புதன், 22 பிப்ரவரி, 2017

மும்முனை தாக்குதல்...!


© தாயைக் காத்த தனயன் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫ தங்கரதம் போல வருகிறாள், அல்லி தண்டுகள் போல வளைகிறாள் (2) குங்குமப் பூப்போல சிரிக்கிறாள், இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் (2) காலையில் மலரும் தாமரைப்பூ, அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ (2) இரவில் மலரும் அல்லிப்பூ, அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ (2) கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...! அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா...! வாருங்கள் நண்பர்களே... அய்யனின் காதல் கோட்டைக்கு செல்வதற்கு முன்...