புதன், 22 ஏப்ரல், 2015

நான் யார்...?


உறவார் பகையார்... உண்மையை உணரார்... உனக்கே நீ யாரோ...? வருவார் இருப்பார் போவார் - நிலையாய் வாழ்வார் யார் யாரோ...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? (படம் : குடியிருந்த கோவில்)

பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனச்சாட்சி...?

புதன், 15 ஏப்ரல், 2015

ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...


இளமையெல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்... மயங்குது எதிர் காலம்... மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ... (படம் : பாக்யலஷ்மி)

"தெளிவும்-முடிவும்" அறிந்து தெரிந்து புரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது மனச்சாட்சி...! அதனாலே மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு எல்லாம் காணக் கூடாது...! இதோ எதிர்ப்பாட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா... இன்னலைத் தீர்க்க வா (படம் : குலேபகாவலி) எப்பூடி...?

புதன், 1 ஏப்ரல், 2015

சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!


பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... பூவிலே சிறந்த பூ என்ன பூ...? (படம் : குலவிளக்கு)

அன்பு தான்... வேறென்ன...? "நம்மையும் வாட விடாமல், தானும் வாடாமல் வட்டியின் மூலம் வளரும் பூ + முதுமையிலும் உதவும் சிறந்த பூ - சேமிப்பு" அப்படின்னு கலைவாணர் சொன்னது...! நீ என்னப்பு சொல்றே...?