🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015

வலையுலக உறவுகளுக்கு வணக்கம்... புதுக்கோட்டை வரும் அனைவருக்கும் இலவசமாக ரூ. 150 மதிப்புள்ள ஒரு நூலை வழங்கப் புதுக்கோட்டை விழாக்குழுவினர் முடிவு செய்து உள்ளார்கள்... அந்த நூல் :-


“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” 375 முதல் 400 வலைப்பதிவர்கள் வரை விவரங்களைத் திரட்டி, அதை சுமார் 150 முதல் 200 பக்கம் வரையிலான புத்தகமாக அச்சிட்டு, தமிழில் வலைப்பக்கம் எழுதி வரும் அனைவரைப் பற்றியும் அனைவரும் அறிய வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் புதுக்கோட்டை விழாக்குழுவினர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்... பதிவர்கள் அனைவரும் வலைப்பதிவர் வருகைப் பதிவுப் படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்யவும்...

விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம்... அதற்கு தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைப்பேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என, சுருக்கமாக... எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் 20/09/2015-க்குள் bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்...

நேற்றைய வலைப்பதிவர் சந்திப்பு 2015 தளத்தில் வெளியிட்ட பதிவிலிருந்து சேகரித்த தகவல்கள் :-

வலைப்பதிவர் கையேடு (விளம்பர விவரம்) :
1 x 8 (டெம்மி)அளவு – 500 பிரதிகள்.
முன், பின் அட்டைகள் மற்றும் விளம்பரங்கள் பலவண்ணம். மற்ற பக்கங்கள் ஒரே வண்ணம். தோராயமாக விளம்பரம் 25 பக்கம் உட்பட 150-175 பக்கம். ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் மூன்று வலைப்பதிவர் பற்றிய விவரம் வீதம் சுமார் 375 முதல் 400 வலைப்பதிவர் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்... பக்கம் விளம்பரத்தையொட்டி மாறலாம்...

விளம்பர நிர்ணயம் பற்றி :
கடைசி வெளி அட்டை ரூ.10,000 (பலவண்ணம்) (முன்பதிவு அமெரிக்கத் தமிழ்வலைப்பதிவர் திரு. விசுAwesome அவர்கள்)
உள் அட்டை முதல் பக்கம் ரூ.8,000 (பலவண்ணம்) (முன்பதிவு “மூன்றாம் சுழி“ திரு.அப்பாதுரை அவர்கள்)
உள் அட்டை கடைசிப் பக்கம் ரூ.7,000 (பலவண்ணம்)

உள்பக்க விளம்பர விகிதம் :
பலவண்ணம் – ரூ.3,000 (மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.1000)
ஒரே வண்ணம் – ரூ.1,500 (மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.500)

நண்பர்கள் யார் வேண்டுமானாலும் விளம்பரம் பெற்றுத்தரலாம். அதற்கான உழைப்பூதியம் 20 விழுக்காடு தரப்படும். இதில் வலைப்பதிவர் விவரங்கள் வெளியிடக் கட்டணமில்லை. அது தவிர வேறு நூல்கள் முதலான வெளியீடு பற்றி விளம்பரம் தரலாம்.

நூலில் பதிவரின் விவரங்கள் இப்படி இருக்கலாம்...! இதோ எடுத்துக்காட்டு :-

01. இலக்கியச் சாரல்
வலைப்பதிவர் பெயர் : சொ.ஞானசம்பந்தன், வயது : 89
கைபேசி எண் : 9597180709, வசிக்கும் ஊர் : புதுச்சேரி
வலைத்தள முகவரி : https://sgnanasambandan.blogspot.com
மின்னஞ்சல் முகவரி : s_gnanasambandam@yahoo.com
பதிவுகள் : தமிழ்மொழி வளர்ச்சி, அனுபவம், பொழுதுபோக்கு.

சிறப்பு தகவல்கள் : 11.02.1926-ல் புதுச்சேரி மாநிலத்துக் காரைக்காலில் பிறந்து, பிரெஞ்சு மொழி வழி மேனிலை வரை கல்வி பயின்றவர். அரசு தொடக்கப் பள்ளியில் பிரெஞ்சாசிரியராய்ப் பணியாற்றிய போதே தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராயும், தலைமை ஆசிரியராயும் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கற்ற பிறமொழிகள்: ஆங்கிலம், இலத்தீன், இந்தி. இயற்றிய நூல்கள்: 1. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி? 2. லத்தீன் இலக்கிய வரலாறு. 3. பிரெஞ்சு இலக்கிய வரலாறு. 4. மாப்பசான் சிறுகதைகள். 5. சிங்க வேட்டை. 6. மறைந்த நாகரிகங்கள்.

02. கொங்குத் தென்றல்
வலைப்பதிவர் பெயர் : C.பரமேஸ்வரன், வயது : 53
கைபேசி எண் : 9585600733, வசிக்கும் ஊர் : ஈரோடு
வலைத்தள முகவரி : https://konguthendral.blogspot.com
மின்னஞ்சல் முகவரி : paramesdriver@gmail.com
பதிவுகள் : சமூக விழிப்புணர்வுப் பதிவுகள்.

சிறப்புத் தகவல்கள் : சமூக நலன் கருதி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பைத் துவக்கி அதன் விவரங்களைப் பதிவிட https://consumerandroad.blogspot.com வலைப்பக்கத்தைத் துவக்கி மற்றும் consumerandroad@gmail.com மின்னஞ்சலைத் துவக்கி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி கண்கள் பாதுகாப்பு, கண் தானம் பற்றியும் விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு. மைய அலுவலகம் : சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் - 638402.

03. தென்றல்
வலைப்பதிவர் பெயர் : கீதா M, வயது : 46
வசிக்கும் ஊர் : புதுக்கோட்டை
வலைத்தள முகவரி : https://velunatchiyar.blogspot.com
மின்னஞ்சல் முகவரி : mgeetha122@gmail.com
பதிவுகள் : தமிழ்மொழி வளர்ச்சி, கதை, கவிதை, படைப்பிலக்கிய பதிவுகள், சமூக விழிப்புணர்வு, அனுபவம், பொழுதுபோக்கு.
சிறப்புத் தகவல்கள் : முகநூலில் தேவதா தமிழ் என்ற பெயரில் எழுதி வருகிறார்... சென்னை கின்னஸ் ரெக்கார்டிற்காக தொடர் கவிதை வாசிக்கும் போட்டியில் கலந்து கொண்டு "புரட்சித்தென்றல்" என்ற பட்டம் பெற்றுள்ளார்... புதுகையில் இயங்கி வரும் கவிராசன் அறக்கட்டளை மூலம் 2014 ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்... வேலுநாச்சியார் பற்றிய ஆய்வு நூல், "விழி தூவிய விதைகள்" கவிதை நூல், "ஒரு கோப்பை மனிதம்" கவிதை நூல், ஆகிய மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்... புதுகையில் இயங்கி வரும் ஆனந்த ஜோதி இதழ் "கவிக்குயில்" என்ற பட்டம் வழங்கியுள்ளது... புதுகையில் உள்ள இலக்கியக்கழகங்கள், சமூக நற்பணி மன்றங்களில் இணைந்து செயல் பட்டு வருகிறார்...

மேலே உள்ள மூன்று தளங்களின் விவரங்கள், படிவத்தில் அவர்கள் அனுப்பியதன் மூலம் (முக்கியமாகப் பிற குறிப்புகள் என்பதிலிருந்து) கொடுக்கப்பட்டுள்ளது... "ஆமா, எங்கே விவரங்கள்..."? என்று கேட்பது எனக்கிங்கே கேட்கிறது... ஆர்வமாக, ஆவலாக, பிடித்த நூலைப் பிரித்துப் படிப்பது போல்... இங்கே சுட்டியால் மேலே உள்ள ஒவ்வொரு தளத்தின் அருகே சொடுக்காமல் கொண்டு சென்று வாசித்து விட்டு, இடது புறமாகச் சுட்டியை எடுத்து விடவும்... பதிவு செய்த / பதிவு செய்யப் போகிற தகவல்கள் பொருத்தும், வலைப்பதிவர் கையேட்டின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்... நன்றி...

ஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! பகிர்வு புதுப்பிக்கிறேன்... இன்று வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அறிய இங்கே சொடுக்கவும்... நன்றி...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம் தனபாலன் ஐயா !

    தங்கள் பணி தொடரவும் வலைப்பதிவர் விழா சிறப்புறவும் நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நலம் !
    தம + 1

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!! தொழில்நுட்பப் புயலே!!!! கலக்குறீங்களே!!!

    பதிலளிநீக்கு
  3. நன்று. கே ஜி ஜியிடம் சொல்லி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் கையேடு மிக நல்ல முயற்சி.
    பிற குறிப்புகள் பகுதியில் என்னைப்பற்றிய விவரங்கள் எதுவும் தராமலே படிவத்தை அனுப்பிவிட்டேன், மீண்டும் அதில் விவரங்களை சேர்க்கமுடியுமா?
    வலைப்பதிவர் சந்திப்பிற்காக தங்களின் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள்!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P.Senthilkumar அவர்களுக்கு : முதலில் முக்கியமான ஒரு கேள்வியை கேட்டமைக்கு நன்றி... இப்பதிவின் நோக்கமே கையேட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதே... தாங்கள் மறுபடியும் தங்களின் விவரங்களை படிவத்தில் பதிந்து அனுப்பவும்... நன்றி...

      கருத்திட வரும் அனைவரும் இதை கவனம் கொள்ளவும்...

      நீக்கு
    2. மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா,
      வணக்கம்.தாங்கள் உட்பட புதுக்கோட்டை விழாக்குழுவினருக்கு சீரிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.என்னைப் பற்றிய விடுபட்ட விவரங்களை அனுப்பி வைக்கிறேன்.முடிந்தால் சேர்க்கவும்.அல்லது திருத்தி அமைக்கவும்.நன்றிங்க..
      என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,9585600733
      சத்தியமங்கலம்.
      ஈரோடு மாவட்டம்.

      நீக்கு
  5. அனைத்தும் ம் சிறப்புற வாழ்த்துக்கள் ....! வலைப் பதிவர் திருவிழா சும்மா அந்த மாதிரி களை கட்டுதே .......ம்..ம் நன்றி விபரத்திற்கு.

    பதிலளிநீக்கு
  6. அய்யா அருமை நன்றி. ஆனால் இதிலும் ஒரு திருத்தம் வேண்டுகிறேன். இயன்றவரை பெண்பதிவர்கள் புகைப்படமும், செல்பேசி எண்ணும் தவிர்க்கலாம். அனைவரின் மின்னஞ்சல் அவசியம். பதிவர் படம் வேண்டாமெனில் அவர்களின் பதிவுக்கான முத்திரைப் படம் (லோகோ?) போடலாம்.அவரே சொல்லிக்கொள்வது என்பதை மாற்றிப் படர்க்கையில் போடலாம்...இது என் கருத்தே. பதிவர் கருத்தே இறுதியானது. தொடர்ந்து தினமும் பட்டியலைப் புதுப்பிப்பது சாதாரணமல்ல..நீங்கள் அசாதாரணரல்லவா? நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு : நூல் அச்சிடும் போது வேண்டாதவைகளை தவிர்த்து விடலாம்... மேலும் படர்கையில் தான் போட வேண்டும்... இது சும்மா ட்ரைலர்... (ட்ரையல்...!) நன்றி ஐயா...

      நீக்கு
    2. முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு : நீங்கள் விரும்பியபடி சிறிது மாற்றம் செய்து விட்டேன்... நன்றி...

      நீக்கு
  7. ஆஹா என் பதிவு அறிமுகப்படுத்தியுள்ளீர்களா...நன்றிநன்றி

    பதிலளிநீக்கு
  8. எதையும் முன்கூட்டியே சொல்ல இயலாத நிலை. மனம் என்னவோ புதுக்கோட்டை பதிவர் விழாவில்தான்

    பதிலளிநீக்கு
  9. தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015 - மகிழ்ச்சியான நல்ல தகவல்தான். புதுக்கோட்டை விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசம் என்றால் பல வலைப்பதிவர்களுக்கு நூல் கிடைக்காமலேயே போய்விடும். எனவே நோட்டீஸ் போல ( முக்கிய அழைப்பாளர்கள் தவிர) அனைவருக்கும் இலவசம் என்பதனைத் தவிர்க்கவும். முன்பதிவு செய்த வலைப் பதிவர்களுக்கு மட்டும் விழா மண்டபத்திலேயே நூறு ரூபாய்க்கு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அய்யா, விளம்பரம் வாங்குவதே புதுக்கோட்டை விழாவிற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகத் தரவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் விரும்புவோர் பிரதிகளை அங்கேயே விலைகொடுத்தும் வாங்கிச் செல்லவே ரூ.150 என்று சொல்லி 500பிரதிகள் அச்சிடத் திட்டம்! (400பேர் வரை வலைப்பதிவர் வருகை இருக்கலாம் என்பதாக...?)

      நீக்கு
  11. அட கலக்கிட்டீங்க/கலக்குகின்றீர்கள் டிடி!! அசாத்திய உழைப்பு! பாராட்டுகள்! வாழ்த்துகள் !! டிடி!!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் சகோ...
    போன முறை மதுரையில் கலந்துக் கொண்டேன் ..
    இம்முறை கலந்துக் கொள்ள முடியவில்லை ...
    வருத்தமாகவே உள்ளது..

    பதிலளிநீக்கு
  13. தகவலுக்கு நன்றியும்...வாழ்த்துக்களும்.....

    பதிலளிநீக்கு
  14. என்ன சொல்வதெனத் தெரியவில்லை சகோதரரே!
    வியப்பின் உச்சியில் நிற்கின்றேன்!
    நிறைந்த தொழில் நுட்பமுடன் தரும் விடயங்கள்
    மிக அழகும் சிறப்புமே!

    நன்றே விழா நடைபெற வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் ஜி அசத்தல் தொழில் நுற்பம் எனது விடயங்கள் வந்து சேர்ந்து விட்டதா ?

    பதிலளிநீக்கு
  16. பதிவர் விழாவின் சிறப்பம்சம் பதிவர் கையேடு தான். திரு தமிழ் இளங்கோ அவரகள் சொல்லியதை நானும் வழிமொழிகிறேன். சிரமப்பட்டுத் தகவல்களைச் சேகரித்து பிரிண்ட் செய்து 150 ரூபாய் பெறுமானமுள்ள கையேட்டை இலவசமாகக் கொடுப்பது நல்லதல்ல. எல்லோருக்கும் கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு. விழாவில் கலந்து கொள்வோருக்கு முன்னுரிமை கொடுத்து நூறு ரூபாய்க்குத் தள்ளுபடி விலையில் கொடுக்கலாம். எத்தனை மீறுகிறது என்பதைப் பொறுத்து மற்றவர்களுக்கு என்ன விலையில் கொடுப்பது என்பதைப் பரிசீலிக்கலாம். நானும் பிற தகவல்கள் எதையும் எழுதாமல் அனுப்பிவிட்டேன். மீண்டும் அனுப்புகிறேன்.தகவலுக்கு நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கருத்தினை வழிமொழிந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. நானும் முதலில் கையேட்டிற்கான விவரங்களை அனுப்பும் போது எனது புகைப்படம் அனுப்ப மறந்து விட்டேன். எனவே அனுப்பிய மின்னஞ்சலை DELETE செய்துவிட்டு, மறுபடியும் புகைப்படத்துடன் அனுப்பி வைத்தேன். (இது ஒரு தகவலுக்காக மட்டுமே)

      நீக்கு
  17. அண்ணா அசராமல் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள். ஆம் நீங்கள் அசாதரணமானவர்.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் தனபாலன்

    நண்பர் புதுக்கோட்டை முத்து நிலவன் அவர்களின் பணீயும் - இலவச கையேடு ( 150 ரூபாய் மதிப்பு ) வருகை தரும் அனைத்துப் பதிவர்களுக்கும் விழாக் குழுவினர் வழங்குவதாகத் தீர்மானித்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது.

    திரு விழாவில் நிச்சயம் கலந்து கொள்ளுகிறோம்.

    புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    கலந்து கொள்ளும் அனைத்துப் பதிவர்களுக்கும் - விழாக்குழுவினருக்கும், முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்தும் நல்ல முறையில் திருவிழா சிறப்புட நடைபெற வாழ்த்தி , கலந்து கொள்ள இருக்கும் அனைத்துப் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதற்கும் பெருமை அடைகிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். மதுரைக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் பலமுறை தங்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் கடைசிவரை முடியாமலே நண்பர்கள் ரமணி, சரவணன் இருவரை மட்டும் பார்த்துப் பேசி வந்தோம். தங்களின் அன்பும் ஆலோசனைகளும் தேவை.. விழாவுக்கான தனி வலைப்பக்கம் பார்த்து, பின்னூட்டத்தில் தங்களின் கருத்தை எழுதிட வேண்டுகிறேன்... அப்புறம்... பேசுவோம். நன்றி.

      நீக்கு
  19. இளைஞர்களின் உழைப்பு அருமை.

    திரு. திருக்குறள் பொன். தனபாலன் அவர்களது organized planning and execution என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

    அவர் எல்லா வளங்களுடன் நீடுழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  20. அண்ணா, உங்கள் அயாராத கடின உழைப்பு தெரிகிறது. அதற்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. தங்கள் கண்ணோட்டத்தினை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே,

    புதுக்கோட்டை பதிவர் திருவிழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    தங்களின் கடும் உழைப்பிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. தொழில்நுட்ப புலி என்பதை பறைசாற்றுகின்றது தொகுப்பு! விழா வெற்றியடைட்டும். வலைப்பதிவு கையேட்டுக்கு என் விபரத்தையும் வார இறுதியில் அனுப்பிவைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  24. ஒவ்வொருபதிவுக்கும்உங்கள் அலங்காரங்கள் அட்டகாசம்.
    உங்கள் மென்பொருள் புலமை மென்பொருள் பொறியாளர்களின் அறிவை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  25. கடும் உழைப்பு! வாழ்த்துகள் வலைச் சித்தரே!

    பதிலளிநீக்கு
  26. பிரம்மிக்க வைக்கும் உழைப்பு ! எனது சார்பில் ஒரு வாழ்த்துக்கவிதை பதிவு செய்திருக்கிறேன் ! வாசிக்கவும் !

    http://psdprasad-tamil.blogspot.com/2015/09/wish-bloggermeet-2015.html

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும் வாழ்க வாழ்க...

    பதிலளிநீக்கு
  28. தொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  29. தங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று, வாழ்த்துக்கள். விழா சிறக்க,,,,,,,,

    பதிலளிநீக்கு
  30. தங்கள் கடின உழைப்பின் பலனாக விழா பெரும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. தகவலுக்கு நன்றி.பிரம்மாண்டமான விழாஏற்பாடுகள்

    பதிலளிநீக்கு
  32. வலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் தினமும் பதிவு செய்து, நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தமிழ் சமுதாயத்திற்க்கும் பல பல செய்திகளை தந்து , உலகத்தமிழர்களை ஒன்று சேர வழிவகை செய்யும் வலைப்பதிவர் அனைவருக்கும் எனது நன்றியினை பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. அருமை அண்ணா ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்

    பதிலளிநீக்கு
  34. சகோ என்னுடைய கைபேசி எண்ணை அதில் பதிந்துள்ளேன். அதை கையேட்டில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் அம்மாவுக்கும் என்னுடைய எண்ணையே அளித்துள்ளேன். அதையும் வெளியிட வேண்டாம் எனப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்றுதான் முழுமையும் பார்த்தேன். புகைப்பட இணைப்பை எப்படி அனுப்புவது.. ?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி Thenammai Lakshmanan அவர்களுக்கு : நீங்கள் சொல்வது போல் செய்து விடலாம்... உங்கள் தளத்திலுள்ள அல்லது முகநூலில் உள்ள படத்தின் மீது ரைட் கிளிக் செய்தால், "copy image address/url" என்பதை தேர்ந்தெடுத்து, அதை "bloggersmeet2015@gmail.com" மின்னஞ்சலுக்கு அனுப்பவும்... நன்றி...

      நீக்கு
  35. மைதிலி சொன்ன தொழில் நுட்பப் புயலே என்ற பட்டம் அருமையா இருக்கு டிடி சகோ. வாழ்த்துகள். :)

    நன்றி கீதா. உங்கள் வரவேற்புக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். :)

    பதிலளிநீக்கு
  36. டிடி சகோ நாங்கள் போட்டிக்கு அனுப்பிய இடுகைகளை எங்கே படிக்கலாம். ? இணைப்புகொடுக்க முடியுமா.

    பதிலளிநீக்கு
  37. விழா சிறக்க வாழ்த்துக்கள் .....
    வர முடியாத வருத்தத்துடன் ......
    பொன்னுசாமி .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.