
கருத்து பதிய இங்கே சொடுக்கவும் !