நன்றி மறவாத நல்ல மனம் போதும்...
குறள் எழுதி விட்டுப் பதிவு எழுதுகிறாயா...? இல்லை பதிவுக்கேற்ற குறள் சொல்லுகிறாயா...?" இந்த பலரின் சந்தேகத்தைப் பல பதிவுகளில் கருத்துரையில் தெரிவிக்கிறார்கள்... உனது பதில் என்ன...? இரண்டும் தான் மனமே... வேண்டுமானால் குறள் தெரியாமல் இப்பதிவை எழுதி விடுகிறேன்... குறள் எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி... வாழ்வில் பல சமயங்களில் அதை அனுபவித்து இருக்கிறேன்... உணர்ந்து இருக்கிறேன்... திருந்தியும் இருக்கிறேன்... சந்தித்த ஒவ்வொரு மனிதரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு மறக்காமல் இருக்கின்றேன்... அவைகள் என்னவென்றால்... ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்... ஆனால் ஒன்று தான்...!
