இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

→https://bloggersmeet2015.blogspot.com/← எனும் நமது இணைய தளத்திலிருக்கும் →"போட்டிக்கு வந்த படைப்புகளை"← படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் படிவத்தில் தேர்வு செய்ய வேண்டும்...
உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு! விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)
நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்பு போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
இந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி, விழா அரங்கில் தவிர வேறெங்கும் தன் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட "அந்த" நல்ல உள்ளத்திற்கு நன்றி
போட்டிக்கான விதிமுறைகள் :
(01) யார் வேண்டுமானாலும் இந்த விமரிசனக் கருத்துப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழ் மின் இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்...முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொண்டோர் படிவத்தில் பதிந்தவாறு தகவல்கள் வெளியிடப்படும்.
(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ஐந்து போட்டிகளிலும் "மூன்று பரிசுக்குரியவர் யார்...?" என்பதைப் படிவத்தில் தேர்வு செய்யாமல், படிவத்தை அனுப்ப முடியாது...!
(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.
(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.
(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.
(06) நடுவர்களின் மற்றும் இந்தப் போட்டி - இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.
(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.
(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம் உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அநாமதேய பங்கேற்பை ஏற்பதற்கில்லை.
(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.
(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.
என்ன நண்பர்களே... எளிதாக உள்ளதா...? இன்னும் எளிதாக "போட்டிக்கு வந்த படைப்புகள்" பதிவில் இப்படிவம் இதோ சொடுக்குக : https://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html நன்றி...
விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலை அறிய இங்கே சொடுக்கவும்

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
Ungal aarvathirkum, ualapirkum vaalthukal.
பதிலளிநீக்குஅருமை சகோ. அனைத்தையும் படித்துவிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குபோட்டி தான் அசத்தல் என்றால் பதிவிட்ட விதவும் படிவம் தந்த நுட்பமும் ரொம்ப அழகு சகோதரர். மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குபடிவம் தவிரவும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்பவரையும் விட்டுவிட வேண்டாம் அய்யா. (கிராமத்தில் ஊசி பார்த்து பயப்படு வோரைவிட, நகரத்தில் படிவம் பார்த்து பயப்படுவோர் அதிகம்) அதற்கென நமது மின்னஞ்சலில் ஒரு லேபிளைப் போட்டு வையுங்கள் அதை நாமே எடுத்து வரிசையில் சேர்த்துவிடலாம்.
பதிலளிநீக்குநம் தளத்தில் விமரிசனப் போட்டி என்று ஒரு "லேபில்" உருவாக்கியாச்சி ஐயா... நன்றி...
நீக்குஇணைப்பு : →http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html←
உங்களின் கடுமையான உழைப்புகென விழா குழுவினர் தனியாக உங்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு தரவேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கின்றேன்.
பதிலளிநீக்குஜோதிஜியின் இந்த கருத்தை நூறுசதவிகிதம் ஆதரிக்கிறேன் & வழிமொழிகிறேன்
நீக்குஎன்ன வேகம்! அப்பப்பா! அசந்து நிற்க வேண்டியுள்ளது தங்கள் ஒவ்வொருவர் பணியையும் பார்த்து.
பதிலளிநீக்குஅருமையான ஒரு முயற்சி...வாழ்த்துக்கள்...வெற்றி என்றும் தவழ...
பதிலளிநீக்குவலைப் பதிவு இல்லாதோர் இந்தப் பதிவுகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?
பதிலளிநீக்குஅதற்குள் படிவமும் தயாராகிவிட்டதா? உங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன். எல்லாவற்றையும் வாசித்த பிறகு மீண்டும் வருகின்றேன். மிகவும் நன்றி தனபாலன் சார்!
பதிலளிநீக்குஅண்ணா! அசத்துறேள்!!!
பதிலளிநீக்குசூப்பர் டிடி! களம் இறங்கிட்டீங்க!! அதாங்க உங்க களத்துல....அருமை!!!
பதிலளிநீக்குஉங்கள் பணி சீரிய பணி வாழ்க! டிடி!!
பதிலளிநீக்குபடிவம் அட்டகாசம்.
பதிலளிநீக்குடிடியின் வேகமும் திறமையும் கணினி நுட்ப அறிவும் பிரமிக்க வைக்கின்றன.வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்
அட்டகாசம் உங்கள் செயல்கள் அனைத்தும் சகோதரரே!
பதிலளிநீக்குநல்ல முயற்சி! நான் சில போட்டிப் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. நேரச் சிக்கல்தான் காரணம்.
இனித்தான் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்!
போட்டியில் தான் கலந்துகொள்ளாதவர்களுக்கு இந்த போட்டியிலாவது கலந்து கொள்ளுங்களேன் என்று வாய்ப்பைத் தந்த வலைப்பதிவர் சந்திப்பு விழா குழுவினருக்கும், தகவலைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குபோட்டி மேல் போட்டி வைத்தார்கள்
பதிலளிநீக்குஉறவுகளே!
போட்டிக்குப் பத்து ஆயிரமென
ஐந்து போட்டி தொடுத்தார்கள்
உறவுகளே!
போட்டி போட்டுப் படைப்பு அனுப்பிய
பதிவர்களை வாழ்த்தி முடிய முன்னரே
வாசகருக்கும் போட்டியாம்
உறவுகளே!
ஐந்து போட்டியில மூன்று வெற்றியை
வாசகரே மதிப்பிட்டு அனுப்பினால்
பரிசில் பத்து ஆயிரமென
அடுத்தொரு போட்டி அறிவிப்பாம்
உறவுகளே!
எல்லாம்
நல்லதொரு வெற்றியை நோக்கி
நடைபோட நம்மாளுங்க தயாரா?
டிடியோடு போட்டி போட எவராலும் முடியாது! அசத்தல்! டிடிக்குத் தான் எல்லாவற்றிலும் முதல் பரிசு கொடுக்கணும். :)
பதிலளிநீக்குவணக்கம் டி டி சார்,
பதிலளிநீக்குநான் நினைத்தேன் ஒரு படிவம் இருந்தால் நல்லா இருக்குமே என்று,,,,,
(அவ்வளவு சோம்பேறி,) அதற்குள்,,,,, அருமை, அருமை,,,, வாழ்த்துக்கள்,,,
நன்றி.
சுறுசுறுப்பு திலகமாய் அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை..அருமை.. திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரையை நானும் வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குகடுமையான உழைப்பு ஜி வாழ்த்துகள்
பதிலளிநீக்குஜி....அயராத உழைப்புக்கு வாழ்த்துகள். வலைப்பக்கத்தை தினமும் கடந்து போகும் போதெல்லாம் உங்களின் தொழில் நுட்பம் ஒரு ஆச்சர்யத்தை தந்த படியே இருக்கின்றன. ஜோதிஜி யின் கோரிக்கைக்கு நானும் வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குஎப்படியும் அனைவரையும் படிக்கவைத்து ஈடுபடுத்திவிடவேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது. விழாவிற்கான தங்களின் அயரா உழைப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை வலை சித்தரே!
பதிலளிநீக்குமதிப்பெண் விழ மறுக்கிறதே!
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு போட்டியா? வலைப்பதிவர் குழுவினர் கலக்குகிறீர்கள் போங்கள்! இதில், வலைப்பதிவர்கள் கலந்து கொள்வதை விட வலைப்பூ இல்லாத மக்கள் கலந்து கொள்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். வரவேற்கிறேன்!
பதிலளிநீக்குபடித்துக்கொண்டு இருக்கிறேன் வலை சித்தரே -சரஸ்வதி ராசேந்திரன்
பதிலளிநீக்குபரிசு பெற புதிய வாய்ப்புகள்! பெறப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமையான தொழில்நுட்ப படிவம்.ஜோதிஜீயின் கோரிக்கையை நானும் வழிமொழிகின்றேன்.
பதிலளிநீக்குசின்ன வயதில் அம்புலிமாமாவில் கடைசிப் பக்கங்களில் நிறைய போட்டிகளை வைத்து இருப்பார்கள். அப்புறம் பாலு சார் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது ஒருமுறை போட்டிக்கு மேல் போட்டி நடத்தி பரிசுகளைத் தந்தார்கள். அதற்கு அப்புறம் இப்போது தமிழ் வலையுலகில் போட்டிக்கு மேல் போட்டி பார்க்கிறேன்.. ஆனாலும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆஹா ஓஹோ என்று போக முடியாது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குசற்றும் சிரமமில்லாமல் எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு நுட்பமாக விபரங்களை சேகரித்து ஒழுங்குபடுத்தி எங்கள் முன் வைக்கும் பாங்கு மிகுந்த வியப்பைத் தருகிறது. இது கண்டிப்பாக தங்கள் ஒருவரால்தான் இயலும். நானும் இந்தப் போட்டிக்கு முயற்சிக்கிறேன். பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற கடுமையாக உழைக்கும் தங்களுக்கு என் பாராட்டுகளும். வாழ்த்துக்களும். நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடை பெற பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி முடிவுகளும் கண்டேன்
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் டிடி