🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள்

தமிழ் வலைப் பதிவுலகத்திற்கு வணக்கம்... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவும், தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் பற்றிய விவரங்கள்...


போட்டிக்கான பொருள் :
(பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தர வேண்டும்)

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கப்பூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
போட்டியின் விதிமுறைகள் :

01. படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

02. இப்படைப்பு, // தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா-2015-புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015"-க்காகவே எழுதப்பட்டது // என்னும் உறுதிமொழியும் இணைக்கப்பட வேண்டும்.

03. // இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது // என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

04. வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.

05. 11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் பிரமாண்ட தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினர் (TAMIL VIRTUVAL UNIVERSITY (https://www.tamilvu.org/) வழங்கும் உரியப் பரிசுத்தொகையுடன், பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

06. உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். கவனிக்கவும் :அனைத்து வகைத் தொடர்பிற்கும் bloggersmeet2015@gmail.com மின்னஞ்சல் மட்டுமே.

07. தளத்தில் படைப்புகளை போட்டி வகைக் குறிப்புடன் (Labels) வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும் போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர் - இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ்விவரங்கள் இன்றி வரும் அநாமதேய படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேண்டாம் எனில் அதனை மறவாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

08. வெற்றி பெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

09. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 30-9-2015 (இந்திய நேரம் இரவு 11:59 க்குள்)

10. நடுவர்களின் முடிவே இறுதியாக இருக்கும்.
பரிசுகள் விபரம்
(சுட்டியைக் கீழுள்ள கட்டத்தில் கொண்டு வந்தும் ரசிக்கலாம்)

5 வகைப் போட்டிகள் – வகைக்கு 3 பரிசுகள்
முதல் பரிசு : ரூ. 5,000 | இரண்டாம் பரிசு : ரூ. 3,000
மூன்றாம் பரிசு : ரூ. 2,000 | ஒவ்வொரு பரிசுடனும்
'தமிழ்க்களஞ்சியம்' இணையம் வழங்கும் மதிப்புமிகு
வெற்றிக் கேடயம்...! இவ்வாறாக
ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000...!


தமிழ்க் களஞ்சியம் செல்ல படத்தின் மீது சொடுக்கவும்...


                    வருகையைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

                    வருகைப் பட்டியலை அறிய இங்கே சொடுக்கவும்

                    நன்கொடை விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்



இந்த உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியின் விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி, அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்... வருகைப்படிவத்தோடு உள்ள பதிவர்கள் சந்திப்பு திருவிழாவின் முந்தைய அறிவிப்பை (Side Gadget) இணைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்... அதே போல் போட்டியின் விபரங்களைக் கொண்ட அறிவிப்பை இணைக்கும் வழிமுறையைக் கீழே கொடுத்துள்ளபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்... நன்றி...

முதலில் கீழ் பெட்டியுள்ள script முழுவதையும் சுட்டியால் select செய்து விட்டு, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C என்பதை அழுத்தி COPY செய்கிறோம்...
உங்களின் தளத்தில் உள் நுழைந்தவுடன் இடது புறத்திலுள்ள Layout என்பதைச் சொடுக்கவும்... »» வலது புறத்திலுள்ள Add a Gadget சொடுக்கி, வரும் popup திரையில் HTML/JavaScript என்பதைத் தேடி, அதைச் சொடுக்கவும். »» அங்கு Content என்பதில், Ctrl key-யை அழுத்திக் கொண்டு V என்பதை அழுத்தவும் »» அதற்கு மேலுள்ள Title என்பதில் மின்தமிழ் இலக்கியப் போட்டியின் விவரங்கள் அறிந்து கலந்து கொள்ளக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும் என்று தலைப்பு கொடுத்து விட்டு »» save என்பதைச் சொடுக்கவும்... தளத்தின் அகலத்திற்கேற்ப Side Gadget-யை சரி செய்ய : உங்கள் தளத்தில் இணைத்த Gadget-ன் கீழுள்ள "Edit" என்பதைச் சொடுக்கி, script-ல் width="300" என்பதை அவரவர் தளத்திற்கேற்ப (Example : width="250") என்று மாற்றலாம்... நன்றி...
கனித்தமிழ்ப் பதிவர்களே கலந்து கொள்ளுங்கள்...
கணினித் தமிழால் பரிசுகளை வெல்லுங்கள்...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அய்யா, தமிழ் களஞ்சியத்திற்கு (http://www.tamilkalanchiyam.com) கொஞ்சம் இணைப்பு தர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
    “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து
    நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் பற்றிய விவரங்களை விளக்மாகத் தந்தது கண்டு மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.2.

    பதிலளிநீக்கு
  3. கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
    தம+


    பதிலளிநீக்கு
  4. பதிவர்களுக்கு ஊக்கம் தரும் உன்னத ஏற்பாடு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. விழா இப்பொழுதே களை கட்டத் தொடங்கிவிட்டது ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  6. கலந்துகொள்ள முடியுமா தெரியவில்லை.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  7. போட்டியில் பங்கேற்போருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை தனபாலன் சகோ. பகிர்வுக்கு நன்றி. முயற்சிக்கிறேன். :)

    ஆனால் கார்த்திக் சரவணன் சொன்னதுதான். :) அனைவருக்கும் வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  9. மகத்தான விழா.. சிறப்புடன் நிகழ்வதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. வெல்லப் போவது யாரு ,காண காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  11. பங்கு பெறப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. சூப்பரா பகிர்ந்திருக்கிங்க சகோ.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. போட்டியில் தகுதியுள்ள பலர் பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் டிடி சார்,
    பகிர்வுக்கு நன்றிகள்,,,,,,,,

    பதிலளிநீக்கு
  15. தமிழ் இணையக் கல்விக் கழகம் வலைப்பதிவர் திருவிழாவைக் கடத்திச்( hijack) செல்லும் வாய்ப்பு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  16. அழகான போட்டி விரிப்பு
    தெளிவான முடிவோடு
    போட்டியில் பங்குபற்றலாம்...

    பதிலளிநீக்கு
  17. மிகத்துல்லியமான விளக்கமுடன்
    போட்டி அறிவிப்பு மிக அருமை சகோதரரே!!

    பங்கு கொள்வோருக்கும் பரிசினைத்தட்டிப் போகவுள்ளோருக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. போட்டியில் பங்கெற்கப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. கலக்குகிறீர்கள் ஐயா! பதிவுலகம் முதல்முறையாக அரசுடனே கைகோத்து இவ்விழாவை நடத்துவதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது! இதோ, உடனே இணைப்பைத் தந்து விடுகிறேன் தளத்தில்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் மனம் நிறைந்த அடவான்ஸ் வாழ்த்துலகள் மா நாடு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  21. போட்டியின் விபரம் கலக்கல் போட்டியிடுவோருக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. நலம் கட்டுரையை எழத ஆரம்பித்து விட்டேன்....

    கரு கிடைத்து விட்டது

    பதிலளிநீக்கு
  23. அருமையான விளக்கம்

    நிகழ்வுகள் சிறப்புறவும் போட்டியாளர்கள் பெற்றி பெறவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழக வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படும் கையேட்டிற்கு உரிய விவரங்கள் என்றால் என்ன..? என்னுடைய முகவரி மற்றும் இதர தகவல்களா அல்லது..??

    பதிலளிநீக்கு
  25. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள...!நன்றி சகோ பதிவிற்கு.

    பதிலளிநீக்கு
  26. அண்ணா, உங்கள் தளமே திருவிழாக் கோலமாய் உள்ளதே!
    எந்த ஊரில் பதிவர் சந்திப்பு நடந்தாலும் உங்கள் உழைப்பு அமோகமாய் இருக்கிறது, வாழ்த்துகளும் நன்றியும் அண்ணா

    பதிலளிநீக்கு
  27. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  28. வலைப்பதிவர்கள் சந்திப்பு திரு விழா 2015 என்னுடைய தளத்திலும் இணைத்து விட்டேன். விழா சிறக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்....உங்களுக்கே அழைப்பு கொடுக்குறோம் பாருங்க நடத்துறதே நீங்கதானே..

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே,

    புதுக்கோட்டை பதிவர் திருவிழாவில் கலந்துகொள்ள போகும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    விழா சிறக்க அரும்பாடுபடும் தங்களுக்கு அனைத்து பதிவர்களின் சார்பிலும் என்னுடைய நன்றிகளும் நல்வாழ்த்துக்களும்.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. ஆஹா, மிகவும் அருமையான அறிவிப்பு. கலந்துகொள்ளும் அனைவருக்கும் வெற்றி கிட்டிட வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.