சனி, 3 ஆகஸ்ட், 2019

நெருக்கடி...

(படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது...? உடைந்து விட்ட சிலையினிலே அழகேது...? பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது...? பனி படர்ந்த பாதையிலே பயணமேது...? இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...? இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...?

சனி, 13 ஏப்ரல், 2019

பதடி யார்...?

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும், ஈனர்க் குலகந்தனில் - கிளியே... இருக்க நிலைமையுண்டோ...? நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே... சிறுமையடைவாரடி... நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி - கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி...